தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (1)
தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (1)
தமிழகத்தில் பிஜேபியின் கூட்டணி அல்லது பிஜேபியின் கூட்டு: 2014 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் பா.ஜனதா தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆகவே, இதில் திமுக, அதிமுத தங்களுக்கே உள்ள தோரணையில் இருப்பதினால், அவற்றுடன் கூட்டு இல்லை என்று தீர்மானமாகத் தெரிகிறது[1]. தமிழகத்தில், இதர திராவிடக் கட்சிகளை இழுக்கும் முயற்சியில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. சேர்வது உறுதியாகி இருக்கிறது. பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளும் இதில் சேரும் என்று கூறப்படுகிறது. இது தவிர வேறு கட்சிகளையும் இந்த கூட்டணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தளத்தில் இருக்கும் படம் எடுத்தாளப்பட்டுள்ளது.
முஸ்லிம்களும், பிஜேபியும்: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்துள்ளது[2] தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவிலும், முஸ்லிம்களின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், முஸ்லிம்கள் மற்ற விசயத்தில் ஜாக்கிரதையுடன் தான் பிஜேபியை அணுகுவார்கள் என்பதை அறியலாம். அப்பாஸ் நக்வி போன்ற முஸ்லிம் தலைவர்கள் பிஜேபியில் நெடுங்காலமாக இருந்து வருகின்றனர். ஆனால், திராவிடப் பின்னணியில், ஒரு முஸ்லிம் கட்சி, பிஜேபியுடன் எப்படி செயல்படும் என்று பார்க்கவேண்டும். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது, முன்னர் என்.டி.ஏவில் திமுக இருந்தபோது, அதனுடன் இருந்த முஸ்லிம்கட்சிகள் எதிர்க்காமல் தொடர்ந்து திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.
அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் பிஜேபிக்கு ஆதரவு கொடுப்பது[3]: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை (13-12-2013) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்[4]. இந்த நிகழ்ச்சியின் போது, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், பா.ஜனதா மாநில செயலாளர் வானதி சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் கே.டி. ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: “பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சதக்கத்துல்லா தலைமையிலான அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக முஸ்லிம் மக்களிடம் அவர்கள் ஆதரவு திரட்டுவார்கள். டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கிய “வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை” என்ற பாத யாத்திரைக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 700-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துக்களில் இந்த யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. வீடுகள்தோறும் சென்று மக்களை நேரடியாகச் சந்திக்கும்போது மக்களின் பிரச்னைகள், கிராமங்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த பாத யாத்திரை வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறும்”, இவ்வாறு அவர் கூறினார்[5]. தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்திருப்பது, அந்த கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது[6]. தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது[7].
பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும் – பிஜேபி ராதாகிருஷ்ணன் கோருவது: உள்ளூர் விசயங்களை, இங்கு பிஜேபி பேசி வருவதைக் காணலாம். “தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றாலும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது போன்ற கொடுமைகள் தொடர்கின்றன. இப்போது மீண்டும் 180-க்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கு இலங்கை அரசு சவால் விடுத்துள்ளது. இந்திய மீனவர்களை ஏன் காப்பாற்ற முடியவில்லை என்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் வேண்டும். இல்லையெனில் அவர் ராஜிநாமா செய்ய வேண்டும்”, என்றார் பொன். ராதாகிருஷ்ணன். இருப்பினும், இலங்கை அனுதாபிகள், அபிமானிகள் இதைப் பற்றி ஒன்றும் கண்டுகொள்ளாமல் இருப்பது நோக்கத்தக்கது.
மெரீனாவில் நாளை ஒற்றுமை ஓட்டம்[8]: முன்னாள் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிக உயரமான இரும்பு சிலை அமைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 7 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து விவசாயிகள் பயன்படுத்திய இரும்புப் பொருள்கள் பெறப்பட்டு அதன் மூலம் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இது குறித்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக பட்டேலின் நினைவு தினமான ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) காலை 8 மணிக்கு நாடு முழுவதும் சுமார் 1,500 இடங்களில் ஒற்றுமை ஓட்டம் நடைபெறவுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை நடைபெறும் இந்த ஒற்றுமை ஓட்டத்தில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆர். நடராஜ், பாலச்சந்தர், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, திரைப்படத் தயாரிப்பாளர் எஸ், தாணு, நடிகை ரேணுகா உள்ளிட்டோர் இதில் பங்கேற்க இருப்பதாக பட்டேல் சிலை அமைப்புக் குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
அரசியலில் தீண்டத்தகாதக் கட்சி எதுவும் இல்லை: அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது போல, அரசியலில் தீண்டத்தகாதக் கட்சி எதுவும் இல்லை என்ற தத்துவமும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேவையான போது, இந்திய அரசியல் கட்சிகள், பின்பற்றி வருகின்றன. செக்யூலரிஸம் எப்படி அவரவர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக் கொண்டு, அனுபவித்து வருகின்றனரோ, அதேபோலத்தான் இந்த அரசியல் தீண்டாமை, ஒதுக்குதல் முதலியனவும். காங்கிரஸ், நாட்டைத் துண்டாடிய முஸ்லிம் லீக், கிருத்துவ மதவெறிக்கட்சி கேரளா காங்கிரஸ் முதலியோர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும்போது, எந்த அறிவாளியும், அரசியல் பண்டிதனும் அதனைத் தட்டிக் கேட்டதில்லை. ஆனால், பிஜேபி அகாலிதளத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதனை மதவாதம் என்று கூக்குரல் இட ஆரம்பித்து விடுகிறார்கள். சிவாஜி சிங் சௌஹான் பதவி ஏற்கும் விழாவில், சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியும் “மோடி தீண்டத்தகாதவர் அல்ல”, என்கிறார்[9], தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்[10]. டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்றும், தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்[11].
வேதபிரகாஷ்
© 15-12-2013
[1] http://dravidianatheism.wordpress.com/2013/12/15/dmk-to-have-alliance-with-dravidian-ideaology-oriented-party/
[5] தினமணி, பாஜககூட்டணியில்முஸ்லிம்முன்னேற்றக்கழகம், By dn, சென்னை, First Published : 14 December 2013 03:29 AM IST
[6] மாலைமலர், தமிழ்நாட்டில்முதல்முறையாகபா.ஜனதாகூட்டணியில்முஸ்லிம்கட்சி: பொன்.ராதாகிருஷ்ணன்முன்னிலையில்சேர்ந்தது, பதிவு செய்த நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 14, 10:21 AM IST.
[8]http://www.dinamani.com/edition_chennai/chennai/2013/12/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/article1944724.ece
[11] தினமலர், மோடிதீண்டத்தகாதவர்அல்ல: ஜெகன், பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2013,18:31 IST
குறிச்சொற்கள்: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம்
You can comment below, or link to this permanent URL from your own site.
திசெம்பர் 17, 2013 இல் 11:22 முப
[…] […]
திசெம்பர் 17, 2013 இல் 11:28 முப
[…] […]