பர்வீன்–பைசூல் ஜோடி மீது மரியம் பீவி-அக்பர் பாஷா பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள் ஏன்?

பர்வீன்–பைசூல் ஜோடி மீது மரியம் பீவி-அக்பர் பாஷா பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள் ஏன்?

பர்வீன் மறுபடியும் புகார் அளிக்கிறாராம் - 11-12-13

11-12-13 அன்று பர்வீன் என்கின்ற ராதாவின் மறுபடி-குற்றச்சாட்டு: தேதி “11-12-13” விசித்திரமானது, முக்கியமானது என்றெல்லாம் அலசிக்கொண்டிருக்கும் போது,  சென்னை மாநகர காவல்துறை ஆணையரை புதன்கிழமை 11-12-13 அன்று சந்தித்த நடிகை ராதா, காவல்துறையினர் மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்[1].  இணை கமிஷனர் திருஞானத்தை அவரது அலுவலகத்தில் நடிகை ராதா சந்தித்தார். அப்போது என் வழக்கை விசாரிக்கும் வடபழனி உதவி கமிஷனர் மற்றும் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளித்திருந்தார்[2]. “என் வழக்கை விசாரிக்கும் அதிகாரி பைசூலுக்கு ரகசியமாக உதவி வருகிறார்”, என்கிறாராம்[3]. எனவே வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைப்புகார் அளித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராதாவின் செய்திகள் தாம் இப்பொழுது பரப்பரப்பாக ஊடகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன[4].

பர்வீன் மறுபடியும் புகார் அளித்தாராம் - 11-12-13

  1. பைசூல்  மீது மோசடி,   மிரட்டல்   உள்ளிட்ட   சட்டப்   பிரிவுகளின்   கீழ்   வழக்குப்பதிவு  செய்யப்பட்டது: ராதா என்கின்ற பர்வீன், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், பைசூல் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதோடு, ரூபாய் 50 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.  இது தொடர்பாக வடபழனி பொலிசார் விசாரணை நடத்தினர். ராதாவை நேரில் அழைத்து சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்திய பொலிசார் அவரது வாக்கு மூலத்தையும் பதிவு செய்தனர். அப்போது பைசூலுக்கு எதிராக மோசடி ஆவணங்களையும் ராதா பொலிசிடம் கொடுத்தார். இதையடுத்து பைசூல் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பைசூல் முன்ஜாமீன் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பைசூல் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொலிசார் பிடியில் சிக்காமல் பைசூல் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்[5].

பர்வீன் மறுபடியும் புகார் - 11-12-13

2.வேலை வாங்கி தருவதாக மோசடி: இதேபோல், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் மூலம் போதை பொருள் கடத்துவதாக, பைசூல் மீது அக்ரம்கான் என்பவரும் புகார் அளித்தார்.

பர்வீன் மறுபடியும் புகார், புகார் - 11-12-13

3. போதை  மருந்து  கடத்தல்  புகார்: அக்ரம்கான் பைசூல் போதை மருந்து கடத்தலிலும் ஈடுபட்டுள்ளதாக புகாரில் கூறியுள்ளார். ராயப்பேட்டையை சேர்ந்த அக்பர் பாஷா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: “ராயப்பேட்டை, யானைக்குளம் 2வது தெரு வில் வசிக்கிறேன். 2007ம் ஆண்டு வரை சென்னையில், துணிகளுக்கு எம்பிராய்டரி போடும் வேலை செய்தேன். வறுமை காரணமாக, வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன்இந்நிலையில், எங்கள் தெருவில் வசிக்கும் நிசார் (43) என்பவர் என்னை அணுகி, எவ்வித செலவும் இல்லாமல் பல இளைஞர் களை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளேன். அதுபோல் உன்னையும் வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். அவரது பேச்சை நம்பி வெளிநாடு செல்ல சம்மதித்தேன். 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்னுடைய பாஸ்போர்ட்டை நிசாரிடம் ஒப்படைத்தேன். 25.11.2007 அன்று நிசார், தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு 29ம் தேதி அக்பர் டிராவல்ஸ் மூலம் மும்பை சென்று, வெளி நாடு செல்வதுக்கான பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளும்படி கூறினார். மேலும், சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் பைசூல் என்பவர் இதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறினார். அதன்படி, பைசூல் என்னை தொடர்புக் கொண்டு 900 அமெரிக்க டாலரும், தைவான் நாட்டு சிம்கார்டும், கொடுத்து என்னை இலவசமாக வெளிநாடு அனுப்பினார்முன்னதாக, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நிசார் என்னை சந்தித்து, சுமார் 2 அடி நீளமுள்ள பூங்கொத்து ஒன்றை கொடுத்தார். பூங்கொத்தை எதுக்கு கொடுக்கிறாய் என்று கேட்டதற்கு, இது ஒரு அன்பளிப்பு என்றும், இதை பெறுவதற்கு ஏர்போட்டுக்கு ஒரு நபர் வருவார், அவரிடம் இதை கொடுத்துவிடு எனவும் கூறினார். இதை நம்பி பூங்கொத்தை வாங்கி கொண்டு அன்று இரவு விமானம் மூலம் தைவான் சென்றேன். அப்போது தைவான் நாட்டின் சுங்கத்துறையினர், நான் வைத்திருந்த பூங்கொத்து கண்டு சந்தேகம் அடைந்து, பூங்கொத்தை உடைத்துப் பார் த்தனர். அதில் 11 கிலோ எடையில் கேட்டமைன் என்ற போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்து என்னை கைது செய்தனர். இதையடுத்து தைவான் நாட்டு காவல்துறையினர் என்னை சிறையில் அடைத்தனர். கடந்த 5 வருடமாக அந்நாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து, 3.2.2013 அன்று விடுதலை செய்யப்பட்டேன். இந்திய தூதரகத்தின் உதவியோடு இந்தியா திரும்பிய நான், பைசூல் மற்றும் நிசார், ஆகியோரால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சிறிது காலம் தலைமறைவாக வாழ்ந்தேன். கடந்த ஒரு வாரமாக பைசூல் பற்றி பத்திரிகை யில் வந்த செய்திகளை பார்த்து அவரை அடை யாளம் கண்டு கொண்டேன். பைசூல் மூலம் ஏமாற்றப் பட்டு, வெளி நாட்டு சிறை யில் தண்டனை அனுபவிக்கும் பல இளைஞர் களை காப்பாற்றி, பைசூல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு புகாரில் அக்பர் பாஷா கூறியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக, தொழிலபதிபர் பைசூல் மீது நடிகை ராதா சில தினங்களுக்கு முன்பு புகார் கூறியுள்ளார்[6].  இந்த 2 புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.

4. பைசூலின்  சகோதரி  மரியம்  பீவி  புகார்: இந்நிலையில், பைசூலின் சகோதரி மரியம் பீவி, புகாரை வாபஸ் வாங்க வேண்டுமானால் ரூ.1 கோடி தர வேண்டும் என்று தன்னை சிலர் மிரட்டுவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.

பரஸ்பர புகார்கள் கொடுக்கும் முஸ்லிம்கள்

பைசூலின்  சகோதரி  மரியம்பீவி (46)   கொடுத்த   புகார்:  சேப்பாக்கம் தைபூன் அலிகான் தெருவில் அக்கா, தம்பிகளுடன் வசித்து வருகிறேன். அனைவரும் தம்பி பைசூல் வீட்டில் தங்கி உள்ளோம். என் தம்பி போதைப் பொருள் கடத்துவதாக அக்ரம்கான் என்பவர் புகார் அளித்துள்ளார். இதில் எந்த உண்மையும் இல்லை. நேற்று முன்தினம் இரவு எங்கள் வீட்டிற்கு வந்தவர்கள் நாங்கள் அக்ரம்கானின் ஆட்கள், கமிஷனர் அலுவலகத்தில் பைசூல் மீது புகார் அளித்துள்ளோம். புகாரை வாபஸ் வாங்க ரூ.50 லட்சம் தர வேண்டும். நடிகை ராதாவும் எங்கள் தலைவரின் ஆலோசனைப்படிதான் புகார் அளித்துள்ளார். இந்த 2 புகாரையும் வாபஸ் வாங்க ரூ.1 கோடி வேண்டும். 2 நாட்களுக்குள் தரவில்லை என்றால் அனைவரையும் அசிங்கப்படுத்துவோம். இதை வெளியே சொன்னால் பைசூலை தீர்த்து கட்டுவோம் என்று மிரட்டி சென்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்[7].

நடிகையின் ரகசிய வாழ்க்கை

11-12-2013   அன்று  மறுபடியும்  பர்வீன்  புகார்: இந்த 3 புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது[8]. இந்தநிலையில் சென்னை காவல்துறை ஆணையரை புதன்கிழமை 11-12-2013 அன்று சந்தித்த ராதா, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று காவல்துறையினர் மீது புகார் தெரிவித்துள்ளார்[9].  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பைசூலின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் நான் மன உளைச்சல் அடைத்துள்ளேன். அதேவேளையில் எனக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட போலீஸார் மறுக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய பைசூலை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன்”, என்றார்[10].

போலீசுக்கு  எதிராக  புகார், நடவடிக்கை  எடுக்கப்படும்   என்கிறார்களாம்: பர்வீன் சொன்னது, “வடபழனி மகளிர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரேசா, பைசூலுக்கு சாதகமாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் எனக்கு நியாயம் கிடைக்குமா என்று தெரியவில்லை[11]. இதுவரை பைசூலை போலீசார் கைது செய்யவில்லை. இந்த வழக்கை  திசை திருப்ப போலீசார் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. தலைமறைவாக உள்ள பைசூல் போலீசாருக்கு தெரியாமல் எப்படி தொலைக்காட்சிக்கு மட்டும் பேட்டி அளிக்கிறார். அவர் வெளியில் இருந்தால் சாட்சிகளை அழித்து விடுவார். இதனால் கூடுதல் கமிஷனர் நல்லசிவத்தை சந்தித்து பைசூலை கைது செய்ய வலியுறுத்தினேன். அதற்கு அவர் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்”,  என்றார்[12].

வேதபிரகாஷ்

© 13-12-2013


[1] நக்கீரன், காவல்துறையினர்மீதுநடிகைராதாபரபரப்புபுகார்!, புதன்கிழமை, 11, டிசம்பர் 2013 (22:57 IST

[9] தினமணி, பைசூலைகைதுசெய்யக்கோரிஆணையர்அலுவலகத்தில்நடிகைராதாமனு, By வாசு, சென்னை, First Published : 11 December 2013 08:33 PM IST

[12] தினகரன், பைசூலுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர் நடிகை ராதா பரபரப்பு புகார்

,

Explore posts in the same categories: அக்பர் பாஷா, அடையாளம், ஆபாசம், உடலுறவு, உடலுறவுக் காட்சிகள், உடல், ஊடக வித்தைகள், ஊடல், ஐதராபாத், கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கற்பு, தாய்வான், பர்வீன், மரியம் பீவி, ராதா

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

3 பின்னூட்டங்கள் மேல் “பர்வீன்–பைசூல் ஜோடி மீது மரியம் பீவி-அக்பர் பாஷா பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள் ஏன்?”


பின்னூட்டமொன்றை இடுக