“தலித்-முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன?

தலித்முஸ்லிம்மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன?

Dalit-muslim clash near Theni, The Hindu 06-05-2018

தேனி சுற்றியுள்ள பகுதிகளில்இருதரப்புமோதல்கள் என்பது, அவ்வப்போது, செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றன: ஜனவரி 2016ல் பொங்கல் சமயத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது[1]. காணும் பொங்கலையொட்டி நடந்த கலைநிகழ்ச்ச்சியில் தகராறு ஏற்பட்டதால், மோதல் ஏற்பட்டது. காவலர்களும் தாக்கப்பட்டனர்[2]. டிசம்பர் 2017ல் தேனியில் அருகில் இருக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், ஷேர் ஆட்டோக்கள் மூலம் தான் அதிக அளவில் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் அங்கு, நிறைய ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அந்த ஷேர் ஆட்டோக்களில் ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றுவதில் இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் மோதம் முற்றியதில் அதில் ஒரு தரப்பினர், பெட்ரோல் குண்டுகளை வீசினர்[3]. இதனால் அங்கு இருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்து பாதிக்கப்பட்டன. தெருவிளக்குகள் உடைந்தன.. இந்த மோதலைத் தடுக்க வந்த போலீசாரையும் அவர்கள் தாக்கினர். இதனால் அந்த பகுதியே கலவர பூமிபோல் காணப்பட்டது. இதையடுத்து, போலீசார் 30 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்[4].ஜனவரி 16-01-2018 அன்று தேவாரம் அருகே இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்சென்றதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தம்மிநாயக்கன்பட்டியில் இருபிரிவினரும் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது[5]. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருசக்கரவாகனத்தை ஓட்டிச்சென்றவர் உட்பட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்[6]. போலீஸாரைத் தாக்குதல், பெட்ரோல் குண்டுகள் வெடிப்பது, பொங்கலை அடுத்து கலவரங்கள் ஏற்படுத்தல் என்பன, ஒரு திட்டமிட்ட போக்கை எடுத்துக் காட்டுகிறது. நிச்சயமாக அதில் எஸ்.சிக்களுக்கு பங்கில்லை.

Periyakulam, Muslims attack Hindu houses-news cutting english

ஏப்ரலில் [24—004-2018] பிணம் எடுத்துச் சென்றபோது கலவரம்: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர்களுக்கும், காலனி தெருவை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது[7]. ஏப்ரலில் “காலனி தெரு”வை சேர்ந்த வேலு மனைவி வன்னியம்மாள் (62) இறந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மயானம் செல்லும் வழியில் திருமண விழாவிற்கான பந்தல் போடப்பட்டிருந்ததால், வேறு ஒரு சமூகத்தினர் வசிக்கும் பாதை வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டது. இதெல்லாம் கிராமங்களில் அனுசரித்து நடந்து கொள்ளும் பழக்க-வழக்கங்கள் ஆகும். இவரது உடலை மயானத்திற்கு “முஸ்லிம் தெரு” வழியாக எடுத்து செல்லும்போது, முஸ்லிம்கள் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு, சமரசம் செய்தலால், இறுதி சடங்கு நடத்தி முடிக்கப் பட்டது[8]. முதலில் தெருவுக்கு “ஜாதி” பெயர் இருக்கக் கூடாது என்ற நிலை இருக்கும் போது, “முஸ்லிம் தெரு” என்று பெயர் உள்ளதே வகுப்புவாதத்தை வளர்க்கும் கோஷ்டிகள் அங்கிருப்பது தெருகிறது. அதே போல “காலனி தெரு” என்று குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. சடங்கு நடந்த பிறகு, இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது[9].  இறப்பு முதல்லிய சடங்குகளில் முகமதியர் அந்த அளவுக்கு கடுமையாக இருந்திருக்கக் கூடாது. அமைதியாக இருந்திருந்தால், சாதாரண பிரச்சினை, இவ்வாறான மோதல்-கலவரத்தில் முடிந்திருக்காது. இதில் சில கடைகள், வீடுகள் சேதமானது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதன்காரணமாக இரு சமூகத்தினருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டு, 10 நாட்களாக அடங்காமல் இன்று விஸ்வரூபமெடுத்து கலவரமாக வெடித்தது[10].

Periyakulam, Muslims attack Hindu houses-6

மே 2018 [05-05-20118] மாதத்தில் நடந்த கலவரம்: இந்நிலையில் 05-05-2018 அன்று காலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒருவர் காலனி தெரு வழியாக தனது தோட்டத்திற்கு சென்றார். “அன்று பிணம் என்றும் பார்க்க்காமல், ஈவு-இரக்க்ம் இல்லாமல், தடுத்தாயே, நீ எப்படி இன்று இந்த வழியாக செல்கிறாய், வேறு வழியாகச் செல்ல வேண்டியது தானே?,” என்ற கேள்வி நிச்சயமாக எழுந்திருக்கும். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரிடையே மீண்டும் கலவரமாக மாறியது[11]. இருதரப்பினரும் கற்கள், கம்பி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் கலைச்செல்வன், வேலுத்தாய், ஆரிப்ராஜா, அக்கீம் உட்பட 50 பேர் காயமடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பிலும் 50 வீடுகள் சேதமடைந்தன. ஒரு கார், டூவீலர், ஆட்டோ, ஸ்டூடியோ, கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடைக்கு தீ வைக்கப்பட்டது. தகவலறிந்ததும் திண்டுக்கல் சரக டிஐஜி ஜோசி நிர்மல் குமார், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மற்றும் போலீசார் வந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொம்மிநாயக்கன்பட்டியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்டதாக 100 பேரை ஜெயமங்கலம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவற்றை இவ்வீடியோவில் காணலாம்[12].

Periyakulam, Muslims attack Hindu houses-2

சமதர்மம், சமத்துவம் பேசினால் மட்டும் போறாது, கடைப் பிடிக்க வேண்டும்: சமரசப் பேச்சிற்குப் பிறகும், எச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது[13]. மேலும் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார் 24 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்[14]. போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து, பலர் ஓடிவிட்டதாகவும் தெரிகிறது. ஏப்ரலில் தொல்.திருமாவளவனின் படம் தாக்கப்பட்டதிலிருந்து, இருதரப்பினருக்கும் விரோதம் இருப்பதாக, உள்ளூரில் சொன்னதாக, “தி இந்து” குறிப்பிடுகிறது[15]. “மனித நேயம்” என்றெல்லாம் பெயரை வைத்துக் கொள்வது, மேடைகளில் பேசுவது, பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் இருந்து, நடப்பு வாழ்க்கையில், இவ்வாறு பிணம் விசயத்தில் கூட, கொடூரமாக நடந்து கொண்டது, திகைப்பாக இருக்கிறது. செக்யூலரிஸ நாட்டில், இந்தியர், எங்கு வேண்டுமானாலும், வீடு வாங்கலாம், வாழலாம், என்றெல்லாம் சட்டங்கள் இருக்கும் போது, இவ்வாறு, “எங்கள் தெருவுக்கு வராதே……” என்ற நிலை இருப்பது, சமதர்மம் ஆகாது. “தலித்-முஸ்லிம் மோதல்”, தேனி அருகில் – தி இந்து – அடித்தது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய், செக்யூலரிஸப் பழமாக அழுகிய செய்தியைக் கொடுத்துள்ளது! ஏனெனில், “தலித்” என்ற பிரயோகம் சட்டப்படி கூடாது என்றாலும், உபயோகித்தது மற்றும் இதுவரை “இரு பிரிவினர் மோதல்” என்று தலைப்பிட்டு, யார்-யார் மோதிக்கொண்டார்கள் என்று மறைக்கும் நிலையில், அவ்வாறு குறிப்பிட்டு, தலைப்பிட்டு போட்டுள்ளது திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், “தி இந்து” அவ்வாறு செய்யாது, ஆனால், இப்பொழுது செய்துள்ளது. எனவே இதன் பின்னணி என்ன என்பதும் ஆராய வேண்டும்.

 

© வேதபிரகாஷ்

05-05-2018

Periyakulam, Muslims attack Hindu houses-5

[1] புதியதலைமுறை, தேனி அருகே இரு பிரிவினரிடையே திடீர் மோதல்: கலை நிகழ்ச்சியின் போது வன்முறை, Web Team, Published : 18 Jan, 2016 01:21 pm

[2] http://www.puthiyathalaimurai.com/news/districts/463-clash-between-two-groups-in-theni.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தேனி.. ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் மோதல்பெட்ரோல் குண்டு வீச்சு! – வீடியோ, Posted By: Suganthi Published: Wednesday, April 12, 2017, 10:47 [IST]

[4]  https://tamil.oneindia.com/news/tamilnadu/auto-drivers-throw-petrol-bomb-theni-279543.html

[5] தினகரன், தேனி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது, 2018-01-17@ 08:35:34

[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367818

[7] தினகரன், தேனி தேவதானப்பட்டி அருகே இருதரப்பு மோதல்: 50 வீடுகள் சேதம் : வாகனங்கள், கடைகளுக்கு தீவைப்பு, 2018-05-06@ 02:24:15.

[8] According to the police, when Vanniammal, an aged Dalit woman, died on April 24, her relatives and friends decided to take out the funeral procession through Muslim Street in Bomminaickanpatti village near Periyakulam. They chose the new route as there was another death ritual going on in their regular route. When the procession entered the Muslim Street, some residents protested and a minor clash followed. The police pacified both sides and the Dalits managed to complete the funeral that day. Later, the village witnessed minor skirmishes between the two groups.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-muslim-clash-near-theni/article23791161.ece

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=399384

[10] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியகுளம் அருகே இரு சமூகத்தினர் மோதல்: வாகனங்கள் தீக்கிரை.. போலீசார் குவிப்பு, Posted By: Hemavandhana Published: Sunday, May 6, 2018, 10:47 [IST]

[11] https://tamil.oneindia.com/news/tamilnadu/car-vehicles-were-set-on-fire-riots-near-periyakulam-318931.html

[12] தேனி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல்: போலீசார் ,Published on May 5, 2018; https://www.youtube.com/watch?v=RX_wlPP3bO8

[13] தினமணி, பெரியகுளம் அருகே இருதரப்பினர் மோதல்: வீடுகள், வாகனங்களுக்கு தீவைப்பு: 20 பேர் கைது, By DIN | Published on : 06th May 2018 09:16 AM

[14] http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/may/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2914420.html

[15] The locals said the two groups had been harbouring enmity against each other ever since a portrait of VCK leader Thol. Thirumavalavan was damaged last month.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/clash-between-dalits-and-muslims-near-theni/article23789937.ece?utm_source=tp-tamilnadu&utm_medium=sticky_footer

Advertisements
Explore posts in the same categories: அசிங்கப்படுத்திய முகமதியர், அடி உதை, அழுக்கு, அவமதிக்கும் இஸ்லாம், இறுதி ஊர்வலம், காலனி, சவ ஊர்வலம், தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ் முஸ்லீம், தலித், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், தி இந்து, திருமா, திருமா வளவன், திருமாவளவன், பிண ஊர்வலம், பெரியகுளம், பொம்மிநாயக்கம்பட்டி, மத-அடிப்படைவாதம், மதகலவரம், மனித நேயம், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், முஸ்லிம் காலனி, முஸ்லிம் தெரு, முஸ்லீம், முஸ்லீம் ஜாதி, முஸ்லீம் தன்மை, விரோதம்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

4 பின்னூட்டங்கள் மேல் ““தலித்-முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன?”

  1. vedaprakash Says:

    தினமலர், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் ஆய்வு, Added : மே 08, 2018 00:59

    http://www.dinamalar.com/news_detail.asp?id=2016103

    தேவதானப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி இந்திராகாலனியில் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன், இருதரப்பு மோதலில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

    தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. இங்கு இந்திராகாலனியில் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய ஆதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    கலெக்டர் பல்லவிபல்தேவ், பாஸ்கரன் எஸ்.பி., பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார் உடனிருந்தனர்.

    முன்னதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணி, பொம்மிநாயக்கன்பட்டி காந்திநகர் காலனி மக்களை தேவதானப்பட்டியில் சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதி பா.ஜ. அமைப்பாளர் ராஜபாண்டி உடனிருந்தார்.

    விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், பெரியகுளம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தங்கபாண்டி,செயலாளர் ஆண்டவர் ஆகியோர் பொம்மிநாயக்கன்பட்டிக்கு செல்ல முயன்ற போது சிந்துவம்பட்டி முனியாண்டி கோயில் அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

  2. vedaprakash Says:

    தினமணி, பொம்மிநாயக்கன்பட்டி கலவரம்: ஆதி திராவிட ஆணைய துணைத் தலைவர் விசாரணை, By DIN | Published on : 08th May 2018 02:20 AM

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியில் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.
    பொம்மிநாயக்கன்பட்டியில் கடந்த ஏப்ரல் 24 -ஆம் உயிரிழந்தமூதாட்டி சடலத்தை பள்ளிவாசல் தெருவில் எடுத்துச்செல்லும்போது இருபிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மே 5-ஆம் தேதி காலை இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கு மேற்பட்ட வீடுகள், கடைகள், கார் மற்றும் இரு சக்கர வாகனம் எரிக்கப்பட்டன. இதில் இரு தரப்பினரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இருதரப்பையும் சேர்ந்த 30- க்கு மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று அங்குள்ள பெண்களிடம் விசாரணை நடத்தினார்.
    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கடந்த 5-ஆம் தேதி வன்னியம்மாள் என்ற பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் தாழ்த்தப்பட்டோர் வீடுகள், ஸ்டூடியோ ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கலைச்செல்வன் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் , வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கலவரத்தில் வெளியூரில் இருந்து ஆள்கள் வந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலரை போலீஸார் கைது செய்தனர். மீதமுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்பகுதியில் சுமூகநிலை ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
    விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் எம்.பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் மற்றும் மாவட்ட வன்கொடுமை விழிப்புணர்வு தடுப்புக்குழு உறுப்பினர் ப.பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/may/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2915424.html

  3. vedaprakash Says:

    தினத்தந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஆதிதிராவிட ஆணைய துணை தலைவர் ஆய்வு: போலீசார் மீது சரமாரி புகார், மே 08, 2018, 04:15 AM

    https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/08033255/The-Vice-President-of-the-Commission-for-National.vpf

    தேவதானப்பட்டி,

    தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் வன்னியம்மாள். இவர், கடந்த 23-ந்தேதி இறந்து விட்டார். அவருடைய உடலை தகனம் செய்வதற்காக, மாற்றுப்பாதை வழியாக எடுத்து சென்றனர். அப்போது, இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் எதிரொலியாக, கடந்த 5-ந்தேதி கலவரம் வெடித்தது. இருதரப்பினரும் நேருக்குநேர் மோதினர். இதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் நொறுக்கப்பட்டன. 10 கடைகள் சூறையாடப்பட்டன. கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் இருதரப்பையும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 20 பேரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை, தேசிய ஆதிதிராவிட ஆணைய துணைத்தலைவர் முருகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இந்திரா காலனியை சேர்ந்த மக்களிடம் கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர்கள், போலீசார் மீது சரமாரியாக குற்றம் சாட்டினர்.

    வன்னியம்மாள் உடலை எடுத்து சென்றபோது ஏற்பட்ட மோதலில் போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், போலீசாரின் அலட்சியம் தான் கலவரம் ஏற்பட்டதற்கு காரணம் என்றும், அவர்கள் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். தங்களது பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து தேசிய ஆதிதிராவிட ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறும்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம், குடிநீர் உடனடியாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சேதம் அடைந்த வீடுகள், கடைகளுக்கு நிவாரணம் விரைவில் வழங்கப்படும். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

    அதன்பின்னர் அவர், கலவரத்தில் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற கலைச்செல்வனை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆய்வின்போது கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: