மீலாது நபி, மஹல்லா ஜமாஅத், நாத்திக-கம்யூனிஸ கூட்டு-நட்பு, இடவொதிக்கீடு, பீஹார் மஹா கடபந்தன் – முஸ்லிம் லீக் எங்கே போகிறது!

மீலாது நபி, மஹல்லா ஜமாஅத், நாத்திக-கம்யூனிஸ கூட்டு-நட்பு, இடவொதிக்கீடு, பீஹார் மஹா கடபந்தன் – முஸ்லிம் லீக் எங்கே போகிறது!

தமிழகத்தில் “மூன்றாவது அணி இல்லை” என்றதிலிருந்து அதிமுக-எதிர்ப்பில், ஜெயலலிதா-எதிர்ப்பில் முடிந்துள்ள முஸ்லிம் லீக்கின் போக்கு (2)!

IUML conference, Trichy entrance 24-11-2015 -press briefed- another view

திருச்சியில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில், வைத்த கோரிக்கைகளைக் கவனித்தால், இந்தியாவில் அங்கங்கு, அவர்களுக்காக தனி குடியேற்றங்களை உருவாக்க வேண்டும் போலிருக்கிறது.

 IUML conference, Trichy entrance 24-11-2015 those who selected

15 அம்ச கம்யூனல் கோரிக்கைகள்[1]: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு எடுத்த முடிவின் அடிப்படையில்,

  1. இந்திய குடி மக்களின் தனித்தன்மைகளை பாதுகாத்தல்,
  2. மதவெறி-பயங்கர வாதத்திற்கு பழியாகாமல் பாதுகாத்தல்,
  3. பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தும் இந்திய அரசியல் சாசன 44வது பிரிவை ரத்து செய்யக் கோருதல்,
  4. கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்துதல்,
  5. தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள வழிபாட்டுத்தளங்களில் வழிபாடு நடத்த கோருதல்,
  6. சட்ட விரோ ஆக்கிரமிப்புகளிலிருந்து வஃக்பு சொத்துக்களை மீட்டு அதை ஏழை முஸ்லிம்களுக்கு பயன்படுத்துதல்,
  7. வட்டியில்லா வங்கி முறையை அமல்படுத்துதல்,
  8. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கு குறையாத பதவியில் முஸ்லிம்களை நியமித்தல்,
  9. போதை பொருட்களை முற்றிலும் தடை செய்ய பூரண மது விலக்கை அமல் படுத்துதல்,
  10. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல்,
  11. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை,
  12. மத்திய-மாநில அரசுகளால் நடத்தப்படும் அவரவர் தாய் மொழியில் எழுதிட அனுமதிக்க வேண்டுதல்,
  13. அனைத்து மாநிலங்களிலும் சிறுபான்மையினர் ஆணையங்கள், நிதி வளர்ச்சி வாரியங்கள் நிறுவிட வேண்டுதல்,
  14. காஜிகளின் திருமண பதிவேடுகளுக்கு சட்ட அங்கீகாரம் அளித்தல்,
  15. தேர்வு குழுக்களில் குறைந்த பட்சம் ஒரு முஸ்லிம் பிரதிநிதியாவது இடம் பெறச் செய்தல்

ஆகிய 15 அம்ச கோரிக்கை பிரகடனத்தை தமிழகம் முழுவதும் விளம்பர படுத்தவும், பரப்புரை செய்யவும் அனைத்து மாவட்ட, பிரைமரி அமைப்புகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

Inside Nagore Dargha pillars, lamps etc

Inside Nagore Dargha pillars, lamps etc

நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உதய தினத்தை உலக நாடுகள் பலவும் இந்திய அரசும், தமிழக அரசும் விடுமுறை நாளாக அறிவித்து பெருமைப்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தில் டிசம்பர் 23 அல்லது 24 ம் தேதி மீலாதுந் நபி தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

இந்நந்நாளையொட்டி தமிழகத்தின் ஊர்கள் தோறும் சமூக விழாவாக நடத்துவதோடு, மருத்துவமனைகளுக்கு சென்று நேயாளிகளுக்கு உதவி புரிதல் சிறைக் கைதிகளுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட சமூக நலக்காரியங்களில் ஈடுபடவும், இந்நாளையொட்டி தமிழகத்தில் 1 லட்சம் இளைஞர்கள் ரத்ததானம் செய்வதற்கு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும்இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது. ஷியாக்கள் கொல்லப்படுவதைப் பற்றியோ, மற்ற முஸ்லிம்கள் விரட்டி-விரட்டி கொல்லப்படுவதைப் பற்றியோ, கண்டுகொள்ளாமல், “மீலாதுந் நபி” பற்றி பேசுவது வியப்பாக இருக்கிறது. முஸ்லிம் நாடுகளே, விடுமுறை அளிக்காத நிலையில், இங்கு விடுமுறை கொடுக்கப்படுகிறது. நபியின் கல்லறையே இடித்து விட்டார்கள் என்பது பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

முஸ்லிம்களே, மீலாது நபி கொண்டாடக் கூடாது, ஷிர்க் என்றெல்லாம் எழுதி வருகின்றனர்[2].

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-திமுக

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-திமுக

மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆண்டுதோறும் நடத்தி வரும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டை இந்த ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10 அன்று விழுப்புரத்தில் நடத்துவது என்றும், இம் மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது சாகிப் எம்.பி., கேரள மாநில தலைவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின், தோழமை கட்சிகளின் தலைவர்களை உரையாற்ற அழைப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. “மஹல்லா ஜமாஅத்”தில் நாத்திகவாதிகளான திமுகவினர் அழைக்கப்படுவது, கலந்து கொள்வது எல்லாமே வேடிக்கையான விசயங்கள் தாம். ஜமாத்துகள் பல இருந்தால், பலவற்றிலும் இவர்கள் கலந்து கொள்வார்களா? நாளைக்கு ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் எல்லோரும், வெவ்வேறான ஜமாத்துகளால் அழைக்கப்படுவார்களா? என்னமோ-ஏதோ, இந்த காபிர்-மோமின் உறவுகளே புரியவில்லை. பாகிஸ்தானில் முஸ்லிம் லீக் “தீபாவளி கொண்டாட்டம்” ஏற்பாடு செய்தது, இங்கோ, இப்படி கூட்டம் நடட்துகிறார்கள்!

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-அதிமுக

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-அதிமுக

மஹல்லா ஜமாஅத் என்றால் என்ன, எப்படி அடையாளம் காண்பது?: முஸ்லிம் லீக் கூறுவதாவது[3], “தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படைக் கட்டமைப்பாகிய மஹல்லா ஜமாஅத் வலிமையாக இருந்தால்தான் சமுதாயம் சிறப்படையும்மஹல்லா ஜமாஅத் அமைப்பை பாதுகாப்பதும் அதனை பலப்படுத்துவதும் அதன் சிறப்புகளை மக்கள் உணருமாறு செய்வதும் நம் கடமைஇன்று மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாடு ஒரு சிலரால் சிதைக்கப்படுவதும் போட்டி ஜமாஅத் உருவாக் கப்படுவதும் தொடருவதால் சமுதாய ஒற்றுமை கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறதுஎளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய இளைஞர்கள் தவறான வழிகாட்டுதல்களுக்கு ஆட்பட்டு தங்கள் இளமை வாழ்வை சீர்குலைக்காமல் இருக்க வேண்டுமானால்அவர்களின் ஆற்றலை ஒருமுகப் படுத்தி ஆக்கப்பூர்வமான காரியங் களுக்கு பயன்படுத்தினால் இந்த சமுதாயத்திற்கு எண்ணற்ற நன்மைகள் விளையும்எனவே பள்ளிவாசலை மையமாகக் கொண்டு அமைந்துள்ள மஹல்லா, பள்ளிவாசலை நிர்வகிப்பது, கபரஸ்தான்களை பராமரிப்பது என்ற அளவில் மட்டும் ஜமாஅத் கடமையை முடித்து விடாமல் சமுக அமைப்பாகச் செயல்பட வேண்டும்திருவிடைச்சேரி[4] வன்முறைக்குப் பின்னர்தான்[5] சமூக ஒற்றுமையைப் பற்றி பலரும் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் 1989-லேயே மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கன்வென்ஷன் மாநாட்டில், ஒரு மஹல்லா ஜமாஅத் எப்படி இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டதுபுதிய புதிய அமைப்புக்களும் புதுப்புது கொள்கைகளும் உருவாகி மஹல்லா ஜமாஅத் ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படுவதை கண்டு கவலையடைந்த தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆண்டுதோறும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடுகளை நடத்துவதை தனது குறிக்கோளாக கொண்டுள்ளது”.

IUML members with Jeyalalita

முஸ்லிம் லீக் போடும் செக்யூலார் வேடம்: ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது என்கிறது முஸ்லிம் லீக். மூஸ்லிம் லீக் ஒரு மதவாத கட்சி, பாரதத்தைத் துண்டாடிய கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். இன்றளவில், இப்பிரச்சினைதான் எல்லா விவகாரங்களிலும் வெளிப்படுகிறது. அமீர்கான் விசயத்தில் வெட்ட வெளிச்சமாகியது. ஆனால், உண்மைகளை மறைத்து, “பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மதவெறி சக்திகளுக்கு மக்கள் அளித்துள்ள பாடம் மதசார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு ஆறுதலை தந்துள்ளதோடு, தேர்தல் முடிவு, ஜனநாயக இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அருமையான பாடத்தையும் கற்றுத் தந்துள்ளது” என்று கணக்குப் போடுவது, அவர்களது பிரிவினைவாத அரசியலைத்தான் எடுத்துக் காட்டுகிறது. 26-11-2015 அன்று பெங்களூரில் பிகார் தேர்தல் பற்றி கல்லூரி மாணவிகள் கேள்விகளைக் கேட்டுத் துளைத்து விட்டதை, இவர்களுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமே!

© வேதபிரகாஷ்

26-11-2015

[1] http://tamil.oneindia.com/news/tamilnadu/iuml-urges-opposition-come-under-dmk-alliance-defeat-aiadmk-240684.html

[2] http://silaiyumkaburum.blogspot.in/2013/12/meelad-vila-parinama-valarchchi.html

[3] http://muslimleaguetn.com/news.asp?id=2069

[4] http://tamil.oneindia.com/news/2010/09/07/police-deparment-tn-jayalalithaa.html

[5] https://islamindia.wordpress.com/2010/09/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8C%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE/

Explore posts in the same categories: அப்துல் ரகுமான், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இஸ்லாம்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

பின்னூட்டமொன்றை இடுக