தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் மற்றும் உள்ளூர் ஜமாத்துகளுக்குள் இருந்த சண்டையில் இரண்டு பேர் சுட்டுக் கொலை, நான்கு பேர் காயம்!
தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் மற்றும் உள்ளூர் ஜமாத்துகளுக்குள் இருந்த சண்டையில் இரண்டு பேர் சுட்டுக் கொலை, நான்கு பேர் காயம்!
ரம்ஜான் தாராவீஹ் இரவு தொழுகை நடத்த சண்டை[1]: இது நடப்பது, இந்தியாவில், அதுவும் தமிழகத்தில்! திருவாரூர் மசூதியில் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் திருவாரூர் மாவட்டம் தி்ருவிடைச்சேரியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது. குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரியில் ஜமீத் முகைதீன் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் இமாமாக இருந்தவர் முகமது இஸ்மாயில் (55). இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் இருந்து வந்தது[2].
தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் மற்றும் உள்ளூர் ஜமாத்துகளுக்குள் போட்டி-சண்டை[3]: அங்குள்ள 10 குடும்பங்களில், ஒன்று மட்டும்தான் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் Tamil Nadu Touheed Jamat (TNTJ) என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை அங்கிருக்கும் மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால், இவர்கள் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தை சேர்ந்த ஆட்களை வெளியில் இருந்து அழைத்து வந்தார்கள். இதனால், உள்ளூர் ஜாமாத் ஆட்கள், வெளியிலிருந்து வந்த ஆட்களை எதிர்த்தனர்.
தொழுகை செய்வது பற்றிய பிரச்சினை – ஒரு வாதம்: திருவிடைச்சேரியை சேர்ந்த குத்புதீன் என்பவர் வீட்டில் ஒரு பிரிவினர் தொழுகை நடத்துவது வழக்கம். குத்புதீன் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் இன்னொரு பிரிவை சேர்ந்த இதயதுல்லா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இங்கு தொழுகை நடத்துவதால் தனக்கு இடையூறாக இருப்பதாக அவர் கூறியதால் குத்புதீனுக்கும் இதயதுல்லாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் உருவானது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நீடித்து வந்தது
தொழுகை செய்வது பற்றிய பிரச்சினை – மறு வாதம்[4]: திருவிடைச்சேரி கிராமத்தில் உள்ள சில முஸ்லீம்கள் அங்குள்ள ஜமீத் முகைதீன் பள்ளிவாசலுக்குச் செல்லாமல் ரோஸ் பாப்பா (Rose Papa) என்ற தனியார் ஒருவரது இல்லத்தில் தொழுகை நடத்தி வந்தனர்[5]. இது சமூகக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரணானது என்று கூறி தனியார் இல்லத் தொழுகையை நிறுத்துமாறு கிராமத்து ஜமாத்தினர் கேட்டுக்கொண்டனர் மேலும் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவருமாறு புறக்கணிப்புக் குழுவிற்கு அழைப்பு அனுப்பப்பட்டது. குத்புதீனின் உறவினர் ஹாஜி முகமது (40). இவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குறிச்சிமலையில் வசித்து வருகிறார். தன்னிடம் இதயதுல்லா மற்றும் அவரது தரப்பினர் தகராறு செய்வது தொடர்பாக ஹாஜி முகமதுவிடம் குத்புதீன் கூறினார். இதனால் ஹாஜி முகமது மற்றும் அவரது தரப்பினர் 15 பேர் நேற்று இரவு 3 கார்களில் திருவிடைச்சேரி சென்றனர்[6].
வாதம் முற்றி துப்பாக்கியால் சுடல்: பள்ளிவாசலில் இருந்த இமாம் முகமது இஸ்மாயிலிடம் ஹாஜி முகமது மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இமாமின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக பேசினர். சற்று நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் கை கலப்பு ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், ஹாஜி முகம்மது தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடவே, குண்டு பாய்ந்து இமாம் இஸ்மாயில் மற்றும் அஜீத் முகமமது என்ற 60 வயது முதியவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஃபிர்கள் அங்கு வந்தது காயமடைந்தது எப்படி? சம்பவத்தின்போது அங்கிருந்த காஜா மைதீன் (41), பால்ராஜ் (55), ராமதாஸ் (45), சந்தியாகு (26) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டால் பெரும் பதட்டமாகி அங்கு நின்றிருந்தவர்கள் சிதறி ஓடினர். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஹாஜி முகம்மது மற்றும் அவரது தரப்பு ஆட்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். எஸ்.பி.மூர்த்தி தலைமையில் போலீஸார் திரண்டு வந்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முகம்மதுவின் தம்பி ரபீக் பிடிபட்டார்: துப்பாக்கியால் சுட்டு இரண்டு பேரைக் கொன்று விட்டுத் தலைமறைவான முகம்மதுவை தேடி போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்த லைசென்ஸ் இல்லாத 2 கைத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.மேலும் முகம்மதுவின் தம்பி ரபீக்கைப் பிடித்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த திருவிடைச்சேரியில் பெரும் பதட்டம் நிலவுவதால் மத்திய மண்டல ஐஜி கரன் சின்ஹா அங்கு முகாமிட்டுள்ளார்.இது போக தஞ்சை, நாகை, திருவாரூர் எஸ்.பிக்களும் முகாமிட்டுள்ளனர்.
[1] “The clash was over offering Ramzan Taraweeh night prayers” என்று தி ஹிந்து சொல்கிறது. http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece
[2] தட் ஈஸ் தமிள், தொழுகை நடத்துவது தொடர்பாக மோதல்-2 பேர் சுட்டுக் கொலை, திங்கள்கிழமை, செப்டம்பர் 6, 2010
http://thatstamil.oneindia.in/news/2010/09/06/2-shot-dead-thiruvidaichery-group-clash.html
[3] http://www.indianexpress.com/news/Two-killed–four-hurt-in-group-clash/678070
[4] http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100906_mosqueviolence.shtml
[5] http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece
[6] http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece
Explore posts in the same categories: அல்லா, இரட்டை வேடம், இரவு தொழுகை, இஸ்லாமிய இறையியல், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உக்-ஃபர்கன், ஜவாஹிருல்லா, ஜிஹாத், தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தமுமுக, திருவிடைச்சேரி, துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, நாத்திக காஃபிர், மசூதி தொழுகை, மசூதியில் கொலை, ரம்ஜான் தாராவீஹ், றமலான், றமழான்குறிச்சொற்கள்: இந்துக்கள், இரவு தொழுகை, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், சிறுபான்மையினர், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தாராவீஹ், திருவிடைச்சேரி, மசூதி தொழுகை, முஜாஹித்தீன், முஸ்லீம்கள், ரம்ஜான் தாராவீஹ்
You can comment below, or link to this permanent URL from your own site.
செப்ரெம்பர் 7, 2010 இல் 8:09 முப
தொழுகைக்காக, இரண்டு ஜமாத்துகள் இப்படி சண்டைப் போட்டுக் கொள்வதும், சுட்டுக் கொல்வதும், இமான்தாரிகளைப் பிரிப்பதும், இஸ்லாத்திற்கு ஏற்றதல்ல.
முஸ்லிம்களுக்கு ஏற்கெனெவே கெட்டப் பெயரை ஏற்படுத்த பல தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்கள் உள்ள நிலையில் இவ்வாறான சண்டைகளும், கொலைகளும், மேலும் இஸ்லாத்தின் மதிப்பைக் குறைக்கும்.
ஆகவே, பெரியோர்கள் இத்தகைய நபர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், இல்லயென்றால், கட்டுக்குள் அடங்காமல் போகும் நிலையில், அமைதியை விரும்பும் முஸ்லீம்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
செப்ரெம்பர் 17, 2010 இல் 11:07 முப
The Tamilnadu Muslims have been behaving differently, taking law into their hands, obviously as they have been pampered by the dravidian parties.
They have gained the courage to the extent of threatening Chidamberam, the Home Minister and change his opinion about “Jihad”.
However, it is waged in Kashmir that could not not be controlled by the secular category Congress, neo-communal type Abdullah gang or the anti-Indian Mufti gang.
As the TN state missionaries have been aiding and abetting the Muslims, within few days, the matter would be forgotten.
But, the TN is definitely breeding such species, which might produce severe consequences in India.
செப்ரெம்பர் 7, 2010 இல் 10:31 முப
திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி கிராமத்தில் நேற்று முன்தினம் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் இரண்டு உயிர்களை பலிவாங்கி விட்டது. காட்டுமிராண்டித்தனமான இந்த சம்பவம் நடந்து முடிந்ததும் மீடியாக்களும் இன்னும் சிலரும் சுன்னத் வல் ஜமாத்திற்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையே கோஷ்டி மோதல் எனவும், துப்பாக்கியால் சுட்ட நபர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பொருப்பாளர் என்றும் செய்திகளைப் பரப்ப ஆரம்பித்தன.
ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பதை இங்கே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தவ்ஹீத் ஜமாத் மற்றும் சுன்னத் ஜமாத்திற்கும் இடையே எல்லா ஊர்களிலும் ஏற்படுவதைப் போல தகராறு ஏற்பட்டு அந்த பிரச்சனை ஆர்டிஓ விசாரணைக்குச் சென்றது. அப்போது இரு தரப்பினரும் தங்களுக்குள் சமாதானமாக போய்ககொள்ள வேண்டும் என்றும், அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் பேச்சு வார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்பட்டது.
இந்த நிலையில் ரமலான் மாதத்தின் இரவுத் தொழுகைக்காக தவ்ஹீத் ஜமாத்தினர் தனியாக தொழுதுகொள்ள வேண்டி அப்துர் ரஹ்மான் என்பவரின் வீட்டின் மொட்டை மாடியில் இடம் ஏற்பாடு செய்து தனியாக தொழுகை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் சுன்னத் ஜமாத்தினைச் சேர்ந்த குத்புதீன் என்பவர் அந்த தவ்ஹீத் பள்ளிக்கு தொழுகைக்காக வந்தார். இதை அப்துல் ரஹ்மான் வீட்டிற்கு எதிரில் வசிக்கும் சுன்னத் ஜமாத்தை சார்ந்த ஜபருல்லா என்பவர் பார்த்து விட்டு இவனுங்க பள்ளிக்கு ஏன் போனாய் எனக் கேட்டு குத்புதீனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதைக் கண்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், வாருங்கள் அவர் மீது காவல்துறையில் புகார் செய்யலாம் என அழைக்க, அதற்கு குத்புதீன், வேண்டாம் இது எனக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை இதை இயக்க பிரச்சனையாக மாற்ற வேண்டாம், நானே பார்த்துக் கொள்கிறேன் எனச் சொல்லிவிட்டு தனது மைத்துனரான பக்கத்து ஊரைச் சேர்ந்த ஹஜ்முகமது என்பவரிடம் முறையிட்டு இதை வந்து கேட்குமாறு அழைத்திருக்கிறார்.
இங்கே ஹஜ்முகமது பற்றிய சில விளக்கங்கள். இந்த ஹஜ் முகமது என்பவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள குறிச்சிமலையைச் சார்ந்தவர். அந்த ஊரில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர் மற்றும் வசதிபடைத்தவர். இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. மாறாக தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கைகளை எதிர்க்கக்கூடியவர். நடந்து முடிந்த ஜூலை 4 மாநாடு பற்றிய விளக்கக் கூட்டம் ஹஜ்முகமதுவின் ஊரில் நடந்த போது அதை கடுமையாக விமர்சித்தவர் இவர் என்பதும் அதற்கு எதிராக களமிறங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன் மைத்துனர் தாக்கப்பட்டதை அறிந்து கொதித்த ஹஜ் முகமது இதுகுறித்து விபரம் கேட்க தனது அடியாட்களுடன் 3 கார்களில் திருவிடைச்சேரி சுன்னத் ஜமாத் பள்ளிவாசலை அடைந்து அங்கிருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதை அறிந்த திருவிடைமருதூரைச் சேர்ந்த ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில் மற்றும் அந்த ஊரின் முக்கிய பிரமுகர்களான பால்ராஜ், ராம்தாஸ் மற்றும் சந்தியாகு ஆகியோர் உட்பட இன்னும் சிலர் சமாதான பேச்சில் ஈடுபட்டாலும் அவர்கள் ஜபருல்லாவிற்கு சாதகமாகவே பேசியிருகிறார்கள்.ஒரு கட்டத்தில் இவர்கள் அனைவரும் சேர்ந்து உருட்டுக் கட்டைகளுடன் ஹஜ்முகமது வகையறாவைத் தாக்க முற்படும் போது தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட ஆரம்பித்தார்.
அதிலும் அடங்காத ஜாமாத்தார்கள் மேலும் நெருங்க, இதனால் கொலைவெறி கொண்ட ஹஜ்முகமது தன்னிடம் இருந்த துப்பாக்கியை
எடுத்து சரமாரியாக எதிரணியினர் மீது சுட ஆரம்பிக்க அதிலே முகமது இஸ்மாயில் மற்றும் அஜிஸ் முகமது ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.காஜா மைதீன் , பால்ராஜ் , ராமதாஸ் , சந்தியாகு ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். சுட்டு கொன்ற ஹஜ் முகமது தன் சகாக்களுடன் தலைமறைவாகி விட்டு பின்னர் சரணடைந்தார்.
சில இஸ்லாமிய பெயர் தாங்கிகளால் புனிதம் மிக்க ரமலான மாதத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர சம்பவம் குறித்து மீடியாக்களும் மற்றும் சிலரும் இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் ஜமாத்திற்கும் இடையே தொழுகை நடத்துவது சம்பந்தமாக ஏற்பட்ட கலவரம் என செய்தி வெளியிட்டனர். இன்னும் சிலர் இந்த செய்தியை குறுந்தகவல் மூலம் பரப்ப ஆரம்பித்தனர். இஸ்லாத்தை முழுமையாக அறியாத ஒரு ரவுடியால் நிகத்தப்பட்ட இந்த கொடூர சம்பவத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் அரங்கேற்றியது போல ஒரு மாயை நேற்று முழுவதும் பரப்பப்பட்டது.
இஸ்லாம் கூறும் நிரந்தர நரகம் குறித்த செய்திகளில் கொடூர கொலையும் ஒன்று. அதையும் தாண்டி அந்த வேலையைச் செய்பவர்கள் வெறும் இஸ்லாமிய பெயர் தாங்கிகளாகவே இருப்பார்களேயன்றி உண்மை முஸ்லீம்களாக இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் தவ்ஹீத் கொள்கை பிரச்சாரம் செய்யப்பட ஆரம்பித்தது முதல் இன்று வரை சுன்னத் ஜமாத்தினர் தான் தவ்ஹீத் ஜமாத்தினரை தாக்கியிருக்கிறார்களேயன்றி இவர்கள் திருப்பித் தாக்கியதாக எந்தவிதமான செய்தியும் இன்றுவரை இல்லை. காரணம் அவர்கள் மடத்தனமாக செய்யும் வேலையை இவர்களும் திருப்பிச் செய்தால் இவர்களின் பிரச்சாரம் தொய்வடைந்து விடும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.
மேலப்பாளயத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சகோதரர் பி.ஜெயினுலாபுதீனை அருவாளால் வெட்டவந்த போதும், நாகூரிலே பெட்ரோமாக்ஸ் லைட்டைத் தூக்கி அவர் மீது அடித்த போதும், டியூப் லைட்டைக் கழற்றி அடித்த போதும், கொழும்பிலே கற்களால் தாக்கப்பட்ட போதும் அவர்களை யாரும் திருப்பித் தாக்கவில்லை. மாறாக சட்டப்படி அவர்கள் மீது புகார் மட்டுமே செய்யப்பட்டது. இந்த மரபு இன்று வரை தவ்ஹீத் ஜமாத்தினரின் அனைத்து பிரச்சாரிகளாலும்,தொண்டர்களாலும் கடைபிடிக்கப் படுகிறது.
என்றைக்குமே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்முறையை ஆதரிக்காது. வன்முறையாளர்களை எதிர்த்து தைரியமாக பிரச்சாரம் செய்யும். எனவே சகோதரர்களே! இந்த கொடூர கொலை சமவத்திற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினருக்கும் எள்ளவும் சம்பந்தம் இல்லை என இதன் மூலம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதே போல நேற்று நிகழ்த்தப் பட்ட கொடூரக்கொலையைச் செய்த அந்த ரவுடிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். காரணம் புனிதம் மிக்க ரமலான் மாதத்தின் சிறப்புகளை அறிந்த ஒரு முஸ்லீம் சாதாரணமாக யாரிடமும் வாய்ச்சண்டைக்கு கூட போக மாட்டான். ரமலான் மாதத்தில் யாரேனும் உங்களிடம் சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளி என சொல்லி ஒதுங்கிக்கொள்ளட்டும் என ரசூலுல்லாஹ் தெரிவிக்கிறார்கள். எனவே நடந்த கொலைச் சம்பவத்தை நிகழ்த்தியவன் நிச்சமாக ஒரு முஸ்லீமாக ஏன் ஒரு மனிதனாக கூட இருக்கமுடியாது என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
செப்ரெம்பர் 17, 2010 இல் 11:11 முப
This is a typical Islamic fundamentalist response and it would only foster such elements.
That Muslims could not kill people like that or those who kill people would not be “Muslims” and so on is not at al convincing, as the happenings everywhere, proves differently.
Unless, they become calm true to the name of Islam / peace, there is no meaning in making such meaningless apology or excuses.
Can they rise the killed persons?
செப்ரெம்பர் 7, 2010 இல் 11:47 முப
This incidence canont be taken lightly, as the shooter has not only exceeded the limits, but also tried to terrorize the innocents or otherwise.
That he is having gun, and started shooting during the prayer or for the right of conducting prayer or deying such right to others, it is evident that he is trying to dominate over the community, according to his will.
It is not known how the so-called Tamil Nadu Touheed Jamat (TNTJ) is running a state within the state without any regard for the authorities.
That the police have been soft towards their activitties prove their connivance with these groups or they have been instructed by the political masters for obvious reasons.
செப்ரெம்பர் 17, 2010 இல் 11:28 முப
The banned PFI has been operating through TNTJ, as many of those members have shifted their loyalty to this group.
Thus, through aggressive nature, they are getting them exposed.
Earlier, some sexual harassment, pornography and such type of news have also come from TN. Thus, it appears all is not well with the TN Muslims.
செப்ரெம்பர் 7, 2010 இல் 2:25 பிப
தினமணி, 07 Sep 2010 12:21:46 PM IST
திருவிடைச்சேரி பகுதியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை: ஜெயலலிதா வலியுறுத்தல்
சென்னை, செப்.7, 2010: குடவாசல் ஒன்றியம், திருவிடைச்சேரியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, அங்கு இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவிடைச்சேரியில் நேற்று ஒரு பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், திருவிடைச்சேரி அதிமுக கிளைச்செயலர் ஜபருல்லாவின் மைத்துனர் ஹாஜி முகமது மற்றும் அவ்வூர் ஜமாத் தலைவர் இஸ்மாயில் ஆகியோர் மரணமடைந்த செய்தி கேட்டும், அவ்வழியே சென்று கொண்டிருந்த சேதனிபுரம் ஊராட்சி, விழுதியூர் அதிமுக கிளைச் செயலர் பால்ராஜ் மகன் சந்தியாகு, விழுதியூர் கிளை ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ராமதாஸ் மற்றும் அவ்வூரைச் சேர்ந்த ஹாஜா ஆகியோர் படுகாயமடைந்த செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல் துறை என்ற ஒன்று இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.
திருவிடைச்சேரியில் நடைபெற்ற கலவரத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். எனவே, அந்தப் பகுதியில் இயல்பு நிலை திரும்ப தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
செப்ரெம்பர் 17, 2010 இல் 11:30 முப
Bot these dravida leaders have been just pampering and communalizing the TN Muslims and thus, they have been going out of control.
Karunanidhi has been helping them legally by circumventing law, asking police not to take action and so on.
செப்ரெம்பர் 7, 2010 இல் 2:33 பிப
தமிழ்நாட்டில் காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா?-ஜெ
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 7, 2010, 15:13[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/09/07/police-deparment-tn-jayalalithaa.html
சென்னை: திருவிடைச்சேரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம், திருவிடைச்சேரியில் ஒரு பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், திருவிடைச்சேரி அதிமுக கிளைச் செயலாளர் ஜபருல்லாவின் மைத்துனர் முகமது மற்றும் அந்த ஊரின் ஜமாத் தலைவர் இஸ்மாயில் ஆகியோர் மரணமடைந்த செய்தி கேட்டும்,
அந்த வழியே சென்று கொண்டிருந்த சேதனிபுரம் ஊராட்சி, விழுதியூர் அதிமுக கிளைச் செயலாளர் பால்ராஜ் மகன் சந்தியாகு, விழுதியூர் கிளை ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ராமதாஸ் மற்றும் அந்த ஊவூரைச் சேர்ந்த ஹாஜா ஆகியோர் படுகாயமடைந்த செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.
திருவிடைச்சேரியில் நடைபெற்ற கலவரத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். எனவே, அந்தப் பகுதியில் இயல்பு நிலை திரும்ப தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள மறுப்பு:
இந் நிலையில் தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவிடைச்சேரி என்ற கிராமத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹாஜி முஹம்மது என்பவர் துப்பாக்கியால் சுட்டு இருவர் இறந்து விட்டதாகவும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு முரணானதாகும்.
துப்பாக்கியால் சுட்டவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியோ, உறுப்பினரோ, அனுதாபியோ அல்ல. அவர் எங்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்தக் கூடியவரும் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளை ஆதரிப்பவரும் அல்ல.
அவரது உறவினர் குத்புதீன் என்பவரை சிலர் தாக்கிவிட்டனர் என்பதால், உறவினருக்காக நியாயம் கேட்க அவர் வந்தபோது ஊர் ஜமாஅத்தார்களுக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது தான் அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுடப்பட்டவர்களில் முஸ்லிமல்லாதவர் மூன்று பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தச் சம்பவத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எந்தக் காலத்திலும் இது போன்ற வன்முறையை தவ்ஹீத் ஜமாஅத் கையில் எடுத்ததில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
செப்ரெம்பர் 17, 2010 இல் 11:33 முப
As she herself has been involved in many court cases, people may not take seriously, particularly, when she talks about the law and problem etc.
Unless, the issues are tackled effectively, the situation cannot be controlled.
Karunanidhi has many times compared TN with Kashmir – that both states have been demanding autonomy and so on. Once he remarked that TN was becoming Kashmir.
Let us hope, the TN Muslims would not start throwing stones!
செப்ரெம்பர் 7, 2010 இல் 2:51 பிப
Dispute over Ramzan prayers flares up, 2 killed
TNN, Sep 7, 2010, 07.16am IST
http://timesofindia.indiatimes.com/city/chennai/Dispute-over-Ramzan-prayers-flares-up-2-killed/articleshow/6508880.cms
TIRUVARUR: Two persons were shot dead and four sustained bullet injuries when a man opened fire indiscriminately with a revolver in front of a mosque in Thiruvidaichery village of Tiruvarur district close to midnight on Sunday. The shooting spree was a fallout of a clash between two groups of Muslims over the venue for Ramzan prayers. The man, identified as Haji Mohammed, 50, is said to be absconding.
Police said Mohamed Ismail, 55, president of the local jamaat, and Hakkim Mohamed, 60, who were shot at close range, died on the spot while four men hailing from the village were admitted to Thanjavur Medical College Hospital with bullet injuries in their abdomen and thigh. The condition of one, Balraj, 60, is said to be critical.
Central Zone inspector general of police Karan Singha said 13 persons suspected to have accompanied the accused, Haji Mohamed, an automobile broker of Kurichimalai near Thiruvidaimarudur in Thanjavur district, have been arrested. A hunt is on to nab Haji Mohamed as well as others involved in the clash. Tension gripped the village of about 300 families even as heavy police presence was ensured to prevent any further incidents.
“We are probing Haji Mohammed’s antecedents and how he came to possess a revolver,” said Singha, adding that the situation in the village was “under control”. The police have raided the house of Haji Mohamed at Kuruchimalai and seized an unlicensed country rifle and a licensed rifle.
Police said trouble started after Qutbudheen along with some others of Thiruvdaichery started conducting Ramzan prayers in his house against the diktat of the local jamaat, which was conducting the prayers in the mosque. A week ago, Qutbudheen’s neighbours, who owed allegiance to the jamaat, complained about it to president Mohamed Ismail and appealed to him to put an end to the practice. Ismail subsequently went to Qutbudheen’s house and asked him to stop conducting the prayer sessions in his house and instead join the sessions in the mosque, police said.
On Sunday night, Qutbudheen, along with his relative Haji Mohamed, and 20 others, went to the mosque in the guise of holding talks with Mohamed Ismail to resolve the issue. An argument broke out in front of the mosque around midnight and in the melee Haji Mohamed had reportedly hit Mohamed Ismail and attempted to flee. When jamaat members attempted to catch him, he pulled out his licensed revolver and opened fire, killing Ismail and Hakkim Mohammed. Four others who came to the rescue of Ismail were also shot at. Even as the jamaat members stood stunned, Haji Mohamed, Qutbudheen and his group fled the spot, police said.
Thanjavur range DIG R Thirugnanam said preliminary enquiries revealed that the cause of the clash was over the venue of Ramzan prayers only, though the police are investigating whether there was any other motive.
Read more: Dispute over Ramzan prayers flares up, 2 killed – The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Dispute-over-Ramzan-prayers-flares-up-2-killed/articleshow/6508880.cms#ixzz0yr6QJ500
செப்ரெம்பர் 9, 2010 இல் 2:09 முப
ஹாஜ் முஹம்மது சிதம்பரத்தில் சரண்டர்
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹாஜ் முகமது மற்றும் அவரது ஆதரவாளர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே திருமங்கலகுடியில், உள்ள ஹாஜ் முகமது வீட்டில் போலீசார் 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கொலையாளி ஹாஜ் முகமது, நேற்று, சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் ஈசுவரமூர்ததி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் கடலூர் சிறையில் அடைக் கப்பட்டார்.
http://www.maalaimalar.com/2010/09/08015758/murder-case-in-collector-enqui.html
இந்நிலையில் தலைமறைவாக இருந்த கொலையாளி ஹாஜ் முகமது, நேற்று, சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் ஈசுவரமூர்ததி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=38960
செப்ரெம்பர் 9, 2010 இல் 7:18 முப
Whatever internal wrangles maight be there for them, but how they could have resorted to such type pf kiiling people?
Is it correct on the peace loving people?
Just for praying rights, how Muslims could resort to such mindless and brutal killings?
செப்ரெம்பர் 9, 2010 இல் 12:54 பிப
Mosque shooting in Riyadh injures three
By GHAZANFAR ALI KHAN | ARAB NEWS
Published: Sep 3, 2010 00:00 Updated: Sep 3, 2010 00:00
http://arabnews.com/saudiarabia/article124486.ece
RIYADH: At least three people were reported injured when gunmen opened fire outside a mosque in Riyadh on Wednesday night. However, senior police officials told Arab News that only one person was hit.
The shootout, that sent shock waves throughout the local community, took place outside the Prince Sultan Mosque. The mosque shooting — the first criminal act of its kind to take place during the holy month of Ramadan in the capital — happened after taraweeh prayers.
According to reports, the imam and the muezzin of the mosque were also injured. It was claimed that both were released after they received medical treatment at a clinic, while the third person was hospitalized.
A spokesman from Riyadh Police said two people waiting outside the mosque fired on another person coming out after prayers. “According to preliminary investigations, it seems to be the case of a personal dispute between the man and the shooters,” said the spokesman. He reiterated that only one man was injured in the shooting.
“The case is in under investigation,” said the spokesman, confirming that the incident took place outside Prince Sultan Mosque in Riyadh. He also clarified that it was not a terrorist act.
The spokesman said the shooters fled the scene in a Camry, leaving worshippers terrified. It is not clear whether any arrests have been made.
Riyadh is home to about five million people and has been relatively crime-free for the last several years.
There have been regular reports of thefts, snatchings and fraud, but no major acts of organized crime or terrorism have been reported in the capital city over the past five years.
செப்ரெம்பர் 22, 2010 இல் 7:28 முப
DEAR BOTHERS AND SISTERS PLEASE UNDERSTAND ISLAM IS A MARKAM
TO HAVE LOVE AND AFFECTIONATE WITH EVERYONE NOT ONLY MUSLIMS
UNFORTUNATE HAJ MOHAMED DID THIS, TO KILLED ONES EVENTHOUGH HE PROTECT HIM FROM OPPOSITE GROUP HIS LIFE MURDER ATTEMPT HE SHOULD AVOID USING THE GUN HOPE
THE LOST FAMILY MEMBERS SABUR AND PRAY FOR LOST ONES JANNAH AND
HAJ MOHAMED FATE WILL BE DECIDE BY COURT AND GOD GIVEHIM HEREAFTER
GOOD MANNER.
செப்ரெம்பர் 25, 2010 இல் 5:36 முப
எல்லாம் அறிந்த மனிதன் சண்டை போடுவதில் முன் நிற்பான் காரணம் அவன் ஆறு அறிவு கிடைத்தவன்
உண்மையான – எல்லை இல்லா -நட்புhttp://nidurseasons.blogspot.com/2010/09/blog-post_24.html
நவம்பர் 26, 2015 இல் 10:06 முப
[…] [5] https://islamindia.wordpress.com/2010/09/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E… […]
நவம்பர் 26, 2015 இல் 10:10 முப
[…] [5] https://islamindia.wordpress.com/2010/09/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E… […]