நிலப்பிரச்சினை என்றால், கொலை செய்யப்பட்டது பிஜேபி மற்றும் கொலை செய்தவர்கள் பின்னணி வேறுவிதமாக இருப்பது எப்படி?

நிலப்பிரச்சினை என்றால், கொலை செய்யப்பட்டது பிஜேபி மற்றும் கொலை செய்தவர்கள் பின்னணி வேறுவிதமாக இருப்பது எப்படி?

Murdered Murugan - Paramakkudi

பரமக்குடியில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை, பதற்றம், சாலைமறியல்: ராமநாதபுரம், பரமக்குடியில் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் முருகன், கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முருகன் பெரிய கடை அஜாரில் தேங்காய் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்[1]. பரமக்குடியில் மார்ச் 19, 2013ல், ஈஸ்வரன் கோயில் முன், பா.ஜ., முன்னாள், நகராட்சி கவுன்சிலர் முருகன், 46, மெயின் பஜாரில் தனது வீட்டில் மதிய உணவை சாப்பிட்டு விரட்டு கடைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது, இரண்டு மோட்டார் கைக்கிள்களில் வந்த நால்வர் வழிமறித்தனர்.  திடீரென்று “பைப்” குண்டுகளை வீசினர், ஆனால், அவை வெடிக்கவில்லை. தப்பித்து ஓட முயன்ற முருகனை நால்வரும் துரத்திச் சென்று, பயங்கர ஆயுதங்களால் கண்ட-துண்டமாக வெட்டிக் கொன்று ஓடிவிட்டனர்[2]. முருகனின் வெட்டப்பட்ட உடல் தெருவில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இவ்வளவும் பட்டப்பகலில் நடந்தது[3].

Paramakudi - Murugan murder - pipe bomb

இதனால் பரமக்குடியில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள், குறிப்பாக, பஜார் தெருவில் மூடப்பட்டன. இதை கண்டித்து, வணிகர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்[4]. குற்றவாளிகளை உடனே கைது செய்யவும், கொலைக்கான காரணத்தை கண்டறியவும் வலியுறுத்தி பொதுமக்கள் மாலை 4 மணியளவில் பரமக்குடி, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது[5]. பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததால், பலர் பார்த்துக் கொண்டிருந்தனர். போலீஸார் அவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து, கம்ப்யூட்டரில் படங்களை வரைந்து உருவாக்கி, அவற்றை மக்களிடம் காணித்து விசாரணையை நடத்தினர்[6].

Paramakudi - Murugan murder

ரபீக்ராஜாஇமாம் அலி கூட்டாளி, போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் எப்படி இதில் சம்பந்தப் பட்டான்: ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைத் தொகுத்துப் பார்த்ததில் கிடைத்துள்ள விவரங்கள் அவர்களது பின்னணியை வேறுவிதமாக எடுத்துக் காட்டுகிறது. கைது செய்யப்பட்ட நால்வர்[7]

 1. என். ராஜா முஹம்மது [N. Raja Mohamed (58)] – தற்போது சென்னை டி.நகரில் குடியிருந்து வரும் பரமக்குடி நாகூர் கனி மகன்[8],
 2. எம். மனோஹரன் ராஜா முஹம்மதுவின் மைத்துனர் [his nephew M. Manoharan (41) of Paramakudi] – திருவள்ளுவர் நகர் முத்துச் சாமி மகன்[9],
 3. எஸ். ரபீக் ராஜா அல்லது “வாழக்காய்” [‘Vazhakai’ alias S. Rafeeq Raja one of (35) two Madurai based mercenaries] – மதுரை காயிதேமில்லத் நகர் சுல்தான் அலாவுதீன் மகன்[10].
 4. ஏ. சாஹுல் ஹமீது [A. Sahul Hameed (37) another mercenary] -மதுரை தாசில் தார் பள்ளிவாசல் தெரு அகமது மகன்[11].

இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான‌ போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது குறிப்பிடத்தக்கது[12].

Paramakudi - the arreseted four

தீவிரவாதிகள் தயாரிக்கும் வெடிகுண்டுகள் கூலிப்படைக்குக் கிடைக்குமா?: ரபீக் ராஜா, சாஹுல் ஹமீது மற்றவர்கள் உபயோகப்படுத்திய குண்டுகள் ஆச்சரியமாக உள்ளது. அவை மேம்படுத்தப் பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு [Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives] வகையைச் சேர்ந்தது என்பதுதாகும். அவர்கள் அவற்றை கோயம்புத்தூரில் வாங்கியதாகச் சொல்கிறார்கள்[13]. சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த இரண்டு பைப் வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்து, போலீஸார் புலனாய்விற்கு எடுத்துச் சென்றனர்.

பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தேடப்படும் ரபீக் ராஜா இங்கு எப்படி வந்தான்?: கோயம்புத்தூர், திருப்பத்தூர், மதுரை என்ற இடங்கள், அவற்றின் தொடர்புகள் விஷயத்தை வேறுவிதமாக மாற்றிக் காட்டுகிறது. கிடைத்துள்ள வெடிகுண்டுகள், வெறும் குண்டுகள் அல்ல. அப்படியென்றால், –

 • கோயம்புத்தூரில் அத்தகைய குண்டுகளைத் தயாரிப்பவர்கள் யார்?
 • எங்கு தயாரிக்கிறார்கள்?
 • அத்தகைய தொழிற்நுட்பம் எப்படி கிடைத்தது?
 • அதற்கான பொருட்கள் – குறிப்பாக ஜெல், எப்படி கிடக்கின்றன?
 • யார் அவற்றை வாங்கி, விநியோகிக்கின்றனர்?
 • கோயம்புத்தூரில் அப்படி அவை விற்க்கப்படுகின்றனவா?

இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான‌ போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த். உதவி எஸ்.பி., விக்ரமன் தலைமையில், தனிப்படையினர் விசாரித்தனர்[14]. இதில் சிக்கிய பரமக்குடி மனோகரன், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பது:பரமக்குடி வைகை நகர் சிவஞானம் என்பவர், 50 ஆண்டுகளுக்கு முன், 6.5 ஏக்கர் நிலம் வாங்கினார். அவர் இறந்த பின், நிலத்தை, அவரது மகன் கதிரேசன் பராமரித்தார். இதற்கிடையே, வேந்தோணியை சேர்ந்த எனது மாமா ராஜபாண்டி என்ற ராஜா முகம்மது, 58, அந்த நிலத்திற்கு, 2003ல், எனது பெயரில் போலியாக பத்திரம் தயாரித்தார். இது தொடர்பாக, பரமக்குடி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, கதிரேசன் மகன்கள் முருகன் (கொலை செய்யப்பட்டவர்), சிவக்குமாருக்கு சாதகமாக தீர்ப்பானது. நிலத்தை விற்க இருவரும் முயற்சித்தனர். அதை வாங்க வருபவர்களிடம் பிரச்னை செய்தோம். அதில் 3 ஏக்கரை, மதுரை மேலூர் ராஜாரபீக், 8 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அவரிடம் பிரச்னை செய்து, 85 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டோம். பின், முருகன் குடும்பத்தினரிடம், ஒரு கோடி 50 லட்ச ரூபாய் கேட்டதற்கு, தரமறுத்துவிட்டனர். முருகன், “பணம் தரமாட்டோம்’ என்றதால், அவரை கொலை செய்ய, மதுரை கூலிப்படையினரை வரவழைத்து, 2 லட்ச ரூபாய் வழங்கினோம். கூலிப்படையை சேர்ந்த வாழக்காய் ரபீக்ராஜா, 35, (போலீஸ் பக்ரூதீனின் கூட்டாளி), சாகுல்ஹமீது, 37, மற்றும் ஒருவர் மூலம், முருகனை கொலை செய்துவிட்டு, நானும், மாமா ராஜா முகம்மதுவும் தப்பிவிட்டோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளார். மனோகரன், ராஜா முகம்மது, வாழக்காய் ரபீக்ராஜா, சாகுல்ஹமீதுவை, போலீசார் கைது செய்தனர்; கூலிப்படையை சேர்ந்த ஒருவரை தேடி வருகின்றனர்[15].

பரமக்குடி – இந்து-முஸ்லீம் பிரச்சினை, ஜாதி-கலவரம் என்றுள்ளது: பரமக்குடியில் 2011ல் ஜாதிக்கலவரம் ஏற்பட்டுள்ளது. அதில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அங்கு அடிக்கடி கொலை நடப்பதும் சகஜமாகி உள்ளது. முஸ்லீம்களின் ஜனத்தொகை இங்கு கனிசமாகப் பெருகி வருவதால், புதிய பிரச்சினையாக இந்து-முஸ்லீம் பிரச்சினை எழுந்துள்ளது. இங்கு மாமா-மைத்துனன் முஸ்லீம்-இந்து என்று இருப்பது, வினோதமா, வேடிக்கையா, விபரீதமா என்று தெரியவில்லை. ஆனால், கொலை என்று முடிந்துள்ள போதில், சம்பந்தப் பட்டவர்களின் பின்னணி, சாதாரண நிலத்தகராறு என்பதனையும் கடந்து, செயல் பட்டுள்ள நிலையை நோக்கும் போது, வேறு ஆழ்ந்த சதிதிட்டம் இருக்குமோ சந்தேகிக்க வேண்டியுள்ளது.

யார் இந்த போலீஸ் பக்ருதீன்? – விவரங்கள்[16]: ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான‌ போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது, இதர விஷயங்களை இணைக்கிறது. அத்வானியைக் கொல்ல திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காட்டுகிறது. இதற்கிடையே, இந்த சதித் திட்டத்தின் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அத்வானியின் பாதையில் வெடிகுண்டு வைக்கும் திட்டத்தை உருவாக்கியவர் பக்ருதீன்தான். இவருக்கு போலீஸ் பக்ருதீன் என்ற பெயரும் உண்டு. இந்த போலீஸ் என்ற அடைமொழி பக்ருதீனுக்கு வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. பக்ருதீனுக்கு 32 வயதாகிறது. மதுரையைச் சேர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை பெயர் சிக்கந்தர். இவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். தந்தை போலீஸ் பணியில் இருந்ததால் பக்ருதீனின் பெயருடன் போலீஸ் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டதாம். தனது தந்தை போலீஸாக இருந்தபோது பக்ருதீன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வாராம். போலீஸாரிடம் கூட அவர் மோதலில் ஈடுபட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை முன்பு தாக்கியுள்ளார். இதேபோல பல போலீஸாரிடம் தகராறு செய்து அதுதொடர்பாக வழக்குகளும் உள்ளன.

இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் முன்பு மதுரையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது சந்தேகிக்கப்பட்டது. அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோர் மதுரை மேலூரில் நடந்த வெடிகுண்டு சம்பவ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2002ம் ஆண்டு மதுரையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்குச் செல்லும் வழியில் திருமங்கலத்தில் போலீஸ் வேன் நின்றபோது, அதிரடியாக அங்கு வந்த இமாம் அலி, ஹைதர் அலியின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு இருவரையும் மீட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தில் முதல் முறையாக ஈடுபட்டார் பக்ருதீன். பின்னர் இமாம் அலி பெங்களூரில் தமிழக போலீஸ் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இப்ராகிம் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மைத்துனர்தான் பக்ருதீன். இமாம் அலி மீட்கப்பட்ட வழக்கில் கைதான பக்ருதீன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர் முழு அளவில் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பியுள்ளார். பக்ருதீன் மீது 22 வழக்குகள் உள்ளனவாம்.

பக்ருதீன் வெடிகுண்டுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இமாம் அலியிடமிருந்தே இவர் வெடிகுண்டுகள் தயாரிக்க கற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. கோவை தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்தவர் இமாம் அலி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஆலம்பட்டி சம்பவத்திலும் கூட பக்ருதீன்தான் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். அத்வானி பாதையில் வெடிகுண்டு வைக்க தீர்மானித்த அவர் தனது செயலுக்கு அப்துல்லா மற்றும் பிலால் மாலிக்கை நாடி உதவி கோரியுள்ளார். அவர்களும் சம்மதிக்கவே திட்டத்தை விரைவுபடுத்தினர்.அவ்வழக்கு நடந்து வருகிறது.

மேம்படுத்தப்பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு : பைப் குண்டு, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருவதைப் பற்றி, முன்னர் சில இடுகைகளை இட்டுள்ளேன்[17]. திருப்பத்தூர் தொடர்பு அம்மோனியம் நைட்ரேட், குண்டு வெடிப்பு மற்றும் ஜோஸப் பாஸ்கர் – இவை நினைவிற்கு வருகின்றன[18]. கட்டுப்பாட்டில் இருக்கும் ரசாயனங்கள், அவற்றை வாங்குபவர்கள், குறிப்பிட்ட உபயோகம் தவிர, குன்டுகள் தயாரிக்கத் திருப்பி அனுப்பி வியாபாரம் செய்வது[19], உபயோகம், ஜெல், முதலியவை, பெரிய சதிதிட்டத்தைக் காட்டுகிறது[20].

வேதபிரகாஷ்

07-04-2013


[13] The team found that the mercenary gang had travelled up to Tirupur before committing the murder and could have purchased the pipe bombs from Coimbatore, sources said. Examination of two of the live bombs recovered from the scene showed that the Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives. The special team is investigating into this aspect, the SP said.

Explore posts in the same categories: அமோனியம், அம்மோனியம், அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இமாம் அலி, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உறவினர், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கடை, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, சரீயத், சிறுபான்மையினர், செல், செல்போன், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், டைமர், தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தமுமுக, தர்கா, திரி, துலுக்கன், தூண்டு, தேங்காய், தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், நேரம், நைட்ரேட், பஜார், பட்கல், பட்டகல், பட்டக்கல், பரமக்குடி, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, புனிதப் போர், மதரஸா, மதவாதம், மதவிமர்சனம், மதவெறி, முஜாஹித்தீன்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

10 பின்னூட்டங்கள் மேல் “நிலப்பிரச்சினை என்றால், கொலை செய்யப்பட்டது பிஜேபி மற்றும் கொலை செய்தவர்கள் பின்னணி வேறுவிதமாக இருப்பது எப்படி?”

 1. L. K. Raghuraman Says:

  எம். மனோஹரன் ராஜா முஹம்மதுவின் மைத்துனர் என்றால், ஒன்று மனோஹரனும் முஸ்லீமாக இருக்க வேண்டும் அல்லது ராஜா முஹம்மது இரட்டை வேடம் போடுகிறார் என்றாகிறது.

  அவ்வாறு ஒருவர் பாதி முஸ்லீம், பாதி இந்து என்று இருக்க முடியாது. கன்னியாக் குமரி இந்துக்கள், கிறிஸ்தவர்கள் போல, மதுரையில் முஸ்லீம்கள்-இந்துக்கள் இருப்பது மாயையே.

  ஆகவே, இதனால் தான், அந்த தீவிரவாத தொடர்பு, வேறு பிரச்சினையை எடுத்துக் காட்டுகிறது.

  இஸ்லாமிய தீவிரவாதம் தமிழகத்தில் பெருகி வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

  விஷவரூப்ம் எதிர்ப்பும், இதற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை

 2. L. K. Raghuraman Says:

  இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது தாக்குதல்
  ஏப்ரல் 15,2013
  பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2013,06:57 IST
  மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 15,2013,12:05 IST
  http://www.dinamalar.com/news_detail.asp?id=690640

  ஊட்டி:இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது மர்ம கும்பல் நேற்று இரவு தாக்கியது.நீலகிரி மாவட்‌டம் ஊட்டியில் இந்து முன்னணி கூட்டம் நடந்தது.இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மஞ்சுநாத் கலந்து கொண்டார். பின்னர் கூட்டம முடிந்து செல்லும் போது மர்மகும்பல் , ராகவேந்திரா கோயில் அருகே இவரை மண்டையில் தாக்கியது . இதில் அவர் பலத்த காயமடைந்தார். மஞ்சுநாத் கோவை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

 3. L. K. Raghuraman Says:

  இந்து முன்னணி நிர்வாகிக்கு வெட்டு
  பதிவு செய்த நேரம்:2013-04-15 10:24:58
  http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=185162&cat=504

  ஊட்டி, : நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி.திடலில் இந்து முன்னணி சார்பில் இந்துகள் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டத்தில் எச்.எம்.டி. பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மஞ்சுநாத்(30) பங்கேற்று விட்டு, நேற்று இரவு 10 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தார். தனது சொந்த ஆட்டோவில் அவரே ஓட்டிச்சென்றார். அப்போது பாம்பே கேசின் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பைக்கில் வந்த 20க்கும் அதிகமான மர்மநபர்கள், ஆட்டோவை மறித்து கண்ணாடியை உடைத்தனர். மஞ்சுநாத்தை, ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்து பயங்கர ஆயுதங்களால், தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர்.அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் டி.எஸ்.பி.அனிதா, பி.1.போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் மஞ்சுநாத்தை மீட்டு, ஊட்டி அரசு மருத்துரவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 4. L. K. Raghuraman Says:

  Hindu Munnani leader attacked for ‘hate speech’PTI : Udhagamanadalam , Mon Apr 15 2013, 15:31 hrs
  http://www.indianexpress.com/news/hindu-munnani-leader-attacked-for-hate-speech/1102742/

  A bandh called by Hindu Munnani protesting the attack on one of its leaders here by a 20-member gang for his alleged ‘hate speech’ evoked a mixed response today as tension prevailed in the famous hill resort town.

  According to police, Manjunathan, Nilgiris District Secretary of Hindu Munnani was waylaid and attacked by a motorcycle- borne gang last night, after the reported speech against some communities.

  He has been admitted to the Government Hospital in Coimbatore with serious head injuries. Protesting against the attack, the Munnani called for a bandh. Some 50 per cent of the traders responded and downed their shutters, amidst prevailing tension, with more than 1,000 police personnel drafted for security duty, they said. Five persons, including an 18-year old boy, have been arrested for the attack, police said.

 5. L. K. Raghuraman Says:

  Hindu Munnani leader attacked for ‘hate speech’

  Last Updated: Monday, April 15, 2013, 14:27
  http://zeenews.india.com/news/tamil-nadu/hindu-munnani-leader-attacked-for-hate-speech_842258.html

  Udhagamanadalam (TN): A bandh called by Hindu Munnani protesting the attack on one of its leaders here by a 20-member gang for his alleged ‘hate speech’ evoked a mixed response today as tension prevailed in the famous hill resort town.

  According to police, Manjunathan, Nilgiris District Secretary of Hindu Munnani was waylaid and attacked by a motorcycle-borne gang last night, after the reported speech against some communities. He has been admitted to the Government Hospital in Coimbatore with serious head injuries.

  Protesting against the attack, the Munnani called for a bandh. Some 50 per cent of the traders responded and downed their shutters, amidst prevailing tension, with more than 1,000 police personnel drafted for security duty, they said.

  Five persons, including an 18-year old boy, have been arrested for the attack, police said.

 6. K. T. Narayayanaswamy Pillai Says:

  குமரியில் பா.ஜ., பந்த்: 25 பஸ்கள் உடைப்பு
  பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013,10:13 IST
  மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 22,2013,10:23 IST
  http://www.dinamalar.com/news_detail.asp?id=696420

  நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ. பிரமுகர் காந்தி என்பவர் நேற்று மர்ம கும்பலால் வெட்டப்பட்டு காயமடைந்தார். இந்த சம்பவத்தினை கண்டித்து பா.ஜ. சார்பில் இன்று முழு பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் நேற்று நள்ளிரவு முதல் பஸ்கள் நிறுத்தப்பட்டன. காலையில் உள்ளூர் பஸ்கள் மட்டும் ஓடியது. பல இடங்களில் கடைகள் 90 சதம் அடைக்கப்பட்டு கிடந்தன. போராட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் கல்வீச்சில் சேதமடைந்தன. இதனை தொடர்ந்து லோக்கல் பஸ்களும் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து பதட்டம் காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலிக்கு மட்டும் கான்வாய் போல மொத்தம், மொத்தமாக பாதுகாப்புடன் பஸ்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
  —————————————————————————

  பாஜக திராவிடப் பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறாதோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.

  இருந்த ஒரே எம்.எல்.ஏ.வை எப்படி அவர்கள் இழந்தனர் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  தமிழகத்தில் பிஜேபி வளர அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

  ஆகவே, அவர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு மக்களிடம் சேர வேண்டும்.

 7. K. T. Narayayanaswamy Pillai Says:

  நாகர்கோவில் பாஜக தலைவர் மீது தாக்குதல்- கன்னியாமகுமரி மாவட்டத்தில் கடையடைப்பு Posted by: Chakra Updated: Monday, April 22, 2013, 11:05 [IST]
  http://tamil.oneindia.in/news/2013/04/22/tamilnadu-attack-on-bjp-leader-sparks-protest-nagercoil-173862.html

  நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாஜக தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான எம்.ஆர்.காந்தியை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பாட்டிலால் குத்தியது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் ராமவர்மபுரம் சிதம்பரநாதன் தெருவைச் சேர்ந்த எம்.ஆர்.காந்தி (68) பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். திருமணமாகாத இவர் கடந்த சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றவர். அதற்கு முன் 1984, 2006ல் குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் நாகர்கோவில் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கடைசியாக கடந்த சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். இவர் தினமும் காலையில் ஆசாரிப்பள்ளம் ரோட்டில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக டெப்போ வரை நடந்து சென்று விட்டு, திரும்பி வருவது வழக்கம். நேற்று காலை 6 மணிக்கு அவர் வீட்டில் இருந்து கிளம்பினார். ஆசாரிப்பள்ளம் ரோட்டில் நடந்து சென்றபோது, இருவர் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். காந்தி அந்த பைக்கை நெருங்கியபோது இன்னொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். 4 பேரும் திடீரென காந்தியை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு உடைந்த பாட்டிலால் அவரைத் தாக்கினர். இதில் கழுத்தின் பின் பக்கம், முதுகு, தோள்பட்டை, வலது பக்க இடுப்பு, இடது கை முட்டி ஆகிய இடங்களில் படுகாயமடைந்தார் காந்தி. அவருக்கு ரத்தம் கொட்டியதால் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். அந்த வழியாக சென்ற சிலர் காந்தி வெட்டப்பட்டு கிடப்பதை பார்த்தது அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும், பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் மருத்துவமனையில் திரண்டனர். காந்தியை வெட்டியவர்களை உடனே கைது செய்யக்கோரி மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரும், கட்சியின் நிர்வாகிகளும் அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனர். பொன்.ராதாகிருஷ்ணன்… தகவல் அறிந்ததும் பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனைக்கு விரைந்து காந்தியிடம் நலம் விசாரித்தார். தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க நாகர்கோவில் எஸ்.பி. உதயகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இன்று கன்னியாகுமரியில் கடையடைப்பு போராட்டம்: இந்தத் தாக்குதலைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 22) கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதையடுத்து இன்று காலை நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம், திருவட்டார், ஆரல்வாய்மொழி, தோவாளை, கன்னியாகுமரி, சுசீந்திரம், ஈத்தாமொழி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. சிறு கடைகள் கூட அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சிரமப்பட்டனர். பஸ்கள் மீது தாக்குதல்… காந்தி தாக்கப்பட்ட தகவல் பரவியதுமே நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பஸ்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது. இதில் களியக்காவிளை, மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை, திருவட்டார், குளச்சல், இரணியல், ஆரல்வாய்மொழி, நாகர்கோவிலில் 28 பஸ்கள் சேதமடைந்தன. இதனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் இரவு நேர பஸ்கள் இயக்கப்படவில்லை. இன்றறு காலை 9 மணி வரையும் டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். வெளி மாவட்டங்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. காலை 10 மணிக்கு மேல் பதட்டம் தணிந்ததையடுத்து உள்ளூர் மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி, நாகர்கோவிலில் பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடவில்லை. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலிருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

  Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/22/tamilnadu-attack-on-bjp-leader-sparks-protest-nagercoil-173862.html

 8. K. T. Narayayanaswamy Pillai Says:

  எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு
  பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஏப்ரல் 22, 10:13 AM IST
  http://www.maalaimalar.com/2013/04/22101334/today-strike-in-kanyakumari-di.html

  நாகர்கோவில், ஏப். 22- குமரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி. (வயது 68). மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். நாகர்கோவில், ராமவர்மபுரம் சிதம்பரநாதன் தெருவில் வசித்து வரும் எம்.ஆர். காந்தி தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்றும் இதுபோல நேசமணி நகர், ஆசாரி பள்ளம் ரோட்டில் நடைபயிற்சிக்கு சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் அவரை வழி மறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

  இதில் படுகாயம் அடைந்த எம்.ஆர். காந்தி பால்பண்ணை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எம்.ஆர். காந்தி தாக்கப்பட்ட சம்பவம் பற்றி தெரியவந்ததும், குமரி மாவட்டம் முழுவதும் உள்ள பாரதீய ஜனதா கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். வெட்டியவர்களை உடனே கைது செய்யக் கோரி நாகர்கோவில், ஆத்திக்காட்டுவிளை, பிள்ளையார்புரம் பகுதிகளில் மறியல் போராட்டம் நடந்தது.

  பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இச்சம்பவத்தை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத் தப்பட்டது.

  இன்று காலையில் மாவட்டத்தின் முக்கிய நகரங்களான நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம், திருவட்டார், ஆரல்வாய்மொழி, தோவாளை, கன்னியாகுமரி, சுசீந்திரம், ஈத்தாமொழி பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. டீக்கடைகள், பெட்டிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சிறு கடைகள் கூட அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சிரமப்பட்டனர்.

  டீக்குடிக்கவும் வழியின்றி தவித்தனர். எம்.ஆர். காந்தி தாக்கப்பட்ட தகவல் பரவியதுமே நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டன. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் கிராமப்புறங்களுக்கு செல்லும் இரவு நேர “ஸ்டே பஸ்”களை இயக்கவில்லை. இருந்தும் இரவில் வெளியூர்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த பஸ்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர்.

  களியக்காவிளையில் 3, மார்த்தாண்டத்தில் 3, குலசேகரத்தில் 8, தக்கலை 5, திருவட்டார் 3, குளச்சல் 2, இரணியல் 4, ஆரல்வாய்மொழி 1, திருப்பதி சாரம் 1 மற்றும் நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி அருகே ஒன்று என மொத்தம் 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் உடைக்கப்பட்டன. நள்ளிரவில் நடந்த பஸ் உடைப்பு சம்பவங்களால் இன்று காலையில் போக்குவரத்து அதிகாரிகள் பஸ்களை இயக்க தயங்கினர்.

  இதனால் காலை 9 மணி வரை “டவுன் பஸ்”கள் எதுவும் இயக்கப்படவில்லை. போக்குவரத்து நடைபெறாததால் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். வெளிமாவட்டங்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த பஸ்கள் பயணிகளை இறக்கி விட்ட பின்பு போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புறப்பட்டுச்சென்றது.

  திருவனந்தபுரம் செல்லும் பஸ்களும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் சென்றது. நகருக்குள் பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் வெளியூர்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்தவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு ஆளானார்கள்.

  பாரதீய ஜனதா கட்சியினரின் போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்கள் உடைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலிருந்து கூடுதலாக 300 போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

  அவர்கள் பதட்டமான பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். காலை 10 மணிக்கு மேல் ஓரளவுக்கு பதட்டம் தணிந்ததை தொடர்ந்து உள்ளூர் மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன.

 9. K. T. Narayayanaswamy Pillai Says:

  வாக்கிங் சென்றபோது பா.ஜனதா பிரமுகர் எம்.ஆர்.காந்தியை வெட்டிய 4 பேர் கும்பல்
  பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 11:14 AM IST
  http://www.maalaimalar.com/2013/04/21111458/bjp-personality-mr-ganthi-went.html

  நாகர்கோவில், ஏப். 21- பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி (வயது 62).

  கட்சியின் மூத்த நிர்வாகியான இவர் நாகர்கோவில் ஜெகநாதன் தெருவில் வசித்து வருகிறார். தினமும் அதிகாலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.

  இன்று காலையிலும் அவர் நடைபயிற்சிக்கு சென்றார். காலை 6 மணி அளவில் கான்கார்டியா பள்ளி அருகே நடந்து சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் திடீரென எம்.ஆர். காந்தியை வழி மறித்தனர்.

  அவர்களை கண்டதும் எம்.ஆர். காந்தி வேகமாக நடக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர்கள் எம்.ஆர். காந்தியை தடுத்து நிறுத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

  இதில் அவரது தலையின் பின்பக்கம் படுகாயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.

  எம்.ஆர். காந்தி ரோட்டில் மயங்கி கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாரதீய ஜனதா கட்சியினருக்கு தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து எம்.ஆர். காந்தியை மீட்டு பால்பண்ணை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  எம்.ஆர். காந்தி தாக்கப் பட்ட சம்பவம் பாரதீய ஜனதா தொண்டர்கள் மத்தியில் பரவியதும் அவர்கள், அவர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். நகரசபை தலைவி மீனாதேவ், பாரதீய ஜனதா மாவட்ட செயலாளர் தேவ், வர்த்தக அணி தலைவர் முத்துராமன், பொருளாளர் கணேசன், நகரத்தலைவர் ராகவன், முன்னாள் தலைவர் ராஜன், கவுன்சிலர்கள் நாகராஜன், பெருமாள் பிள்ளை, இந்து முன்னணி நகரத்தலைவர் ராஜா உள்பட நிர்வாகிகளும் அங்கு வந்தனர்.

  பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று எம்.ஆர். காந்தியிடம் உடல் நலம் விசாரித்தார். மேலும் சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டுமென்றும் கூறினார்.

  இதற்கிடையே ஆஸ்பத்திரி முன்பு குவிந்த பாரதீய ஜனதா கட்சியினர், எம்.ஆர். காந்தியை வெட்டியவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று கோஷம் எழுப்பினர்.

  திடீரென அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

  தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், டி.எஸ்.பி. உதயகுமார், இன்ஸ்பெக்டர்கள் சுடலைமணி, ராஜசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய பாரதீய ஜனதா கட்சியினரிடம் சமரசம் பேசினர். எம்.ஆர். காந்தியை தாக்கியவர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.இதை ஏற்றுக் கொண்ட கட்சியினர் மறியலை கைவிட்டனர். இதையடுத்து எஸ்.பி. மணிவண்ணன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் எம்.ஆர். காந்தியிடம் சம்பவம் குறித்து நேரில் விசாரித்தார்.

  மேலும் எம்.ஆர். காந்தி வெட்டுப்பட்டு கிடந்ததை பாரதீய ஜனதாவினருக்கு தெரிவித்த நபரிடமும் சம்பவம் குறித்து கேட்டு அறிந்தார். இதுபற்றி அவர் கூறும் போது, சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார்? என்பதை விரைவில் கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்போம். இதற்காக டி.எஸ்.பி. உதயகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்படும். இதில் இன்ஸ்பெக்டர்கள் சுடலைமணி, ஜெயபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயன், சுஜித் ஆனந்த் ஆகியோர் இருப்பார்கள், இவர்கள் சம்பவத்திற்கான காரணம் பற்றியும் அதில் ஈடுபட்டவர்களையும் கண்டுபிடிப்பார்கள் என்றார்.

  எம்.ஆர். காந்தி தாக்கப்பட்ட சம்பவம் பிள்ளையார் விளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

  சாலைமறியலிலும் ஈடுபட்டனர். மேலகிருஷ்ணன் புதூர், பள்ளம் பகுதிகளுக்கு சென்ற 4 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சுசீந்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசப் பேச்சு நடத்தினர்.

  மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பதட்டமான பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டனர்.

  எம்.ஆர். காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் கட்சி பணி ஆற்றி வருகிறார். நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் இவர் கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டார்.

  இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத் உள்பட பல்வேறு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.இவரை எதற்காக வெட்டினார்கள்? வெட்டியவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 10. M. K. Mahalakshmi Says:

  குமரி மாவட்டத்தில் மீண்டும் மத மோதலுக்கு நடந்த சதி: இல. கணேசன் குற்றச்சாட்டு
  பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஏப்ரல் 22, 4:38 PM IST
  http://www.maalaimalar.com/2013/04/22163841/Religious-background-conflict.html

  நாகர்கோவில், ஏப். 22- நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எம்.ஆர். காந்தியை பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினருமான இல. கணேசன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  குமரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி, கடந்த 40 ஆண்டுகளாக அவரை நன்கு அறிந்துள்ளேன். 1970 முதல் பாரதீய ஜனதா கட்சியின் கொள்கையில் தீவிரமாக ஈர்க்கப்பட்டு, மக்கள் பணி ஆற்றி வருகிறார். அனைத்து தரப்பு மக்களோடும் நல்ல நட்பு பாராட்டி வரும் அவருக்கு அனைத்து கட்சியினரும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து வருகிறார்கள். அவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்றால் அது எதேச்சையாக நடக்கவில்லை. திட்டமிட்டு தாக்கப்பட்டிருக்கிறார்.

  எனவேதான் பாரதீய ஜனதா போராட்ட அறிவிப்பை வெளியிட்டதும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து முழு அடைப்பை வெற்றியாக்கி உள்ளனர். இதற்காக பொது மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். குமரி மாவட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு பதட்டம் நிறைந்த மாவட்டமாக காணப்பட்டது. மத மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன.

  தற்போது அவை குறைந்திருந்த நிலையில் எம்.ஆர். காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குமரி மாவட்டத்தில் மீண்டும் மத மோதலை ஏற்படுத்த சதி நடக்கிறதோ? என்ற சந்தேகத்தைஎங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  யார் தாக்கினார்கள். எதற்காக வெட்டப்பட்டார் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய வேண்டும். அமெரிக்காவில் தவறு நடந்தால் குற்றவாளிகள் இரண்டொரு நாளில் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவதோடு அவர்களுக்கான தண்டனையும் உடனே வழங்கப்பட்டு விடுகிறது. தமிழக போலீசாரும் அவர்களுக்கு இணையானவர்கள் தான்.

  ஆனால் பாரதீய ஜனதா நிர்வாகிகள் வரிசையாக தாக்கப்பட்டு வரும் சம்பவங்களில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரைக்குடி, மேட்டுப்பாளையம், வேலூர், பரமக்குடி தொடங்கி இப்போது நாகர்கோவிலிலும் எங்கள் நிர்வாகி தாக்கப்பட்டுள்ளார்.

  இந்த சம்பவத்திலும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாவிட்டால் எங்கள் தொண்டர்களின் அதிருப்தி இன்னும் அதிகரிக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசே பொறுப்பு ஏற்கவேண்டும். அந்த நிலைக்கு தொண்டர்களை கொண்டு செல்லாமல் விரைவில் நீதி கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: