இஸ்லாமியர்கள் குறித்து ரகசிய சர்வே: கேரளாவில் 5 பெண்களிடம் போலீசார் விசாரணை, வழக்கு பதிவு!
இஸ்லாமியர்கள் குறித்து ரகசிய சர்வே: கேரளாவில் 5 பெண்களிடம் போலீசார் விசாரணை, வழக்கு பதிவு!
ஒபாமா வருகையைப் பற்றி அமெரிக்கா நடத்திய கருத்துக் கணிப்பு: ஒபாமா இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு, இந்திய முஸ்லீம்கள் அமெரிக்கா, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை முதலியவற்றைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றறிய இந்தியாவின் பல நகரங்களில் கருத்தறிய சர்வே ஒன்றை அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் நடத்தியுள்ளது. ஆனால், கேரளாவில் நடந்தபோது, அது பிரச்சினையாகியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய சமூகத்தினரிடம், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ரகசிய சர்வே நடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, ஐந்து பெண்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரள முஸ்லீம்களிடம் அமெரிக்காவின் கருத்துக் கணிப்பு: கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரிமடம் காலனி இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி. இங்கு அக்டோபர் 2ம் தேதி ஐந்து பெண்கள் சென்று இஸ்லாமிய பெண்களிடம் சர்வே நடத்தினர். அவர்கள் அப்பெண்கள், ஆண்கள் என பலரிடமும் வினாத்தாளில் இருந்த 90க்கும் மேற்பட்ட வினாக்களுக்கு விடை தேடினர். அதில், “ஒசாமா பின்லாடனை நீங்கள் விரும்புகிறீர்களா?’ “நீங்கள் பர்தா (இஸ்லாமிய பெண்கள் அணியும் சம்பிரதாய உடை) அணிவீர்களா?’ போன்ற இஸ்லாமிய சமுதாயம் சம்பந்தமான வினாக்களைக் கேட்டனர். அங்கிருந்த ஏழைப் பெண்களுக்கு அவர்கள் எதற்கு இதுபோன்ற கேள்விகள் கேட்கின்றனர் என தெரியாமல் பதிலளித்துள்ளனர். சர்வேக்காக வந்த பெண்கள் அப்பகுதியில் வசிக்கும் நாசர் என்பவரது வீட்டுக்கும் சென்றனர். அங்கு அப்பெண்களிடம் நாசர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார். அதற்கு அப்பெண்கள் சரிவர பதில் சொல்லவில்லை. இதனால் அப்பெண்கள் மீது சந்தேகம் கொண்ட அவர் அப்பெண்களை தனது வீட்டில் சிறை வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்[1].
போலீஸார் விசாரித்த பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[2]: இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் அப்பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்பெண்கள் டில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெய்லர் நெல்சன் சோப்ரஸ் இந்தியா TNS (Taylor Nelson Sofres-India) நிறுவனத்தின் கொச்சி கிளையில் இருந்து அனுப்பப்பட்டவர்கள் என்பதும், அவர்களுக்கு ஒரு சர்வேக்கு 30 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுவதும் தெரிந்தது. அப்பெண்கள் அளித்த விலாசத்தில் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரித்தனர். TNSஐக்கெட்டபோது, அவர்கள் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் சர்வே ஆராய்ச்சி நிறுவனத்திற்காக (Princeton Survey Research Associates) அந்த சர்வே செய்வதாக கூறினர்[3]. போலீசார் உடனே இரு சமூகத்தினரிக்டையே வெறுப்பையுண்டாக்க முயல்வதாக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்[4].
மத்திய விசாரணை ஏஜன்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி, ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரியப்படுத்திய கேரள அரசு: விசாரணையில், டில்லி நிறுவனம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் இருந்து செயல்படும் பிரின்ஸ்டன் சர்வே ரிசர்ச் அசோசியேட்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்காக இந்த சர்வே பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுபோல், டில்லி, ஐதராபாத் நகரங்களிலும் சர்வே நடந்துள்ளதாகவும் தெரிந்தது. விசாரணைக்குப் பின் அப்பெண்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் போலீசார் விசாரணை, பொதுமக்கள் எதிர்ப்பு ஆகியவை காரணமாக கேரள மாநிலத்தின் பிற பகுதிகளில் நடத்தப்பட இருந்த இதுபோன்ற சர்வேக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுபோன்ற சர்வே நடந்து வருவதால், இதுகுறித்து மத்திய விசாரணை ஏஜன்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி, ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி விட்டதாக, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொடியேறி பாலகிருஷ்ணன், கொடியை அவமத்தித்த கிலானி, ஆராய்ச்சி செய்யும் போலீஸார்; எல்லாம் விஷயத்தை அறிந்து கொண்டு இப்படியெல்லாம் பேசுவது கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு கைவந்த கலை, ஏனெனில் அவர்களுக்கு வேண்டியது முஸ்லீம்களின் ஓட்டுதானே தவிர வேறொன்றும் இல்லை, ஒபாமாவைப் பற்றிய கவலையும் இல்லை. ஆனால், டில்லியிலேயோ அருந்ததிராய், கிலானி, ஜிலானி, வராவர ராவ் போன்ற பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் தேசவிரோதமாக பேசியதற்கு வழக்குப் பதிவு செய்ய போலீஸார் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
கேட்கப்பட்ட கேள்விகள் (பல பத்திரிக்கைகளினின்று தொகுத்தது): சர்வே 85 பக்கங்களில் 90க்கும் மேற்பட்ட கொண்ட அந்த கருத்துக் கணிப்பு இரண்டு பகுதிகள் கொண்டதாக இருந்தது. முதலாவது அமெரிக்கா, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை முதலியவற்றைப் பற்றியது, இரண்டாவது பகுதி முஸ்லீம்களுக்கென்றே கேள்விகள் பித்யேகமாகத் தொகுக்கப்பட்டிருந்தது[5].
* தாங்கள் முதலில் இந்தியர் அல்லது முஸ்லீம் என்று கருதுவீர்களா[6]?
* இந்தியாவில் முஸ்லீம்கள் எப்படி மதிக்கப் படுகிறார்கள்?
* மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்தியாவில் முஸ்லீம்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள்?
* இந்திய ராணுவத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
* இந்திய ராணுவம் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா?
* இந்தியாவில் ஷரீயத் சட்டத்தை அமூலாக்க விரும்பகிறீர்களா?
* அமெரிக்காவை முஸ்லீகளின் எதிரி நாடாகக் கருதுகிறீர்களா?
* அமெரிக்காவைப் பற்றி தங்களது கருத்து என்ன?
* இந்திய-அமெரிக்க உறவுமுறைப் பற்றி தங்களது கருத்து என்ன?
* ஒபாமா இந்தியாவிற்கு வருவதால், இந்தியாவிற்கு என்ன லாபம்?
* இராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்ததை ஆதரிக்கிறிர்களா?
* அமெரிக்காவின் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” என்ற நிலைப்பாட்டைப் பற்றி தங்களது கருத்து என்ன?
* ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாலிபான்களை ஒடுக்க மேற்கொண்ட செயலை ஆதரிக்கிறீர்களா?
* இரானைப் பற்றிய தங்களது கருத்து என்ன?
* இஸ்லாமிய சட்டம் இந்திய குற்றவியல் சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாகக் கருதுகிறீர்களா[7]?
* இந்தியா பொதுவாக முஸ்லீகளின் எதிராக உள்ள நாடாகக் கருதுகிறீர்களா?
* இந்தியாவில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?
* ஒஸாமா பின் லேடனை விரும்புகிறிர்களா[8]?
* தாங்கள் பர்கா / பர்தா அணிவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளீர்களா?
* ஒபாமா இந்தியாவிற்கு வருவதைப் பற்றி தங்களது கருத்து என்ன[9]?
* இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைப் பற்றி தங்களது கருத்து என்ன?
* ஷரீயத்தை விடுத்து இந்திய அரசியல் சட்டத்தின்படி நடக்கவேண்டும் என்றால் இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டில் வாழ நினைக்கிறிகள்[10]?
இக்கேள்விகள் ஒன்று பிரமாதகாக இருப்பதாகத் தெரியவில்லை. அன்று அருந்ததி ராய் பேசியதில் பத்து சதவீதம் கூட இருப்பதாக தெரியவில்லை! தற்கு போய் கேரள முஸ்லீம்கள் மற்றும் அரசு இப்படி அலட்டிக் கொள்வதுதான் விசித்திரமாக இருக்கிறது.
ஆராய்ச்சி என்றால் சர்வே, கருத்துக் கணிப்பு முதலியவை மிகச்சாதாரணமான விஷயம் தான்: கேள்விகளின் தொகுப்பை விநியோகம் செய்தல், கேள்விகளுக்கு பதிலை நேரிடையாகவோ, தபாலிலேயோ பெறுவது, அவற்றைத் தொகுப்பது, குறிப்பிட்ட தலைப்புகளுக்கு ஏற்றவகையில் அவற்றைப் பிரிப்பது, தர வரிசைப் படுத்தி அவற்றை வரிசைப்படுத்துவது……………..முதலியன ஆராய்ச்சியின் ஒரு கட்டம். இதன் பிறகு பல வேலைகள் இருக்கின்றன. இதில் பாரபட்சம் இல்லாமல் இருக்க, கேள்வி கேட்பவர்கள் மற்றும் பதில் சொல்பவர்கள் என இரண்டு பக்கத்திலும் பல விருப்பு-வெறுப்புகள், தாக்கங்கள், முதலியவற்றை அகற்ற, கேள்விகளின் அமைப்பு குறிப்பிட்டவாறு அமைக்கப் பட்டிருக்கும். குறிப்பிட்ட பதில்களை சொல்லுமாறு கிரமப்படுத்தப் பட்டிருக்கும். இதனால் அத்த்தகைய குறைகள் நீக்கப்படும். பெங்களூரில் ஒரு கிருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் முஸ்லீம்களைப் பற்றி இவ்வாறு கருத்துக் கணிப்பு நடத்தி இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தாக்கம் மற்றும் இஸ்லாமியர்களின் சமூக சீர்திருத்தம் என்ற இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளது[11]. அதில் இவற்றைவிட இன்னும் பற்பல கேள்விகள் கேட்டு ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். அப்பொழுதெல்லாம் வராத பிரச்சினை, இப்பொழுது ஏன் வருகிறது என்று தெரியவில்லை.
வேதபிரகாஷ்
© 07-11-2010
[1] தினமலர், இஸ்லாமியர்கள் குறித்து ரகசிய சர்வே : 5 பெண்களிடம் போலீசார் விசாரணை, நவம்பர் 06, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=121228
[3] TNS authorities were called in who said they were doing the survey for the Washington-based Princeton Survey Research Associates.
[4] “Since the survey had many questions with a communal overtone, we have registered a case of promoting enmity between various groups (Sec 153 A of IPC) and we are investigating the matter. We have also sought the help of the Central agencies on this,” said Jacob Punnoose, Director General of Police, Kerala.
[5] ………….the firm planned to survey as many as 6000 citizens, mostly members of the Muslim community, in 55 different regions in the country. The 85-page two-part questionnaire had 93 questions in all. The second part of the questionnaire was meant exclusively for respondents from the Muslim community.
[8] “Do you consider yourself an Indian first or Muslim?”, “What’s your view on imposing Islamic law in India?”, “Do you like Osama bin Laden?” and “Do you wear burqa?” http://www.hindustantimes.com/Row-over-survey-in-Muslim-area-Central-probe-sought/Article1-622550.aspx
[11] K. S. Durrany, The Impact of Islamic Fundamentalism, CISRS and ISPCK, Bangalore, 1993.
குறிச்சொற்கள்: அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம், அருந்ததிராய், ஆராய்ச்சி செய்யும் போலீஸார், ஒசாமா பின்லாடன், கிலானி, கொடியேறி பாலகிருஷ்ணன், கொடியை அவமத்தித்த கிலானி, ஜிலானி, ரகசிய சர்வே, வராவர ராவ், Princeton Survey Research Associates, Taylor Nelson Sofres-India
You can comment below, or link to this permanent URL from your own site.
நவம்பர் 8, 2010 இல் 9:29 முப
நம்மா ஊரில் உள்ள முஸ்லீம் அமைப்புகள் வின் டிவி மற்றும் அடிக்கடி சென்னையில் கூட்டம் போட்டு நடத்தும் நிகழ்ச்சிகளில் இதைவிட அதிகமாகவே, அவர்கள் பேசி வருகிறார்கள். அதிலிருந்தே அவர்களுடைய எண்ணங்களை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். குறிப்பாக, துண்டாடிய குறைவுள்ள இந்திய வரைபடத்தைக் காட்டுவார்கள். இந்திய அரசாங்கம் அவ்வாறு காட்டுவது குற்றம் என்றாலும் அவர்கள் கவலைப்படுவது கிடையாது. இந்த ஒரு உதாரணத்திலேயே, அவர்களுடைய பிடிவாத, பிரிவினைவாதத்தை, இந்திய எதிர்ப்பு மனப்பான்கை அறிந்து கொள்ளலாம்
இந்தியாவைவிட, அவர்களுக்கு நிச்சயமாக இஸ்லாம் எனும் போது, ஆசைகள், நேசங்கள், பாசங்கள், பிணைப்புகள் எல்லாம் தங்களது தொப்புள்கொடி உறவுகளையும், இந்திய தொட்ர்புகளையும் மீறி வேறு எங்கோத்தான் செல்கிறது. பலமுறை அவர்கள் தாங்கள் முன்பு இந்துக்களகத்தான் இருந்தோம், என்று மறந்து விடுகிறார்கள். பிறகு என்ன இங்கு மட்டும் பிரச்சினை வந்து விட்டது?
அக்கேள்விகள் எல்லாம் அவர்களை உறுத்துகின்றன என்றால், அவர்கள் முதலில் தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். ஏனெனில், குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கச் செய்யும்.
முன்பு அமெரிக்கா இரக்கின் மீது தாக்குதல் நடத்திய போது, சதாம் உஸைனை ஆதரித்து தான், கேரளாவில் பானர் எல்லாம் கட்டினார்கள், “கர்ட் மிஸைல்” போன்று பொம்மைகள் எல்லாம் வைத்து சத்ஹா புகழ் பாடி, அமெரிக்காவை வசவு பாடியுள்ளனர். இதையெல்லாம் மறந்து விட்டார்களா? இப்பொழுது கூட பாப்புலர் பிரண்ட் என்ன செய்தது? இந்தியாவிற்கு எதிராகத்தானே வேலை செய்து கொண்டிருந்தது? அன்று கூட மதானை கைது செய்ய போலீஸார் வரும் போது என்ன நாடகம் ஆடினார்கள், என்னவெல்லாம் கூச்சலிட்டார்கள், அதையெல்லாம் மற்ற இந்தியர்கள் எப்படி மறக்க முடியும்?
நவம்பர் 9, 2010 இல் 12:15 முப
எலுமுகம் இதற்கு என்ன பதில் சொல்கிறார் பார்ப்போம்!
நவம்பர் 8, 2010 இல் 4:35 பிப
நாடு தழுவிய அளவில், வரும் 10ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
நவம்பர் 8, 2010 இல் 11:48 பிப
எதற்கு, இந்த சர்வே எடுத்ததற்காகவா?
நவம்பர் 9, 2010 இல் 4:54 பிப
நாடு தழுவிய அளவில், வரும் 10ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதுக்குறித்து, ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திற்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு அரசு தவறான தகவல்களை பரப்பி வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை செய்கிறது.
நவம்பர் 10, 2010 இல் 7:42 முப
அந்த ஆள் ராம் மாதவ்-க்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
அல்லது இந்த சர்வே பிரச்சினைக்கும் அதற்கும் என்ன மகத்துவம்?
நவம்பர் 9, 2010 இல் 4:57 பிப
இதற்க்கு தான் போராட்டம்….
மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக – அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.
எனினும், ஹெட்லைன்ஸ் டுடே என்ற தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம், இக்குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இடையே நடந்த இரகசிய உரையாடல்களை ஒலி-ஒளி பரப்பியிருப்பதும்; இக்குண்டு வெடிப்புகளோடு தொடர்புடைய குற்றவாளிகள் தமக்குள் நடத்திய உரையாடல்கள் மற்றும் இக்குண்டுவெடிப்புகள் தொடர்பாக போலீசாரிடம் உள்ள சாட்சியங்களை தெகல்கா இதழ் (31 ஜூலை, 2010) வெளியிட்டிருப்பதும் இக்குண்டு வெடிப்புகளை நடத்திய குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் நேரடித் தொடர்பிருப்பதையும் வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துவது பற்றி அவர்கள் விவாதித்திருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளன.
‘‘ஹெட்லைன்ஸ் டுடே” ஒளிபரப்பிய ஒளி-ஒலிப்பேழை ஒன்றில் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்ற இந்துச் சாமியார், இந்திய இராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாகப் பணியாற்றிக் கொண்டே மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியவரான புரோகித், ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க.-வின் முன்னாள் கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எல்.சர்மா ஆகிய மூவரும் முசுலீம்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவது பற்றி விவாதிக்கின்றனர். மற்றொரு ஒலிப்பேழையில், தயானந்த பாண்டேயும், ஆர்.பி. சிங் என்ற மருத்துவரும் துணை அரசுத் தலைவர் ஹமித் அன்சாரியைக் கொல்லும் திட்டம் பற்றி விவாதிக்கின்றனர்.
அத்தொலைக்காட்சி ஒலிபரப்பிய இன்னொரு ஒலிப்பேழையில், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலஞ்சென்ற ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சுனில் ஜோஷி என்பவன், ஆர்.எஸ்.எஸ்.-இன் சியச் செயல் கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமாரிடம் அக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கியுள்ளான்.
துணைக் அரசுத்தலைவரை கொல்லத் திட்டம் போட்ட ஆர்.பி.சிங்கிற்கும் விஷ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதையும்; மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய அபிநவ் பாரத் அமைப்பிற்கும் புனேவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.-இன் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ஆப்தேவிற்கு இடையில் நெருக்கமான உறவு இருந்து வந்ததையும்; விஷ்வ இந்து பரிஷத்தின் முக்கியத் தலைவரான பிரவீன் தொகாடியா அபிநவ் பாரத் அமைப்பிற்கு ஒரு இலட்ச ரூபா நன்கொடை அளித்திருப்பதையும் தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள ஒலிப்பேழை உரையாடல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
இவை ஒருபுறமிருக்க, இந்தியா பாகிஸ்தான் இடையே சென்றுவரும் சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டுவெடிப்புகூட இந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கும் என்றும்; சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு இக்குண்டு வெடிப்பில் நேரடியாகத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான தேவேந்திர குப்தாவிற்கு உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகர ஆர்.எஸ்.எஸ். கிளைத் தலைவரான அசோக் வார்ஷ்னேயும், ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயல் கமிட்டி உறுப்பினரான அசோக் பேரியும்தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர். சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான பஜ்ரங் தள் சட்ட விரோதமாகக் குண்டு தயாரிக்கும் வேலைகளைச் செய்து வருவது கான்பூரிலும் நான்டேட்டிலும் நடந்த குண்டு வெடிப்புகளின்போதே அம்பலமாகியிருக்கிறது.
மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய கும்பல்தான் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்னா, பர்பானி, நான்டேட் ஆகிய இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதும் புலனாவில் நிரூபணமாகியுள்ளதால், அக்கும்பல் மீதான வழக்குகளை வழக்கமான இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்காமல், பொடாவுக்கு இணையான மகாராஷ்டிரா குற்றக் கும்பல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல்களில் பங்குகொண்டு அதிகாரத்தைப் பிடித்து மேலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நிறைவேற்ற பா.ஜ.க.; கீழிலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நடைமுறைப்படுத்த பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிசத் போன்ற அமைப்புகளை இயக்கி வரும் ஆர்.எஸ்.எஸ்., நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் இரகசியாக இயக்கி வருகிறது என்றுதான் இவ்வுண்மைகள் மூலம் முடிவுக்கு வர முடியும்.
எனினும் கடந்த பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இன் ஆசீர்வாதத்தோடு நடந்துள்ள இக்குண்டு வெடிப்புகள் குறித்து போலீசார் ஒருங்கிணைத்த முறையில் விசாரணை நடத்த மறுக்கிறார்கள். மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறியர்களை விசாரணை செய்த பொழுதே, அஜ்மீர், ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கும் இந்து மதவெறி பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது. ஆனாலும், மிகத் தாமதமாகத்தான் அக்குண்டு வெடிப்புகளை நடத்திய சதிகாரர்கள் கைது செய்யப்பட்டனர். அதேசமயம், இக்குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த இராம்நாராயணன் கல்சங்கரா, சுவாமி அசிமானந்தா ஆகியோர் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.
அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான சுனில் கோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டான். குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மூடிமறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்.குண்டர்கள் அவனை கொன்றிருக்கலாம் எனப் பரவலாக நம்பப்படும் பொழுது, போலீசாரோ “சிமி” அமைப்புதான் அக்கொலையைச் செய்ததாகக் கூறிவருகிறார்கள்.
சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது. அபிநவ் பாரத் அமைப்போடு தொடர்பு வைத்துள்ள பல இராணுவ அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய விவரங்கள் புலன் விசாரணையில் அம்பலமானாலும் அவர்களுள் ஒருவர்கூட விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்-ஐத் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்தால், மத்தியப் புலனாவுத் துறையைச் சேர்ந்த பார்ப்பன அதிகார வர்க்கம் விசாரணையை அப்படியே அமுக்கிவிடுவதாக அம்பலப்படுத்தியிருக்கிறார், மகாராஷ்டிரா மாநில முன்னாள் போலீசு தலைவர் எஸ்.எம்.முஷ்ரிஃப்
நவம்பர் 10, 2010 இல் 7:46 முப
இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே?
அதற்காக ஏன் இவ்வளவு விளக்கம்?
இங்கு கூட முச்லீம்களுக்கும், இந்துக்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை விளக்க வேண்டும்.
ஆர்.டி.எக்ஸ் இவர்களுக்கு முஸ்லீம்களிடமிருந்து வந்ததாக சொல்கிறார்கள்.
ஆதுவும் காஷ்மீர தீவிரவாதிகளிடமிருந்து வந்ததாக எடுத்துக் காட்டுகின்றனர்!
பிறகு இந்த இந்துக்களுக்கும் காஷ்மீர தீவிரவாதிகளுக்கும் என்ன தொடர்பு?
நவம்பர் 9, 2010 இல் 5:00 பிப
கொல்கத்தாவில் 5000 துப்பாக்கித் தோட்டக்களை வைத்திருந்தது தொடர்பாக 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த தோட்டாக்கள் அனைத்தும் இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை ஷோபா பஜார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வேகமாக வந்த காரை போலீஸ்காரர் ஒருவர் மடக்கி பிடித்தார். இருப்பினும், அந்த காரில் பயணம் செய்த திலிப் மிஷ்ரா, ராஜேஷ் குமார் சர்மா மற்றும் ராம் பர்வேஷ் பிரசாத் ஆகியோர் தப்பியோடி விட்டனர்.
இந்நிலையில், காரை பரிசோதித்ததில் அதில் 5000 துப்பாக்கித் தோட்டக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் மிஷ்ரா உள்ளிட்ட மூவரும் மத்திய கொல்கத்தா பகுதியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மகேஷ் குமார் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஒரு துப்பாக்கி விற்பனையாளர். இந்த தோட்டாக்கள் அனைத்தும், பூனாவின் ஹிர்கா பகுதியில் உள்ள இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் கடந்த மார்ச் மாதத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.இது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்திற்காக இந்திய ஆயூத தொழிற்சாலையில் தாயரிக்கபட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 10, 2010 இல் 7:55 முப
என்னுடைய கூகுள் தேடலில் இவ்வாறு செய்திகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடப் பட்ட பெயர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையாத உள்ளது.
Kolkata: Two held in an ammunition smuggling racket
Posted by hsharma on 14 October, 2010
http://criminalrecordsindia.com/tag/mahesh-kumar-singh/
On October 14, 2010, the Pioneer reported that the arrest of gunrunner Mahesh Kumar Singh has led special task force (STF) investigators to unearth the biggest-ever ammunition smuggling racket from the heart of the city. The STF personnel have traced more than five lakh rounds of ammunition, most of which are suspected to have been sold to terrorist outfits.
ஆகவே எங்கும் தாங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது மாதிரியுள்ளது. என்பதற்கான ஆதாரத்தைக் கொடுக்கவும்.
Bullet trail leads to Patna Maoist link
A STAFF REPORTER
http://www.telegraphindia.com/1100630/jsp/calcutta/story_12626083.jsp
Four men from Bihar, one of them with alleged Maoist links, have been arrested in connection with the ammunition haul from a Toyota Qualis that was stopped by cops near Sovabazar on Monday evening.
Police suspect the 5,000 bullets found in the Patna-registered car were meant for Maoists operating in the state.
According to investigators, Mahesh Singh and his two drivers Rajesh Sharma and Ram Prabesh Prasad fled from the car after it was stopped for jumping a signal. The three were on their way to Mahesh’s “business friend” Dilip Mishra.
All four were arrested in a hotel near New Market early on Tuesday. Officers of the Special Task Force (STF) have left for Patna to dig out more information about them. Mishra has a Maoist-link in Patna, said an officer, declining to elaborate further. He was in the city since Tuesday.
“The bullets are all of .315 bore, which the Maoists in Bengal use frequently. The ammunitions were recently manufactured. They were probably being ferried to Calcutta for Maoists,” added the officer.
The Qualis is registered in the name of Patna-resident Rani Singh, a “close acquaintance” of 55-year-old Singh, who used the car. Singh owns a gun shop in Patna and therefore has a licence to buy ammunition. He also owns a small newspaper.
Singh allegedly told police that he had employed Sharma and Prasad for the trip to Calcutta to meet Mishra, who owns a petrol pump in Patna. The trio started from Gaya early on Monday and reached the city via Asansol and Durgapur.
“Singh claims that he came to the city to hand over the bullets to Mishra, who denies knowing Singh,” said an STF officer.
The bullets were made in a factory in Kirkee, Pune, in March. Priced at Rs 55 each, they now sell in the black market for Rs 110-120.
Body found: Jhumjhum Das, 5, was found dead on the 11th floor terrace of a building in the army officers’ quarters, near Alipore zoo, on Tuesday evening.
Her parents live in the servants’ quarters of the complex, where only army officers can reside.
The girl had gone out to play with a couple of other children on Monday evening and was missing since then.
Police said there was no injury on the body.
நவம்பர் 13, 2010 இல் 12:04 முப
ஆமாம், இங்குதான் “எலுமுகம்” போன்றவர்களின் திரிபுவாதங்கள் வெளிப்படுகின்றன.
இது பொய்யான தகவல். ஆனால், இப்படியே பல இடங்களில் “கட்-அண்ட்-பேஸ்ட்” செய்து பரப்பி விடு்வார்கள்.
முன்பு தெய்வநாயகம் கூட இத்தகைய வேலையில் ஈடுபட்டபோது, வகையாக மட்டிக்கொண்டார்.
அவர் முஸ்லீமாக இருந்தாலும், அல்லது முஸ்லீம்களை ஆதரித்து இப்படி பதில்களை போட்டாலும், அதில் உண்மை இல்லையென்றால் பிரயோஜனம் இல்லை.
மேலும் முதலில் இஸ்லாமிய தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றை எதிர்க்காமல், கண்டிக்காமல், இப்ப்டி சுற்றிவளைத்துக் கொண்டு வந்து் ஆதரிப்பது, அதே இஸ்லாமிய தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றை ஆதரிப்பதாக ஆகும்.
ஆகவே, உண்மையைத் தேடும்போது, பொய்கைகளை வைத்துக் கொண்டு துர்பிரச்சாரம் செய்யவேண்டிய அவசியம் என்ன என்றுதான் ஆராய்ச்சி செய்யவேண்டிதிருக்கும்.
நவம்பர் 9, 2010 இல் 5:02 பிப
ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மூத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் மீது சந்தேகம் வலுவடைந்துள்ளது. 9 பேர் பலியாக காரணமாயிருந்த இந்த குண்டு வெடிப்பு பற்றிய சதித்திட்டம் இவர்களுக்கு முன்கூட்டியே அறிந்திருக்கூடும் எனவும், தாக்குதலுக்கு பிறகு கொலைகாரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், புலனாய்வு அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
சிபிஐ 10 லட்சம் சன்மானம் தருவதாக அறிவித்திருந்த இரண்டு ஹிந்துத்துவ தீவிரவாதிகளான ராம்சந்திர கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோர், அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு 2007, மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கு 2008 ஆகிய வழக்குகளிலும் தேடப்படுகின்றனர். ஒரே அமைப்பை சேர்ந்த ஹிந்து தீவிரவாதிகளே இந்த மூன்று குண்டுவெடிப்புகளுக்கும் காரணமாயிருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
உ.பி யிலிருந்து அஷோக் பெரி, கான்பூரிலிருந்து அஷோக் வர்ஷினி (ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரவாதிகள்) மேலும் தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா (ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரவாதிகள்) ஆகியோர் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் ஹைதராபாத் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பெரி, வர்ஷினி கொடுத்த தகவலின்படி குண்டுவெடிப்பு பற்றி இவர்களுக்கு முங்கூட்டியே தெரியும் என்றும் சதிகாரர்களுக்கு அடைக்களம் தந்திருப்பதும் தெரிகிறது.
குப்தா மற்றும் ஷர்மா ஆகியோருக்கு மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெஃப்டினண்ட் ப்ரசாத் புரொஹித் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை குப்தா, ஷர்மா, கல்சங்கரா, டாங்கே மற்றும் சுனில் ஜோஷி ஆகியோர் நடத்தியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஷர்மா 2 மாதங்களுக்கு முன்பே செகந்தராபாத்தில் தங்கி நோட்டமிட்டு ஜோஷி, கல்சங்கரா, டாங்கேவுக்கு தகவல் தந்ததாகவும் இவர்கள் 3 நாட்களுக்கு முன் அங்கு வந்து 18ஆம் தேதியன்று பள்ளிக்குள் சென்று குண்டை வைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஜோஷி மர்ம நபர்களால் கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
நவம்பர் 10, 2010 இல் 1:31 முப
இதைப்பற்றியல்லாம் விவரமாக அலசியாகிவிட்டது: விவரங்க்ளுக்கு கீழேயுள்ள தளங்களைப் பார்க்கவும்:
Hindutva terror probe haunts Pune investigation
http://secularsim.wordpress.com/2010/02/20/hindutva-terror-probe-haunts-pune-investigation/
ஆஜ்மீர், ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் மற்றும் மெலகாவ் குண்டு வெடிப்புகளுக்கு ஹுஜியைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். வேலூரில் தங்கியிருந்த ஒரு இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டாள். ஆனால், ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்துக்கள் அதில் சமந்தப்பட்டடுள்ளதாக செய்திகள் வருகின்றன. எப்படி “முஸ்லீம்கள்”, “இந்துக்கள்” ஆனார்கள்? ஒருவேளை, அவர்கள் “முஸ்லீம்களாக” அல்லது “இந்துக்களாக”மதம் மாறிவிட்டர்களா?
http://atrocitiesonindians.wordpress.com/2010/04/24/chettiar-untouched-iyer-arrested/
சமீப காலத்தில், காங்கிரஸ், அரைத்த மாவையே, அவ்வப்போழுது, ஊடகங்களினின் வழியாக, மறுபடியும் அரைத்துக் கொண்டிருக்கிறது:
http://vedaprakash.wordpress.com/2010/07/17/congress-bjp-and-the-so-called-hindu-terror-iii/
அதே போல ஹெட்லைன்ஸ் டுடே அரைப்பதும் பழையசெய்தியே!
http://vedaprakash.wordpress.com/2010/07/17/congress-bjp-and-the-so-called-hindu-terror-ii/
தீவிரவாத்திலும், அதை கேன்ஸர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு விளையாடிவருவது, ஒருவேளை இந்தியாவில்தான் பார்க்கமுடியும் போலும்!
http://vedaprakash.wordpress.com/2010/07/17/congress-bjp-and-the-so-called-hindu-terror-i/
நவம்பர் 10, 2010 இல் 6:10 முப
நித்யானந்தாவின் உடலில் எண்ணெய் தடவி நடிகை ரஞ்சிதா மசாஜ் செய்யும் படங்கள் 2 நாட்களுக்கு முன்பு வெளியாயின. இந்த காட்சிகள் கடந்த டிசம்பர் 23, 24, 25&ம் தேதிகளில் எடுக்கப்பட்டதாக நித்யானந்தாவின் பிரதான சீடரும் சேலம் மாஜி தொழிலதிபருமான லெனின் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இந்நிலையில், ஆசிரம அறையில் நித்யானந்தா நிர்வாணமாக இருக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.படுக்கையில் இருந்து நித்யானந்தா எழுந்து செல்கிறார். பின்னர், குளித்துவிட்டு நிர்வாணமாக வருகிறார். துவட்டியபடியே கையில் துண்டை எடுத்து வருகிறார். சிறிது நேரத்தில் காவி உடைகளை மாற்றிக்கொண்டு அறையில் இருந்து புறப்படுகிறார்.
தொலைதூரத்தில் உள்ளதையும் தெளிவாக காட்டும் கேமரா இதில் பயன்படுத்தப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாயின. பூந்தொட்டி போன்ற எதிலோ அது மறைத்து வைக்கப்பட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கேமரா இருக்கும் இடத்தை நோக்கி நித்யானந்தா கையை ஆட்டுகிறார். ஆனால், அங்கு கேமரா வைக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரியவில்லை. தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு ஒரே இடத்தில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
நித்யானந்தாவின் ஆபாச காட்சிகள், படங்கள் தொடர்ந்து வெளியாகிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திக் கும்பலுடன் இணைந்து செயல்பட்ட லெனின் ஆபாச வீடியோ சி.டி.யுடன் சென்னையில் ஒரு முக்கிய புள்ளி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தான் சி.டி.யை யாரிடம் கொடுப்பது? எப்படி வெளியிடுவது? என்று திட்டம் தீட்டப்பட்டது. சி.டி. கையில் கிடைத்ததும் அந்த முக்கிய புள்ளி அதை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் வகுத்தார். இதை வெளிப்படுத்த முதலில் ஒரு பத்திரிக்கைக்கும், ஒரு டி.வி. சேனலுக்கும் அனுப்பி வைத்தார். அதே நாளில் அதை இண்டர்நெட்டிலும் வேகமாக பரவ விட்டார். அதை “டவுன் லோடு” செய்ய ரூ.500 கட்டணமும் வசூலிக்கப்பட்டது. மேலும் பல செக்ஸ் சேனல்களுக்கும் அனுப்பி பணத்தை கறந்தார். இதன் மூலம் அவர் 20 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததாக ரகசிய போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
நவம்பர் 10, 2010 இல் 7:39 முப
இங்குள்ள விஷயத்திற்கு சம்பந்தமில்லாமல், ஏதோ யாருக்கும் தெரியாத விஷயத்தை சொல்வது போல அளக்கிறீரே, ஏன்?
நவம்பர் 10, 2010 இல் 6:13 முப
மும்பை:புனேயில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களின் பங்கை புறக்கணிக்க இயலாது எனவும், இதனைக் குறித்து மஹாராஷ்ட்ரா அரசு விசாரணைச் செய்யவேண்டும் எனவும் மூத்த அரசு உள்துறை அமைச்சக அதிகாரியொருவர் பத்திரிகையாளர்களோடு தெரிவித்தார்.
பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற்ற புனே குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு பங்குண்டா? என்ற கேள்விக்கு விடையளிக்கும் பொழுதுதான் அவர் இதனை தெரிவித்தார்.
இக்குண்டுவெடிப்பில் 15 பேர் மரணமடைந்திருந்தனர். புனே ஹிந்துத்துவா இயக்கங்களின் மையமாகும் எனவே புலன் விசாரணையில் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுவரை எந்த இயக்கத்திற்கும் பங்குள்ளதாக தெளிவாக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஹிந்துத்துவா இயக்கமான அபினவ் பாரத்திற்கு புனே குண்டுவெடிப்பில் பங்குள்ளதாக ஏற்கனவே சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. மாலேகான் உள்ளிட்ட பல குண்டுவெடிப்புகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெளிவான ஒன்று.
நவம்பர் 10, 2010 இல் 9:27 முப
http://www.outlookindia.com/article.aspx?239618
……………….., while the chargesheet details both the Malegaon plot as well as the group’s larger ambition of establishing a Hindu rashtra, it doesn’t say how the Malegaon blast would help that cause. The ATS also refers to help sought from “Nepal Maoists”, but transcripts of Purohit’s conversation bear references to King Gyanendra deposed by the Maoists—who agreed “to train 40 officers and 400 soldiers” and help procure “AK-56s from Czechoslovakia”. They couldn’t have been talking simultaneously to both the monarch and the Maoists.
……………….., the link between Purohit and the RDX seems tenuous. The chargesheet quotes a witness recalling Purohit bringing RDX from Kashmir and storing it in his Pune house. But there’s nothing on the exact source of the explosive or whether it was pilfered from an army depot. There’s also nothing to link Purohit or the RDX to the Samjhauta Express blasts.
புரோஹித் ஆர்.டி.எக்ஸை காஷ்மீரத்திலிருந்து வாங்கியிருந்தால், முஸ்லீம்களிமிருதுதான் வாங்கியிருக்க வேண்டும். ஏனெனில், எந்த ராணுவ கிடங்கிலிருந்தும் திருடியாதாக அல்லது எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை. மேலும் சம்ஜௌதா எக்ஸ்பிரஸுக்கும் புரோஹித்துக்கும், ஆர்.டி.எக்ஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
Strangely too, none of the accused has been charged under relevant sections of the IPC for waging war against India, though there are minute details of their plans to establish a Hindu rashtra. Instead, the ATS has slapped sections of the Maharashtra Control of Organised Crime Act when MCOCA can be applied only if any one accused has at least two chargesheets in the previous 10 years, with charges carrying a prison term of over three years. Defence lawyers claimed that this proviso makes MCOCA irrelevant in the Malegaon case. However, the special court in Mumbai on January 22 ruled that the act can be applied to all the 11 accused.
புரோஹித் ஆர்.டி.எக்ஸை காஷ்மீரத்திலிருந்து வாங்கியிருந்தால், முஸ்லீம்களிமிருதுதான் வாங்கியிருக்க வேண்டும். ஏனெனில், எந்த ராணுவ கிடங்கிலிருந்தும் திருடியாதாக அல்லது எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை. மேலும் சம்ஜௌதா எக்ஸ்பிரஸுக்கும் புரோஹித்துக்கும், ஆர்.டி.எக்ஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஆகவே, ஏ.டி.எஸ் நிச்சயமாக அரசின் ஆணைக்கேற்றபடி, மாறி-மாறி விசாரணை என்ற பெயரில் சில காரியங்களை செய்து வருகிறது. விசாரணை நிலையில் இருக்கும் போதே, ஊடகங்களுக்கு சில விஷயங்களை கொடுப்பதால், அவர்கள் அதை பெரிது படித்து கதை அளக்கிறார்கள்.
ஆனால், நிதானமாக ஆராய்ம் போது, புரோஹித் ஆர்.டி.எக்ஸை காஷ்மீரத்திலிருந்து வாங்கியிருந்தால், முஸ்லீம்களிமிருதுதான் வாங்கியிருக்க வேண்டும். அப்பொழுது முஸ்லீம் தீவிரவாதிகளுக்கும், இந்த இந்துக்களுக்கும் என்ன தொடர்பு?
ஒருவேளை, காஷ்மீர தீவிரவாதிகளே அதை ஆதரிக்கிறார்களா?
கியானானந்த பாண்டே, முஸபராபாதில் உள்ள ஆதிசங்கரர் மடத்தை மற்றுன் கோவிலை மீட்பேன் என்றுதான் இயக்கத்தை தொடங்கினார். அப்படியென்றால், காஷ்மீர தீவிரவாதிகள் விட்டுக் கொடுப்பார்களா?
இவர்களுக்குள் உள்ள ஒப்பந்தம் என்னவோ?
நவம்பர் 12, 2010 இல் 11:56 பிப
எலுமுகம் இதற்கு பதில் சொல்லலாம்.
நவம்பர் 10, 2010 இல் 2:34 பிப
Whoever may be the person ELUMUGAM, he is determined to record false, concocted, and misrepresented details as facts.
When the thread is about the survey conducted at Kerala and as well as at other cities, he is trying to drag other issues.
He should discuss as to how and why the Muslims behave differently inresponse to the particular survey.
Let him be specific, instead of pasting lengthy ones, that too, known ones.
For the last three years, we ave read and listened to enough stuff in TV channels and certain part of media.
நவம்பர் 11, 2010 இல் 2:48 பிப
அஜ்மீர் குண்டுவெடிப்பில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமானதால் ஆர்.எஸ்.எஸ் போராட்டத்திற்கு வீதியில் இறங்கியது.
வழக்கத்திற்கு மாறாக நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தொண்டர்கள் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். முதன்முறையாக இத்தகையதொரு போராட்டத்தை நடத்தியுள்ளது ஆர்.எஸ்.எஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் உள்ளிட்டவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகி மேலும் பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கைதுச் செய்யப்படும் சூழல் நிலவி வரும் வேளையில் நிர்பந்தத்திற்கு ஆளாகிய ஆர்.எஸ்.எஸ் அரசியல் கட்சிகளின் மாதிரியில் போராட்டத்திற்காக சாலையில் இறங்கியது.
அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட குற்றவாளிகள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்த தலைவர்களாவர்.மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளிகளுடன் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தொடர்புள்ளது. இத்துடன் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு ஆகியவற்றிலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
இந்நிலையில், தங்களின் தலைவர்களை அரசியல் உள்நோக்கத்துடன் பொய் வழக்கில் சிக்கவைப்பதாக ஆர்.எஸ்.எஸ் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
லக்னோவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத் தலைவர் மோகன் பாகவத்தும், ஹைதராபாத்தில் பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷியும் கண்டன பேரணிக்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினர்.டெல்லி பாராளுமன்ற தெருவில் நடந்த கண்டன பேரணியில் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், பல்பீர் பூஞ்ச் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இந்தியாவின் எல்லா மாவட்ட தலைநகர்களிலும் ஆர்.எஸ்.எஸ் கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றதும், அரசியல் நோக்கத்துடனானதாகும் என ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய தலைவர் மோகன் பாகவத் உரை நிகழ்த்தினார்.
பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என கைதுச் செய்யப்பட்டுள்ள ஹிந்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பில்லை. தற்போதைய குற்றச்சாட்டுகள் இட்டுக்கட்டப்பட்டதாகும்.இந்திரேஷ் குமாருக்கெதிராக ஏதேனும் ஆதாரத்தை கண்டறிய புலனாய்வு ஏஜன்சிகளால் இயலவில்லை. ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசு எங்களின் பெயரை கெடுக்க இந்திரேஷை வழக்கில் உட்படுத்த திட்டமிடுகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்து அமைப்புகளின் நம்பிக்கைய தகர்க்க புலனாய்வு ஏஜன்சிகளை அரசு தவறாக பயன்படுத்துகிறது என டெல்லியில் பல்பீர் பூஞ்ச் கூறுகிறார்.
நவம்பர் 12, 2010 இல் 11:56 பிப
முன்னமே பல இழைகளில் குறிப்பிட்டுள்ளபடி, மற்றவர்களுடைய எல்லா பதிவுகளையும் அனுமதிக்கிறேன்.
ஆகவே, உங்கள் கருத்து / விமர்சனம் என்ன என்று சொன்னால் போதும், “”கட்-அண்ட்-பேஸ்ட்” ரீதியில் இப்படி நீண்ட பதிவுகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
நவம்பர் 12, 2010 இல் 11:59 முப
ஆர்.எஸ்.எஸ் சோனியா காந்தியைப் பற்றி சொன்னதை எல்லாம் போட்டு, ரொப்ப வேண்டியதுதானே?
திசெம்பர் 14, 2010 இல் 5:48 பிப
நல்ல ஒரு website வடிவில் அமைத்து தர நாங்கள் தயாராக உள்ளோம்….
அஸ்ஸலாமு அலைக்கும்
என்னுடைய பெயர் அஹமது இப்ராஹீம் சென்னையில் இருந்து
உங்களுடைய சமுதாய செய்திகள் மிகவும் பயன் தரக்கூடியதாய் இருக்கின்றது
இதை உங்களுக்கென்று ஒரு blog இல்லமால் நல்ல ஒரு website வடிவில் அமைத்து தர நாங்கள் தயாராக உள்ளோம்
எங்கள் நிறுவனத்தின் விவரங்களை பற்றி அரிய
http://www.dezmatix.com
support@dezmatix.com
போன் : 9841464521