ஒபாமாவை ஆடவைத்த முதல் “ஜிஹாத்” கேள்வியும், “அமெரிக்கா ஏன் இன்னும் பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்று அறிவிக்கவில்லை?”, என்ற கடைசி கேள்வியும்!

ஒபாமாவை ஆடவைத்த முதல் “ஜிஹாத்” கேள்வியும், “அமெரிக்கா ஏன் இன்னும் பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்று அறிவிக்கவில்லை?”, என்ற கடைசி கேள்வியும்!

“ஜிஹாதைப் பற்றி தங்களது கருத்து என்ன?” என்று அந்த மாணவி கேட்டதும் ஆடியே போய் விட்டார் ஒபாமா!

ஜிஹாத்தைப் பற்றிய ஒபாமா விளக்கம்[1]: “ஜிஹாத் என்ற வார்த்தை இஸ்லாத்தில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது மற்றும் அதற்கு பதரப்பட்ட விள்ளக்கங்களும் அளிக்கப்படுகின்றன. நான் என்ன நினைக்கிறேன் என்றால், நாம் எல்லோரும் அந்த பெரிய மதமானது சில தீவிரவாதிகளின் கைகளில் சிக்குண்டு வன்முறையை அப்பாவி மக்களுக்கு எதிராக நியாயப்படுத்தி வருகின்றது என்பதை அறிகிறோம், ஆனால், அதை அப்படி நியாயப்படுத்த முடியாது. புனிதப் போர் என்ற திரிபு விளக்கங்களை அளிப்பவரை நாம் தனிமைப் படுத்த வேண்டிய சவாலைத்தான் நாம் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்று நான் நினைக்கிறேன்”[2].

“உங்களது மதம் என்னவாகயிருந்தாலும், உலகத்திற்கேற்ப பொது சித்தாந்தம் மூலம் ஒருவரையொருவர் மதித்து நடக்கலாம். உங்களைப் போன்ற இளைஞர்கள் மற்றவர்களை கீழே தள்ளாமல், உங்களது மதநம்பிக்கைக்களை தாராளமாகவே பின்பற்றலாம். நான் சொல்வதைவிட நீங்கள் எப்படி ஒருவரையுஒருவர் பரஸ்பரமாக நடந்து கொள்வர் என்பதுதான் முக்கியம். இன்றைய உலகில் மக்கள் பலதரப்பட்ட பிண்ணனியில், பல இனங்கள், மனிதகுழுமங்கள் ஒன்றக சேர்ந்து பேசி, உரையாடி வேலை செய்ய வேண்டியுள்ளதால், உலகம் சுருங்கியுள்ளது”[3]

ஒபாமாவின் “ஜிஹாத்” விளக்கத்தை விமர்சனிக்கும் அமெரிக்கர்[4]: ஒபாமாவின் இந்த விளக்கம் “நிர்வாக” ரீஇதியிலானது என்றும், ஏனெனில் ஷாஃபி இறையியல் விளக்கத்தின்படி, ஜிஹாத் என்றால் காஃபிர்களுக்கு எதிரான மதரீதியிலான தொடுக்கப் படும் போர்தான். அந்த விஷயத்தில் ஷாஃபி இறையியலிலேயோ அதனை சட்டப்புத்தகமாகக் கொண்டுள்ள சுன்னி ஆசாரப் பிரிவினருக்கோ எந்த கருத்து வேறுபாடும் இல்லை.  ஜிஹாதை தீவிரவாதத்துடன் பிரித்துப் பார்த்து விளக்கம் கொடுப்பதை உண்மையில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டு அமெரிக்கர்கள் ஒப்புக்க் கொள்வதில்லை. இருப்பினும், பொருளாதார ரீதியில் அமெரிக்க நெரிக்கடியில் உள்ளதால், இத்தகைய மென்மையான போக்கைக் கடைபிடித்து இரண்டு நாடுகளையும் தாஜா பிடித்து காரியங்களை சாதித்துக் கொள்ளவே ஒபாமா விரும்புகிறார் என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 08-11-2010


[1] The New York Times, Obama Pointedly Questioned by Students in India, http://www.nytimes.com/2010/11/08/world/asia/08prexy.html?src=me

[4] His critics have been charging the president with using national security issues for scoring political points. It may be recalled that one of the President’s counter terrorism advisers, John Brennan , had went to the extent of describing jihad as a “legitimate tenet of Islam”. While speaking in a seminar at the Center for Strategic and International Studies , Brennan had described those who practice jihad as “victims of political, economic and social forces”.  But the Obama administration’s critics say that such “outreach” is “dangerous”. According to them there has been no ambigity in the interpretation of the term by the Shafi’i school —which prepares the manual of law for the Sunni orthodoxy or the Hanafi school as both emphasise that jihad is a religious war against non-believers. The energised Tea Party activists have been attacking the president for holding national security issues a hostage to his “political correctness”.

http://economictimes.indiatimes.com/news/politics/nation/Obama-replies-in-line-with-administrations-view-on-jihad/articleshow/6886028.cms

Explore posts in the same categories: அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் ஹதீஸ், அல்லா, அஹமதியா, இந்துக்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமியர்களை கொல்லும் முறை, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், ஒசாமா பின் லேடன், ஒசாமா பின்லேடன், ஒபாமாவின் யுத்தம், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, சரீயத், சரீயத் சட்டம், சுன்னி, சுன்னி – இகே மற்றும் ஏபி குழுக்கள், சுன்னி வக்ஃப் போர்ட், சூஃபி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

12 பின்னூட்டங்கள் மேல் “ஒபாமாவை ஆடவைத்த முதல் “ஜிஹாத்” கேள்வியும், “அமெரிக்கா ஏன் இன்னும் பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்று அறிவிக்கவில்லை?”, என்ற கடைசி கேள்வியும்!”

 1. M. Nachiappan Says:

  ஜிஹாதைப் பற்றி ஒபாமா இப்படி சப்பைக் கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

  அடிக்கொர்ரு தடவை “இந்தியாவும், அமெரிக்காவும் உலகிலுள்ள இரு பெரும் ஜனநாயக நாடுகள்” என்று பேசினால் மட்டும் இந்தியாவின் தீவிரவாத பிரச்சினை முடிவுக்கு வராது. இருநாடுகளிலும் தீவிரவாதத்தில் எதிர்க்கும் பார்ட்னர்கள் என்று பாகிஸ்தானுடனும் பார்ட்னர்சிப் வைத்துக் கொண்டால் அதை என்னவென்று சொல்வது?

  தீவிரவாத்தத்திற்கான எதிரான போர் என்று சொல்லிக் கொண்டு பாகிஸ்தானிற்கு கொடுக்கப் படும் பணம், தளவடங்கள், இந்தியாவிற்கு எதிராகத் தான் பயன்படுத்தப் படுகின்றன.

  அப்பொழுது எங்கே போகிறது, அமெரிக்காவின் நட்பு முதலியன?

  • vedaprakash Says:

   தீவிரவாதத்தை எதிர்க்க அமெரிக்கா பில்லியன்களை பாகிஸ்தானிற்குக் கொடுக்கிறது, பிறகு இந்தியாவிற்கு ஏன் கொடுப்பதில்லை?

   ஆனால், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவும் அமெரிக்காவுடன் வரவேண்டுமாம்!

   அஒப்படியென்றால், இந்தியாவிற்கு அல்லவா அந்த பணத்தை கொடுத்திருக்க வேண்டும்?

 2. M. Nachiappan Says:

  போகிற போக்கைப் பார்த்தால், இந்தியாவிற்கு எதிராக உள்ள திட்டமிட்டு செயல்படும் ஜிஹாதியில் பாகிஸ்தான், அமெரிக்கா இரு நாடுகளும் சேர்ந்திருப்பதைப் போல உள்ளது.

 3. elumugam Says:

  அமெரிக்கா ஏன் இன்னும் RSS தீவிரவாத அமைப்பு என்று அறிவிக்கவில்லை?

  • vedaprakash Says:

   அமெரிக்காவிற்கும் அல்லது எந்த அமெரிக்க இயக்கத்திற்கும் இஸ்லாம் தீவிரவாதம் மற்றும் ஜிஹாதி பயங்கரவாதத்திற்கும் இடையுள்ள நெருக்கம், தொடர்பு, வேலை செய்யும் முறை முதலியவை, அமெரிக்கா மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கும் இல்லை போலும். இந்தியாவிற்கு எதிராக செயல்படும் அமெரிக்க ஜிஹாதி மற்றும் ஜிஹாதிகளுக்கும் அமெரிக்கர்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி, கீழ் கண்ட என்னுடைய கட்டுரைகளில் காணலாம்:

   சையது தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – II
   https://islamindia.wordpress.com/2010/10/17/nexus-between-americans-and-jihadis/

   சையது தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I
   https://islamindia.wordpress.com/2010/03/20/dawood-jilani-and-tahavur-rana-american-jihadi-nexus/

   இதை படித்துவிட்டு வாருங்களேன், விவாதிக்கலாம்.

 4. elumugam Says:

  குத்துதுள்ள அதே போல தான் மற்றவர்கழுக்கும்…

  • vedaprakash Says:

   தீவிரவாதம், பயங்கரவாதம் என்றெல்லாம் அறிந்த பின்னர், அதன் மூலகாரணங்களையும் நன்றாக தெரிந்த பின்னர், சித்தாந்தங்கள் பேசிவேண்டிய நிலை தேவையில்லை. இங்கு ஒபாமாவே சொல்லியிருப்பது, என்னவென்றால்:

   “பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும், நாம் விரும்பும் அளவுக்கு அதில் வேகமான முன்னேற்றம் காண முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்க நாங்களும் பாகிஸ்தானுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறோம். பயங்கரவாதம் என்பது புற்றுநோய் போன்றது. அது ஒட்டு மொத்த நாட்டையே அழித்து விடும். தலிபான்களுடன் தொடர்புடைய அமைப்புகள், அல்-குவைதா அல்லது லஷ்கர் – இ- தொய்பா பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அமைப்புகளை, அதைச் சார்ந்த பயங்கரவாதிகளை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைள் தொடர வேண்டியது அவசியமான ஒன்று”.

 5. elumugam Says:

  அமெரிக்கா அந்நிய நாடுகளை தான் பயங்கரவாதிகள் என்று சொல்லி வளங்களை சுரண்ட போர் தொடுகிறது. இந்திய அரசோ சொந்த நாட்டு மக்களான முஸ்லிம்கள் மட்டும் பழம்குடி தாழ்த்தப்பட்ட மக்களையும் தீவிரவாத முத்திரை குத்தி அழித்துவருகிறது. இதைவிட கேவலம் ஒன்றும் இல்லை. இதை எல்லாம் முன்னின்று செய்யும் கயவர்கள் எல்லாம் இந்த உயர்ஜாதி பிராமண கூட்டம்தான்.

  “பாக்சைட்டுக்காக” பழங்குடி மக்களின் கழுத்தை அறுக்கும் ப.சிதம்பரம் சொல்கிறார், நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்தாம்! தாதுக்கிழங்கைச் சூறையாடவெறிகொண்டு பாயும்
  ஓநாய் கம்பெனி “ஹிந்து வேதாந்தாவோடு” சூதுசெய்யும் காங்கிரசு பன்றிகளைப் பார்த்து
  நடுங்குகிறது நியாம்கிரி மலை… பசுந்தளிர்களின் குரல்வளையை மிதிக்கும் இந்திய இராணுவ பூட்சுகளின் பன்னாட்டுக் கம்பெனி பற்களைப் பார்த்து அலறுகிறது தண்டகாரண்யா…காடு.

  எப்படிப் பிறந்தான் எனும் சிக்கலே இன்னும் தீராத செப்படி ராமனுக்கு நம்பிக்கை அடிப்படையில் பிறப்பிடம் அயோத்தியென உரிமை வழங்கி அதற்கு ஊறு நேராதவாறு உத்திரவு வழங்கும் நீதிமன்றம், நிறைந்துள்ள நாட்டில், கானகத்து அரும்பிலும் காட்டுமர நரம்பிலும் காட்டுப்பூச்சிகள் தீண்டிய தழும்பிலும் மலைப்பொருட்களின் தாதிலும் வரலாறாய் கலந்திருக்கும் பழங்குடி மக்களுக்கு காடு சொந்தமில்லையாம்!

  இப்படி பேசுபவனுக்கு இனி நாடு சொந்தமில்லையென எழுந்துவிட்டது டோங்கிரி!மலைவாழ் மக்கள் மண்ணை விட்டால் தன்னை விட்டதாய் கருதும் அந்த பழங்குடி காடும் மலையும் கூட இனி இந்திய ஆளும் வர்க்கத்திற்கு பதிலடி! இயற்கை உரிமையுள்ள இந்த எண்ணிறந்த மக்களை இந்திய உயர்ஜாதி ஹிந்துவின் கம்பெனியின் இலாபவெறிக்காக அவர்கள் பெற்றெடுத்த மண்ணை விட்டே அவர்களை அடித்து துரத்தும் ஆபத்தான பயங்கரவாதி யார்? மன்மோகனிஸ்ட்டா? மாவோயிஸ்ட்டா!

  ஒன்பது டஜன் சோடாபாட்டிலை சைக்கிளில் கட்டிக் கொண்டு,
  எதிர்காற்றை முறித்து மிதிவண்டி அழுத்துகையில் பாட்டிலில் கலந்த காற்று நெஞ்சக் கூட்டில் வந்து வெடிக்கும் கமறும் இரத்தத்தை எச்சிலாய் காறித்துப்பி மேட்டினில் ஏறி ஒற்றை மனிதர்களாய் உள்ளூர் சந்தையை உருவாக்கிய தொழிலாளர் தலையில் ஒரே நாளில் கோக் பெப்சியை டன் கணக்கில் இறக்கவிட்டு சிறுதொழில் முகத்தையே சிதைத்த படுபயங்கரவாதி யார்? இந்த நாடுமாறி அரசா? இல்லை நக்சலைட்டா!

  பசியின் நெசவு வெறுங்குடல் பின்னும் படாதபாடுபட்டு கைத்தறியை நூலாக்கி சுயதொழில், சுயமரியாதை யுணர்வோடு வாழ்ந்த நெசவாளர்களின்கைத்தறி ரகங்களை பிடுங்கி விசைத்தறிக்குக் கொடுத்து அன்னிய மூலதனத்தால் தறிக்கட்டைகளை உடைத்து கைத்தறிக்கான பஞ்சை கட்டாய ஏற்றுமதி செய்து மானங்காத்த நெசவாளிகள் கடனை அடைக்க தன் உடலை விற்கும்படி உருத்தெறியாமல் சிதைத்த இரக்கமற்ற பயங்கரவாதி யார்? இந்த நாடாளுமன்ற சாடிஸ்ட்டுகளா? நக்சலைட்டுகளா!

  ஏர்முனை ஒடித்து, கால்நடை அழித்து நாடோடிகளாக விவசாயிகளை துரத்தி; நகரத்து உழைப்பில் இரத்தம் குடிக்கும் பச்சை பயங்கரவாதி யார்? இந்த தேசத்துரோக ஆட்சியாளர்களா? தேசப்பற்றுள்ள நக்சலைட்டுகளா! சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தையும் ரிலையன்ஸ் டாடா வணிக மிருகங்களையும் உலவவிட்டு சிறுகடை வியாபாரிகளை கடை கடையாய் வேட்டையாடிய கண்மூடித்தனமான பயங்கரவாதி யார்? இந்தக் கயவாளி அரசா? மக்களை காக்கத் துடிக்கும் நக்சலைட்டா!

  ஹூண்டாய் கார் போகும் சாலையில் குடிசைகளின் நிழல் விழுந்தால் கறையாகுதாம்,
  மேட்டுக் குடிகள் மிதக்கவிட்ட கூவம் ஒட்டுக் குடிகளின் மூச்சுபட்டு அழுக்காகுதாம்
  சிங்காரச் சென்னையின் அழகுக்காக அடிக்கடி தீக்குளிக்கின்றன குடிசைகள். பற்றவைக்கும் பயங்கரவாதி யார்? உள்நாட்டு தொழிலாளர்க்கே உயிர் வாழும் உரிமையில்லை அன்னிய பன்னாட்டு கம்பெனிகளுக்கோ உன்னை சாகடிக்கவும் சலுகைகள்.போர்டுக்கு, ஹூண்டாய்க்கு முன்னே போராடினால் அடித்துத் துவைக்க அதிரடிப்படையை அனுப்பிடும் அந்த பயங்கரவாதி யார்?

  வெள்ளைக்காரன், வெளிநாட்டு கம்பெனியை விரட்டத்தானே சுதந்திரபோராட்டம்
  நடத்தியதாய் சொல்கிறீர்கள்? பின்னே ஏன் இத்தனை வெளிநாட்டுக் கம்பெனிகளை இழுத்து வருகிறீர்கள் இப்போது சுரண்டும் வர்க்கத்தை அழைத்து வருவதற்கு சுதந்திர போராட்டம் நடத்தியது எதற்கு? கேட்டுப் பாருங்கள்..பயங்கரவாதிகளுக்கு பதில் சொல்லிப் பழக்கமில்லை…படையோடு வருகிறார்கள். சத்தீஸ்கர், ஒரிசாவிற்கு ஒரு லட்சம் ராணுவம்… சற்றே காத்திருங்கள் நாடு முழுக்க முப்படையும்… பல்லைக் கடித்துக் கொண்டு, பழஞ்சட்டை போட்டுக் கொண்டு பயங்கர முகபாவத்துடன், கொலைவெறிப் பார்வையுடன் பயங்கரவாதி இருப்பானென்று கற்பனை செய்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்

  அதோ பாருங்கள்… பளிச்சென வெண்ணிற உடை… பார்த்ததும் புன்முறுவல்..
  கொலைக்குறிப்புகள் தெரியாத குளிரூட்டும் பார்வை… கண்ணக் கதுப்பில் வழியும்
  காதிகிராப்ட் காந்திய வெண்ணெய் தளுக்கான பேச்சில் வழுக்கும் உதடுகள்….
  தாய்நாட்டுப் பற்றுக்காகவே வாழ்வது போல தயங்காமல் பேசும் தோரணை…

  இவைகள்தான்… இவைகள்தான்… உண்மையான பயங்கரவாதியின் மென்மையான அடையாளங்கள் இன்னும் குழப்பமா எதற்கு இத்தனை அடையாளம்
  பழுத்த, கனிந்த, தேசவிரோத பயங்கரவாதியை நீங்கள் பார்க்க வேண்டுமா?
  அதோ.. ப.சிதம்பரத்தைப் பாருங்கள்! தாயின் மார்பை அறுத்து
  பிஞ்சுக் குழந்தையின் விரலை ஒடித்தது பழங்குடிப் பெண்களின் உடலைக் குதறி

  அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகள் காசு பார்க்க தன் அடிமைப் பிழைப்பில் ருசி பார்க்க
  தாய்மண்ணின் தாதுக்களையே வெட்டிக் கொடுக்கும் கேடுகெட்ட, கீழ்த்தரமான,
  தேசத்துரோக பயங்கரவாதி ப.சிதம்பரத்தை அதோ பாருங்கள்..

 6. elumugam Says:

  அந்த நாள் நினைவிருக்கிறதா? 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தினத்தில் அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று பாசிச ஹிந்து தீவிரவாதிகள் திட்டமிட்டு நடாத்திய இனப்படுகொலை. 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. அந்த நினைவலைகள் தொடர்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஹர்ஷ் மந்தர்(குஜராத் இனப்படுகொலையை கண்டித்து பதவி விலகிய இவர் தற்ப்பொழுது சமூக சேவையாற்றி வருகிறார்) தி ஹிந்து நாளிதழில் கட்டுரையொன்றை இங்கு பிரசுரிக்கிறோம்.

  “நவம்பர் 26, 2008. அன்றைய தினம் நான் வெகு தூரத்தில் அஸ்ஸாமிலுள்ள நெல்லியில் இருந்தேன். 1983இல் மறக்க முடியாத படுபயங்கர கூட்டுக் கொலைகள் நடைபெற்றதே அதே நெல்லியில் தான். 25 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கடைக்கோடியிலுள்ள இக்கிராமத்தில் 1983ல் வன்முறையில் தப்பிப் பிழைத்தவர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காக என்னை அழைத்திருந்தனர்.

  கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று பாசிச ஹிந்து தீவிரவாதிகள் திட்டமிட்டு இனப்படுகொலையை நடத்தினார்கள். வங்காள தேசத்திலிருந்து வந்து குடியேறிய 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. அதில் தப்பிப் பிழைத்தவர்கள் 25 வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர். அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள் என அதனைக் கேட்ட ஒவ்வொருவரும் அதிர்ச்சியடைந்தோம். வெட்கப்பட்டோம்.

  மிக சமீப காலம் வரையிலும் கூட, மிஞ்சியிருந்த அவர்கள் அனுபவித்த பகிஷ்காரங்கள் பற்றியெல்லாம் எடுத்துரைத்தனர். முறையான கவனமில்லா மல் சிகிச்சையளிக்கப்பட்ட காயங்களினால் பலரின் தேகம் அடைந்த மாற்றங்களை காண முடிந்தது. சிலர் தங்களின் ஆடைகளை விலக்கி தலைமுறைகளுக்கு முன் ஏற்பட்ட காயங்களின் தழும்புகளை காண்பித்தனர். முகத்தில் படுகோரமான வெட்டுக்காய தழும்புடன் காணப்பட்ட ஹாஜர் காத்தூன் என்பவர், எங்களின் முன் சம்மணமிட்டு அமர்ந்து தனது மடியை சுட்டிக்காட்டி உடைந்த சன்னமான குரலில் கூறினார். “இங்கு தான் எனது குழந்தையை படுக்க வைத்திருந்தேன். பாவிகள் அவனை பிளந்து இரு கூறுகளாக்கி விட்டனர்”.

  அலெக்ஜான் பீவி சற்று அமைதியாக காணப்பட்டார். அவரது தேகம் மாற்றமடைந்திருந்தது. அவர், உடற்கூறு சமநிலையை இழந்திருந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் அன்றய வன்முறையில் பலியாகி இருந்தனர். பாசிச ஹிந்து தீவிரவாதிகள் எப்படி தனது குடும்ப உறுப்பினர்களை கொன்றார்கள். எவ்வாறு அவர்களிடமிருந்து தான் தப்பித்தார். எங்கு மறைந்திருந்தார் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார் என ஒவ்வொன்றையும் எங்கள் முன் அபிநயத்துக் காட்டினார். “இவ்வுலகில் எனக்கென்று யாரும் இல்லை” அழுத்த மான அமைதியுடன் கூறி முடித்தார்.

  முப்பதுகளில் இருந்த முஹம்மது முனீருத்தீன் எங்கள் முன் வந்த போது கட்டுக்கடங்காத கண்ணீருடன் காணப்பட்டார். “என் கண் முன்னே எனது சகோதர சகோதரிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அப்பொழுது நான் 7 வயது சிறுவனாக இருந்தேன். என் பெற்றோர் வெட்டிக் கொலை செய்யப்படுவதை என் கண்ணால் கண்டேன். வேறொரு பெண்ணின் கையிலிருந்து குழந்தை பறிக்கப்பட்டு நெருப்பில் வீசி எறியப் படுவதையும், அத்தாய் கொடூரமாக கொல்லப்படுவதையும் கண்டேன். அன்றய தினம் முழுவதும் நான் பயத்தால் அழுதபடியே இருந்தேன். அன்று மாலை சுகுழு படையினரால் காப்பாற்றப்பட்டேன். பிறகு எங்களது வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டதை அறிந்தேன். எங்களது அரிசிக்கடை உள்ளிட்ட அனைத்து உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டன. நாகாவ் னிலிருந்த எனது மூத்த சகோதரன் என்னை எடுத்து வளர்த்தார். ஆனாலும் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணருகிறேன்” – இதேபோல் மற்றும் பலரும் தாங்கள் தனிமைப்படுத்தப் பட்டதாக குறிப்பிட்டனர்.

  நூர் நஹார் பேகம் கலவரம் நடந்த அந்நாளில் பத்து வயதுடையவராக இருந்தார். தப்பி ஓட முற்பட்டு தாக்கப்பட்டு கடுமையான காயமடைந்தார். இரண்டு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரது தாயும், நான்கு பச்சிளம் பாலகர்களும் கொலை செய்யப்பட்டனர். “நாம் இன்று நிற்கும் இதே இடத்தில் தான் அவர்கள் கண்டதுண்டமாக வெட்டியெறிப்பட்டனர். கடந்த 25 வருடங்களாக எனக்கு மன அமைதி இல்லை. எனது மன உளைச்சலுக்கு தீர்வாக நீதி கிடைக்க வேண்டும். இது மிகப்பெரும் குற்றம் எனவே நீதி அவசியம் தேவை. நான் தனிமைப் படுத்தப்பட்டதாக உணர்கிறேன். எனது குடும்பத்தினரை நான் இழந்து விட்டேன்”.

  பாபுல் அஹமது. ஒரு டெய்லரான இவர் தனது பெற்றோரை இழந்த அன்று வெறும் இரண்டே வயதான குழந்தை. தனது தாத்தா – பாட்டியினரால் வளர்க்கப் பட்டார். இவரது சகோதரிகள் ளுழுளு கிராமத்தில் வளர்கின்றனர். இதே போல் பலரின் சரிதங்கள். மடைதிறந்த வெள்ளம் போல் கரை புரண்டு வரும் கவலைகள். வெகுகால மாக புறக்கணிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அவர்களின் உரிமைகள். மறக்கப்பட்ட நெல்லியின் 1983 கலவரங்கள், இனப்படு கொலைகளுக்கான, ஒரு முன்னோட்ட மாகவே மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் மாநிலம் தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன. இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் 2002 குஜராத்.
  நெருப்பு மூட்ட பயன்படும் சருகுகளைப் போல, அஸ்ஸாம் இன்றும் பாசிச ஹிந்து தீவிரவாதிகளின் இன துவேஷத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது.

  அரசு நெல்லியில் உயிரிழந்தோருக்கான நிவாரணத் தொகையாக ரூ 5,000 வீதம் வழங்கியது. அதே சமயம் இதற்கு ஒரு வருடத்திற்கு பிறகு நடைபெற்ற சீக்கியர் படுகொலைக்காக ரூ.7 இலட்சத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்லி படுகொலைக்காக 688 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 310 வழக்குகளுக்கு குற்றப்பத் திரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 378 வழக்குகள், போதிய ஆதாரம் காவல் துறையினரால் சமர்ப்பிக்கப்படாததைத் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் குற்றப்பத்திரிக்கை வழங்கப் பட்ட 310 வழக்குகளும் கூட அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அஸ்ஸாம் கன பரிஷத் அமைச்சரவையினால் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டன. இதன் மூலம் இப்பயங்கரவாத இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கூட சட்டத்தின் விசாரணையை எதிர் கொள்ளாமல் சுதந்திரப் பறவையாகி விட்ட கொடுமை அரங்கேறியுள்ளது.

  ஒரு பலவீனமான நிர்வாகத்தால் ஒவ்வொரு வரும் பாதுகாப் பற்ற நிலையை உணருகின்றனர். ஆனால் அரசு சாதாரண குடி மக்களை பாதுகாக்கவும், நீதியை நிலைநாட்டவும் அனேக சந்தர்ப்பங்களில் தவறிவிடுகின்றது. மும்பை தாஜ் ஹோட்டலில் பலியான உயிர்கள் பெரு மதியானவை. அதேசமயம் நெல்லி போன்ற தொலை தூர குக்கிராமங்களில் வாழ்பவர்களும், டெல்லி, பாகல்பூர், குஜராத் மற்றும் மாலே காவ்ன்ஐ சேர்ந்தவர்களும் கூட அவ்வாறு தான். நம் முடைய கவனமும், பரிவும், கவலையும் அனைத்து துயரங்களையும் சமமாக பாவிக்கும் ஒரு நாள் வந்தே தீர வேண்டும்.நாம் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இருப்பதே நமது பாதுகாப் பிற்கு உகந்த வழியாகும்”.

 7. elumugam Says:

  இந்தியாவை இந்துராஷ்டிரமாக உருவாக்கவேண்டும் என்று நினைப்பது இந்துக்கள்கூட அல்ல. இந்து மதப் போர்வையில் மதங்கொண்டு திரியும் மூன்று சதவிகிதப் பார்ப்பனர்களே!
  பார்ப்பனர்கள் வெளிப்படையாக நாங்கள் தான் அரசாளத் தகுந்தவர்கள் அதற்காக அவர்கள் திசை திருப்பும் யுக்திதான் முஸ்லிம்கள் எதிர்ப்பு, முஸ்லிம் தீவிரவாதம் என்ற பூச்சாண்டி!
  தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள் என்று முத்திரை குத்த இந்த நாட்டில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அதனைப் பெருக்கிட, பதாகை பிடித்துக் காட்ட பார்ப்பன ஊடகங்கள் இருக்கின்றன,இந்தியாவில் புலனாய்வுத் துறை இருக்கிறது, நிருவாக வர்க்கம் இருக்கிறது,
  இவற்றை எல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ஒரு நூல்தான் who Killed Karkare?.

  நூலின் ஆசிரியர் மகாராட்டிர மாநிலத்தின் முன்னாள் அய்.ஜி. காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் அய்.பி.எஸ். ஓய்வு பெற இன்னும் பல ஆண்டுகள் இருந்தும், இதற்குமேல் பெரும் பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தும், அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தானாகவே முன்வந்து விருப்ப ஓய்வு (VRS) கொடுத்துவிட்டு, பார்ப்பனப் பாசிசக் கும்பலால் திட்டமிட்ட வகையில் பலியாக்கப்படும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வீர சாகச பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.

  மாலேகான் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த ஒரு சதிகார கும்பலின் சிண்டைப் பிடித்து இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்தியவர் கர்கரே என்னும் காவல்துறை அதிகாரியாவார்.மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாலேகான் என்னும் இடத்தில் சிமி அலுவலகத்தின்முன் குண்டுவெடிப்பு 29.9.2008 அன்று நிகழ்ந்தது 5 பேர் பலி; 90 பேர் படுகாயம். மோட்டர் பைக்கில் டைமர் கருவி பொருத்-தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. அந்த மோட்டர் காருக்கு உரிமையானவர் ஒரு பெண் சந்நியாசி. அவர் பெயர் சாத்வி பிரக்யா தாக்கூர். மாணவர் பருவந்தொட்டு பல்வேறு இந்துத்துவா அமைப்பில் இருந்தவர். குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கின் ஆதரவும் உண்டு.

  இந்தக் குண்டுவெடிப்பில் முதல் குற்றவாளி இராணுவத்தில் புலனாய்வுத் துறையில் பணியாற்றிய சிறீகாந்த் புரோகித் என்பவர்; மகாராட்டிர மாநிலம் நாசிக் என்னும் இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருபவர். வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? கையாளுவது எவ்வாறு? என்பன போன்ற பயிற்சிகளை இந்துத்துவாவாதிகளுக்கு அளிக்கும் இராணுவ அதிகாரி இவர்.

  இவர்கள் பயன்படுத்திய வெடிகுண்டு தயாரிப்புக்கான வெடிமருந்தோ இராணுவத்தைத் தவிர வேறு எங்கும் கிடைக்க முடியாதது. மேலும் பல இராணுவத்-தினர் இந்த வெடிகுண்டு குற்றத்தில் தொடர்புடையவர்கள். பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்தை இந்து மயமாக்கும் ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டது. விமானப்படைத் தளபதியாக இருந்து விடுபட்ட விஷ்ணுபகவத் இந்த உண்மையைப் பட்டாங்கமாய்ப் போட்டு உடைத்தார் ஊடகங்களிலும் வெளிவந்தது.

  நாசிக் இராணுவத்தில் பயிற்சி பெற்ற இந்துத்துவாவாதிகள் இந்திய இராணுவத் துறையில் ஆயிரக்கணக்கானோர் ஊடுருவியுள்ளனர் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய, அதிரும் தகவலாகும்.

  இந்தியாவை இந்து மயமாக்கு!, இந்திய இராணு-வத்தையும் இந்து மயமாக்கு! என்பது இந்துத்துவாவாதிகளின் ஏற்றப் பாட்டாகும். அவர்கள் அதிகாரத்தில் இருந்த நேரத்தில், அதனைத் திட்டமிட்டுச் செய்துவிட்டனர். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற 96 உயர்மட்ட அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவ அதிகாரிகள் அழைக்கப்பட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்ளவேண்டும். மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

  மாலேகானில் மட்டுமல்ல; பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் அரங்கேற்றப்பட்ட குண்டுவெடிப்புகளிலும் இதே கும்பலுக்குத் தொடர்பு உண்டு என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது. இராணுவ அதிகாரி புரோகித் தயாரித்து வைத்திருந்த திட்டமோ வெகு பயங்கரமானது. இசுரேலில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து இந்தியாவில் ஒரு போட்டி அரசை, இந்துத்துவா அரசை நடத்திடவெல்லாம் திட்டமிட்டு இருந்தனர். வரைபடம், அரசமைப்புச் சட்டம், கொடி முதலியவை முதற்கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.

  இவர்கள் மடிக் கணினி (லேப்டாப்)யில் இருந்த பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்தன. இவற்றையெல்லாம் கண்டுபிடித்தவர், விரிவாகக் குற்றப்பத்திரிகை தயாரிக்கக் காரணமாக இருந்தவர்தான் கார்கரே என்னும் காவல்துறை அதிகாரி.

  4000 பக்கங்களைக் கொண்ட தகவல் அறிக்கையாக அது உருவாக்கப்பட்டு இருந்தது. அவை வெளியில் வந்தால் ஆரிய ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பூர்வோத்திரமான அத்தனை அங்க மச்ச அடையாளங்கள் எல்லாம் பளிச் பளிச்சென்று மக்கள் மத்தியிலே அம்பலமாகியிருக்கும்.
  இப்படிப்பட்ட ஓர் அதிகாரியை ஆரியம் விட்டு வைக்குமா? இதற்குமுன் விட்டு வைத்ததுதான் உண்டா?

  ராமராஜ்ஜியத்தை உருவாக்குவேன் என்று சொன்னவரை மகாத்மா வாக்கியவர்களும் அவர்களே. நான் சொல்லும் ராமன் வேறு; இராமாயண இராமன் வேறு என்று காந்தியார் சொல்ல ஆரம்பித்ததும், அவரை துர் ஆத்மாவாகக் கருதி மார்பில் குண்டு பாய்ச்சி ரத்தம் குடித்த கும்பலாயிற்றே!

  திட்டமிட்டார்கள், தீர்த்துக் கட்டிவிட்டார்கள் காவல்துறை அதிகாரி கர்கரேயை. அதைப்பற்றிய நூல்தான் மகாராட்டிர மாநில முன்னாள் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்களால் எழுதப்பட்ட ‘‘Who Killed Karkare?’’ என்ற நூலாகும். 2009 இல் முதல் பதிப்பாக வெளிவந்து, 2010 இல் மூன்றாவது பதிப்பாகவும் வெளிவந்துவிட்டது.

  அந்த நூலைப் பற்றிய அறிமுக விழாதான் திராவிடர் கழகத்தின் சார்பிலும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலும் நேற்று (2.2.2010) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றதாகும். 336 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 300. நேற்றைய விழாவில் ரூபாய் 250_க்கு அளிக்கப்பட்டது.

  வேர்கள் பதிப்பக உரிமையாளர் எம். குலாம் முகம்மது அவர்கள் தன் உரையில் பார்ப்பனியத்தின் பயங்கரத் தன்மையை எடுத்துக் கூறினார். பார்ப்பனர்களால் இந்தியாவுக்கே பேராபத்து சூழ்ந்துவிட்டது. இவர்களிடமிருந்து இந்தியாவை மீட்கவேண்டும்.பெரியார் தமிழ்நாட்டிலிருந்து மகாராட்டிரத்திற்குச் சென்றுள்ளார். இந்நூலில் பெரியார்பற்றி நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். புதிய தலைமுறையினருக்குப் பெரியார் பற்றி சரியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வரப்போகும் தலைமுறையில் நடக்க இருக்கும் புரட்சிக்கு பெரியார்தான் கட்டியம் கூறுவார் என்று அவர் சொன்னபோது கலகலப்பான கைதட்டல்.

  பார்ப்பனர்களின் கைக்குள் இருக்கும் உளவுத் துறையை விமர்சிப்பது என்பது சாதாரணமானதல்ல. முஷ்ரிஃப் அவர்கள் மிகவும் விரிவாகவே உளவுத் துறையை விமர்சித்திருக்கிறார்.

  குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரி அவர்கள் கூட அண்மையில் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.” உளவுத் துறை என்பது யார் ஒருவருக்காவது பதில் சொல்லக் கடமைப்பட்டதாக (Accountability) இருக்கவேண்டும் ” என்று கூறியிருப்பது இந்நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார். இந்த நூலுக்குப் பிறகுதான் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருந்த பாலக்காட்டுப் பார்ப்பனரான எம்.கே. நாராயணனும் அந்தப் பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளார்.

  திராவிட இயக்கப் பாரம்பரியம் உள்ள பெரியார் அவர்களுக்குப் பிறகு அந்தப் புரட்சியைத் தொடர்ந்து நடத்திச் செல்லும் வீரமணியார் தலைமை வகித்து நடத்தும் இந்த நிகழ்ச்சி புதிய தொடக்கத்தின் வீச்சு என்று குறிப்பிட்டார் குலாம் முகம்மது அவர்கள்.

  வி.டி. ராஜஷேகர் தலித் வாய்ஸ் ஆசிரியரும், சமூகநீதித் தளத்தில் தடம் பதித்து வரும் இவர் தனது உரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டதாவது: இந்நாட்டில் பார்ப்பனர்களின் முதல் பலி முசுலிம்களே; ஆனால், இந்த உண்மையை எந்த அளவுக்கு முஸ்லிம்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று தமது ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினார்.

  இந்தியா முழுமையும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை முஸ்லிம்கள் சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டும். முஸ்லிம்கள் முஷ்ரிஃப் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்த-போதே 1925ஆம் ஆண்டில் சேலத்தில் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில் தொலைநோக்கோடு ஒரு கருத்தைக் கூறியுள்ளார். வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருக்கும் போதே பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவை ஏற்படுத்தவேண்டும். இல்லாவிட்டால், இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனர்களின் வல்லாண்மைக் கொடுமையின்கீழ் துன்பப்பட நேரிடும் என்று எச்சரித்தார்.

  அதுதான் இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது. முஷ்ரிப் அவர்களால் எழுதப்பட்ட இந்த நூல் அறிவுப்பூர்வமான வெடிகுண்டாகும். இந்த நூல் வெளிவந்த பின் இந்தியாவின் ரா, அய்.பி. போன்ற அமைப்புகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். தமிழர் தலைவர் கி.வீரமணி.நூலினை அறிமுகப்படுத்திய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரும் அளவு ஆங்கிலத்தில் உரையாற்றினார். இடையிடையே தமிழிலும் விளக்கினார்.

  இங்குள்ள முசுலிம்கள் கைபர் கணவாய் வழியாக இந்த நாட்டிற்கு வந்தவர்கள் அல்லர். இங்குள்ளவர்கள் இங்கே பிறந்தவர்கள்தாம். அவர்களை அந்நியர்கள் என்று கூறக் கூடியவர்கள் தான் உண்மையிலே அந்நியர்கள். முஸ்லிம் தீவிரவாதி என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தீவிரவாதிகளில் என்ன முஸ்லிம் தீவிரவாதிகள் இந்து தீவிரவாதிகள்? முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்பவர்கள் இந்து தீவிரவாதி என்று சொல்கிறார்களா?

  இங்கு இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவராக இருந்தவர் கரண் சிங். ஏன் அவர் அந்த அமைப்பிலிருந்து விலகினார்? அதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறாரே.

  அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மத்தைக் கொண்டு வர விரும்புகிறார்கள் என்று சொல்லித்தானே கரண்சிங் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார் என்ற ஓர் அரிய தகவலை மன்றத்தில் தெரிவித்தார் ஆசிரியர்.

  கர்கரேயை அவர்கள் கொல்லவில்லை, உண்மையை, நீதியைக் கொன்று இருக்கிறார்கள். அந்த உண்மைகளையும், மறைக்கப்பட்ட நீதிகளையும் வெளியில் கொண்டு வரும் முயற்சியில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார். நம் எதிரிகள் நாணயமானவர்கள் அல்லர். என் உயிருக்கே மூன்று முறை குறி வைத்தனர். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

  நூலாசிரியர் எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்கள் ஏற்புரையாகக் கூறியதாவது. நான் இந்த அளவு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டதில்லை. மும்பையில் தீவிரவாதிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. முன்கூட்டியே அய்.பி.க்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை மாநில அரசுக்கு அய்.பி. தெரிவிக்காதது ஏன்?

  மராட்டியத்தில் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் இந்துப் பயங்கரவாதிகள். அவர்களின் சதித் திட்டம் அவர்களிடம் இருந்த லேப்டாப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையெல்லாம் வெளியில் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி தான் கார்க்கரே.

  அவரைத்தான் திட்டமிட்ட வகையில் படுகொலை செய்துள்ளார்கள். வேறு வகையில் இதனைச் செய்திருந்தால் அது வெளிச்சத்துக்கு வந்துவிடும். இது போன்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்வது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. அபிநவ் பாரத் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.தான். பார்ப்பனர்கள் அதிக ஆதிக்கம் கொண்ட அமைப்பு இது. இஸ்ரேல் நாடுவரை தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.

  நாக்பூர், புனே போன்ற இடங்களில் 53 இடங்களில் கூட்டங்கள் நடத்தியிருக்கின்றனர். காமா மருத்துவமனைக்கு இராணுவத்தினரை அனுப்புமாறு கர்க்கரே கேட்டுக் கொண்டும், அதனைச் செயல்படுத்தத் தவறியுள்ளனர். இந்த நிலையில் கர்க்கரே அங்கே சென்றபோது சுட்டுக் கொன்றுள்ளனர்.

  இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளியில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை எழுதினேன். இந்த நூலை வெளியிட்டபோது பார்ப்பனர் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர். புனே மிரர் என்னும் ஓர்ஏடு மட்டும் விமர்சித்திருந்தது.

  எனக்குக் கொஞ்சம் சோர்வுகூட இருந்தது. ஆனால் இந்தப் பெரியார் மண்ணுக்கு நான் வந்த பிறகு அந்தக் சோர்வு எல்லாம் ஓடோடிவிட்டது. எனக்குப் புதுத்தெம்பே ஏற்பட்டு விட்டது!
  பார்ப்பனர் அல்லாதார் விழிப்புணர்வு பெற வேண்டும். பார்ப்பனர் அல்லாதாரின் எழுச்சியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இசுலாமியர்களை பயங்கரவாதிகள் என்று காட்ட முயற்சிக்கின்றனர். இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்று கூறினார்.

 8. K. Venkatraman Says:

  This ELUMUGAM has filled up the same type of stuff here also.

  I think he is copying and pasting from some other blog.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: