இது எவன் செயல்? தொழுகையை முடித்துவிட்டு திரும்பியவர்களின் படகு கவிழ்ந்ததில் 120 பேர் சாவு?

இது எவன் செயல்? தொழுகையை முடித்துவிட்டு திரும்பியவர்களின் படகு கவிழ்ந்ததில் 120 பேர் சாவு?

நாத்திக வீரமணியின் / விடுதலையின் நக்கல்[1]: படகு கவிழ்ந்து மேற்கு வங்காளத்தில் முஸ்லீம்கள் இறந்த விஷயத்தில், விடுதலையில், இப்படி தலைப்பிட்டு நக்கல் அடித்திருக்கிறார் வீரமணி. கேட்டால், நிருபர் என்று தப்பித்துக் கொள்வார். “இது எவன் செயல்? தொழுகையை முடித்துவிட்டு திரும்பியவர்களின் படகு கவிழ்ந்ததில் 120 பேர் சாவு?” என்று கேள்விக்குறியோடு ஆரம்பித்துள்ளார்[2]. “இது எவன் செயல்?”, என்று ஏகவசனத்தில் கேட்டுள்ளதை முஸ்லீம்கள் அறிந்து சும்மா இருப்பார்களா அல்லது வீரமணி வீட்டை, விடுதலை அலுவலகத்தை[3] முற்றுகையிடுவார்களா? இல்லை, அமைதியாக இருந்து விடுவார்களா?

இது எவன் செயல்? தொழுகையை முடித்துவிட்டு திரும்பியவர்களின் படகு கவிழ்ந்ததில் 120 பேர் சாவு? பொதுவாக, இந்து பக்தர்கள் விபத்தில் இறப்பது முதலிய செய்திகளைப் போட்டுவிட்டு, “எல்லாம் அவன் செயல்”, “அவனன்றி ஓரணுவும் அசையாது”, “அம்மன் காப்பாற்றவில்லை” என தலைப்புகள் இட்டு கிண்டல் அடிப்பது வழக்கம்[4]. அப்பொழுது, இதே மாதிரி, கிருத்துவர்கள், முஸ்லீம்கள் இறக்கும் போது அவ்வாறான கேள்விகளை வீரமணி / விடுதலை எழுப்புமா என்று கடந்த ஆண்டுகளில் என்னுடைய கட்டுரைகளில் கேட்டிருந்தேன். ஈ-மெயில்களும் அனுப்பியிருந்தேன். இதுதான், முதல் தடவை போலும், இஸ்லாம் கடவுளை கேள்வி கேட்டிருக்கிறார்கள், பகுத்தறிவுவாதிகள்!

ஹிஜ்லி ஷரீப் மசூதிற்கு சென்று திரும்பிய முஸ்லீம்கள்: கொல்கத்தா, நவ. 1, 2010- மேற்கு வங்காள மாநிலத்தில் படகு கவிழ்ந்த தில் 120 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது[5]. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வங்காள விரிகுடா கடலில் உள்ளது கக் தீவு. இந்த தீவை சேர்ந்தவர்கள் மாதுர்கா என்ற படகில் கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹிஜ்லி ஷரீப் என்ற இடத்தில் உள்ள மசூதிக்கு தொழுகை செய்ய சென்று இருந்தனர். அங்கு தொழுகையை முடித்து விட்டு அவர்கள் படகில் தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கடலில் அலைகள், மணல் திட்டில் மோதுதல்: அப்போது படகு கோராமாரா தீவு என்ற இடத்துக்கு வந்தது. அங்குதான் மோரிகங்கா ஆறு கடலில் கலக்கும் இடம் உள்ளது. அந்த இடத்துக்கு படகு வந்த போது கப்பல் ஒன்று அங்கு இருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் கடலில் அலைகள் வேகமாக எழுந்தன. இதன் காரணமாக படகு தள்ளப்பட்டு அருகில் உள்ள மணல்திட்டின் ஒன்று மீது மோதியது. மணல்திட்டில், படகு மோதியதில் அது கவிழ்ந் தது. படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்தனர். இந்தப் படகில் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்டிருந்ததும் விபத்துக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த படகில் 175 முதல் 200 பேர் வரை பயணம் செய்தனர். இவர்களில் 120 பேர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. “அவர்கள் ஒரு விழாவில் பங்கு கொண்டு எட்டு படகுகளில் திரும்பி வந்துள்ளனர். அதில் ஒன்றுதான் மூழ்கியுள்ளது. நாங்கள் விசாரித்தபோது அப்பகுதி எங்கள் எல்லைக்குள் வரவில்லை என்று தெரிந்தது. இருப்பினும் மூழ்கியவர்களை காப்பாற்ற ஆவண செய்கிறோம்,” என்று கிழக்கு மிதினாபூர் மாஜிஸ்டிரேட் கூறினார்[6]. சாதாரணமாக, ஒரு படகில் 60 பேரைத்தான் ஏற்றவேண்டும், ஆனால், 120-150 பேரை ஏற்றி வந்ததாலும், வெள்ளநீர் அதிகம் இருந்ததாலும், விபத்தில் அதிகம் பேர் இறக்க நேரிட்டுள்ளது. 220 பேர்களை ஏற்றிப்பயணித்தது[7] என்று இப்பொழுது தெரியவந்துள்ளது! அதாவது நான்கு மடங்கு அதிகம்!

நாத்திக-மார்க்ஸீய அரசாங்கம் உடனடி நடவடிக்கை: இந்தச் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் கடலோர காவல் படையும், காவல்துறையினரும் விரைந்து சென்றனர். அவர்கள் அந்தப் பகுதியை அடைவதற்கு முன்பு மீனவர்களும், உள்ளூர் வாசிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் மூழ்கி இறந்த 20 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர்[8]. அவர்களில் 17 பேர் பெண்கள். மூவர் குழந்தைகளாவர். கடலில் தத்தளித்த 30 பேரை மீட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மேலும் 10 பேரை உள்ளூர்வாசிகள் மீட்டனர். மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா சம்பவ இடத்துக்கு விரைந்தார்[9]. அவர் மீட்பு பணிகளை பார்வையிட்டார். மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜியும் சம்பவ இடத்துக்கு சென்றார்[10].

வேதபிரகாஷ்

© 03-11-2010


[3] மதுரை ஆதீனத்தை முற்றுகையிடுவோம் என்று மடத்தில் உள்ளே நுழைந்து, மிரட்டி அவரிடத்தில் விளக்கக்கடிதம் வாங்கிக் கொண்டு  வந்தனர்.

[4] விடுதலையில் அத்தகைய தலைப்புகள் இட்டு இந்துமத்தை மட்டும் விமசர்னித்து செய்திகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

[9] நாத்திகம் பேசினாலும், முஸ்லீம்களாச்சே, பறக்கத்தான் செய்வார்.

[10] அரசியல் செய்ய இவர்களுக்கு சொல்லியாத் தரவேண்டும்?

Explore posts in the same categories: கிழக்கு மித்னாப்பூர், படகு கவிழ்ந்தது, ஹிஜ்லி ஷரீப்

குறிச்சொற்கள்: , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “இது எவன் செயல்? தொழுகையை முடித்துவிட்டு திரும்பியவர்களின் படகு கவிழ்ந்ததில் 120 பேர் சாவு?”

  1. M. M. Enathi Reddy Says:

    It is meaningless to identify human-beings by their religion etc.

    By whatever name, Go is called, God is there.

    And therefore, the wordy terrorism of the DK cannot be accepted.

    Perhaps, we all pray invoking the Almighty so that the died might be laid in rest wit peace.

    We can also pray that the DK guys might have good sense so that they would not offend any believers.

  2. M. Nachiappan Says:

    நிச்சயமாக, நமக்கு ஒன்றும் இதில் வேறு எண்ணமேயில்லை. அவர்களுக்காக வருத்தப்படவே செய்கிறோம். அதாவது, பரிதாபகரமாக உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் அமைதியடைய எல்லாவல்ல இறைவனை இறைஞ்சுவோமாக.

    நாத்திக வீரமணிகள் போல, சாவிலும் மத அடையாளம் காணும் அல்லது பாகுபடுத்தி பார்க்கும் போக்கு இந்தியர்களுக்கு இல்லை, இந்துக்களுக்கும் இல்லை.

    ஆனால், வீரமணி போன்ற போலி நாதிகர்களுக்கு உறுதுணையாக முஸ்லீம்கள் செய்ல்படுவதை ஒப்புக்கக் கொள்ளமுடியாது.

    சமீபத்தில் தான், எங்களை போல சிலர் எடுத்துக் காட்டியதால், ஏதோ நாங்கள் இஸ்லாத்தையும் விமர்சனம் செஉகிறோம் என்ற ரீதியில் இப்படி சில செய்திகளை வெளியிடுகிறார்கள்.

    நமக்குப் பொறுத்த வரையிலும், கடவுள் ஒன்றுதான், ஆகவே, கடவுள் பெயரால், வேறெந்த நம்பிக்கையாளரும் மற்ற கடவுளரை நிந்தித்தாலோ, அல்லது “எங்கள் கடவுள் தான் உசத்தி, உங்கள் கடவுல் அப்படி இல்லை” என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், நிச்சயமாக அதிலுள்ள தவறான கொள்கையை எடுத்துக் காட்டுவோம்.

    ஆக, உண்மையான ஆத்திகவாதிகள் அல்லது நாத்திகவாதிகள் அவ்வாறே இருந்து கொண்டு போகட்டும். மற்றவர்களின் உரிமைகளில் தலையிடவேண்டாம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: