சமூக ஊடக கிலாபத், யூ-டியூப் ஜிஹாத் மற்றும் மின்னணு ஊடக பிரச்சாரம் – எது வரை செல்லும்?

சமூக ஊடக கிலாபத், யூ-டியூப் ஜிஹாத் மற்றும் மின்னணு ஊடக பிரச்சாரம் – எது வரை செல்லும்?

யூடியூப் பலவித பிரச்சாரங்களுக்கு உபயோகப் படுத்தப் படுதல்: சமீபகாலங்களாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகப்படியாக உள்ளது. அதன்மூலம் பரப்பப்படும் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உண்மைக்கு புறம்பான தகவல்கள் கூட வேகமாக பரவுகின்றன. உண்மையில் அவைத்தான் அதிகமாக உள்ளன. இதை தடுக்கும் வகையில், சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சமூக வலைதளங்களை  கண்காணிக்கும் பிரிவு இயங்கி வருகிறது. இதேபோல, சென்னை காவல் துறையிலும் கூடுதல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை உள்ளது. தனிப்படை போலீஸார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் சைபர்க்ரைம் போலீஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர்[1]. அதன்படி, சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலின் செயல்பாட்டை சமூக வலைதள கண்காணிப்பு குழுவினர் கண்காணித்தனர்[2]. அந்த சேனலில், சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது[3].

கிலாபத் என்ற சித்தாந்தத்துடன் பதிவேற்றப் பட்ட வீடியோக்கள்: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பேராசிரியர் ஹமீது உசேன் என்பவர் இதுபோன்ற வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தது கண்டறியப்பட்டது[4]. இதனால் அதிர்ச்சி அடைந்த சைபர் கிரைம் போலீசார் 3 பேரையும் வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்[5]. உலகம் முழுவதுமே “கிலாபத்” என்கிற இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வரும் வகையில் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வந்துள்ளது[6]. தாவது, தேர்தல்-ஜனநாயகம் டேவையில்லை, அது, இஸ்லாத்திற்கு எதிரானது போன்ற கருத்துகள் பரப்புவதாக இருந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும் தெரிவித்த கருத்துக்கள் இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[7]. 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது[8].

குடும்பமே இவ்வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது: இதுகுறித்து நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், ஹமீது உசேன் மற்றும் அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல்ரகுமான் ஆகியோர் ராயப்பேட்டையில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, அந்த கூட்டத்தில் பங்கேற்பவர்களை மூளைச் சலவை செய்து, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் திரட்டியது தெரியவந்தது. இந்நிலையில், அவர் ஒரு யூ-டியூப் சேனல் தொடங்கி அதில், மேலேஏடுத்துக் காட்டியது போல, இந்திய தேர்தல் முறைக்கு எதிராகவும், மதம் சார்ந்த அடிப்படை சித்தாந்தம் தொடர்பாகவும் பேசி பிரச்சாரம் செய்துள்ளார். இதில் ஈர்க்கப்பட்டு தொடர்புகொள்ளும் நபர்களை, ராயப்பேட்டையில் ஞாயிறுதோறும் நடைபெறும் கூட்டத்துக்கு வரவழைத்துள்ளார். அவர்களை மூளைச் சலவை செய்து, தடை செய்யப்பட்ட அமைப்பில் ஈடுபடுத்தியுள்ளார். இதன் தாக்கமும் உள்ளதாகத் தெரிகிறது.

பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர். அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசிரியர். இத்தகைய வேலையில் ஈடுபட்டது: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் ஹமீது உசேன் [Hameed Hussain]. பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர். அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசிரியர். கிண்டி இன்ஹினியரிங் கல்லூரியில் படித்து மெகானிகல் துரையில் பிஎச்டி பட்டம் பெற்று கல்லூரிகளில் 2021 வரை பேராசிரியாராக வேலை செய்து வந்தார். இவர், ‘ஹிஸ்ப்- உத்- தஹ்ரீர்’ [Hizb-ut-Tharir – HuT] இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டுள்ளார். இவரது தந்தை அகமது மன்சூர் [Ahmed Mansoor] மற்றும் இளைய சகோதரர் அப்துல் ரகுமான்[Abdul Rehman]. இவர்கள் சென்னை ராயப்பேட்டை ஜான்ஜானிகான் சாலையில், ‘மாடர்ன் எசன்சியல் எஜுகேஷனல் டிரஸ்ட்’ என்ற பெயரில், ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் வாயிலாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹிஸ்ப்- உத்- தஹ்ரீர் இயக்க கொள்கைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்துள்ளனர். ஜானி கான் தெரு, ராயபேட்டையில் இவர்களது அமைப்பு இயங்கி வந்தது.

வீடியோக்கள் சொல்லும் கருத்துசித்தாந்தம் என்ன?: அடிப்படைவாதம் என்று ஆரம்பித்து, தீவிரவாதத்தை ஆதரித்து, பயங்கரவாதத்தில் முடியும் போக்காக பேச்சுகள் உள்ளன என்று தெரிகிறது. இவரது யூ-டியூப் செனலில் –

  • மாற்று மதத்தவரை பின்பற்றலாமா?
  • கிலாஃபாஹ் vs மதசார்பற்ற ஜனநாயகம் – எது மனித சமூகத்திற்கு உகந்தது?
  • இஸ்லாத்தின் ஒற்றை தலைமைத்துவம் & இஸ்லாமிய அகீதா – அரசின் அடிப்படை
  • மீண்டும் இஸ்லாமிய ஆட்சி வருமா?

தவிர கூட்டாளிகளான ஒஹம்மது மோரீஸ், காதர் நவாஸ் செரீப் மற்றும் அஹ்மத் அலி [Mohammed Maurice, Khader Nawaz Sherif and Ahmed Ali] என்று மொத்தம் ஆறு பேர் கைது செய்யப் பட்டனர்[9]. மேலும், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற யூடியூப்’ சேனல் வாயிலாகவும் கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளனர்[10]. இதை தீவிரமாக கண்காணித்து வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் 25-05-2024 அன்று கைது செய்தனர்[11]. ஹிஸ்ப் உத் தஹ்ரீர் (விடுதலை கட்சி) என்ற சர்வதேச இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் அமைப்பின் கொள்கைகளை பரப்பும் செயலில் ஹமீது உசேன் உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது[12].

உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு, கைது முதலியன: ஹமீது உசேன் உள்ளிட்ட 6 பேரும் பரப்பும் கருத்துகள் அரசியல் சட்டத்துக்கும், சமூகத்துக்கும் விரோதமானது என்பதால், அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்[13]. இதை தொடர்ந்து, தண்டையார்பேட்டை, செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரித்தனர்[14]. அதில், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தண்டையார்பேட்டையை சேர்ந்த அகமது அலி, காமராஜபுரத்தை சேர்ந்த முகமது மவுரிஸ், காதர் நவாஸ் ஷெரிப் என்கிற ஜாவித்தை உபா சட்டத்தின் கீழ் [under the provisions of the Unlawful Activities Prevention Act (UAPA)] போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்[15]. மேலும் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக சென்னையில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது[16].

© வேதபிரகாஷ்

27-05-2024


[1] தமிழ்.இந்து, சென்னையில் என்ஐஏ விசாரணை தொடங்கியது: பேராசிரியர் உட்பட 6 பேரின் வீடுகளில் போலீஸார் தீவிர சோதனை, செய்திப்பிரிவு, Published : 27 May 2024 04:27 AM; Last Updated : 27 May 2024 04:27 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1255237-nia-investigation-started-in-chennai-1.html

[3] தமிழ்.இந்து, தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் திரட்டியதாக சென்னையில் அதிரடியாக 6 பேர் கைது, செய்திப்பிரிவு, Published : 26 May 2024 10:20 AM; Last Updated : 26 May 2024 10:20 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1254511-6-people-arrested-on-chennai-for-recruiting-people-for-banned-organisation.html

[5] மாலைமலர், உபாசட்டத்தில் நடவடிக்கைபயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட 3 பேர் கைது, By Maalaimalar25 மே 2024 2:01 PM (Updated: 25 மே 2024 2:01 PM).

[6] https://www.maalaimalar.com/news/state/o-panneerselvam-urged-to-open-new-medical-colleges-in-6-districts-720508?infinitescroll=1

[7] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு.. அண்ணா பல்கலைக்கழக மாஜி பேராசிரியர் உள்பட 6 பேர் கைது, By Nantha Kumar R Updated: Sunday, May 26, 2024, 0:07 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-arrested-6-men-including-ex-anna-university-professor-who-were-sympathisers-of-terror-608643.html

[9] தினத்தந்தி, தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ந்த பேராசிரியர்சென்னையில் நடந்த பல ரகசிய கூட்டங்கள், By தந்தி டிவி 26 மே 2024 2:49 PM,

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/chennaiproffeserthanthitv-267163?infinitescroll=1

[11] தினகரன், தடை செய்யப்பட்டஹிஸ்ப் உத் தஹ்ரீர்என்ற பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி, May 26, 2024, 12:01 am

[12] https://www.dinakaran.com/banned_terror_movement_hizb-ud-tahrir_arrested/ – google_vignette

[13] தினமலர், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு: சென்னை போலீசிடம் சிக்கிய 3 பேர், UPDATED : மே 25, 2024 01:49 AM | ADDED : மே 25, 2024 01:49 AM

[14] https://www.dinamalar.com/amp/news/tamil-nadu-news/-support-to-terrorist-organization-3-people-caught-by-chennai-police—/3631857

[15] கதிர்.நியூஸ், சத்தம் இல்லாமல் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள்சேர்ப்பில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்! கைதும் பின்னணியும்! By : Sushmitha  |  26 May 2024 7:49 PM.

[16] https://kathir.news/special-articles/news-1537411

Explore posts in the same categories: ஃபிதாயீன், ஃபேஸ்புக், அமைதி, அல் அர்பி, அல்லா, அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழிப்பு, அழிவு, அஹமதியா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியப் பிரச்சினை, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இறைத்தூதர், இறைவன், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமிஸ்ட், இஸ்லாமும் இந்தியாவும், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், என்.ஐ.ஏ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசிஸ், ஐஸில், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காபிர், கிலாபத், கிலாபத் இயக்கம், சமூக ஊடக கிலாபத், ஜிஹாதி அமெரிக்கர்கள், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ் முஸ்லீம், மின்னணு ஊடக பிரச்சாரம், யூ-டியூப் ஜிஹாத்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

பின்னூட்டமொன்றை இடுக