05-02-2019 கொலை 23-07-2023 என்.ஐ.ஏ சோதனை – குரூர ஜிஹாதி கொலை எப்படி நடக்கும்? மனிதனை மனிதன் அவ்வாறு கொல்ல முடியுமா? (2) 

05-02-2019 கொலை 23-07-2023 என்..ஏசோதனைகுரூர ஜிஹாதி கொலை எப்படி நடக்கும்? மனிதனை மனிதன் அவ்வாறு கொல்ல முடியுமா? (2) 

தலைமறைவாக இருக்கும் கொலை குற்றவாளிகளுக்கு, பி.எப்.., மற்றும் எஸ்.டி.பி.., கட்சி நிர்வாகிகள் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடைக்கலம் தருவது மற்றும் நிதியுதவி செய்து வருவது: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்த அப்துல் மஜீத், 40; பாபநாசம் வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன், 31; திருவிடைமருதுார் திருமங்கலகுடியைச் சேர்ந்த சாஹூல் ஹமீத், 30; நபீல் ஹாசன், 31; திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, 37 ஆகியோரை தேடி வந்தனர்[1]. தலைமறைவான இவர்கள் பற்றி துப்புக் கொடுத்தால், 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு தரப்படும் என்றும் அறிவித்துள்ளனர்[2]. அத்துடன், சென்னை பூந்தமல்லியில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், 18 பேர் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர்[3]. அதேநேரத்தில், தலைமறைவாக இருக்கும் கொலை குற்றவாளிகளுக்கு, பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடைக்கலம் தருவது மற்றும் நிதியுதவி செய்து வருவது பற்றி, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது[4].

பல இடங்களில் சோதனை நடந்தது: இதுதொடர்பாக, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, கோயமுத்துார், மயிலாடுதுறை என, ஒன்பது மாவட்டங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்[5]. பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தலைமறைவு கொலை குற்றவாளிகளின் வீடுகள் என, 21 இடங்களில், 23-07-2023 அன்று அதிகாலை, 4:00 மணியில் இருந்து, இரவு, 7:00 மணி வரை சோதனை நடந்தது[6]. அப்போது, மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள், வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள்; ரகசிய பேச்சுக்கு பயன்படுத்தப்பட்ட, 25க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், மெமரி கார்டுகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பல இடங்களில் சோதனை முடிந்தாலும், விசாரணை இரவிலும் தொடர்ந்தது.

சோதனை நடந்தது எங்கெங்கே ?: தமிழகத்தில் கீழ் கண்ட இடங்களில்சோதனை நடந்தது:

* தஞ்சாவூர் நடராஜபுரம் தெற்கு காலனியில் உள்ள, எஸ்.டி.பி.ஐ., ஊடகப் பிரிவு மாவட்ட செயலர் பக்ருதீன் வீட்டில், நேற்று அதிகாலை, 5:30 மணி முதல் காலை, 10:15 மணி வரை சோதனை நடந்தது. மொபைல் போன், பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டது[7].

* தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் உள்ள ஹாஜா அலாவூதீன் வீடு; கும்பகோணம் அருகே திருவாய்ப்பாடியில் உள்ள முகமது செரீப்; திருமங்கலகுடியில் உள்ள குலாம் உசேன்; ராஜகிரியில் உள்ள முகமது பாரூக் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது[8].

* திருச்சி பீம்நகர், பண்டரிநாதபுரம் ஹாஜி முகமது உசேன் வீட்டில், ஐந்து மாதங்களுக்கு முன், அப்சல் கான் என்பவர் வாடகைக்கு குடி வந்தார். இரண்டு சாட்சிகளுடன், என்.ஐ.ஏ., இன்ஸ்பெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில், மூன்று பேர் குழுவினர், நேற்று அப்சல் கானிடம் விசாரணை நடத்தினர்[9].

* புதுக்கோட்டை உசிலங்குளத்தில் உள்ள ரசித்முகமது, 47 என்பவரது வீட்டில், நேற்று காலை ,6:00 மணியளவில் மூன்று பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். அவர், பி.எப்.ஐ., அமைப்பின் திருச்சி மண்டல முன்னாள் பொறுப்பாளர், விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் தரப்பட்டுள்ளது[10].

* திருப்பூர் சாமுண்டிபுரம், குலாம் காதர் கார்டனை சேர்ந்தவர் முபாரக் பாட்ஷா, 42; எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகி மற்றும் பி.எப்.ஐ.,யின் முன்னாள் மாநில பேச்சாளர். அவரது வீட்டில், எட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நான்கு மணி நேர விசாரணைக்கு பின், மொபைல் போன், லேப்டாப் போன்றவை கைப்பற்றப்பட்டன

* கோவை கோட்டைமேடில் உள்ள, பி.எப்.ஐ., அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ், 42, வீட்டில் காலை, 6:00 முதல் 8:45 மணி வரை, 3 பேர் குழுவினர் சோதனை நடத்தினர். மொபைல்போன், ஆதார் கார்டு, பான் கார்டு, மற்றும், 90,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

* விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் உள்ள அப்துல்லா வீட்டிலும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சில ஆண்டுகளுக்கு முன் அப்துல்லா இறந்து விட்டார். அவரது மனைவி பாத்திமா, 75; மகன் அஜித்,35; ஆகியோரிடம், வழக்கில் தொடர்புடைய பாபு என்கிற, நைனா முகம்மது குறித்து விசாரணை செய்தனர்.

எஸ்.டி.பி.., மாநில தலைவர் முபாரக் வீட்டில் சோதனை: என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வந்த பாபு என்கிற நைனா முகம்மது, தற்போது கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் வசிப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, அவரைத் தேடி அங்கு புறப்பட்டுச் சென்றனர். திருநெல்வேலி மேலப்பாளையம் ஹக் காலனியில், எஸ்.டி.பி.ஐ., மாநில தலைவர் முபாரக் வசிக்கிறார். இவரது வீட்டில் 24-0-2023 அன்று அதிகாலை, 5:00 மணியில் இருந்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கோஷங்கள் எழுப்பினர்[11]. இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ‘இந்த சோதனை மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை. திருபுவனம் ராமலிங்கம் கொலைக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிறுபான்மையினரை ஒடுக்கும் செயல். இதை சட்டப்படி சந்திப்போம்’ என, முபாரக் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்[12]. என்ஐஏ அதிகாரிகளின் சோதனையைக் கண்டித்து, கோவையில் எஸ்டிபிஐ கட்சியினா் 3-07-2023 ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்[13]. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்கின் மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். என்ஐஏ அதிகாரிகளின் இந்த சோதனையைக் கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது[14].

ஜிகாதிகொலை: என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ராமலிங்கம், ‘ஜிகாதி’ முறையில் கொல்லப் பட்டு உள்ளார். இவரை கொல்ல தேனியில், அறிவகம் என்ற இடத்தில் இருந்து கொலையாளிகளை அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே நடந்த, ஹிந்து முன்னணி பிரமுகர் வேலுார் வெள்ளையப்பன், பா.ஜ., நிர்வாகி ‘ஆடிட்டர்’ ரமேஷின் கொலைகளை போலவே, ராமலிங்கத்தையும், புனித போர் என கழுத்து, தாடை, கை விரல்கள், முட்டிகளில் வெட்டி கொலை செய்து இருப்பது, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.  ஆக கொலை செய்வதில் கூட இத்தகைய குரூரம், உச்சக்கட்ட வன்மம், வெறி எல்லாம் இருக்குமா என்று எண்ணவே இயலாத நிலை ஏற்படுகிறது. பிறகு, மனோதத்துவ ரீதியில் பார்க்கும் பொழுது, ஒரு மனிதன், இன்னொரு மனிதனை அவ்வாறு எப்படி கொல்ல மனம் வரும்? அப்படி துண்டு துண்டாக வேட்ட இரக்கமில்லா எண்ணம் மற்றும் செயல்பாடு வரும்? ஆகவே, அத்தகைய கொலைவெறி மனோபாவம், பனப்பாங்கு மற்றும் செயல்படுத்தும் குரூரம் முதலியவை எப்படித்தான் உண்டாகும் என்று ஆராய்ச்சி செயவேண்டும் போலிருக்கிறது.

கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது,” என்பது என்ன?: பாரதம் அமைதியான பூமி, “கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது,” என்று பாரதியார், அஹிம்சைக்கு இலக்கணம் வகுத்த புனித மண். மஹாத்மா காந்தி அவ்வாறே சுதந்திரம் பெற்றார். அத்தகைய நாடு, ஒரு வேளை பிரிந்து, பாகிஸ்தான் உருவானதால், காரணமான முஸ்லிம்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனரா என்று திகைப்பாக இருக்கிறது. இவர்கள் எல்லோருமே இந்துக்கள் தானே, பிறகு மதம் மாற்றம் ஏன், தடுக்க பேசியவர்களை கொல்வானேன், பிறகு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவானேன், மேன்மேலும் தொடர்ந்து குரூரமான வேலைகளில் ஈடுபடுவானேன். மனிதர்களை மனிதர்களாகக் கூட மதிக்கத் தெரியாத அத்தகைய மனம் எப்படி மனிதனுக்கு உருவாகும். கடவுள் தான் பதில் சொல்வார் போலும்.

© வேதபிரகாஷ்

26-07-2023


[1] தினத்தந்தி, கோவை, தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 21 இடங்களில் என்... திடீர் சோதனை, ஜூலை 24, 6:01 am

[2] https://www.dailythanthi.com/News/State/nia-in-21-places-in-districts-including-coimbatore-thanjavur-nellai-surprise-check-1014848

[3] தமிழ்.ஏபிபி.லைவ், NIA Raid: என்.. அதிகாரிகள் அதிரடி சோதனை.. துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு.. நடந்தது என்ன?, By: ஆர்த்தி | Published at : 24 Jul 2023 07:56 AM (IST); Updated at : 24 Jul 2023 07:56 AM (IST)

[4] https://tamil.abplive.com/news/india/tamil-nadu-nia-officials-conducted-a-raid-yesterday-a-cash-reward-of-rs-5-lakh-will-be-given-for-further-clues-130747

[5] தமிழ்.இந்து, பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழகத்தில் 21 இடங்களில் என்ஐஏ சோதனை, செய்திப்பிரிவு, Published : 24 Jul 2023 04:46 AM; Last Updated : 24 Jul 2023 04:46 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/1064219-nia-raids-21-places-in-tn-in-connection-with-murder-of-pmk-ramalingam-1.html

[7] காமதேனு, பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை: கோவை, திருச்சியில் பரபரப்பு, Updated on:  23 Jul 2023, 12:40 pm

[8] https://kamadenu.hindutamil.in/national/nia-raids-homes-of-popular-friend-of-india-executives-in-coimbatore-and-trichy

[9] தமிழ்.நியூஸ்.18, பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்குதமிழகம் முழுவதும் என்ஐஏ அதிரடி சோதனை | NIA, 21:40 PM JULY 23, 2023

[10] https://tamil.news18.com/videos/tamil-nadu/ramalingam-murder-case-nia-raids-across-tamil-nadu-nia-1077215.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, சிறுபான்மை இயக்கங்களை அடக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்ஐஏ சோதனை நடக்கிறது.. நெல்லை முபாரக் தடதட!, By Vignesh Selvaraj Published: Sunday, July 23, 2023, 11:54 [IST]

[12] https://tamil.oneindia.com/news/thirunelveli/nia-raid-with-political-vandalism-to-suppress-minority-movements-sdpi-leader-nellai-mubarak-523335.html?story=1

[13] தினமணி, கோவையில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம், By DIN  |   Published On : 24th July 2023 12:53 AM  |   Last Updated : 24th July 2023 12:53 AM

[14] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2023/jul/24/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4042783.html

Explore posts in the same categories: என்.ஐ.ஏ, என்ஐஏ, ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தீய சக்திகளை விரட்டுவது, தீவிரவாத திட்டம், தீவிரவாத நிதியுதவி, தீவிரவாதத்திற்கு துணை போவது, தேச விரோதம், தேசவிரோத செயல்கள், தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா, மத-அடிப்படைவாதம், மத-போலீஸார், மதகலவரம், மததுரோகி, மதமாற்றம், மதம், மதம் மாற்றம், மதவாதம், மதவிமர்சனம், மதவிரோதி, மதவெறி, முஸ்லிம், முஸ்லிம் அடிப்படைவாதம், முஸ்லிம்கள் ஆர்பாட்டம், முஸ்லீமின் மனப்பாங்கு, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, முஸ்லீம் முன்னேற்றக் கழகம், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்களில் சிறுபான்மையினர், மைனாரிட்டி, வெட்டிக் கொலை, வெறி

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

பின்னூட்டமொன்றை இடுக