ஜிஹாதி தீவிரவாதம் மற்றும் குண்டு தயாரிப்புகளில் மையமாகிய மதுரை – குறி அத்வானி முதல் மோடி வரை!
ஜிஹாதி தீவிரவாதம் மற்றும் குண்டு தயாரிப்புகளில் மையமாகிய மதுரை – குறி அத்வானி முதல் மோடி வரை!
மதுரையில் வளர்ந்த குண்டுதயாரிப்பு, வெடிப்பு நிகழ்வுகள்: மதுரையில் இஸ்லாமிய தீவிரவாதம் ஊக்குவித்து வளர்த்தது, இப்பொழுது எல்லைகளைக் கடந்து விட்டன. தொடர்ந்து குண்டு தயாரிப்பு, குண்டுவெடித்தல் மற்றும் ஜிஹாதிகளுக்கு பயிற்சி, ஆள்-சேர்ப்பு என அனைத்தும் நடைபெறுவது ஒரு சாதாரண மதுரைவாசிக்குக் கூட தெரியும் அளவுக்கு இருக்கிறது. மலைகளை வெடித்து, பாறைகள் எடுக்கும் தொழில் போர்வையில், வெடிமருந்துகள் வாங்கப்பட்டு அவை, குண்டு தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப் படுகின்றன. வெடிமருந்து தயாரிப்பாளர்களிடமிருந்தும், அவர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைத்து வருகின்றன. சிவகாசி அருகில் இருப்பதால், அவர்களது வேலை அமோகமாக நடந்து வருகிறது. மேலும், பாஸ்போர்ட், விசா, கரன்சி மாற்றுதல், பணப்பரிமாற்றம், ரெயில்-பஸ் முன்பதிவு போன்ற எல்லாவற்றிலும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செல்லுத்தி வருவதால், இத்தகைய வேலைகளை செய்து வர சுலபமாக இருந்து வருகிறது. பெற்றோர்களுக்கு தெரியும்-தெரியாது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதெல்லாம் சகஜமாக நடந்து வருகின்றன.
மதுரையில் அல் கொய்தா இயங்கி வருவது: மதுரையில் அல் கொய்தா அடைப்படை இயக்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்த 3 பேரை தேசிய புலனாய்வுத்துறை கைது செய்து உள்ளது[1]என்று செய்தி இப்பொழுது தான் வந்துள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகள் எப்படி மறைந்திருந்தது என்று தெரியவில்லை. பிரதமர் மற்றும் உள்நாட்டை சேர்ந்த 22 தலைவர்களை கொல்ல இவர்கள் சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. மேலும் 6 நாட்டு தூதர்களுக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர்[2]. தென்மாநிலங்களில் 5 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகள் 4 பேர் கைதான நிலையில், 29-11-2016 அன்று மேலும் ஒருவர் மதுரையில் கைதானார்[3]. என்.ஐ.ஏ முகவும் ஜாக்கிரதையாக செய்ல்பட்டு, இக்கைதுகளை செய்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தென் மாநிலங்களில் குண்டு வெடிப்பு நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோர்ட் வளாகங்களில் குண்டுவெடிப்புகளை நடத்திய விவரங்கள்: கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களின் கோர்ட் வளாகங்கள் உட்பட 5 இடங்களில் பயங்கர குண்டு வெடிப்புகள் நடந்தன. கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1–ந் தேதி குண்டு வெடித்தது. இதுபோன்று, ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர், கேரள மாநிலம் கொல்லம், மலப்புரம் ஆகிய இடங்களில் உள்ள கோர்ட்டு வளாகங்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன[4].
- ஆந்திராவில் சித்தூர் மாவட்ட நீதிமன்ற வாகன காப்பகத்தில்4.2016-ல்[5],
- கேரளாவில் கொல் லம் தலைமை குற்றவியல் நீதி மன்ற வாகன காப்பகத்தில்6.2016-ல்,
- கர்நாடகா மாநிலம் மைசூரு நீதிமன்றத்தில்6.2016-ல்,
- ஆந்திராவில் நெல்லூர் நீதிமன்றத் தில்9.2016-ல்,
- கேரளாவில் மல்லபுரம் நீதிமன்ற கழிப்பறையில்11.2016-ல் என அடுத்தடுத்து தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்ப வங்கள் நடந்தன.
நீதி, நீதிமன்றம், முதலியவை எல்லாம் எங்களுக்கு துச்சம், நாங்கள் இந்நாட்டு சட்டங்களை மதிக்க மாட்டோம் என்பதை காட்டவும், பீதியைக் கிளப்புவும், இக்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன.
மைசூர் குண்டுவெடிப்பு, கைது, விசாரணை இத்தீவிரவாதிகளைக் காட்டிக் கொடுத்துள்ளது: மைசூரு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவினர் (என்ஐஏ) விசாரணை நடத் தியபோது, அனைத்து வெடிகுண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாகவும், அதே குற்றவாளிகள் மீண்டும், மீண்டும் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது[6]. மதுரையைச் சேர்ந்த சிலர் சதிச் செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து ‘தி பேஸ் மூவ்மெண்ட்’ என்ற அமைப்பின் பெயரில் துண்டு பிரசுரங்கள், பென் டிரைவ் உள்பட பல்வேறு தடயங்களும் தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்தன. அந்த அமைப்பு ‘அல்கொய்தா‘ தீவிரவாத அமைப்பின் பெயரின் ஆங்கில மொழியாக்கத்தில் இயங்கியது என்றும் விசாரணையில் தெரியவந்தது[7]. டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையில், மதுரையை மையமாகக் கொண்ட ஒரு தீவிரவாத கும்பல் குண்டுகளை வெடிக்க செய்தது தெரிந்தது. இதன்பேரில் கடந்த 3 நாட்களாக தேசிய புலனாய்வுப்படையினர் (என்ஐஏ) மதுரையில் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதில், –
- மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 4வது தெருவைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27),
- மதுரை புதூர் விஸ்வநாத நகரை சேர்ந்த சம்சும் கரீம் ராஜா (26) ஆகியோர் 28-11-2016 அன்று கைதாகினர்[8].
இவர்களது தகவலின்பேரில் தீவிரவாத கும்பலின் தலைவராக செயல்பட்ட மதுரை கரீம்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுலைமான் (23) என்ற சென்னையில் உள்ள TCS ஐடி நிறுவன கம்ப்யூட்டர் என்ஜினனியரையும் அன்றே, சென்னையில் தேசிய புலனாய்வுப்படையினர் கைது செய்தனர்[9]. இதுதவிர மதுரை புதூரை சேர்ந்த முகம்மது அயூப் (25) என்பவரும் சிக்கினார். அப்பாஸ் அலி, சம்சும் கரீம் ராஜா மற்றும் முகம்மது அய்யூப் ஆகியோரை மதுரை அருகே இடையபட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் வைத்து தேசிய புலனாய்வுப்படையினர் தொடர் விசாரணை நடத்தினர்.
© வேதபிரகாஷ்
02-12-2016
[1] தினத்தந்தி, மதுரையில் அல் கொய்த அடிப்படை இயக்கம் நடத்திய 3 தீவிரவாதிகள் கைது, பதிவு செய்த நாள்: திங்கள் , நவம்பர் 28,2016, 3:51 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , நவம்பர் 28,2016, 3:51 PM IST
[2] http://www.dailythanthi.com/News/State/2016/11/28155132/In-Madurai-The-basic-movement-Al-koyta–3-terrorists.vpf
[3] தினகரன், மதுரையில் மேலும் ஒரு அல்கொய்தா தீவிரவாதி கைது: தென் மாநிலங்களில் குண்டு வைக்க சதி திட்டம், Date: 2016-11-30@ 00:53:25
[4] தினத்தந்தி, மைசூரு கோர்ட்டு வளாக குண்டு வெடிப்பு: கைதான பயங்கரவாதிகள் 5 பேருக்கு 10 நாள் போலீஸ் காவல், மாற்றம் செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 01,2016, 4:33 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 01,2016, 4:33 AM IST.
[5] The Indian Express, Chittoor blast: NIA arrests, interrogates three Al-Qaeda suspects in Madurai, By Express News Service | Published: 28th November 2016 08:31 PM |
Last Updated: 29th November 2016 08:12 AM.
[6]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/article9400836.ece
[7] http://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2016/12/01043306/Mysore-Campus-Court-blast.vpf
[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=262467
[9] The Times of India, TCS techie who ‘plotted’ to target PM Narendra Modi held in Tamil Nadu, TNN | Updated: Nov 29, 2016, 06.20 PM IST
Explore posts in the same categories: ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அடையாளம், அத்தாட்சி, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-உம்மா, சித்தூர், சுலைமான், ஜிஹாதி நேயம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், தீவிரவாத திட்டம், தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், தெலிங்கானா, தெலுங்கானா, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, தொலைபேசி, நாகூர், நீதி மன்றம், நெல்லூர், மத-அடிப்படைவாதம், மதரசா, மதரஸா, மனித நேயம், மல்லபுரம், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், மூளை சலவை, மூளைசலவை, மைசூரு, வன்முறை, வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், ஷஹீத், Uncategorizedகுறிச்சொற்கள்: அல் - உம்மா, அல் - கொய்தா, அல்-குவைதா, இஸ்லாம், என்.ஐ.ஏ, குண்டு, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, சித்தூர், சுலைமான், சென்னை, தீவிரவாதம், நெல்லூர், மதுரை, மல்லபுரம், மைசூர்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்