யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (1)

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (1)

1993 Mumbai blast- who pay for the victims.1

1993 Mumbai blast- who pay for the victims.1

மார்ச். 2013 – சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு: மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு, மார்ச் 12–ந்தேதி அன்று தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. 12 இடங்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.  இது தொடர்பான வழக்கை விசாரித்த தடா கோர்ட்டு கடந்த 2006–ம் ஆண்டில் தீர்ப்பு கூறியது. மொத்தம் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தீர்ப்பில் யாகுப் மேமனின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. யாகுப் மேமன், குண்டு வெடிப்பில் முக்கிய சதிகாரனான தேடப்படும் குற்றவாளி டைகர் மேமனின் சகோதரர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மரண தண்டனை பெற்ற 10 பேர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.2

1993 Mumbai blast- who pay for the victims.2

பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது – சுப்ரீம் கோர்ட் ஆதாரங்கள் மூலம் அறிவித்தது (மார்ச்.2013): மேலும், குண்டு வெடிப்பை நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. குண்டு தயாரிக்கவும் மிகவும் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை கையாளுவதற்கும் அவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.க்கும் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை பெற்றுள்ள யாகுப் மேமன் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், அயூப் மேமன் ஆகியோர் தாக்குதல் நடத்துவதற்கு அம்பு எய்தவர்களாக இருந்துள்ளனர். மற்றவர்கள் அம்புகளாக இருந்துள்ளனர் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.3

1993 Mumbai blast- who pay for the victims.3

போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் (மார்ச்.2013): போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது[1]. குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் வைத்து தாவூத் இப்ராகிம் மற்றும் பலரால் சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஏ.கே.56 ரக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆயுத சட்டத்தின் கீழ் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் கடுமையான தடா சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருந்த கிரிமினல் சதி குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சஞ்சய் தத்தும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார்.  தற்போது கோர்ட் சஞ்சய் தத்தின் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையை 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்துள்ளது. இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டுதான், இப்பொழுதைய தீர்ப்பைப் படித்தறிய வேண்டும், விவாதிக்க வேண்டும். ஆனால், செக்யூலரிஸ போர்வையில், காங்கிரஸ்காரர்கள் தங்களது வாய்களைத் திறந்து உளாறியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

1993 Mumbai blast- who pay for the victims.4

1993 Mumbai blast- who pay for the victims.4

காங்கிரஸ் தலைவர்கள் யாகுப்பின் தூக்கிற்கு வருத்தப் பட்டது (ஜூலை.2015): யாகுப் மேனன் 30-07-2015 அன்று காலை தூக்கிலிடப்பட்டதும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங், “அரசு இதே போல, மற்ற எல்லா தீவிரவாத வழக்குகளிலும் ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்”, என்று டுவிட்டரில், தனது கருத்தை வெளியிட்டார்[2]. பல நேரங்களில் விசித்திரமாக பேசி வரும் இவர், இதே வேகத்தை மற்ற வழக்குகளிலும் காட்ட வேண்டும் என்று கமென்ட் அடித்தார்[3]. சசி தரூர், “அரசு ஒரு மனிதனை தூக்கிலிட்டது குறித்து வருத்தமடைகிறேன். அரசு மூலம் நடக்கும் கொலைகள் நம்மையும் கொலைகாரர்களாக்கி விடும். கொடும் செயல் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்காக அதற்குக் காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த தண்டனை காரணமாக அத்தகைய செயல் தடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. மாறாக, மேலும் அத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கவே அது வகை செய்கிறது. தீவிரவாதத்தை படைகளைக் கொண்டுதான் ஒடுக்க வேண்டும். மரண தண்டனை மூலம் அல்ல”, என்றெல்லாம் கமென்ட் அடித்தார்[4]. ஒருவேளை தனது மனைவி மர்ம மரணத்தில் / கொலை என்று சந்தேகிக்கப்படும் வழக்கில் தான் சம்பந்தப் பட்டிருப்பதால், அவ்வாறு பேசினாரா என்பது அவருக்குத் தான் தெரியும்.

1993 Mumbai blast- Dwaood, Tiger Memon, Dossa, Javed Patel

1993 Mumbai blast- Dwaood, Tiger Memon, Dossa, Javed Patel

ஜூலை 30.2015 காலை தூக்கிலிடப்பட்ட நாள்: உச்ச நீதிமன்ற அமர்வு அந்த நேரத்தில் கூடி, மரண தண்டனையை நிறுத்தக் கோரும் குற்றவாளியின் மனுவை ஆய்வு செய்தது. ஆனால் “மிகுதியான அளவு காலஅவகாசம் அளிக்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டே மேமனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது” எனக் கூறிய நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர். இதனால் காலை 6.35 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார். யாகூபின் அண்ணன் சுலைமான் உடலைப் பெற்றுக்கொண்டு விமானம் மூலம் மும்பைக்கு எடுத்துச் சென்றார். மாஹிமில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிகையாக, மும்பை முழுவதும் சுமார் 450 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய மும்பை பகுதியான மாஹிம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். நேற்று மாலை இஸ்லாமிய முறைப்பட்டி யாகூபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மும்பையில் இவர்களது குண்டுவெடிப்பில் பலியான 257 ஆத்மாக்களும் சாந்தியடைந்தன என்று அவர்களது உறவினர்கள் கூறிக்கொண்டார்கள். இதை ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை, மனித உருமைகள் பேசுபவர்களையும் கண்டுகொள்ளவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்[5] கூறும்போது, “யாகூப் மேமன் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் சரண் அடைந்தார் என உளவுத் துறை (ரா) முன்னாள் அதிகாரி பி.ராமன் தான் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். மேலும் முக்கியக் குற்றவாளி அல்லாத மேமனுக்கு மரண தண்டனை விதிப்பது சரியல்ல என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவரை தூக்கிலிட்டிருப்பது சரியல்ல” என்றார். [இதை ஏற்கெனவே அதிகாரிகள் மறுத்துள்ளனர், ஏனெனில் அதிகாரிகளுக்கு அத்தகைய பேரம் பேசவும், எந்தவித தண்டனை குறைப்பு உத்திரவாதம் கொடுக்கவும் சட்டப்படி உரியையும், அதிகாரமும் இல்லை. எனவே, வழக்கம் போல கம்யூனிஸ்டுகள், இறந்தவரின் கருத்தைக் குறிப்பிட்டு குழப்ப முயற்சி செய்கின்றனர்]

 

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளில் ஒருவரை தூக்கிலிடுவது அவருக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி யாகும். இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். [இவரது கருத்தும் அர்த்தமில்லாதது, பல ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கு, முறைப்படி கருணை மனு, அது மறுக்கப்பட்டது, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனு என்று எல்லாவற்றையும் விசாரித்து தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் டுவிட்டரில் தெரிவிக்கப்படும் கருத்துகளை வைத்து எந்த தீர்மானமும் எடுக்க முடியாது].

© வேதபிரகாஷ்

02-08-2015

[1] இதனை செக்யூலரிஸவாதிகள், யாகுப்-ஆதாரவாளர்கள் கண்டு கொள்வவதில்லை.

[2] Congress general secretary Digvijaya Singh fired the first salvo, saying that the BJP- led government should show “similar commitment” in all cases of terror as it showed in the case of Yakub Memon. “I hope similar commitment of the government and the judiciary would be shown in all cases of terror, irrespective of their caste, creed and religion,” he said in a tweet following Memon’s execution in the Nagpur central jail on Thursday morning (30-07-2015).

[3] http://indianexpress.com/article/india/india-others/show-same-urgency-in-other-terror-cases-digvijaya-singh-on-yakub-memons-hanging/

[4] Party colleague and former union minister Shashi Tharoor said he was “saddened” by Memon’s execution.”Saddened by news that our government has hanged a human being. State-sponsored killing diminishes us all by reducing us to murderers too,” Tharoor tweeted. “There is no evidence that death penalty serves as a deterrent, to the contrary in fact. All it does is exact retribution, unworthy of a government,” the Thiruvananthapuram parliamentarian said.

[5] http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/article7484832.ece

Explore posts in the same categories: 1993, அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இப்ராஹிம், உயிர், உரிமை, கருணை, கருணை மனு, கொலை, கொலை செய்வது, கொலை வெறி, தாவூத் இப்ராஹிம், மனித உயிர், மும்பை, மும்பை குண்டு, மும்பை குண்டுவெடிப்பு, மேமன், யாகுப் மேமன், யாகூப் மேமன்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: