பாபர் மசூதியை இடித்தது மத வெறிச்செயல்: சிதம்பரம்!

பாபர் மசூதியை இடித்தது மத வெறிச்செயல்: சிதம்பரம்

First Published : 04 Nov 2009 01:50:37 AM IST
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=14…

Chidambaram attended JIH meeting 2009-3

உள்துறை அமைச்சர் பொதுக்குழுவில் கலந்து கொள்வது: தேவ்பந்த் (உ.பி.), நவ. 3: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது மத வெறிச்செயல் என்றும் மிகக்கேடானது என்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.  தேவ்பந்தில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் ஜாமியாத் உலேமா-ஐ-ஹிந்த்தின் 30வது பொதுக்குழுவில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று சிதம்பரம் பேசியதாவது:

வகுப்புவாதம்: வகுப்புவாதம் எந்த வகையில் உருவெடுத்து வந்தாலும் அது வருந்தத்தக்கது, கண்டிக்கத் தக்கது. அதனால் துயரம்தான் மிஞ்சும். பெரும்பான்மை சமுதாயத்தினரின் மிக முக்கிய கடமை சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு தருவதாகும். மதத்தின் பெயரால் வன்முறைப் பாதையை கையாள்வதும் வருந்தத்தக்க ஒன்றே. பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த ஆண்டில் தேவ்பந்த்தில் உள்ள இஸ்லாமிய நிறுவனம் கட்டளை பிறப்பித்தது. இதை முஸ்லிம்கள் மட்டும் அல்ல நற் சிந்தனைகொண்ட அனைவருமே பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான குரல் அனைவரிடமும் ஓங்கி ஒலிக்க வேண்டும். மோசமான வகுப்புவாதம் என்பது வகுப்பு மோதலை கட்டவிழ்த்து விடுவதாகும். ஒரு லட்சியத்தை அடைவதற்காக வன்முறையையும், வன்முறைப் பாதையையும், தேர்ந்தெடுப்பதை நாகரிக சமூகம் ஏற்காது. சட்ட ஆட்சியை கொண்டு நிர்வகிப்படுவதே நாகரிக சமூகம்.

Chidambaram attended JIH meeting 2009-2
Home Minister P. Chidambaram at the general session of the Jamiat Ulama-i-Hind in Deoband on Tuesday.

சிறுபான்மை-பெரும்பான்மையினர்: சிறுபான்மையினரை ஓரங்கட்டினால் அதனால் நாட்டுக்குத்தான் பேரிழப்பு என்பதை உணரவேண்டும். சிறுபான்மையினரை பெரும்பான்மை இனத்தவர் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பதே ஜனநாயகம் முன்வைக்கும் முக்கிய சட்டமாகும். இதை யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. தாமாகவே முன்வந்து நடைமுறைப் படுத்த வேண்டும்.இந்த அடிப்படையில் இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்படும் விஷயத்திலும், ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் விஷயத்திலும் இந்த சட்டத்தை முன்வைத்து வாதிடுகிறோம். இஸ்லாமை வேற்று மதமாக நாம் பார்க்கக்கூடாது. அது நமது சகோதர மதம். முஸ்லிம்கள் இந்தியாவின் குடிமகன்கள்.

இஸ்லாம் உள்ளிட்டபிரதான மதங்கள்  வளர்ச்சி அடைந்து வருகின்றன: இந்தியாவில் இஸ்லாம் உள்ளிட்ட பிரதான மதங்கள் இருப்பது மட்டும் அல்லாமல் அவை நன்கு வளர்ச்சி அடைந்து வருகின்றன என்பதால் நமக்குத்தான் பெருமை. பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்துக்கு எதிரி வகுப்புவாதம். நவீனத்தை எதிர்ப்பது வகுப்புவாதம். நாகரிக சமுதாயத்தையோ அல்லது மக்களுக்கு அரசியல் சுதந்திரம் கொடுப்பதையோ வகுப்புவாதம் ஏற்பதில்லை. ஒரு இடத்தில் சிறுபான்மை இனத்தவராக இருப்பவர்கள் வேறு இடத்தில் பெரும்பான்மை இனத்தவராக இருப்பர் என்பது நடைமுறையில் காணும் உண்மை. உதாரணம் பஞ்சாபில் உள்ள சீக்கியர்கள், காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள். அத்தகையோர் அங்கு வாழும் சிறுபான்மையினருக்கு துணை நின்று பாதுகாப்பு தரவேண்டும். பன்முகத்தன்மை கொண்ட சமூகமே நமது பாரம்பரியம். அதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். நமக்கு பலமாக நிற்பது பன்முகத்தன்மை கொண்ட சமூகம்தான் என்றார் சிதம்பரம்.

1. உள்துறை அமைச்சாராக இருந்து கொண்டு, ஒரு இஸ்லாமிய நிறுவன பொதுகுழுவில், இவ்வாறான சர்ச்சைக்குட்பட்ட விஷயங்களைப் பற்றி பேசுவது, தமது கருத்துகளைக் கூறுவது ஆச்சரொயமாக உள்ளது.

2. “26/11” நெருங்குவதால், இவ்வாறு பேசப் பணிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.

3. mb

4. s

5. h

Chidambaram attended JIH meeting 2009

Explore posts in the same categories: Uncategorized

குறிச்சொற்கள்: , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

One Comment மேல் “பாபர் மசூதியை இடித்தது மத வெறிச்செயல்: சிதம்பரம்!”

  1. vedaprakash Says:

    ஆஹா, லிபரானுக்கு முன்னமே இவ்வாறு பேசியிருப்பது, இப்பொழுதுதான் தெரிகிறது!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: