போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவி, சகோதரர் முதலியோர்களிடம் விசாரணை!

போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவி, சகோதரர் முதலியோர்களிடம் விசாரணை!

தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவுக்குப் பிறகு அமலாக்கத் துறை விசாரணை: தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவு (NCB) விசாரணை நடந்து வரும் நிலையில், அமலாக்கத் துறை (ED) சோதனை-விசாரணை தொடர்ந்து வருகிறது. அயல்நாட்டு எச்சரிக்கை மூலம், இக்கும்பல் பிடிபட்டிருப்பதால், அயல்நாட்டு தொடர்புகளும் கண்காணிப்பில் எடுத்து வந்து, அம்பந்த[ப் பட்ட அதிகாரிகள் தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர். வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில், ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீமிடம், இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் (ED) விசாரணை நடத்தினர். போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் அடைக்கப்பட்டுள்ளனர்[1]. அவர்கள், சட்ட விரோத பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்[2]. முதலில் ஒத்துழைப்பில்லாமல் இருந்தது என்று சொல்லப் பட்டது. வீட்டிற்கு சீல் வைக்கப் பட்டது, ஒட்டிய அறிக்கை தாயாரால் கிழிக்கப் பட்டது என்றும் செய்திகள் வந்தன. ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானுவிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்[3]. ஆனால், விவரங்கள் தெரியவில்லை.

ஜாபர் சாதிக் சகோதரர் சலீமிடம் விசாரணை: ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானுவிடம் வக்குமூலம் பெற்றப் பிறகு, அதன் அடிப்படையில், ஜாபர் சாதிக், சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், 23, என்பவரிடம், நேற்று முன்தினம் [21-05-2024], ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்[4] என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டாலும், அவையெல்லாம் ரத்தின சுருக்கமாகவே இருக்கின்றன. பணபறிமாற்றம் பற்றிய விவரங்கள் கேட்கப் பட்டது. நேற்றும் [22-05-2024] இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்[5]. அப்போது, வங்கி கணக்கு விபரங்களை சலீம் தாக்கல் செய்தார்[6]. அதில், சந்தேகப்படும்படியான பண பரிவர்த்தனைகள் குறித்து, அதிகாரிகள் கேட்டனர்[7]. வெளிநாடுகளில் இருந்து நன்கொடை என, நிதி அளிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்[8]. அந்த வெளிநாட்டு நபர்கள் யார், சலீமுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு[9], இலங்கையைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும் சலீமுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஏன்[10], ஜாபர் சாதிக்குடன் கைதாகி சிறையில் உள்ள சதானந்தம் வங்கி கணக்கிற்கு[11], பணம் அனுப்பி இருப்பது ஏன்[12], அது போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணமா என[13], அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டு, சலீமிடம் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது[14].

சலீம் கூட்டாளிகளுக்கு நிச்சயமாக சம்பந்தம் இருக்கத்தா செய்யும். இருப்பினும் விவரங்கள் தெரியவில்லை. இவையெல்லாம் எப்படி தமிழகத்தின் மூலம் நடந்தேறியுள்ளது என்று நினைக்கும் பொழுதும் அதிர்ச்சியாக உள்ளது. 15,000 கோடி இந்த போதை மருந்து கடத்தல் வியாபாரத்தில் புழங்குவதாகவும் செய்திகள் வந்துள்ளன. இருப்பினும், தமிழகத்தில், இதைப் பற்றி, சீரியஸாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்னும் அரசியல் தான் பேசப் பட்டு வருகிறது. ஆனால், போதை விசயமாக இளைஞர்கள் அடித்துக் கொள்வது, வன்முறையில் ஈடுபடுவது, போன்ற செய்திகள் அதிகமாகிக் கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

அமீனா பானு மழுப்பலாக பதில் அளித்துள்ளது: அப்போது, ‘உங்கள் கணவர் போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்வது எப்போது தெரியும். வெளிநாடுகளில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு எவ்வளவு தொகை வந்துள்ளது’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர்[15]. அது பற்றி தனக்கு தெரியாது என அமீனா பானு தெரிவித்துள்ளார்[16]. ‘உங்கள் கணவர் தினமும் வீட்டிற்கு வந்து விடுவாரா’ என்ற கேள்விக்கு, எப்போதாவது தான் வருவார் என்று கூறியுள்ளார். ‘இயக்குனர் அமீருக்கு 3.93 கோடி ரூபாயை உங்கள் கணவர் அனுப்பி உள்ளார். அதற்கான தகவல், ‘வாட்ஸாப்’பில் அழிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஜாபர் சாதிக் சிறையில் அடைக்கப்பட்ட பின் நடந்துள்ளது. ‘இதன் பின்னணியில் நீங்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது’ என, கேட்கப்பட்ட மேலும் பல கேள்விகளுக்கு அமீனா பானு மழுப்பலாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு, சைபர்-கம்ப்யூட்டர் நிபுணர்களுக்கு அனுப்பப் பட்டு, சோதிக்கப் படுமா, அவர்களது, மின்னணு சாதங்கள் எல்லாம் முறைப்படி சோதிக்கப் படுமா என்றெல்லாம் தெரியவில்லை. இடையிடையே நேரம் கொடுக்கப் படும் நிலையில், அத்தகைய ஆதாரங்களை எல்லாம் அவர்கள் எளிதாக அழித்து விடுவர் என்பது, பெரிய விசயமே இல்லை.

அப்துல் பாஷித் புஹாரிக்குசம்மன்: ஜாபர் சாதிக்கிடம், மார்க்க நெறியாளர் என, இயக்குனர் அமீரால் அறிமுகம் செய்யப்பட்ட அப்துல் பாஷித் புஹாரி என்பவருக்கும் அமலாக்கத் துறை அதிகாரிகள், ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்[17]. இதற்கிடையே, ஜாபர் சாதிக்கின் மற்றொரு சகோதரர் மைதீன், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தில் நடித்தார்[18]. அவர் வாயிலாக, இயக்குனர் அமீருக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது[19]. அந்த பணமும் போதை பொருள் கடத்தலில் சம்பாதித்தது என, கூறப்படுகிறது[20]. மைதீன் தலைமறைவாக உள்ளார். அவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். இவ்வாறு, பல வேலைகள் தாமதமாகவே சென்றுக் கொண்டிருக்கின்றன. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என்று காலம் / மாதங்கள் சென்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிப்பது: பொதுவாக விசாரணைக்கு அழைக்கப்படுபவர் அலுவலகத்துக்கு சென்றதும் அவர்களை உட்கார வைத்து, சட்டப்படி உள்ள பிரிவுகளை எல்லாம் எடுத்து கூறி விளக்கி வாக்குமூலம் பெறப்படும். அப்பொழுது விசாரிக்கும் அதிகாரிகள் உரிய ஆவணங்கள், மற்ற ஆதாரங்களை காண்பித்து கேள்விகளை கேட்பர், அதற்கு விசாரிக்கப் படுபவர் விளக்கத்தை கொடுப்பார். விசாரணை பொதுவாக சமூகமான முறையில் தான் சென்று கொண்டிருக்கும். சில நேரங்களில், சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் அடம் பிடிக்கின்ற வழக்கம் இருக்கிறது. விசாரணை நடந்த பிறகு, எழுத்து மூலம் வாக்குமூலத்தை பெற்ற பிறகு, அவர் ககையெழுத்து வாங்கப்படும். இரண்டு சாட்சிகளிடமும் கையெழுத்து வாங்கப் படும். அதன் நகலு கொடுக்கப் படும். கொடுத்த வாக்குமூலத்தில் உள்ள விவரங்கள் எல்லாம், நினைத்தால் நிச்சயமாக அந்த நகலை பெற்று அல்லது அவர்களுக்கு சாராம்ம்சங்களை வெளியிடலாம். குறிப்பாக நக்கீரன் போன்ற பெரிய புலி போல வேலை விசாரணை வல்லுனர்கள் மைனமாக இருப்பது வேடிக்கையாக தான் இருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-05-2024


[1] தினகரன், போதைப்பொருள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் ஜாபர் சாதிக் சகோதரரிடம் 6 மணி நேரம் விசாரணை: அமீனா வாக்குமூலத்தை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை, May 22, 2024, 1:20 am.

[2] https://www.dinakaran.com/narcotics_illegalmoney_transfer_jabersadiq_brother_investigation/

[3] தமிழ்.ஒன்.இந்தியா, ‛‛அமலாக்கத்துறையிடம் ஆஜரான ஜாபர் சாதிக்கின் சகோதரர்’’.. ரூ.2000 கோடி தொடர்பாக தீவிர விசாரணை, By Nantha Kumar R Updated: Tuesday, May 21, 2024, 12:59 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/ed-sends-summon-to-summon-to-jaffer-sadiqs-brother-for-appearing-on-enquiry-today-607457.html

[5] தமிழ்.நியூஸ்.18, போதைப் பொருள் கடத்தல் வழக்கு : ஜாபர் சாதிக் சகோதரரிடம் 3 மணி நேரம் விசாரணை!, FIRST PUBLISHED : MAY 21, 2024, 6:55 PM IST; LAST UPDATED : MAY 21, 2024, 6:55 PM IST.

[6] https://tamil.news18.com/tamil-nadu/jaffer-sadiqs-wife-appears-before-ed-quizzed-for-3-hours-1461549.html

[7] இ.டிவி.பாரத், ஜாபர் சாதிக்கின் சகோதரரிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை! – Jaffer Sadiq Case, By ETV Bharat Tamil Nadu Team, Published : May 22, 2024, 4:16 PM IST.

[8] https://www.etvbharat.com/ta/!state/chennai-ed-department-is-interrogating-jaffer-sadiq-brother-with-important-documents-in-the-drug-smuggling-case-tns24052204352

[9] தினத்தந்தி, போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை, தினத்தந்தி மே 21, 11:33 pm (Updated: மே 21, 11:3.

[10] https://www.dailythanthi.com/News/State/drug-trafficking-case-enforcement-officials-interrogate-zafar-sadiqs-sister-1106645

[11] மாலைமலர், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கின் தம்பி சலீம் ஆஜர், By Maalaimalar, 21 மே 2024 3:24 PM.

[12] https://www.maalaimalar.com/news/state/jaffer-sadiq-brother-appear-in-ed-office-719526

[13] தினமலர், போதை பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரிடம் விசாரணை, UPDATED : மே 23, 2024 06:17 AMADDED : மே 23, 2024 01:53 AM,

[14] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-jaffer-sadiq-brother-are-being-investigated-in-the-case-of-drug-smuggling–/3630096

[15] தினமலர், அமீருக்கு ரூ.4 கோடி கொடுத்தீர்களா? ஜாபர் சாதிக் மனைவியிடம் விசாரணை, UPDATED : மே 21, 2024 04:36 AMADDED : மே 21, 2024 04:36 AM

[16] https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-did-you-pay-rs-4-crore-to-aamir-interrogation-with-zafar-sadiqs-wife–/3628599

[17] தமிழ்.இந்து, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக ஜாபர் சாதிக் சகோதரரிடமும் அமலாக்க துறை தீவிர விசாரணை, Published : 22 May 2024 06:28 AM; Last Updated : 22 May 2024 06:28 AM.

[18] https://www.hindutamil.in/news/crime/1252028-ed-enquires-jaffer-sadiq-brother.html

[19] புதியதலைமுறை, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: ஜாபர் சாதிக்கின் சகோதரரிடம் அமலாக்கத்துறை விசாரணை, Webteam, Published on: , 21 May 2024, 5:36 pm,

[20] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/ed-investigates-jaffer-sadiq-s-brother-over-illegal-money-transfer-case

Explore posts in the same categories: எச்சரிக்கை, எதிர்ப்பு, என்.சி.பி, எபிடிரின், ஏமாற்று வேலை, கடத்தல், கடத்தல் மிரட்டல், சட்டசபை, சட்டத்தை வளைப்பது!, சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், சட்டவிரோதம், சந்தேகம், சமத்துவம், சமரசப்பேச்சு, சமரசம், சிம், சிம் கார்ட், சிறுபான்மையினர், சிறைச்சாலை, சிறையில் அடைப்பு, ஜாபர், ஜாபர் சாதிக், ஜாமீன் மறுப்பு, தப்லீக், தமிழக அரசு, தமிழ் முஸ்லிம், தமிழ் முஸ்லீம், திமுக, தியாகம், திருடு, திருட்டு, திருமா வளவன், திறனாய்வு, நடவடிக்கை, நட்பு, நான் தான் கடவுள், நிதி, பணம், பணி, பிலால், பிள்ளை, புகாரி, புகார், புஹாரி, போதை, போதை கடத்தல், போதை தடுப்பு, போதை மருந்து, போதை மருந்து தயாரித்தல், மதம், மதவாதம், மனித நேயம், மயக்கம், மருந்து, மர்மமான வியாபாரம், மிரட்டல், முகமது சலீம், முறையீடு, முஸ்லிம் அடிப்படைவாதம், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், மோசடி, ரம்ஜான், ரம்ஜான் நோன்பு, ராஜ துரோகம், வங்கி கணக்கு, வாதிப்பது, வியாபாரம், ஶ்ரீலங்கா

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

பின்னூட்டமொன்றை இடுக