நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (1)

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (1)

24-05-2023 இரவு மருத்துவமனையில் நடந்தது: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ஜன்னத் (29). இவர், மே 24-ம் தேதி அன்று இரவு பணியில் இருந்தார்[1]. அப்போது, இரவு 11.30 மணியளவில் திருப்பூண்டியைச் சேர்ந்த பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம், தன் உறவினர் சுப்பிரமணியன் என்பவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தார்[2]பாக, முதலில் சுப்பிரமணியனுக்கு என்ன பிரச்சினை, நடு இரவில் வந்த நோயாளிக்கு என்ன முதல் உதவி செய்ய வேண்டும், சிகிச்சை என்ன அளிக்கப் பட்டது பற்றி ஊடகங்கள் ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. அப்போது, அங்கு மருத்துவர் ஜன்னத் ஹிஜாப் அணிந்திருந்ததைப் பார்த்த புவனேஸ்வர் ராம், அரசுப் பணியில் இருக்கும்போது எப்படி ஹிஜாப் அணியலாம்,” அரசுப் பணியின்போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும்மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதாஉண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானாஎனக்குச் சந்தேகமாக இருக்கிறது?” ”, எனக் கேள்வி எழுப்பியதுடன், மருத்துவர் ஜன்னத்தை செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால், உறவினரின் உடல்நிலையை விட, இது தான் பெரிய பிரச்சினையாக தெரிகிறதா? அவர் வீடியோ எடுப்பதை மருத்துவர் ஜன்னத்தும் தன் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்[3]. அந்தப் பெண் மருத்துவர், “பெண்கள் பணியில் இருக்கும்போது அசிங்கமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு பெண் மருத்துவரை அவரின் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்,” எனச் சொல்லி அவரும் வீடியோ எடுத்திருக்கிறார்[4]. இந்த 2 காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.  அப்படியென்றால், ஜன்னத்திற்கும், அதுாான் முக்கியமாகப் பட்டது போலும்..

ஹிஜாபை கழட்டச் சொன்ன பிஜேபி நிர்வாகி[5]: முதலில் சுப்ரமணியனின் உடல்நிலையை மறந்து, இவர் இப்படி, இவ்விசயத்தில் ஈடுபட்டாரா என்பது நோக்கத் தக்கது. மருத்துவமனைக்கு வருபவர், தங்களது உடல்நிலை, சிகிச்சை, எந்த டாக்டரைப் பார்ப்பது, எங்கு செல்வது என்று தான் கவனமாக இருப்பார்களே தவிர மற்றவர்களைக் கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அது மாதிரி பிரச்சினை செய்யத்தான் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நோயாளியுடன் தான் வரவேண்டும் என்பதில்லை. நக்கீரன், “பெண் மருத்துவரிடம் ஹிஜாப்பை கழட்டச் சொல்லி வாக்குவாதம்; பாஜக பிரமுகர் கைது” என்றும், தினமணி, “ஹிஜாபை கழற்றச்சொல்லி பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி” என்றும் தலைப்பிட்டு செய்திகள் போட்டுள்ளன. இரண்டையும் இடதுசாரி-வலதுசாரி, பார்ப்பன எதிர்ப்பு-ஆதரவு, திமுக-அதிமுக, இந்துவிரோதம்-ஆதரவு என்று எப்படியெல்லாம் வகைப் படுத்தினாலும், ஊடகக்காரர்கள் தாங்கள் இதைத்தான் சொல்லவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். அதாவது, பிஜேபி மத-அரசியல் மூலம் தமிழகத்தில் காலூன்ற முயல்கிறது, அதற்கான வேலைகளை செய்து வருகின்றது என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. பிஜேபிகாரர்களுக்கு அந்த அளவுக்கு நெளிவு-சுளிவு எல்லாம் தெரியாது, வெளிப்படையாக இந்துத்துவம், “பாரத் மாதா கி ஜே” என்று கிளம்பி விடுவார்கள். ஒரு சமய வேகும், இன்னொரு சமயத்தில் வேகாது.

25-05-2023 புவனேஸ்வர் ராம் கைது, ஆர்பாட்டம் முதலியன: மருத்துவர் நோயாளி பற்றியோ, சிகிச்சை பற்றியோ கவலைப் படாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சுவாகவாசமாக செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிகிறது. ஒரு மருத்துவர் போலவே அவர் நடந்து கொள்ளவில்லை. ஸ்டெதாஸ்கோப் கூட காணப்படவில்லை. அவருக்கு தான் ஒரு முஸ்லிம், ஹிஜாப் அணிந்து கொள்வேன் என்ற தோரணையில் பேசி, கத்தி, ஒருமையில் “போ” என்று கத்துவதும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் ராமை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மாரிமுத்து தலைமையில் 25-05-2023 அன்று முன்தினம் சாலை மறியல் நடந்தது. இந்நிலையில், மருத்துவர் ஜன்னத் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மதம் தொடர்பான குற்றம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் புவனேஸ்வர் ராம் மீது கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்[6]. கம்யூனிஸ்டுகள் அவரை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர்[7]. இந்நிலையில், புவனேஸ்வர் ராம் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 26-05-2023 அன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்[8]. இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. புவனேஸ்வர் ராம் கைது செய்யப் பட்டார், படவில்லை என்று முரண்பட்ட செய்திகளும் வந்துள்ளன[9]. இந்நிலையில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வர்ராம் உறவினரான சுப்ரமணியன் நேற்று காலை உயிரிழந்தார்[10].

25-05-2023 அன்று மருத்துவமனையில் நோயாளி இறப்பு: நோயாளி சுப்ரமணியன் எப்படி, எவ்வாறு, ஏன் உயிரிழந்தார் என்பது பற்றி யாரும் கவலப் பட்டதாகத் தெரியவில்லை. நடு ராத்திரியில் வந்த போது, உரிய சிகிச்சை அளிக்கப் பட்டதா, இல்லையா, யார் சிகிச்சை அளித்தனர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இருவரும் வீடியோ எடுத்தனர், இணைதளத்தில் போட்டனர், பரவியது எனூதான் செய்திகள் போட்டுள்ளனர். இதனிடையே போலீஸாரால் புவனேஸ்வராம் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து, ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜகவினர் சடலத்தை சாலையில் வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்[11]. மேலும் அரசு மருத்துவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுவிக்க கோரியும் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்[12]. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்[13].

© வேதபிரகாஷ்

30-05-2023


[1] தமிழ்.இந்து, அரசு பெண் மருத்துவர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்த பாஜக பிரமுகர் மீது வழக்குப் பதிவு, செய்திப்பிரிவு, Last Updated : 27 May, 2023 06:05 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/997226-government-female-doctor-hijab-issue.html

[3] விகடன், `ஏன் ஹிஜாப் போட்டுருக்கீங்க?’ – அரசு பெண் மருத்துவரிடம் பாஜக பிரமுகர் வாக்குவாதம்; போலீஸ் விசாரணை, Prasanna Venkatesh B  Published: 26 May 2023 1 PM; Updated: 26 May 2023 1 PM.

[4] https://www.vikatan.com/government-and-politics/politics/why-did-the-doctor-wear-hijab-bjp-leaders-controversy

[5] நக்கீரன், பெண் மருத்துவரிடம் ஹிஜாப்பை கழட்டச் சொல்லி வாக்குவாதம்; பாஜக பிரமுகர் கைது, Published on 26/05/2023 (18:56) | Edited on 26/05/2023 (19:04)

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/argument-female-doctor-asking-her-take-her-hijab-bjp-leader-arrested

தினமணி, ஹிஜாபை கழற்றச்சொல்லி பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி!

By DIN  |   Published On : 26th May 2023 09:25 AM  |   Last Updated : 26th May 2023 10:31 AM

https://www.dinamani.com/tamilnadu/2023/may/26/bjp-executive-arguing-with-female-doctor-wearing-hijab-4011902.html

[6] இ.டிவி.பாரத், ஹிஜாப் எதற்கு? – பெண் மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வழக்கு.., Published: May 26, 2023, 2:48 PM

[7] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/bjp-worker-threatened-thirupoondi-phc-islamic-woman-doctor-for-wearing-hijab/tamil-nadu20230526144840518518816

[8] இ.டிவி.பாரத், ஹிஜாப் எதற்கு? – பெண் மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வழக்கு.., Published: May 26, 2023, 2:48 PM

[9] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/bjp-worker-threatened-thirupoondi-phc-islamic-woman-doctor-for-wearing-hijab/tamil-nadu20230526144840518518816

[10] தந்தி டிவி, மருத்துவரின் ஹிஜாப் குறித்து கேள்வி கேட்ட பாஜக நிர்வாகிபரிதாபமாக பிரிந்த உயிர்... By தந்தி டிவி 26 மே 2023 8:55 PM

[11] https://www.thanthitv.com/latest-news/bjp-executive-questioned-about-doctors-hijab-tragic-loss-of-life-188742

[12] சமயம்.காம், நாகப்பட்டினம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்; ஹிஜாப் விவகாரத்தில் பாஜக நிர்வாகி கைது!, Madhumitha M | Samayam Tamil | Updated: 27 May 2023, 11:30 am

[13]  https://tamil.samayam.com/latest-news/nagapattinam/nagapattinam-thirupundi-government-primary-health-center-doctor-wearing-hijab-issue/articleshow/100544706.cms

Explore posts in the same categories: அச்சம், அடிப்படைவாதம், அடையாளம், அத்தாட்சி, அனுமதி, அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அழிப்பு, அழிவு, அவமதிக்கும் இஸ்லாம், ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உடை, எச்சரிக்கை, எதிர்ப்பு, சட்ட வாரியம், சட்டசபை, சட்டத்துறையினர், சட்டத்தை வளைப்பது!, சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், சட்டவிரோதம், சண்டை, சண்டை போடுவது, சரீயத், சரீயத் சட்டம், பர்கா, பர்கா போராட்டம், பர்தா, பர்தா அணிவது, பர்தா காக்கும் உடையா?, பர்தா மத-அடையாளமா?, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா, பாலியல், பாலியல் அடிமை, பாலியல் தொல்லை, பிஜேபி, பிஜேபி-முஸ்லிம், ஹிஜாப்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

பின்னூட்டமொன்றை இடுக