டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது!

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது!

06-12-2013

சென்டிரல் ரெயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி கூறியதாவது[1]: சென்டிரல் ரெயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவுவாயில்களிலும் உள்ள ‘மெட்டல் டிடக்டர்’ கதவு(வெடிகுண்டு கண்டறியும்) வழியாகவே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.  பயணிகள் உடைமைகளும் ‘ஸ்கேனர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பிளாட்பாரங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீசாரும் ரெயில் நிலையத்தில் ரோந்து சுற்றி வருகிறார்கள். பயணிகளோடு, பயணிகளாக மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். ரெயில்வே போலீசார் 250 பேரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், நாய் படையினர் உள்பட 350 பேர் 2 ஷிப்ட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

06-12-2013 முஸ்லிம்கள் போராட்டம்

டிசம்பர் 6ம் நாள் நினைவு தினமா, எதிர்ப்பு தினமா அல்லது தீவிரவாதிகளைத் தூண்டிவிடும் தினமா?: உதாரணத்திற்காக, சென்ட்ரல் பற்றிய செய்தி கொடுக்கப்பட்டது, ஆனால், இதே நிலைதான் மற்ற ரெயில்வே மற்றும் பேரூந்து நிலையங்களில். டிசம்பர் 6ம் நாள் மற்றும் அதற்கு முந்தைய தினங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, ஆனால், மாற்ற நாட்களில் சாதாரணமாக இருந்து விடுகிறார்கள். சில நேரங்களில் அவ்வாறான நாட்களில் வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து, அப்பாவி மக்களைக் கொன்று வருகிறார்கள். ஆகவே, தீவிரவாதிகள் அல்லது டிசம்பர் 6ம் தேதியில் பழி வாங்க வேண்டும் என்று கங்கணல் கட்டிக் கொண்டுள்ள முஸ்லிம்கள் இந்த உண்மையினை உணரவேண்டும். ஏனெனில், இவர்களது பிரச்சாரம், அத்தகைய ஜிஹாதி மற்றும் தீவிரவாத முஸ்லிம்களைத் தூண்டிவிடுவதாகும் என்பது தெள்ளத்தெரிந்த விசயமே, பிறகு ஏன் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்?

06-12-2013 முஸ்லிம்கள் போராட்டம்- எதற்கு

06-12-2013 மிரட்டல், பீதி, ஆர்பாட்டங்கள்: திண்டுக்கல்லில், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரையில்பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் மறியல் செய்ய முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்தனர்[2]. சென்னையில் கைது! பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்[3], பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடையடைப்புக்கு எந்த அமைப்பும் வேண்டுகோள் வைக்கவில்லையெனினும், சில ஆண்டுகளுக்கு முன் சில சமுதாய அமைப்புகளால் வைக்கப்பட்ட வேண்டுகோள் வழமையாக்கப்பட்டு, ஆண்டுதோறும் இந்நாளில் கடைகள் அடைக்கப்படுகிறது[4], இப்படி செய்திகள் தொடர்கின்றன.

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013

திண்டுகல்-மதுரையில்போலீஸ்பாதுகாப்பு: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,200 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில்கள், மசூதிகள் உள்ள பகுதியில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும் ரெயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். ரெயில் தண்டவாள பகுதியிலும், பார்சல் அலுவலகங்கள் உள்ள பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகரின் எல்லைப் பகுதியில் நுழையும் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி பஸ்நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.06-12-2013

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013

பொது  அமைதியை  குலைக்க  சதித்திட்டம்  தீட்டுவதாக  ரகசிய  தகவல்: திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் திண்டுக்கல்–தாடிக்கொம்பு ரோடு பி.வி.தாஸ் காலனி அருகில் உள்ள பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருந்து பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது[5]. அவரது உத்தரவின்பேரில் திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்[6]. பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் செல்லாண்டியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக நிறுவனர் முபாரக் (வயது 34), ஜாபர் அலி (35), கணவா சையது (29), யாசிக் (24), ஷேக்பரீத் (24), அசனத்புரத்தைச் சேர்ந்த அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஹபிபுல்லா (28) என தெரியவந்தது[7].

Tindigul Muslims adopting part of IED

அகில  உலக  இஸ்லாமிய  முன்னேற்ற  கழக  மாவட்ட  தலைவர்  ஹபிபுல்லா  முதலியோர்  சிறையில்  அடைப்பு: அவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், அரசின் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்தோடும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் செயல்பட சதித்திட்டம் தீட்டியதாக திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[8]. கைது செய்யப்பட்ட 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டு, 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வேதகிரி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Dindigul Muslims adopting part of IED technology

 ஆணிகளை  எறிந்து  பொதுமக்களை  கொல்லசதி:   மதுரை,   திண்டுக்கல்லில்   10 பேர்  கைது[9]: திண்டுக்கல்லில், பஸ்கள் மீது ஆணிகளை கொண்ட பைப்களை வீசி, பொது சொத்தை சேதப்படுத்தி, பொதுமக்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய 10 பேரை, மதுரை, திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் பகுதியில், டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர், நேற்று, சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் கும்பல் ஒன்றை சுற்றி வளைத்தனர். இதில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; எட்டு பேர் தப்பியோடினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அகில உலக இஸ்லாமிய கழகத் தலைவர் முபாரக், 34, ஜாபர்அலி, 35, கணவா சையது, 29, யாசிக், 28, சேக்பரித், 23, அபிபுல்லா, 28, என, தெரிந்தது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யவும், பொது சொத்துக்கு சேதப்படுத்தவும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் கைது செய்தனர்[10].

மதுரையில்  பெட்ரோல்  குண்டுவீசி,   அரிவாளால்  வெட்டி  ஒருவர்  கொல்லப்பட்டதற்கு  பழிக்குப்  பழியாக  சம்பவம்  நடந்தது  போல்  திட்டமிட்டவர்கள்  மதுரையிலும்  கைது: மதுரையிலும் 4 பேரை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஷேக்முகமது,19, கல்லூரி மாணவர் தாகா முகமது, 20, தெற்குவாசல் மீன்வியாபாரி நசீர்,22, நெல்பேட்டை மீன்வியாபாரி சம்சுதீன், 25, கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று திண்டுக்கல்லில் நடந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு செல்ல முடிவு செய்திருந்தனர். செல்லும் வழியில், திண்டுக்கல் நகர் பகுதியில், மக்கள் கூடும் இடங்களில், பஸ் ஓட்டி வரும் டிரைவர்கள் மீது ஆணிகளை கொண்ட “பைப்’களை வீசி, விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர். அங்கு முடியாதபட்சத்தில், மதுரை அவனியாபுரம் “ரிங்’ ரோட்டில் திட்டத்தை நிறைவேற்ற இருந்தனர். காரணம், மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சம்பவம் நடந்தது போல், போலீஸ் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டிருந்தனர். இவ்வாறு, போலீசார் கூறினர்.

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது: இந்த வருடம் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

© 07-12-2013


[5] தினமணி, பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்த சதி செய்ததாக 6 பேர் கைது, By திண்டுக்கல், First Published : 07 December 2013 12:17 AM IST

[6] தினத்தந்தி, பாபர்மசூதிஇடிப்புதினத்தில்பொதுஅமைதியைகுலைக்கசதித்திட்டம்தீட்டிய 6 பேர்கைதுதிண்டுக்கல்லில்பரபரப்பு, பதிவு செய்த நாள் : Dec 06 | 08:51 pm

[9] தினமலர், ஆணிகளைஎறிந்துபொதுமக்களைகொல்லசதி: மதுரை, திண்டுக்கல்லில் 10 பேர்கைது, பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013,23:01 IST

Explore posts in the same categories: 1528ம் வருடத்தைய தஸ்ஜாவேஜ், இடிப்பு, இந்திய விரோதம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உடைப்பு, ஔரங்கசீப், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காயல்பட்டினம், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குரோதம், சங்கப் பரிவார், சங்கம், சட்டமீறல், சட்டம், சிதம்பரம், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, த.மு.மு.க, மதுரை

குறிச்சொற்கள்: , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

5 பின்னூட்டங்கள் மேல் “டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது!”

 1. vedaprakash Says:

  பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு
  திருச்சி, மதுரை, கோவை, நெல்லை மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
  கருத்துகள்
  14:58:14 Thursday 2013-12-05

  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=70643

  சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நான்கு மாவட்டங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தீவிரவாதிகள் சதி வேலையில் ஈடுபட கூடும் என தெரியவந்துள்ளது. மேலும் சென்னையிலிருந்து 10 கிலோ வெடிபொருட்களுடன் தென் மாவட்டங்களுக்கு சிலர் சென்றுள்ளதாகவும் அங்கு ரயில் மற்றும் பேருந்துகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து நான்கு மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில்நிலையம் மற்றும் விமானநிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

  திருச்சி ரயில் சந்திப்பில் போலீசார் குவிக்கப்பட்டு சோதனையும் தீவிரப்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கிய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.ஆர்.காந்தி சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சிசிடிவி கேமரா மூலமாக 24மனி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதே போன்று ஷீவில்லி புத்தூர் ஆண்டாள் கோவிலில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, கோவிலை சுற்றிலும் ஏகே47 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர். பக்தர்கள் அனைவரும் மெடல் டிடக்டர் சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். பொது இடங்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்டால் உடனடியாக கண்காணிப்பு அறைக்கு தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 2. vedaprakash Says:

  டிசம்பர். 6: பாபர் மசூதி இடிப்பு தினம் குறித்து பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வின் சிறப்பு பேட்டி
  வெள்ளி, 6 டிசம்பர் 2013( 18:46 IST )
  http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1312/06/1131206033_1.htm

  டிசம்பர். 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி
  மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நமது வெப்துனியா ஊடகத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி.

  இன்று டிசம்பர். 6 – பாபர் மசூதி இடிப்பு நாள், பாபர் மசூதி இருக்கும் இடம் – ராமர் பிறந்த இடம் என்கிற கருத்தின் வரலாற்று பின்னணி என்ன?

  ராமர் பிரேத்தா யுகத்தில் பிறந்ததாக சொல்லுகிறார்கள். த்ரேத்தா யுகம் என்பது பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலகட்டமாகும். இன்றைய உத்தர பிரதேச மாநிலத்தின் பைசாபாத் மாவட்டத்தில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதை நான் சொல்லவில்லை.

  அயோத்தி மகாத்மியம் என்ற நூல் இருக்கிறது. அந்த நூலில் தசரத மன்னனுடைய நான்கு புதல்வர்களும் கெளசல்யாவின் வீட்டில் பிறந்ததாகச் சொல்கிறார்கள். பாபரி மஸ்ஜித் இருக்கின்ற இடத்திற்கு பல மீட்டர்கள் தூரத்தில்தான் தற்போதும் கெளசல்யா பவன் இருக்கிறது. ஆக பாபர் மசூதி உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று சொல்வது சரியாக இருக்க முடியாது. அதுமட்டுமல்ல ராமர் பெருமானுக்கு மிகப்பெரிய பிரம்மாண்டமான ஆலயத்தை விக்ரமாதித்தன் கட்டினார். அந்த ஆலயத்தைத்தான் இடித்துவிட்டு அங்கு பாபரால் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று சொல்கிறார்கள். இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

  உதாரணமாக சொல்லவேண்டுமானால், சமஸ்கிருத மொழியிலிருந்த ராமாயணத்தை ராமச்சந்திரமணாஸ் என்று ஹிந்துஸ்தானி மொழியில் மொழிபெயர்த்தவர் துளசிதாசர். அவர் அந்த அயோத்தி நகரத்தைச் சார்ந்தவர்தான். அந்த காலகட்டத்தில் நடந்த பல நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் குறிப்பிடுகிறார். தன்னுடைய காப்பியத்தின் நாயகனான ராமருடைய கோவிலை பாபர் படையெடுத்து வந்து இடித்தார். அங்கே ஒரு பள்ளிவாசலை கட்டினார் என்று ஒரு குறிப்பைக் கூட பார்க்க முடியவில்லை. கோவில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதாக சொல்லப்பட்ட காலகட்டத்தில் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கும் அந்த பகுதியிலே வசித்து வருகிறார். அவர் பாபர் ஆட்சியைப் பற்றி பல விமர்சனங்கள் செய்திருக்கிறார். ஆனால் ராமருக்கு கட்டப்பட்ட ஆலயத்தை பாபர் இடித்தார் என்று எந்த விமர்சனத்தையும் அவர் வைக்கவில்லை.

  பாபர் எப்படிப்பட்ட ஒரு ஆட்சியாளராக இருந்தார் என்று சொன்னால் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயிலியே உன்னுடைய மக்களில் பெரும்பாலானோர் மாட்டிறைச்சி உண்பதை விரும்பவில்லை. எனவே நீ மாட்டிறைச்சி உண்ணக்கூடாது. ஆலயங்களை இடிக்கக்கூடாது என்று உயில் எழுதியிருக்கிறார். அந்த உயில் இப்போதும் டெல்லி தேசிய அருங்காட்சியத்திலே வைக்கப்பட்டுள்ளது. இப்படியாக பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். இல்லாத ஒரு ஆலயத்தை இடித்துவிட்டு கட்டப்பட்டதுதான் பாபரி மஸ்ஜித் என்பது சங்பரிவார் அமைப்புகள் இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்காக உற்பத்தி செய்த ஒரு பொய்யான தகவல் என்பதுதான் எனது கருத்து.

 3. vedaprakash Says:

  பாபர் மசூதி இடிப்புக்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்: சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தல்
  By Web Dinamani, புது தில்லி
  First Published : 06 December 2013 03:49 PM IST
  http://dinamani.com/latest_news/2013/12/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE/article1931681.ece

  பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்பி நரேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது பேசிய அக்கட்சியைச் சேர்ந்த எம்பி நரேஷ் அகர்வால், பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்த தினம் கருப்பு தினம் என்றும், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 4. vedaprakash Says:

  மிரட்டல் கடிதம் எதிரொலி : ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு
  கருத்துகள்
  00:11:08 Friday 2013-12-06
  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=70667

  சென்னை: வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தின் எதிரொலியாக முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமின்றி புறநகர் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட தமிழகத்தின் முக்கிய ரயில்நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையின் வெடி குண்டு அகற்றும் படையினரும், சிறப்பு காவல் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளையும், அவர்கள் உடைமைகளையும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். ரயில்வே பாலங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ரயில்நிலையத்தில் டிசம்பர் 6ம் தேதி குண்டு வெடிக்கும் என்று சில நாட்களுக்கு முன்பு மிரட்டல் கடிதம் வந்தது. எனவே முக்கிய ரயில்நிலையங்கள் மட்டுமின்றி புறநகர் ரயில்நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: