இஸ்லாம், சூதாட்டம், கிரிக்கெட்: எப்படி நம்பிக்கையாளர்கள் ஈடுபடுகின்றனர்?

இஸ்லாம், சூதாட்டம், கிரிக்கெட்: எப்படி நம்பிக்கையாளர்கள் ஈடுபடுகின்றனர்?

பொதுவாக முஸ்லீம்கள் ஒழுங்கு, ஒழுக்கம், நன்னடத்தை, நன்னெறி என்றெல்லாம் வரும்போது, இந்த உலகத்தில் அவர்கள்தாம் ஒட்டு மொத்தமாக அத்தகைய குணங்களை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளவர்கள் போல வியாக்யானம் அளிப்பர், பேசுவர், எழுதுவர். ஆனால், ஏதாவது ஒழுங்கீனம், ஒழுக்கமின்மை, கெட்ட நடத்தை, தீயநெறி என்றெல்லாம் என்று வரும்போது, அத்தகைய காரியங்களில் முஸ்லீம்கள் ஈடுபடும்போது, அமைதியாக இருப்பார்கள், சப்பைக் கட்டுவார்கள் அல்லது முஸ்லீம்கள் என்பதால்தான், அத்தகைய செய்திகள் வருகின்றன என்றெல்லாம் கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். இந்திய கிரிக்கெட் வீரர் அஸாருத்தீன் வசமாக மாட்டிக் கொண்டபோது[1], தான் முஸ்லீம் என்பதால்தான், இப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றார். அப்பொழுதுதான், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு, ஒருவர் தம்மைக் காத்துக் கொள்ள அத்தகைய வாதத்தை வைக்கிறார் என்று வெளிப்படையாக தெரிந்து கொண்டனர். ஏனெனில், இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று என்று ரசிகர்கள் வேறுபடுத்திப் பார்த்தது கிடையாது. ஜடேஜா, மோங்கியா கூட அதே குற்றத்தில் மாட்டிக் கொண்டனர், அப்பொழுது அவர்கள் தங்களது மதத்தைக் குறிப்பிட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கவில்லை, அல்லது, அவர்கள்மீது மட்டும் வேறுவிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு சி.பி.ஐ.யிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டார்[2].

எழுகின்ற பல கேள்விகள்: இந்நிலையில் தொடர்ந்து பாகிஸ்தானியர் அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டு வருவது பல கேள்விகளை எழுப்புகின்றன. இஸ்லாம் சூதாட்டம், பணம் வாங்கிக் கொண்டு தோல்வி அடைவது அல்லது வெற்றிப் பெறுவது, அதற்கான முறையில் ஒழுங்காக ஆடாமல் போலியாக ஆடுவது, பந்துகளை வீசுவது, கேட்சுகளை விடுவது, சரியாக ஃபீல்டிங் செய்யாமல் இருப்பது………..முதலிய வேலைகளை எப்படி, ஏன், எதற்காக செய்கிறார்கள்? பணத்திற்காக என்றால், அவர்கள் ஆடுவது கிரிக்கெட் அல்ல, சூதாட்டம் தான். மேலும், ஹோட்டல்களில் நடிகைகளுடன் சேர்ந்து குடிப்பது, ஆடுவது, இருப்பது முதலியனவும் எம்மதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாத காரியங்கள். பிறகு எப்படி அவை நடக்கின்றன?

மஷார் மஜீத் போட்ட குண்டு: இப்பொழுது (நவம்பர் 30, 2010), மஷார் மஜீத் என்ற கிரிக்கெட் சூதாடி வஹாப் ரியாஸ், கம்ரன் அக்மல். உமர் அக்மல் மற்றும் இம்ரான் ஃபர்ஹத் முதலியோரும் “போலிப் போட்டி”யில் (match fixing) ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளான்[3]. செப்டம்பரில் 2010 இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் தவறுதலான பந்து வீச்சுகளுக்கு (no-balls) பணம் கொடுக்கப் பட்டதாக செய்திக வெளிவந்தன.  மொஹம்மது ஆசிஃப் மற்றும் மொஹம்மது அமீர் வேண்டுமென்றே, அத்தகைய தப்பான பந்து வீச்சில் ஈடுபட்டதாக தெரியவந்தது[4]. அதற்காக மஷார் மஜீத் என்பவனை பொலீஸார் கைது செய்தனர். மஷார் மஜீத் ஒரு ஹோட்டல் ரூமில் உட்கார்ந்து கொண்டு ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டிருக்கிறான். அவன் தான் குறைந்த பட்சம் ஏழு பாகிஸ்தான் வீரர்களுக்கு பணம் கொடுத்துள்ளாதாக கூறுகின்றான். செப்டம்பரில் 2010 – மூன்று வீரர்கள் – சல்மான் பட், மொஹம்மது ஆஸிஃப், விலக்கி வைக்கப்பட்டனர்[5].

பாகிஸ்தானிய கிரிக்கெட் – சூதாட்டமும், வன்முறையும்: வரவர சூதாட்டமும் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்களும் ஒன்றாகிவிட்டது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது கடத்தல், மிரட்டுதல் முதலிய வன்முறை செயல்களும் சாதாரணமாகவே இருக்கின்றன. ஜியோஃப் லாவ்சன் என்ற பயிற்சியாளர் 2007 முதல் 2008 வரை 15 மாதங்கள் பாகிஸ்தானியர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். அப்பொழுது, கேப்டன் தன்னை தனியாக அழைத்து, “குறிப்பிட்ட விடுக்கப்பட்ட வீரரை மறுபடியும் சேர்த்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், நாளைக்கு என்னுடைய மகளை கடத்திக் கொண்டு சென்றுவிடுவோம், பிறகு அவளைப் பார்க்கவே முடியாது என்று என்னை மிரட்டுகிறார்கள் என்று அழாதகுறையாக கூறிக்கொண்டார்[6], என்ற விஷயத்தை வெளியிட்டார். 1998 மற்றும் 2000 வருடங்களில் “போலியான போட்டிகள் என்ற வழக்கில் மாலிக் மொஹம்மது கய்யூம் என்ற நீதிபதி விசாரித்துவந்தார். அவர் ராஜா மற்றும் ஜோஜோ என்ற இரண்டு சூதாடிகளைப் பற்றிய விவரங்களை கேட்டார். அவர்கள் வாஸிம் அக்ரம் தந்தையை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். அபொழுது,  வாஸிம் அக்ரம் தனது மைத்துனிகளையும் சூதாட்டக்கூட்டம் மிரட்டியது என்று கூறினார். அதாவது, அவர்கள் சூதாடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள் என்பது தெரிந்தது.

தாவூத் இப்ராஹிம் கிரிக்கெட், சினிமா, ஜிஹாத்: தாவூத் இப்ராஹிம், 1993ல் மும்பை வெடிகுண்டு வழக்கில் சிக்கும் வரையில், ஷர்ஜாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க தவறாது வருவது வழக்கம். அவற்றிற்காக தாராளமாக ஸ்பான்ஸர் செய்வதும் வழக்கம். கிரிக்கெட் மற்றும் சினிமாகாரர்கள் தாவூத் இப்ராஹிமின் விருந்தினர்களகவே துபாய் மற்ற வளைகுடா நாடுகளில் தங்கியிருப்பது வழக்கம். கிரிக்கெட், சினிமாக்காரிகளுடன் ஜல்ஸா முதலியவை சேர்ந்துதான் நடக்கும். மும்பை திரை உலகை இன்றும் தாவூத் இப்ராஹிம் ஆட்டிப் படைப்பது தெரிந்த விஷயமே. பிறகு தனது மகளையே, ஜாவத் மியான்டட் என்ற கிரிக்கெட் வீரருக்கு 2005ல் திருமணம் செய்து கொடுத்தான். சொஹைப் அக்தர் சிறையில் இருக்கும்போது, தனது குழுவைப்பற்றி கூறியுள்ளார்.

பாகிஸ்தான்

கிரிக்கெட்காரர்களின் இஸ்லாம் பின்பற்றப்படும் முறை: பாகிஸ்தானில் நாத்திகர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை, ஆனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட நம்பிக்கையாளர்கள் நிறையவே இருக்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரகள் எல்லோருமே, கிரிக்கெட்டை விட இஸ்லாத்தை அதிகமாக நேசிக்கிறார்கள், பிரச்சாரம் செய்கிறார்கள், தப்லீக் ஜமாத்துடன் இணைந்து வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது. கிரிக்கெட் பிச்சிலேலேயே, விழுந்து வணங்குவது, தொழுகை புரிவது, மண்ணை முத்தமிடுவது, மெக்கா திசையை நோக்கி வணங்குவது, தாடியை நன்றாக வளர்த்துக் கொள்ளுதல், ஆகாசத்தைப் பார்த்தல், கைகளை உயர்த்துதல், முதலில் இடது பக்கம் பார்ப்பது, பிறகு மெதுவாக அப்படியே, வலது பக்கம் திரும்பிப் பார்ப்பது முதலிய செய்கைகளை தாராளமாகப் பார்க்கலாம். கிரிக்கெட் ஆடும் போது கூட அத்தகைய செய்கைகளை செய்வதுண்டு. ரம்ஜான் மாதத்தில் பட்டினிகூட இருப்பார்கள்.

பாப் உல்மர் பாகிஸ்தான் வீரர்களைக் கண்டித்தற்காக கொலை செய்யப்பட்டாரர? 2007ல் பாப் உல்மர் மர்மமான முறையில் ஹோட்டல் ரூமில் செத்துக் கிடந்தார். பாகிஸ்தான் உலகபோட்டியில் தோல்வியெடைந்ததற்காகத் தான், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று முதலில் கூறினர். ஆனால், பிறகு அவரது சாவைப்பற்றி பல காரணங்கள் முன் வைக்கப்பட்டன. அவர் தமது முஸ்லீம் கிரிக்கெட் மாணவர்களின் அளவிற்கு அதிகமான  மதக்கிரியைகளைத் தட்டிக் கேட்டதற்காகத்தான் இறந்து பட்டாரா என்பது பல காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது[7]. ஹோட்டல் பாத்ரூமில் நிர்வாணமாக அவர் பிணம் கிடந்தது[8]. ஜமைக்கா போலீஸார் பாப் உல்மர்  கழுத்து நெரிக்கப்பட்டுத்தான் கொலைசெய்யப்பட்டார் என்று உறுதி படுத்தினர்[9].

பாகிஸ்தானியனரின் சுய விமர்சனம்: நஸீம் ஆஸ்ரஃப் என்ற பாகிஸ்தானிய கிரிக்கெட் போர்டின் தலைவர் இஸ்லாத்திற்கும், கிரிக்கெட்டிற்கும் நடுவில் மத்தியஸ்தம் செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறியுனார்[10]. 2005லிருந்து பாகிஸ்தானியர் பொது இடங்களில் தொழிகை செய்வதையும், தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல்களில் இஸ்லத்தைப் பற்றி கூட்டம் போட்டு பேசுவதையும் செது வருகிறார்கள். பாகிஸ்தானிய கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் கிரிக்கெட்டைவிட, மதத்தில் தான் அதிகமாக விருப்பத்துடன் இருக்கிறார்கள் என்று அவர்களுடைய பயிற்சியாளர்கள் பலமுறை குற்றம் சாட்டியுள்ளனர். 2007ல் உலகக் கோப்பை போடியில் தோல்வியடைந்ததற்கு, பீ.ஜே.மீர் இன்ஸிமாமுல் ஹக்கை அவ்வாறு வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். 1999களில் காலித் ஹஸ்ஸன், அமீர் மீர் போன்ற கிரிக்கெட் எழுத்தாளர்களும் இதைப்பற்றி எழுத ஆரம்பித்தனர்.  வாசிம் அக்ரம் பிறகு வக்கார் யூனிஸ் கேப்டனாக வந்தவுடன், ஆட்டக்காரர்கள் கிரிக்கெட்டை விட, இஸ்லாத்தைப் பற்றி அதிகமாக  விவாதிக்க ஆரம்பித்து விட்டனர் என்று எடுத்துக் காட்டினர்.

இஸ்லாம் இத்தகைய காரியங்களை அனுமதிக்காது என்றால், அவர்கள் / முஸ்லீம்கள் அவற்றை செய்திருக்கக் கூடாது, தொடர்ந்து செய்யக்கூடாது. இல்லை, முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது. ஆனல், கடந்த ஆண்டுகளில் அவ்வாறு நடப்பது வாடிக்கையாகி விட்டது. இதில், தீவிரவாத கூட்டங்களுக்கும் தொடர்பு உள்ளது என்ற பேச்சும் அடிபடுகிறது. தீவிரவாதிகள், இலங்கை வீரர்களை குறிவைத்தபோது, அத்தகைய நிலையும் வெளிப்பட்டது. இன்றைய நிலையில், கிரிக்கெட் போட்டிகளுக்கு, அளவுக்கு அதிகமாக பாதுகாப்பு கொடுத்து, நடத்துகிறார்கள். ஆனால் கோடிகளில் இதிலும் ஊழல் நடக்கிறது. மக்களின் பணம் விரயமாகிறது.

வேதபிரகாஷ்

© 01-12-2010


[2] Indian Express, Wednesday, November 1, 2000, http://www.expressindia.com/ie/daily/20001101/isp01034.html

Explore posts in the same categories: இன்ஸிமாம்-உல்-ஹக், சீட்டாட்டம், சீட்டு, சூதாட்டம், சோயப் மாலிக், ஜாவத் மியான்டட், ஜியோஃப் லாவ்சன், தப்பான ஆட்டம், தலாக், தொழுகை, நன்னடத்தை நிபந்தனை, பந்து, பவுல், பீ.ஜே.மீர், போங்கு, பௌல், மங்காத்தா, முஸ்லீம்கள், முஹம்மது, முஹம்மது கான், வக்கார் யூனிஸ்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

3 பின்னூட்டங்கள் மேல் “இஸ்லாம், சூதாட்டம், கிரிக்கெட்: எப்படி நம்பிக்கையாளர்கள் ஈடுபடுகின்றனர்?”

  1. M. Nachiappan Says:

    கிரிக்கெட் சூதாட்டத்தில் மேலும் 4 வீரர்களுக்கு தொடர்பு
    பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2010,
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=137576

    லாகூர் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த 3 பேரையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங்கில் மேலும் 4 பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி

  2. M. Nachiappan Says:

    ஸ்பாட் பிக்சிங்கில் மேலும் 4 பாகிஸ்தான் வீரர்களுக்கு பங்கு: புக்கி மசார்
    புதன்கிழமை, டிசம்பர் 1, 2010, 13:26[IST] A A A Follow us on
    http://thatstamil.oneindia.in/news/2010/12/01/pakistan-players-spotfixing.html

    கராச்சி: கடந்த 3 மாதங்களுக்கு முன் ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் முக்கிய ஆளாக இருந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த புக்கி மசார் மஜீத். நேற்று அவர் மேலும் 4 பாகிஸ்தான் வீரர்களுக்கு மேட்ச் பிக்ஸிங்கில் பங்கு உள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட கேப்டன் சல்மான் பட், முஹம்மது ஆசிப், முஹம்மது ஆமிர் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    இது குறித்து பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் சேனல் கூறியிருப்பதாவது,

    எங்களுக்கு மசார் மஜீதிடம் இருந்து புதிய வீடியோ கிடைத்துள்ளது. அதில் அவர் உமர் அக்மல், வஹாப் ரியாஸ், கம்ரான் அக்மல் மற்றும் இம்ரான் பர்ஹத் ஆகியோர் தனக்கு ஸ்பாட் பிக்சிங்கில் உதவியதாகவும், அவர்களுக்கும் தான் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ஷஹித் அப்ரிடி, யூனிஸ் கான், அப்துல் ரசாக் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும், சயீத் அஜ்மல் ஒரு ஆன்மீகவாதி, அவரை பிக்சிங் வேலைக்கு உபயோகப்படுத்த முடியாது, அதைக் கூறினால் அவர் அதிர்ச்சி அடைந்து விடுவார் என்றும் மஜீத் கூறியுள்ளார்.

    மஜீத் மூத்த வீரர்களை விட்டுவிட்டு இளம் வீரர்களையே குறி வைத்ததாகவும் தெரிவி்த்துள்ளார் என்று அது கூறியுள்ளது.

    பாகிஸ்தான் தேர்வாளர்கள் வரவிருக்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் கம்ரன் மற்றும் இம்ரான் பர்ஹத் ஆகியோரை சேர்க்கவில்லை. ஆனால் உமர் அக்மலும், வஹாப் ரியாஸும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே இதுகுறித்து கம்ரன் அக்மல் கூறுகையில், மசார் மஜீத் விளையாட்டு வீரர்களுக்கு ஏஜென்ட்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: