“அல்லாஹ்” என்ற சொல்லுக்கான தடை செல்லாது, நீதிமன்றம் தீர்ப்பு!
“அல்லாஹ்” என்ற சொல்லுக்கான தடை செல்லாது, நீதிமன்றம் தீர்ப்பு
December 31, 2009, 6:49 pm மலேசியாஇன்று பிரிவு
http://www.malaysiaindru.com/?p=30170
“அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கான தடை சட்ட விரோதமானது: “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு உள்துறை அமைச்சு விதித்த தடையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது. அந்த வரலாற்றுப் பூர்வத் தீர்ப்பு கத்தோலிக்க தேவாலயத்திற்கு கிடைத்துள்ள தாமதமான கிறிஸ்துமஸ் அன்பளிப்பு ஆகும்.அந்தத் தடையை அகற்றுமாறு கோரி கத்தோலிக்க தேவாலயம் செய்து கொண்ட விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி லாவ் பீ லான், அமைச்சரின் உத்தரவு “சட்ட விரோதமானது, செல்லாது” என்று கூறினார். கத்தோலிக்க வார சஞ்சிகையான தி ஹெரால்டு “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்றும் அந்த சொல் இஸ்லாத்திற்கும் மட்டும் உரித்தானது அல்ல என்றும் அவர் சொன்னார். உள்துறை அமைச்சு இதற்கு முன்னர் விதித்திருந்த தடை அகற்றப்பட்டிருப்பதின் மூலம், அந்த கத்தோலிக்க வார சஞ்சிகையான தி ஹெரால்டும் மற்றும் இதர இஸ்லாம் அல்லாத வெளியீடுகளும் “இறைவன்” என்ற சொல்லுக்கு நேரடி மொழிபெயர்ப்பாக “அல்லாஹ்” என்ற சொல்லை தங்களது மலாய் மொழி வெளியீடுகளில் பயன்படுத்த முடியும்.
“அல்லாஹ்” என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவது அனைத்து மலேசியர்களின் அரசியலமைப்பு உரிமை என்றும் நீதிபதி லாவ் தமது தீர்ப்பில் கூறினார். என்றாலும் அந்த வழக்கின் விளைவுகளை கருத்தில் கொண்டு உள்துறை அமைச்சு மேல் நீதிமன்றங்களுக்கு முறையீடு செய்து கொள்ளும் சாத்தியம் உள்ளது.
நேற்று அந்த வழக்கு ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் விசாரிக்கப்படுவதாக இருந்தது. தமது முடிவை பரிசீலினை செய்வதற்குத் லாவுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் இன்றைக்கு அது தள்ளி வைக்கப்பட்டது.
தேசியப் பாதுகாப்பும் சமய சுதந்திரமும்: தேசியப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளைக் கருத்தில் கொண்டு அந்தத் தடையை விதித்தாக கூறிய உள்துறை அமைச்சு, “கடவுள்” என்ற வார்த்தைக்குப் பதில் இஸ்லாம் அல்லாத வெளியீடுகள் “அல்லாஹ்” என்னும் சொல்லைப் பயன்படுத்தினால் ஏற்படக் கூடிய குழப்பத்தை தடுப்பதும் அந்தத் தடையின் நோக்கம் என்று தெரிவித்தது. “ஒரே உண்மையான இறைவன்” என்னும் பொருளைக் கொண்ட “அல்லாஹ்” என்ற சொல் இஸ்லாத்திற்கு மட்டுமே உரித்தான சொல் என்றும் அந்த அமைச்சு வாதிட்டது.
அந்தத் தடையை நீதித் துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்து கொண்ட கத்தோலிக்க தேவாலயம் “இறைவன்” என்பதற்கு இஸ்லாத்திற்கு முந்திய காலத்திலிருந்து “அல்லாஹ்” என்ற சொல் பல இடங்களில் மத்திய கிழக்கிலும் கூடப் பயன்படுத்தப்பட்டதாக கூறியது. மலேசியாவில் சபாவிலும் சரவாக்கிலும் உள்ள பூர்வகுடி கிறிஸ்துவ மக்களிடையே “அல்லாஹ்” என்ற சொல் பரவலாக பயன்படுத்தப்படு வருவதாகவும் அது தெரிவித்தது. அந்தத் தடை கூட்டரசு அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ள சமயம் மற்றும் சமய நடைமுறை சுதந்திர கோட்பாடுகளுக்கு முரணாகவும் அமைந்திருப்பதாகவும் தேவாலயம் வாதிட்டது. தி ஹெரால்டு சஞ்சிகை நாட்டிலுள்ள 850,000 கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. “அல்லாஹ்” என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக அது தனது வெளியீட்டு அனுமதியை கடந்த ஆண்டு ஏறத்தாழ இழந்த நிலையை அடைந்து விட்டது. நான்கு மொழிகளில் வெளியிடப்படும் அது வாரத்திற்கு 14,000 பிரதிகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
மறுமொழியொன்றை இடுங்கள்