வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு!

வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு
First Published : 10 Nov 2009 12:33:38 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=152349&SectionID=130&MainSectionID=130&SEO

முஸôபர்நகர், நவ. 9: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது.
வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’ என்று தாரூல் உலூம் துணை வேந்தர் மெüலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார்.
வந்தே மாதரம் பாடிய முஸ்லிம்கள்: இதற்கிடையே மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் என்ற இடத்தில் மசூதி முன்னர் கூடிய முஸ்லிம்கள், வந்தே மாதரம் பாடலைப் பாடினர். முஸ்லிம்கள் மட்டுமின்றி மற்ற வகுப்பினரும் அவர்களுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தடையை மீறும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.

Explore posts in the same categories: மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், வந்தே மாதரம், வந்தே மாதரம் எதிர்ப்பது

One Comment மேல் “வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு!”

  1. vedaprakash Says:

    தினமணியில், மேற்கண்ட செய்திற்குக் கீழே ஒரு முகமதியரிமன் பதில் இவ்வாறு உள்ளது:

    “நாங்கள் இந்திய திராவிடர்கள் ,இனத்தால் திராவிடர்கள் .தேசதால்,இந்தியர்கள் ,மொழியால் தமிழர்கள் ,மததால் முஸ்லிம்கள் ,இதில் சிறிதும் மாறாதவர்கள் .இந்த ஆரிய கும்பல் போல் கைபர் ,போலன் ,கணவாய் ,வழியாக ஆடு மாடு களை,மேய்த்து கொண்டு நம் திராவிட நாட்டில் புகுந்த கும்பல் அல்ல நாங்கள் ,இந்த ஆரிய கும்பல் நம் இந்தியாவின் உள்ளே நுழையும் போது ஆடு மாடு ,இந்த ஆரிய கும்பலிடம் ,நாடு அரசு நம் திராவிடர்களிடம் ,அந்தோ பரிதாபம் ,இன்றோ நாட்டும் அரசும்,இந்த ஆரிய கும்பலிடம் .ஆடு மாடு களுடன் நம் திராவிட மக்கள் ,இப்படி ஏமார்ந்த நம்மை பார்த்து அந்நியன் என கூறும் அயோக்கிய கும்பல் தான் இன்று உள்ள ஆரிய கும்பல் ,
    By AbooAbdulRahmaan
    11/10/2009 1:40:00 PM


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: