சையது தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க–ஜிஹாத் கூட்டு – II
அமெரிக்க–இஸ்லாம் மற்றும் தாலிபனுடையத் தொடர்பு[1]: Syed Dawood Jilani / Syed daood Gilani / Daood Armani / Daood Gilani / David Jilani / David Jilani என்பவன் தான், டேவிட் கோல்மென் ஹெட்லி என்றே குறிப்பிடப்பட்டு இந்தியர்களை ஊடகங்கள் ஏமாற்றி வருகின்றன. ஜாஹிர் நாயக் போன்றவர்களும் இத்தகைய நவீனப் பூச்சு பூசப்பட்ட படித்த, நாகரிகமான, ஆங்கிலம் பேசும் இஸ்லாம் அடிப்படைவாத, தீவிரவாத, தாலிபன்களுடைய சித்தாந்த ஆதாரவாளர்கள் எனலாம். ஆனால் அத்தகைய அமெரிக்கர்களை அமெரிக்கப் பெயர்கள் அல்லது இந்தியப் பெயர்களில் குறிப்பிடப் பட்டு ஜிஹாதி அடையாளத்தை ஊடகங்கள் மறைக்கின்றன. தாவூத் ஜிகானி அமெரிக்கன், தஹவ்வூர் ஹுஸை ரானா கனடியன், ஜிஹாதி ரோஸ் அமெரிக்க நாட்டவள், அந்தக் காதலி அல்லது மனைவி மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவள் / ஃபைஜா அவுத்லாஹ் என்ற மொரொக்கா நாட்டு அழகியுடன் (A woman of Moroccan origin – Faiza Outalha), …………………என்றெல்லாம் குறிப்பிட்டு இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாதி-குண்டு குரூரங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். இவ்வாறாக தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் (Liberalization, Globalization and Privatization) தாலிபனைஸேஷன் (Talibanization), (American seculaization), இஸ்லாமைஸேஷன் (Islamization), ஒபாமைஸேஷன் (Obamization), ஒஸாமைஸேஷன் (Osamization) முதலிய வழிகளில் செயல்படுகின்றன.
அமெரிக்கா கூறுவது உண்மையா, பொய்யா? மும்பையில் தாக்குதல் நடத்த தீவிரவாதி ஹெட்லி திட்டமிட்டது பற்றி அவனது மூன்று மனைவிகளில் இரண்டு பேர் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளிடம் முன் கூட்டியே தகவல் தெரிவித்துள்ளனர்[2]. இதை இந்தியாவிடம் அமெரிக்கா தெரிவிக்கவில்லை என்று திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது. அவனிடம் அமெரிக்க அதிகாரிகளின் அனுமதியின் பேரில் இந்திய விசாரணை அதிகாரிகளும் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையின் போது ஹெட்லி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு உள்ளான். குறிப்பாக மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக இருந்த திட்டம் வகுத்துக் கொடுத்ததை ஒப்புக் கொண்டு உள்ளான். விசாரணைக்கு ஒத்துழைக்க அவன் சம்மதித்து இருப்பதால் இன்னும் பல திடுக்கிடும் தகவல்களை அமெரிக்க எப்பிஐ புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் வெளியிடவில்லை. எனினும் மும்பைத் தாக்குதலுக்கு முன்பு வெளியான சில முக்கிய தகவல்களை “நியூயார்க் டைம்ஸ்” பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.
ஃபைஜா அவுத்லாஹ் என்பவள் இந்தியாவிற்கே வந்துள்ளபோது ஏன் இந்திய உளவுதுறையினர் அறியவில்லை? டேவிட் ஹெட்லிக்கு மூன்று மனைவிகள். இவர்களில் ஒருவர் மொராக்காவைச் சேர்ந்தவர் – ஃபைஜா அவுத்லாஹ். இளம் வயதினரான இவர் ஹெட்லியின் தாக்குதல் திட்டம் பற்றி அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார். இந்த தகவல்களை ஹெட்லியின் மனைவி அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும் இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படவில்லை என்று தெரிகிறது. ஏனெனில் இந்த தகவல்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மறுத்து உள்ளது.தங்களது கூட்டாளி நாடான பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் கிடைத்து விடும் என்பதால் அமெரிக்க அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் விட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது பற்றிய தகவல்களையும் இந்தியாவுக்குத் தெரிவிக்கவில்லை என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் மைக் ஹாமர் வெளியிட்ட அறிக்கையில், ” தீவிரவாத தாக்குதல் பற்றிய தகவல்களை 2008ல் இந்தியாவுக்கு அவ்வப்போது தெரிவித்துக் கொண்டு தான் இருந்தோம். ஆனால் மும்பைத் தாக்குதல் பற்றிய நேரம் மற்றும் தாக்குதல் நடத்தப்போகும் இடம் பற்றிய தகவல் கிடைத்து இருந்தால் அதை முன்கூட்டியே இந்தியாவுக்கு தெரிவித்துத் தான் இருப்போம்‘ என்றார். இதற்கிடையில் ஹெட்லியின் அமெரிக்க மனைவியும் அவனைப் பற்றிய திடுக்கிடும் தகவல்களை பொது நலன் கருதி அமெரிக்காவின் எப்பிஐ யிடம் தெரிவித்ததாக நியூயார்க்கில் புலனாய்வுப் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஹெட்லியின் மனைவிகள் கூறிய புகார்கள் தொடர்பாக ஹெட்லி 2005ல் கைது செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகை செய்தி மேலும் கூறுகிறது.
அமெரிக்க உளவுத்துறையும், ஊடகத்துறையும்[3]: இது தவிர பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களுடன் ஹெட்லிக்கு இருந்த தொடர்பு பற்றி அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் இந்த தகவல் இந்தியாவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் “வாஷிங்டன்’ போஸ்ட் பத்திரிகையும் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமர் கூறுகையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் நம்பகமான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டோம். டேவிட் ஹெட்லி பற்றி தற்போது வெளியாகி இருக்கும் தகவல் பற்றி உறுதியாக தெரிந்து கொண்ட பிறகே கருத்து தெரிவிக்க முடியும். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுடனான அமெரிக்காவின் ஒத்துழைப்பு ஆக்கப்பூர்வமானது என்றார்.
அரைத்த மாவை அரைக்கின்றனவா அல்லது அமெரிக்க ஜிஹாதித்தனத்தை மறைக்க சதியா? தாவூத் ஜிலானி என்கின்ற டேவிட் ஹெட்லி கோல்மென் பற்றி இப்படி அவ்வப்போது அரைத்த மாவையே அரைக்கும் ஊடகங்களின் வேலை மர்மமாக இருக்கிறது. இப்பொழுது வெளிவரும் விஷயங்கள் எல்லாமே ஏற்கெனெவே தரிந்தது தான்[4]. மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் கோல்மேன் ஹெட்லி குறித்து அவரது மனைவி பலமுறை தகவல் அளித்தும் அவரை எப்.பி.ஐ., நழுவ விட்டுவிட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது, என்று ஊடகங்கள் இன்று கூறுகின்ரன (16-10-2010). ஆனால், வாகா வழியாக அவள் நடந்தே வந்தபோது[5] எப்படி யாரும் அறியாமல் இருந்தனர்? ஹெட்லி குறித்த தகவல்களை சேகரித்து வந்த “பிரோ பப்ளிக்கா” எனும் பத்திரிகை இத்தகவலை தெரிவித்துள்ளது. எப்.பி.ஐ., அதிகாரிகளிடம் ஹெட்லியின் மனைவி ஹெட்லி பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி குறித்து எப்.பி.ஐ., இதுவரை எந்த ஒரு கருத்தும், விளக்கமும் அளிக்கவில்லை.
தாவூத் ஜிலானியும், டேவிட் ஹெட்லியும்! அப்பப்பா, இந்த செக்யூலார் ஊடகவாதிகள் இருக்கிறார்களே சரியான பூடகவாதிகள், பாஷாண்டிகள்! தாவூத் ஜிலானி என்ற இஸ்லாமிய / ஜிஹாதி தீவிரவாதியை ஒரேயடியாக David Coleman Headley என்று குறிப்பிட்டு ஜாலங்கள் செய்கின்றனரே? மதத்தின் பெயரால் அப்பாவி, மக்களைத் திட்டம் போட்டுக் கொன்று குவித்த நெஞ்சில் ஈரமில்லா கயவர்களை ஏன் மற்றொரு பெயரில் மறைக்கவேண்டும்? டேவிட் ஹெட்லி என்றால் கிருத்துவர், தாவூத் ஜிலானி என்றால் முகமதியன் என்று செக்யூலார் மட-இந்தியர்களுக்குக் கற்றுத் தருகிறார்களா! இவர்கள் உண்மையிலேயே ஊடகத் தீவிரவாதிகள்! பத்திரிக்கைத் தீவிரவாதிகள்!! நாளிதழ்த் தீவிரவாதிகள்!!! தாவூத் ஜிலானி என்ற இஸ்லாமிய / ஜிஹாதி தீவிரவாதியை ஒரேயடியாக David Coleman Headley என்று குறிப்பிட்டு இந்தியர்களை ஏமாற்றி வருவது செல்யூலரிஸ மாயைத்தான்[6].
இருவரும் இந்தியாவிற்கு புதியவர்கள் அல்லர்: பாக்., பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, மும்பை தாக்குதலில் தொடர்பு கொண்டிருந்தானா என்று தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.,) விசாரிக்கத் துவங்கியுள்ளது[7]. ஹெட்லியும், தாகாவுர் ராணாவும் இந்தியாவில் பல இடங்களுக்கு குறிப்பாக மும்பை, டில்லி, புனே, லக்னோ, ஆக்ரா, கொச்சி, சூரத் மற்றும் ஆமதாபாத் நகரங்களுக்கு அடிக்கடி வந்திருக்கின்றனர். மேலும், புனேயிலுள்ள ஓஷா ஆசிரமத்துக்கு 2008ம் ஆண்டிலும், இந்த ஆண்டு மார்ச்சிலும் ஹெட்லி சென்றிருக்கிறான். மும்பை தாக்குதல் நடப்பதற்கு பல மாதங் கள் முன், 2007ல் தாஜ், டிரிடென்ட் ஓட்டல் களில் ஹெட்லியும், ஒரு விருந்தினர் மாளிகையில் ராணாவும் தங்கியிருந் துள்ளனர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகிலுள்ள பிரீச் கேண்டி பகுதியில் ஒரு பிளாட்டில் வாடகை கொடுத்து தங்கியுள் ளான் ஹெட்லி. அங்கு தங்கியிருந்தபடியே, பின்னர் தாக்குதல் நடந்த நான்கு இடங் களான தாஜ் ஓட்டல், டிரிடென்ட் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், நாரிமன் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சுற்றியிருக்கிறான். கசாப் ஒன்பது பயங் கரவாதிகளுடன் மும் பைக்கு வருவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகத்தான் ராணா மும்பையிலிருந்து கிளம்பியிருக் கிறான்.மும்பை தாக்குதல் நடந்த போது இருவரும் பாகிஸ்தானில் இருந்துள் ளனர்.இந்தத் தகவல்களை சேகரித்த தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ), கசாப் புக்கு இருவரையும் தெரியுமா என்று அவனிடம் விசாரித்து வருகிறது. கசாப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட மும் பைப் பகுதி போட் டோக்கள், வீடியோக் கள் ஹெட்லி கொடுத்தவைதானா என்றும் விசாரணை நடக்கிறது.மும்பைத் தாக்குதல் நடந்த போது இருவரும் பாகிஸ்தானில் இருந்தனர் என்ற தகவலுக்கு, பாகிஸ்தானிடமிருந்து இதுவரை எவ்வித மறுப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி மூணாறில் தங்கியது குறித்து விசாரணை[8]: மூணாறு : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, இரண்டு மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் மூணாறில் தங்கியிருந்த தகவலையடுத்து, புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலால், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய அமெரிக்காவைச் சேர்ந்த பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, அவனது நண்பர் ராணா, அவரது மனைவி சாம்ராய் ராணாவுடன் கொச்சியில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.டேவிட் ஹெட்லி குறித்து மும்பையில் மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தியபோது, இதே பெயரில் ஒருவர் மூணாறில் தங்கியிருந்தது தெரிந்தது.
டாடா கம்பெனிக்கு சொந்தமான “ஹைரேஞ் கிளப்’ விடுதியில் கடந்த செப்., 18, 19 2009ல் டேவிட் ஹெட்லி ஒரு பெண்ணுடன் தங்கியிருந்த மர்மம் என்ன?: இதையடுத்து புலனாய்வுத் துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தினர். மூணாறில் டாடா கம்பெனிக்கு சொந்தமான “ஹைரேஞ் கிளப்’ விடுதியில் கடந்த செப்., 18, 19 ல் டேவிட் ஹெட்லி என்பவர் ஒரு பெண்ணுடன் தங்கியுள்ளார். 2006ல் அமெரிக்காவில் பெறப்பட்ட பாஸ்போர்ட்டில் ஹெட்லியுடன் மனைவி என்று கூறப்படும் பெண்ணும் உடன் வந்துள்ளார். அவர்களது பாஸ்போர்ட் நகல்களையும், அவர்கள் பயன்படுத்திய இந்திய, அமெரிக்க தனியார் நிறுவன மொபைல் போன் எண்களையும் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். பாஸ்போர்ட்டில் உள்ள ஹெட்லியின் போட்டோவிற்கும் தேசிய புலனாய்வுத்துறை கைவசமுள்ள போட்டோவிற்கும் சிறிய வித்தியாசங்கள் உள்ளதால், இரு போட்டோக்களையும் ஒப்பிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் உதவியர்கள் யார்-யார்? சுற்றுலாவிற்காக மூணாறு வந்ததாகவும் மும்பையில் தொழில் செய்து வருவதாகவும் ஹெட்லி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் மூன்று பேருக்கு மூன்று அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன[9]. இறுதியில் ஹெட்லியும் ஒரு பெண்ணும் மட்டுமே வந்துள்ளனர். இங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்த இவர்கள் நெடும்பாசேரி சென்று அங்கிருந்து விமானம் மூலம் டில்லி சென்றுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் தங்கினால் அவர்கள் ஓட்டலில் பூர்த்தி செய்து கொடுக்கும் “சி’ படிவத்தையும் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.” மூணாறில் தங்கியிருந்த ஹெட்லியும், அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹெட்லியும் ஒருவர்தானா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இது குறித்து வேறு தகவல்கள் வெளியிட இயலாது’ என்றும் அதிகாரிகள் கூறினர்.
மும்பை தாக்குதல் சதி: அன்சாரி பாஸ்போர்ட் பெற்றது எப்படி[10]? மும்பை : “மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிம் அன்சாரி, போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுள்ளான்’ என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மும்பையில் கடந்த ஆண்டு நவம்பரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் தொடர்பாக அஜ்மல் கசாப், பாகிம் அன்சாரி உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் வழக்கின் விசாரணை மும்பை ஆர்தர்ரோடு சிறையில் அமைக்கப்பட்டுள்ள தனி கோர்ட்டில் நடந்து வருகிறது.நேற்று நடந்த விசாரணையின் போது, நீதிபதி தகிலியானி முன் ஆஜரான வெளியுறவு அமைச்சக இணைச் செயலர் மான்பிரீத் ஓரா கூறியதாவது: இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நான், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் ஹை-கமிஷனராக இருந்தேன்.
பாகிஸ்தானின் நேரிடை தொடர்பு: அப்போது பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் என்னை அழைத்தார். அவரைச் சந்தித்த போது, மும்பை தாக்குதல் விசாரணை தொடர்பான சில விவரங்களைத் தெரிவித்தார். அப்போது, “மும்பை தாக்குதல் சதி தொடர்பாக, கைது செய் யப்பட்டுள்ள பாகிம் அன்சாரி, பாகிஸ்தானில், போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுள்ளான் என்றும், அந் நாட்டின் பதிவு ஆணைய ஆவணங்களில் இருந்து இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன’ என்றும் கூறினார். அதேநாளில், பாகிஸ்தானில் தெற்கு ஆசிய விவகாரங்களை கவனிக்கும் டைரக்டர் ஜெனரல் என்னை சந்தித்தார். அந்த நேரத்தில், பாகிம் அன்சாரி பாஸ்போர்ட் பெற்றது தொடர்பான விபரங்களைக் கூறினார். போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து, அந்த பாஸ்போர்ட் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு ஓரா கூறினார்.
I don’t know Rahul Bhatt: Kangna[11]: கங்கணா சொல்கிறார் “எனக்கு ராஹுல் பட்டைத் தெரியாது”! கோல்மென் ஹெட்லி மற்றும் தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா முதலியோருடன் பாலிஹுட் நடிக-நடிகையினர் தொடர்புகளை புலன் விசாரிப்பவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ராஹுல் பட்டைத் தொடர்ந்து பட்டியில் நீளுகிறது: கங்கனா, ஆர்த்தி சாப்ரா,எம்ரான் ஹாஸ்மி………………ஹாஸ்மி ஒரு பப்பில் 2008ல் சந்தித்ததாகவும், கங்கனா “வோஹ் லம்ஹே” ஷுட்டிங் போது அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது! இருப்பினும், இவர்கள் எல்லோரும் அத்தகைய ஊடகசெய்திகளை மறுக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் மும்பை திறைப்பட உலகத்திற்கு உள்ள சம்பந்தம், மிகவும் நெருக்கமானது எனலாம்[12].
வேதபிரகாஷ்
© 17-10-2010
[1] வேதபிரகாஷ், தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க–ஜிஹாத் கூட்டு – I , https://islamindia.wordpress.com/2010/03/20/தாவூத்-ஜிலானி-தஹவ்வூர்-ராணா-ஹ/
[2] வேதபிரகாஷ், தாவூத் ஜிலானி என்ற ஹெட்லியின் இந்தியாவின் மீதான தாக்குதல்!, https://islamindia.wordpress.com/2009/12/14/தாவூத்-ஜிலானி-என்ற-ஹெட்ல/
[4] வேதபிரகாஷ், இந்தியாவின் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்களின் தீவிரவாத வலை பெரிதாகிறது!, https://islamindia.wordpress.com/2009/11/18/இந்த்ய-தாக்குதலில்-ஈடுபட்ட/
[6] வேதபிரகாஷ், தாவூத் ஜிலானியும், டேவிட் ஹெட்லியும்!, https://islamindia.wordpress.com/2009/12/10/தாவூத்-ஜிலானியும்-டேவி-ஹ/
[8] தினமலர், அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி மூணாறில் தங்கியது குறித்து விசாரணை, நவம்பர் 18,2009,00:00 IST; http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14131
[9] கேரளாவில் ஜிஹாதி தீவிரவாதம் பெருகுவது பற்றி முன்னமே விளக்கமாக என்னால் எழுதப் பட்டுள்ளது.
[10] தினமலர், மும்பை தாக்குதல் சதி: அன்சாரி பாஸ்போர்ட் பெற்றது எப்படி?
நவம்பர் 18,2009,00:00 IST; http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18951
[11] Neha Sharma, I don’t know Rahul Bhatt: Kangna, Hindustan Times; New Delhi, November 18, 2009; First Published: 20:50 IST(18/11/2009); Last Updated: 00:00 IST(19/11/2009)
[12] வேதபிரகாஷ், இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் மும்பை திறைப்பட உலகத்திற்கு உள்ள சம்பந்தம், https://islamindia.wordpress.com/2009/11/19/இஸ்லாமிய-தீவிரவாதிகள்-மற/
அண்மைய பின்னூட்டங்கள்