சிதம்பரத்திற்கு தாவூத் ஜிலானியின் மனைவிகள் வேண்டுமாம் விசாரிக்க!
By vedaprakash
சிதம்பரத்திற்கு தாவூத் ஜிலானியின் மனைவிகள் வேண்டுமாம் விசாரிக்க!
போதை மருந்து கடத்தல்: ஹெட்லி மீது எப்.பி.ஐ., அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: சிகாகோவில் கைதான 49 வயதான ஹெட்லி, போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இரு முறை கைதானவன்.ஆனால், போதைக் கடத்தல் கும்பல்கள் சிலவற்றை பிடிக்க, நம்பகமான சில தகவல்களை அப்போது தெரிவித்ததால், அவனின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலையானான். அதேபோன்று இப்போதும் அவன் போலீஸ் இன்பார்மர் ஆகியுள்ளான். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை நடிகைகள் தொடர்பு: தாவூத் இப்ராஹிம் போல, தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா முதலியோருடன் பாலிஹுட் நடிக-நடிகையினர் தொடர்புககள் அலாதியானது தான்! அதனால்தான், சிதம்பரம் தாவூத் ஜிலானியைப் பிடிக்க முடியவில்லை என்பதும், அவனுடைய மனைவிகளைப் பிடித்து விசாரிக்கலாம் என்று கிளம்பி விட்டார் போலும்!
Neha Sharma, Hindustan Times; New Delhi, November 18, 2009
First Published: 20:50 IST(18/11/2009); Last Updated: 00:00 IST(19/11/2009)
|
|||||||||||
|
|
||||||||||
|
தாவூத் ஜிலானியின் மனைவிகள்: தாவூத் ஜிலானிற்கு எத்தனை மனைவிகள் என்று தெரியவில்லை. உள்ள தகவல்களின்படி, ஸஜியா என்பவள் தனது குழந்தைகளுடன் சிகாகோ நகரித்தில் வாழ்வதாக அமெரிக்கப் புலனாய்வுத்துறையினர் கூறியுள்ளனர். அதற்கு மேல் அமெரிக்கர்கள் விஷயங்களை சொல்ல மறுத்தாலும், அவள் ஜிலானியுடன் இந்தியாவிற்கு வரவில்லை என்கிறார்கள்.
தாவூத் ஜிலானியின் முதல் மனைவி: தாவூத் 1985ல் முதன் முதலாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டானாம். இரண்டு வருடங்கள் ஆகியதும் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் 1987ல் விவாக ரத்து ஏற்பட்டதாம். பென்சில்வேனியா பல்கலைகழகத்திலிருந்து பட்டப்படிப்பு படித்த, அந்த பெண்மணி மறுபடியும் திருமணம் செய்து கொள்ளாமலேயே செஸ்டர் கவுன்டியில், ரியல் எஸ்டேட் கன்ஸல்டன்ட்டாக (நிலங்களை வாங்கி-விற்பதில் ஆலோசகர்) இருக்கிறாராம். ஆனால் இவள் என்றுமே அமெரிக்கவை விட்டு தாவூத்துடன் வெளியே சென்றதில்லை. ஆகவே, இந்தியாவிற்கு வந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை!
ஃபைஜா அவுதல்ஹா என்ற மொரொக்கோ நாட்டு அழகி: இவள் தாவூத்தின் மனைவியா, துணைவியா என்று தெரியவில்லை. ஃபைஜா அவுத்லாஹ் என்ற மொரொக்கா நாட்டு அழகியுடன் (A woman of Moroccan origin – Faiza Outalha), தாவூத் ஜிலானி இரண்டு முறை 2007-08 வாக்கில் இந்தியாவிற்கு வந்துள்ளான். ஆனால் அமெரிக்க உளவாளிகள் அவளைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறுகிறார்களாம்!
அண்மைய பின்னூட்டங்கள்