Posted tagged ‘24 பர்கானாஸ்’

முகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்!

நவம்பர் 11, 2019

முகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்!

Pre-Islamic idols destroyed by Mohammed

முகமதுக்கு முந்தைய மற்றும் பிந்தைய அரேபியா: “முகமதுக்கு முந்தைய அரேபியா” என்று வந்துள்ள ஆயிரக் கணக்கான புத்தகங்களில், அரேபியாவில், இஸ்லாத்திற்கு முன்னர் கிருத்துவம், யூதம், பாரச்சீகம்[1], பௌத்தம், இந்து போன்ற மதங்கள் மக்களிடையே இருந்ததாக எடுத்துக் காட்டுகிறார்கள். முகமது காலத்தில், காபாவில் இருந்த 360 விக்கிரங்கள், சுவர்களில் இருந்த சித்திரங்கள் முதலியவை, அவரால் அழிக்கப் பட்டன என்று அவர்கள் எழுதி வைத்துள்ள சரித்திர புத்தகங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். கடந்த நூற்றாண்டுகளில் ஓரளவிற்கு அத்தகைய எச்சங்கள் இருதற்கான ஆதாரங்கள், மேனாட்டர்கள் எடுத்த புகைப்படங்கள், ஓவியங்கள் மூலமாகவும் அறியலாம். ஆனால், அடிப்படைவாத மேலோங்க, பழைய ஆதாரங்கள் மற்றும் எச்சங்கள் கூட அழிக்கப் பட ஆரம்பித்து, இப்பொழுது, முழுவதும் துடைக்கும் பணி நடக்கிறது எனலாம். ஐசிஸ் தீவிரவாதிகள், சிரியா மற்றும் அதனை சுற்றியுள்ள பழங்கால சின்னங்களை அழித்து வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால், பழங்கால சரித்திரம் முழுமையாக இழக்க நேரிடும்.

Bara Rabi Awwal how celebrated - Yogyakarta on the Indonesian island of Java, March 9, 2009.2

யோக்கியகர்த்தா, இந்தோனேசியாவில், கோவில் போன்ற உருவத்தை பல்லக்கில் தூக்கிக் கொண்டு, ஊர்வலமாக கொண்டு சென்று மீலாது நபி கொண்டாடுகின்றனர்.

Bara Rabi Awwal how celebrated - Yogyakarta on the Indonesian island of Java, March 9, 2009.3

யோக்கியகர்த்தா, இந்தோனேசியாவில், கோவில் போன்ற உருவத்தை பல்லக்கில் தூக்கிக் கொண்டு, ஊர்வலமாக கொண்டு சென்று மீலாது நபி கொண்டாடுகின்றனர். பழைய புகைப்படம்.

Bara Rabi Awwal how celebrated - Yogyakarta, Java Island, Indonesia.
சகேதன் விழா ஒரு வார்த்திற்கு இந்தோனேசியாவில், மீலாது நபி நிமித்தம் கொண்டாடப் படுகிறது!
Bara Rabi Awwal how celebrated -Sekaten fair in Indonesia, a week-long celebration of Mawlid

மீலாது நபி எப்படி, எப்பொழுது, ஏன் கொண்டாடப் படுகிறது?: இருப்பினும் இஸ்லாம் உலகம் முழுவதும் பரவிய நிலையில், அதன் நம்பிக்கை, உள்ளூர் மாறுதல்களுடன் வெளிப்படுகின்றது. காலம், இடம், முதலியவற்றால் உண்டாகும் மாற்றங்களுடன் அவை நடந்து வருகின்றன. பூமத்திய ரேகைக்கு மேல்-கீழ், கடக-மகர ரேகைகளில், துருவங்களுக்கு அருகில் இருக்கும் மக்களின் வழிபாட்டு முறைகளில், நடைமுறையில், அதனால், மாறுதல்களைக் காணலாம். மேலும், இஸ்லாம் சந்திரன், அதன் மீதான காலக்கணக்கீட்டின் மீது ஆதாரமாக இயங்கிவருவதால், அமாவாசை-பௌர்ணமி மற்றும் அதற்கு முன் மற்றும் பின்வரும் நாட்கள் புண்ணியமாகக் கருதப்பட்டு, அந்நாட்களில் தான், பண்டிகைகள் கொண்டாடப் பட்டு வருகிறது. ஆப்பிரிக்க-ஆசிய  நாடுகளில், அவரவர் கலாச்சார, பாரம்பரிய, பண்பாட்டு விழா கொண்டாட்டங்களுடன், இஸ்லாமிய பண்டிகை கொண்டாட்டங்களும் இணைந்தே நடந்து வருகின்றனர். இதனால், ஆப்பிரிக்காவில் கிருத்துவம்-யூதம் மற்றும் ஆசியாவில் பௌத்தம்-இந்து மத தாக்கஙளைக் காணலாம். இந்நிலையில் மீலாது நபி பற்றி அலசு போது, கிடைத்த விவரங்கள் ஆராய்ச்சியாளர்களைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.

Bara Rabi Awwal how celebrated - Banyuwangi

பனுவங்கி நகரில், இந்தோனேசியா மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் படுகிறது.

Bara Rabi Awwal how celebrated - Banyuwangi City

பனுவங்கி நகரில், இந்தோனேசியா மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் படுகிறது. மக்கள் ஆடி-பாடிக் கொண்டு செல்வர்.

அமாவாசைபௌர்ணமி, பிறை வைத்து கொண்டாடும் இஸ்லாமிய பண்டிகைகள்: ரபி அல்-அவ்வல், பாரா ரபியுல் அவ்வல்  அதாவது மீலாது நபி, எப்படி உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது என்பதைக் காண்போம். ரபி அல்-அவ்வல் [(Arabic: ربيع الأوّل, rabī‘u ’l-awwal) ] என்பது முகமதிய காலண்டரில் மூன்றாவது மாதத்தை / பனிகாலம் ஆரம்பத்தைக் குறிக்கும். இஸ்லாம் தோன்றியதற்கு முன்னர், இக்காலத்தில், பௌர்ணமிக்கு இரண்டு நாள் – முதல் இரவில் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம். மேலே, இஸ்லாம் சந்திரன், அதன் மீதான காலக்கணக்கீட்டின் மீது ஆதாரமாக இயங்கிவருவதால், அமாவாசை-பௌர்ணமி மற்றும் அதற்கு முன் மற்றும் பின்வரும் நாட்கள் புண்ணியமாகக் கருதப்பட்டு, அந்நாட்களில் தான், பண்டிகைகள் கொண்டாடப் பட்டு வருகிறது, என குறிப்பிடப் பட்டது, ஆனால், சந்திரனை பகலில், மேகமூட்டமாக இருக்குபோது, மழைகாலத்தில், துருவப் பகுதிகளில் தெளிவாகப் பார்க்க முடியாது. இதனால். இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்றெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது. அதனால், தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு, பஞ்சாங்கம் கணிக்கப் பட்டு, அதன் படி, விழாக்கள் கொண்டாடப் பட்டன.

பிறந்Morocco, Bara Rabi ul Awwal procession நாள் தெரியாத முகமதுவின் பிறந்த நாள் கொண்டாடுவது: ரபி அல்-அவ்வல் [(Arabic: ربيع الأوّل, rabī‘u ’l-awwal) ] என்பது முகமதிய காலண்டரில் மூன்றாவது மாதத்தை / பனிகாலம் ஆரம்பத்தைக் குறிக்கும். இம்மாதத்தில் மொஹம்மது நபியின் பிறந்த நாளை முகமதியர் கொண்டாடுவர். ஆனல், அவரது பிறந்த தேதி சரியாக தெரியாது. அதாவது, உருவ வழிபாடு சுத்தமாக இருக்கக் கூடாது, என்பதால், புத்தகங்கள், சின்னங்கள் என்று எல்லாவற்றையும் ஆசாரகோட்பாடு மிக்கக் கொண்டவர்கள் அழித்து விட்டனர். மாவ்லித் [Arabic: مَولِد النَّبِي‎ mawlidu n-nabiyyi, Birth of the Prophet] எனப்படுவது, மௌலித், மேவ்லீத், மூவ்லீத், மீலாத் என்றாகி, மீலாது நபி ஆயிற்று. மௌலித் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தருத்தல், வம்சாவளி, பிறப்பு, குழந்தையின் பிறப்பு, முகமது நபி பிறந்தநாள் என்றாகியது. ஷியாக்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சுன்னிகள் ரபி அல்-அவ்வல்லை 12ம் நாளும், ஷியாக்கள் 17ம் நாளும் கொண்டாடுகின்றனர்.  ஸலபி மற்றும் தேவ்பந்திகள் நிராகரிக்கின்றனர். இத்தகைய கொண்டாட்டங்களினால், இஸ்லாம் முந்தைய பழக்க-வழக்கங்கள் மறுபடியும் தோன்றுகின்றன என்று ஆசார இஸ்லாம் எதிர்க்கிறது!

Bara Rabi Awwal how celebrated - a boy lighting

இப்படி விளக்கேற்றியும் மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் படுகிறது.

முகமதியரின் விளக்கு கொண்டாட்டம்: சந்திரனை ஆதாரமாக வைத்து, மாதம், ஆண்டு கணக்கிடப் படுவதால், முகமதியர் கொண்டாட்டங்கள், ஒரு நாள் வித்தியாசப் படுகிறது[2]. பாகிஸ்தான் 10-11-2019 அன்று மீலாது நபி கொண்டாடியது. வளைகுடா நாடுகளில் 09-11-2019 அன்று கொண்டாடப் பட்டது[3]. விடுமுறை அறிவிக்கப் படுவது, இந்தியாவில் அரசியலாக்கப் பட்டது. முதலில் வி.பி.சிங் பிரதமராக இருக்கும் போது, தேசிய விடுமுறையாக அறிவிக்கப் பட்டது. பிறகு, அது தொடர்ந்தது. மாநிலங்களிலும் அத்தகைய போக்கு, பிறகு உண்டானது. ஆனால், சில இஸ்லாமிய நாடுகளில் ஒரு நாள் மட்டுமல்ல, ஒரு வாரம் கொண்டாடப் படுகிறது. அத்தகைய நிலையை, இந்தோனேசியாவில் காணலாம். யோக்யகர்தா என்ற இதத்தில் அவ்வாறு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது[4]. கோபுரம் போன்ற அமைப்பை ஊர்வலத்தில் தூக்கிச் சென்று கொண்டாடுவர். இது காவடி தூக்கும் விழாவை ஒத்துள்ளது. திருவிழா போன்று ராட்டினம், கடைகள் எல்லாமே இருக்கும். மொரோகோ, கானா போன்ற நாடுகளிலும் அவ்வாறே, கொண்டாடப் படுகின்றன[5]. மொரோகோவில், கோபுர போன்ற உருவங்களை, தலைமீதுவைத்துக் கொண்டு ஊர்வலமாக செல்கின்றனர்.

Bara Rabi Awwal how celebrated - Boulac Avenue in 1904 at Cairo, Egypt.

பொலோக் அவென்யூ, கெய்ரோவில், 1904ல் மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் பட்டது.

Bara Rabi Awwal how celebrated - Malaysia

மலேசியாவில் மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் படுகிறது.

Bara Rabi Awwal how celebrated - Malaysia-full

10-11-2019, Pakistan celebrated Milad ul Nabi

முகமதியரின் விளக்கு கொண்டாட்டமும், கார்த்திகை தீபம் கொண்டாட்டமும்: கார்த்திகை மாதத்தில், பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் அகல் விளக்குகளில் தீபமேற்றி வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர். கார்த்திகை நட்சத்திர கூட்டத்தில், அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.  கார்த்திகை மைந்த முருகன் பிறந்த தினமாகக் கருதப் படுகிறது. இவையெல்லாமும், மேற்குறிப்பிடப் பட்ட கொண்டாட்டங்களுடன் ஒத்துப்போவதை காணலாம். உலகில், ஒரு காலத்தில், குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கையாளர்கள் பரவியிருந்ததை இது காட்டுகிறது. அல்லது, பல்வேறு இடங்களில் வாழ்ந்த மக்கள், இயற்கையை ஆதாரமாக வைத்து, நாட்கள், மாதங்கள், வருடங்கள் முதலியவற்றைக் கணக்கிட்ட போது, துல்லியமாக்க, நட்சத்திரங்கள், சந்திரன், பிறைகள் முதலியவற்றை உபயோகப் படுத்தியதையும் கவனிக்கலாம்.

© வேதபிரகாஷ்

11-11-2019

Bara Rabi Awwal how celebrated - Yogyakarta on the Indonesian island of Java, March 9, 2009.3

[1] ஜொராஸ்ட்ரிய மதம் [Zorastrianism, fire worshippers], தீயை வணங்கும் மதம் என்று சொல்லப் படுகிறது. இது இரானில், பாரசீக பேரரசு காலத்தில் இருந்தது.

[2] Schedule, T., Calendar, Muslims Celebrate Mawlid, the Prophet’s birth Muslims Celebrate Mawlid, the Prophet’s birth. C., Show, H. Y. O. L., & is Hiring, C. C. T. V.

[3] All parts of the Arabian Gulf, including the West Asian region of Syria, Iraq and Lebanon, have begun the observance of Rabi ul Awwal. Eid-e-Milad or Mawlid would be celebrated in these nations from the evening of November 8 to the sunset of November 9.

https://www.latestly.com/lifestyle/festivals-events/rabi-ul-awwal-moon-sighting-2019-in-saudi-arabia-uae-other-middle-east-nations-live-news-updates-announcement-on-eid-e-milad-dates-today-1299957.html

[4] Mulyana, Ahmad. “Sekaten tradition: The ritual ceremony in Yogyakarta as acculturation reality of Javanese culture in Indonesia.” International Journal of Humanities and Social Science Studies, IV 2 (2017): 50-61.

[5] Abdul-Hamid, M. U. S. T. A. P. H. A., CAPE COAST, and GHANA WEST AFRICA. “The Influence of Islam on an African People: The Case of the Dagomba of Northern Ghana.” International Conference on Universalism, Relativism & Intercultural Philosophy. University of Cape Coast, Cape Coast. 2010.

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (8)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (8)

greater-islamic-bangladesh

greater-islamic-bangladesh

தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்ய சாதகமாக இருக்கும் பங்களாதேசத்தின் இருப்பிடம்: பங்களாதேசம், மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, திரிபுரா, மயன்மார், வங்காள விரிகுடா என்று சூழ்ந்துள்ளது. வடக்கில் நேபாளம், பூடான் போன்ற நாடுகள் இருப்பதால், பங்களாதேச தீவிரவாதிகள், இந்தியாவில் நுழைந்து, இம்மாநிலங்கள் வழியாக நேபாளம், பூடான் சென்றுவிட்டால், அங்கிருந்து தப்பித்து விடலாம். அதேபோல, உள்ளே நுழையவும் செய்யலாம். இத்தலைய பாதுகாப்பற்ற எல்லைகளின் தன்மையினைத்தான், பங்களாதேச தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். பிறகு இம்மாநிலங்களை ஒட்டியுள்ள ஜார்கெண்ட், பிஹார், சிக்கிம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் போன்ற மாநிலங்களில் தொடர்புகளை வைத்துக் கொண்டால், இவர்களது வலை பெரிதாகி, தப்பித்துக் கொள்ள சுலபமாகிறது. மேலும், வடகிழக்கில் கடந்த 60 வருடங்களாக இந்தியாவிற்கு எதிராக வேலை செய்து வரும் இயக்கங்களும், சில நேரங்களில் – பணம், போதை மருந்து, ஆயுதங்கள் – என்று வரும்போது, கைக்கோர்த்துக் கொள்கின்றன. இதனால் தான், இஸ்லாமிய ஜிஹாதிகள், பாகிஸ்தானையும், பங்களாதேசத்தையும் இணைக்கலாம் என்று பலவழிகளில் முயன்று வருகிறார்கள்.

burdwan-blast-location of Bhirbum, murshidabad etc

burdwan-blast-location of Bhirbum, murshidabad etc

ஜிஹாதிகளின் ஜார்கெண்ட் தொடர்பு (13-11-2014)[1]: கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், 13-11-2014 (புதன்கிழமை) சங்கிராம்பூர் என்ற, ககூர் மாவட்டம், ஜார்கெண்டில் உள்ள ஊரில் என்.ஐ.ஏ. இரண்டு பேர்களிடம் விசாரணை மேற்கொண்டது. இவ்வூர், மேற்கு வங்களாத்தின் பீர்பூம் மாவட்டத்தை ஒட்டியுள்ளது. பீர்புமில் ஆயிரக்கணக்கான குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன, போலீஸ் அதிகாரியின் மீது குண்டெரியப் பட்டது, கலவரம் ஏற்பட்டது, மூன்று பேர் கொல்லப் பட்டனர் போன்ற விவரங்கள் முன்னமே கொடுக்கப் பட்டன. ஆகவே, மாநில எல்லைகளைக் கடந்து ஈடுபட்டு வரும் இவர்களைக் கண்காணிப்பதில், இம்மாநில பாதுகாப்பு, போலீஸார் முதலியோரும் மெத்தனமாகவே இருந்து வருகின்றனர் என்றாகிறது. இல்லை, தீவிரவாதிகளால் அவர்கள் நன்றாக கவனிக்கப் பட்டு வருவதால், அவ்வாறு இருந்திருக்கிறார்கள் போலும். ஜார்கெண்டில் உள்ள இந்திய முஜாஹித்தீன் நடவடிக்கைகளைக் கவனிக்க வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது[2].

how money reached khagragarh from sylhet

how money reached khagragarh from sylhet

கள்ளநோட்டுகள் தொடர்பு: என்.ஐ.ஏ 09-11-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று போலி / கள்ளா இந்திய ரூபாய் நோட்டுகள் [FICN – Fake Indian Currency Notes] விசயமாக ஆழ்ந்த சோதனையை மேற்கொண்டது. இந்திய பொருளாஹாரத்தை சீரழிக்கும் இந்த விசயத்தில், என்.ஐ.ஏ தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது[3]. நான்கு நாட்கள் பங்களாதேசத்தில் பிரயாணம் மேற்கொண்டிருந்தபோது, ஜே.எம்.பி மற்றும் இதர ஜிஹாதிக்குழுக்கள் இந்த கள்ள நோட்டுகள் கடத்தல் மற்றும் விநியோகங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது[4]. இந்திய-பங்களாதேச எல்லைகள், பல இடங்களில் வேலையில்லாமல் இருப்பதாலும், பாதுகாப்பு-சோதனை போதிய அளவு இன்மை, ஆளும் கட்சிகள் கொடுக்கும் ஊக்குவிப்பு ஆதரவு முதலிய காரணங்களினால், எல்லைகளைத் தாண்டி இவ்வேலைகள் நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மற்ற இந்திய-விரோத இயக்கங்களும் இதில் ஈடுப்பட்டுள்ளன, கைகோர்த்துக் கொண்டு வேலை செய்து வருகின்றன. ஊடுருவல்காரகளுக்கு கொடுக்கப் படும் முக்கியமான வேலையே, இந்த நோட்டுகளை விநியோகிக்கும் வேலைதான். கடந்த 2011-2014 ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமாக கள்ளாநோட்டுகள் பிடிபட்டுள்ளன. குறிப்பாக அசாம் மாநில எல்லைப் பிரதேசங்களிலிருந்து, இக்கள்ளப்பணம் அதிகமாக நுழைந்து, மற்ற இடங்களுக்குப் பட்டுவாடா செய்யப் படுகின்றன. குறிப்பாக உபியில் அதிகமாக செல்கிறது. இப்பணம் தான், அங்குள்ள தீவிரவாத-பயங்கரவாத-வன்முறை செயல்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.

burdwan masterminds plotting

burdwan masterminds plotting

ஜியா உல் ஹக் தொடர்புகள் – 07-11-2014 அன்று கைது செய்யப் பட்டான்[5]: என்.ஐ.ஏ. அதிகாரிகள் 07-11-2014 அன்று ஜியா உல் ஹக் (மொஹம்மது பரித்தூனின் மகன்) என்பவனை கைது செய்தனர். இவன் மறைந்து வாழும் ரிஜாவுல் கரீம் மற்றும் யூசுப் ஷேக் அல்லது மௌலானா யூசுப்பின் கூட்டாளி ஆவான். மஸ்ஜித் தல்ஹாவில் (காக்ராகர், பர்த்வான்) தங்கியிருந்தபோது பிடிபட்டான். இவன் ஜிஹாதித்துவத்துவை புதியவர்களுக்கு பயிற்சி கொடுப்பதில் ஈடுபட்டுள்ளவன் என்று தெரிய வந்தது. ஜிஹாதி சம்பந்தப்பட்ட வீடியோக்களை சேகரித்துத் தொகுப்பது இவனது முக்கியமான வேலை. குஜராத் கலவரங்கள், அஸாம் கலவரங்கள், ரோஹிங்கிகள் கொல்லப் படுதல் முதலியவற்றின் வீடியோக்களை வெட்டி-ஒட்டி ஜிஹாதி நோக்கில் தயாரிக்கப் பட்ட வீடியோக்களை சிமுலியா மற்றும் முகிம்நகர் மதரஸாக்களில் போட்டுக் காண்பிப்பது வழக்கம். இவற்றை மற்ற “ஹை-டெக்” ஜிஹாதிகள் இணைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இவன் இப்பொழுது தப்பி மறைந்து வாழும் ஜே.எம்.பியின் தளபதி, சஜித் மற்றும் சகிப் என்கின்ற சுமன் முதலிவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். மால்டாவின் அவனது வீட்டில் சோதனையிட்டபோது, கிடைத்த லேப்டாப்பில், இவ்விசயங்கள் இருந்தன. பர்த்வான் குண்டுவெடிப்புப் பிறகு, ரிஜாவுல் கரீம் லேப்டாப்பை ஜியா உல் ஹக்கிற்குக் கொடுத்தான். ஆக இந்த இளைஞர்கள் எல்லாவற்றிலும் பயிற்சியளிக்கப் பட்டு தயார் செய்யப் படுகிறார்கள் என்று தெரிகிறது.

Burdwan_District_WB_Google_Maps_0_0_0_1_0

Burdwan_District_WB_Google_Maps_0_0_0_1_0

08-11-2014 அன்று எஸ்.கே. ரஹமத்துல்லா கைது[6]: எஸ்.கே. ரஹமத்துல்லா என்கின்ற எஸ்.கே. புர்ஹான் (லெப்னினென்ட். சித்திக் மியா அலியின் மகன்) பொலீஸாரால் கைது செய்யப் பட்டான். ஜெசோர் ரோடில் கைது செய்யப் பட்டு என்.ஐஏவிடம் ஒப்படைக்கப் பட்டான். ஜே.எம்.பியின் பர்த்வான்-திட்டத்தை அமைத்த முக்கிய நபர்களில் ஒருவன். இவனிடமிருந்து பல போலியான சிம் கார்டுகள், பான் கார்டுகள், EPIC, DL, முதலியன கண்டெடுக்கப்பட்டன[7]. இன்னொரு அறிக்கை, அவன் பெயர் ஷேயிக் ரஹமத்துல்லா / சஜித் / புர்ஹான் ஷேக் / சுரோத் அலி (ஆலம் ஷேயிக் / ஜானு எஸ்.கே / மறைந்த சித்திகி மியா-வின் மகன்) என்று குறிப்பிடுகிறது[8]. பங்காளதேசத்தவன், இப்பொழுது ஜார்கெண்டில் வாழ்ந்து வந்தான்[9]. பல இடங்களில் நகர்ந்து கொண்டு வேலை செய்யும் இவர்கள், தங்களது அடையாளங்களை மாற்றிக் கொண்டு, அதற்கெற்றப் படி ஆவணங்களிலும் தங்களது விவரங்களை பலவிதமாகக் கொடுத்து வருகிறார்கள்.

burdwan-blast_Photo taken from Anandabazar Patrika

burdwan-blast_Photo taken from Anandabazar Patrika

அம்ஜத் ஷேக் / காஜல் 10-11-2014 அன்று கைது[10]: 10-11-2014 அன்று 30 வயதான அம்ஜத் ஷேக் / காஜல் (சுகுர் ஷேக்கின் மகன்) பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தமாகக் கைது செய்யப் பட்டான். இவனும் ஜே.எம்.பியின் உறுப்பினன், பர்த்வான் குண்டு தொழிற்சாலை திட்டத்தில் பங்குக் கொண்டவர்களில் முக்கியமாக செயல்பட்டவன். குண்டு தயாரிக்க வேண்டிய முக்கியமான ரசாயனப் பொருட்களைப் பெற்று, மற்றவர்களுக்கு அனுப்பி வைத்தான். குண்டுவெடிப்பிற்குப் பிறகு, கொல்கொத்தாவில் உள்ள இவனது வீட்டை சோதனை செய்தபோது, ரசாயனப் பொருட்கள் வாங்கியதற்கான சிட்டுகள், ரசீதுகள் முதலிய கண்டெடுக்கப் பட்டன. 08-11-2014 அன்று இவன் தில்லிக்குச் சென்றுள்ளான். பிறகு உப்யில் உள்ள பஸ்தி என்ற இடத்திற்கு வந்துள்ளான். அங்கு ஒரு போலீஸ்காரன், இவன்மறந்திருக்க இடம் கொடுத்துள்ளான். பிறகு, மறுபடியும் மேற்கு வங்காளத்திற்கு சென்றபோது, அங்கு கைது செய்யப்பட்டான். ஜே.எம்.பியின் திட்டப்படி, மேற்கு வங்காளத்திலுள்ள மதரஸாக்களில் ஜிஹாதி பயிற்சிமுறைகளை அளிக்க பாடுப்பட்டவர்களில் முக்கியமானவனாக இருந்தவன்[11]. இவனைப் பற்றி துப்புத் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்படிருந்தது.

24 பர்கானாஸ் மாவட்டத்தில் விமான நிலையப் பகுதியில் ஷேக் ரகமதுல்லா (40) என்பவரை ஞாயிற்றுக்கிழமை (08-11-2014) போலீஸார் கைது செய்தனர்[12]. விசாரணையில் அவர்தான் பர்த்வான் குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டிய சஜித் என்பது தெரியவந்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த அவர் ஜமாத்-உல்-ஹக் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவராவார். மேலும் அவர் மஜ்லிஸ்-இ-சுரா என்ற அமைப்பின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். வங்கதேசத்தில் சில ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் பின்னர் மேற்கு வங்க மாநிலம், முர்ஷீதாபாத் மாவட்டத்தில் உள்ள முகிம்நகரில் ஒரு மதரஸா அருகே வசித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

15-11-2014

[1] http://zeenews.india.com/news/jharkhand/burdwan-blast-probe-two-picked-up-from-jharkhand_1498285.html

[2] As per GOI, MHA Oder No. 11011/67/2013-IS.IV dated 27/12/2013, NIA has taken over the investigation of the FIR No. 985/2013 dated 04/11/2013 of Kotwali (Hindpiri) Police Station, Ranchi, Jharkahnd and re- registered the case on 31/12/2013 at PS NIA, New Delhi as Case No. RC-12/2013/NIA/ under section 121, 121A, 120B, 34 of IPC, Section 16,18,20,23 of UA (P) Act, Section 3,4 of Explosive Substances Act and section 17 of Criminal Law. The accused persons are involved in commission of subversive and anti-national activities by entering into a criminal conspiracy with others and in pursuance to that they had collected explosives and other prohibited articles in concealed manner for the purpose of waging war against the Governement of India.

[3] Damage to the monetary stability of India was caused by way of transporting, smuggling and circulating of high quality counterfeit Indian Currency Notes of Rs.1000/- denomination in India. As per GOI, MHA order F. No. 11011/35/2014/IS.IV dated 16 June 2014, NIA registered a case on 25.06.2014 at PS, NIA, Delhi as Case RC-02/2014/NIA/DLI U/s -120B, 489B & 489C of IPC and Section 16 & 19 of UA (P) Act .

[4] http://bdnews24.com/neighbours/2014/11/09/nia-probing-jmbs-fake-currency-business

[5] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி.

[6] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி, Arrest of SK Rahmatlla @ Sajid in RC-3/2014/NIA-DLI. – SK Rahmatlla @ Sajid @ Burhan SK, S/O Lt. Siddique Miyan Vill Farajikanda, P.O. Madangunj, P.S.Bandar, District Narayangunj, Bangladesh arrested by Police from Jessore Rode, PS Airport, around 1430 Hrs. and handed over to National Investigation Agency. He is one of the main leaders of West Bengal Module of Jamaat-ul-Mujahideen-Bangladesh. Several fake identity documents like EPIC, DL, PANCARD and other items have been recovered from his possession.

[7] http://www.nia.gov.in/writereaddata/PressRelease08112014.pdf

[8] http://www.nia.gov.in/writereaddata/PressRelease09112014.pdf

[9] STATUS REPORT AS ON 09.11.2014 IN BURDWAN BLAST CASE (NIA CASE NO. RC-03/2014/NIA-DLI)

[10] http://www.nia.gov.in/writereaddata/PressRelease10112014.pdf

[11] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி.  NIA today achieved a major breakthrough with the arrest of one Amjad Sheikh@ Kajal, son of Sukur Sheikh, age 30 years, resident of Kazi market, Kirnahar, District- Birbhum (West Bengal) for his role in Burdwan blast case. Amjad Sheikh was a key member of Jamaat-ul-Mujahideen, Bangladesh (JMB) and also one of the main conspirators of the Burdwan blast case.

[12]http://www.dinamani.com/india/2014/11/09/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE/article2514313.ece