Posted tagged ‘ரிவேதம்’

மைக்கேல் விட்செல்லும், முஸ்ஸரஃபும்! அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?

நவம்பர் 6, 2009

மைக்கேல் விட்செல்லும், முஸ்ஸரஃபும்! அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?

மைக்கேல் விட்செல் இந்திய விஜயம் (2009): மைக்கேல் விட்செல் என்பவர் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்து பல நகரங்களில் தங்கி, தனது இந்திய நண்பவர்களின் உதவியுடன் ரிவேதம், சமஸ்கிருதம், மொழிகள் தோன்றியதைப் பற்றிய தற்போதைய சித்தாந்தம் முதலியவற்றைப் பற்றி பேசியதோடு தனது ஆய்வுக் கட்டுரைகளையும் வாசித்துள்ளர்[1]. அவரது முழு வாழ்க்கைக் குறிப்புகள், படிப்பு முதலியவற்றை கீழ்காணும் தளத்தில் காணலாம்[2]. இருப்பினும் அவரது இந்திய-விரோத போக்கு ஆச்சரியமாக உள்ளது. பாகிஸ்தான் அதிபர் முஸ்ஸரஃப் இந்தியாவிற்கு வந்தபோது, அவருடன் விட்செல் உள்ளது மாதிரி புகைபடங்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், அதன் பின்னணி என்ன என் ஆராய்ந்தபோது, வளைகுடா நாடுகளிலிருந்து (குறிப்பாக ஈரான், பாகிஸ்தான்) அவருக்கு நேபாளத்தில் இருக்கும் சில “சந்திப்பாளர்கள்” மூலம் பணம் கொடுக்கப் படுகிறது எனத் தெரிகிறது[3].

Witzel with Mussaraf at Taj

இந்தோலாஜி படும்பாடு: மேற்கத்தையவர்களின் “இந்தோலாஜி” (இந்தியாவைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் முறை மற்றும் படிப்புத்துறை) ஐரோப்பியர்களின் காலனி காலனி காலங்களினின்றே என்றுமே இந்தியாவிற்கு எதிராக இருந்து வந்துள்ளது. ஆனால், அப்பொழுது அவர்களுக்கு இந்திய நீண்ட புராதானத் தன்மை, தொடர்ந்து வந்துள்ள சரித்திர சான்றுகள், வம்சாளி மூலம் அத்தகைய நிகழ்வுகளை பாதுகாத்து வைத்தமுறை, அவற்றை சாதாரண பாமரர்களும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக புராணங்கள், கதைகள் மூலம் சொல்லப்படும் முறை, அவர்களின் பிறந்த நாட்களை ஞாபகம் வைத்துக் கொண்டு கொண்டாடும் வழக்கம் முதலியவற்றைக் கண்டு அம்முறையே தவறு, கட்டுக்கதை என்றெல்லாம்பிரச்சாரம் செய்து ஓரளவிற்கு வெற்றி கண்டனர். இருப்பினும், இப்பொழுது மாறி வரும் காலகட்டங்களில் உண்மைகள் வெளிவரும்போது, எங்கே உண்மைகள் தெரிந்து, தங்களுக்குள்ள மதிப்பு, மரியாதை எல்லாம் போய் விடுமே என்று பயந்து, இன்றைய ஆட்சியாளர்களின் உதவியுடன் அத்தகைய “இந்தோலாஜி” ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் வேடிக்கை என்னவென்றால் சமஸ்கிருதமே தெரியாதவர்கள் சமஸ்கிருத பேராசிரியர் என்று பறைச்சாற்றிக் கொண்டு உலா வருகிறார்கள், சொற்பொழிவாற்றுகிறார்கள். அதேமாதிரி தமிழ் தெரியாதவர்கள் தமிழ் பேராசிரியர், மொழி வல்லுனர் என்றெல்லாம்பறைச்சாற்றிக் கொண்டு உலா வருகிறார்கள், சொற்பொழிவாற்றுகிறார்கள். இதற்கெல்லாம் உதவி செய்வது, துரதிருஷ்டமாக சில இந்திய சரித்திர, சம்ஸ்கிருத, தமிழ் மற்ற வயதான், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், வல்லுனர்கள் முதலியோர் தாம்.

Mrs with Mussaraf_Agra

பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் சரித்திர-தொல்துறை வல்லுனர்களின் இந்திய-விரோதக் கூட்டு: சமீபத்தில் மைக்கேல் விட்செல் விஜயத்தின்போது இந்த உண்மைகள் வெளிவந்தன. முன்னம், இந்தியா-பாகிஸ்தான் இரண்டாக பிரிந்தபோது, மார்டிமம் வீலர் என்பார் பாகிஸ்தானுக்குச் சென்று, ‘5000 வருட பாகிஸ்தானின் வரலாறு” என்ற புத்தகத்தை எழுதி கொடுத்தார். அதேமாதிரிதான் இப்பொழுதும் ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் உள்ள விசெல் முஸ்ஸரஃபுடன் கூட்டு வைத்துக் கொண்டு, சரித்திர புரட்டு வேலைகளை செய்துள்ளார்கள். முஸ்ஸரஃப் இந்தியாவிற்கு வந்தபோது, அவருடன் விட்செல் என்ன பேசினார் என்ற விவரங்கள் தெரியவில்லை. அவரது சந்திப்புகளுக்கு ஜே.என்.யு மற்றும் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்களது அரசியல் எஜமானர்களின் உதவியோடு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தானில் ஆட்சிமாற்றம் ஆன உடனே, முஸ்ஸரஃபின் சொதுக்கள், வங்கி கணக்குகள்[4] முதலியவை தணிக்கைக்குட்பட்டபோது பல விஷயங்கள் வெளிவருகின்றன. வேடிக்கையென்னவென்றால், முஸ்ஸரஃபே அமெரிக்காவில்[5] சொற்பொழிவாற்றக் கிளம்பிவிட்டர்! இனிபோகும் இடமெல்லாம் அவருக்கு இந்தியாவை தூஷிப்பதுதான் வேலை[6] என்று சொல்லவும் வேண்டுமோ?

மைக்கேல் விட்செல் இந்திய விஜயம் (2001): ஆக்ராவிற்கு முஸ்ஸரஃப் வந்தபோது அவரை சந்தித்தவர்கள் பலர். பலர் ஏன் ஆக்ரா வாஜ்பேயி-முஸ்ஸரஃப் சந்திப்பிற்காக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என கேள்விகளும் எழுப்பப்பட்டன[7]. அந்நிலையில் மைக்கெல் விட்செல் முஸ்ஸரஃப்பை அங்கு சந்தித்துள்ளது மிகவும் ஆச்சரியமாகவும், கவனமாகவும் பார்க்கவேண்டி உள்ளது. அவர் தனிப்பட்ட முறையில் சந்தித்து இருக்கலாம், அதுவேற விஷயம், இருப்பினும், முஸ்ஸ்ரஃப் “ஆக்ரா-சந்திப்பிற்கு” தமாஸாக வரவில்லை. ஆகவே, அந்நிலையில் சந்திப்பது, உடனே பாகிஸ்தானத்திற்கு “ஆலோசனையாளராக” வேலை செய்வது பல கேள்விகளை எழுப்புகிறது. சமஸ்கிருத ஆசிரியரின் “சமஸ்கிருதம்”மீறிய செயல்பாட்டினை எடுத்துக் காட்டுகிறது. இதுதான் போலும் “அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?:, என்று நம்மவர்கள் கேட்திறார்கள்!

Wizel_with_mussaraf

முஸ்ஸரஃப் “தாஜ்மஹால்” திரைப்படம் பார்க்கிறார் (2006): இந்தோ-பாகிஸ்தானிய உறவை மேன்படுத்தவே “தாஜ் மஹால்” திரைப்படம் எடுக்கப் பட்டதாக, அதன் டைரக்டர் அக்பர் கான் சொன்னார்[8]. இந்தியாவில் ஓடாத அந்த்கப்படம், பாகிஸ்தானில் பல நகரங்களில் – லாஹூர், கராச்சி, இஸ்லாமாபாத், பெஸாவர், மூல்தான், ஹைதராபாத், ராவல்பிண்டி – வெற்றிகரமாக ஓடியது. முஸ்ஸரந்பும் பார்த்தார். படத்தில் அப்படியென்ன பாகிஸ்தானியர் விரும்பும் வகையில் உள்ளது என்று தெரியவில்லை. இதற்காக அக்பர் கான் இர்ஃபான் ஹபிப் முதலிய சரித்திர ஆசிரியர்களுடன் விவாத்திதுக் கருத்துகள் பெற்றதாகத் தெரிகிறது. உண்மையில், தாஜ்மஹால் ஷாஜகான் காலத்திற்கு முன்னாலேயேக் கட்டப்பட்டது என்பதர்கான பல ஆதாரங்கள் செளிவந்த நிலையில்தான், அத்திரைப்படம் வெளிவந்தது. ஆகவே, அத்தகைய கட்டுக்கதையை ஆதரிக்கும் படம் எனும்போது, பாகிஸ்தானியர் ஆதரித்தது ஆச்சரியம் இல்லை. மற்ற விஷயங்களுக்கு அதிகப்பிரசங்கித் தனமாக ரோமிலா தாபர், ஹ்ர்பான்ஸ் முக்கியா, இர்ஃபான் ஹபிப், கே. எம். பணிக்கர் முதலியோர்[9] இந்து, ஃபெரண்டு லைன் பத்திரிக்கைகளில் கட்டுரை எழுதி தமது “செச்யூலரிஸ”த்தன்மையைக் காட்டிக்கொள்கிறவர்கள், அப்போது என்னவானர்கள் என்று தெரியவில்லை.

ரோமிலா தாபரும், மைக்கேல் விட்செலும் (2006): ரோமிலா தாபர் – இந்தியாவின் நன்றாக அறியப்பட்டுள்ள சரித்திர ஆசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பேராசிரியர், குளுக் நாற்காலியில் முதலில் அமர்பவர் (நூலக காங்கிரஸின்) மற்றும் மக்கேல் விட்செல் ஹார்வார்ட்டில் இருக்கும் சமஸ்கிருத வேல்ஸ் பேராசிரியர், என்று அறிமுகப் படுத்தி[10], “அவுட் லிக்” என்ற பத்திரிக்கை, அமெரிக்காவில் இந்துக்கள் தமது புத்தகங்களில் சரித்தர-முரண்பாடாக உள்ளவற்றை நீக்கவேண்டும் என்று பாராடி வருவதைக் கண்டித்து, இங்கு பிப்ரவர் 28, 2006 தேதியிட்ட இதழில் கட்டுரை எழுதுகிறார்கள்!

மைக்கேல் விட்செல் “தலித்”, “கிருத்துவ”க் குழுக்களை சந்திக்கிறார் (2009): பாண்டிச்சேரிக்கு விட்செல் சென்றிருந்தபோது[11], “தலித்” மற்றும் கிருத்துவக் குழுக்கள் சந்தித்ததும் வியப்பான விஷயமே! ஏனெனில், அவர்களிடத்தில் “சம்ஸ்கிருதத்தை”ப் பற்றி பேசவில்லை! அங்கு அவர் “பணத்தைத் திரட்டும் வேலையில்” இறங்கியுள்ளார் என்ற குற்றச் சாட்டு எழுந்தபோது, கம்பீரமாக “அமெரிக்கர்கள் ஒன்றும் இந்தியர்களிடம் பிச்சை கேட்கவேண்டிய நிலை வந்திவிடவில்லை” என்ற தோரணையில் “கமென்டு” அடித்துள்ளார்[12]. ஆகவே, இந்த சமஸ்கிருத-சரித்திர-சர்வாதிகார சந்திப்புகள் எல்லாமே இந்தியாவிற்கு எதிராக உள்ளதை இந்தியர்கள் கவனிக்கவேண்டும். முன்பு குறிப்பிட்டபடி, அவர்களது அமெரிக்க-இந்து-எதிர்ப்பு அறிவுப்பூர்வமாகவோ-படிப்புத்துறைப் பண்டித்வமாகவோ இல்லாமல், அரசியலாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில், அங்கு அந்த இயக்கத்தை எதிர்த்தவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த “தலித் விடுதலை கூட்டமைப்பு” (Dalit Freedom Network) மற்றும் “தலித் ஒத்துழைப்புக் குழு” (Dalit Solidarity Forum) உள்ளனர். முந்தைய நிறுவனத்தின் தலைவர் ஜோஸஃப் டி’சௌஸா, அவர் “அனைத்து இந்திய கிருத்து கவுன்சில்” (All-India Christian Council) அமைப்பிற்கும் தலைவர்!


[1] Vedaprakash, The First Conference of Michael Witzel of Harvard University, dated 07-07-2009 appearing in different sites and discussion groups.

http://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/11/the-first-conference-of-micheal-witzel-of-harvard-university/

http://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/the-second-conference-of-michael-witzel-at-madras-university/

[2] http://www.infinityfoundation.com/mandala/t_ed/t_ed_witze_cv_frameset.htm

[3] தங்கள்து ஒவ்வொரு விஜயத்தின்போதும், இந்த ஹார்வர்டு பேராசிரியர்கள், நேபாளத்திற்கு செல்வது, ஒரு சாதாரணமான விஷயம். ஆனால், அங்கு ஏன் செல்கிறார்கள், எதற்கு செல்கிறார்கள் என்பனவெல்லாம் ரகசியமாகவே உள்ளன.

[4] Ahmed Quraishi, On Musharraf, In All Fairness, – 6/18/2008

http://www.globalpolitician.com/24921-musharraf-pakistan

[5] http://trak.in/news/musharraf-may-meet-obama-in-october-during-us-lecture-tour/3636/

http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/the-newspaper/letters-to-the-editor/musharraf-on-lecture-tour-509

[6] http://www.samaylive.com/news/musharraf-to-criticise-india-ties-on-us-lecture-tour-report/655716.html

[7] “ஹுரியத்தை”த் தூர வைக்கவேண்டும், பற்ற இடங்களில் வைத்தால் முஸ்ஸரஃபிற்கு ஆபத்து போன்ற காரணங்கள் சொல்லப்பட்டன:

http://www.outlookindia.com/article.aspx?212463

[8] http://ibnlive.in.com/news/musharraf-to-watch-taj-mahal/9214-8.html

[9] இவர்கள் எல்லாம் பிரபலமான, தலைசிறந்த, அதிபுகழ்பெற்ற, பிரமாண்டமான சரித்திர ஆசிரியர்கள் என்று ஆங்கில ஊடகங்கள் கூறும். இந்து, ஃபெரண்டு லைன் பத்திரிக்கைகளுக்கு அவர்கள் ஆஸ்தான எழுத்தாளர்கள். அவர்கள் என்ன எழுதினாலும் பதிப்பிப்பார்கள்.

[10] Romila Thapar is India’s best known historian, Prof. emeritus of Jawaharlal Nehru University (New Delhi), and the first Kluge Chair (Library of Congress). Michael Witzel is Wales Prof. of Sanskrit, Harvard University

[11] http://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/11/the-third-conference-of-michael-witzel-at-pondicherry/

[12] “இந்தோ-யூரேசியா” யாஹோ குரூப்பில், அவரது பதிவு: தேதி ஜூலை 19, 2009