Posted tagged ‘எதிர்-தாக்குதல்’

8–சிமி குற்றவாளிகள் கொலை – தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை மறைத்து உரிமைகள் பற்றி பேசுவது ஏன்?

நவம்பர் 1, 2016

8–சிமி குற்றவாளிகள் கொலைதீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை மறைத்து உரிமைகள் பற்றி பேசுவது ஏன்?

the-eights-simi-terrorists-but-got-killed-in-a-police-encounter8- சிமி பயங்கரவாதிகள் சிறையிலிருந்து தப்பி ஓட்டம்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் நகரில் 1977ம் ஆண்டு தோன்றிய இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு எனப்படும் ‘சிமி’ இயக்கம் [Students Islamic Movement of India (SIMI)] தீவிரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவ்வியக்கத்தின்மீது மத்திய-மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. முஸ்லிம்கள் இன்றும் இவர்களை ஆதரித்து வருகிறார்கள் என்பது, அவர்களது பெற்றோர், உற்றோர், மற்றோர் மற்றும் அரசியல்வாதிகளின் அறிக்கைகள் முதலிய காட்டி வருகின்றது. அவர்கள் செய்துள்ள கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடுப்புகள், சிறையிலிருந்து தப்பிச் சென்றது, மறுபடியும் குற்றங்கள் செய்தது, பிடிபட்டது, சிறையில் அடைக்கப்பட்டது முதலியவற்றை மறைத்தே அவ்வாறு செய்து வருகின்றனர். இதற்கு டிவிசெனல்கள் இடம் கொடுத்து விவாதம் செய்வது தான் திகைப்பாக இருக்கிறது. தீவிரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களிடம், அவர்களுக்கு சார்பாக, அவர்களது உரிமைகளை ஆதரிப்பவர்களிடம், அவர்களின் வழக்கறிஞர்கள் முதலியோரைக் கூப்பிட்டு அத்தகைய விவாதம் நடத்துவதில்லை.

bhopal-central-jail-from-where-the-simi-terrorists-escapedசிறையில் இருக்கும், அந்த சிமிதீவிரவாதிகளின் யோக்கியதை[1]: சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தொடந்து குற்றங்கள் செய்து வரும் இவர்களின் யோக்கியதை இதுதான்[2]:

1.       பிப்ரவரி 1, 2014 சோப்படான்டி, கரீம்நகர் மாவட்டம், ஸ்டேட் பாங்கில் ரூ 46 லட்சம் கொள்ளையடித்த வழக்கிலும் ஜாகிட் உஸைன் மற்ரும் செயிக் மஹபூப் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

2.       மே.1, 2014 அன்று பெங்களூரு-கௌஹாத்தி எக்ஸ்பிரஸில் குண்டு வைத்து, ஒரு இளம்பெண் கொலைசெய்யப்பட்ட மற்றும் 12க்கும் மேற்பட்டவர் படுகாயம் அடைந்த வழக்கு.

இதே வழக்கில் –

1.       ஜாகிர் உஸைன் / சாதிக் / விக்கி [Zakir Hussain, alias Sadiq, alias Vicky (32)]

2.       செயிக் மஹபூப் / குட்டு [Sheikh Mehboob alias Guddu (30)]

3.       எஜாவுத்தீன் [Ejazuddin (32)]

3.       ஜூன் 2014ல் பூனாவிலுள்ள பரஸ்கானா மற்றும் விஸ்ரம்பாக் என்ற இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன.

4.       செப்டம்பர் 2014ல் பிஜ்னோர், உபியில் ஒரு தற்செயலாக நடந்த குண்டுவெடிப்பு. அப்பொழுது மெஹ்பூப் குட்டுவின் தாய் நஜ்மா அங்கிருந்தாள்.

5.       டிசம்பர் 2014ல் பெங்களூரில், சர்ச் தெருவில், ஒரு உணவகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு [blast outside a restaurant in Bengaluru’s Chruch Street area in December 2014].

6.       பிப்ரவரி 2015ல், ஆர்.சி.புரத்தில் [Muthoot Finance in RC Puram] முத்தூட் நிதிநிறுவனத்தில் கொள்ளையடித்தனர்.

dinathanthi-graphics-about-jail-breal-and-simi-killingபோபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தசிமிகைதிகள் தப்பிச் சென்றது: 2015ல் எஜாவுத்தீன் நல்கொண்டா அருகில் தெலிங்கானா போலீசாரால் கொல்லப்பட்டான். அவ்வகையில், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தினர் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளாக நாட்டில் உள்ள பல சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில், போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘சிமி’ கைதிகள் எட்டுபேர் 31-10-2016 அன்று அதிகாலை 2-3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சிறையில் இருந்த ஸ்டீல் தட்டு, மற்றும் டம்ப்ளரால் காவலரின் கழுத்தை அறுத்துக் கொன்றனர்[3].  இதைத்தொடரந்து அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த போர்வையை பயன்படுத்தி மதில்சுவரை தாண்டி குதித்து, இந்த எட்டுபேரும் தப்பிச் சென்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன[4]. தப்பிச் சென்றவர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்[5]. தடைசெய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 8 பேர் சிறையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றதே, திட்டமிட்டு செய்தது என்று தெரிகிறது. இனி, கைதிகளுக்கு ஸ்டீல் டம்பளர், தட்டு முதலியவை கொடுக்கலாமா-கூடாதா என்ற ஆராய்ச்சி நடத்த வேண்டும் போலிருக்கிறது.

the-eight-simiதப்பிச் சென்றவர்களை எச்சரித்தும், மறுத்ததால் போலீஸார் சுட்டதில் 8-பேர் கொலை: போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்[7] இப்படி தமிழ் ஊடகங்கள் சுருக்கமாக செய்திகளை வெளியிட்டன. போபால் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த 8 தீவிரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்[8] என்று நீட்டிச் சொல்கிறது இன்னொரு தமிழ் நாளிதழ். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் மத்திய சிறையில் காவலரை சுட்டுக்கொன்று ஞாயிற்றுக் கிழமை 30-10-2016 அன்றிரவு 8 தீவிரவாதிகளும் தப்பிச்சென்றனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது என்கிறது இன்னொரு தமிழ் நாளிதழ்.  போபால் புறநகர் பகுதியில் உள்ள இன்கொடி என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் 8 பேரும் பதுங்கியிருந்தது தெரியவந்தது.  கிராமவாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.  இதையடுத்து, போலீசார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். தீவிரவாத தடுப்பு படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்தனர்[9]என்று தினத்தந்தி விளக்குகுறது. பயங்கரவாதிகளை சரண் அடைந்து விடுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதை ஏற்காமல் பயங்கரவாதிகள் போலீசாரை தாக்க முயன்றனர். இதனால், வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கியை பிரயோகித்தனர். அப்போது நடைபெற்ற  என்கவுண்டரில் பயங்கரவாதிகள்  8 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்[10]என்றும் தினத்தந்தி கூறியுள்ளது. இதனையடுத்து சிமி பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட என் கவுண்டரின் உண்மை தன்மை குறித்து கேள்விகள் எழுப்பட்டது.  ஊடகக்காரர்கள் அந்த 8-பேர் எப்படி அங்கு சென்றனர், ஊர்மக்கள் ஏன் போலீஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும் முதலியவற்றைப் பற்றி கூட விவாதம் நடத்தலாமே?

smi-terror-politicizedஅரசியலாக்கப் படும் என்கவுன்டர் வழக்குகள்: தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை அரசியல்வாதிகள் நினைத்துப் பார்ப்பதில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்கள் முஸ்லிம்கள் அதனால், அவர்களை ஆதரிக்க வேண்டும், அப்படி செய்தால் ஆதாயம் கிடைக்கும் என்ற எண்ணாத்தில் தான் காங்கிரஸ், ஆப் போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி சிமி பயங்கரவாதிகள் பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து தப்பியது எப்படி என்பது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றது.  அரவிந்த் கேசரிவாலும் அத்தகைய கோரிக்கை விடுத்துள்ளார். டிவிசெனல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், ஒவைசியைக் வைத்து, உரிமை போராட்டமே நடத்திக் கொண்டிருக்கின்றன. இனி, பாகிஸ்தான் இந்திய வீரர்களைக் கொன்றதை மறந்து, இதை வைத்துக் கொண்டு கதையை ஓட்ட ஆரம்பித்து விடுவர். எல்லையில் நடந்த அக்கிரமங்களுக்கு இந்திய ராணுவம் பதில் நடவடிக்கை எடுத்தற்குக் கூட, எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் தான், இதுவும் நடக்கிறது. அப்படியென்றால், எதிர்கட்சிகள் சிமி-தீவ்ரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன என்று விளக்கம் கொடுக்கலாமா?

© வேதபிரகாஷ்

01-11-2016

the-eight-simi-clear-faces

[1] The Hindu, Cadres of an outlawed group, with long list of terror cases, Updated: November 1, 2016 01:10 IST.

[2] http://www.thehindu.com/news/national/cadres-of-an-outlawed-group-with-long-list-of-terror-cases/article9288680.ece?textsize=large&test=1

[3] தினத்தந்தி, போபால் சிறைச்சாலையில் இருந்து 8 சிமி இயக்கத்தினர் தப்பி ஓட்டம், பதிவு செய்த நாள்: திங்கள், அக்டோபர் 31,2016, 8:53 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 8:53 AM IST.

[4] http://www.dailythanthi.com/News/India/2016/10/31085334/8-SIMI-activists-escape-from-Bhopal-jail-1-guard-killed.vpf

[5] மாலைமலர், சிறையில் இருந்து 8 ‘சிமிதீவிரவாதிகள் தப்பியோட்டம், பதிவு: அக்டோபர் 31, 2016 08:29.

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/31082923/1047882/8-SIMI-activists-escape-from-Bhopal-jail-1-guard-killed.vpf

[7] தினகரன், போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, Date: 2016-10-31 11:47:00

[8] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=255546

[9] தினத்தந்தி, போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை, பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 12:05 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 12:05 PM IST.

[10] http://www.dailythanthi.com/News/India/2016/10/31120513/8-SIMI-terrorists-who-earlier-today-fled-from-Bhopal.vpf