ஹிஜ்–உல்–முஜாஹித்தீன், லஸ்கர்–இ–தொய்பா, ஹர்கத்–உல் ஜிஹாதி இஸ்லாமி, ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களின் இலக்காக உள்ள இந்தியா!
ஜி-20 மாநாடும், நிதியுதவி தடுப்பு–கட்டுப்பாடு கண்காணிப்பு அமைப்பின் பரிந்துரைகளும்: ஜி-20 [The G20 nations] மாநாடு நவம்பர் 15 முதல் 16 வரை அனட்ல்யா, துருக்கியில் நடைபெற்றது. 13-11-2015 அன்று பாரிசில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு உடனடியாக நடந்ததால், இம்மாநாட்டில் தீவிரவாதம்-பயங்கரவாதம் முக்கியமான பிரச்சினையாகியது. முன்னர் ரஷ்ய விமான தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அப்பொழுது, உலகமெங்கும்செயல்பட்டு வருகின்ற ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள், அந்த இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன், நிதி உதவியும் செய்கின்றன போன்ற விசயங்கள் விவாதிக்கப்பட்டன[1]. அப்பொழுது, பயங்கரவாத அமைப்புகளுக்கு, நிதி கிடைப்பதை தடுக்கும் வகையில், சர்வதேச அளவில், நிதியுதவி தடுப்பு-கட்டுப்பாடு கண்காணிப்பு அமைப்பு [Financial Action Task Force (FATF) – எப்.ஏ.டி.இ.,] அவசர கூட்டத்தில் சில பரிந்துரைகளை வெளியிட்டது. 1989ல் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், சர்வதேச அளவில் தீவிரவாதக் குழுக்களுக்கு பணம் எப்படி கிடைக்கிறது, யார் கொடுக்கிறார்கள் போன்றவற்றைப் பற்றி கண்காணித்து வருகின்றது. இந்நிதி நடவடிக்கை பிரிவில்இந்தியாவும் அங்கம் வகிக்கிறது.

huji Bangaladesh
எல்லைகளைக் கடந்து, அனைத்து நாட்டு சட்டங்களையும் மீறும் தீவிரவாதம்–பயங்ரவாதங்கள்: பிரேசில், செக் குடியரசு, லிபியா மற்றும் பாலஸ்டைன் நாடுகளில் தீவிரவாதம்-பயங்ரவாதங்களைத் தாண்டிய காரியங்களுக்கும் நிதி சென்றைகிறது[2]. தீவிரவாதம்-பயங்ரவாதங்களில் ஈயுபடுபவர்கள், அவர்களை ஆதரிப்பவர்கள், அவர்களுக்கு பொருளுதவி-நிதியுதவி கொடுப்பவர்கள், பதிலுக்கு அவர்களிடம் நலன்–லாபம் பெறுபவர்கள், இவற்றையே வாழ்நாள் வேலை-வியாபாரம்-தொழில் போன்று நடத்தி வருபவர்கள் என்று உலகளவில் லட்சக்கணக்கில் உள்ளனர்.
- தீவிரவாதம்-பயங்ரவாதங்கங்களைத் தொடர்ந்து நடத்திவருவது.
- அதற்கான பொருளுதவி-நிதியுதவி பெறுவது.
- சினிமா-போர்னோகிராபி, திருட்டு வீடியோ உற்பத்தி செய்தல், விநியோகம், விற்பனை.
- கள்ளநோட்டு அச்சடிப்பு-விநியோகம்.
- பெண்கள் – குழந்தைகள் கடத்தல், விற்றல்.
- போதை மருந்து உற்பத்தி செய்தல், விநியோகம், விற்பனை.
- ஆயுத உற்பத்தி, விநியோகம், விற்பனை.
- திருட்டு அகழ்வாய்வு, புராதனப் பொருட்களைக் கொள்ளையெடித்தல், விற்றல்.
- இவற்றிற்குண்டான தொழிற்நுட்பம், திறமை அறிந்தவர்களை தேடிபிடித்தல், வேலைக்கு வைத்தல்.
- ஈடுபடும் தீவிரவாத-பயங்கரவாதிகளுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்தல்.
- பொருளுதவி-நிதியுதவி கொடுக்கும் தனிமனிதர்கள், இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கு பதிலுக்கு எல்லா வழிகளிலும் உதவுவது.
இப்படி சுழற்சிகளாக விருப்பங்கள், நாதல்கள், தேடல்கள் முதலியன உள்ளதாலும், கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதாலும், இவை ஜோராக வேலை செய்து வருகின்றன.

ஐ.எஸ் கொடி
ஐஸில் மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களின் [ISIL (Islamic State of in Iraq and the Levant) and other terrorist groups] அச்சுருத்தல்: இந்நிலையில், எப்.ஏ.டி.இ., வெளியிட்டுள்ள அறிக்கை[3]: இதுகுறித்து அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஐஸில் மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களின் [ISIL (Islamic State of in Iraq and the Levant) and other terrorist groups] அச்சுருத்தல் காரணமாக, உலகம் முழுவதும் இத்தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி அளிக்கும் பண-பரிமாற்றம் மற்றும் தீவிரவாத-தடுப்பு நிதி முறை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, எஃப்.ஏ.டி.எஃப் அமைப்பின் பரிந்துரைகளின்படி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியளித்தல் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பது குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது[4]. அவற்றின் மூலம் பெறப்பட்ட விவரங்கள் சில பரிமாரப்பட்டன. இனைத்து ஜி-20 நாடுகளுக்கும் இவ்விசயத்தில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்தன.
ஹிஜ்–உல்–முஜாஹித்தீன் இலக்கில் இந்தியா: பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்கும் நடவடிக்கைகள், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[5]. இந்நிலையில் தடை செய்யப்பட்ட ஹிஜ்-உல்-முஜாஹித்தீன் [Hizb-ul-Mujahideen (HM)] அமைப்பிற்கு சில வங்கிகள் மூலம் பணம் செல்வது அறியப்பட்டது. இது தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத-பயங்கரவாத காரியங்களை மேற்கொண்டு வருகின்றதுகீதனால், பெருத்த உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டு வருகின்றது. கடந்த எட்டாண்டுகளில் ரூ.80 கோடிகள் நிதி திரட்டியது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து இப்பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது[6]. இந்த நிதி பாகிஸ்தான், மண்ணில் வைத்து, பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு, இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள், ஆடைகள், தகவல் தொடர்புக்காகும் செலவீனங்கள் போன்றவை ஈடுகட்டப்படுகின்றன[7]. அதுமட்டுமின்றி, தீவிரவாத தாக்குதலின்போது, பதிலடியால் பலியாகும், தீவிரவாதிகளின் குடும்பத்தினருக்கு, நிவாரண தொகையாகவும், இந்த பணம் சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது[8].
லஸ்கர்–இ–தொய்பா மற்றும் ஹர்கத்–உல் ஜிஹாதி இஸ்லாமி இலக்கிலும் இந்தியா: இது தவிர, லஸ்கர்-இ-தொய்பா[ Lashkar-E-Taiba (LeT)] மற்றும் ஹர்கத்-உல் ஜிஹாதி இஸ்லாமி [Harkat-Ul Jihadi Islami (HUJI)] போன்ற தீவிரவாத இயக்கங்களும், பணம் கொடுத்து தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி வைக்கின்றன. அவர்கள் மும்பையில் நுழைந்து, பிரபங்களைத் தாக்குவது போன்ற காரியங்களில் ஈடுபடப்போவதாக தகவல்கள் கிடைத்தன. கள்ளநோட்டுகளை வாங்குவது, புழக்கத்தில் விடுவது போன்றவற்றிலும் குறிப்பிட்ட நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட நபர், இந்தியா மற்றும் டென்மார்க் நாடுகளில் சில இடங்களைத் தாக்க, கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் அளவுக்கு அச்சடிக்கப்பட்ட, கள்ளப்பணம் கொடுக்கப்பட்டது, தெரிய வந்தது[9]. இந்திய அரசு, இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை 37 பேருக்கு சொந்தமான, 3 லட்சம் ஈரோ (சுமார் ரூ.2.13 கோடி) இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது[10]. இந்த, 37 பேரும், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[11].
ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களின் இலக்காக உள்ள இந்தியா: செப்டம்பர் 2013ல் ஹக்கானி என்ற இஸ்லாமிய இயக்கத்தின் பிரிவான தலிபான் குழுவொன்று தாம் தான் சுஷ்மிதா பானர்ஜியைக் கடத்திச் சென்று கொன்றதாக ஒப்புக் கொண்டது. அப்பொழுது தான் இந்தியா பல ஜிஹாதி இயக்கங்களின் இலக்கில் உள்ளது என்று தெரிய வந்தது. ஆப்கானிஸ்தானிய மவ்லவி ஜலாலுத்தீன் ஹக்கானி 1980களில் இந்த இயக்கத்தை ஆரம்பித்து தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறார்[12]. ஹக்கானி குழுவினர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அரேபிய வளைகுடா நாடுகள் மற்றும் அதற்கு அப்பால் தமது ஆதிக்கத்தைச் செல்லுத்தி ஆண்டு வருகின்றனர். இறக்குமதி, ஏற்றுமதி, கட்டுமானம், போகுவரத்து என்று எல்லா வியாபாரங்களிலும் நுழைந்து, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், கந்துவட்டி, பணம் பிடுங்குதல் முதலியன செய்து, பணம் பெருக்கிவருகின்றன. போதைமருந்து, ஹவாலா, பணபரிமாற்றம், போன்ற எல்லா சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளன. ஆனால், எல்லாவற்றையும் “ஜிஹாத்” போர்வையில் நடத்தி வருகின்றன.
இந்தியர்கள் செய்ய வேண்டியது என்ன?: தீவிரவாதம் இந்தியாவில் நுழைந்து மும்பை தாக்குதல் என்று அனுபவித்தாகி விட்டது, பயங்கரவாதம் என்று கெண்டுவெடிப்புகளிலும் ரத்தம் கொட்டியாகி விட்டது. ஜிஹாதி என்று தினமும் எல்லைகளைக் கடந்த துப்பாக்கி சூடுகள், ராணுவ வீரர்கள் பலி, அப்பாவி மக்கள் பலி, வீடுகள் தாக்கல் என்றா நிலையும் தொடர்கிறது. அங்கங்கு உள்ளூர் ஜிஹாதி, இந்திய முஜாஹத்தீன் போன்ற குரூர கொலைகள், கண்டுவெடிப்புகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், அமைதியைக் காக்க, பொருளாதாரத்தை மேன்படுத்த, ஆவண செய்யாமல், பொறுப்பற்ற முறையில் அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். தீவிரவாதத்தை மதத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது என்றாலும், மறுபடி-மறுபடி முஸ்லிம்கள் தான், உலகளவில் அச்செயல்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். மதரீதியில் அவர்கள் அவ்வாறு பிரகடனப்படுத்திக் கொள்வதாலும், மதசித்தாந்தங்கள் மூலம் தான் தாங்கள் உற்சாகம் பெற்று நடந்து கொள்வதாலும், அவ்வாறே பேசி வருவதாலும், உண்மை வெளிப்பட்டுதான் வருகிறது. மற்ற அமைதியை விரும்பும் முஸ்லிம்கள் தான் இவர்களை, இவற்றைத் தடுக்க முடியும். முஸ்லிம்கள், முஸ்லிம்களை எதிர்ப்பது என்பதில் கூட, ஐசிஸ் போன்றவை ஷியாக்களைக் கொன்று வருகிறது. பிறகு, சுன்னி இஸ்லாம் தீவிரவாதம் தனிமைப்படுத்தப் படுகிறது. ஆகவே, இந்தியாவைப் பொறுத்த வரையில், இந்திய முஸ்லிம்கள் அல்லது இஸ்லாத்தைப் பின்பற்றும் இந்தியர்கள், இந்தியர்களாக செயல்பட வேண்டும். செக்யூலரிஸ போர்வையில், அரசியல்வாதிகள் செய்து வரும் போலித்தனங்களில், தாங்களும் ஈடுபட்டால், அது அவர்களை ஆதரிப்பது போலாகிறது. அதனால் தான், ஹிஜ்-உல்-முஜாஹித்தீன், லஸ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-உல் ஜிஹாதி இஸ்லாமி, ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களின் இலக்காக உள்ள இந்தியா!
© வேதபிரகாஷ்
20-11-2015
[1] தினத்தந்தி, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி 37 நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம் மத்திய அரசு நடவடிக்கை,மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 20,2015, 1:18 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 20,2015, 1:18 AM IST.
[2] http://www.deccanherald.com/content/512885/assets-37-entities-individuals-frozen.html
[3] தினமலர், புதுடில்லி:37 பேர் சொத்துக்கள் முடக்கம், நவம்பர்.19.21.47.
[4] தினமணி, பயங்கரவாதத்துக்கு நிதி: ரூ.2.12 கோடி வங்கி இருப்பு முடக்கம், By புது தில்லி, First Published : 20 November 2015 03:17 AM IST.
[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1390750
[6] In related findings for India, the FATF in a report brought out last month, chronicled the use of banking channels to fund the activities of the banned terror group Hizb-ul-Mujahideen (HM). The group has carried out many attacks and killings in India including in the Kashmir Valley. The gவிற்குள்bal body, quoting official submissions made by Indian investigators to it, said the HM raised over Rs 80 crore in the last eight years for “furthering terror activities” in India. “An ongoing investigation in India alleges that Hizb-ul-Mujahideen (HM) has been receiving funds originating from Pakistan through different channels in support of its terrorist activities in India. HM is claimed to be actively involved in furthering terrorist activities in India and has raised over INR 800 million within the past eight years. This group has been designated as a terrorist organisation by India, US and the European Union.
[7] தமிழ்.ஒன்.இந்தியா, இந்தியாவில் தாக்குதல் நடத்த ரூ.80 கோடி திரட்டியுள்ள ஹிஸ்ப்–உல்–முஜாகிதீன்: திடுக் தகவல், Posted by: Veera Kumar, Published: Thursday, November 19, 2015, 11:33 [IST]
[8] http://tamil.oneindia.com/news/international/terror-outfit-raised-over-rs-80-crore-8-years-fund-terror-in-240178.html
[9] http://economictimes.indiatimes.com/news/defence/terror-funds-india-freezes-accounts-of-over-3-dozen-suspects/articleshow/49844171.cms
[10]http://www.dinamani.com/india/2015/11/20/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82.2.12-/article3137487.ece
[11] http://www.dailythanthi.com/News/India/2015/11/20011811/Financial-assistance-to-terrorist-organizations-Freezing.vpf
[12] Gretchen Peters, Haqqani Network Financing: The Evolution of an Industry, Harmony Program, The Compating Terrorism Center at West Point, July 2012.
அண்மைய பின்னூட்டங்கள்