Posted tagged ‘ஹிஹாதி கொலை’

கேரளாவில் ஓடும் ரயிலுக்கு தீவைத்த ஷாருக் செய்பி – கோத்ரா போன்ற சம்பவம் தவிர்ப்பு- தீவிரவாத தொடர்பு உறுதி – தொடரும் விசாரணை!

ஏப்ரல் 18, 2023

கேரளாவில் ஓடும் ரயிலுக்கு தீ வைத்த  ஷாருக் செய்பி – கோத்ரா போன்ற சம்பவம் தவிர்ப்பு- தீவிரவாத தொடர்பு உறுதி – தொடரும் விசாரணை!

02-04-2023 – கேரள ரயிலுக்கு தீ வைத்தது: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக் செய்பி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கடந்த 2ம் தேதி 02-04-2023 கண்ணூருக்கு எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது[1]. அப்போது பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது[2]. எலத்தூர் அருகே சென்ற போது மர்மநபர் ஒருவர் டி 1 / D1  பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.   இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தீ பற்றிக் கொண்டதால், பயணியர் அலறி அடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். இந்த சமயத்தில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் ரஹ்மத் (42). அவளது இரண்டு வயது குழந்தை ஜஹ்ரா மற்றும் கே.பி. நௌபிக் (39) என்று தெரிய வந்தது. ஆக மொத்தம், இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். இதற்குள் பிரயாணிகள் அடுத்த பெட்டிகளுக்கு ஓடினர். செயின் இழுக்கப் பட்டு, ரெயிலும் நிறுத்தப் பட்டது. அனால், அதற்குள் தீ வைத்தவன் தப்பித்து ஓடிவிட்டான்.

தீ வைத்தவனின் பேக் கிடைத்தது: இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசாரும் கேரள அதிரடி படையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தீயில் எரிந்து பலியானவர்கள் பற்றிய விபரம் தெரிந்தது. மேலும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ரெயில் பெட்டியில் கிடந்த மர்மநபரின் உடமைகளை போலீசார் கைப்பற்றினர். அதில் ஒரு செல்போன், ஒரு டைரி மற்றும் பெட்ரோலுடன் கூடிய பாட்டில் ஆகியவை கிடைத்தது. அந்த டைரியில் கேரளாவின் முக்கிய நகரங்களான திருவனந்தபுரம், கழக்கூட்டம் மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல், கன்னியாகுமரி ஆகிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. போலீசார் கைப்பற்றிய செல்போனில் சிம் கார்டு எதுவும் இல்லை. ஒருவேளை உஷாராக அந்த நபர் எடுத்திருக்கக் கூடும். மேலும் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அதில் இருந்து யார்-யாருடன் பேசப்பட்டது என்ற தகவலை போலீசார் கண்டுபிடித்தனர்.

தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா?: சம்பவ இடத்திற்கு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், ADGP கோழிக்கோடு மேயர் உட்பட அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்[3]. தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[4]. அதாவது, முதலில் அவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்பதால், இவ்வாறு யூகங்கள் வெளியிடப் பட்டன. தீவிரவாத கோணம் தவிர்க்கப் பட்டது. ஆனால், அவனது பையில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் செல்போன் தொடர்புகள் அவ்வகையில் தான் இருந்தன. இது இன்னொரு “கோத்ரா” சம்பவம் போன்று ஆகாமல் தடுக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. அப்பெட்டியில் முஸ்லிம்கள் இருந்தது ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. ஏனெனில், ரயிலில் கணிசமாக முஸ்லிம்கள் பயணித்து வருவது ஒன்றும் ஆச்சரியமான விசயமும் இல்லை.

உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி தான் தீ வைத்த நபர்: இதில் உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி என்ற வாலிபர் பற்றிய தகவல் தெரியவந்தது. கேரள முதலமைச்சர் மத்திய ரெயில்வே அமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் எல்லா உதவிகளையும் கொடுக்க உறுதி அளித்தார். இவரது உருவத்தை ரெயிலில் இருந்த பயணிகள் உதவியுடன் போலீசார் புகைப்படமாக வரைந்தனர். அந்த படம் மூலம் ரெயிலில் 3 பேரை எரித்து கொன்ற நபரை பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் அந்த நபர், கோழிக்கோட்டில் இருந்து உத்தரபிரதேசத்தின் நொய்டாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. உடனே கேரள போலீசார், உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் காசியாபாத் அதிரடி படையினரின் உதவியுடன் அந்த நபரை பிடிக்க சென்றனர். அவர் ஒரு தச்சு தொழிலாளி என தெரியவந்தது. அவரது பெயரும் ஷாருக் செய்பி என கூறப்பட்டது. இதையடுத்து காசியாபூர் அதிரடி படையினர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கடந்த 2 மாதங்களாக ஊரை விட்டு எங்கும் சென்றதில்லை என தெரியவந்தது. மேலும் அவரது தந்தை தனது மகன் ஊரை விட்டு எங்குமே சென்றதில்லை எனவும் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை விடுவித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் கைது: இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் கைது செய்யப்பட்டார்[5]. ஷாருக் செய்பி கேரள போலீசின் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், மத்திய ஏஜென்சிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன[6]. இதனிடையே சந்தேகப்படும் நபரை கைது செய்ய உதவிய மகாராஷ்டிரா அரசுக்கும், போலீஸாருக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்துள்ளார்[7]. தீ வைப்பு சம்பவத்திற்கு தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம்? என்ற சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து தான் மத்திய ஏஜென்சிகள் விசாரணையை தொடங்கின[8]. இதில், சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக் சைஃபியை போலீஸ் காவலில் எடுத்துள்ள போலீசார், கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், கேரள ரயிலில் தீ வைத்த சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்[9]. தொடர்ந்து கேரள ரயில் விபத்து சம்பவத்தின் போது ஷாருக் சைஃபியின் நடவடிக்கைகளை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. இந்தநிலையில் ஷாருக் செய்பி மீது கேரள போலீசார் தீவிரவாத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு விரைவில் என்ஐஏவுக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

தீ வைக்கும் திட்டத்துடன் தான் கேரளா வந்தார்: கேரள சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் கூறியதாவது: “செய்பியிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் தான் அவர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தீ வைத்தது தான் தான் என்று வாக்குமூலம் கொடுக்கும் பொழுது ஷாருக் செய்பி ஒப்புக்கொண்டுள்ளார்[11]. அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. பயணியரை தீ வைத்து எரிக்க பயன்படுத்திய பெட்ரோலை, சம்பவத்தன்று அதிகாலை ஷொர்ணுார் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் இருந்து ஷாரூக் சைபி வாங்கி உள்ளார்[12]. இதற்கு அவருக்கு யாரோ உதவி செய்துள்ளனர். அவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகிறோம்[13]. இவர் தீவிரவாத எண்ணம் கொண்டவர். ஜாகீர் நாயக், இஸ்ரா அகமது போன்றோரின் வீடியோக்களை அடிக்கடி பார்த்து வந்துள்ளார். ரயிலில் தீ வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் இவர் கேரள வந்துள்ளார். இவருக்கு வேறு யாருடைய அல்லது அமைப்புகளின் உதவி கிடைத்துள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது. இவர் தற்போது தான் முதன் முறையாக கேரளா வந்துள்ளார்…..,”.இவ்வாறு அவர் கூறினார்.

© வேதபிரகாஷ்

18-04-2023


[1] தினகரன், கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளை கொளுத்திய ஷாருக் செய்பி மீது உபா சட்டம் பாய்ந்தது: என்ஐஏவுக்கு வழக்கு மாற்றப்படுகிறது?, April 18, 2023, 12:36 am.

[2] https://www.dinakaran.com/kerala-running-train-passenger-shahrukh-seybi-fire-upa-act-flown-nia-case-being-transferred/

[3] தமிழ்.நியூஸ்.18, ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைப்பு.. 3 பேர் பலிகேரளாவில் பயங்கரம், NEWS18 TAMIL, First published: April 03, 2023, 08:18 IST, LAST UPDATED : APRIL 03, 2023, 08:20 IST.

[4] https://tamil.news18.com/national/man-sets-co-passenger-on-fire-in-kerala-train-3-dead-8-injured-925276.html

[5] மாலைமலர், கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பயணிகள் எரித்து கொலைமுக்கிய குற்றவாளி மராட்டியத்தில் சிக்கினார், By மாலை மலர், 5 ஏப்ரல் 2023 6:18 PM

[6] https://www.maalaimalar.com/news/national/tamil-news-maharashtra-man-arrested-for-passengers-murder-case-in-kerala-592844

[7] தமிழ்.இந்து, கேரள ரயிலில் தீவைத்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது, செய்திப்பிரிவு, Published : 06 Apr 2023 06:54 AM, Last Updated : 06 Apr 2023 06:54 AM

[8] https://www.hindutamil.in/news/india/971699-main-culprit-arrested-in-kerala-train-arson-case.html

[9] தந்திடிவி, ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம்கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பா?, By தந்தி டிவி 14 ஏப்ரல் 2023 3:16 PM.

[10] https://www.thanthitv.com/latest-news/incident-of-setting-fire-to-passengers-in-a-moving-train-is-it-related-to-the-coimbatore-blast-179963

[11] தந்திடிவி/தினத்தந்தி, நாட்டையே உலுக்கிய கேரள ரயில்தீ‘ – பின்னணியில் யார்..? கைதான ஷாருக் பரபரப்பு வாக்குமூலம், By தந்தி டிவி 17 ஏப்ரல் 2023 9:08 PM

https://www.thanthitv.com/latest-news/kerala-train-fire-that-rocked-the-country-who-is-behind-it-shahrukh-khans-sensational-confession-180645

[12] தினமலர், ஓடும் ரயிலில் தீ விசாரணையில் திடுக் தகவல், பதிவு செய்த நாள்: ஏப் 09,2023 01:07…

[13] https://m.dinamalar.com/detail.php?id=3288915

லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?

மார்ச் 16, 2013

லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?

Fidayeen attack 4

13-03-2013 புதன்கிழமைகாலை 11.00 மணி[1]: காஷ்மீரில் பெமினா என்ற இடத்தில் உள்ள பொது பள்ளிக் கூடத்திற்கு அருகில் CRPFயின் 73ம் முகாம் (CRPF’s 73rd battalion) உள்ளது. இந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், அப்பொழுது, மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பள்ளி மைதானத்தில் சிகப்பு டி-சர்ட், கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை டி-சர்ட், கருப்பு பேன்ட் அணிந்த இருவர் கிரிக்கெட் கிட்டுடன் மைதானத்தில் நுழைந்தனர். அருகில் பாதுகாப்பு வீரர்களும் நின்றிருந்தனர். சிறிது நேரம் விளையாடுபவர்களிடத்தில் பேச்சு கொடுத்தனர்.

Fidayeen attack 1

13-03-2013 புதன்கிழமைகாலை 11.05 மணி[2]: பேசிக் கொண்டேயிருந்தவர்கள், திடீரென்று, கிரிக்கெட் கிட்டைத் திறந்து, ஏ.கே-47 மற்றும் கையெறிக் கொண்டுகளை எடுத்து, CRPF வீரர்கள் மீது வீசி, சுட ஆரம்பித்தனர். இதில் ஐந்து வீரர்கள் உடனடியாக இறந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர். விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் ஓட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட வீரர்கள் தீவிரவாதிகளின் மீது சுட ஆரம்பித்தனர். பதினைந்து நிமிடம் துப்பாக்கி சூடு நடந்தது, இறுதியில் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் ஃபிதாயீன் என்ற ஜிஹாதித் தற்கொலைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[3].

Fidayeen attack 2

கொல்லப்பட்டவீரர்கள்பலமாநிலங்களைச்சேர்ந்தவர்கள்: ஜிஹாதி தீவிரவாதம் காஷ்மீரத்தில் குரூரக்கொலையில் ஈடுபட்டாலும், கொலை செய்யப்பட்ட வீரர்கள் இந்தியாவின் பல மாரநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

  1. ஏ. பி. சிங் – assistant sub-inspector A.B Singh of Ujjan, Madhya Pradesh,
  2. ஓம் பிரகாஷ் – constable Om Prakash (Sehore, MP),
  3. எல். பெருமாள் – constable L. Perumal (Madurai, Tamil Nadu),
  4. சுபாஷ் – constable Subhash (Ranchi, Jaharkand) and
  5. சதீஷ் ஷா – constable Satish Shah (Mandya, Karnataka).

Fidayeen attack 3

கைப்பற்றப்பட்டஆயுதங்கள்: கிரிக்கெட் கிட் என்று எடுத்து வந்ததில், உள்ளேயிருந்த ஆயுதங்கள்:

  • இரண்டு ஏ.கே-47 துப்பாக்கிகள் – Two Ak-47 rifles,
  • அதற்கான வெடிப்பொருட்கள் – five Ak magazines,
  • ஆறுமுறை உபயோகிக்கக்கூடிய குண்டுகள் – six AK rounds,
  • இரண்டு சீன கைத்துப்பாக்கிகள் – two Chinese pistols,
  • இரண்டு முறை சுட குண்டுகள் – two pistol rounds,
  • கைக்குண்டு தூக்கியெறியும் கருவி – one UBGL –  Under Barrel Grenade Launcher,
  • அதற்கான மூன்று குண்டுகள் – three UBGL grenades and
  • நான்கு கையெறி குண்டுகள் – four hand grenades

Fidayeen attack 5

கடந்த ஜனவரி 6-7, 2010 தேதிகளில் இதே மாதிரி, இந்த தீவிரவாதிகள், லால் சௌக்கில் ஒரு பஞ்சாப் ஓட்டலில் மறைந்து கொண்டு பாதுகாப்பு வீரர்களுடன் சண்டை போட்டனர். அப்பொழுது தங்களை லஸ்கர்-இ-தொய்பா என்று சொல்லிக் கொண்டனர். அதாவது “பிதாயீன்” என்பது பொதுப்பெயர், ஜிஹாதி போல!

தாக்குதலைநடத்தியவர்கள்யார்?: ஜிஹாதி தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று எல்லாவிதமான இஸ்லாமிய கொலைவெறிக் கும்பல்களுடன் மக்களில் பெரும்பாலோர் தொடர்பு வைத்திருப்பதனால், தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி, பலவிதமான செய்திகள் வெளிவந்த வண்னம் இருந்தன[4]. ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் தாக்கினர் என்று தொலைபேசி மூலம் யாரோ அறிவித்தாக மகூறி, பிறகு அவர்கள் மறுத்துள்ளதாக அறிவித்தனர். பிறகு லஸ்கர்-இ-தொய்பா தாக்குதல் மாதிரி இருக்கிறது என்று அபதுல் முஜாதபா என்ற போலீஸ் அதிகாரி கூறியதாக கூறினர். ஆனால் மாட்டிக் கொண்ட[5] “அபு தல்ஹா” என்ற ஜிஹாதியிடமிருந்து, இது “பிதாயீன்” வேலைதான் என்று தெரியவந்துள்ளது[6]. “பிதாயீன்” என்ற ஜிஹாதிகள் தம் உயிரையும் கொடுத்து காபிர்களைக் கொல்லும் ஜிஹாதிகள். குரான் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, இத்தகைய வேலைகளை செய்கிறார்கள். ஏனெனில் அல்லா அவர்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ளதாக நம்புகிறார்கள். முன்னர் ஷிண்டே ராஜ்ய சபாவில் பாகிஸ்தானிய தொடர்பு உள்ளதாக கூறியிருக்கிறார்[7]. பிறகு அந்த தலைவெட்டியானிடமே குர்ஷித்தை விட்டுக் கேட்டிருக்கலாமே?

Kashmir terror

ஜிஹாதி தாக்குதலில் தமிழக வீரர் இறப்பு: பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் பலியான மதுரை வீரர் எல். பெருமாள் உடல் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. செல்லூர் ராஜா – தமிழக அமைச்சர், அன்சுல் மிஸ்ரா – மாவட்ட கலெக்டர், ஓம் பிரகாஷ் -CRPF கமாண்டெர், பாலகிருஷ்ணன் – மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்[8]. அமைச்சர் ரூ. ஐந்து லட்சம் தொகைக்கான செக்கை குடும்பத்தாருக்கு அளித்தார். சேடபட்டி முத்தையா –திமுக, இல. கணேசன் – பிஜேபி, ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் முதலிய இயக்கத்தோடும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செல்லுத்தினர்[9].

al-jihad-al-jihad-al-jihad

ஜிஹாதி முஸ்லீம்கள் தாக்கிக் கொன்றுள்ளதால் பகுத்தறிவு தமிழர்கள் கண்டனம் செல்லுத்தவில்லையா?: ஜம்மு காஷ்மீரில் கடந்த (13 ம் தேதி) புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பெருமாள் என்பவரும் ஒருவர். இவரது உடல் நேற்று இரவு சென்னைக்கு வந்தது. இடையப்பாடியில் இருக்கும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுமார் 11 மணி அளவில் தும்மநாயக்கன்பட்டி கிராமத்திற்கு வந்தது. தெருக்கள் எல்லாம் கருப்புக் கொடிகளினால் துக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்: “இது போன்ற பயங்கரவாத சம்பவத்தை தடுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை”, என்றார்.  ஏன் மற்றவர்கள் எதுவும் சொல்லக்கூடாதா?

11 முறை தோற்று வெண்ர பெருமாள், 17-முறை தாக்கிய கஜினி முஹம்மது ஜிஹாதிக்கு பலியாகி விட்டாரா?: பலியானவர் பெருமாள் (வயது 29) மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை லிங்கம் ஆட்டோ டிரைவர் ஆவார். மொத்தம் 5 குழந்தைகள் பெற்ற இவருக்கு பெருமாள் என்பவர் மிக பாசமாக இருப்பாராம். பெருமாள் 10 ம் வகுப்பு வரை படித்து எப்படியாவது ராணுவ படையில் சேர வேண்டும் என்று பெரும் ஆவலோடும், லட்சிய கனவோடும் இருந்து வந்தாராம். இந்த படையில் சேருவதற்கான தேர்வில் பல முறை தோற்று போனாராம். குறிப்பாக 10 முறை இவர் தேர்வாகவில்லை இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து 11 வது முறை படைக்கு பிட் ஆனாராம். தேர்வு செய்யப்பட்ட தகவலை அவர் தனது கிராமம் முழுவதும், உற்றார் உறவினர்களிடம் பெரும் செய்தியாக தெரிவித்து மகிழ்ந்தாராம் பெருமாள்.

Indian flag burned

திருமணத்திற்கு ஜிஹாதிகள் பிணத்தை அனுப்பியுள்ளார்களே?: கடந்த 2010 ல் பணியில் சேர்ந்த பெருமாள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு பணியாற்றிய 3 ஆண்டில் தனது இன்னுயிரை இழந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முறை விடுப்புக்கு வந்த பெருமாள் திருமணம் செய்வது தொடர்பாக தனது உறவுக்கார பெண்ணை பார்த்து உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார். வரும் ஜூன் மாதம் ஊருக்கு வருவேன் அப்போது திருமணம் செய்து கொள்வோம் என்று வாக்கு கொடுத்து சென்றவர் இன்று பிணமாக திரும்பியதை கண்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.  இவரது உடல் இன்று சொந்த கிராமத்திற்குகொண்டு வரப்பட்டது.அமைச்சர் , மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக போலீசார் சார்பில் 21 குண்டுகளும், சி.ஆர்.பி.எப்., போலீசார் சார்பில் 21 குண்டுகளும் வானத்தை நோக்கி சுடப்பட்டன. வருவதையொட்டி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் காத்து நிற்கின்றனர். மதுரையில் மாவட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவ்வளவுதான், மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், ஏன் இப்படி இந்தியா வீரர்களை ஜிஹாதிகளுக்கு பலியாக்க வேண்டும்?

Karunanidhi-with-kulla

Karunanidhi-with-kulla

என்ன நடந்தாலும், குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கும் பட்டாளம் நஎப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் குர்ஷித் போன்ற பேனாக்களில் ரத்தத்தை நிரப்பும் முஸ்லீம்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும், எதிரிகளுடன் உணவருந்துவார்கள்!

வேதபிரகாஷ்

16-03-2013


[4] Police say two pocket diaries; a SIM card of an Indian telecommunication company issued in Uri, an ointment tube made in Pakistan; an under-surveillance guerilla activity controlled by a Kashmiri militant for several weeks at Palhalan village of Baramulla; the Hizbul Mujahideen’s first-ever claim of owning up a suicide attack; the Lashkar-e-Taiba spokesman’s “meaningful quiet”; no local claim on the two bodies (of the militants); besides some telephonic intercepts and call detail records pieced together by the investigators make the fidayeen attack “a clear case of foreign terror.” “We have noticed the signature of the Lashkar-e-Taiba in this operation,” a senior official associated with the investigation told The Hindu. He refused to disclose details but was confident that a breakthrough was not far away. “An operation jointly planned and executed by the Kashmiri and Pakistani cadres of the LeT in coordination with the United Jihad Council,” he said when pressed to identify the actors.

[6]However, another police source told The Hindu that on specific information, the militant in his late 20s, codenamed Abu Talha, was arrested with a loaded pistol during a dramatic raid. The Army and the CRPF provided cover to the SOG unit.

http://www.thehindu.com/news/national/other-states/pakistani-militant-linked-to-fidayeen-attack-arrested/article4509622.ece