Posted tagged ‘ஹிஜ்புல் முஜாஹித்தீன்’

ஹைடெக்-ஜிஹாத் தீவிரவாதம், இணைதள ஆட்சேர்ப்பு, சேடிலைட்-போதனை, ஆனால், குண்டுவெடிப்பில் சாவுதான், ரத்த பீறல்தான், கைகால் சேதம் தான்!

ஜூலை 10, 2016

ஹைடெக்-ஜிஹாத் தீவிரவாதம், இணைதள ஆட்சேர்ப்பு, சேடிலைட்-போதனை, ஆனால், குண்டுவெடிப்பில் சாவுதான், ரத்த பீறல்தான், கைகால் சேதம் தான்!

J-K - New type of young terrorists- Tral hotbed of terror

ரம்ஜான் முடியும் வாரத்தில் நடந்த தீவிரவாத கொலைகள் 07-07-2016 வரை: முதல் வாரத்தில் ரம்ஜான் முடியும் தருவாயில் உலகத்தில் பல இடங்களில் இஸ்லாம் பெயரில் தீவிரவாத குண்டுவெடிப்புகள், துப்பாக்கி சூடுகள், குரூர கத்திக் குத்துகள்-வெட்டுகள் என்ற முறையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொலைசெய்யப் பட்டிருக்கிறார்கள். தினபதற்கு விலங்குகள் என்றால், அவர்களது ஜிஹாதி-பசிக்கு மனிதர்களே தேவைப்பட்டனர் போலும். 01-07-2016 மற்றும் 07-07-2016 தேதிகளில், இந்தியாவுக்குள் இருக்கும் அண்டை நாடான பங்களாதேசத்தில் 9/11 மற்றும் போன்ற தாக்குதலில் மக்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். அதே வாரத்தில் தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அதே போன்ற தீவிரவாத செயல்கள் தினம்-தினம் நடந்து கொண்டிருந்தன. இந்திய ராணுவத்திற்கு, இந்தியாவும் தாக்கப்படும் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன. அந்நிலையில் தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று சுட்டுக் கொன்றனர்.

Burhan Wani - praised by Urudu PAK media

08-07-2016 வெள்ளிக்கிழமைபாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டதால், பதிலுக்கு சுட்டதில் கொலை: இதுகுறித்து அந்த மாநில காவல் துறை டிஜிபி கே.ராஜேந்திரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது[1]: “பர்ஹன் முசாஃபர் வானி (21) என்ற பயங்கரவாதி, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்து இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர வைக்க முயற்சி செய்து வந்தார். இவரைப் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் கோகெர்நாக் பகுதியில் அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்ற பாதுகாப்புப் படையினர், அவரைத் தேடினர். அப்போது, ஓர் இடத்தில் பதுங்கி இருந்த பர்ஹன் முசாஃபரும், மேலும் 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்”, என்று ராஜேந்திரா தெரிவித்தார். காஷ்மீரின் புதிய தீவிரவாதத்தின் போஸ்டர் பாய் என்று அழைக்கப்படும், 21 வயதான பர்ஹன் முசாஃபர் வானி தனது 15-ஆவது வயதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை அறிவித்திருந்தது[2].

J-K - New type of young terrorists- Pandits, Bhats turning into jihadists

ஹிஜ்புல் முஜாஹித்தீன் அட்டகாசமும், புர்ஹான் வானியின் இணைதள ஜிஹாதும், உண்மையன ஜிஹாதும்: கடந்த 1989ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரித்து தர வேண்டுமென்று ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரையும் கொன்றுள்ளது, என்றாலும், மத அடிப்படையில் நடந்து வரும் அத்தகைய தீவிரவாதம், காஷ்மீரத்திலிருந்து எல்லா இந்துக்களையும் கொன்று விட்டது, மிச்சமிருந்தவர்களை விரட்டி விட்டது என்று இங்கு குறிப்பிடவில்லை. இந்த இயக்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தார் புர்கான் என்ற 21 வயது இளைஞர். இவரை 08-07-2016 அன்று இரவு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி ஆகும். பள்ளித் தலைமையாசிரியரின் மகனான புர்கான், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தான். ஒருகட்டத்தில்  படிப்பில் நாட்டமில்லாமல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாக காணாமல் போனான். இதுவே முரண்பாடாக இருக்கிறது. படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பவன் எப்படி படிப்பில் நாட்டமில்லாமல் போவான் என்று “விகடன்” விளக்கவில்லை. பெற்றோர்கள் அத்தகைய மாற்றத்தைக் கண்காணித்து சரிபடுத்தியிருக்க வேண்டும். பின்னர் ஹிஸ்புல் இயக்கத்தில் சேர்ந்திருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அப்போது அவனுக்கு வயது 15 தான். அபோழுதாவது தவறு என்று சுட்டிக் காட்டி, மகனை மீடிருக்க வேண்டும். செய்யவில்லை என்றே தெரிகிறது.

 J-K - New type of young terrorists

தேசத்துரோகியை புகழ்ந்து தள்ளிய தமிழ் ஊடகங்கள்: இணையதளங்கள், சமூக வலைத் தளங்களை கையாளுவதில் புர்கான் கெட்டிக்காரனாக இருந்ததால், இதன் வாயிலாக தீவிரவாத இயக்கத்துக்கு வேண்டிய நபர்களை தேர்ந்தெடுப்பதில் திறமையாக செயல்பட்டான், என்று திடீரென்று “விகடன்” கூறுகிறது. அவ்வாறான திறமையை அவன் எப்படி, எங்கு, எவ்விதம் பெற்றான் என்று விளக்கவில்லை. தீவிரவாதச் செயல்களை வீடியோவாக பதிவு செய்து அதனை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவான்[3]. அதற்கு லைக் போடுபவர்கள், காமாண்ட் போடுபவர்களை குறி வைத்து நட்பாக்கிக் கொள்வான்[4]. பின்னர் அந்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து இயக்கத்தில் சேர்க்கும் வேலையில் ஈடுபடுவான். அப்படி 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை அந்த இயக்கத்தில் புர்கான் சேர்த்துள்ளான்[5]. தான் சேர்த்து விட்டவர்கள் ‘ஆக்டிவாக’ இருக்கிறார்களா என்றும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளான். டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமியக் கொடி பறக்கவிட வேண்டுமென்பதுதான் புர்கானின் கோஷமாக இருந்தது. ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்திருந்த இவனது தலைக்கு இந்திய அரசு 10 லட்சம் அறிவித்திருந்தது, என்றேல்லாம் புகழ்ந்து தள்ளின ஊடகங்கள். தேசத்துரோகத்தில் ஈடுபட்டான் என்று ஒரு வரி கூட இல்லை. சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான் ஒரு கிரிக்கெட் வீரனும் கூட.  கடந்த 2015ம் ஆண்டு புர்கானின் சகோதரன் காலீத்தையும் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.  காலீத், புர்கானை சந்திக்க சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் என்று அரைகுறையாக செய்தியை வெளிட்டுள்ளது. தாக்கினால், பதிலுக்கு தாக்கத்தான் செய்வர், அதனை குறிப்பிடாமல், இவ்வாறு செய்திகளை வெளியிடுவது விசித்திரம் தான்!

Kashmiri mourners carry the body of Burhan Muzaffar Wani, the new-age poster boy for the rebel movement in the restive Himalayan state of Jammu and Kashmir, ahead of his funeral in Tral, his native town, 42kms south of Srinagar on July 9, 2016. A top commander from the largest rebel group in Indian-administered Kashmir was killed in a gun battle with government forces on July 8, police said. Young and media savvy, Burhan Wani was a top figure in Hizbul Mujahideen and had a one million rupee ($14,900) bounty on his head. Wani, 22, joined the rebel movement at the age of 15 and in recent years had been behind a huge recruitment drive to the group's ranks, attracting young and educated Kashmiris to the decades-old fight for independence of the restive disputed region. Viewed locally as a hero, his death sparked protests in nearby Anantnag town, with hundreds taking to the streets shouting independence slogans and lauding Wani as a revolutionary, witnesses said. / AFP PHOTO / TAUSEEF MUSTAFA

Kashmiri mourners carry the body of Burhan Muzaffar Wani, the new-age poster boy for the rebel movement in the restive Himalayan state of Jammu and Kashmir, ahead of his funeral in Tral, his native town, 42kms south of Srinagar on July 9, 2016.
A top commander from the largest rebel group in Indian-administered Kashmir was killed in a gun battle with government forces on July 8, police said. Young and media savvy, Burhan Wani was a top figure in Hizbul Mujahideen and had a one million rupee ($14,900) bounty on his head. Wani, 22, joined the rebel movement at the age of 15 and in recent years had been behind a huge recruitment drive to the group’s ranks, attracting young and educated Kashmiris to the decades-old fight for independence of the restive disputed region. Viewed locally as a hero, his death sparked protests in nearby Anantnag town, with hundreds taking to the streets shouting independence slogans and lauding Wani as a revolutionary, witnesses said. / AFP PHOTO / TAUSEEF MUSTAFA

09-07-2016 சனிக்கிழமை பிண ஊர்வலம்: ஸ்ரீநரில் 114 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிராக பிரிவினைவாதிகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்[6]. இதனால், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவுக்கு இணையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சமூக வலைத்தளங்களின் மூலம் வீண் வதந்திகள் பரவுவதை தவிர்க்கும் வகையில்  மொபைல் இண்டர்நெட் சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. உள்மாவட்டங்களுக்கு இடையில் ஓடும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், அங்குள்ள டிரால் நகரில் வானியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது[7].  நான்கு ஹிஜ்புல் முஜாஹித்தீன் வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டனர். ராணுவம், போலீஸார் முதலியோர் இருக்கு போதே, இவ்வாறு ஹிஜ்புல் முஜாஹித்தீன் எப்படி துப்பாக்கிகளோடு வந்தனர் என்று தெரியவில்லை. வானியின் தந்தை, அதை “அல்லாவின் சேவையில் ஷஹீதானான்”, என்று தனது மகனை போற்றினார்[8]. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு படையினரின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி மாற்று வழியில் வந்து பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்[9]. சட்டத்தை மீறியது பற்றி எந்த மனித உரிமை மற்றும் செக்யூலரிஸ பழங்கள் தங்களது கருத்துகளை வெளியிடவில்லை. இந்த கூட்டத்தினரிடையே பேசுவதற்காக சில பிரிவினைவாதிகள் வர முயற்சித்தனர். அதாவது சாவிலும் ஆதாரம் தேடத்தான் அந்த ஜிஹாதிகள் இருக்கிறார்கள் என்பதை, அந்த முஸ்லிம்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வினோதம் தான். ஆனால், பலத்த பாதுகாப்பை மீறி பிரிவினைவாதிகளால் அங்கு செல்ல முடியவில்லை.

© வேதபிரகாஷ்

10-07-2016


[1] தினமணி, ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி பர்ஹன் வானி சுட்டுக் கொலை: காவல்துறை டிஜிபி, By dn-First Published : 09 July 2016 11:31 AM IST

[2]http://www.dinamani.com/latest_news/2016/07/09/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA/article3521154.ece

[3] விகடன், ஃபேஸ்புக்கில் ஆள் பிடிப்பார்:ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான்!, Posted Date : 16:59 (09/07/2016).

[4] Burhan Wani managed in five years, to create a band of 60-70 young locally recruited terrorists. Many were well educated and technically proficient to exploit social media for their cause. Their photographs in combat fatigues with weapons went viral on Facebook and Whatsapp.

http://www.dailyexcelsior.com/death-renegade-burhan-wanis-killing-aftermath/

[5] http://www.vikatan.com/news/india/65996-dead-in-protests-after-terrorist-burhan-death.art

[6] தினத்தந்தி, பர்ஹான் வானி இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு, காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல், பதிவு செய்த நாள்: சனி, ஜூலை 09,2016, 2:28 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, ஜூலை 09,2016, 2:28 PM IST.

[7] Tral is notorious for its alienation and use of violence over the last 26 years. The Wagad ridge to its West and the Dachigam Forest to the North afford excellent hideouts. Despite presence of a full RR unit here along with CRPF the area has only been passingly under control. Burhan belonged to Tral and last year in April his brother was killed in an encounter when he was mistakenly taken to be Burhan even as he had gone to the forest to meet his renegade brother.

http://www.dailyexcelsior.com/death-renegade-burhan-wanis-killing-aftermath/

[8] At the funeral in Tral Eidgah, eyewitnesses said three to four armed Hizbul Mujahideen militants fired a gun salute. Wani’s father Muzaffar called his son a “martyr in the service of Allah”.

http://timesofindia.indiatimes.com/india/11-killed-200-hurt-as-Valley-erupts-over-Wanis-death/articleshow/53135735.cms

[9] http://www.dailythanthi.com/News/India/2016/07/09142807/Thousands-Gather-at-Tral-For-Funeral-of-Hizbul-Militant.vpf

தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

மார்ச் 22, 2013

தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

Hijbul Mujahiddeen - Paki-terrorist group

இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டு அவதாரங்களை எடுத்து வருவது: சட்டப்படி, தப்பித்துக் கொள்ள இஸ்லாமிய, ஜிஹாதி மற்ற பிதாயீன் தீவிரவாதிகள் சட்டத்திலிருந்துத் தப்பித்துக் கொள்ள இயக்கங்களின் பெயரை மாற்றிக் கொண்டு வருகின்றன. அதன்படியே, தங்களது வங்கிக் கணக்குகளையும் மாற்றி வருகின்றன. சிமி தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருக்கிறது. பெயர்கள், சின்னங்கள், அடையாளங்கள் ஒருவிதத்தில் மாற்றப்பட்டாலும், அவர்களே அந்தந்த பணியை செய்து வருகிறார்கள்.

Paki-terrorist arrested - militant of Al-barq

ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டம்: தில்லியில் ஹோலி பண்டிகையின் மீது தீவிரவாதத் தாக்குதல் திட்டமிட்ட சதியை முறியடித்துள்ளதாக, தில்லியின் போலீஸ் அதிகாரி எஸ்.என். ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் ஷா  (Syed Liyaqat Shah, a former militant of Al Barq terror outfit) என்பவன் புதன்கிழமை அன்று (20-03-2013) கைது செய்யப்பட்டான்[1]. அவன் பாகிஸ்தானிய தீவிர இயக்கமான அல்-பர்க் என்பதின் அங்கத்தினன்.

Haji Arafat Guest house - room No.301 arms stored

அல்-பர்க் பாகிஸ்தானிய இயக்கத்தின் தீவிரவாத செயல்கள்: அல்-பர்க் இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களை மேற்கொண்டுள்ளது[2]. தான் பாகிஸ்தானிலிருந்து நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டிற்கு வந்ததாகவும், அங்கிருந்து சாலை வழியாக நேபாள எல்லை வரை பிராயணித்து, பிறகு எல்லைகளைக் கடந்து, இந்தியாவில் நுழைந்ததாக ஒப்புக்கொண்டான்[3]. ரயில் மூலம் தில்லிக்கு சென்றுகொண்டிருக்கும் போது, கோரக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளன். தான் பாகிஸ்தானின் குடிமகன் என்பதற்கான ஆதாரங்களையும் அழித்துவிட்டதாக ஶ்ரீவஸ்தவா கூறுகிறார்[4].

Kashmir terror

லியாகத்தின் உறவினர்கள் மறுக்கின்றனர்: ஆனால், லியாகத்தின் தாயார், சகோதரர் இதனை முழுமையாக மறுத்துள்ளனர்[5]. தீவிரவாதத்தை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் கலக்க விரும்புவர்களுக்கு, மன்னிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படிதான் இவன் வந்துள்ளான். ஆனால், போலீஸார் அதனை வேறுவிதமாக விளம்பரப்படுத்துகிறார்கள்[6] என்று குறை கூறுகின்றனர். இருப்பினும், தீவிரவாதிகள் அனைத்தையும் தகக்கு சாதகமாத்தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான், ஒரு முறை, ஒரு தீவிரவாதிக்கு பத்மஶ்ரீ விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது! இங்கும் குடும்பம் முழுவதுமாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளது[7]. இந்துக்கள் பாகிஸ்தானில் கொடுமைப்படுத்தப்படுவதால், இந்தியாவிற்கு வருகின்றனர், ஆனால், அவர்களை கைது செய்து திரும்ப அனுப்பப்படுகின்றனர்.

Indian flag burned

ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் ஆயுதங்கள் பறிமுதல்: இந்தியாவிற்குள் நுழைந்து, தில்லிக்கு வந்ததும், ஹாஜி அராபத் விருந்தினர் விடுதி, அறை எண்.301ற்கு வந்து ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுமாறு இவனுக்கு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படித்தான், இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டெல்லியில் சிறப்பு காவல் படையினர் நேற்று இரவு ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 30 காட்ரிஜ்கள் அடங்கிய இரண்டு சுற்று துப்பாக்கிக் குண்டுகள், அதிக அளவிலான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன[8].  இதனால் தீவிரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது[9]. அதேசமயம் ஓட்டலில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை விட்டுச் சென்ற நபரைக் கண்டறிய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த ஓட்டலுக்கு வந்த நபர்கள் அனைவரும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பார்கள். எனவே, அந்த வீடியோ பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் கேட்டபோது, ஹாஜி அராபத் என்பவர், ‘சுற்றுலாப் பயணி போன்று வந்த ஒரு நபர் 301 எண் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் வாடகை கொடுத்திருந்தும், இரவு 8 மணிக்கு அந்த நபர் அறையைவிட்டு சென்றுள்ளார்.  அதன்பின்னர் திரும்பி வரவில்லை” என்று கூறினர்.

Indian-flag-burned2

தீவிரவாத இயக்கம் செயல்படும் முறையை விளக்கிய லியாகத்[10]: ஹிஜ்புல் முஜாஹித்தீனின் தலைவனான காஜி நஸ்ரித்தூன் மற்றும் பரூக் குரேஷி லியாகத்தைச் சந்தித்து, “பிதாயீன்” வேலைக்கு இளைஞர்களை சேர்க்க நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். குடியரசு தினத்தை துக்க நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ரும், பிறகு அப்சல் குரு தூக்கிலிடுவதை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ரும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் பிறகு, தில்லியில் அருமையான பயங்கரவாத வேலையை செய்து முடிப்பார்கள் என்றார்கள். இந்த வேலை முடிந்ததும், ஒன்றுமே தெரியாத மாதிரி, காஷ்மீரத்திற்கு வந்து மறுபடியும் அத்தகைய “திறமைசாலிகள்” கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிடருக்க வேண்டும்[11].

INDIA-KASHMIR-UNREST

INDIA-KASHMIR-UNREST

கஜினியை வென்றுவிட்ட 18வது முயற்சி: கடந்த ஜனவரி 2011லிருந்து, இப்பொழுது வரை தில்லியில் ஹிஜ்புல் முஜாஹித்தீனின் சதிதிட்டத்தின் குழுவை பிடிப்பது 18வது முறையாகும்[12]. தொடர்ந்து இவ்வாறு பல இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்தியா பிடித்து வருவதால், பாகிஸ்தான் அத்தகைய தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அதனை மறுத்து வருகிறது[13]. அதாவது, தீவிரவாதத்தினால் பாகிஸ்தானே பாதிக்கப்பட்டுள்ளது என்கிறது.

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

முஸ்லாம் தேசமான பாகிஸ்தானை ஏன் முஸ்லீம்கள் தாக்குகின்றன?: ஆனால், முஸ்லீம்களே முஸ்லீம்களை ஏன் தாக்குகின்றனர் என்பதனை பாகிஸ்தானோ, ஊடகங்களோ விளக்குவதில்லை. இங்குதான் அந்த ஜிஹாதின் மகத்துவம் வருகின்றது. குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். பாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது.

© வேதபிரகாஷ்

23-03-2013


[7] NDTV has learnt that Liyakat Shah and his family, including his 18-year-old daughter flew from Karachi to Kathmandu and reached Sanauli post on the Indo-Nepal border on March 20. There, they informed the border police. However, instead of allowing them to proceed to Jammu and Kashmir as planned and promised, the Delhi Police arrested them.

http://www.ndtv.com/article/india/delhi-police-claims-wanted-terrorist-caught-not-true-says-kashmir-345826

[8]  Delhi Police seized an AK-56 assault rifle, two magazines with 30 cartridges each, and a hand grenade from a room of a guest house near the famous Jama Masjid mosque.

http://www.ndtv.com/article/india/delhi-police-claims-wanted-terrorist-caught-not-true-says-kashmir-345826

[9] The Delhi Police have arrested a suspected Hizbul Mujahideen militant from Uttar Pradesh. Police sources said the alleged operative, Liaqat Ali, was on way to Delhi in a train when he was arrested from Gorakhpur two days back. During interrogation, the man is reported to have confessed that a possible attack in Delhi was being planned around Holi. Going by the man’s confessional statement, the Special Cell of Delhi Police raided a guest house in the Jama Masjid area in Old Delhi last night and recovered one AK-47 rifle and some explosives.

[11] Later, a person called Ghazi Nasiruddin, said to be a commander of Hizbul Mujahideen, and Farooq Qureshi informed Liyaqat that he had been chosen to supervise young “fidayeen” recruits who would commit spectacular terrorist strikes in Delhi. He was told that after the strikes were execued, he should return to the Kashmir valley to settle down and to engage himself in “talent spotting”, that is finding new recruits and facilitating their cross-border travel into Pakistan-occupied Kashmir, he said.

[12] This is the 18th module of Hizb-ul-Mujahideen busted in Delhi, the last being in January, 2011 in which four members of Hizb-ul-Mujahideen were arrested, police said.

[13] India has long accused Pakistan of arming and training Islamic militants and unleashing them into India to attack government forces and other targets – a charge Islamabad denies.

சையது அலி ஷா கிலானி, சூஸன்னா அருந்ததி ராய் இவர்களுக்குள்ள தொடர்பு என்ன?

ஒக்ரோபர் 31, 2010

சையது அலி ஷா கிலானி, சூஸன்னா அருந்ததி ராய் இவர்களுக்குள்ள தொடர்பு என்ன?

மாநாடுகள் / கருத்தரங்கங்கள் பெயரில் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் கூட்டங்கள்: காஷ்மீர் பிரச்சினையை பிரபலப்படுத்த பல பாகிஸ்தானிய ஆதரவு கூட்டங்கள் செயல் பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, ஆகஸ்ட் 28-30, 2010 தேதிகளில் பாங்காக்கில் சாயோப்ரயா பாதை-2 (Chaopraya Track II dialogue) என்ற உரையாடல் கூட்டம் நடந்தது. பாகிஸ்தானிய ஜின்னா மன்றம் மற்றும் இந்தியாவின்  அமைதி மற்றும் மோதல்கள் பற்றி ஆராயும் கழகம் பங்கு கொண்டன[1]. பாகிஸ்தான் தரப்பில் ஷெரி ரெஹ்மான், முந்தைய அமைச்சர் மற்றும் இந்திய தரப்பில் தீபாங்கர் பானர்ஜி, ராணுவ அதிகாரி (ஓய்வு) தலைமை வகித்தனர். வழக்கம் போல இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரசினையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்றுதான் பேசினர்[2]. இதனால் பாகிஸ்தான் விளம்பரம் பெறுகிறதே தவிர, இந்தியாவிற்கு எந்த பலனும் இல்லை. ஆனால், கடந்த வாரம் 21-10-2010 அன்று தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் நடந்த கருத்தரங்கம் திட்டமிட்டு இந்தியாவிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்ததுதான்[3].

Susanna-geelaani-2010

Susanna-geelaani-2010

ஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங் என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[4]. நக்ஸல் / மாவோயிஸ்ட் சித்தாந்தி வராவர ராவ் என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெரிகிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. “பார்லிமென்ட் அட்டாக்” புகஷ் ஏஸ்.எ. ஆர்.கிலானி, மற்ற பிரிவினைவாத கோஷ்டிகளும் கலந்து கொண்டன. வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்.

Arundhati-Roy-SAR.Jilani-2010

Arundhati-Roy-SAR.Jilani-2010

அருந்ததி ராய் ஜிஹாதிகளை ஆதரித்து பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[5]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[6]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[7]. இப்பொழுதும் வழக்கு இல்லை[8] என்று முடிவு செய்து விட்டனர்!

சூஸன்னா அருந்ததி

சூஸன்னா அருந்ததி

அருந்ததி ராயும், ஜிஹாதி அமைப்புகளும்: சினிமாவில் தோல்வி என்றதும் “பொதுநல போரட்டம்” என்ற ரீதியில் “நர்மதா பிரச்சினை”யை எடுத்துக் கொண்டார். அப்பொழுது மெஹ்தா பட்கரை ஓரங்கட்டி தான் பிரபலமாக வேண்டும் என்று திட்டம் பொட்டதும் எடுபடவில்லை. குறிப்பாக நர்மதா அந்தோலனில் முக்குடைப்பட்டதால், அருந்ததி ராய் ஜிஹாதிகளுக்கு ஆதரவாக பேசி புகழ் பெற வேண்டும் என்று செயல்படுவதாகத் தெரிகிறது. 2002ற்கு பிறகு, இவர் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து ஜிஹாதிகளுக்கு ஆதரவாக பேசுவது நோக்கத்தக்கது. குறிப்பாக உச்சநீதிமன்றம் தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தில் தண்டனை வழங்கி சிறையிலடைத்ததும், இந்திய அரசின் மீது தாளாத ஆத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதனை தேசவிரோதமாக செய்து வருவதும் தெரிகிறது[9].

திஹார் சிறைவாசமும், மூக்குடைப்பும்: மார்ச் 2005ல் அருந்ததி ராய் எவ்வலவு சொல்லியும் கேட்காமல் அடாவடித்தனம் செய்ததால், உச்சநீதி மன்றம் கடுமையாக சாடி, மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது[10]. ஆனால், ஒருநாள் சிறையில் இருந்து ரூ.2,000/- அபராதம் கட்டி வெளியே வந்தார். இருப்பினும் அவரது ஆத்திரம் அடங்கவில்லை, மறுபடியும் கன்னாப்பின்னா என்று பேசினார்[11]. தனது ஆதிக்கம், முதலியனவால் தன்னை யாரும் ஒன்றும் செய்து முடியாது என்ற திமிரில் இருந்தது எடுபடவில்லை. ஆகஸ்ட் 2005லும், “இந்திய ராணுவம் சுதந்திரம் மற்றும் அமைதி என்ற போர்வையில் காஷ்மீர மக்களை வதைத்து வருகிறது…………இந்தியாவின் காஷ்மீர ஆக்கிரமிப்பு சிலியின் பினோசெட் என்பவனைவிட அதிகமாகிவிட்டது……………ஊடகங்கள் இதை எடுத்துக் காட்டுவதில்லை”, என்று பேசினார்[12]. கத்துவது, சண்டை போடுவது எடுபடாது என்றவுடன் தனது “மேனரிஸ”த்தை மாற்றிக் கொண்டார். அதாவது தலையை ஆட்டுவது, சிரிப்பது, கவர்ச்சியாக ஆடை அணிந்து கொள்வது போன்ற நிலையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேந்தும்ம் என்ற முறையைக் கையாண்டு வருகிறார்.

ஹுரியத்-தீவிரவாதிகள் தொடர்பு என்றெல்லாம் சம்பந்தப்படும் நிலையில் அருந்ததி ராய் ஆகஸ்ட்,2008ல் பேசியது: காஷ்மீரத்திற்கு இந்தியாவிலிருந்து விடுதலை தேவைப்படுகிறது என்று பேசினார்[13]. “இன்று காஷ்மீர மக்கள் திரண்டுள்ளது, அவர்கள் தங்களை பிரதிநிதிக்களாக உறுதி செய்து விட்டனர் என்றே தெரிகிறது. ஆக வேறு யாரும், அவர்களுக்காக பரிந்துரை செய்யவேண்டியதில்லை. எப்படி காஷ்மீரத்திற்கு இந்தியாவிலிருந்து விடுதலை தேவைப்படுகிறதோ, அதேமாதிரி இந்தியாவிற்கும் காஷ்மீரத்திலிருந்து விடுதலைத்தேவைப் படுகிறது”, என்று பேசியது வியப்பாக இருந்தது!

சையது அலி ஷா கிலானி அப்துல் கனி லோன் கொலையில் சம்பந்தம்: அப்துல் கனி லோன் என்பவர் “மக்கள் மாநாடு” என்ற இயக்கத்தின் தலைவராக இருந்தபோது, 22-05-2002ல் அவர் அடையாளம் தெரியாத தீவவரவாதிகளால் சுட்டுக் கொள்ளப்பட்டார்[14]. அப்பொழுது, அவரது மகன் சஜ்ஜத் கனி லோன், சையது அலி ஷா கிலானி தான் தனது தந்தை கொல்லப்படுவதற்காக சதி செய்தார் என்று குற்றம் சாட்டினார்[15]. 2003ல் தேர்தலின்போது தேர்தலை சிர்குலைக்க பல வழிகளை கிலானி கடைப்பிடித்தார். தொகுதிகளில் பலரை நிறுவி குழப்பத்தை உண்டாக்கினார்.

குடும்பமே பிரிவினை-தீவிரவாதங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது: ஜூலை 8, 2002ல் இவரும், இவரது மறுமகன் அட்லஃப் ஃபன்டூஸ் (Altaf Fantoosh) என்பவனும் ஐ.எஸ்.ஐ இடமிருந்து ஹவாலா முறையில் பணம்[16] பெற்று அவற்றை பயங்கரவாத-திவிரவாத அமைப்புகளுக்குப் பட்டுவாடா செய்வது கண்டு பிடிக்கப்பட்டதால், பொடாவில் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கன்டிலிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களுடைய வீடுகளில் சோதனை நடத்தியபோது, கணக்கில் இல்லாத பல லட்ச ரூபாய் பணம், இரண்டு கணிணிகள், அதில் தீவிரவாதிகளின் பட்டியல் மற்றும் ஏராளமான பிரிவினைவாத, ஜிஹாதி பிரச்சார பிரசுரங்கள் முதலியன கைப்பற்ரப்பட்டது. ஜூன் 10,2002ல் அவரது இன்னுமொரு மறுமகன் இஃப்திகார் கிலானி (Iftikhar Geelani) கைது செய்யப்பட்டான். அவனது தில்லி இல்லைத்தில் இருந்த கணிணிலியில் ஜம்மு-காஷ்மீரத்தில் இருக்கும் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எங்கு நிறுத்தப் பட்டுள்ளனர் பற்றிய விவரங்கள் இருந்தன. இதனால் அரசாங்க ரகசிய சட்டத்தின் (Official Secrets Act) சரத்துகளை மீறியதற்காக வழக்குத் தொடரப்பட்டது. துக்ரான்-ஏ-மிலத் என்ற அமைப்பை நடத்தி வரும் பெண் தீவிரவாதியான ஆயிஷா இந்திரா பீ மீதும் போடோவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது அலுவலகமும் சோதனையிடப்பட்டது. ஆனால், அவர் போலீசாரிடம்சிக்கவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார். இவருக்கு சொந்தமான கடைகளிலும் ரெய்ட் நடந்தது[17].

ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஐ.எஸ்.ஐ மற்ற தொடர்புகள்: இம்தியாஜ் பஜாஜ் (Imtiyaz Bazaz) என்ற காஷ்மீர பத்திரிக்கையாளரை கைது செய்தபோது,  உலக காஷ்மீர் விடுதலை இயக்கம் (World Kashmir Freedom Movement) என்ற இங்கிலாந்திலிருந்து செயல்படும் நிறுவனத்திலிருந்து எப்படி அயூப் தாகூர் (Ayub Thukar) மூலம் பணம் வருகிறது என்ற தகவல்கள் வெளிவந்தன. இம்தியாஜின் வாக்குமூலம் மற்ற ஆவணங்கள் பாகிஸ்தான் அக்கிரமிரப்பில் உள்ள காஷ்மீர் பகுதியிலிருந்து இயங்கிவரும் ஹிஜ்புல் முஜாஹித்தீனின் தலைவன் சையது சலாஹுத்தீன் எப்படி அயூப் தாகூர் மற்றும் கிலானி வழியாக தனது தளபதிகளுக்கு பணத்தை அனுப்பி வைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. சையது அலி ஷா கிலானி 1933ல் பிறந்தவர், ஆசிரியராக பனியைத் துவங்கியவர், ஜமாத்-இ-இஸ்லாமியின் தீவிர உழைப்பாளியாக இருந்தார். 1972, 1977  மற்று, 1987 மூன்று முறை எம்.எல்,ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், 1987ல் பிரிவினைவாத கும்பலுடன் சேர்ந்தார்.

2002ல் துபாய் மாநாடு, கிலானி-லோனே வேற்றுமை- லோனேயின் கொலை; ஏப்ரல் 2002ல் உமர் ஃபரூக் மற்றும் லோனே, துபாயில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டபோது வெறுப்படைந்தார். அதுமட்டுமல்லாது, தில்லியுடன் நடக்கும் எல்லா அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டத்தையும் எதிர்த்து செயல்பட்டுவந்தார்[18]. அப்துல் கனி லோனெ என்பவர் “மக்கள் மாநாடு” என்ற இயக்கத்தின் தலைவராக இருந்தபோது, 22-05-2002ல் அவர் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் சுட்டுக் கொள்ளப்பட்டார். அப்பொழுது, அவரது மகன் சஜ்ஜத் கனி லோனெ, சையது அலி ஷா கிலானி தான் தனது தந்தை கொல்லப்படுவதற்காக சதி செய்தார் என்று குற்றம் சாட்டினார்[19]. லோனின் இறப்பிற்குப் பிறகுதான், கிலானி பிரபலமடைந்தார். அதே காலகட்டத்தில் தான், அருந்ததியும் ஜிஹாதி ஆதரவாக பேச ஆரம்பித்தார்.

அமெரிக்கா அருந்ததி ராயை இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்துகிறதா? அமெரிக்காவிற்கு ஏற்கெனெவே ஒரு ஜிலானியால் ஏகப்பட்ட பிரச்சினையுள்ளது – அவன் தான் – டேவிட் கோல்மென் ஹெட்லி அல்லது சையது தாவூத் ஜிலானி. அமெரிக்கனான இவன் பல ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தது முதலிய விவரங்கள் வெளிவருவது, அமெரிக்காவிற்கு சாதகமாக இல்லை[20]. பல சமீபத்தில் கூட, அமெரிக்காவிற்கு மும்பை தாக்குதல் தெரிந்திருந்தும் சமயத்தில் சொல்லவில்லை, முன்னமே சொல்லியிருந்தால் 26/11ஐத் தடுத்திருக்கலாம், என்றெல்லாம் பேச்சு எழுந்தது, அமெரிக்காவிற்கு சங்கடமாகியது. மேலும், அவன் அமெரிக்காவில் இருந்திருக்கிறான், அமெரிக்காவின் ஏஜென்டாவாகவும் செயல்பட்டிருக்கிறான்[21]. அவன் இந்தியாவில் அமெரிக்கப் பெயரை, பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டுதான் வேவு பார்த்து சென்றுள்ளான். இதையெல்லாம், அமெரிக்காவால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும், முந்தைய குண்டு வெடிப்புகளில் (அஹமதாபாத் ஆகஸ்ட் 2008), இந்திய முஜாஹித்தீனிற்கு ஈ-மெயில் அனுப்ப, ஒரு அமெரிக்க கிருத்துவ பாதிரி மும்பையிலிருந்து உதவியுள்ளான்[22]. செய்து அறிந்ததும், அவனை அப்படியே அள்ளிக் கொண்டு சென்றுவிட்டது[23]. இதற்கெல்லாம் சோனியாதான் உதவியுள்ளார்[24]. அதே மாதிரி கத்தோலிக்கக் கிருத்துவராக உள்ள சூஸன்னா அருந்ததி ராயிற்கு சோனியா உதவுகிறார் என்றால் மிகையாகாது. மேலும், அமெரிக்க ஜிஹாதிகளைப் பற்றி அமெரிக்கா அடக்கி வாசிக்க முயல்கிறது.

வேதபிரகாஷ்

© 31-10-2010

 


 

[3] வேதபிரகாஷ், சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!, http://secularsim.wordpress.com/2010/10/23/354/

வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கல் எழுப்பினர்!,

[5] She compared the protests in the Kashmir to the Naxals operating in central India and to even the ‘Narmada Bachao Andolan’. Roy said people everywhere are fighting for their rights.

[6] “You have to look for tactical, political and intellectual alliances and think about justice, otherwise you will be like fish swimming in a tank with strong walls and ultimately getting tired,” she said. Ms. Roy said she did not want young people in Kashmir to be let down even by their own leaders. She said the idea of justice linked struggles of people in Nagaland, Manipur, Chhattisgarh, Jharkhand and Orissa to the people of Kashmir.

[7] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:

http://www.global-sisterhood-network.org/content/view/2178/59/

[8] வேதபிரகாஷ், சூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்!, http://secularsim.wordpress.com/2010/10/29/upa-soft-corner-towards-susanna-arundhati/

………………….., தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு!, http://secularsim.wordpress.com/2010/10/29/no-action-against-arundhati-and-geelani/

[9] இவரது வாழ்க்கை ஆரம்பகாலத்திலிருந்தே பல விருப்பு-வெறுப்புகளுக்கு உட்பட்டிருந்ததாலும், பெற்றோரை மதிக்காமல், தனியாக இருந்து “மண்டை கர்வம்” ஜாஸ்தி என்பதனால், யாருடனும் ஒத்துப் போகாமல், திருமண வாழ்க்கைகளிலும் தோல்வியடைந்து, சினிமாவில் அடிபட்டு…………………, எல்லொருடனும் சண்டை போட்டு, பிறகு இந்திய-எதிர்ப்பு மனப்பாங்கில் செயல்பட்டுவருகிறார்.

[10] The Supreme Court however in March 2005 convicted[10] Arundathi Roy, the Booker Prize winner, for having “committed criminal contempt of this court by scandalising its authority with mala fide intentions” and sentenced her to a “symbolic imprisonment” for one day and pay a fine of Rs. 2,000; in default, to undergo a simple imprisonment for three months.

[11] After paying the fine and spending day in the jail, she passed arrogant remarks again[11]. For more details, see the site: http://www.narmada.org/sc.contempt/, as ii contains all details.

[12] In 2005, she criticised (Aug 31, 2005) the Indian media for failing to highlight the plight of the ordinary Kashmiris, who she said were being tormented and brutalised by security forces every day in the name of freedom and peace. After uttering many things, she declared[12], “Indian occupation in Jammu and Kashmir has surpassed the excesses of Pinochet in Chile.”

[13] “Kashmir needs freedom from India” declared Arundhati Roy[13]. After talking about “history” in her own way,  Roy concluded with words, “India needs azadi from Kashmir as much as Kashmir needs azadi from India.”

[15] Mukhtar Ahmad, Geelani abetted Abdul Gani Lone’s assassination: Sajjad Lone, July 08, 2003 20:47 IST http://ia.rediff.com/news/2003/jul/08jk.htm

[16]வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!, http://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

[19] Mukhtar Ahmad, Geelani abetted Abdul Gani Lone’s assassination: Sajjad Lone, July 08, 2003 20:47 IST http://ia.rediff.com/news/2003/jul/08jk.htm

[21] எனது முந்தைய பதிவுகளைப் பார்க்கவும்.

[22] Ken Haywood, the American national, from whose computer the Indian Mujahideen e-mail has generated just minutes before the blasts, said that he was completely innocent and cooperating fully with investigative agencies.

[23] Zeenews bureau, Ken Haywood’s exit facilitated by US Embassy: Reports, Tuesday, August 19, 2008, http://www.zeenews.com/news463028.html

Ahmedabad, Aug 19: A day after US national Ken Haywood fled India, even after a lookout notice against him; reports now suggest that his exit was facilitated by the US Embassy in Delhi. Meanwhile, US Embassy have denied any such involvement in Haywood’s exit. Sources claimed on Tuesday that US Embassy officials had closed a door meeting with Intelligence officials following which Haywood’s exit became a reality. However, there are also reports that Haywood has assured that he would be ready to join the investigations at a later stage of the probe if required.  He left by Jet Airways flight JW-230 to New York via Brussels on Sunday. Haywood was not stopped from boarding the flight to US as he had appropriate documents. The glaring question remained that why his passport was not seized after his name figured in the investigations.

The Mumbai ATS, which was investigating his any possible role in the blasts threat mail that was sent from an email account IP address traced to Haywood’s wi-fi computer connection, at his residence in Navi Mumbai, are also under the scanner as to how could he simple slip away when the investigations into the Ahmedabad blast are far from over. Moreover, ATS is also under scanner as Haywood had planned his trip well in advance yet the premiere investigating agency was unaware of his moves. Haywood had reportedly left Mumbai for Delhi soon after the press conference of Ahmedabad Police – who claimed to have cracked the case. When asked to comment on Haywood fleeing the country, the red-faced ATS only said that their efforts at contacting Haywood were not fruitful for the last 2-3 days. There is a meeting in Mumbai where top police officers are mulling over the incident.

Haywood underwent a lie-detector and brain-mapping test along with eight others from Navi Mumbai, including some residents of Sanpada’s Gunina building, on August 14.  Haywood had said his computer could have been hacked and volunteered for the advanced tests when informed about it, the ATS added.  He had earlier alleged that an ATS officer had asked for bribe to let him go scot free in the case. However, the ATS is awaiting the examination report of the Internet router and the final reports on both (the computers and router) is expected to be ready in the next few days. In the email sent to media organisations minutes before the synchronised terror attacks in Ahmedabad, an outfit calling itself the Indian Mujahideen had warned: “The Indian Mujahideen strike again! Do whatever you can, within five minutes from now, feel the terror of death!”  Haywood works as a general manager with the Navi Mumbai operations of a US-based company, Campbell White, which also has a branch in Bangalore. He has been posted to India for a four-year period of which Haywood, a specialist in executive soft skills, has completed a year. He has also been pastor at a church in Arizona, US.