யார் இந்த தடியன்டவிடே நசீர்?
தடியன்டவிடே நசீர் நிச்சயமாக இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பிடிபட்ட லஸ்கர் தீவிரவாதியாவான். தென்னிந்தியாவின் லஸ்கர்-இ-தொய்பா தலைவன் என்று கருதப்படுகிறான். இவனுடைய விவரங்கள் இதோ[1]:
பெயர் | தடியன்டவிடே நசீர் / ஹாஜி / உம்மர் ஹாஜி / காலித் முதலியன[2]. |
பிறந்த தேதி | ஏப்ரல் 23, 1977. |
பிறந்த நாடு | இந்தியா |
படிப்பு | ஒன்பதாவது பாஸ், ஏ.ஸி. மெகானிகல் சான்றிதழ் பெற்றுள்ளான்[3]. |
பெற்றோர் | அப்துல் மஜீத் கம்படவிடா, கதீஜா |
மொழிகள் தெரிந்தது | மலையாளம், அரேபிக், ஹிந்தி, உருது. |
அரசியல் சார்பு | மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் (PDP), மற்றும் PDPயின் ரகசிய அமைப்பான, மஜ்லிச்துல் முஸ்லிமீன் என்பதன் தீவிரமான அங்கத்தினன்[4]. |
நாடுகள் சென்றுள்ளது | சௌதி அரேபியா, பங்களாதேசம் |
உடல் அமைப்பு | உயரம் – 5’10”, ஒல்லியான உடம்பு, மாநிறம், நீண்ட முகம், கூர்மையான மூக்கு, இடது கால் முட்டிக்கு கீழ் ஒரு பெரிய மச்சம், இடது நெற்றியில் ஒரு தழும்பு அடையாளம் |
அவன் ஒப்புக் கொண்டுள்ளது | விவரங்களை, கீழே காணவும்: |
![]()
|
![]()
|
“தீவிரவாதம், வட இந்தியாவை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, தென்னிந்தியாவில் குறைவாகவே உள்ளது. வட இந்தியாவில் “தங்கி “வேலைசெய்ய” 26 இடங்கள் உள்ளன[5], அவை பாகிஸ்தானின் ஆணைகளை எதிர்பார்த்து வேலை செய்கின்றன. ஒரேயொரு ஆணை போதும், உடனே அவர் செயல்பட்டு தாக்குதலில் ஈடுபட தயாராக உள்ளார்கள். இப்பொழுது, தென்னிந்தியாவில் மூன்று குழுக்கள் உள்ளன.
“பங்களூரு குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, உடனடியாக, நான் பங்களாதேசத்திற்குத் தப்பிச் சென்று விட்டேன். சிட்டகாங்கில் உள்ள என்னுடைய சகளையுடன் மறைவாகத் தங்கிவிட்டேன். 2008ல், என்னுடைய லஸ்கர் தலைவர்களின் ஆணையின்படியே, அவ்வாறு செய்தேன்.
“அப்பொழுது, பாகிஸ்தானின் குடிமகன் மற்றும் லஸ்கர் வேலையாள், சம்சுதீனிடமிருந்துதான் லஸ்கரின், இந்தியாவில் தங்கி வேலைசெய்ய 26 இடங்கள் உள்ளன கேள்விப்பட்டேன். பெங்களூரு வெடிகுண்டு வேல்கையின் போது, நாங்கள் எப்பொழுதும் லஸ்கர் ஆட்களுடன் நேரிடையாக பேசியது கிடையாது. எங்களுடைய எஜமானன்களுடன் / பாஸ்களுடன், சர்ஃபாஸ் நவாஜ் என்பவன் மூலம் தான் பேசிவந்தோம். அவன் அந்நேரத்தில் மஸ்கட்டில் இருந்தான்.
“காஷ்மீரத்தில் லஸ்கர் கேம்பின் மீது தாக்குதல் நடந்த பிறகு, நவாஜ் என்னுடன் தொடர்பு கொண்டான். அதில் கேரளாவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உடனடியாக, நாங்கள் மும்பைக்குப் போனோம். அங்கிருந்து, நவாஜின் உதவியோடு, இந்தியாவை விட்டு வெளியேர உதவி கோரினோம்.
“ஜைல்தீன் என்பவனுடன் தொடர்பு கொள்ளுமாறு அவன் பணித்தான். அந்த ஏஜென்ட் நாங்கள் எல்லைகளைத்தாண்டி, பங்களாதேசத்திற்குள் நுழைய உதவிவான், என்றான். அதற்காக ரூ.3000/- நாங்கள் அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் சொன்னான்.
“ஹவுராவிற்குச் சென்றதும் ஜைல்தீனைத் தொடர்பு கொண்டோம். அவன் எங்களை, இந்திய-பங்களாதேச எல்லையில் உள்ள பங்கப்புர என்ற இடத்திற்கு வருமாறு பணித்தான். அந்த இடதிற்கு பேருந்தில் சென்றோம். அங்கிருந்து, படகில் பங்களாதேசத்தில் நுழைந்தோம். அங்கிருந்த இருவரிடம் நாங்கள் ஒப்படைக்கப்பட்டோம்.
“நாங்கள் அவர்களுடன் செல்வதற்கு முன்பு, சிறிது குழப்பம் ஏற்பட்டது. அவர்கள், எங்களிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். பிறகு ஜைல்தீன் பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்று சொல்லப்பட்டது. இரண்டு நாட்களுக்கு, ஒரு குடிசையில் வைக்கப்பட்டு, பிறகு, பேரூந்து மூலம் டாக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டோம்.
“டாக்கா பேருந்து நிலையத்தில் சலீம் என்ற மற்றொரு லஸ்கர் ஆளை சந்தித்தோம். அங்கிருந்து கடற்கரையிலுள்ள காக்ஸ் பஜார் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இந்த காலக்கட்டத்தில், குறைந்த பட்சம் 11 முறை, நாங்கள் எங்களது ஓட்டல்களை மாற்ற வேண்டியிருந்தது.
“அதே நேரத்தில், மறுபடியும் குழப்பம் ஏற்பட்டது, ஏனெனில், அந்நேரத்தில் மும்பையில் வெடிகுண்டு மற்றும் 26/11 தாக்குதல் ஏற்பட்டிருந்தது. பங்களாதேச போலீஸ் சலீமைத்தேட ஆரம்பித்தது. அவ்வாறே, போலீஸ் அவனைப் பிடித்து, பாகிஸ்தான் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டான். நாங்கள் பாகிஸ்தானிற்கு அனுப்பப்படமாட்டோம் என்று சொல்லப்பட்டது. பாகிஸ்தானில் இருந்த லஸ்கர், நாங்கள் வளைகுடா நாடுகளுக்கு நிரந்தரமாக சென்றுவிட்டு, அங்கிருந்து, எங்கள் வேலையைச் செய்ய வேண்டும் என்றது. அப்பொழுது நான் நவாஜை தொடர்பு கொண்ட்டேன், அவனும் எனக்கு பணத்தை அனுப்பிவைத்தான்.
“பிறகு ஆஸிஃப் என்ற கூட்டாளியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவன் எங்களுக்கு ஒரு ஈ-மெயில் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்தான். அதன்மூலம், வேண்டியபோது, நவாஜை தொடர்பு கொண்டால், அவன் பணத்தை ஏற்பாடு செய்து அனுப்பிவைப்பான் என்றான்.
“அவ்வாறே, நாங்கள் தொடர்பு கொண்டோம், பணம் வந்தது. ரூ.70,000/- ஹவாலா[6] மூலம் கிடைத்தப் பணம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது, அதை வைத்துக் கொண்டு, வளைகுடாவில் எங்களது, அடித்தளத்தை அமைத்தோம்.
“பிறகு, ஒரு ஏஜென்டை அணுகி, துபாய்க்குச் செல்ல விசா ஏற்பாடு செய்துத் தருமாறு கோரினோம். அப்பொழுதுதான், எங்களை பங்களாதேச துப்பறிவாளிகள் கண்டுபிடுத்து, இந்தியாவினுடன் ஒப்படைத்தனர்”, என்று கூறி முடித்ததாக உள்ளது.
![]()
|
![]()
|
![]()
|
கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[7]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கேரள போலீஸாரை சந்தேகிக்கும் மத்திய புலனாய்வுத்துறை: “மதானிக்கு எதிராக தான் எந்த குற்றச்சாட்டையும் சொல்லவிலை என்று ஊடகக்காரர்களுக்கு கடந்த ஜூன் மாதத்தில் தடியன்டவிடே நசீர் சொல்லியிருப்பது பொய். அவன் மதானியுடனான தனது தொடர்பை தேசிய புலனாய்வுதுறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளான். ஆகவே, அந்நிலையில் எல்லாம் நஸீருடைய முகம் தெரியாதபோது, கொச்சியில் தெரியும்போது, கேரள போலீஸாரின் மீது சந்தேகம் ஏற்படுகிறது”, என்று மத்திய புலனாய்வுத்துறை கூறியுள்ளது. ஈ.கே.நாயனார் கொலைமுயற்சி, பேங்களூரு தொடர்குண்டு, கோழிக்கோடு இரட்டைக்குண்டு வெடிப்பு, மற்றும் தமிழக பஸ் எரிப்பு என்று பல வழக்குகளில் இவன் சம்பந்தப்பட்டுள்ளான் என்று கேரள போலீஸார் கூறியுள்ளனர்[8].
தாவூத் ஜிலானியுடன் சம்பந்தப்பட்டுள்ள தடியன்டவிடே நசீர்: தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[9]. அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும், வழக்குகள் நடக்கும்போது, குற்றவாளிகளைப் பற்றிய விவரங்கள் வெளிவர விரும்புவதில்லை, ஏனெனில், அங்குள்ள நிலைப்படி, குற்றவாளிகள், அப்படி வெளிவரும் விவரங்களை வைத்துக் கொண்டு, வழக்குகளை தமக்குச் சாதகமாக்கி விடுவர்; சாட்சிகளை கலைத்து / மாற்றி விடுவர், அல்லது பாதகமான ஆட்கள் வெளியேற்றப்படுவர் அல்லது நீக்கப்படுவர்.
[1] பெங்களுரு போலீஸார் தயாரித்துள்ள “டோசியர்” மீது ஆதாரமான விவரங்கள், தமிழில் மொழி பெயர்த்துத் தரப்பட்டுள்ளன.
[2] பாஸ்போர்ட்டுகளில், இப்படி பல பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான, அதாவது, அப்படி பல பெயர்களில் பாஸ்போர்ட்டுகள் எடுத்துள்ளான். இதற்காக ஆவன செய்வதெல்லாம், முஸ்லீம்கள் வைத்துள்ள சுற்றுப்பயண உதவி மையங்கள் (டிராவல் ஏஜென்டுகள்) தாம்.
[3] தீவிரவதிகளுக்கு படிப்பைத் தவிர, இப்படி பல தொழிற்துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது, ஏனெனில், நுணுக்கமான ஆயுதங்கள், கருவிகள் முதலியவற்றை அவர்கள், தங்களது தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு உபயோகப்படுத்த வேண்டியுள்ளது, அவற்றை கையாள வேண்டியுள்ளது. ஒன்று, இதற்காகவே, பொறியியல் படுப்புக் கூட படிக்கிறார்கள் அல்லது பொறியியல் படித்தவர்கள், இந்த வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.
[4] வங்கி கணக்குகள், இதர ஆவணங்கள், இந்த தொடர்பைக் காட்டியுள்ளன.
[5] அவை “powerful sleeper cells” என்று குறிப்பிடப்படுகின்றன. அங்கு அவர்களுக்கு மற்றும் தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு வேண்டியவை அனைத்தும் இருக்கும்.
[6] ஹவாலா பணம் எப்படி தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு பயன்படுத்தப் படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். முஸ்லீம்கள், இதனை மிகவும் சாமர்த்தியமாக உபயோகித்து, ஒன்று தங்களை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்திக் கொள்கின்றனர், இரண்டு மணத்தைப் பற்றிய போக்குவரத்து, எந்த கணக்கிலும் வராமல் இருப்பதால், எந்த வரியையும் அவர்கள் செல்லுத்துவதில்லை.
[7] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,
http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html
[8] http://www.asianetindia.com/news/kerala-seeks-custody-thadiyantavide-naseer_106730.html
[9] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html
அண்மைய பின்னூட்டங்கள்