Posted tagged ‘ஹலால்’

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா?

ஒக்ரோபர் 28, 2021

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா, ஹலாலாஹரமா, ஷிர்க்காஇல்லையா?

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா, ஹலாலாஹரமா, ஷிர்க்காஇல்லையா?: ஸ்டாலின் என்னத்தான் சப்பைக் கட்டினாலும், தன்னுடைய நாத்திகம் இந்துவிரோதம் தான் என்று வெளிப்படுகிறது. திமுக இந்துவிரோத கட்சி இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், ஸ்டாலின் பேசுவது, நடந்து கொள்வது இந்துவிரோதமாகத்தான் இருந்து வருகிறது. பிறகு தொண்டர்களிடம் எப்படி சகிப்புத் தன்மை, நேயம், வெங்காயம், வெள்ளைப்பூண்டு எல்லாம் எதிர்பார்க்க முடியும். அது தான் லடந்த 70 வருட திரவிடத்துவ ஆட்சியில் நிரூபிக்கப் பட்டு வருகிறது. இதில் பெரியார் என்பதெல்லாம், ஒரு சாக்கு-போக்குதான். செக்யூலரிஸமே, கம்யூனலிஸமாகத்தான் உள்ளதுந்தமிழகத்து முதலமைச்சர் என்ற அடிப்படையே தெரியாத ஆளகத்தான் ஸ்டாலின் இருந்து வருகிறார். துலுக்கர்-கிருத்துவர்களுடன் உறவாடி, கஞ்சி குடித்து, கேக் தின்று பரஸ்பர நெருக்கங்களுடன் இருந்து, இந்துக்களை சதாய்த்து வருகின்றனர். இடையிடையே திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம் (கொளத்தூர் மணி), திராவிடர் கழகம், (கோவை ராமகிருஷ்ணன்) என்று பல பேனர்களில் பூணூல்களை அறுப்பது, தாலிகளை அறுப்பது, பன்றிக்கு பூணூல் போடுவது, அப்பாவி பிராமணர்களை வெட்டுவது, கோவில்களில் புகுந்து அடிப்பது, சிலைகளை உடைப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மீலாது நபியும், இந்திய அரசியலும்: மொஹம்மதுவின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்று ஆசார இஸ்லாம் கூறுகிறது. ஏனெனில், அது உருவ வழிபாட்டிற்கு வழி வகுக்கும் என்று அவர்கள் வாதிடுவர். மொஹம்மதுவின் கல்லறையினை நீக்கி விட்டதாகவும் தெரிகிறது. ஏனெனில், முஸ்லிம்கள் அங்கு சென்று வழிபடுவதை ஆசார இஸ்லாம் எதிர்க்கிறது. தர்கா வழிபாட்டை, தமிழக முகமதியரே எதிர்த்து ஷிர்க் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். மீலாது நபிக்கு துலுக்க நாடுகளில் கூட விடுமுறை கிடையாது. கொண்டாடுவதும் கிடையாது. முன்பு விடுமுறையும் விட்டது கிடையாது. வி.பி.சிங்கின் செக்யூலரிஸ / கம்யூனல் ஆட்சியில், அரசியலில் அது ஆரம்பித்து வைக்கப் பட்டது. அதனால், தமிநாட்டிலும் ஆரம்பம் ஆகியது.

ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்து[1]: யாரோ எழுதிக் கொடுத்ததை, வாழ்த்தாக, அறிவிக்கப் பட்டுள்ளது. அது, ஊடகங்களில் அப்படியே வெளி வந்துள்ளன[2].

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான ‘மீலாதுன் நபி’ திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்[3].   நபிகள் நாயகம் இளம்பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்[4].   ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளதிற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.   அவரது போதனைகளும் அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள். அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைபிடித்து வாழும் இஸ்லாமியச் சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மக்களால் அமைய பெற்ற கழக அரசுக்கும் இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்,” என்று இ.டிவி.பாரத், தலைப்பிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது[5]. மற்றவை, அப்படியே, பி.டி.ஐ பாணியில் செய்தி வெளியிட்டன[6].

18ம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப் படும் நிகழ்ச்சி: மௌலித் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தரித்தல், வம்சாவளி என்ற பொருள்தருகின்ற அராபிய வேர்ச்சொல் (அரபு மொழி: ولد) இடமிருந்து பெறப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு பிறப்பு, குழந்தையின் பிறப்பு, வம்சாவளி போன்ற கருத்துக்கள் வழங்கப்படுகின்றது. தற்காலப் பயன்பாட்டில் இச்சொல் முகமது நபி பிறந்தநாளைக் குறிப்பதாகவே உள்ளது. இந்நிகழ்வு ஏனைய சொற்களாலும் அழைக்கப் படுகின்றது. 1. பரா வபாத், 2. ஈத் அல்-மவ்லித் அந்-நபவி, 3. ஈத் இ மீலாத்-உந் நபவி மற்றும் 4. ஈத் இ மீலாதுன் நபி. இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சியா முஸ்லிம்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் முகமது நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சன்னி முஸ்லிம்கள் இதனை மாதத்தின் பன்னிரண்டாம் நாள் கொண்டாடுகின்றனர். இசுலாமிய நாட்காட்டி ஓர் சந்திர நாட்காட்டியாதலால், கிரெகொரியின் நாட்காட்டியில் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.

ஆசார இஸ்லாம் எதிர்க்கிறதுஸலபிகள் அல்லது வஹாபிகள் கொண்டாட்டத்தை எதிர்க்கின்றனர்: விகிபிடீயா மழுப்பலாக, இவ்வாறு கூறுகிறது, “பாரம்பரிய சன்னி மற்றும் சீயா இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன்நபி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். கடந்த இரண்டரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் தோற்றம் பெற்ற ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவுகளின் அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றனர். முஸ்லிம் உலகின் பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன் நபி கொண்டாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர். எனினும் ஸலபிகள் அல்லது வஹாபிகள் எனும் பிரிவினர் மீலாதுன் நபி கொண்டாட்டத்தை அது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர்”. இது இஸ்லாத்தில் நுழைக்கப் பட்ட கெட்ட நூதன அனுஸ்டானம் என்றும் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. திராவிடத்துவவாதிகளுக்கு, சுன்னி-ஷியா பிரிவுகள், இறையியல் வேறுபாடுகள், வழிபாட்டு மாறுபாடுகள் முதலியவற்றை அறிவார்களா இல்லையா என்று அவர்கள் மற்றும் துலுக்கர் வெளிப்படுத்திக் காட்டியதில்லை. இருப்பினும் ஸ்டாலின் வாழ்த்து சொன்னதை எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை.

தமிழக ஓட்டுவங்கி அரசியல், செக்யூலரிஸம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மறைக்கும் போக்கு: ஓட்டுவங்கி உள்ளது, சில தொகுதிகளில் உறுதியாக வெற்றிக் கிடைக்கிறது என்பதால், திமுக-அதிமுக முஸ்லிம்கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு வருகின்றன. ஆனால், முஸ்லிம்கட்சிகள் தோற்றாலும், வெற்றிப் பெற்றாலும், ஒன்றாக இருந்து சாதித்துக் கொள்கின்றன. தமிழக அரசியல்வாதிகளுக்கு கடல்கடந்த நலன்கள், ஆதாயங்கள், வியாபார பலன்கள், கிடைப்பதால், துலுக்கருடன் கூட்டு வைத்துக் கொள்கின்றன. ஆப்கானிஸ்தானில் இவ்வளவு நடந்தும், ஒன்றுமே நடக்காதது போல, தெரியாதது போல நட்த்து வருவது, பெரிய நடிகத்தனம், சாமர்த்தியம் எனலாம். அதாவது, இங்கு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்காமல், அமைதியாக இருப்பது போல இருப்பர். பங்களாதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும், நடந்து கொண்டிருக்கும் குற்றங்கள், கொடுமைகள், வன்முறைகள் பற்றி பேச மாட்டார்கள், ஆனால், காஷ்மீரில் துலுக்க பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டாலும், போராட்டம் நடத்துவர். செக்யூலரிஸம் இவ்விதமாகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

28-10-2021


[1] மாலைமலர், மு..ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து, பதிவு: அக்டோபர் 18, 2021 13:42 IST.

[2] https://www.maalaimalar.com/news/district/2021/10/18134208/3112279/Tamil-News-Chief-Minister-Greets-Miladi-Nabi.vpf

[3] தினத்தந்தி, மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கவர்னர், மு..ஸ்டாலின் வாழ்த்து, பதிவு: அக்டோபர் 19,  2021 03:29 AM

[4] https://www.dailythanthi.com/News/State/2021/10/19032910/Milad-Nabi-Festival-Celebrated-Today-Greetings-from.vpf

[5] இ.டிவி.பாரத், இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்: மீலாதுன் நபி வாழ்த்து, Published on: Oct 19, 2021, 7:02 AM IST; Updated on: Oct 19, 2021, 9:14 AM IST

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/cm-stalin-greeted-milad-un-nabi-wishes-for-islamic-people/tamil-nadu20211019070231454

இஸ்லாத்தில் கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம் – Love before Wedding என்பது LBW!

ஓகஸ்ட் 31, 2016

இஸ்லாத்தில் கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம் – Love before Wedding என்பது LBW!

i KNOW IT IS HARAM, BUT, i LOVE HIM

இஸ்லாத்தில் காதல் ஹராமா அல்லது வேறு காரணிகள் தடுக்குமா?: ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதனால், இது வெறும் காதல் பிரச்சினையா, மதப்பிரச்சினையா என்னெவென்றே புரியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது:

  1. இஸ்லாத்தில் காதல் கூடாதா, ஹரமா?
  2. “லைலா-மஜ்னு” போல சமூக-பொருளாதார அந்தஸ்து பார்ப்பார்களா?
  3. சுன்னி-ஷியா போன்ற இறையியல் சித்தாந்தங்கள் – பிரிவுகள் தலையிடுமா?
  4. சையது போன்ற உயர் ஜாதி முஸ்லிம்களை, லெப்பை போன்ற கீழ் ஜாதி முஸ்லிம்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது போன்றவை உண்மையா?
  5. போரா முஸ்லிம்கள் உள்-திருமண முறையைத் தான் [Endogamy] ஆதரிக்கின்றது, வெளியேயிருந்து பெண் எடுக்கும் முறையினை [exogamy] ஆதரிப்பதில்லை. அத்தகைய முறை சுன்னிகளிடம், ஷியாக்களிடம் உள்ளதா?
  6. அல்லது இவைத் தவிர வேறு பிரச்சினைகள் உள்ளனவா?
  7. அதாவது, இருவரில் ஒருவர் “இந்து” போன்ற பிரச்சினை உண்டா என்று தெரியவில்லை.

இக்கேள்விகளுக்கு விடை காணமுடியுமா, முடியாதா என்று தெரியவில்லை. சமீப காலத்தில், திருச்சி-ஶ்ரீரங்கம் பகுதிகளில் நடந்து வரும் இத்தகைய காதல், காதல்-திருமணங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணத்திற்கு சென்ற மாத விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்.

haram love, halal loveகாதல் திருமணம் செய்த பெண் கணவர் வீடு முன்பு தர்ணா கோர்ட் உத்தரவுப்படி சேர்த்து வைக்க கோரிக்கை[1]: திருச்சி காஜாமலை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் / ஸ்டேடபாங்க் காலனியை பர்ஜானா பேகம் (31). இவர் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம்  சாந்திநகரைச் சேர்ந்த வள்ளிநாயகம் மகன்  சத்தியகுமார் (31) என்பவரது  வீட்டின் முன்பு அமர்ந்து திடீர்  தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து பர்ஜானாபேகம் கூறுகையில், ‘‘நானும் சத்தியகுமாரும் கடந்த 2009ம் ஆண்டு திருச்சியில் காதல் திருமணம்  செய்து கொண்டோம்முஸ்லிம் மதத்திற்கு மாறி அவர் என்னை திருமணம் செய்தார்எனது குடும்பத்தார் முன்னிலையில் எங்களது 2009 நவ., 21 ல்  திருமணம் நடந்ததுதிருமணத்திற்கு சத்தியகுமாரின் குடும்பத்தினர் வரவில்லை. தொடர்ந்து  நாங்கள் தூத்துக்குடி அருகில் உள்ள வாகைக்குளத்தில் தனியாக  வாடகை வீட்டில் வசித்து வந்தோம். இந்நிலையில் எனது கணவர், தான் வெளிநாடு  செல்ல விரும்புவதாகவும், இதனால் நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம் என்றும் கூறினார். வெளிநாட்டிலிருந்து அவர் வரும் வரை  சென்னையில் சட்டக்கல்லுரியில் படிக்குமாறு கூறி 27.8.2011ல் என்னை  திருச்சிக்கு அனுப்பினார். இந்த சமயத்தில் எனது கணவர் வீட்டார் அவரின்  மனதை மாற்றி வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து வைத்துள்ளனர். மேலகூட்டுடன்காடு பகுதியை சேர்ந்த பிரேமா என்பவரை சத்தியக்குமார் 2011 செப்., 1 ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்[2]. இதுகுறித்து  தகவல் தெரிந்து நான் வந்தபோது என்னை சமாதானம் செய்து என்னுடன் இருப்பதாக  கூறி என்னை மீண்டும் ஏமாற்றி விட்டார். பிரேமா தூத்துக்குடியில் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்[3] இதனால் நான் புதுக்கோட்டை போலீசாரிடம் புகார் கொடுத்து அதன்படி வழக்கு நடந்து வருகிறது. மேலும்  கணவருடன் சேர்ந்து வாழ உரிமை கோரி திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நான் 2015ல் வழக்கு  தொடர்ந்தேன். இதை விசாரித்த நீதிமன்றம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள எனது கணவரின் வீட்டில் நான் வசிக்க அனுமதி அளித்து 2016 ஜூன் 28 ல் உத்தரவிட்டது. அதன்படி தான் இங்கு வந்தபோது எனது கணவர் வீட்டார் என்னை அனுமதிக்க மறுத்து கதவை பூட்டி விட்டனர். எனவே என்னை வீட்டில்  சேர்க்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரபோவில்லை’’ என்றார்[4].

Falling in love - allowed in Islam or notதீர்ப்பில் தெளிவில்லையா, ஊடகங்கள் செய்தியை ஒழுங்காக வெளியிடவில்லையா?: இங்கு சத்தியகுமார் 2009ல் முஸ்லிம் மதம் மாறி பர்ஜானா பேகத்தைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.  பிரேமா என்பவரை சத்தியக்குமார் 2011 செப்., 1 ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்[5] என்றால், முஸ்லிமாக இருந்து இந்துவை திருமணம் செய்து கொண்டது பிரச்சினையாகிறது. சரளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி செல்லுபடியாகாது. ஒன்று பிரேமா மதம் மாறியிருக்க வேண்டும், இல்லை, சத்திரயகுமார் தான் இந்து என்றே திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். 2011லிருந்து இன்று வரை பிரேமாவுடன் வாழ்ந்து வருகிறார், அதாவது, பர்ஜானா பேகத்துடன் வாழவில்லை. 2016 ஜூன் 28 ல் தான், பர்ஜானா பேகத்துடன் சேர்ந்து வாழ உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஒரு முஸ்லிமாக சத்திரயகுமார், இரண்டு பெண்டாட்டிகளுடன் வாழ்வது சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்தது போலும். அதனால் தான், சரளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பில் இந்தியர்களுக்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்று பரிந்துரைத்தது[6]. ஆனால், அவ்விசயம் தேவையில்லாமல் அரசியலாக்கப்பட்டுவிட்டது. இதனால், காலதாமதம் ஏற்பட்டு வருகிறது[7].

Barjana Begum, Sathyakumarஇஸ்லாத்தில் கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம்: இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், காதல் பற்றி மாறுபட்ட கருத்துகள் தான் உள்ளன. குரானை வைத்து விளக்கப்படும் போது, காதல் ஹராமா – ஹலாலா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. காதலைப் பற்றி அல்லாவுக்குத் தான் எல்லாம் தெரியும், அதனால், ஒரு ஆணோ, பெண்ணோ அதை தீர்மானிக்க முடியாது, அல்லாவுக்குத் தான் தெரியும் என்றெல்லாம் கூட பதில் சொல்கிறார்கள். ஹராம் காதல் மற்றும் ஹலால் காதல் என்றும் பிரிக்கிறார்கள். ஜாகிர் நாயக் போன்றோர், கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள்[8]. கல்யாணத்திற்கு முன்பான காதல்  [Love before Wedding] என்பது LBW என்றே கிண்டல் அடிக்கிறார். பொதுவாக, யாரும் இதற்கு நேரிடையான பதிலைக் கொடுப்பதில்லை. ஆனால், முஸ்லிம் பையன்கள் மற்றும் பெண்கள் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபகாலங்களில் காதலர் தினத்தை கடுமையாக, ஆசார இஸ்லாமியர் எதிர்த்து வருகின்றனர். அந்நிலையில் காதலை விபச்சாரம் என்றும் விமர்சிக்கின்றனர். அல்லாவைத் தவிர யாரையும் காதலிக்க முடியாது என்ற தீவிர வாதமும் வைக்கப் படுகிறது.

© வேதபிரகாஷ்

31-08-2016

love is haram- llll

[1] தினகரன், காதல் திருமணம் செய்த பெண் கணவர் வீடு முன்பு தர்ணா கோர்ட் உத்தரவுப்படி சேர்த்து வைக்க கோரிக்கை, Date: 2016-07-01 11:44:37

 http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=591795&cat=504

[2] தினமலர், தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன் 2 வது நாளாக திருச்சி பெண் வக்கீல் தர்ணா போராட்டம் * கட்சிகள் ஆதரவு, பதிவு செய்த நாள். ஜூலை.2, 2016. 03.58.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1555310&Print=1

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1555310&Print=1

[4]  http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=591795&cat=504

[5] தினமலர், தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன் 2 வது நாளாக திருச்சி பெண் வக்கீல் தர்ணா போராட்டம் * கட்சிகள் ஆதரவு, பதிவு செய்த நாள். ஜூலை.2, 2016. 03.58.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1555310&Print=1

[6] Supreme Court of India – Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635, Author: K Singh – Bench: Kuldip Singh (J).

[7] https://indiankanoon.org/doc/733037/

[8] https://www.youtube.com/watch?v=dnQ-Lh-0Auk