Posted tagged ‘ஹர்கத்-உல்-முஜாஹித்தீன்’

தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

மார்ச் 22, 2013

தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

Hijbul Mujahiddeen - Paki-terrorist group

இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டு அவதாரங்களை எடுத்து வருவது: சட்டப்படி, தப்பித்துக் கொள்ள இஸ்லாமிய, ஜிஹாதி மற்ற பிதாயீன் தீவிரவாதிகள் சட்டத்திலிருந்துத் தப்பித்துக் கொள்ள இயக்கங்களின் பெயரை மாற்றிக் கொண்டு வருகின்றன. அதன்படியே, தங்களது வங்கிக் கணக்குகளையும் மாற்றி வருகின்றன. சிமி தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருக்கிறது. பெயர்கள், சின்னங்கள், அடையாளங்கள் ஒருவிதத்தில் மாற்றப்பட்டாலும், அவர்களே அந்தந்த பணியை செய்து வருகிறார்கள்.

Paki-terrorist arrested - militant of Al-barq

ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டம்: தில்லியில் ஹோலி பண்டிகையின் மீது தீவிரவாதத் தாக்குதல் திட்டமிட்ட சதியை முறியடித்துள்ளதாக, தில்லியின் போலீஸ் அதிகாரி எஸ்.என். ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் ஷா  (Syed Liyaqat Shah, a former militant of Al Barq terror outfit) என்பவன் புதன்கிழமை அன்று (20-03-2013) கைது செய்யப்பட்டான்[1]. அவன் பாகிஸ்தானிய தீவிர இயக்கமான அல்-பர்க் என்பதின் அங்கத்தினன்.

Haji Arafat Guest house - room No.301 arms stored

அல்-பர்க் பாகிஸ்தானிய இயக்கத்தின் தீவிரவாத செயல்கள்: அல்-பர்க் இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களை மேற்கொண்டுள்ளது[2]. தான் பாகிஸ்தானிலிருந்து நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டிற்கு வந்ததாகவும், அங்கிருந்து சாலை வழியாக நேபாள எல்லை வரை பிராயணித்து, பிறகு எல்லைகளைக் கடந்து, இந்தியாவில் நுழைந்ததாக ஒப்புக்கொண்டான்[3]. ரயில் மூலம் தில்லிக்கு சென்றுகொண்டிருக்கும் போது, கோரக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளன். தான் பாகிஸ்தானின் குடிமகன் என்பதற்கான ஆதாரங்களையும் அழித்துவிட்டதாக ஶ்ரீவஸ்தவா கூறுகிறார்[4].

Kashmir terror

லியாகத்தின் உறவினர்கள் மறுக்கின்றனர்: ஆனால், லியாகத்தின் தாயார், சகோதரர் இதனை முழுமையாக மறுத்துள்ளனர்[5]. தீவிரவாதத்தை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் கலக்க விரும்புவர்களுக்கு, மன்னிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படிதான் இவன் வந்துள்ளான். ஆனால், போலீஸார் அதனை வேறுவிதமாக விளம்பரப்படுத்துகிறார்கள்[6] என்று குறை கூறுகின்றனர். இருப்பினும், தீவிரவாதிகள் அனைத்தையும் தகக்கு சாதகமாத்தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான், ஒரு முறை, ஒரு தீவிரவாதிக்கு பத்மஶ்ரீ விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது! இங்கும் குடும்பம் முழுவதுமாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளது[7]. இந்துக்கள் பாகிஸ்தானில் கொடுமைப்படுத்தப்படுவதால், இந்தியாவிற்கு வருகின்றனர், ஆனால், அவர்களை கைது செய்து திரும்ப அனுப்பப்படுகின்றனர்.

Indian flag burned

ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் ஆயுதங்கள் பறிமுதல்: இந்தியாவிற்குள் நுழைந்து, தில்லிக்கு வந்ததும், ஹாஜி அராபத் விருந்தினர் விடுதி, அறை எண்.301ற்கு வந்து ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுமாறு இவனுக்கு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படித்தான், இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டெல்லியில் சிறப்பு காவல் படையினர் நேற்று இரவு ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 30 காட்ரிஜ்கள் அடங்கிய இரண்டு சுற்று துப்பாக்கிக் குண்டுகள், அதிக அளவிலான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன[8].  இதனால் தீவிரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது[9]. அதேசமயம் ஓட்டலில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை விட்டுச் சென்ற நபரைக் கண்டறிய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த ஓட்டலுக்கு வந்த நபர்கள் அனைவரும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பார்கள். எனவே, அந்த வீடியோ பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் கேட்டபோது, ஹாஜி அராபத் என்பவர், ‘சுற்றுலாப் பயணி போன்று வந்த ஒரு நபர் 301 எண் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் வாடகை கொடுத்திருந்தும், இரவு 8 மணிக்கு அந்த நபர் அறையைவிட்டு சென்றுள்ளார்.  அதன்பின்னர் திரும்பி வரவில்லை” என்று கூறினர்.

Indian-flag-burned2

தீவிரவாத இயக்கம் செயல்படும் முறையை விளக்கிய லியாகத்[10]: ஹிஜ்புல் முஜாஹித்தீனின் தலைவனான காஜி நஸ்ரித்தூன் மற்றும் பரூக் குரேஷி லியாகத்தைச் சந்தித்து, “பிதாயீன்” வேலைக்கு இளைஞர்களை சேர்க்க நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். குடியரசு தினத்தை துக்க நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ரும், பிறகு அப்சல் குரு தூக்கிலிடுவதை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ரும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் பிறகு, தில்லியில் அருமையான பயங்கரவாத வேலையை செய்து முடிப்பார்கள் என்றார்கள். இந்த வேலை முடிந்ததும், ஒன்றுமே தெரியாத மாதிரி, காஷ்மீரத்திற்கு வந்து மறுபடியும் அத்தகைய “திறமைசாலிகள்” கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிடருக்க வேண்டும்[11].

INDIA-KASHMIR-UNREST

INDIA-KASHMIR-UNREST

கஜினியை வென்றுவிட்ட 18வது முயற்சி: கடந்த ஜனவரி 2011லிருந்து, இப்பொழுது வரை தில்லியில் ஹிஜ்புல் முஜாஹித்தீனின் சதிதிட்டத்தின் குழுவை பிடிப்பது 18வது முறையாகும்[12]. தொடர்ந்து இவ்வாறு பல இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்தியா பிடித்து வருவதால், பாகிஸ்தான் அத்தகைய தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அதனை மறுத்து வருகிறது[13]. அதாவது, தீவிரவாதத்தினால் பாகிஸ்தானே பாதிக்கப்பட்டுள்ளது என்கிறது.

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

முஸ்லாம் தேசமான பாகிஸ்தானை ஏன் முஸ்லீம்கள் தாக்குகின்றன?: ஆனால், முஸ்லீம்களே முஸ்லீம்களை ஏன் தாக்குகின்றனர் என்பதனை பாகிஸ்தானோ, ஊடகங்களோ விளக்குவதில்லை. இங்குதான் அந்த ஜிஹாதின் மகத்துவம் வருகின்றது. குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். பாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது.

© வேதபிரகாஷ்

23-03-2013


[7] NDTV has learnt that Liyakat Shah and his family, including his 18-year-old daughter flew from Karachi to Kathmandu and reached Sanauli post on the Indo-Nepal border on March 20. There, they informed the border police. However, instead of allowing them to proceed to Jammu and Kashmir as planned and promised, the Delhi Police arrested them.

http://www.ndtv.com/article/india/delhi-police-claims-wanted-terrorist-caught-not-true-says-kashmir-345826

[8]  Delhi Police seized an AK-56 assault rifle, two magazines with 30 cartridges each, and a hand grenade from a room of a guest house near the famous Jama Masjid mosque.

http://www.ndtv.com/article/india/delhi-police-claims-wanted-terrorist-caught-not-true-says-kashmir-345826

[9] The Delhi Police have arrested a suspected Hizbul Mujahideen militant from Uttar Pradesh. Police sources said the alleged operative, Liaqat Ali, was on way to Delhi in a train when he was arrested from Gorakhpur two days back. During interrogation, the man is reported to have confessed that a possible attack in Delhi was being planned around Holi. Going by the man’s confessional statement, the Special Cell of Delhi Police raided a guest house in the Jama Masjid area in Old Delhi last night and recovered one AK-47 rifle and some explosives.

[11] Later, a person called Ghazi Nasiruddin, said to be a commander of Hizbul Mujahideen, and Farooq Qureshi informed Liyaqat that he had been chosen to supervise young “fidayeen” recruits who would commit spectacular terrorist strikes in Delhi. He was told that after the strikes were execued, he should return to the Kashmir valley to settle down and to engage himself in “talent spotting”, that is finding new recruits and facilitating their cross-border travel into Pakistan-occupied Kashmir, he said.

[12] This is the 18th module of Hizb-ul-Mujahideen busted in Delhi, the last being in January, 2011 in which four members of Hizb-ul-Mujahideen were arrested, police said.

[13] India has long accused Pakistan of arming and training Islamic militants and unleashing them into India to attack government forces and other targets – a charge Islamabad denies.

காந்தாஹார் தீவிரவாதி சிலியில் பிடிபட்டானாம்!

ஏப்ரல் 12, 2011

காந்தாஹார் தீவிரவாதி சிலியில் பிடிபட்டானாம்!

தென்னமெரிக்க நாடான சிலியில், 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் (Indian Airlines plane IC-814) கடத்தியவர்களுக்கு உதவியவன் என்று கருதப் படக்கூடிய அப்துல் ரௌஃப் (Abdul Rauf) என்பவன் பிடிப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன[1]. இந்தியா இன்டர்போலிற்கு இவர்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளதால், சிலியின் அதிகாரிகள் பிடிபட்டவர்களின் புகைப்படங்கள், கைரேகைகள் முதலியவற்றை அனுப்பியுள்ளனர்[2].

இவன் மௌலானா மசூத் ஹஸார் (Maulana Masood Azhar) என்ற ஜெஸ்-இ-முஹம்மத் (Jaish-e-Mohammad chief) என்ற இயக்கத்தின் தலைவனுடைய சகோதரன் ஆவன். இவன் அப்துல் லத்தீஃப் என்பவனுடன் தொடர்பு கொண்டு, பி.பி.சிக்கு அந்த விமான கடத்தல் பற்றி விவரங்களைக் கொடுக்க போன் செய்தபோது, அதனை இடைமறித்து கேட்டபோது, சி.பி.ஐ அவர்களைக் கண்டறிந்து கைது செய்தது[3]. அப்பொழுது 160 விமானப் பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, மூன்று தீவிரவாத-பயங்கரவாதிகள் – முஸ்தாக் அஹமது ஜர்கர் (Mushtaq Ahmed Zargar),  அஹ்மது ஒமர் சையீது செயிக் (Ahmed Omar Saeed Sheikh) and மௌலானா மசூத் ஹஸார் (Maulana Masood Azhar) சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டனர். இம்மூவரும் பலதடவை நேபாளத்திற்கு வந்து சென்றுள்ளதாக தமது வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டுள்ளனர்[4].

டிசம்பர் 24, 1999 அன்று காட்மண்டுவில் உள்ள திரிபுவன அனைத்துலக விமான நிலையத்தில் ஒரு இந்தியன் ஏர்லைன்ஸ் விமமனம் தரையிரங்கும் நேரத்தில் ஹர்கத்-உல்-முஜாஹித்தீன் என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அதனைக் கடத்தினர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டிலிருந்து செயபடும் கூட்டத்தினர். இவ்விமானம் அம்ருத்ஸர், லாஹூர் மற்றும் துபாய் வழியாக கந்தஹாருக்குக் கடத்திச் செல்லப் பட்டது. முதலில் 27 பேர்களை – முஸ்லீம்கள் என்று – விடுதலை செய்தனர். ஒரு பயணியைக் கொன்று, பலரை காயமடையச் செய்தனர்.

All five hijackers have been identified

The Indian government Thursday announced it had identified the five hijackers of IC 814, all of them Pakistanis.

Home Minister L K Advani, at a press conference in New Delhi, said the photographs of the five men who had commandeered the Indian Airlines plane to Kandahar in Afghanistan had been shown to the hostages who had identified every single one of them. The hijackers were Ibrahim Akhtar (from Bhawalpur), Syed Akhtar Syed (Gulshaniqbal area, Karachi), Sumi Ahmed Qari (defence area, Karachi), Mistry Zahoor Ibrahim (Karachi) and Shaqir (Sakkar, Sindh).

Advani said the Bombay authorities had arrested four activists of the Harkat-ul-Mujahideen who had provided a support base for the hijackers. With their arrest, the government was in possession of irrefutable evidence and documents that revealed ”Pakistan’s neck-deep involvement in the dirty game of hijacking.” The conspiracy to hijack the aircraft was hatched by the four headed by Abdul Latif from Bombay, two months back. The three others are Mohammed Rehan (Karachi), Mohammad Iqbal (Multan) and Yusuf Nepali (Nepal). Advani described it as a significant breakthrough in showing Pakistan’s involvement in the incident. He said Latif, who had been to one of the Gulf nations and was trained in Pakistan and Afghanistan, took principal hijacker Ibrahim Akhtar from Bombay to Calcutta on November one. From there they went to New Jalpaiguri in West Bengal and then to Kathmandu.

Latif also accompanied another hijacker Shaqir to Nepal on December one via Gorakhpur in Uttar Pradesh. Police achieved the breakthrough when they intercepted a message to Latif from a Pakistani contact, directing him to get in touch with a television correspondent and give the information that if the hijackers’ demand was not met they would blow up the plane. The home minister said Pakistan’s complicity is borne out by the events that occurred in the course of the hijack episode itself. A little before the departure of IC 814 from Kathmandu, three officials from the Pakistan embassy dismounted from a car and proceeded to the departure lounge. One of them is believed to have supplied RDX to a group of Punjab militants in Kathmandu some years back. When the hijackers took control of the aircraft and announced that the plane had been hijacked their first directive to the pilot was: proceed to Lahore.

The Air Traffic Controller at Lahore declined to permit the Indian Airlines plane to land but when on its way back from Amritsar, the chief hijacker spoke to the ATC in Lahore and urged him that the plane had to be refuelled. The ATC Lahore then allowed it to land, and provided the fuel.

Out of the 36 prisoners whose release was demanded by the hijackers as many as 33 were Pakistanis, one was a United Kingdom citizen of Pak origin and one was an Afghan. Only one was a Kashmiri Indian. As such, Pak interest in getting these prisoners released is evident, Advani said.- UNI

வேதபிரகாஷ்

12-0402011