ஹஜ் மானியம் 941 கோடிகளுக்கு உயர்ந்துள்ளது!
ஹஜ் யாத்திரைக்கு செக்யூலார் அரசாங்கம் கோடிகளை அள்ளித் தருகிறது. இது பத்து வருடங்களில் சுமார் ஏழு மடங்கு உயர்ந்துள்ளது
வருடம் | கோடிகள் |
2000-01 | 137 |
2001-02 | 154.5 |
2002-03 | 170 |
2003-04 | 200 |
2004-05 | 225 |
2005-06 | 280 |
2006-07 | 378 |
2007-08 | 513.87 |
2008-09 | 620 |
2009-10 | 941 |
முஸ்லீம் ஓட்டு வங்கியை நம்பி இவ்வாறு காங்கிரஸ் மற்ற கூட்டணி கட்சிகள் இருப்பதால், இதனை நிறுத்த அவர்களுக்கு தைரியம் உண்டா என்று தெரியவில்லை. முஸ்லீம்களும், இத்த்தகைய மானியம் கொடுக்கக் கூடாது என்கிறார்களேத் தவிர, வாங்கிக் கொண்டு சென்றுதான் வருகிறார்கள். மானியமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது!
சென்னை:’தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சட்டசபையில் கோரிக்கை விடப்பட்டது.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:ரவிக்குமார் – வி.சி: ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு ஆவன செய்ய வேண்டும். ஹஜ் பயணம் செல்பவர்கள் தங்குவதற்கான இடத்தை மத்திய அரசு புக் செய்து அதற்கான பணத்தை பயணிகளிடமிருந்து பெறுகிறது.
இதில் காலதாமதம் ஏற்படுவதால் நல்ல இடம் கிடைக்காமல் போகிறது. மத்திய அரசு முதலில் இடத்தை புக் செய்து பின் பயணிகளிடமிருந்து பணத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பன்னீர்செல்வம் – அ.தி.மு.க: அ.தி.மு.க., ஆட்சியில் ஹஜ் பயணம் செல்ல மனு செய்தவர்கள் அனைவருக்கும் மத்திய அரசுடன் பேசி, செல்வதற்கு வழி செய்யப்பட்டது. தற்போது மனு செய்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
அமைச்சர் மைதீன்கான்: கடந்த 2009ம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செய்ய 2,700 பேருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் முதல்வர், துணை முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால், 1,116 பேர் கூடுதலாக சேர்த்து 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர். ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
இந்த ஆண்டு, மூன்று முறை தொடர்ந்து ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தவர்களை குலுக்கல் இல்லாமலே தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். 2009ம் ஆண்டு 16 ஆயிரத்து 735 பேர் ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தனர்; 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.
சென்னை:தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கான முதல் குழு நேற்று அதிகாலை புறப்பட்டது. முதற்கட்டமாக, 416 பேர் விமானம் மூலம் மதீனா புறப்பட்டுச் சென்றனர். தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான், நிகோபரில் இருந்து இந்த ஆண்டு மொத்தம் 3,833 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து ஆறு குழந்தைகள் உள்ளிட்ட மூன்றாயிரத்து 458 பேரும், புதுச்சேரியில் இருந்து 247 பேரும், அந்தமான், நிகோபர் தீவுகளில் இருந்து 101 பேரும் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.ஹஜ் பயணத்திற்கான முதல் குழு நேற்று காலை சென்னையில் இருந்து மதீனா புறப்பட்டது. சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலம் நேற்று காலை 6 மணிக்கு 198 ஆண்கள், 218 பெண்கள் உள்ளிட்ட 416 பேர் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மைதீன்கான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் உறுப்பினர் செயலர் அலாவுதீன் உட்பட ஏராளமானோர் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.
அமைச்சர் மைதீன்கான் பேட்டியளிக்கையில், “ஹஜ் பயணத்திற்கு தமிழக அரசு தேவை யான உதவிகளை செய்து வருகிறது. இதற்காக, முதல்வர் கருணாநிதிக்கும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று (நேற்று) துவங்கியுள்ள இந்த ஹஜ் பயணம் வரும் 31ம் தேதி வரை தொடரும்.
ஹஜ் யாத்திரை செல்பவர்கள் அங்கு தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு, வரும் டிசம்பர் 4ம்தேதி முதல் திரும்பத் துவங்குவர். ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் யாத்திரைக் காக வரும் விண்ணப் பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே, தமிழகத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளோம்’ என்றார்.
அண்மைய பின்னூட்டங்கள்