Posted tagged ‘ஹசீனா பார்கர்’

தாவூத் இப்ராஹிமின் உறவினர்கள் இந்தியாவில் சுகமாக வாழ்வது எப்படி?

மே 18, 2011

தாவூத் இப்ராஹிமின் உறவினர்கள் இந்தியாவில் சுகமாக வாழ்வது எப்படி?

மும்பையில் தாவூத்தின் குடும்பத்தினர்: இந்தியாவின் எதிரி, மும்பை வெடிப்புக்கு மற்றும் 26/11 குற்றத்தின் காரணகர்த்தா, தேடப்படும் குற்றாவாளி என்றெல்லாம் சொல்லப்படும் தாவூத் இப்ராஹிமின் குடும்பம் இந்தியாவில் சந்தோஷமாக இருப்பது விசித்திரமான செய்திதான். ஹசீனா பார்கர் (Haseena Parkar) என்ற தாவூத்தின் சகோதரியும் மும்பையில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் இங்குதான் வசிக்கிறார். பாகிஸ்தான் எப்படி ஒசாமா பின் லேடனுக்கு இடம் கொடுத்ததோ, அதுபோல, இவர்களுக்கு இடம் கொடுத்துள்ளது. தாவூத் இப்ராஹிம் இவர்களை சந்திக்க இந்தியாவிற்கு வரவில்லை அல்லது அவர்கள் அவனைப் பார்க செல்லவில்லை என்று சொல்லமுடியுமா? மும்பைத் திரைப் பட நட்சத்திரங்கள் தாவூத் இப்ராஹிமுடன் சேர்ந்தே செயல்பட்டு வருகின்றனர். ஏனெனில், அவன் தயவு இல்லாமல், இந்தி படங்கள் வெளிவரமுடியாது என்ற நிலைய்ள்ளது. குல்ஷன்குமார் கொல்லப்பட்டது, ஒவ்வொருவரின் மனத்திலும் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கிறது எனலாம்.

Name: Dawood Sheikh Ibrahim KaskarFather’s name: Late Sheikh Ibrahim Ali KaskarMother’s name: Late Amina

Wife’s name: Mehjabeen, alias Zubina Zareen

Children: Mahrukh, 25 years, married to Pakistan’s former cricket captain Javed Miandad’s son, Junaid[22]; Mehreen, 23 years; Moeen, 20 years; Atif Aslam 25 years; Maria, 14 years.

Siblings: Brothers – Late Noor-ul-Haq alias Noora (allegedly shot dead by gangsters in Karachi);[23] Anees Ibrahim Kaskar;[24] Iqbal Kaskar; a sister known as Aapi (reportedly 11 siblings, names of others not known)

பெயர் – தாவூத் இப்ராஹிம் கஸ்கர்தந்தை – செயிக் இப்ராஹிம் அலி கஸ்கர்(இறந்துவிட்டார்)தாயார் – அமீனா (இறந்துவிட்டார்)

மனைவி – மெஹ்ஜபீன் / ஜுபினா ஜரீன்

மகன் / மகள்கள் – மகள் மஹ்ருக் (25), பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்டட்டின் மகனை (ஜுனைத்) கல்யாணம் செய்து கொண்டுள்ளாள்; மெஹ்ரீன் (23); மோயீன் (20); அதிஃப் அஸ்லம் (25); மரியா (14).

சகோத-சகோதரிகள் – நூர் உல்-ஹக் / நூரா (இறந்துவிட்டார்); அனீஸ் இப்ராஹிம் கஸ்கர், ஆபி (சகோதரி), மொத்தம் 11 பேர்; மற்றவர்களின் பெயர்கள் தெரியவில்லை

இக்பால் கஸ்கரின் மீது தாக்குதல்: மும்பையில் பைகுல்லா என்ற இடத்தில் பக்மோடியா தெருவில் (Pakhmodia Street in Byculla) வசிக்கும்[1] இக்பால் கஸ்கர் (55), செவ்வாய்க்கிழமை தெற்கு மும்பை பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்தார். நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் மீது மும்பையில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது[2]. இதில் அதிர்ஷ்டவசமாக தாவூத் சகோதரர் இக்பால் கஸ்கர் காயம் இன்றி தப்பித்தார். ஆனால் அவரது கார் டிரைவர் ஆரிப் சையது (Asif Zaveri) சம்பவ இடத்திலேயே இறந்தார்.  அன்வர் ஹிப்பி மற்றும் அன்வர் கரதே (Anwar Hippi and Anwar Karate) என்ற இரு பாதுகாவலர்களும் தப்பித்தனர்[3]. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. மேலும் 2 பேர் தப்பி ஒடினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்[5]. இக்பால் மீது நிலமோசடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரௌடி கும்பல்களுக்கு இடையேயான போட்டியில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று மும்பை போலீஸார் தெரிவித்தனர்[6].

   

கார் டிரைவர் சாவு: இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பேந்தி பஜார், போரி மொஹல்லா என்ற இடத்தில்[7] நேற்று இரவு சுமார் 9 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.  இரவு உணவை முடித்துக் கொண்டு, இக்பால் தன்னுடைய பாதுகாவலருடன் நடந்து சென்றதாகவும் அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இக்பால் மீதும், ஆரிப் மீதும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாகவும், சுதாரித்துக் கொண்ட இக்பால் அருகில் இருந்த காருக்குப் பின்னர் ஒளிந்து தப்பியதாகவும், எனினும் ஆரிப் குண்டு காயம் அடைந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் ஆரிப், இதயப் பகுதியிலும், வயிற்றிலும், நெற்றிப்பொட்டிலும் காயம் அடைந்தாகவும், அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் கூறப்படுகிறது[8].


குற்றம் நிரூபிக்கப் படாதலால் முன்னர் விடுவிக்கப்பட்டான்: அரபு நாடு ஒன்றில் வாழ்ந்து வந்த இக்பால், ஒரு கொலைக் குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய அரசால் தேடப்பட்டு வந்தார். பின்னர் இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். எனினும், இவர் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் கோர்ட் இவரை விடுவித்தது. அதன் பிறகு இவர் மும்பையில் வசித்து வந்தார். இக்பால் மீதான தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்த போலீசார், இது கோஷ்டிகளுக்கு இடையிலான முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என்றும், இந்த தாக்குதலுக்கு பின்னால் தாவூத் இப்ராஹிமின் எதிரியான சந்தோஷ் ஷெட்டி இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தனர்.


சோட்டா ராஜன் சதி? : இதற்கிடையில் தாவூத் சகோதரரை கொலை தங்களை ஏவியது சோட்டா ராஜன் என கைது செய்யப்பட்ட சையத் பிலால் முஸ்தபா அலி, இந்தர்லால் பஹதூர் காத்ரி (Syed Bilal Mustafa Ali and Inderlal Bahadur Khatri) ஆகிய 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்[9]. அவர்கள் இருவர் மீதும் இ.பி.கே., 302 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் இன்று மாச‌கான் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகின்றனர்[10].


கொலை-கொள்ளைக்காரர்களின் மோதல்கள்-சண்டைகள்: மும்பை வெடிகுண்டு குற்றத்திற்குப் பிறகு, தாவூத் மற்றும் அவனது கூட்டளிகள் சோட்டா ஷகீல் தங்களுடைய வேலைகளை தஹ்ரான், சவுதி அரேபியாவிற்கு மாற்றிக் கொண்டனர்[11]. கஸ்கர் சுடப்பட்ட சில நொடிகளில் இருவரது போன்களும் ஒலித்துக் கொண்டே இருந்ததாக, செய்திகள் வெளிவந்துள்ளன. ரவி பூஜாரி, விஜய் ஷேட்டி முதலியோர்களின் தொடர்புகளும் சந்தேகிக்கப்படுன்றன.

அனில் கபூருடன் தாவூத் 
மந்தாகினியுடன்
சல்மான் கானுடன் தாவூத்!

தாவூத்தைப் பற்றிய புத்தகம்