இந்திய முஸ்லிம்கள் ஐ.எஸ்சில் சேர்ந்து ஜிஹாதில் ஈடுபடுவது உள்ளூர் தீவிரவாதமா, அனைத்துலக தீவிரவாதமா?

ஐ.எஸ் கொடி
இந்திய முஸ்லும்கள் ஐ.எஸ்சில் சேர்வது உள்ளூர் தீவிரவாதமா, அனைத்துலக தீவிரவாதமா?: பாரீஸ் தாக்குதலை [13-09-2015 வெள்ளிக்கிழமை] தொடர்ந்து இந்தியாவில் ஐ.எஸ் இயக்கம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக இந்தியா எச்சரித்து உள்ளது. ஐ.எஸ் அமைப்பு இந்த வாரம் இந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என இந்திய உள்துறை கூறி உள்ளது. சிரியா, ஈராக்கில் இயங்கி வரும் ஐ.எஸ் அமைப்பில் குறைந்தது 23 இந்தியர்கள் இணைந்து உள்ளனர். இவர்களில் ஆறு பேர், மேற்கத்திய நாடுகளின் விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்; ஒருவர், இந்தியா திரும்பிவிட்டார். இவர்கள், மஹாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்[1]. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளுக்கு அவர்கள் சென்றுள்ளனர். இவர்களில் ஆறு பேர், மேற்கத்திய நாடுகளின் விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்; ஒருவர், இந்தியா திரும்பி விட்டார். இவர்கள், மஹாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள். மேலும், இந்தியாவில் உள்ள 150 பேர் ஐ.எஸ் பிரசாரத்தை தொடர்ந்து அந்த அமைப்பின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை இந்திய உளவுத்துறை கண்காணித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

huji Bangaladesh
“உள்ளூர் தீவிரவாதம்”, “உள்நாட்டில் வளர்ந்த தீவிரவாதம்”, “நாட்டுப்புற தீவிரவாதம்”: இன்றைக்கு “உள்ளூர் தீவிரவாதம்”, “உள்நாட்டில் வளர்ந்த தீவிரவாதம்”, “நாட்டுப்புற தீவிரவாதம்” என்றெல்லாம் பேசப்படுகிறது. அதாவது, இஸ்லாமிய தீவிரவாதம் என்றால், அனைத்துலகில் செயல்படுகிறது என்ற எண்ணம் கூடாது. அந்தந்த நாட்டில், உள்ளூர் சமாசாரங்களுக்கு ஏற்பக்கூட அது செயல்படும், வேலை செய்யும் என்றுணர்த்த அவ்வாறான பிரச்சாரம் ஆரம்பிக்க வைக்கப்பட்டது. ஆனால், இணைதள விவகாரங்கள், கண்காணிப்புகள், தகவல் பரிமாற்றங்கள் முதலியன, இந்த உள்ளூர் தீவிரவாதிகள் அனைத்துலக தொடர்புகளுடன் தான் வேலை செய்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டின. முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும், அரேபிய-வளைகுடா நாடுகளுடன் தொடர்புகளை வைத்துள்ளனர். வேலை-வியாபாரம் முதலியவற்றைத் தாண்டி அவை வேலை செய்வது, பலமுறை கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இது “அனைத்துலக தீவிரவாதம்” தான் என்பது, உலத்தில் பட இடங்களில் ஜிஹாதிகள் மேற்கொண்டு வரும் குரூர-கொடூர தாக்குதல்களிலிருந்து தெரியவருகிறது.

Protesters hold ISIS flag in Srinagar-TOI photo by Bilal Bahadur- October 2014
மதத்தலைவர்கள், ஷேக்குகள், பிரச்சாரகர்கள் வந்து போகும் போது, அவர்களுடன் தீவிரவாதிகளும் வருவது: இந்தியாவைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு முறை, மதத்தலைவர்கள், ஷேக்குகள், பிரச்சாரகர்கள் அங்கிருந்து வரும் போது, மதவிரும்பங்களுக்கு ஏற்பத்தான் அவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இஸ்லாம் வளர நிதியுதவி அளித்துள்ளனர். இதனால், மசூதிகள் பெருகின; முஸ்லிம் பிரிவுகளும் பெருகின; அரசியல் கட்சிகளும் வளர்ந்தன. இவையெல்லாம் நிதியுதவி பெறவே அவ்வாறு பிரிந்துள்ளது போல காட்டிக் கொள்வதும் தெரியவந்துள்ளது. ஏனெனில் மதரீதியில், விருப்பங்களில் ஒன்றாகத்தான் வேலை செய்து வந்துள்ளனர். இதே முறைதான் அயல்நாட்டு தொடர்பிகளிலும் வேலை செய்து வருகின்றன. மதத்தலைவர்கள், ஷேக்குகள், பிரச்சாரகர்கள் வந்து போகும் போது, அவர்களுடன் தீவிரவாதிகளும் வருவது திடுக்கிட வைப்பதாக உள்ளது. இது அஷ்ரப் அலி வழக்கில் தெரியவந்துள்ளது. கேரளாவுக்கு முன்பு 1980களில் ஷேக்குகள் வந்து சென்றபோது பிரசினை ஏற்பட்டதை நினைவு கூறலாம். அவர்கள் வியாபார நிமித்தம், சுற்றுலா என்ற போர்வைகளில் வந்து, மதப்பிரச்சாரத்தில் ஈடுபடுவது, மசூதிகள் கட்டுவதற்கு, நிதியுதவி கொடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். வெறும் மதரீதியில் அவர்களது காரியங்கள் இருந்தால் பரவாயில்லை. அப்பொழுது மதமாற்றம் என்ற பிரச்சினை இருந்தது, இப்பொழுது தீவிரவாதம் என்று மாறியுள்ளது.
எஞ்சினியர்கள் ஐ.எஸ் வேலையில் சேர்வதன் மர்மம் என்ன?: கடந்த பிப்ரவரி 2015ல் ஒன்பது இந்திய முஸ்லிம்கள் துருக்கியிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். பெங்களுருக்கு வந்தபோது, போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். சுற்றுலா விசா மூலம் அவர்கள் பெங்களுரிலிருந்து டிசம்பர் 24,2014 அன்று இஸ்தான்புல் நகருக்குச் சென்றனர். ஜனவரி.30, 2015 அன்று துருக்கிய அதிகாரிகள் அவர்களை நாடுகடத்தியுள்ளனர்[2].
- இப்ராஹிம் நௌபல் – Ibrahim Nowfal, 24, from Hassan
- ஜாவித் பாபா – Javeed Baba, 24, from Khammam district, Telangana.
- மொஹம்மது அப்துல் அஹத் – Muhammed Abdul Ahad, 46, belonged to a family from Chennai
- மொஹம்மது அப்துல் அஹத்தின் மனைவி – his wife belonged to a family from Chennai
- மொஹம்மது அப்துல் அஹத்தின் ஐந்து குழந்தைகள் – their five children seven belonged to a family from Chennai[3].
மொஹம்மது அப்துல் அஹத் ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினியர் மற்றும் அமெரிக்காவில் 10 ஆண்டுகள் வேலை செய்தவர் என்று குறிப்பிடத் தக்கது[4]. அமெரிக்காவில் தங்கிவிட்டாலும், இன்னும் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறான் என்று போலீஸார் எடுத்துக் காட்டினர். இங்கு படித்தவர்கள் தீவிரவாதிகள் ஆகிறார்கள் என்பது முக்கியமல்ல, படித்தும் முஸ்லிம்களின் மனங்கள் மதவாதம், அடிப்படைவாதம், ஜிஹாதித்துவம் முதலியவற்றால் இருகிவிடுவதால், தீவிரவாதத்தில் ஈடுபடுவது, ஒரு தெய்வீக காரியமாக, கடவுளுக்கு செய்கின்ற காரியமாக மனவுவந்து செய்கிறார்கள். அவர்களது மனைவி, பேற்றோர், மற்றோரும் அறிந்தே உதவுகின்றனர். இது சித்தூரில் தீவிரவாதிகள் பிடிபட்டபோது தெரியவந்தது.

HSBC-drugs-and-terrorism-financing
தீவிரவாதத்தையே, ஒரு தொழிலாக, உத்தியோகமாக, வியாபாரமாக, நடத்தும் விதம்: ஒருவேளை, தீவிரவாதத்தையே, ஒரு தொழிலாக, உத்தியோகமாக, வியாபாரமாக, நடத்த தீர்மானித்து விட்டு, ஒரு கம்பனி போன்ற அமைப்பை உருவாக்கி வைத்தால், அக்கம்பெனிக்கும் பற்பலவிதமான ஆட்கள், தொழிலாளர்கள் என்று தேவைப்படுவார்கள் இல்லையா. ஒருவேளை, ஒரு கம்பெனி என்ன செய்கிறது என்று வெளிப்படுத்தாமல் அல்லது ஏதோ ஒருவேளையை செய்வது போல செய்து வந்தாலும், அக்கம்பெனிக்கு வரவு-செலவு பார்க்க, கம்பெனியின் கட்டிடம் பராமரிக்க, டீ-காபி மற்றும் உணவு சப்ளை செய்ய, என்று ஆட்கள் தேவைப்படுவார்களே? ஒரு வங்கி வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அவ்வங்கியின் வேளை, பொது மக்கள், வியாபாரிகள், மற்ற முதலீட்டார்களிடமிருந்து பணத்தை சேமிப்பாகப் பெறுவது, அதனை அதிக வட்டிக்குக் கொடுப்பது என்று தானே வியாபாரம் செய்து வருகிறது. பணம் எப்படி வருகிறது, யாருக்கு என்ன காரியத்திற்குப் போகிறது என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லையே. உரிய ஆவணங்கள் இருந்தால் கடன் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். ஆக, தீவிரவாதத்தை ஒரு தொழிலாக, உத்தியோகமாக, வியாபாரமாக, நடத்தும் கம்பெனிகளும் சார்டர்ட் அக்கௌன்டென்ட், எஞ்சினியர்கள், டாக்டர்கள் என்று எல்லோரையும் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். HSBC வங்கி அதுபோலத்தான், தீவிரவாதிகளுக்கு உதவியுள்ளது.

Haqqani network affecting India
நன்றாக சம்பளம் கொடுத்தால், எந்த வேலைக்கும் தயாராகத்தானே இருப்பார்கள்: அதிகமாக பணம் வரும்போது, சம்பளத்தையும் அதிகமாகக் கொடுத்து வந்தால், வேலை செய்பவர்கள் எந்த கவலையும் இல்லாமல் வேலை செய்து கொண்டே இருப்பார்கள். முஸ்லிம்களையே பெரும்பாலும் வேலைக்கு வைத்துக் கொண்டால், அவர்களிடயே யாருக்கு ஜிஹாதித்துவம் பிடித்திருக்கிறது, போராட தயாராக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். பிறகு நம்பிக்கைக்கு பாத்திரமாகி விட்டால், அவர்களை நன்றாக மூளைசலைவை செய்து, அவர்களுக்கு வேண்டியவற்றை, எல்லாம் கொடுத்து, கைப்பொம்மைகளாக்கி விட்டால், அவர்கள் மனித-வெடிகுண்டாகக் கூட வேலை செய்ய தயாராகி விடுவார்கள். அப்படித்தான், ஒருவன் சென்னையிலிருந்து சென்றவன் மனித-வெடிகுண்டாக வேலை செய்து செத்திருக்கிறான். ஆனால், அவன் குடும்பத்திற்கு லட்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆகவே, யாரும் கவலைப்படாமல் அமைதியாகத்தான் இருப்பார்கள். மேலும், அவன் ஒரு ஷஹீதாகக் கருத ஆரம்பிக்கப்பட்டுவிடுவான். இப்படித்தான், பெங்களுர் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் ஐசிஸ்க்கு ஆள் சேர்க்கும் வேலையை ஆரம்பித்திருப்பான்.
© வேதபிரகாஷ்
23-11-2015
[1] தமிழ்.ஒன்.இந்தியா, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர 2 தமிழக இளைஞர்கள் முயற்சி– அதிரடியாக நாடு கடத்தியது துருக்கி!!, Posted by: Mayura Akilan, Updated: Saturday, November 21, 2015, 11:54 [IST].
[2] Nine persons from India, including one from Hassan, have been deported by Turkey after they were allegedly caught trying to cross over to Syria to join the terror outfit ISIS, police say. The group is being questioned by Bengaluru police and central agencies after they arrived at the Kempegowda International Airport (KIA) on Sunday. According to police, they went to Istanbul from Bengaluru on tourist visas on December 24, 2014, and were sent back by the Turkish authorities on January 30.
[3] Among those sent back from Turkey are engineers Ibrahim Nowfal, 24, from Hassan and Javeed Baba, 24, from Khammam district, Telangana. The remaining seven belonged to a family from Chennai – Muhammed Abdul Ahad, 46, his wife and their five children.
[4] Police said Ahad has done masters in computer science from Kennedy-Western University, California, US, and worked in the US for more than 10 years. A senior police officer said Ahad had left India soon after doing his graduation in engineering and was settled in the US. “Two of his children are US citizens, but he still holds an Indian passport,” said the police officer.
அண்மைய பின்னூட்டங்கள்