Posted tagged ‘ஸ்டாலின்’

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா?

ஒக்ரோபர் 28, 2021

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா, ஹலாலாஹரமா, ஷிர்க்காஇல்லையா?

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா, ஹலாலாஹரமா, ஷிர்க்காஇல்லையா?: ஸ்டாலின் என்னத்தான் சப்பைக் கட்டினாலும், தன்னுடைய நாத்திகம் இந்துவிரோதம் தான் என்று வெளிப்படுகிறது. திமுக இந்துவிரோத கட்சி இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், ஸ்டாலின் பேசுவது, நடந்து கொள்வது இந்துவிரோதமாகத்தான் இருந்து வருகிறது. பிறகு தொண்டர்களிடம் எப்படி சகிப்புத் தன்மை, நேயம், வெங்காயம், வெள்ளைப்பூண்டு எல்லாம் எதிர்பார்க்க முடியும். அது தான் லடந்த 70 வருட திரவிடத்துவ ஆட்சியில் நிரூபிக்கப் பட்டு வருகிறது. இதில் பெரியார் என்பதெல்லாம், ஒரு சாக்கு-போக்குதான். செக்யூலரிஸமே, கம்யூனலிஸமாகத்தான் உள்ளதுந்தமிழகத்து முதலமைச்சர் என்ற அடிப்படையே தெரியாத ஆளகத்தான் ஸ்டாலின் இருந்து வருகிறார். துலுக்கர்-கிருத்துவர்களுடன் உறவாடி, கஞ்சி குடித்து, கேக் தின்று பரஸ்பர நெருக்கங்களுடன் இருந்து, இந்துக்களை சதாய்த்து வருகின்றனர். இடையிடையே திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம் (கொளத்தூர் மணி), திராவிடர் கழகம், (கோவை ராமகிருஷ்ணன்) என்று பல பேனர்களில் பூணூல்களை அறுப்பது, தாலிகளை அறுப்பது, பன்றிக்கு பூணூல் போடுவது, அப்பாவி பிராமணர்களை வெட்டுவது, கோவில்களில் புகுந்து அடிப்பது, சிலைகளை உடைப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மீலாது நபியும், இந்திய அரசியலும்: மொஹம்மதுவின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்று ஆசார இஸ்லாம் கூறுகிறது. ஏனெனில், அது உருவ வழிபாட்டிற்கு வழி வகுக்கும் என்று அவர்கள் வாதிடுவர். மொஹம்மதுவின் கல்லறையினை நீக்கி விட்டதாகவும் தெரிகிறது. ஏனெனில், முஸ்லிம்கள் அங்கு சென்று வழிபடுவதை ஆசார இஸ்லாம் எதிர்க்கிறது. தர்கா வழிபாட்டை, தமிழக முகமதியரே எதிர்த்து ஷிர்க் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். மீலாது நபிக்கு துலுக்க நாடுகளில் கூட விடுமுறை கிடையாது. கொண்டாடுவதும் கிடையாது. முன்பு விடுமுறையும் விட்டது கிடையாது. வி.பி.சிங்கின் செக்யூலரிஸ / கம்யூனல் ஆட்சியில், அரசியலில் அது ஆரம்பித்து வைக்கப் பட்டது. அதனால், தமிநாட்டிலும் ஆரம்பம் ஆகியது.

ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்து[1]: யாரோ எழுதிக் கொடுத்ததை, வாழ்த்தாக, அறிவிக்கப் பட்டுள்ளது. அது, ஊடகங்களில் அப்படியே வெளி வந்துள்ளன[2].

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான ‘மீலாதுன் நபி’ திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்[3].   நபிகள் நாயகம் இளம்பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்[4].   ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளதிற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.   அவரது போதனைகளும் அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள். அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைபிடித்து வாழும் இஸ்லாமியச் சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மக்களால் அமைய பெற்ற கழக அரசுக்கும் இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்,” என்று இ.டிவி.பாரத், தலைப்பிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது[5]. மற்றவை, அப்படியே, பி.டி.ஐ பாணியில் செய்தி வெளியிட்டன[6].

18ம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப் படும் நிகழ்ச்சி: மௌலித் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தரித்தல், வம்சாவளி என்ற பொருள்தருகின்ற அராபிய வேர்ச்சொல் (அரபு மொழி: ولد) இடமிருந்து பெறப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு பிறப்பு, குழந்தையின் பிறப்பு, வம்சாவளி போன்ற கருத்துக்கள் வழங்கப்படுகின்றது. தற்காலப் பயன்பாட்டில் இச்சொல் முகமது நபி பிறந்தநாளைக் குறிப்பதாகவே உள்ளது. இந்நிகழ்வு ஏனைய சொற்களாலும் அழைக்கப் படுகின்றது. 1. பரா வபாத், 2. ஈத் அல்-மவ்லித் அந்-நபவி, 3. ஈத் இ மீலாத்-உந் நபவி மற்றும் 4. ஈத் இ மீலாதுன் நபி. இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சியா முஸ்லிம்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் முகமது நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சன்னி முஸ்லிம்கள் இதனை மாதத்தின் பன்னிரண்டாம் நாள் கொண்டாடுகின்றனர். இசுலாமிய நாட்காட்டி ஓர் சந்திர நாட்காட்டியாதலால், கிரெகொரியின் நாட்காட்டியில் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.

ஆசார இஸ்லாம் எதிர்க்கிறதுஸலபிகள் அல்லது வஹாபிகள் கொண்டாட்டத்தை எதிர்க்கின்றனர்: விகிபிடீயா மழுப்பலாக, இவ்வாறு கூறுகிறது, “பாரம்பரிய சன்னி மற்றும் சீயா இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன்நபி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். கடந்த இரண்டரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் தோற்றம் பெற்ற ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவுகளின் அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றனர். முஸ்லிம் உலகின் பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன் நபி கொண்டாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர். எனினும் ஸலபிகள் அல்லது வஹாபிகள் எனும் பிரிவினர் மீலாதுன் நபி கொண்டாட்டத்தை அது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர்”. இது இஸ்லாத்தில் நுழைக்கப் பட்ட கெட்ட நூதன அனுஸ்டானம் என்றும் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. திராவிடத்துவவாதிகளுக்கு, சுன்னி-ஷியா பிரிவுகள், இறையியல் வேறுபாடுகள், வழிபாட்டு மாறுபாடுகள் முதலியவற்றை அறிவார்களா இல்லையா என்று அவர்கள் மற்றும் துலுக்கர் வெளிப்படுத்திக் காட்டியதில்லை. இருப்பினும் ஸ்டாலின் வாழ்த்து சொன்னதை எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை.

தமிழக ஓட்டுவங்கி அரசியல், செக்யூலரிஸம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மறைக்கும் போக்கு: ஓட்டுவங்கி உள்ளது, சில தொகுதிகளில் உறுதியாக வெற்றிக் கிடைக்கிறது என்பதால், திமுக-அதிமுக முஸ்லிம்கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு வருகின்றன. ஆனால், முஸ்லிம்கட்சிகள் தோற்றாலும், வெற்றிப் பெற்றாலும், ஒன்றாக இருந்து சாதித்துக் கொள்கின்றன. தமிழக அரசியல்வாதிகளுக்கு கடல்கடந்த நலன்கள், ஆதாயங்கள், வியாபார பலன்கள், கிடைப்பதால், துலுக்கருடன் கூட்டு வைத்துக் கொள்கின்றன. ஆப்கானிஸ்தானில் இவ்வளவு நடந்தும், ஒன்றுமே நடக்காதது போல, தெரியாதது போல நட்த்து வருவது, பெரிய நடிகத்தனம், சாமர்த்தியம் எனலாம். அதாவது, இங்கு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்காமல், அமைதியாக இருப்பது போல இருப்பர். பங்களாதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும், நடந்து கொண்டிருக்கும் குற்றங்கள், கொடுமைகள், வன்முறைகள் பற்றி பேச மாட்டார்கள், ஆனால், காஷ்மீரில் துலுக்க பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டாலும், போராட்டம் நடத்துவர். செக்யூலரிஸம் இவ்விதமாகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

28-10-2021


[1] மாலைமலர், மு..ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து, பதிவு: அக்டோபர் 18, 2021 13:42 IST.

[2] https://www.maalaimalar.com/news/district/2021/10/18134208/3112279/Tamil-News-Chief-Minister-Greets-Miladi-Nabi.vpf

[3] தினத்தந்தி, மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கவர்னர், மு..ஸ்டாலின் வாழ்த்து, பதிவு: அக்டோபர் 19,  2021 03:29 AM

[4] https://www.dailythanthi.com/News/State/2021/10/19032910/Milad-Nabi-Festival-Celebrated-Today-Greetings-from.vpf

[5] இ.டிவி.பாரத், இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்: மீலாதுன் நபி வாழ்த்து, Published on: Oct 19, 2021, 7:02 AM IST; Updated on: Oct 19, 2021, 9:14 AM IST

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/cm-stalin-greeted-milad-un-nabi-wishes-for-islamic-people/tamil-nadu20211019070231454

முன்பிருந்த முஸ்லிம் லீக் இப்பொழுதில்லை: முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இப்படி முஸ்லிம்களுக்கு காபிர்கள் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமா, நாடகமா, கபடமா?

ஜூலை 26, 2013

முன்பிருந்த முஸ்லிம் லீக் இப்பொழுதில்லை: முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இப்படி முஸ்லிம்களுக்கு காபிர்கள் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமா, நாடகமா, கபடமா?

வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் நிகழ்சிகளும்: முஸ்லிம்களுக்கு நோன்பு என்றாலே கருணாநிதிக்கு குஷ்ஈய்யாகி விடுகிறது.

  • குல்லாப் போட்டு கஞ்சி குடிக்க சந்தர்ப்பம்,
  • இந்து பண்டிகைகளை தூஷிக்க சந்தோஷம்[1],
  • பிரத்யேகமாக குல்லா வாங்கி வந்து மாட்டிவிடும் வேலை
  • தன்னுடைய பெருமைகளை டமாரம் அடித்துக் கொள்ளும் விதம்
  • முஸ்லிம்களைவிட நான் எவ்வளவு பெரிய முஸ்லிமாக இருக்கிறேன் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் விதம்
  • முஸ்லிம்கள் இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு கைத்தட்டும் காட்சி

இப்படித்தான், வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகளும் நடந்து வருகின்றன. திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகள் என்கிறார்கள் இதில் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. பனகல் பார்க் அருகில் ஒரு பேனர், “நோன்பு துறக்க வசதி செய்யப்பட்டுள்ளது” (ஶ்ரீ வேங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில்) என்று அறிவிக்கிறது.

முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்  (தினமணி): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எழும்பூரில் வியாழக்கிழமை 25-07-2013 நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியது: “நான் (கருணாநிதி) அதிக நேரம் பேச வேண்டும் என்பதற்காக காதர் மொகிதீன் குறைவான நேரம் பேசினார். அதுபோல எல்லாவற்றிலும் (மக்களவை இடம்) குறைவாக எடுத்துக் கொண்டு, திமுகவுக்கு அதிகமாக ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறேன். முஸ்லிம் சமுதாயத்தினர் கட்சி ரீதியாக 4 பிரிவுகளாக தமிழகத்தில் இருக்கிறீர்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ, தமிழகத்திலும், இந்திய அளவிலும் இது போன்ற நிலை இல்லாமல் போய்விட்டது. அந்தக் காலத்தில் நான் பார்த்த முஸ்லிம் லீக் இன்றைக்கு இல்லை. பல கூறுகளாக பிளந்துகிடக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் ஒற்றுமை இல்லாத காரணத்தினால்தான் பாபர் மசூதி இடிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து முதலில் குரல் கொடுத்தது திமுகதான். திராவிடர் இயக்கத்திலும் இதுபோன்ற பிளவுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. மீலாது நபிக்கு விடுமுறை, உருது பேசும் மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது, சிறுபான்மையினர் நல ஆணையம் என திமுக ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு பல்வேறு நலப்பணி ஆற்றப்பட்டுள்ளன”, என்றார் அவர். முஸ்லிம் சமுதாயத்தினர் இந்திய அளவில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்[2]. முன்னதாக நோன்பை திறந்து வைத்து, கருணாநிதி கஞ்சி குடித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் பழநிமாணிக்கம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேச்சு,“இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்  (தினகரன்): இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஒற்றுமை இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழக தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் வரவேற்றார். அப்துல் ரஹ்மான் எம்.பி அறிமுக உரையாற்றினார். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று நோன்பு கஞ்சி அருந்தினர். கனிமொழி இம்முறை கஞ்சி குடிக்க வரவில்லை[3] போலும்!

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: “நிகழ்ச்சியில் பேசிய காதர் மொய்தீன், தனக்கு நேரம் குறைவாக எடுத்துக் கொண்டு எனக்கு நேரம் அதிகமாக கொடுத்துள்ளார். இப்படி எல்லாவற்றிலும் குறைவாக எடுத்துக் கொண்டு திமுகவுக்கு அதிகம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்லாமிய சமுதாயம், ஒரே பிரிவாக இருந்து ஒற்றுமை பாராட்டினால் இந்த சமுதாயம் இன்னும் வீறுகொண்டு எழும். இந்த சமுதாயத்தை துச்சமாக கருதும் சில, மதவாத எரிச்சல்காரர்கள், ஒதுங்கும் நிலை உருவாகியிருக்கும்தமிழகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது இருந்த முஸ்லிம் லீக், இன்று பல பிரிவுகளாக மாறியுள்ளது. திராவிட இயக்கம் பிரியவில்லையா என்று கேட்கலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அது ஏற்பட்டிருந்தாலும் இஸ்லாமிய சமுதாய மக்கள், முஸ்லிம் லீக்கின் வரலாறு, இயக்கத்தை எப்படி வளர்த்தார்கள் என்பதை எண்ணிப்பார்த்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது. அதை கண்டித்து முதல் முதலில் குரல் கொடுத்தவன் நான். இஸ்லாமிய சமுதாயத்துக்காக என்னென்ன தொண்டு ஆற்ற முடியுமோ, அவற்றை ஆற்றி வருகிறோம். தொடர்ந்து ஆற்றுவோம். திமுக ஆட்சி இப்போது இல்லை.

 

ஆட்சியில் இருந்தபோதே இந்த சமுதாயத்துக்காக எந்த வகையில் பாடுபட்டோம் என்பதை அறிவீர்கள்.

Ø  மிலாது நபி தினத்தன்று விடுமுறை,

Ø  உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு,

Ø  அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர்,

Ø  சிறுபான்மையினர் நல ஆணையம்,

Ø  விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு,

Ø  உருது அகாடமி,

Ø  காயிதே மில்லத் மணிமண்டபம்

Ø  இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு,

Ø  உமறுபுலவருக்கு மணிமண்டபம்,

Ø  திருமண பதிவு சட்டத்தில் திருத்தம்

 

என்று எத்தனையோ செய்தோம். திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா கூறுவார். அதற்கு நான் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சி என்று பதில் அளித்தேன். இதற்கெல்லாம் நன்றியை பரிசாக அளித்திருக்கிறேன்”, இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “இஸ்லாமிய சமுதாயத்துக்கும் திமுகவுக்கும் எந்த அளவு தொடர்பு உண்டு என்பதை அறிவீர்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக. உங்களுக்காக வாதாடுபவர், போராடுபவர் கருணாநிதி. அந்த கடமையை திமுக தொடர்ந்து செய்யும். குரானில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத்தான் பெரியார் தீர்மானமாக முன்மொழிந்தார். 60 ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதி அதை நிறைவேற்றினார்.  தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை நாடி வரும் கட்சி திமுக அல்ல. அதற்கென்று சில கட்சிகள், தலைவர்கள் உள்ளனர். அவர்களை நீங்கள் அறிவீர்கள். என்றும் உங்களை பற்றியே சிந்திக்கும் கருணாநிதிக்கு ஆதரவு தாருங்கள்”, இவ்வாறு அவர் பேசினார்[4].

தி.மு.., அதிகதொகுதிகளில்போட்டியிடும் : கருணாநிதி சூசக அறிவிப்பு (தினமலர்)“லோக்சபா தேர்தலில், தி.மு.க., அதிக தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறைந்த தொகுதிகளிலும் போட்டியிடும்,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்[5]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மாநில தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்து பேசுகையில், “2004ல், நாட்டில் மதசார்பற்ற ஆட்சி அமைய கருணாநிதி பாடுபட்டார். அதேபோல் மீண்டும் நல்லாட்சி அமைய அவர் வழி காட்ட வேண்டும்,” என்றார்.

பின்னர் கருணாநிதி பேசியதாவது: “முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. நான் சிறுவயதில் பார்த்த முஸ்லிம் லீக் இப்போது இல்லை. அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, தமிழகத்திலிருந்து, முதல் கண்டன குரல் நான் கொடுத்தேன். நான் அதிகமாக பேச வேண்டும் என்பதற்காக, காதர் மொய்தீன் குறைவாக பேசினார். அதேபோல் எல்லாவற்றிலும் அவர் குறைவாக எடுத்துக் கொண்டு, எனக்கு, அதாவது தி.மு..,வுக்கு அதிகமாக ஒதுக்குவதற்கு அவர் ஒத்துழைப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தி.மு.., ஆட்சியில்,

  • மிலாது நபிக்கு விடுமுறை;
  • உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது;
  •  சென்னையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்பட்டது;
  • ஹஜ் பயணிகள் குலுக்கல் மூலமாக தேர்வு செய்யும் முறை ரத்து செய்து,
  • விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இப்படி, சிறுபான்மை மக்களின் நலனுக்காக, தி.மு.., ஆட்சி நடந்தது”, இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இப்படி வருத்தப் படவேண்டிய அவசியம் இல்லை. போட்டிப் போட்டுக் கொண்டு நிகழ்சிகள் நடத்துவதால், கஞ்சிக் குடிக்க அவகாசங்கள் அதிகமாகவே உள்ளன. ஏற்கெனவே கார்த்திக் சிதம்பரம், தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்தது நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்[6]. திராவிடக் கட்சிகளுக்கு வெட்கமே இல்லை, குல்லா போட்டு போட்டோ, குல்லா போடாமல் போட்டோ என்று தமாஷாக்கள் நடத்தியுள்ளன[7].

ரம்ஜான் நோன்பு போது தான் இப்படி பேசுவார்கள் என்றில்லை. மற்ற நேரங்களிலும், மற்ற கட்சிகளும் சலைத்தவை அல்ல. மார்ச் மாதத்திலேயே இந்த நாடகம் ஆரம்பித்து விட்டது[8]. ஜெயலலிதா தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்வார்[9]. இப்படி வேடிக்கை-வினோதங்கள், இனி நிறைய பார்க்கலாம். இதோ இவற்றையும் படியுங்களேன்:

1.குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சிபோய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின்கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும்[10], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!

2.  குல்லா…………..மிரட்டல்களும்[11] (3).

3.  குல்லா…………..மிரட்டல்களும்[12] (2).

4.  குல்லா…………..மிரட்டல்களும்[13] (1).


[1] வேதபிரகாஷ்ரம்ஜான் கஞ்சியும்இந்துவிரோத திராவிட பேச்சுகளும், http://dravidianatheism.wordpress.com/2009/10/07/ரம்ஜாந்கஞ்சியும்-இந்து/

காஃபிர்கள் வாழ்த்த மோமின்கள் ஹஜ் பயணம்!

ஒக்ரோபர் 15, 2010

காஃபிர்கள் வாழ்த்த மோமின்கள் ஹஜ் பயணம்!

 

முஸ்லீம்கள் ஹஜ்ஜிற்கு விமானம் மூலம் பயணம்: முஸ்லீம்கள் வருடத்திற்கு ஒருமுறை ஹஜ் யாத்திரை செல்கின்றனர். இஸ்லாம் பாரம்பரியப்படி ஒரு முஸ்லீம் தான் சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு அவ்வாறு பயணம் செய்து ஹாஜி என்ற நிலைய அடைவர்[1]. ஆனால், இன்றோ எப்படியெல்லாம் பணம் வந்தாலும் அதை செலவழித்துக் கொண்டு அத்தகைய நிலையை அடைய துடிக்கிறார்கள். முன்பு காலால் நடந்து, ஒட்டகத்தில் என்று பயணித்தவர்கள் இன்று ஜாலியாக ஏதோ சுற்றுலா சென்றுவருவது போல சென்று வருகின்றனர். இதில் கூட, அரசாங்க ஆதரவு, அரசியல் பரிந்துரை என்று உள்ளபோது, அவர்கள் தாராளமாக சென்று வருகின்றனர். ஏழைகளுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

 

ஹஜ் மானியம் 941 கோடிகளுக்கு உயர்ந்துள்ளது! ஹஜ் யாத்திரைக்கு செக்யூலார் அரசாங்கம் கோடிகளை அள்ளித் தருகிறது. இது பத்து வருடங்களில் சுமார் ஏழு மடங்கு உயர்ந்துள்ளது

வருடம் கோடிகள்
2000-01 137
2001-02 154.5
2002-03 170
2003-04 200
2004-05 225
2005-06 280
2006-07 378
2007-08 513.87
2008-09 620
2009-10 941

முஸ்லீம் ஓட்டு வங்கியை நம்பி இவ்வாறு காங்கிரஸ் மற்ற கூட்டணி கட்சிகள் இருப்பதால், இதனை நிறுத்த அவர்களுக்கு தைரியம் உண்டா என்று தெரியவில்லை. முஸ்லீம்களும், இத்த்தகைய மானியம் கொடுக்கக் கூடாது என்கிறார்களேத் தவிர, வாங்கிக் கொண்டு சென்றுதான் வருகிறார்கள். மானியமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது!

செக்யூலரிஸ அரசாங்க செலவில் ஹஜ் பயணம்[2]; தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு 460 பேர் சென்னை மீனம்பாக்கம், அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை, துணை முதல்வர் ஸ்டாலின்,  கனிமொழி எம்.பி., ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய இடங்களிலிருந்து 5,022 பேர் ஹஜ் யாத்திரைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில், 460 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.

ஸ்டாலின், கனிமொழி இத்கே மாதிரி இந்துக்கள் பயணிக்கும் போது சால்வைகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததில்லையே? முன்னதாக, ஹஜ் புனித யாத்திரைக்கு செல்பவர்களை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி.,  ஆகியோர் சந்தித்து, சால்வைகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்[3]. அப்போது, துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,”தமிழகத்தில் இஸ்லாமியர்கள், மக்கள் தொகை அடிப்படையில் 2,700 பேர் புனித ஹஜ் யாத்திரைக்கு சென்றனர். இந்த பட்டியலை அதிகப்படுத்தி தர வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக / கடிதம் எழுதியதன் பயனாக[4], தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் 4,241 பேர் செல்கின்றனர்,’ என்றார்[5]. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான், இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான அபூபக்கர், இந்திய குழு செயல் அலுவலர்  ஜாகீர்உசைன், தமிழக அரசு செயலர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

brOEÂ btëpL v©-906 ehŸ-14.10.2010

A{ gaz FGédiu

kh©òäF Jiz Kjyik¢r® ÂU.K.f.°lhè‹

thoe¤Â têaD¥Ã it¤jh®

* * * * * *

jäoeeh£oš ÏUªJ Kjš f£lkhf A{ òåj ah¤Âiu bk‰bfhŸS« 460

A{ gaz FGédiu kh©òäF Jiz Kjyik¢r® ÂU.K.f.°lhè‹ mt®fŸ

ne‰W ÏuÎ br‹id ékhd ãiya¤Â‰F neçš br‹W thoe¤Â têaD¥Ã

it¤jh®.

 

A{ gaâfis thoe¤Â Jiz Kjyik¢r® ngÁajhtJ – òåj A{

gaz« nk‰bfhŸS« c§fis jäHf Kjyik¢r® jiyt® fiyP® mt®fŸ

rh®ghf thoe¤Â têaD¥Ã it¥gš äFªj k»oe¢Á mil»nw‹. jäHf¤Âš

ϰyhäa k¡fë‹, k¡fŸ bjhif mo¥gilæš 2 Mæu¤J 700 gaâfŸ A{

gaz« nk‰bfh©L tªjd®. Ϫj v©â¡ifia mÂf gL¤Âju nt©L« v‹w

nfhç¡if kDéid ϰyh« bgUk¡fŸ më¤jd®. mj‹ mo¥gilæš jiyt®

fiyP® mt®fŸ k¤Âa muÁ‰F foj« vGÂÍ« bjhl®ªJ tèÍW¤ÂÍ«, jäHf

tuyh‰¿š ÏJtiu Ïšyhj tifæš nkY« 1541 gaâfŸ v©â¡if

mÂfç¡f¥g£L, j‰nghJ jäoeeh£oš ÏUªJ tUl¤Â‰F 4 Mæu¤J 241 ng® A{

òåj gaz« nk‰bfhŸ»wh®fŸ. A{ gaâfŸ vªjéj Ãu¢ridÍ« Ï‹¿ òåj

gaz¤Âid ãiwnt‰w j¡f tifæš elto¡iffŸ vL¡f¥g£LŸsJ.

vd Jiz Kjyik¢r® K.f.°lhè‹ bjçé¤jh®.

 

Ϫãfoeé‹nghJ, kh©òäF R‰W¢NHš k‰W« éisah£L¤Jiw mik¢r®

ÂU.o.Ã.v«. ikÔ‹fh‹, féP® fåbkhê, v«.Ã., jäoeehL A{ FG braš

mYty® ÂU. fh.myhÎÔ‹, ϪÂa A{ fä£o Jiz jiyt® ÂU. móg¡f®,

ϪÂa A{ fä£oæ‹ jiyik braš mYty® lh¡l®. #hÑ® cnr‹, ÂU¥ó®

mšjh¥, jäHf muÁ‹ TLjš F‰w¤Jiw jiyik muR tH¡f¿P® ÂU. mr‹

Kf«kJ í‹dh M»nah® clåUªjd®.

* * * * * * *

btëpL-Ïa¡Fe®, brOEÂ k¡fŸ bjhl®ò¤Jiw, jiyik¢ brayf«, br-9.

ஏதோ கருணாநிதி கடிதம் எழுதினார் என்பதெல்லாம் பொய், முஸ்லீம்கள் தான் அவ்வாறு கேட்டார்கள்[6]: ’தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சட்டசபையில் கோரிக்கை விடப்பட்டது.சட்டசபையில் நேற்று (23-10-2009) கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:

ரவிக்குமார்வி.சி: ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு ஆவன செய்ய வேண்டும். ஹஜ் பயணம் செல்பவர்கள் தங்குவதற்கான இடத்தை மத்திய அரசு புக் செய்து அதற்கான பணத்தை பயணிகளிடமிருந்து பெறுகிறது. இதில் காலதாமதம் ஏற்படுவதால் நல்ல இடம் கிடைக்காமல் போகிறது. மத்திய அரசு முதலில் இடத்தை புக் செய்து பின் பயணிகளிடமிருந்து பணத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்[7].

பன்னீர்செல்வம்.தி.மு.: அ.தி.மு.க., ஆட்சியில் ஹஜ் பயணம் செல்ல மனு செய்தவர்கள் அனைவருக்கும் மத்திய அரசுடன் பேசி, செல்வதற்கு வழி செய்யப்பட்டது. தற்போது மனு செய்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல அனுமதி வழங்க வேண்டும்[8].

அமைச்சர் மைதீன்கான்: கடந்த 2009ம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செய்ய 2,700 பேருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் முதல்வர், துணை முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால், 1,116 பேர் கூடுதலாக சேர்த்து 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர். ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது[9]. இந்த ஆண்டு, மூன்று முறை தொடர்ந்து ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தவர்களை குலுக்கல் இல்லாமலே தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது[10]. மற்றவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். 2009ம் ஆண்டு 16 ஆயிரத்து 735 பேர் ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தனர்; 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர்.இவ்வாறு விவாதம் நடந்தது[11].

முஸ்லீம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்: முஸ்லீம்கள் ஹஜ்ஜிற்கு செல்வது சந்தோஷமான விஷயம்தான். ஆனால், இஸ்லாமிய பாரம்பரிய கட்டுப்பாடுகளை மீறி, அரசியல் சந்தர்ப்பவாதத்துடன், இந்துக்களை எதிர்க்கும் செக்யூலரிஸ-நாத்திகவாதிகள் வாழ்த்த செல்வது சரியா? அரச்ய் பணம் என்றால், அதில் இந்துக்களின் பணமும் உள்ளது. இஸ்லாம் எப்படி ஏற்கிறது? இலவசமாக டிவி கொடுப்பது போல, ஹஜ் பயணமும் ஆகி விட்டதா?


[1] Vedaprakash, Haj Hijacked, but secular India continues!!, https://islamindia.wordpress.com/2009/10/21/haj-hijacked-but-secular-india-continues/

“One should arrange for his expenses of Haj and Umrah out of his or dependent progeny lawful earnings, as commanded by the Holy Prophet (PBUH)”, “Allah is pure and He accepts only what is pure”

[2] தினமலர், 460 ஹஜ் புனித யாத்திரீகர்களுடன் விமானம் புறப்பட்டது, அக்டோபர் 14, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=106477

[6] வேதபிரகாஷ், இஸ்லாமிய ஹஜ் யாத்திரையும், “காஃபிர்” அரசு உதவியும், https://islamindia.wordpress.com/2009/10/24/இஸ்லாமிய-ஹஜ்-யாத்திரையும/

[7] இவர் பேசுவதை பாருங்கள், ஏதோ சினிமாவிற்கு டிக்கெட் புக் செய்வது மாதிரி பேசுகிறார். முஸ்லீம்களை தாஜா செய்யவேண்டும் என்பதுதான் தெரிகிறதே தவிர, அவர்களது மத சம்பிரதாயம் என்னவென்பது அவருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே!

[8] ஆமாம், இவர்கள் என்ன  சளைத்தவர்களா, அப்படித்தான் கூறுவார்கள். யாருடைய பணம்?

[9] இது நம்பிக்கையின் அடையாளமா, அல்லது இலவசமாக கிடைக்கிறதே என்று அதிகரிக்கும் கூட்டமா?

[10] ஆக, இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவது ஹஜ்ஜாகுமா? இதில் இஸ்லாத்தைவிட அரசியல்தான் அதிகமாக இருக்கிறது!

[11] விவாதம் நடந்து கொண்டே இருக்கும். ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கும். மக்கள் பணமும் சென்று கொண்டே இருக்கும்.