Posted tagged ‘ஷலோ தாங்கி’

பாகிஸ்தானின் மேற்குப் பகுதி எல்லைகளில் ஊடுருவல், கண்ணிவெடி, சண்டை என்றிருக்கும் போது, கிழக்குப் பகுதி எல்லைகளில் எப்படி தைரியமாக அடாவடித் தனம் செய்கிறது?

செப்ரெம்பர் 18, 2010

பாகிஸ்தானின் மேற்குப் பகுதி எல்லைகளில் ஊடுருவல், கண்ணிவெடி, சண்டை என்றிருக்கும் போது, கிழக்குப் பகுதி எல்லைகளில் எப்படி தைரியமாக அடாவடித் தனம் செய்கிறது?

பாகிஸ்தானில் கோஷ்டி மோதல்; 102 பேர் பலி[1]: பாகிஸ்தானில் குர்ரம் பகுதி மலைகள் நிறைந்த பகுதி. இங்கு வாழ்பவர்கள் பழங்குடியின மக்களில் கோஷ்டி மோதல்கள் நடந்து வருகின்றன. இப்பகுதி ஆபக்கானிஸ்தானில் எல்லையில் இருப்பதனால், அங்கிருக்கும் பழங்குடியினரும் ஊள்ளே நுழைகின்றனர். அதாவது தாலிபான் மற்றும் தீவிரவாதிகளின் பங்கு வெளிப்படையாகத் தெரிகின்றது.

குர்ரம்-பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்

குர்ரம்-பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்

இருமாதங்களாக எல்லையில் நடக்கும் கொலைகளைப் பற்றி பாகிஸ்தான் கவலைப்படவில்லை: இவ்வாறு, இரு நாட்டு பழங்குடி மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வது / கொல்வது, பாகிஸ்தானிற்கு மட்டுமல்லாது, இந்திய முஸ்லீம்கள் மற்றும் அவர்களை சித்தாஎந்த ரீதியில் ஆதரிக்கும் இந்தியர்களும் கவைப் படுவதில்லை. அதே நேரத்தில், இந்திய எல்லைகளில் பிரச்சினை செய்து கொண்டு, இந்திய ராணுவத்தாருடன் நேரிடையாக மோதிக் கொண்டு, தீவிரவாதிகளை எல்லைகளில் ஊடுரவ வைத்து, காஷ்மீரத்தில் தீவிரவாதத்தை வளர்க்கும் போது, எந்த ஆளும், செக்யூலரிஸ இந்தியனும் கண்ணை மூடிக்கொள்கிறான்.

Tribesmen offer prayers during the funeral of those killed in an explosion that destroyed the home of a militant in the town of Bara

Tribesmen offer prayers during the funeral of those killed in an explosion that destroyed the home of a militant in the town of Bara

முஸ்லீம்களாக இருக்கும் பழங்குடியினர் ஏன் மோதிக் கொள்கின்றனர்? அங்கு ஷலாஷன் மற்றும் ஷலோ தாங்கி என்ற 2 இன மக்களிடையே தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக தண்ணீரை பங்கிடுவதில் கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. ஆக உள்ளூர் நீர் பிரச்சினை தீர்க்க முடியாத பாகிஸ்தான், இந்தியாவுடன் நீருக்குக் கூட சண்டை போட்டு வருகின்றது. இந்த இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் பயங்கர அதிநவீன ஆயுதங்களால் தாக்கி கொள்கின்றனர். மங்கள் மற்றும் பங்காஸ் குடியினரும் அடித்துக் கொள்கின்றனர்.

குர்ரம் பகுதியில் உள்நாட்டுப் போர்: பாகிஸ்தானில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் 10 பேர் பலியாகி உள்ளனர். குர்ரம் என்ற இடத்தின் அருகே 20 பயணிகளுடன் வாகனம் வந்தபோது கண்ணி வெடியின் மீது மோதியது. இதனால் வெடித்த கண்ணி வெடியில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். 6 பேர் காயமடைந்தனர். மேலும் அவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை[2]. பிஷேவார்,  ஆக.23 2010 பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள  பகுதியில் உள்ள குர்ரம் பகுதியில் (23.8.10) ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 1 பள்ளி ஆசிரியர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 10 பேருக்கு காயம் ஏற்பட்டது[3]. இந்த பகுதியில் பள்ளி ஒன்றின் உரிமை குறித்த ராவாவை தீர்த்து வைப்பதற்கென நடைபெற்ற முதிய தலைவர்கள் கூட்டம் (ஜிர்கா) நடைபெற்றுக் கொண்டிருந்தபோது  இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. தொலைவிலிருந்து கட்டுப்படுத்தும் அமைப்பு மூலம் குண்டு வெடிக்கச்செய்யப்பட்டதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர். குண்டுவெடிப்பில் ஏற்பட்ட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகலக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதைப்பதிலும் கூட சண்டைதான்: மேலும் இறந்தவர்களின் சடலங்களை பெற்று அடக்கம் செய்வதிலும் பிரச்சினை ஊள்ளது, ஏனெனில், ஒரு பிரிவினர், அடுத்த பிரிவினரின் கிராமத்திற்குச் சென்று சலங்களைக் கைப்பற்றும் போது, மறுபடியும் தாக்குதல் ஆரம்பிக்கப் படுகின்றது[4]. இதில் தீவிரவாத கும்பல்களும் சேர்ந்துள்ளன[5], மேலும் அங்குள்ள 4 கிராமங்களில் வீடுகளும் தீவைத்து கொளுத்தப்பட்டன. இது வரை நடந்த மோதலில் 102 பேர் பலியாகி உள்ளனர். 134 பேர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.


[1] http://www.maalaimalar.com/2010/09/18130010/pakistan-bandititi-friction-10.html

[2] http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6670

[3] http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=2b35358c-414a-435f-88a9-289674c73230&CATEGORYNAME=TINTL

[4] Pakistan Observer, Sep.18, 2010; http://pakobserver.net/detailnews.asp?id=52654

[5]The Dawn,  http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/news/pakistan/provinces/12-water+dispute+claims+13+more+lives+in+kurram–bi-03