Posted tagged ‘ஷபி அர்மார்’

பட்கல் குடும்பமும், அர்மார் குடும்பமும்: வெடிகுண்டு தயாரிப்பும், ஐசிஸ் தொடர்புகளும் – இந்தியாவுக்கு எதிராக செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாதித்துவம் முதலியன!

பிப்ரவரி 6, 2016

பட்கல் குடும்பமும், அர்மார் குடும்பமும்: வெடிகுண்டு தயாரிப்பும், ஐசிஸ் தொடர்புகளும் – இந்தியாவுக்கு எதிராக செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாதித்துவம் முதலியன!

How Indian ISIS is controlled by ISIS Syria

சுல்தான் அர்மார் கொலையுண்ட பிறகு, ஷபி அர்மார் தலைவனாகிறான்: காரணம், இவரது சகதோரர் சுல்தான் சிரியாவில் நடந்த சம்டையின்போது கொல்லப்பட்டு விட்டார். இதனால் ஷபி வசம் அனைத்துப் பொறுப்புகளும் வந்து சேர்ந்தன[1]. இந்தியா முழுவதும் ஐஎஸ் ஆமைப்புக்கு ஆட்களைத் திரட்டும் பணிக்காக பல்வேரு கிளைகளை உருவாக்கியவர் ஷபி. சமீபத்தில் இப்படிப்பட்ட ஆளெடுப்பு மையம் ஒன்றைக் கண்டுபிடித்தது உளவுப் பிரிவு. அதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் மும்பையைச் சேர்ந்த முடாபிர் ஷேக் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் அர்மார் பேசிய பேச்சையும் உளவுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஆளெடுப்பு மையத்தை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அர்மார். இதன் மூலம் ஆளெடுப்புப் பணிகள் தங்கு தடையின்றி நடக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் மிகப் பெரிய அளவில், வலுவான அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ்ஸை உருவாக்குவதே இவர்களின் முக்கியப் பணியாக, நோக்கமாக இருந்துள்ளது. மேலும் தனது சகோதரர் உருவாக்கிய அன்சர் உல் தவாஹித் அமைப்பின் பெயரையும் கூட ஜுநுத் அல் கலீபா இ ஹிந்த் என்றும் மாற்றியுள்ளார் அர்மார். இதன் மூலம் பாதுகாப்புப் படையினரின் காட்டமான பார்வையிலிருந்து தப்ப முடியும் என்பது அவரது எண்ணம். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல்வேறு தவணைளாக ரூ. 6 லட்சம் வரை ஆளெடுக்கும் பணிக்காக செலவிட்டுள்ளாராம் அர்மார்[2].

Yasin Bhatkal arrestedஅர்மார் குடும்பமும், பட்கல் குடும்பமும்: பட்கல் சகோதரர்கள் எப்படி இந்திய முஜாஹித்தீன் ஆரம்பித்து, குண்டுவெடிப்புகளை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்றார்களோ, அதே போல அர்மார் சகோதரர்களும் ஜிஹாதிகளாக இருந்தார்கள். அவர்களைத் தேடிச் சென்ற என்டிடிவி மற்றும் டைம்ச்ஸ்-நௌ இருவிதமான விவரங்களைத் தருகின்றன. என்டிடிவி பற்றியதை மேலே பார்த்தோம். டைம்ஸ்-நௌ நிருபர்களும் அர்மார் குடும்பத்தைத் தேடி பட்கல் நகரத்திற்குச் செல்கின்றனர். முதலில் நயாயத் காலனியில் தங்கியிருந்ததாக அறிந்ததால் அங்கு சென்றனர். ஆனால், அங்கிருந்து அர்மார் குடும்பம் மதீனா காலனிக்குச் சென்று விட்டதாக அறிந்தனர். உடனே, மதினா காலனி, இரண்டாம் குறுக்குத் தெருவில் அக்குடும்பம் தங்கியிருந்த வீட்டை அடைகின்றனர். ஆனால், இப்பொழுது வேறு யாரோ தங்கியிருக்கின்றனர். அவர்கள், அர்மார் குடும்பம் இங்கு தங்கியிருந்தது, ஆனால், இப்பொழுது இல்லை, மேலும் அவர்களைப் பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றனர்[3]. அதாவது பட்கல் குடும்பம் போல, இந்த அர்மார் குடும்பமும், வீடு மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதிலிருந்து, அக்குடும்பமே அவர்களுக்கு உடைந்தையாக இருக்கிறது என்று தெரிகிறது. பேட்டிகளில் மட்டும், தங்களது மகன்கள்-மகள்கம் அப்பாவிகள், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுபவர்கள், இதனையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், குடும்பத்தார், குறிப்பாக திருமணம் ஆனவர்கள், மனைவிக்குத் தெரியாமல், இத்தகைய வேலைகளில் ஈடுபட முடியாது. மனைவி அமைதியாக இருக்கிறாள் என்றால், ஒத்துழைக்கிறாள் என்றாகிறது.

Mohammed Afzal, Najumul Huda, Rizwanஇவர்கள் இப்படி இருக்கலாமா? – பெற்றோர்-மற்றோர் ஏன் கண்டுகொள்ளவில்லை?: ஷபி அர்மானுக்குப் பிறகு காலித் அஹமது அலி கான் அல்லது ரிஸ்வான் [Khalid Ahmed Ali Khalid alias Rizwan, 20] என்பவன் இரண்டாவது தளபதியாக இருக்கிறான். மல்வானி என்ற இடத்தைச் சேர்ந்த அயஸ் சுல்தான் என்பவனை மூளைசலவை செய்தத்தில் இவன் முக்கிய பங்கு வகித்திருக்கிறான். அயஸ் சுல்தான் இப்பொழுது காணாமல் போயிருக்கிறான். மொஹம்மது அலீம் [Mohd Aleem (23)] இந்திராநகரிலிருந்து [லக்னௌ, உபி] பிடிபட்டுள்ளவன் இணைதளத்தின் மூலம் ஆட்களை சேர்ப்பது தெரியவந்தது. இவன் வாட்ஸ்-அப், டுவிட்டர், பேஸ்புக் என்று எல்லாவற்றிலும் புகுந்து, இளைஞர்களை மூளை சலவை செய்து ஐசிஸ் பக்கம் இழுத்து, சேர்த்துள்ளான்[4]. இது தவிர,

  1. மொஹம்மது நபீஸ் கான் ஹைதராபாத்
  2. மொஹம்மது ஷரீப் மௌந்தீன் கான் ஹைதராபாத்
  3. மொஹம்மது அப்சல் பெஙளூரு

என்று கைது செய்யப்பட்டனர்.

Indian Muslim youth become ISIS supporters, warriorsஇந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின்விஸ்வரூபம்“![5]: தமிழ்.ஒன்.இந்தியா, ரியாஸ் பட்கலுக்கு, நிறைய மரியாதைக் கொடுத்து எழுதியுள்ளது, “கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம், யாரைக் கவர்ந்ததோ இல்லையோ, இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்து விட்டதாம். இந்தப் படம், அல் கொய்தா அமைப்பின் இந்திய வருகையை அறிவிக்கும் படமாக அமைந்து விட்டதாகவும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் கருதினார்களாம். குறிப்பாக கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய இப்படத்தை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவரான ரியாஸ் பத்கல் அதிகம் விரும்பிப் பார்த்தாராம். அவருக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துப் போய் விட்டதாம். 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது இந்தியக் கிளை குறித்த அறிவிப்பை அல் கொய்தா வெளியிட்டது. இருப்பினும் அந்த அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கிறதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அல் கொய்தாவின் வருகைக்கு முன்பாகவே அதுகுறித்து குறிப்பிட்டுள்ளார் ரியாஸ். விஸ்வரூபம் படத்தை மேற்கோள் காட்டி இதைக் கூறியிருந்தார் ரியாஸ்”.

இந்தியாவுக்கு அல் கொய்தா வந்து விட்டதுஎன்று விஸ்வரூபம் முன்னரே கணித்துவிட்டதாம்![6]: தமிழ்.ஒன்.இந்தியா தொடர்கிறது, “ஒரு நேரத்தில் வலிமையான அமைப்பாக திகழ்ந்த இந்தியன் முஜாஹிதீன் தற்போது பிளவுபட்டு விட்டது. ஒரு பிரிவு அல் கொய்தாவுக்கும், இன்னொரு பிரிவு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் ஆதரவாக திகழ்கிறது. 2013ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி ரியாஸ் பத்கல், பாகிஸ்தானில் இருந்தபடி இந்தியாவில் இருந்த தனியால் என்ற தனது கூட்டாளியுடன் சாட் செய்துள்ளார். அப்போது தான் விஸ்வரூபம் படம் பார்த்ததாக கூறியுள்ளார் ரியாஸ். அதாவது மார்ச் 25ம் தேதி அப்படத்தைப் பார்த்ததாகவும், படத்தின் முடிவில், இந்தியாவுக்கு அல் கொய்தா வந்து விட்டது குறித்த வசனம் இடம் பெற்றதாகவும், அது உண்மைதான் என்றும், விரைவில் அது நடக்கப் போவதாகவும் ரியாஸ் கூறியுள்ளார். அன்றுதான் விஸ்வரூபம் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது. தனது உரையாடலின்போது ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகள், பாகிஸ்தானில் உள்ளவர்களை விட சிறந்தவர்கள் என்றும் பாராட்டியுள்ளார் ரியாஸ்”.

ஐஎஸ்ஐ அமைப்பினரை மோசடிக்காரர்கள், பாகிஸ்தான் தலிபான்கள் என்று விமர்சித்த ரியாஸ் பட்கல்[7]: தமிழ்.ஒன்.இந்தியா தொடர்கிறது, “அடி முட்டாள்கள் மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் குறித்தும், பாகிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள நிலவரம் குறித்தும் பேசியுள்ளார் பத்கல். இந்தியாவில் உள்ள நமது அமைப்பினர் அனைவரும் ஒன்று திரண்டு, நேட்டோ படையினருக்கு எதிராக, அல் கொய்தாவுக்கு ஆதரவாக தோள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் பத்கல். மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து நாம் விடுபட வேண்டும். அல் கொய்தாவுடன் இணைய வேண்டும் என்றும் பத்கல் கூறியுள்ளார். அதேபோல தனது சகோதரரான யாசின் பத்கலுடன் (அவர் பின்னர் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு விட்டார்) பேசிய பேச்சு குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. யாசினுடன் நடந்த உரையாடலின்போது ஐஎஸ்ஐ அமைப்பினரை மோசடிக்காரர்கள் என்று காட்டமாக வர்ணித்துள்ளார் ரியாஸ் பத்கல். தன்னை ஐஎஸ்ஐ மோசமாக நடத்தியதாகவும், தான் அல் கொய்தாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்று வருவதாகவும் ரியாஸ் கூறியுள்ளார். அதேபோல பாகிஸ்தான் தலிபான்களை அடி முட்டாள்கள் என்றும் அவர் வர்ணித்துள்ளார். 2013ம் ஆண்டு மே 11ம் தேதி தனது இந்திய அமைப்பினருடன் நடந்த பேச்சின்போது, பாகிஸ்தான் தலிபான்கள் அடி முட்டாள்களாக உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், இன்று காலை 5 குண்டுவெடிப்புகளை தெஹரிக் தலிபான்கள் நடத்தியுள்ளனர். இவர்கள் நல்லவர்கள்தான், ஆனால் முட்டாள்களாக உள்ளனர். அவர்களுடன் இணைய நான் விரும்பவில்லை. நான் அல் கொய்தாவுடன் இணையவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ரியாஸ்”.

வேதபிரகாஷ்

06-02-12016

[1] http://tamil.oneindia.com/news/india/shafi-armar-26-years-old-he-sought-set-up-isis-module-every-indian-state-246067.html

[2] Read more at: http://tamil.oneindia.com/news/india/shafi-armar-26-years-old-he-sought-set-up-isis-module-every-indian-state-246067.html

[3] https://www.youtube.com/watch?v=NqWwt_6bvcE

[4] The official said that Mohd Aleem (23), the IS suspect arrested from the city’s Indira Nagar area on Friday, was also recruited through a social networking site. “IS modules, still out of reach of intelligence and security agencies, are trying to expand their base in the state, especially west UP, using the same method,” he said.

http://www.hindustantimes.com/india/tech-for-intake-terror-outfits-go-online-for-hiring-new-recruits/story-OMpZiqBqZOU8Kfb83TaJxM.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின்விஸ்வரூபம்“!, Posted by: Sutha, Published: Tuesday, May 19, 2015, 16:10 [IST].

[6] http://tamil.oneindia.com/news/india/kamal-s-vishwaroopam-made-riyaz-bhatkal-happy-the-im-split-explained-227090.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின்விஸ்வரூபம்“!, Posted by: Sutha, Published: Tuesday, May 19, 2015, 16:10 [IST].

அன்ஸார்-உத் தௌஹீத் பி பிலால் அல்-ஹிந்த் 2013லிருந்து செயல்பட்டுவருவது எப்படி பெற்றோர், உற்றோர், மாற்றோர்களுக்குத் தெரியாமல் இருந்தது?

பிப்ரவரி 6, 2016

அன்ஸார்உத் தௌஹீத் பி பிலால் அல்ஹிந்த் 2013லிருந்து செயல்பட்டுவருவது எப்படி பெற்றோர், உற்றோர், மாற்றோர்களுக்குத் தெரியாமல் இருந்தது?

Muddabir Mushtaq Sheikh, Shafi armanஎன்டிடிவியின்  தீவிரவாதஆதரவு நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் சொல்வது: சையது அன்ஸார் ஷா காஸ்மி என்ற இஸ்லாமிய வெறியூட்டும் பேச்சாளர். இவரது ஆயிரக்கணக்கான பேச்சுகள் உள்ளன. இவற்றையெல்லாம் பெங்களூரு போலீஸ் கமிஷனர் கேட்டுள்ளார், அதில் இந்திய-விரோதமாக எதுவும் இல்லை, ஆனால், என்.ஐ.ஏக்கும் மட்டும் கிடைத்துள்ளது, என்று ஒரு முஸ்லிம் கேட்கிறார். கைது செய்யப்பட்டுள்ளவரின் சொந்தக்காரராகிய இன்னொரு இளம்பெண், “அந்த பேச்சுகளைக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு, அவரது பேச்சைக் கேட்காமல், மற்ற மதத்தலைவரின் பேச்சையா கேட்பார்கள்?”, என்று காட்டமாக , கிண்டலாகக் கேட்கிறார். முஸ்லிம்கள் மசூதிகளுக்குச் செல்லட்டும், மதரஸாக்களுக்குச் செல்லட்டும், யார் பேச்சை வேண்டுமானாலும் கேட்கட்டும், ஆனால், ஐசிஸ் தொடர்புகள் எவ்வாறு உருவாகியுள்ளன, 2013லிருந்து செயல்படுகின்றன என்பதையெல்லாம் இப்பெண்மணிகள் ஏன் பொறுப்பாக கண்காணித்து, தடுக்கவில்லை?

Shafi arma recruits and contactsஇன்ஜினியரிங், பிஏ, ஆயுர்வேத மருத்துவம் படிப்படிக்கும் மாணவர்கள். சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஐஎஸ்., தலைவர்களுடன், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஏன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும்?: கைது செய்துள்ளதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் வந்திருப்பதாக டில்லி போலீஸ் அறிவித்தது. இவர்கள், குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் விதமாகவும், ஹரித்வாரில் நடக்கும் அரித் கும்பமேளா, முக்கிய ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டது. ஹரித்வாரில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த 4 இளைஞர்களை டில்லி போலீசார் 20-01-2016 அன்று கைது செய்தனர்.

  1. அக்லக் உர்-ரஹ்மான் (20),
  2. மொஹம்மது அஜிம்முஸன் (23),
  3. மொஹம்மது மீரஜ் என்கின்ற மோனு (21),
  4. ஒசாமா மொஹம்மது என்கின்ற ஆதில் (18)

விமாரணையில் அவர் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இவர்களின் வயது 19 முதல் 23 வரை. இவர்கள் 4 பேரும் இன்ஜினியரிங், பிஏ, ஆயுர்வேத மருத்துவம் படிப்படிக்கும் மாணவர்கள். சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஐஎஸ்., தலைவர்களுடன், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தது. எந்த இடத்தில் எவ்வாறு தாக்குவது, அதற்கான ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்ற விபரங்கள் இவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

சர்வே நடத்தியது பற்றி பேசாதது: 26-01-2016 அன்று குடியரசு தின விழாவின் போதும், ஹரித்வார் அரித் கும்பமேளா, டில்லியில் மக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள், டிஎல்எப் சுற்றுலா சாலை, நொய்டாவில் உள்ள கிரேட் இந்தியா பகுதி உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துது[1]. இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் சமீபத்தில் நடத்தப்பட்டது போன்று மக்களோடு மக்களாக கலந்து தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்தது. பிப்ரவரி 8ம் தேதி ஹரித்வாரில் நடக்கும் ஹரித்வாரா கும்பமேளாவின் போது, தினமும் ஆயிரக்கணக்கானர்கள் வந்து செல்லும் மால் ஒன்றை தகர்க்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு திட்டமிடுவதற்காக எங்கெல்லாம் மக்கள் அதிகம் கூடுகிறார்கள் என்பதை கண்டறிய சர்வே ஒன்றையும் இந்த பயங்கரவாதிகள் குழு நடத்தி உள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் 20-01-2016 அன்று எச்சரிந்தது குறிப்பிடத்தக்கது[2].

அந்நிலையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்: இந்நிலையில், இந்தியாவில் வரும் 26ம் தேதி குடியரசுத் தினம் கொண்டாடபட்டது. இதையொட்டி, நாடு முழுவதும், என்ஐஏ மற்றும் காவல்துறையினர் சேர்ந்து பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர்[3]. இந்த சோதனையில், கர்நாடகா, ஹைதராபாத், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் 14 கைது செய்யப்பட்டனர். இந்த தகவலை மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது[4]. கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள பஜ்பேயில் தேசிய புலனாய்வுத்துறையினர் வியழக்கிழமை இரவு 21-01-2016 அன்று நடத்திய தேடுதல் வேட்டையில் நஜ்மல் ஹூடா [Najmul Huda] என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டான்[5]. கைதான தீவிரவாதி பதன்கோட் தாக்குதலில் தொடர்புடையவரா என அதிகாரிகள், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்[6].  தும்கூரிலிருந்து சையது ஹுஸைன் [Syed Husain] கைது செய்யப்பட்டான்[7].

அன்ஸார்உத் தௌஹீத் பி பிலால் அல்ஹிந்த் 2013லிருந்து செயல்பட்டுவருவது: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட 16 ஐஎஸ் ஆதரவாளர்கள், இராக், சிரியா நாடுகளில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைமையுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பையில் முத்தாபிர் முஸ்தாக் செயிக் [Muddabir Mushtaq Shaikh, 33] என்பவன் கைது செய்யப்பட்டான். இவனுக்கு, ஐசிஸ் தலைவன் அபு பக்கர் அல்-பாக்ததியுடன் [Abu Bakr Al-Baghdadi] நேரிடை தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. பாக்தாதியின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் புதிய பயங்கரவாத அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு துருக்கி, சிரியா வழியாக ஷேக்குக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது[8]. இதனால், இந்தியாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை இவன் தான் அனுப்பி வைக்கிறான் என்று அவனது மனைவி உஜ்மா [Ujma, 30] கூறுகிறாள்[9]. ஒன்றரை வருடத்திற்கு முன்பாக ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் ரூ.50,000/-க்கு வேலைப் பார்த்து வந்தவன், திடீரென்று வேலையை விட்டு விட்டான். ஆனால், வங்கியில் மட்டும் ரூ.30 லட்சம் வரை இருப்பதால், குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறான் என்றெல்லாம் விவரங்கள் தெரியவந்தன[10].  அன்ஸார்-உத் தௌஹீத் பி பிலால் அல்-ஹிந்த் [Ansar-ut Tawhid fi Bilal al-Hind] என்ற அமைப்பு, ஐசிஸ்சின் இந்திய பிரிவாக 2013ல் உருவாக்கி, அதற்கு தலைவனாக, முத்தாபிர் முஸ்தாக் செயிக் நியமிக்கப்பட்டான். இதை ஷபி அர்மான் [Shafi Arman] என்பவன் சிரியாவிலிருந்து கண்காணித்து வந்தான்[11].

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆளெடுக்கும் ஷபி அர்மார்: ஷபி அர்மார் என்ற இந்த இளைஞருக்கு26 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்த வயதில் இந்த இளைஞர் செய்துள்ள “சாதனை” நடுநடுங்க வைக்கிறது என்று ஆரம்பிக்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[12]. இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆளெடுக்கும் நபர்களுக்கும், அந்த அமைப்புக்கும் இடையே முக்கிய இணைப்புப் பாலமாக விளங்கி வருகிறாராம் அர்மார். இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை அனுப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நபர் என்றும் விசாரணை அதிகாரிகள் கூறுகிறார்கள். இவர் குறித்து இன்டர்போல் போலீஸ் பிறப்பித்த உத்தரவில், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது, நிதி சேகரித்தது, ஆட்களைத் திரட்டிது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அடுக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் பத்கலைச் சேர்ந்தவர் அர்மார். இவரது பெயர் முகம்மது ஷபி. அர்மார் என்பது குடும்பப் பெயராகும். ஆங்கிலம், அட்டகாசமாக பேசுவார். அது போக கன்னடம், உருது, இந்தி ஆகியவையும் நன்றாகத் தெரியும். இவரது புனை பெயர் யூசுப் அல் ஹிந்தி. இவர் அன்சர் உல் தவாஹித் என்ற அமைப்பின் நிறுவனரான சுல்தான் அர்மாரின் சகோதர் ஆவார். இந்த அமைப்புதான் ஐஎஸ்ஐஎஸ் மைப்புக்கு ஆட்களைத் திரட்டி அனுப்பும் அமைப்பாகும். தனது சகோதரரின் நிழலில்தான் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தார் ஷபி. தனது சகோதரருடன் சேர்ந்துதான் அவர் ஆட்களைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டார். சமீபத்தில்தான் அதிலிருந்து வெளியே வந்துள்ளார்.

வேதபிரகாஷ்

06-02-12016

[1] தினமலர், இந்தியாவில் .எஸ்., பயங்கரவாதிகள் : மக்கள் கூடும் இடங்களில் தாக்க திட்டம், ஜனவரி.21.2016,09.08.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1438428

[3] விகடன், இந்தியாவில் ஐஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் கைது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!, 20-01-2016.

[4] http://www.vikatan.com/news/india/57984-india-is-supporters-arrested-central-government.art

[5] நியூச்.7, மங்களூரில் பதுங்கி இருந்த ஐஎஸ் தீவிரவாதி கைது, Updated on January 22, 2016.

[6] http://ns7.tv/ta/entrenched-extremist-arrested-mangalore.html

[7] http://www.livemint.com/Politics/QJF46lkYM8YlxceQ1BOIDL/Four-arrested-for-alleged-ISIS-links-in-Karnataka.html

[8]http://www.dinamani.com/india/2016/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-16-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article3243241.ece

[9] https://www.youtube.com/watch?v=NqWwt_6bvcE

[10] http://www.ndtv.com/india-news/arrested-mumbra-mans-wife-reveals-her-husbands-isis-links-1269639

[11] The structure of the outfit was decided by Shafi Arman, the handler of recruitments in India operating from Syria, in 2013, and Sheikh, 33, was made the amir (chief) of Ansar-ut Tawhid fi Bilal al-Hind, ISIS’s wing in India.

http://www.hindustantimes.com/india/nia-crackdown-reveals-arrested-mumbra-man-is-chief-of-isis-india-wing/story-XrrUznTbYiLH7tvregWCHP.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, அர்மார்இந்தியாவில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் 26 வயது இணைப்புப் பாலம்!, Posted by: Jayachitra, Published: Thursday, February 4, 2016, 17:51 [IST].