Posted tagged ‘வேலூர்’

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக-பகுத்தறிவு-கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (2)!

மார்ச் 19, 2017

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திகபகுத்தறிவுகம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாதுஇருந்து விமர்சித்தால் கொலை தான் (2)!

Farooq - Ukkadam scrap market

தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென அழைத்து கொலை செய்யப் பட்டது: கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பாரூக் (31). உக்கடம் “பிலால் மார்கெட்டில்” பழைய இரும்பு சந்தையில் வியாபாரம் செய்து வந்தார். இரும்பு வியாபரமே பெரிய அளவில் கள்ளத்தனமாக, வரியேப்பில் தான் நடந்து வருகிறது[1]. அதில், முகமதியர்கள் கில்லாடிகள். 16-03-2017 வியாழக்கிழமை அன்று பாரூக்கை செல்போனில் அழைத்த மர்ம நபர் தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென, உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு சென்ற பாரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க தொடங்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த பாரூக் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கடைவீதி காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Farooq murder, one surrendered - DM - 18_03_2017_012_036

அன்சர்ந்த், என்ற முஸ்லிம் கோவை 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 17-03-2017 அன்று சரணடைந்தது: அதற்குள் விசயம் அறிந்த திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்யப் பட்டு தண்டிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர். இந்நிலையில் போத்தனூர் பகுதியை சேர்ந்த அன்சர்ந்த், கோவை 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 17-03-2017 அன்று சரணடைந்தார். தாடி வைத்த முகத்துடன் அவனது புகைப்படமும் நாளிதழ்களில் வெளியாகியது. இவரை வருகின்ற மார்ச் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தேடும் பணியை தீவிரபடுத்தி உள்ளனர். கொலையாளிகளுள் ஒருவன் முஸ்லிம் என்றதும் தமிழக ஊடகக்கள் அடங்கி விட்டன. மற்றவர்கள் வேலூரைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் யூகிக்கிறார்கள். ஆக, முஸ்லிமின் கொலைக்கு காரணம் முஸ்லிம் தான், காரணம் மதசமாசாரம் தான் என்று தெரிந்து விட்டது.

Muslim to atheist - Farooq murdered

பகுத்தறிவுநாத்திககம்யூனிஸ்டுகளின் மௌனநிலை: முஸ்லிம் விவகாரம் என்றால் சொல்ல வேண்டுமா, பகுத்தறிவு-நாத்திக-கம்யூனிஸ்டுகளின் நிலை மேலே எடுத்துக் காட்டப்பட்டது. தமிழக இச்செய்தியை ஓரம் தள்ளி விட்டன. ஆர்.கே. நகரை பிடித்துக் கொண்டன. செக்யூலரிஸ சித்தாந்தம் இப்படித்தான், சுதந்திரமாக செயல்படுகிறது போலும். மஹாராஷ்ட்ராவில், கர்நாடகாவில் நாத்திகன் கொலை செய்யப் பட்டால் குதிக்கிறார்கள். வீரமணி பக்கம்-பக்கமாக எழுதி தள்ளினார்! ஆனால், தமிழகத்தில், ஒன்றுமே நடக்காதது போல அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. “பெரியார் பிறந்த மண்ணில்” பிறந்தவர்களின் யோக்கியதையும் அந்த அளவுக்கு இருக்கிறது. அதாவது, இந்துமதம், இந்துகடவுளர்களை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், அது செக்யூலரிஸ உரிமை என்று போற்றப்படும், ஆதரிக்கப் படும். முஸ்லிம்கள், கிருத்துவர்கள், நாத்திகர்கள், ஏன் இந்து-விரோதிகள் கூட அவ்வாறு செய்யலாம், “கருத்து சுதந்திரம்” என்று ஆராதிக்கப் படும். ஆனால், முஸ்லீமாக இருந்தால் கூட, இஸ்லாத்தை விமர்சிக்கக் கூடாது. செய்தால் கொலைதான்! செக்யூலரிஸ சித்தாந்திகள் இவ்வாறு இருப்பதும் நோக்கத்தக்கது.

Farooq murdered - Coimbatore- DM -17_03_2017_015_011_001

முஸ்லிம் நாத்திககனாக இருக்க முடியாது: கொலை செய்யப்பட்ட பாரூக் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவரை இஸ்லாம் மார்க்கத்திலிருந்து நீக்கி உள்ளனர். அதாவது, பத்வா போட்டு, மதபகிஷ்காரம் செய்துள்ளார்கள். உண்மையில், ஆசார இஸ்லாமியத்தின் படி, ஒரு முஸ்லிமை முஸ்லிம் அல்லாதவனாக ஆக்க முடியாது. இல்லை, முஸ்லிமாக பிறந்தவனும், இஸ்லாத்திலிருந்து வெளியேற முடியாது. ரகசியமாக, விளம்பரம் இல்லாமல் செய்யலாம் அது வேறு விசயம். ஆனால், முறைப்படி செய்வதானால், சாவு தான் அவனுக்கு முடிவு[2]. பாருக்குக்கு அதுதான் நேர்ந்துள்ளது. ஆனால், எந்த செக்யூலார்வாதியும் இதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையிலும் அவர் தொடர்ந்து சமூக வலை தளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவேற்றம் செய்ததால் ஆத்திரமுற்று சிலர் கொலை செய்ததாக தெரியவருகிறது என்கிறது ஒரு இணைதள செய்தி. வாட்ஸ்அப் குரூப் நடத்தி வந்த பாரூக் அதில் கடவுள் மறுப்பு கொள்கையை தெரிவித்து வந்துள்ளார்[3]. தனது பேஸ்புக் பக்கத்திலும் மத மூட நம்பிக்கைகள், கடவுள் மறுப்பு விஷயங்களை தொடர்ந்து எழுதி வந்துள்ளார்[4]. அதாவது, ஒரு முஸ்லிம் கடவுள் இல்லை என்று சொல்லக் கூடாது, ஆனால், முஸ்லிம் கடவுள் இருக்கிறது, மற்ற கடவுள்கள் இல்லை என்று சொல்லல்லாம். இதுதான் இஸ்லாத்தின் செக்யூலரிஸவாதம். “லா இலா இல்லல்லஹ” என்பதற்கு, “அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்றுதான் விளக்கம் கொடுக்கிறார்கள். “இல்லை-இருக்கிறது” என்ற குழப்பத்தில் தோன்றிய இறையியலில், கடவுளின் தன்மை அவ்வாறு இருக்கிறது.

Farooq Coimbatore scrap dealer murdered - DM -17_03_2017_015_010

பாரூக்கின் வாட்ஸ்அப், பேஸ்புக் பதிவுகள் எதிர்க்கப்பட்டன, கண்டிக்கப் பட்டன: கடந்த மாதம் பிப்ரவரி, பாரூக்கின், நான்கு வயது குழந்தையின் பிறந்த நாள் விழா நடந்தது[5]. அதில், ‘கடவுள் இல்லை’ என்ற வாசகத்தை எழுதி, அவரது குழந்தை பிடித்திருந்த பதாகையுடன், போட்டோ போடப்பட்டது. இதன்பின், சிலர் அவரை மிரட்டியுள்ளனர். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. கருத்துரிமை என்று ஆதரித்து குரல் கொடுக்கவில்லை. யார்-யாரோ பேஸ்புக், டுவிட்டர் “குழாயடி” விவகாரங்களை னெல்லாம் செய்திகளாக்குகிறார்கள். ஆனால், இது யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில், முஸ்லிம் பிரச்சினை, இஸ்லாம் விவகாரம், நமக்கேன் வம்பு என்றுதான் ஒதுங்கியது மட்டுமல்லாமல், விசயத்தையும் அமுக்கப் பார்க்கிறார்கள். இஸ்லாத்தை ஒரு முஸ்லிம் கூட விமர்சிக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக இக்கொலை நடந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது[6]. இவைதான் அவரது உயிரை பறிக்க காரணமாக இருந்துவிட்டன என கூறப்படுகிறது. கருத்து சுந்திரத்திற்கு எதிராக கொலையாகவே இது பார்க்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் சிலரை கோபப்படுத்தியுள்ளன. அந்த குரூப்தான் இவரை கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறோம் என்று கோவை துணை கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார். கோவையில் தாலிபானிசம் தனது முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளதா என அஞ்சியுள்ளனர் மக்கள். பாரூக் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல, திகவினருக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்[7]. இதனால், சாலை மறியலில் ஈடுபட்டனர்[8].

© வேதபிரகாஷ்

19-03-2017

Farooq murder - malaimalar - 18349983

[1] இதைப்பற்றியெல்லாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. தொழிலில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். அத்தகைய வரியேய்த்த கள்ள வியாபார, கள்ளப் பணம் தாம், தீவிரவாத, சமூகவிரோத காரியங்களுக்கு உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

[2] “Takfeer” (Arabic: تكفير‎‎ takfīr) refers to the practice of excommunication, one Muslim declaring another Muslim as kafir (non-believer). The act which precipitates takfir is termed the mukaffir. An ill-founded takfir accusation is a major forbidden act.

[3] தமிழ்.ஒன்.இந்தியா, மதத்திற்கு எதிராக, வாட்ஸ்அப், பேஸ்புக்கில் கருத்து கூறியதற்காக வாலிபர் கொலை! அதிர்ச்சியில் கோவை, By: Veera Kumar, Published: Saturday, March 18, 2017, 15:44 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-man-hacked-death-over-atheistic-fb-posts-277287.html

[5] தினமலர், தி.வி.., பிரமுகர் கொலை கோவையில் ஒருவன் சரண், பதிவு செய்த நாள். மார்ச்.18, 2017, 00.48.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1732501

[7] தினகரன், கோவையில் திராவிடர் விடுதலை கழகம், விசிக உள்ளிட்ட கட்சிகள் சாலை மறியல், Date: 2017-03-17 15:52:18

[8] http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=287911

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (2)

ஒக்ரோபர் 17, 2015

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (2)

உபி தீவிரவாதி வேலூரில் கைது

உபி தீவிரவாதி வேலூரில் கைது

சையத் அகமது அலி  கொடுத்த வாக்குமூலம்[1]: விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு: “திரிபுரா மாநிலம் உன்னுகுட்டி கைலா ஜெகர் பகுதி, தலியார் கந்தி கிராமம்தான் எனது ஊர். என்னுடைய மனைவி பெயர் லுக்பாபேகம். எங்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நான் எனது வீட்டின் அருகே காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். கடந்த 2000–ம் ஆண்டு எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் எனது மனைவி போலீசில் புகார் கொடுக்க சென்றார். அதனால் நான் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தேன். பின்னர் என்னை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நிலை தேறியதும் நான் மீண்டும் காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். இந்த நிலையில் சிறிது நாட்கள் கழித்து எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அசாமில் உள்ள மருத்துவமனையிலும், பின்பு திரிபுரா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றேன். அப்போது என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் உனக்கு புற்றுநோய் உள்ளது என்றனர்.

 

புதியதலைமுறை - ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு

புதியதலைமுறை – ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு

மே, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2015 சென்னைக்கு வந்து சென்றது: அப்போது எனது பக்கத்து வீட்டுக்காரர் பையிம் ஜமான் என்பவரின் அக்காவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்களுடன் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த மே மாதம் வந்தேன். அங்கு டாக்டர்கள் எனக்கு புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக எனது தம்பியுடன் ஆகஸ்டு மாதம் வேலூருக்கு வந்தேன். அப்போது சி.எம்.சி. அருகில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினேன். பின்பு வேலூர் சைதாப்பேட்டை பள்ளிவாசல் அருகே அறை எடுத்து தங்கினேன். அதைத்தொடர்ந்து உத்தரபிரதேசம் அலிகாரில் உள்ள மருத்துவமனையிலும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இதையடுத்து சென்னையில் இருந்து மீண்டும் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற கடந்த 13–ந் தேதி இரவு பீகாரை சேர்ந்த ஹாலித்து என்பவருடன் காட்பாடிக்கு வந்தேன். பின்னர் ஹாலித் எதுவும் கூறாமல் என்னை விட்டு சென்று விட்டார். விடியும்வரை நான் சி.எம்.சி.க்கு எதிரே உள்ள பள்ளிவாசல் அருகே தங்கினேன். 14–ந் தேதி காலை 7–45 மணி அளவில் டாக்டரை பார்க்க நான் சி.எம்.சி.க்கு சென்றேன். அப்போது டாக்டரை பார்க்க விடாமல் காவலர்கள் என்னை தடுத்தனர். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து நான் காலை 8 மணி அளவில் சி.எம்.சி. மருத்துவமனைக்கு போனில் தொடர்பு கொண்டேன். அவர்கள் வேறு ஒரு தொலை பேசி எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறு கூறினர். பின்பு நான் 8–15 மணி அளவில் எனது தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு மருத்துவமனையில் வெடிகுண்டுகள் உள்ளது எனவும், அவை சரியாக 10 மணிக்கு வெடிக்கும் என்று கூறி போனை துண்டித்தேன். இதே ஏற்கனவே நான் ஆக்ராவிலும், அலிகாரிலும், லக்னோவிலும், ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர், மும்பையில் உள்ள கண்ட்ரோல் அறைக்கும் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்.

UP Terrorist arrested in Ambur PTI 17-10-2015

UP Terrorist arrested in Ambur PTI 17-10-2015

விசாரணைக்குப் பிறகு ஜெயிலில் அடைப்பு: சென்னை, ஆம்பூர், வேலூர் என்று பல இடங்களுக்கு பலமுறை சர்வ சகஜமாக வந்து போவது, எப்படி என்பதும் வியப்பாக இருக்கிறது. தீவிரவாத செயல்கலில் ஈடுபட்டவர்கள் வந்து செல்கின்றனர் எனும் போது, நிச்சயமாக உள்ளூர் ஆட்கள் உதவி செய்கிறார்கள் என்றாகிறது. அதைத்தொடர்ந்து சையத் அகமது அலியை, துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பலத்த காவலுடன் அணைக்கட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். இங்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்–1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீனாசந்திரா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி சையத் அகமது அலி வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஆம்பூர் மதரஸா - உதாரணம்

ஆம்பூர் மதரஸா – உதாரணம்

குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் பல மாநிலங்களுக்குச் சென்று வர யார் உதவுகிறார்கள்?: சையத் அகமது அலி உண்மையிலேயே மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து போகலாம், போயிருக்கலாம். இப்பொழுது பார்ப்பதற்கே பாவமகத்தான் இருக்கிறான். ஆனால், அவன் தீவிரவாதியாக இருக்கிறான். குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களுக்கு நோய் வரக்கூடாது, சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில்லை. ஆனால், உடல்நிலை ஆரோக்கியமாக மாறியதும், அவர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது தான் பிரச்சினையாக இருக்கிறது. இங்கும் தனக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஆனதால், குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்திருக்கிறான் என்பது வேடிக்கையாக இருக்கிறது. மருத்துவமனைகளில் காத்துக் கிடப்பது என்பது சர்வ-சகஜமான விசயம் தான். “அப்போது டாக்டரை பார்க்க விடாமல் காவலர்கள் என்னை தடுத்தனர். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன்”, என்பது இன்னும் விசித்திரமாக இருக்கிறது. மேலும், தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவன் எனும்போது, உ.பி, அசாம், மேகாலயா என்ற பல மாநிலங்களுக்குச் சென்று சிகிச்சைப் பெறுவது, மற்றும் தமிழகதுக்கு வந்து செல்வது என்பது, நிச்சயமாக மற்றவர்கள் உதவியுடன் வந்து செல்ல முடியாது. அதற்காக நிறைய பணமும் செலவாகிக் கொண்டிருக்கும். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார் எனும்போது, தனது அடையாளத்தையும் மறைத்துள்ளார் என்றாகிறது. குற்றமுள்ள நெஞ்சு குறு-குறுத்துள்ளது. ஆனால், அதிலும் தன்னலம், அதாவது, மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதினால், அடங்கிப் போயிருக்கிறார். இங்கும், தன்னை எதிர்த்தபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்.

தினமலர் - வேலூர் கைது

தினமலர் – வேலூர் கைது

குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் மதரஸாக்களில் தங்க முடியுமா?: மதரஸாக்களில், பள்ளிவாசல்களில் தங்குவது என்பது அவ்வளவு சாதாரணமான விசயமா அல்லது யாராவது போன் செய்து அறிவித்தார்களா, கடிதங்களை கொண்டுவந்து, தங்கினார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், இவையெல்லாமே நடந்தன எனும் போது, அவர்களுக்கு உள்ள பணபலம், நட்பு அல்லது வேறெந்த பலமோ உள்ளது என்பதைக் காட்டுகிறது. இன்றைய நிலையில் அறிமுகத்துடன் சென்றாலே, பலவித கேல்விகள் கேட்கப்படுகின்றன. லாட்ஜுகளில் அடையாள அட்டைகளை கேட்கிறார்கள், அவற்றை நகலும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்களையும் எடுத்து வைத்துக் கொல்வதால், இவற்றையும் மீறி, தங்க வேண்டுமானால், மதரஸா, பள்ளிவாசல் போன்ற இடங்களில் தான் தங்க வேண்டும். அவ்வாறு தங்கினால், விவரங்கள் மறைக்கப்படும் அல்லது அவ்வளவு சுலபமாக மற்றவர்களுக்குக் கிடைக்காது. ஆகவே, ஒன்று முஸ்லிம்கள் என்ற நிலையில் அல்லது தீவிரவாதிகள் என்று தெரிந்தும், முஸ்லிம்கள் என்பதால் உதவுவது என்பதுள்ளது என்று தெரியவருகிறது. அதனால், குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களின் அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. சித்தூரில் அல்-உம்மா தீவிரவாதிகள் தங்கியிருந்தது, சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டது, அப்பொழுதும், போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையில், ஈடுபட்டது போன்ற விவரக்களும் வெளிவருகின்றன. ஆம்பூரில் சமீபத்தில் தான் கலவரம் ஏற்பட்டுள்ளது. போலீஸாரே தாக்கப்பட்டுள்ளனர். அந்நிலையில் தீவிரவாதிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர், மதரஸாக்களில் தங்க இடம் கொடுக்கப்படுகிறது என்பதெல்லாம் நிச்சயமாக வேறெந்த விசயத்தையோ மறைப்பதாக உள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2015


[1]  தினத்தந்தி, சி.எம்.சி. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: கைதான தீவிரவாதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு, மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 5:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 1:46 AM IST.

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

ஒக்ரோபர் 17, 2015

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

உபி தீவிரவாதி வேலூரில் கைது

உபி தீவிரவாதி வேலூரில் கைது

ஆம்பூர் உமர் சாலையில் மதரஸாஎன்ற இடத்தில் கைதா அல்லது மதரஸாவில் கைதா? – தமிழ்.ஒன்.இந்தியாவின் உண்மை மறைப்பு செய்தி[1]: ஆம்பூரில் பதுங்கியிருந்த 2 வட மாநில தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 5 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அவர்கள்தான் என தெரிய வந்துள்ளது[2]என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா. வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சுற்றித்திரிந்து கொண்டு இருப்பதாக ஆம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது[3]. இதையடுத்து போலீசார் நேற்று மாலை ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா என்ற இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் சரிவர பதிலளிக்காததால் போலீசார் அவரை ஆம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். “ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா” என்று குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. மதராஸவில் தங்கியிருந்த பயங்கரவாதி கைது என்று உண்மையை வெளியிட ஏன் மறைப்பு என்று தெரியவில்லை. மதரஸாக்கள் பயங்கரவாதத்திற்கு / தீவிரவாதங்களுக்கு உதவுகின்றன என்ற உண்மையினை மறைக்க அவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கலாம். பி.டி.ஐ ஏற்கெனவே அவ்வுண்மையினை வெளியிட்டுள்ளது[4]. அச்செய்தி மற்ற ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன[5].

ஆம்பூர் சாலை - உதாரணம்

ஆம்பூர் சாலை – உதாரணம்

.பி.போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள்[6] / தீவிரவாதிகள்[7]: உத்தரபிரதேச ஆக்ரா தாலியான் காண்டி பகுதியை சேர்ந்தவர் சையது மாமூன் அலி. இவரது மகன் சையது முகம்மது அலி (வயது 37). இவர் மீது உத்தரபிரதேச மாநிலம் போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், தர்கா, மற்றும் நிறுவனம் முதலியவற்றிற்கு தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்ததால் வழக்குகள் பதிவாகி உள்ளன[8]. ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளிலும் தொடர்பு உள்ளது[9]. ஒரு இது தொடர்பாக சையது முகம்மது அலியை போலீசார் தேடி வந்தனர். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார். இதனால் தீவிரவாதிகளுடன் சையத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று அம்மாநில போலீசார் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அவரை அறிவித்தனர். மேலும் சையத்தின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவரை சுற்றியுள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவரை போலீசார் தினமும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சையத் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக உள்துறைக்கு, உத்தரபிரதேச போலீசார் தகவல் கொடுத்தனர். உள்துறை அதிகாரிகள் உளவு துறை மூலம் வேலூர் மாவட்ட போலீசாரை உஷார்படுத்தினர்[10]. “புதிய தலைமுறை” டிவி பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றது.

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

ஆம்பூர் மதரஸாவில் தங்கியிருந்த தீவிரவாதி கைது: எஸ்.பி. செந்தில்குமாரி உத்தரவின்பேரில் ஆம்பூர் டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் சையது முகம்மது அலியின் அடையாளங்களை சேகரித்து, அவரை தேடி வந்தனர். இதற்கிடையில் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உமர் ரோட்டில் சையத் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒரு மதரஸாவில் தங்கியிருந்தான் என்று பி.டி.ஐ கூறுகிறது[11]. இதையடுத்து டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியை நேற்றிரவு தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து சையத்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை கைது செய்த அணைக்கட்டு காவல் போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், நேற்று முன்தினம் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சையத் என்பது தெரியவந்தது. கடந்த 14–ந் தேதி அடுத்தடுத்து 2 முறை இந்தி, ஆங்கில மொழியில் மாறி, மாறி போனில் மிரட்டல்கள் வந்தன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் சென்னை உள்பட பல்வேறு இடங்களை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர்[12].

புதியதலைமுறை - பயங்கரவாதிகள்

புதியதலைமுறை – பயங்கரவாதிகள்

ஆம்பூருக்கு அல்லது தமிழகத்திற்கு என்ன தொடர்பு?: எதற்காக சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சையத் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் சையத் தீவிரவாதிகளின் சிலிபர் செல் எனப்படும் உள்நாட்டு குழுக்களை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சையத்துடன் தொடர்புடைய நபர்கள் வேறு யாராவது? தமிழகத்தில் பதுங்கியுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சையத் கைது செய்யப்பட்டது குறித்து உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அம்மாநில போலீசார் வேலூருக்கு விரைந்துள்ளனர். பிடிபட்ட சையத் உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிகிறது. சையத் பிடிபட்டபோது அவரிடம் இருந்து 5 சிம்கார்டுகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் எண் பட்டியலையும் சேகரித்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதியதலைமுறை - அணைக்கட்டு காவல் நிலையம்

புதியதலைமுறை – அணைக்கட்டு காவல் நிலையம்

விசாரணையில் வெளியாகும் குழப்பமான விவரங்கள்: காவல்நிலையத்தில் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ‘திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மாமுன் அலி என்பவரின் மகன் சையது முகமது அலி என்றும் சிகிச்சை பெறுவதற்கு வேலூரில் தங்கியிருந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான எவ்வித ஆவணங்களும் அவனிடம் இல்லை. மேலும் அவனிடம் 5 சிம்கார்டுகள் இருந்தன. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சிம் கார்டுகளை ஆய்வு செய்தபோது அதிலிருந்த ஒரு சிம்கார்டு மூலம் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு நேற்றிரவு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு விடிய விடிய விசாரணை நடத்தினர். எஸ்பி செந்தில்குமாரி நேரில் சென்று விசாரணை நடத்தியதில், சையது முகமது அலி ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பேசினான். இதனையடுத்து இந்தி தெரிந்தவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வேலூர் சிஎம்சி அருகே உள்ள லாட்ஜில் தனது நண்பருடன் தங்கியிருந்தது தெரியவந்தது.

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் - கைது - உதாரணம்

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் – கைது – உதாரணம்

வேலூர் லாட்ஜுகளில் சோதனை: இதனையடுத்து, நேற்றிரவு வேலூரில் உள்ள ஒரு சில லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களின் விவரங்களை தீவிரமாக சேகரித்தனர். இதில் வட இந்திய நபருடன் தங்கியிருந்தவனை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு ராஜஸ்தான், ஆக்ரா உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும், வேலூரில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வேலூரில் யார் அவர்களுக்கு உதவி செய்தது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவர்களுக்கு வேறு எந்த அமைப்புடன் தொடர்பு உள்ளது? மேலும் இவர்களின் சதித்திட்டம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சிம் கார்டுகளில் உள்ள செல்போன் எண்களை சைபர் கிரைம் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் வேலூரில் இருந்து அவர்களுக்கு உதவி செய்த பலர் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளிகள் போர்வையில் தங்கியிருந்து வேலூரில் குண்டுகள் வைக்க சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் 2 தீவிரவாதிகள் கைது, Posted by: Mayura Akilan, Published: Friday, October 16, 2015, 16:59 [IST].

[2] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[4] http://www.ptinews.com/news/6626972_Man-wanted-for-making-terror-threats-in-UP-held-in-TN.html

[5] Business Standard, Man wanted for making terror threats in UP held in TN, Press Trust of India , Vellore (TN) October 16, 2015 Last Updated at 22:22 IST.

[6] https://www.youtube.com/watch?v=PWxP66jhXx0

[7] மாலைமலர், சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் பிடிபட்ட வாலிபர் தீவிரவாதியா? – ரகசிய இடத்தில் விசாரணை, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, 12:06 PM IST

[8] Syed Ahmed Ali had allegedly made terror threats to Taj Mahal in Agra, a dargah besides an institution in Lucknow. He had arrived here two days ago and stayed in a Madrasa in Ambur. http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[9] தினகரன், ஆக்ரா, ஜெய்ப்பூரில் குண்டுவெடிப்பில் தொடர்பு: வேலூரில் கைதான தீவிரவாதியிடம் விசாரணை, அக்டோபர்.17, 20125. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173391

[10] http://www.maalaimalar.com/2015/10/16120645/CMC-hospital-bomb-threat-Ambur.html

[11] Intelligence Bureau officials alerted Tamil Nadu police about the presence of Ali in Ambur in a Madrasa. “We immediately began our probe and with the help of local people we identified Ali…Now Uttar Pradesh police are on their way to take this man into their custody through court,” the official added.

http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[12] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/10/17014634/CMC-Hospital-bomb-threat.vpf

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (2)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (2)

POLIMER-NEWS_மார்டின் பிரேம்ராஜ் கைது

POLIMER-NEWS_மார்டின் பிரேம்ராஜ் கைது

ஆகஸ்ட்.5 வேலூர் கோர்ட்டில் ஆஜர்: ஷமீல் அகமதுவை கைது செய்தபோது, பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்த தகவல்களை வைத்தும், விசாரணை என்ற பெயரில் எந்தெந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்? அப்போது யார் யார் எல்லாம் உடன் இருந்தார்கள்? ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதா? காணாமல் போன பவித்ராவை கண்டுபிடிக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? போன்ற கேள்விகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தெரிவிக்கும், அனைத்து பதில்களையும் போலீசார் எழுத்துபூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆம்பூர் கலவரம் 105 பேர் கைது, முஸ்லிம் பெண்கள் ஆர்பாட்டம்

ஆம்பூர் கலவரம் 105 பேர் கைது, முஸ்லிம் பெண்கள் ஆர்பாட்டம்

ஆகஸ்ட்.7 வரை விசாரணை: விசாரணையின் போது பதிலளித்த இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், ’நான் ஷமில் அகமதுவை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரிக்கவில்லை. ஷமில் அகமதுவை அடிக்கவும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது’’ என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், ‘‘அப்படியானால் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன? என எழுதி தாருங்கள்’’ என்று கூறி ஒரு பேப்பரை கொடுத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜோ, ‘‘நான்தான் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறேனே. பின்னர் நான் எதை எழுதி தருவது? எழுதி கொடுக்க வேண்டிய தகவல் என்னிடம் ஒன்றும் இல்லை’’ என்று கூறிவிட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் கொடுத்த பேப்பரை திருப்பி கொடுத்துவிட்டார்[1]. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் அவர் வருகிற 7–ந் தேதி மாலை 4 மணிக்கு வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்[2].

போலீசார் காயம்

போலீசார் காயம்

போலீஸே போலீஸ் மீது நடவடிக்கைஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை?: ஆம்பூர் முஸ்லிம்கள் புகார் கொடுத்ததின் ஆதாரமாக இவ்வாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறார், செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றனர். ஆனால், கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸாரையேத் தாக்கி, பெண் போலீஸாரை மானபங்கப்படுத்தி, பொது மக்களைத் தாக்கி, வாகனங்களைத் தாக்கி, எரித்தது, போக்குவரத்தைக் குலைத்தது, கலவரத்தில் ஈடுப்பட்டது, பொது சொத்தை நாசப்படுத்தியது போன்ற வேலைகளில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 100 பேருக்கும் மேல் கைது என்று செய்தி வந்தது, பிறகு ஜாமீனில் விடுதலை என்றும் செய்தி வந்தது, ஆனால், கலவரக்காரர்கள் அவ்வாறு தாராளமாக, எவ்வாறு செயல்பட்டனர் என்ற விசாரணை விவரங்களைப் பற்றி ஏன் செய்திகள் வெளிவருவதில்லை? எல்லாவற்றிற்கும் முன்பாக முஸ்லிம் இணைதளங்களோ மார்டின் தான் கொலையாளி என்று தீர்மானித்துள்ளன[3]. “டெக்கான் குரோனிகள்” என்ற நாளிதழ் அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது[4]. வழக்கம் போல “மனித உரிமைகள் இயக்கம்” போன்றவையும் ஆம்பூரில் உண்மையில் நடந்தது என்ன என்று அங்குள்ளவர்களிடம் பேட்டி கண்டு எழுதி வருகிறார்கள். ஆனால், அவர்களும், நோயின் மூலகாரணத்தை ஆராயாமல் இருக்கிறார்கள்.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_012

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_012

ஷமீல் அகமதுவை பவித்ராவுடன் பழகுவதை ஏன் அவரது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லை?: தன் மனைவி காணவில்லை என்று பழனி கொடுத்த புகார் மீது தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இப்பிரச்சினை உருவாகியிருக்கிறது என்றால், திருமணம் ஆன ஷமீல் அகமது, ஏன் திருமணமான பவித்ராவுடன் தொடர்பு வைத்திருந்தான்? அவனது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லையே? டெல்டா ஷூ கம்பெனியிலிருந்து, இருவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டபோதே, விசயம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமே?  மே-ஜூன் விவகாரங்களைப் பார்த்தால், நடு-நடுவே பல விசயங்கள் மர்மமாகவே இருக்கின்றன:

  • கடந்த மே மாதம் 17-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோட்டில் உள்ள ஷமீலிடம் சென்றுவிட்டார். அப்படியென்றால், அவர்கள் திட்டமிட்டபடிதான் செய்திருக்கின்றனர்.
  • நடுவில் பழனி பவித்ராவை தேடி அலைகிறார். ஷமீல், சரவணன், புகழேந்தி முதலியோருடன் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார். அதாவது, பவித்ராவின் நண்பர்கள் என்று பழனிக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது.
  • மே.24-ம் தேதி பவித்ராவை காணவில்லை என்று பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத்தார்.
  • ஒரு வாரம் (?) ஈரோட்டில் தங்கியிருந்த பவித்ராவும், ஷமீல் அகமதுவும் என்ன செய்து கொண்டிருந்தனர்?
  • ஜூன் மாதம் 2-வது வாரத்தில் பழனியின் செல்போனில் தொடர்புகொண்ட ஷமீல், “பவித்ராவை பேருந்தில் ஊருக்கு அனுப்பிவைக்கிறேன். அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம்”. என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். ஆனால், ஆம்பூருக்கு வரவேண்டிய பவித்ரா சென்னைக்கு ஏன் சென்றாள்? ஷமீல் மட்டும் எப்படி தனியாக ஆம்பூருக்கு வரவேண்டும்? ஷமீல் என்றைக்கு ஆம்பூருக்கு வந்தார் என்று தெரியவில்லை.
  • பழனி ஷமீல் வீட்டிற்குச் சென்று சண்டை போடுகிறார். அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று விரட்டி விடுகின்றனர். இதனால், ஷமீலின் மீது சந்தேகம் இருப்பதாக போலீஸிடம் பழனி சென்று சொல்லியிருக்கலாம்.
  • 15-06-2015 அன்று போலீஸார் விசாரணைக்கு ஷமீலைக் கூட்டிச் செல்கின்றனர்.
  • ஜூல.4 அன்று சென்னையில் பவித்ரா, சரவணன்-புகழேந்தி முதலியோருடன் போலீஸில் சிக்குகிறார்.
  • 02-06-2015 முதல் 04-07-2015 வரை சென்னையில் பவித்ரா எப்படி இருந்தாள்?
  • ஆக, பவித்ரா-ஷமீல் இருவரையும் எல்லாவற்றையும் மீறி ஊக்குவித்தது யார்?
  • சந்தேகிக்கப்படுவது போல, இதில் “லவ்-ஜிஹாத்” போன்ற விவகாரம் உள்ளதா அல்லது வேறு விவகாரங்கள் உள்ளனவா? அவ்வுண்மைகளை மறைக்க இப்பிரச்சினை திசைத்திருப்பப்படுகிறதா?
  • பெண்ணிய வீராங்கனைகள் ஒரு பெண்ணின் பிரச்சினை மற்றும் பெண் போலீஸாரே பாலியல் தொல்லைகளில் உட்படுத்தப்பட்டார்கள் எனும் போது, ஏன் மௌனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள்?
  • தேசிய ஊடகங்களும் இவற்றை கண்டுகொள்ளாதது வேடிக்கையாக இருக்கிறது.
  • இதற்கு மதசாயம் பூசப்படுவதாக “ராஜ் டிவி” கூறுகிறது[5].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] http://www.maalaimalar.com/2015/08/06110912/ambur-violence-case-shameel-ah.html

[2] மாலைமலர், ஆம்பூர் கலவர வழக்கு: ஷமில் அகமதுவை தனி அறையில் விசாரிக்கவில்லைஇன்ஸ்பெக்டர் மார்ட்டின் தகவல், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 06, 11:09 AM IST.

[3] http://www.vkalathur.in/2015/06/7_28.html

[4] http://www.deccanchronicle.com/150704/nation-crime/article/cb-cid-yet-question-custody-killer-inspector

[5] https://www.youtube.com/watch?v=7RPBacw0F5Y

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (1)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (1)

ஆம்பூர் கலவரம் - குமுதம் ரிப்போர்டர் 10-11

ஆம்பூர் கலவரம் – குமுதம் ரிப்போர்டர் 10-11

குமுதம் ரிப்போர்டர் கொடுக்கும் விவரங்கள்[1]: ஷமீல் அகமது (26) ஈரோட்டைச் சேர்ந்த ஷாஜஹான் மற்றும் பரிதா பேகம் தம்பதியரின் மகன். ஷமீல் அகமதுக்கும், “இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின்”[2] ஆம்பூர் நகரத் தலைவர் கவுஸ் பாஷா மகள் முஸ்தரிக்கும் நவம்பர் 2014ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பே பவித்ராவுடன் (23) தொடர்பு இருந்திருக்கிறது, இதனால், ஷமீல் அதனை விடவில்லை. இவ்விசயம் தெரியவந்தவுடன் பிரச்சினையாகி இருக்கிறது. ஈரோட்டுக்கு இடம் பெயர்ந்தால், ஷமீல் மனம் மாறக்கூடும் என்று, அங்கு சென்றனர். அப்பொழுதுதான், பவித்ரா ஷமீலைத் தேடி 24-05-2015 அன்று ஈரோட்டுக்கு சென்றார். ஷமீல் தனியாக ஒரு வீடு பார்த்து, பவித்ராவை அங்கு தங்க வைத்திருக்கிறார். பழனிக்கு (29) ஷமீல் தான் பவித்ராவின் கள்ளக்காதலி என்பது தெரியாது. ஆனால், ஷமீல், பழனிக்கு போன் செய்து “பவித்ரா வீட்டுக்கு வந்துவிட்டாரா” என்று கேட்டபோது, “நீங்கள் யார்” என்று பழனி கேட்டார். அதற்கு ஷமீல், சென்னையில் பவித்ரா முகவரி தெரியாமல் நின்று கொண்டிருந்தபோது, தான் விசாரித்து ரெயிலில் ஏற்றிவிட்டதாகவும், பவித்ராதான், அவரது செல்போன் நெம்பரைக் கொடுத்ததாவும் கூறியுள்ளார். இந்த நெம்பர் மூலம் தான் போலீஸாற் ஷமீலைக் கண்டு பிடித்தனர். மேலும் போலீஸ் விசாரணையின் போது, ஷமீல் அருவருப்பான முறையில் பதில் கொடுத்ததாகத் தெரிகிறது. இவ்விவரங்களை “குமுதம் ரிப்போர்டர்” கொடுக்கிறது. “ஷமீல் அஹமதுவின் காதலி” என்றே இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைப்பிட்டு “காணவில்லை” என்று செய்தி வெளியிட்டது[3].  இம்முன்னுரையுடன் மற்ற செய்தி தொகுப்புகளைப் படிக்கும் போது, விசயங்கள் தெளிவாகின்றன.

ஆம்பூர் கலவரம் - குமுதம் ரிப்போர்டர் 12-13

ஆம்பூர் கலவரம் – குமுதம் ரிப்போர்டர் 12-13

தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கிடைத்தார்சென்னையில் பதுங்கியவரை கைது செய்தது போலீஸார்[4]: பவித்ரா செல்போனுக்கு செல்லும் எண்களை கண்காணித்த போலீஸார் சுரேஷின் நம்பரைக் கண்டு பிடித்தனர். அதிலிருந்து சரவணன் மற்றும் புகழேந்தியின் எண்களை கண்டு பிடித்தனர். சுரேஷை விசாரித்தபோது, அம்பத்தூரில் ஒரு பெண்கள் விடுதியில் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு, பவித்ராவை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், அவரின் மொபைல் போன் எண் தொடர்புகள் அடிப்படையில், விசாரணையில் இறங்கினர். அதில், சென்னையில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. 04-07-2015 இரவு, சென்னைக்கு வந்த போலீசார், அம்பத்துார் பகுதியில், தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த, பவித்ராவை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அம்பத்துாரில் உள்ள ஜவுளி கடை ஒன்றில், வேலை செய்து வருவதாகவும், இரு வாலிபர்கள் உதவி செய்ததாகவும் தெரிவித்தார். உடன், சென்னை கிண்டியில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த, இரு வாலிபர்களையும் பிடித்தனர். அவர்களில் ஒருவர், அரக்கோணம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன்; மற்றொருவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சுரேந்திரன்.

ஆம்பூர் கலவரம் - பவித்ரா சென்னையில்.1

ஆம்பூர் கலவரம் – பவித்ரா சென்னையில்.1

மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர் படுத்தப்பட்ட பவித்ரா: இதையடுத்து, 05-07-2015 மதியம், 12:30 மணிக்கு, அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு, பவித்ராவை கொண்டு வந்த போலீசார், அங்கு பிற்பகல், 3:00 மணி வரை, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வேலுார் மாவட்ட எஸ்.பி., செந்தில்குமாரியும் உடனிருந்தார். பின், மாலை, 5:00 மணிக்கு வேலுார் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி முன் ஆஜர்படுத்தினர். பவித்ராவை விசாரித்த மாஜிஸ்திரேட், அவரை மகளிர் காப்பத்தில் தங்கவைக்கும்படியும், இன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார். இதையடுத்து, வேலுார் அடுத்த அரியூர் கிராமத்திலுள்ள, தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்கள் விடுதியில், பவித்ரா தங்க வைக்கப்பட்டார்.  இதற்கிடையில், பவித்ராவுக்கு உதவிய சரவணன் மற்றும் சுரேந்திரனை, அரக்கோணம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் கலவரம் - பவித்ரா சென்னையில்.2

ஆம்பூர் கலவரம் – பவித்ரா சென்னையில்.2

பவித்ரா கடத்தப்பாட்டாள் என்றும் செய்தி[5]: பவித்ரா ஏற்கனவே வேலை பார்த்த நகை கடையில் விசாரணை நடத்தினர். அவர் பெங்களூரில் பதுங்கியுள்ளாரா என்று விசாரித்தனர். அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் பவித்ராவின் செல்போன் எண் மூலம் விசாரணையில் இறங்கினர். அப்போது சென்னை கோயம்பேடு பகுதியில் பவித்ரா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. நேற்று இரவு தனிப்படை போலீசார் சென்னை வந்தனர். கோயம்பேடு பஸ் நிலையம் அருகே பவித்ராவை தனிப்படை போலீசார் மீட்டனர். அவர் நேற்று இரவு வேலூர் கொண்டு வரப்பட்டார். ராணிப்பேட்டை அருகே உள்ள மேல்பாடி போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ராவை மீட்டபோது அவருடன் 2 வாலிபர்கள் இருந்தனர். 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று சென்னையில் மடக்கி பிடித்தனர். அவர்கள் அரக்கோணத்தை சேர்ந்த சரவணன், திண்டுக்கல்லை சேர்ந்த புகழேந்தி என்று தெரிந்தது. இவர்கள் இருவரும் கிண்டியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களை அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பவித்ரா கடத்தல் பின்னணியில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது[6]. அவர்களிடம் இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இன்று பவித்ராவை வேலூர் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அப்போது பவித்ரா கடத்தல் சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளிவரும். பவித்ராவுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். அவள் அம்மா எங்கே எனக் கேட்டு அழுகிறாள். விரைவில் பவித்ராவை ஒப்படையுங்கள் என போலீசாரிடம் பழனி கேட்டுக் கொண்டுள்ளார்.

டெக்கான் குரோனிகள் - அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

டெக்கான் குரோனிகள் – அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

போலீஸ் தப்பாக சித்தரிக்கிறது என்று குற்றஞ்சாட்டிய பவித்ரா: அரியூர் பெண்கள் விடுதியில் உள்ள பவித்ரா, நிருபர்களிடம் கூறுகையில், “எனக்கு ஜமில் அகமதுவை தெரியாது; பார்த்தது கூட இல்லை. அவரிடம், எந்த கள்ளத் தொடர்பும் இருந்ததில்லை. வேலை தேடி சென்னைக்கு சென்றபோது, மகளிர் விடுதியில் தங்கியிருந்தேன். போலீசார், என்னை தப்பான பெண்ணாக சித்தரிக்கின்றனர்,” என்றார். ஆனால், பிறகு, ஒப்புக்கொண்டாள்.தன்னைவிட வயதில் சிறிய ஷமீலுடன் கள்ள உறவை வைத்துக் கொண்டுள்ள இப்பெண்ணின் நிலை விசித்திரமாக உள்ளது. ஷமீலும், திருமணர்த்திற்குப் பிறாகும், அத்தகைய உறவைத் தொடர்ந்தது பல கேள்விகளை எழுப்புகிறது. ஷமிலைப் பொறுத்த வரையில், ஒருவேளை அவரது மதநம்பிக்கைகள் அத்தகைய பலதார உறவுகளை தடுக்காமல் இருக்கலாம், ஆனால், ஒரு பெண்-குழந்தைக்குத் தாயாக உள்ள பவித்ரா எப்படி, அத்தகைய உறவில் சிக்கினார் என்பது மர்மமாக இருக்கிறது. ஷமீல்-முஸ்தரிக்கும் குழந்தை இருக்கிறது என்று நீதிமன்ற விவாதம் மூலம் தெரிய வருகின்றது. ஆக இது தகாத உறவு தான், தெரிந்தே, இருவரும் வைத்துள்ளனர்.

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஜமீலுடன் கள்ளத்தொடர்பு உண்டு [7]: ஆம்பூர் டி.எஸ்.பி., கணேசன் கூறியதாவது: “இறந்து போன ஜமில் அகமது மற்றும் பவித்ரா இடையே ஏற்பட்ட கள்ளத் தொடர்பால், இருவரும் ஆம்பூரில் இருந்து ஈரோடு சென்று, அங்குள்ள நகை மற்றும் ஜவுளி கடையில் பணியாற்றியதோடு, தனிக்குடித்தனமும் நடத்தி உள்ளனர். அப்போது, பவித்ராவின் கணவர் பழனி, தன் மனைவியை ஜமில் அகமது கடத்திச் சென்று விட்டதாக, பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். இதை அறிந்த ஜமில் அகமது, ஈரோட்டில் உள்ள வாடகை வீட்டை காலி செய்து விட்டு, பவித்ராவிடம், 300 ரூபாய் கொடுத்து, அவரை ரயில் ஏற்றி அனுப்பி உள்ளார். பவித்ரா சொந்த ஊருக்கு வராமல், வேலை தேடி சென்னைக்கு சென்று விட்டார். இது தொடர்பான முழு விவரத்தையும், போலீசாரிடம், பவித்ரா வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இருந்தும், ‘ஜமில் அகமதுவை தெரியாது; பார்த்தது கூட இல்லை. எந்த உறவும் இல்லைஎன, நிருபர்களிடம், அவர் பொய் சொல்கிறார். பவித்ரா கொடுத்த வாக்குமூலத்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று சமர்ப்பிப்போம்”, இவ்வாறு அவர் கூறினார்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா மதம் மாற்றப்பட்டதாகதிடுக்தகவல் தொடர்பில் இருந்த 11 பேரிடம் விசாரணை[8]: வேலூர் ஆம்பூர் கலவர விவகாரத்தில் மாயமான பவித்ராவை போலீசார் மீட்டுள்ளநிலையில் அவர் குறிப்பிட்ட மதத்திற்கு மாற்றப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது………………பவித்ராவின் பழைய காதலர்கள் என கூறப்படும் அரக்கோணம் சரவணன் 26, சென்னை குன்றத்தூர் மனோகரன் 34, காட்பாடி சரவணபெருமாள் 40, ஈரோடு சசிதரன் 34, ஆரணி செங்கமலம் 35 உள்பட 11பேரிடம் விசாரணை செய்தனர். இதுகுறித்து, தனிப்படை போலீஸார் கூறியதாவது[9]: “ஆம்பூர் கலவரத்தின் முக்கிய காரணமான பவித்ரா குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மாற்றப்பட்டார்[10]. அந்த மதத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் பல கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் எதுவும் தெரியாது என பலரிடம் தெரிவித்து வருகின்றார். பவித்ராவின் பழைய காதலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றோம். அவரது அழகுக்கு மயங்கி அவர் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளனர். பழைய காதலர்களிடம் விசாரித்தால் ஷமில் அகமதுவின் தொடர்பு எவ்வளவு நாள் என்பது தெரிந்துவிடும்”. மேலும், பவித்ரா கணவர் பழனி கூறியதாவது: “என் அக்காள் மகள் பவித்ராவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். அவரது சித்தி மகள் வேலைக்கு செல்வதை பார்த்து, பவித்ராவும் தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு, ஜமில் அகமதுவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும், என் வீட்டில் தனிமையில் இருந்தனர். இதையறிந்த நான், பவித்ராவை கண்டித்தேன். இதனால், ஜமில்அகமதுவுடன் சென்று விட்டார். பவித்ராவை பிரிந்து வாடும் எனக்கும், குழந்தைக்கும் நிம்மதி இல்லை”. இவ்வாறு, அவர் கூறினார்[11].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] குமுதம் ரிப்போர்டர், 109-07-2015, பக்கங்கள்.10-13.

[2] இதனால் தான், இவ்வமைப்பு முன்னின்று ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது, பிறகு அது கலவரமாகி விட்டது.

[3] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Shameel-Ahmeds-Lover-Untraceable/2015/06/29/article2892446.ece

[4] தினமலர், தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கிடைத்தார்சென்னையில் பதுங்கியவரை கைது செய்தது போலீஸார், பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015,23:42 IST

[5] மாலைமலர், ஆம்பூர் கலவர பின்னணி: கடத்தப்பட்ட பவித்ரா சென்னையில் மீட்பு, மாற்றம் செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 05, 2:42 PM IST; பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 05, 11:52 AM IST.

[6] http://www.maalaimalar.com/2015/07/05115212/Ambur-riot-Background-In-Chenn.html

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1289719

[8] தினமலர், பவித்ரா மதம் மாற்றப்பட்டதாகதிடுக்தகவல் தொடர்பில் இருந்த 11 பேரிடம் விசாரணை, ஜூலை.7, 2015: 05:37.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1290846

[10] இப்பிரச்சினைப் பற்றி யாரும் அலசக் காணோம். விவாக ரத்து கேட்கிறார், ஒருவேலை கொடுத்து விட்டார் என்ன செய்வார் என்பது பற்றியும் ஒன்றும் தகவல் இல்லை. பொலீஸார் கூறினர் என்று தினமலர் பொய்யான செய்தியை வெளியிட்டிருந்தால், அது இப்பொழுதைய நிலையில் இன்னொரு பெரிய பிரச்சினையாக இருக்கும்.

[11] முஸ்லிம் இணைதளங்கள் இதை சாடியுள்ளன. ஆனால், அதை மறுக்கவோ, அல்லது கூடா தொடர்புகளைப் பற்றி கண்டிக்கவோ, வருத்தப்படவோ இல்லை.

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (2)

ஜூலை 2, 2015

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (2)

Ambur riot - police  attacked.

Ambur riot – police attacked.

அஸ்லம் பாஷா என்ற உள்ளூர் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு ஜவாஹிருல்லா மறுப்பு: கலவரத்தைத் தூண்டிவிட்டதில் அஸ்லம் பாஷா என்ற உள்ளூர் எம்.எல்.ஏவுக்கு தொடர்புள்ளதாக, போலீஸ் விசாரிக்க ஆரம்பித்துள்ளது[1]. அஸ்லம் பாஷா ஒரு முஸ்லிம் இளைஞனைத் தூண்டிவிட்டதாக சொல்லப்பட்டுகிறது[2]. ஆனால், ஜவாஹிருல்லா உள்ளூர்வாசிகள் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்கின்றனர். கலவரத்தின் போது, ஆம்பூர் எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா, அமைதி ஏற்படுத்த முயற்சி செய்தார். அவரை கலவர வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மீது அவதுாறு வழக்கு தொடுப்போம். கலவரத்திற்கு முன், போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தி இருக்க வேண்டும். கலவரத்தில், பெண் போலீசார் உட்பட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார். எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா, மாவட்ட செயலர் சுகூர் உட்பட பலர் உடனிருந்தனர்[3].

Ambur riot - police  attacked.2

Ambur riot – police attacked.2

உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன் – பெண் பொலீஸ் கதறல்! ஆம்பூரில் கலவரத்தின்போது, கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பெண் போலீஸ் ஒருவர், 2 கி.மீ., துாரம் ஓடி, உயிர் பிழைத்துள்ள தகவல், வெளியாகி உள்ளது[4]. வேலுார் மாவட்டம், ஆம்பூரில், வாலிபர் ஒருவர், மர்ம மரணம் அடைந்ததையொட்டி, கடந்த மாதம், 27ம் தேதி இரவு, பெரிய அளவிற்கு கலவரம் வெடித்தது. இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். ஆம்பூர் ஆயுதப்படை போலீஸ் விஜயகுமார், 34, கால், தொடை, வயிறு, கழுத்து, தொண்டை, கை மற்றும் தோள்பட்டையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். கலவரம் குறித்து, விஜயகுமார் கூறியதாவது[5]: “சம்பவம் நடந்த, 27ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, ஆம்பூர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, 300க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள், என்னை சூழ்ந்து, கத்தியால்சரமாரியாக குத்தினர்சரமாரியாக தாக்கினர் – அப்போது, அங்கு வந்த, இரண்டு பெண் போலீசாரையும் அடித்து உதைத்தனர். அவர்கள், உயிர் பிழைக்க தப்பி ஓடிய போதும், கலவர கும்பல் அவர்களை துரத்திச் சென்று தாக்கியது. இதை பார்த்த நான், படுகாயத்துடன் இருந்தாலும், அந்த பெண் போலீசாரை காப்பாற்ற போராடினேன். இதனால், கலவர கும்பல், என்னை கற்களாலும், தடியாலும் தாக்கினர். அப்போது, ஒரு கும்பல் வந்து, ‘இது எங்கள் கோட்டை; நீங்கள் எப்படி, இங்கு வரலாம்எனக்கூறி தாக்கினர். அதன்பின், பாதுகாப்புக்கு வந்த, போலீசார் எங்களை மீட்டனர்”, இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் காயம்

போலீசார் காயம்

காரை மடக்கிகாஞ்சிபுரம் ஆயுதப்படையைச் சேர்ந்த மல்லிகா கூறியதாவது[6]: ஆம்பூரில் கலவரம் நடக்கும் போது, கற்களால் தாக்கியவர்களை, சக போலீசாருடன் சேர்ந்து விரட்டினேன். இதை பார்த்த ஒரு கும்பல், என்னை தடியால் தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிக்க, 2 கி.மீ., துாரம் ஓடி, வழியில் வந்த காரை மடக்கி, அதில் ஏறி உயிர் தப்பினேன். கண்ணில் பட்ட போலீசாரை எல்லாம், கலவர கும்பல் சரமாரியாக தாக்கினர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். திருவண்ணாமலை ஆயுதப்படையைச் சேர்ந்த ரமேஷ் கூறியதாவது: என் சர்வீசில், நிறைய கலவரங்களை பார்த்திருக்கிறேன். கலவரம் செய்பவர்களை தடியால் அடித்தால், பயந்து ஓடுவர். அதைப் போலத்தான், இந்த கலவரத்தை நினைத்தேன். ஆனால், கலவரம் செய்தவர்கள், பயங்கர ஆயுதங்களுடன் எங்களை விரட்டினர். போலீசார் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், எங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஓட ஓட விரட்டி… இதனால், கலவர கும்பல், எங்களை ஓட ஓட விரட்டி தாக்கினர்; நாங்களும் அடி வாங்கிக் கொண்டு, திரும்ப ஓடி வந்து விட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கலவரத்தை அடக்குவதற்காக, வேலுார், தி.மலை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், ஆம்பூர் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படி, ஆம்பூர் சென்றவர்களில், கடுமையான தாக்குதலுக்கு உள்ளான, 50க்கும் மேற்பட்ட போலீசாரில், இவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_012

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_012

பெண் போலீஸ் என்று கூட பார்க்காமல், என் சட்டையை கழற்ற வந்தனர்; சிலரை மானபங்கம் செய்ய முயற்சித்தனர்: ஆம்பூரில் கலவரம் நடந்த பகுதிகளை, மனித நேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான, ஜவாஹிருல்லா, நேற்று பார்வையிட்டார். கலவர கும்பல் தாக்கியதில், படுகாயம் அடைந்து, வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, சிகிச்சை பெற்று வரும் பெண் போலீசார், கோபமாக, ஜவாஹிருல்லாவைப் பார்த்து, பெண் போலீஸ் என்று கூட பார்க்காமல், என் சட்டையை கழற்ற வந்தனர்; சிலரை மானபங்கம் செய்ய முயற்சித்தனர். கத்தியால் வெட்டினர்; தடியால் அடித்தனர்; கற்களால் தாக்கினர். ஒரு பெண் போலீசின் சட்டையை கிழித்துள்ளனர்; இதெல்லாம் நியாயமா என, ஆவேசமாக கேட்டனர். இத்தகைய செய்தி வந்த பிறகுக்கூட பெண்ணிய வீராங்கனைகள் அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சாதாரணமான விசயங்களுக்கு பிருந்தா காரத் இத்யாதிகள் தங்களது கருத்துகளை அள்ளி வீசுவர், ஆனால் இப்பொழுது……………..அதே மாதிரி அந்த குஷ்புவையும் காணவில்லை.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_015

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_015

ஆம்பூர் கலவரத்தில் தவறு நடந்து விட்டது‘ – ஜவாஹிருல்லா மன்னிப்பு: ஆம்பூர் கலவரத்தில் படுகாயம் அடைந்து, சிகிச்சை பெறும் போலீசாரிடம், மனித நேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா மன்னிப்பு கேட்டார். தவறு நடந்துவிட்டது இதை கேட்ட, ஜவாஹிருல்லா, ‘தவறு நடந்து விட்டது; நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என, சிகிச்சை பெறும் ஒவ்வொரு போலீசாரிடமும் சென்று, மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பின், அவர், நிருபர்களிடம்கூறியதாவது: ஜமில் அகமது மரணத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் பிரேம்ராஜ், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். இதில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆம்பூரில் நடந்த கலவரத்தை, சில விஷமிகள் முன்னின்று நடத்தியுள்ளனர். கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர். அவப்பெயரை ஏற்படுத்த சதி…. தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை, மக்களிடம் நல்லிணக்கம் ஏற்படுவதையே விரும்புகிறது. அரசிடம், எங்கள் கட்சி மீது அவப்பெயரை ஏற்படுத்தி தர, சிலர் முயற்சிக்கின்றனர். கலவரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளவர்களில் அப்பாவிகளும் உள்ளனர்; அவர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும்.

போலீசார் தாக்கப்படல் - விகடன் போட்டோ

போலீசார் தாக்கப்படல் – விகடன் போட்டோ

முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை? முஸ்லிம்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்த எந்த முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியதுதானே? இல்லை, இவ்வாறு சொல்லி தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்றனரா? கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்றால், கொலைவெறி பிடித்தவர்கள் இருந்தார்களே, அவர்களை பைத்தியங்கள் என்று சொல்லி தப்பிக்க தூபம் போடுகிறாரா? கலவரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளவர்களில் அப்பாவிகளும் உள்ளனர் என்று சேர்த்து சொல்லியிருப்பதையும் கவனிக்க வேண்டும். இத்தனை நாசத்தை உண்டாக்கி விட்டு, போலீஸ் நிலைய, ஜீப்புகள் மற்றும் போலீஸ்காரர்களையும் தாக்கி விட்டு, கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்றால் என்ன அர்த்தம்? முஸ்லிம்களுக்கு அத்தகைய நிலைமை எதனால், ஏன் ஏற்படும் என்பதனையும் ஒன்று அவர்களே விளக்கவேண்டும் அல்லது மற்றவர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

ஆம்பூர் கலவரம் - 30_06_2015_011_003

ஆம்பூர் கலவரம் – 30_06_2015_011_003

போலீஸ் ஜீப் எரித்தவர்கள் கைது: ஆம்பூரில் நடந்தது கலவரம் என்பதை விட, போர்க்களம் என்றே சொல்ல வேண்டும். கலவரக்காரர்கள், கத்தி, கற்கள், தடியால் தாக்கினர். அவர்களிடம் துப்பாக்கி இருந்திருந்தால், ஒரு போலீஸ்காரர் கூட, உயிருடன் வீடு திரும்பி இருக்க முடியாது. இருதயராஜ், போலீஸ்காரர், காஞ்சிபுரம். 113 பேர் கைது ஆம்பூர் கலவரம் தொடர்பாக, இதுவரை, 113 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். கலவரம் நடந்தபோது, ஆம்பூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகுந்து, அங்கிருந்த ஜீப், ஆம்பூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப் ஆகியவற்றை, கலவர கும்பல், தீ வைத்து கொளுத்தியது. இது தொடர்பாக, ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்பூர் கே.எம்.நகரைச் சேர்ந்த கயம், 20, அக்பர், 23, சபீர், 26, சலீம், 22, ஆகிய, நான்கு பேரை, நேற்று கைது செய்தனர்.

பவித்ராவை தேடுகிறது தனிப்படை! வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த,குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் பவித்ரா, 23, காணாமல் போனது தொடர்பாக, அவரது கணவர் பழனி கொடுத்த புகாரின்படி, பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில் சம்பந்தப்பட்ட பவித்ரா, எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. இவரை தேடும் பணியில், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், கோவிந்த சாமி தலைமையில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், பவித்ராவின் புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் பஸ் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில், பவித்ரா புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களை ஒட்டவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தனிப்படை போலீசார் தெரிவித்தனர். ஒரு பெண் காணவில்லை என்பதைப்பற்றியும் பெண்ணிய வீராங்கனைகள் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. நீதியை கலவரத்தால், வன்முறையால் அடைய முடியும் என்பது விசித்திரமான தத்துவம் தான். முசபர்நகர் கலவரமும் இதே பாணியில் ஆரம்பித்தது என்பதனை நினைவு கொள்ள வேண்டும். இங்கு வேண்டுமானால், இன்னொரு கோயம்புத்தூர் போல ஆகக்கூடாது என்று அறிவுஜீவிகள் சொல்லலாம், ஆனால், இருக்கும் முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைக்கும் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் முதலிய தோல் தொழிற்சலைகளில் இந்து பெண்கள் மதம் மாற்றப்படுவது நடந்து வருகின்றது. எனவே பிரச்சினை பெரிதாகாமல் இருக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

01-07-2015

[1] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Police-Probe-Role-of-MLA-in-Ambur-Riot/2015/06/29/article2891992.ece

[2] New Indian express, Police Probe Role of MLA in Ambur Riot, By J Shanmugha Sundaram, Published: 29th June 2015 06:10 AM;  Last Updated: 29th June 2015 06:10 AM.

[3] தினமலர், உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன்!, நமது நிருபர் குழு 01-07-2015.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1286934

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Recall-Horror-During-Ambur-Clash/2015/07/02/article2897905.ece

[6] தினமலர், உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன்!, நமது நிருபர் குழு 01-07-2015.

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (1)

ஜூலை 2, 2015

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (1)

Ambur riot - body brought to Ambur

Ambur riot – body brought to Ambur

ஷமில் அகமது போலீஸாரால் விசாரிக்கப்பட்டது, ஜூன்.26 அன்று இறந்தது: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிபாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா. பள்ளிகொண்டாவில் தோல் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த மே மாதம் 24–ந் தேதி திடீரென மாயமானார். இது தொடர்பாக பழனி பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். அதில் ஆம்பூரை சேர்ந்த ஷாமில் அகமது மீது சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். ஈரோடில் ஒரு நகைக்கடையில் ஷமில் அகமது சூபர்வைசராக வேலை செய்து வந்தார். அதே நகைக்கடையில் பவித்ராவும் வேலை பார்த்ததால், அவர்களது நெருக்கம் பற்றிய விவரங்கள், ஒருவேளை செல்போன் விவரங்களிலிருந்தும் அறியலாம் என்று சொல்லப்படுகிறது[1]. இது தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஷமில் அகமது (வயது 26) என்பவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் கடந்த 15–ந் தேதி விசாரணைக்கு அழைத்து சென்றார். போலீஸ் நிலையத்தில் ஷமில் அகமதுவை, இன்ஸ்பெக்டர் மற்றும் 6 போலீசார் அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது[2]. படுகாயம் அடைந்த ஷமில் அகமதுவை சிகிச்சைக்காக ஜூன்.19 அன்று ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ஜூன்.23 அன்று வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜூன் 26 அன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு இறந்தார். “வெளிப்படையாக உடலில் எந்தவித காயங்களும் தெரியவில்லை. ஆனால், உள்ளுக்குள் பலவித பாதிப்புகள் ஏற்பட்டன. மூளையிலிருந்து கைகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டதால், மாரடைப்பு ஏற்பட்டது”, என்றுமருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்[3].

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

ஜூன் 26 மற்றும் 27 பதட்டமான நிலவரம்: இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று முன்தினம் இரவு 500–க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஷமில் அகமதுவை தாக்கிய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்[4]. இந்த நிலையில் ஷமில்அகமதுவின் உறவினர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சபாரத்தினம், போலீஸ்காரர்கள் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 பேர் மீது குற்ற நடைமுறை சட்டப்பிரிவு 176 (1) பிரிவின்கீழ் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார். இதனிடையே ஷமில்அகமது இறந்த சம்பவத்தையடுத்து ஆம்பூரில் நேற்று 2–வது நாளாக பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனால் வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி ஆகியோர் ஆம்பூரில் முகாமிட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேசன், விஜயகுமார் உள்ளிட்ட 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிரடி படைவீரர்களும் குவிக்கப்பட்டனர்.

போலீஸ் நிலையம் முன்பு முஸ்லிம்கள் குவிதல்

போலீஸ் நிலையம் முன்பு முஸ்லிம்கள் குவிதல்

ஜூன் 27 கலவரம் துவக்கம்: இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை பெங்களூர் மெயின் ரோட்டில் 500–க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக தெரிவித்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். நேரம் செல்லச்செல்ல பதற்றம் அதிகரித்தது, கூட்டமும் அதிகரித்தது. 1000–க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அவர்கள் ஷமில் அகமது சாவுக்கு காரணமான ‘‘போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தது போதாது. அவர்களை உடனடியாக கைது செய்து சஸ்பெண்டு செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், லாரி, கார்கள் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்கினர். இதில் அந்த வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. பஸ்சில் இருந்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அதன்பின்னர் லாரிகளை நிறுத்தி அதில் இருந்த டிரைவர்களை தாக்கினர். போராட்டம் கலவரமாக மாறியதால் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைக்க உத்தரவிடப்பட்டது.

Ambur riot - lorry attacked

Ambur riot – lorry attacked

ஜூன் 27  போலீசார் கலவரக்காரர்களை தாக்கியது, ஆனால், தாக்குப்பிடிக்காமல் போலீசார் ஓடியது: இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது கலைந்து சென்றவர்கள் மீண்டும் கற்களை எடுத்து போலீசாரை நோக்கி சரமாரியாக வீசினர். ஒரு கல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரியின் தலையில் விழுந்தது. இதில் அவர் காயம் அடைந்தார். உடனே போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச்சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் கலவரக்காரர்கள் தொடர்ந்து போலீசாரை குறிவைத்து கற்களால் வீசி தாக்கினர். கட்டடங்களின் மாடியில் நின்று கற்களை வீசினர். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டிச்சென்றனர். அவர்கள் தெருக்களுக்குள் ஓடினர். போலீசார் அவர்களை விடாமல் துரத்திச்சென்று விரட்டி அடித்தனர். அப்போது போலீசாரை சிலர் கத்தியாலும் பிளேடாலும் வெட்டினர். இதில் மேலும் பல போலீசார் காயம் அடைந்தனர். 15 பெண் போலீஸ் உள்பட 54 போலீசார் படுகாயமடைந்தனர். அவர் கள் அனைவரும் வேலூர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். ஆம்பூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டாலும் அவர்களை விட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் போராட்டக்காரர்களை ஒடுக்கி கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Ambur riot - vehicle burnt

Ambur riot – vehicle burnt

ஜூன் 27 – கலவரக்காரர்கள் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டது: இந்த சம்பவங்களை தொடர்ந்து வேலூரிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல் சேலம், ஓசூர், பெங்களூரு, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து வேலூர் வழியாக வரும் பஸ்களும் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் நடுவழியில் தவித்தனர். ஆம்பூர் பஸ் நிலையத்தில் இருந்து ஓ.ஏ.ஆர். தியேட்டர் வரை சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு ரோட்டில் வந்த வாகனங்கள் அனைத்தும் கலவரக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. 30–க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் நெடுஞ்சாலை பகுதி போர்க்களமாக மாறியது. குறைந்த அளவு போலீசாரே இருந்ததால் அவர்கள் ஒரு கட்டத்தில் பின்வாங்க நேர்ந்தது. அப்போது ஆம்பூர் நேதாஜி சாலையில் புகுந்த வன்முறையாளர்கள் ஆம்பூர் தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுலகம் ஆகியவற்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், வன்முறையாளர்கள் போலீஸ் நிலையத்துக்குள் செல்லாதவாறு தாலுகா அலுவலகம் அருகில் மணல் கடத்தல் மாட்டு வண்டிகளை குறுக்கே போட்டு போலீசார் தடை ஏற்படுத்தினர். அதில் ஒரு மாட்டு வண்டியை தீயிட்டு எரித்தனர். இதனால் அங்கும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் தாலுகா போலீஸ் நிலைய பகுதிக்குள் நுழைந்தது. அப்போது போலீஸ் நிலையம் முன்பு விபத்தில் சிக்கிய மினி பஸ் ஒன்றை வழக்கு தொடர்பாக போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர். அந்த மினி பஸ்சுக்கும் வன்முறைக் கும்பல் தீவைத்தனர். இதில் அந்த வேன் தீயில் எரிந்து நாசமானது.

அலுவலகம் தீ வைப்பு

அலுவலகம் தீ வைப்பு

ஜூன் 27 இரவு – ஜூன் 28 காலை – போலீஸ் ஜீப்புகளுகள், கடைகள் எரியூட்டல்: இதற்கிடையே ஓ.ஏ.ஆர். தியேட்டர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 போலீஸ் ஜீப்களுக்கு வன்முறையாளர்கள் தீவைத்தனர். இதில் அந்த போலீஸ் ஜீப்கள் கொழுந்து விட்டு எரிந்தன. அது முற்றிலும் எரிந்து நாசமானது. அதுதவிர ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 மோட்டார் சைக்கிள்களையும் வன்முறை கும்பல் தீவைத்து கொளுத்தியது. அத்துடன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் அதனை சுற்றி இருந்த பெட்டிக்கடைகளுக்கும் வன்முறைக்கும்பல் தீவைத்தது. இதனால் அங்கிருந்த 10–க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்தன. ‘இந்த கலவரத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். எனினும் நள்ளிரவை தாண்டி ஆம்பூரில் கலவரம் நீடித்தது. இதனையடுத்து ஐ.ஜி.மஞ்சுநாதா, டி.ஐ.ஜி.க்கள் தமிழ்சந்திரன் (வேலூர்), சத்தியமூர்த்தி (காஞ்சீபுரம்) தலைமையில் 6 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது. அவர்கள் கலவரக்காரர்களை அடித்து விரட்டினர். நள்ளிரவு 1 மணிக்கு பின் கலவரம் கட்டுக்குள் வந்தது. இரவு 8 மணிக்கு தொடங்கிய கலவரம் 1 மணிவரை நீடித்ததால் 5 மணி நேரம் ஆம்பூர் போர்களமாக மாறியது. கலவரப்பகுதியில் பல இடங்களில் கற்களும், வாகனங்களில் உடைக்கப்பட்ட கண்ணாடிகளும் சிதறிக்கிடந்தன. போலீசார் விரட்டியதால் தப்பி ஓடியவர்கள் காலணிகளையும் விட்டுச்சென்றதால் எங்கும் காலணிகளாக காட்சி அளித்தது.

ஆம்பூர் கலவரம் - 29_06_2015_004_011

ஆம்பூர் கலவரம் – 29_06_2015_004_011

ஜூன்.28 போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட், ஜமில் அகமதுவின் ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம்: வாகனங்கள் உடைப்பு, தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூன்.28 அன்று காலை 200 பேரை கைது செய்து செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவங்களால் ஆம்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீசார் தொடர்ந்து முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்பூரில் நடந்த கலவரம் தொடர்பான விவகாரத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்[5]. போலீஸ் விசாரணைக்கு சென்ற, ஆம்பூரைச் சேர்ந்த ஜமில் அகமது, மர்மமாக இறந்ததால், ஆம்பூரில் கலவரம் வெடித்தது. கலவரத்திற்கு காரணமான, இதற்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆம்பூரில் நேற்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது, கல்வீசி தாக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சேதமடைந்தன. போலீசார் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 101 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6]. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[7]. 200க்கும் மேற்பட்டோரை, ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, ஜமில் அகமதுவின் ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம், வாணியம்பாடி அடுத்த உம்மராபாத்தில், மதியம், 2 மணிக்கு நடந்தது. இதற்கிடையே, “தன் மனைவி பவித்திராவை கண்டுபிடித்து தர வேண்டும்’ என, ஆம்பூர் அடுத்த, துத்திப்பாளையத்தைச் சேர்ந்த பழனி, கலவரத்தை பார்வையிட ஆம்பூர் வந்த ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தார். கலவர விவகாரத்தில், பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜை, வேலூர் சரக டி.ஜி.பி., அசோக்குமார், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாக, வேலூர் மாவட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர்[8].

வேதபிரகாஷ்

01-07-2015

[1] The police identified the deceased as Shameel Basha, a resident of Ambur, who was working as a supervisor in a jewellery shop in Erode.One of his female colleagues, Pavithra, a married woman and resident of Pallikonda went missing in the second week of June after which the police picked up the victim for questioning.“Both were working together at Erode and police believed that Shameel knew about her as they thought both were very close after going through Pavithra’s mobile records,” sources said.

http://www.deccanchronicle.com/150628/nation-current-affairs/article/youth-dies-after-police-detention

[2]  http://www.maalaimalar.com/2015/06/28120019/Youth-kills-in-police-custody.html

[3] Basha was taken to the Ambur GH and admitted for treatment at 3 pm on June 19. He was shifted to the Government Vellore Medical College Hospital, Adukkamparai on June 23. He was moved to the RGGGH on June 26 and around 5.40 pm the same day, he passed away, Shah Jahan claimed. Doctors at the RGGGH said, “Though there were no visible injuries, he suffered polytrauma (multiple traumatic injuries).” The brachial plexus, a nerve which is under the shoulder joint and carries signals from the brain to the muscles that move the arms, was injured. He suffered ‘cardiac arrest’ and died, the doctors said.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Kept-Youth-in-illegal-Custody-for-4-Days/2015/06/28/article2890411.ece

[4]  மாலைமலர், போலீஸ் காவலில் வாலிபர் சாவுஆம்பூரில் கலவரம்: பஸ் எரிப்புசூப்பிரண்டு உள்பட 54 போலீசார் காயம், பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28, 12:00 PM IST

[5]  தினமலர், ஆம்பூர் கலவரம் விவகாரம் :இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட், 28-06-2015.22.33.

[6]  தினமலர், ஆம்பூர் வன்முறை குறித்து 101 பேர் மீது வழக்குப்பதிவு,28-06-2015.19.12

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1284833

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1284988

மெகந்தீ – இதுவதந்தீ ; பெண்கள்அச்சம் ; ரம்ஜான்நாளில்பொய்தகவல்பரபரப்பு!

ஓகஸ்ட் 20, 2012

மெகந்தீஇதுவதந்தீ ; பெண்கள்அச்சம் ; ரம்ஜான் நாளில் பொய் தகவல் பரப்பு, பரபரப்பு!

 மெஹந்தி வதந்தி பரப்புதல்: தினமலரில் இப்படி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரம்ஜான் நாள் கொண்டாட தயராகி கொண்டிருந்த நேரத்தில் பெண்கள் மெகந்தி வைத்ததால் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக ஏற்பட்ட வதந்தியால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது[1].  எஸ்.எம்.எஸ் மூலம் இத்தகவல் வந்ததாகக் கூறுகின்றனர். இந்த நிலையில் வேலூர் மற்றும் சென்னையில் மருதாணி வைத்துக் கொண்ட ஏராளமான பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சில குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் தகவல் பரவியது[2].
செஞ்சியில் பெண்களிடம் கலவரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தக்காசுரத்தூர் பகுதியிலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்த கடைகளில் விற்கப்படும் மெகந்தியை (கோன்) வாங்கி அலங்காரம் செய்தனர். இதை பயன்படுத்திய சிலருக்கு கைகளில் அலர்ஜி, மயக்கம் ஏற்படுவதாக இரவில் தகவல் பரவியது[3]. இதையடுத்து நள்ளிரவு இரவு 2 மணி அளவில் சொரத்தூர் மற்றும் அப்பம்பட்டை சேர்ந்த யாஸ்மீன் (வயது 9) ஷமீம் (வயது 15) தில்ஷாத் (வயது 25) ரஜீமா (40) அஷ்ரத் (12) ஆகியோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர். இதில் அஷ்ரத்துக்கு மயக்கம், தலைவலி இருந்ததால் செஞ்சியில் இருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். இத்தகவல் செஞ்சி பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மொபைல் போன் மூலம் வேகமாக பரவியது[4]. இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணிவரை 123 பேர் மெகந்தி பாதிப்பு ஏற்பட்டதாக சிகிச்சைக்கு வந்தனர். இதனால் செஞ்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள அப்பம்பட்டு பகுதிக்கும் பரவியது. அந்த பகுதியில் மருதாணியிட்டுக் கொண்டவர்களும் பயந்து செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு டாக்டர்கள் ஊசிபோட்டு அனுப்பி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் பரப்பட்டது: இந்த தகவல் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல மாட்டங்களில் வதந்தி பரவியது[5]. சென்னையில் பல இடங்களில் இத்தகவல் காட்டுத்தீ போல் பரவியதால், மெகந்தி வைத்தவர்கள் பீதி அடைந்தனர். உடனே, கைகளை கழுவி சுத்தப்படுத்தினர். மேலும், டாக்டர்களை பார்த்து சிகிச்சை பெற்றனர். சென்னையில் புளியந்தோப்பு, பெரம்பூர், ஓட்டேரி உள்பட பல இடங்களில் பெரும் பீதி ஏற்பட்டது. ராயப்பேட்டையில் முற்றுகை போராட்டமும் நடந்தது[6]. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில்; மெகந்தி மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக அறிகுறி யாருக்கும் இல்லை. சிலருக்கு உடல்களில் அரிப்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் மெகந்தி வைத்த இடத்தில் எவ்வித கோளாறும் இல்லை. என்றார். இது குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

வேலூரில் ஆரம்பித்த வதந்தி, கலாட்டா: முதன் முதலாக வேலூரில் இந்த அலர்ஜி ஏற்பட்டது . இதன் சுற்றுப்பகுதியான வாணியம்பாடி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பரவியது. வேலூர் ஆஸ்பத்திரிக்கு 45 பேர் சிகிச்சைக்காக வந்தனர். செஞ்சியில் மட்டும் 140 பேர் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வந்னைர். அச்சத்தின் காரணமாக இந்த தகவல் மொபைல் மூலம் பலரும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என பகிர்ந்துள்ளனர். மெகந்தி வைத்தவர்கள் எல்லோரும் தமக்கும் எதுவும் பாதிப்பு இருக்குமோ என்று அஞ்சி பலரும் ஆஸ்பத்திரி நோக்கி வந்துள்ளனர். இது போல் பல பகுதிகளுக்கு பரவியது. காலையில் சிறப்பு தொழுகையின்போது மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் புரளியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

போலீஸ், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை: செஞ்சியில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை குறித்து முழுக்கவனமாக கண்காணிக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்பத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தாசில்தார் வாசுதேவன் கூறுகையில், மெகந்தியினால் பாதிப்பு இல்லை. தவறான தகவல் பரப்புவோர் யார் என கண்டறிந்து அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குறிப்பாக மத்திய அரசு பல்க் மெசேஜ் தடை செய்திருப்பதால் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. இல்லையேல் மேலும் பலருக்கு இந்த பொய்செய்தி போய்ச்சேர்ந்திருக்கும். சமீபத்தில் வட மாநிலத்தவர்கள தாக்கப்படுவதாக மொபைல் மூலம் தகவல் பரப்பி விடப்பட்டது. இதனையடுத்து பல்க் மெசேஜ் அனுப்பிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த மெகந்தீ வதந்தி குறித்தும் போலீஸ் தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் கலாட்டா: வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் இருந்த ஏராளமானோர் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இரவு 1.30 மணிக்கு கூட்டம் அதிகமானது. அப்போது ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே இருந்தார். இதனால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அனைவருக்கும் விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமான தகவலறிந்ததும் டி.எஸ்.பி. மாதவன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது சிலர் போலீசார் மீது கல்வீசினர்[7].  போலீசார் பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஆஸ்பத்திரியில் நிறுத்தியிருந்த 2 தனியார் ஆம்புலன்சு கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. ஆஸ்பத்திரி வளாகத்தில் கடும் பதட்டம் ஏற்பட்டது. இந்த மோதலில் பாத்திமா(வயது 52) என்ற பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். போலீஸ் தயடிடிக்கு பின்னர் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. திருப்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஷில்பா பிரபாகர் அதிகாலை 3.30 மணிக்கு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். உடன் தாசில்தார் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் வதந்தி குறித்து விளக்கம் அளித்தனர்.  இந்த சம்பவத்தையடுத்து வாணியம்பாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மருதாணி, மெகந்தி பூசிய 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற இரவு 12 மணிக்கு மேல் வந்தனர். அப்போது ஒரே ஒரு டாக்டர் வந்தார். சிகிச்சைக்கு தாமதமானதால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 3 கண்ணாடிகளை உடைத்தனர்[8]. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

மசூதிகளில் ஒலிபெருக்கிகளில் தெரிவித்தது: இதேபோல் சேலம் அரசு மருத்துவமனையிலும் பலர் குவிந்தனர். இரவு 12.30 மணியில் இருந்து விடிய விடிய முஸ்லிம்கள் ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தர்காக்களில் மெகந்தி பற்றி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சி அடைந்த பலர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் திரண்டனர். இங்கு 150 பேருக்கு ஊசி போடப்பட்டது. இதேபோல் சூளகிரி, ஒசூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் வதந்தி பரவி ஆஸ்பத்திரிகளில் திரண்டனர்[9].

வேலூரிலிருந்து ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்குப் பரவிய வதந்தி: வேலூர், ஓசூர், பெங்களூரு, சித்தூர் என்று பரவிய போக்கு வேண்டுமென்றே செய்துள்ளது தெரிகிறது. ஆந்திர மாநிலம் பலமனேர், சித்தூர் மற்றும் பெங்களூர் பங்காருபேட்டை, சேலம், கிருஷ்ணகிரி பகுதியில் மருதாணி, மெகந்தி வைத்தவர்களுக்கு அரிப்பு மற்றும் வாந்தி ஏற்பட்டு இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. இதைவிட, ஒன்றும் இல்லை, இதெல்லாம் வதந்தி தான் என்று ஏன் எஸ்.எம்.எஸ் அனுப்பக்கூடாது?


[4] இவ்வாறு அனுப்பவேண்டிய தேவையென்ன என்று தெரியவில்லை. ஒன்றும் இல்லை என்று மருத்துவர் கூறியபிறகு, சம்பந்தப்பட்டவர்கள், அதனைப் புரிந்த கொண்ட பிறகும், அப்படி பரப்ப வேண்டிய அவசியம் இல்லை.

மேல்சீவாரத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மர்மமான நிலையில் இறப்பு: கொலையா என்ற சந்தேகம்

ஜனவரி 12, 2011

மேல்சீவாரத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மர்மமான நிலையில் இறப்பு: கொலையா என்ற சந்தேகம்

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மாயமானது: ஆற்காட்டை அடுத்துள்ள மேல்விஷாரம் ஜமிலாபாத் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வருகிறார்[1]. இவரது மனைவி ஆஜிரா பேகம். இவர்களுக்கு தானியா தாஷிபா (3), காஜியா நாஷிகா (2) என்ற 2 பெண் குழந்தைகளும், 3 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று அவரது மகள்கள் 2 பேரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது[2] திடீர் என்று மாயமானார்கள் என்று சொல்லப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் 2 சிறுமிகளையும் அழைத்துச் சென்றாரா? சிறுமிகள் திடீரென்று காணவில்லை என்றதும் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். பல இடங்களில் தேடியும் பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. பெற்றோர்கள் பதரிவிட்டனர். இந்த நிலையில் வீட்டின் எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் 2 சிறுமிகளையும் அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர். ஆனால் அதற்கு மேல் விவரங்களை அவர்களால் சொல்லமுடியவில்லை.

பாழடைந்த கிணற்றில் 2 குழந்தைகளின் பிணம் மிதந்தது: குழந்தைகளைத் தேடி வந்த நிலையில் நேற்று (11-01-2011) மாலை மேல்விஷாரத்தில் தனியார் மருத்துவமனை அருகே கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள், பாழடைந்த கிணற்றில் 2 குழந்தைகளின் பிணம் மிதப்பதைப் பார்த்து அப்பகுதியில் வசிப்போரிடம் தெரிவித்தனர். தகவல் கிடைத்து போலீஸார் விரைந்து வந்து இரு குழந்தைகளையும் மீட்டபோதுதான் அது காணாமல் போன சிறுமிகள் என்று தெரிய வந்தது. பெற்றோர்களும் உறுதி செய்தனர். குழந்தைகளின் வீட்டிற்கும், இறந்து கிடந்த கிணற்றிற்கும் சுமார் 2 கி.மீட்டர் தூரம் ஆகும்[3]. எனவே அப்பகுதியில் வசிக்கும் யாராவது குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பிஞ்சு குழந்தைகள் பிணமாகக் கிடப்பதைப் பார்க்க மிக-மிக பரிதாபமாக இருந்தது. கொலையென்றால், அந்த கொலைகாரன், மிகவும் குரூர மிருகமாக இருந்திருக்க வேண்டும். இரு சிறுமிகளையும் கடத்திச் சென்ற நபர், குழந்தைகள் அழுதிருக்கும், அதைப் பார்த்து பயந்து போய் கிணற்றில் வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

போலீஸாரின் தேடுதல் விசாரணை, வேட்டை, சில முரணான செய்திகள்[4]: இதையடுத்து அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். போலீஸார் மூன்று தனிப்படை அமைத்து விசாரித்து வருவதாக ஆற்காடு போலீஸ் இன்ச்பெக்டர் கூறியுள்ளார். போலீஸாரின் நாய் பிணங்கள் கிடந்த இடத்திலிருந்து கிளம்பி பிறகு அவர்களது வீட்டிற்கே வந்து சேர்ந்ததாகவும், அங்கேயே சுற்றி-சுற்றி வந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர். காரில் குழந்தைகளின் தந்தையாரின் கைரேகை இருப்பதனால், அவரே இந்த கொலையை செய்தாரா என்று சந்தேகம் இருப்பதாக போலீஸார் கூறுவதாக சன்டிவி தொலைக்காட்சி 12-01-2010 அன்று விடியற்காலையிலிருந்து செய்திகளில் தெரிவித்து வருகிறது. குழந்தைகளின் வயதும் 2 / 3 என்றும், 2½ / 3½  மாறி-மாறி கூறுகின்றனர்.

வேதபிரகாஷ்

12-01-2011


[1] தட் ஈஸ் டமிள், பாழடைந்த கிணற்றில் மிதந்த 2 சிறுமிகளின் உடல்கள்-கடத்திக் கொலை என சந்தேகம், புதன்கிழமை, ஜனவரி 12, 2011, http://thatstamil.oneindia.in/news/2011/01/12/2-girl-children-kidnapped-murdered-aid0091.html

[2] தினமலர், வேலூரில் மர்மமுறையில் பெண் குழந்தைகள் மரணம், ஜனவரி 11,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=164239

[4] சன்டிவி தொலைக்காட்சி 12-01-2010 அன்று விடியற்காலையிலிருந்து செய்திகளில் தெரிவித்து வருகிறது. அதில் இருவர் கூறும் விவரம் இவ்வாறாக உள்ளது.

கோடிகளை சுருட்டிய அப்துல் ஆஜீஸ், அப்துல் மௌதானியின் கூட்டாளியா, உறவினரா, சகோதரரா!

செப்ரெம்பர் 4, 2010

கோடிகளை சுருட்டிய அப்துல் ஆஜீஸ், அப்துல் மௌதானியின் கூட்டாளியாம்!

கூட்டாளியா, சகோதரரா, உறவினரா? ஊடகங்கள் கைது செய்யப்பட்ட அப்துல் ஆஸிசை கூட்டாளி என்றும், உறவினர், சகோதரர் என்றும், கட்சியின் நிதியாளர்……….என்று பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளதால், ஊடகங்கள் குழப்புகின்றனவா அல்லது திசைத்திருப்புகின்றனவா என்று ஒன்றும் புரியவில்லை.

மதானி சகோதரர் கோர்ட்டில் ஆஜர்

செப்டம்பர் 05, 2010,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=77822

மதுரை : பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார். இவரை ஜாமீனில் விடுவிப்பதற்கான முயற்சியில் மதானி சகோதரர் அப்துல் அசீஸ் ஈடுபட்டிருந்தார். அப்துல் அசீஸ் மீது செக் மோசடி தொடர்பாக வழக்குகள் உள்ளன. இது தொ,டர்பாக சி.பி.ஐ., போலீசார் விசாரணை செய்து வந்தனர். பெங்களூருவில் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அப்துல் அசீஸ், நேற்று இரவு 12.30 மணிக்கு மதுரை சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஜெகநாதன் வீட்டில் ஆஜர் செய்யப்பட்டார். பின், மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.


மதானி கொடுத்த தகவல் படி அப்துல் ஆஜீஸ் கைது (04-09-2010): அப்துல் ஆஜீஸ், மதானி கொடுத்தத் தகவலின்படித்தான் கைது செய்யப் பட்டிருப்பதாக, செய்தி வந்துள்ளது. மதானிக்கு பிணை-விடுதலை ஏற்பாடு செய்ய அப்துல் ஆஜீஸ் வந்ததாகவும், அவன் பெங்களூரு குண்டுவெடிப்பில் சம்பந்தம் கொண்டிருப்பதால்,  கைது செய்யப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

Daijiworld Media Network – Bangalore (SP)
http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=84793&n_tit=Bangalore%3A+Madani%92s+Close+Aide+Arrested+by+CCB+Police

Bangalore, Sep 4: Abdul Aziz, a Kerala-based close aide of Abdul Nasser Madani, was arrested by the policemen of city crime branch on Friday September 3.

Aziz, a prominent leader of People’s Democratic Party floated by Madani, was in the city, trying to get bail for Madani. The policemen, who got wind about his presence here, gathered information about his whereabouts and arrested him. Abdul Aziz reportedly had played a major role in the serial blasts of 2008 in the city and subsequent blasts near Chinnaswamy Stadium last year at the time IPL matches were in progress.

The arrests were made on the basis of information provided by Madani, who is in judicial custody here, during interrogation. Aziz had been nominated by Madani for guiding terrorist activities in the city, it is learnt.

Madani also had revealed that Aziz had duped a bank before getting involved with the above blasts, it is learnt.

மௌதானியின் ஆலோசகர், நிதியுதவியாளர், முக்கியமான ஆள் கைது: முஹம்மது அப்துல் ஆஜீஸ் என்பவன் 1994லேயே, போலீஸாரால் பேங்க் ஆஃப் இன்டியா மற்றும் பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா வங்கிகளில்[1] பண மோசடி வழக்குகளில் போலி “டிமாண்ட் டிராஃப்ட்”கள் மூலம், கோடிகளை சுருட்டியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறான்[2]. ஆனால், பெயிலில் வெளிவந்த அவன் தனது வேலைகளை இன்னும் வளர்த்து அதிகமாகத்தான் செய்து கொண்டிருந்தான். பிறகு திடீரென்று அவன் இந்தியாவில் காணப்படவில்லை. பெயரை மாற்றிக் கொண்டு துபாயில் 16 வருடங்கள் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இப்பொழுது, திடீரென்று சென்னை சி.பி.ஐக்கு தகவல் வந்ததால், பெங்களூரில் ஷேசாத்ரிபுரம் என்ற இடத்தில் லாட்ஜில் தங்கியிருந்த முஹம்மது அப்துல் ஆஜீஸ் சி,பி.ஐயால் கைது செய்யப்பட்டுள்ளான்[3]. இன்டர்போல் “சிவப்பு நிற எச்சரிக்கை நோட்டீஸ்” அனுப்பியதால், சி.பி.ஐ இவனை கைது செய்துள்ளது.

மதானியின் பைலிற்கு பாக்டுபம் கூட்டம்: இதற்கிடையில், மௌதானியை எப்படியாவது பெயிலில் எடுத்துவிட வேண்டும் என்று பலர் ராமநகரம் என்ற இடத்தில் வந்து குவிகின்றதாக கேரள போலீஸார் மற்றும் ஐ.பி கர்நாட போலீஸாரை உஷார் படுத்தியுள்ளனர்[4].  போலீஸார் மௌதானியின் பெயிலை கடுமையாக எதிர்ப்பதாக தெரிகிறது[5]. கைதிற்குப் பிறகு, இனி இதற்கும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்களோ என்னவோ?

Mohammed-Abdul-Azeez-arrested-in-Bengalore

Mohammed-Abdul-Azeez-arrested-in-Bengalore

மௌதானியின் பாதுகாவலர்களாக இருந்த போலீஸாரின் மர்மம்: கோயம்புத்தூரில் சிறையிலிருந்த விடுதலையாகிய பிறகு, ஷாஜஹான், நபீல், சஜீவன் மற்றும் பஷீர் என்ற போலீஸார் மௌதானியின் பாதுகாவலர்களாக இருந்துள்ளனர்[6]. ஆகையால், அவர்களை விசாரிக்க கர்நாடக போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அவர்கள் வரவில்லை. ஆகவே, மறுபடியும் நோட்டீஸுகள் அனுப்பப்படும் என்று தெரிகிறது. கேரள போலீஸார், இவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை அல்லது தாமதப்படுத்துகிறது என்று சொல்லப் படுகிறது[7].


[1] மும்பை வங்கியிலும் மோசடி செய்துள்ளாதகத் தெரிகின்றது.

[2] http://timesofindia.indiatimes.com/city/chennai/Fraudster-held-in-Bangalore-turns-out-to-be-a-Madani-aide/articleshow/6488655.cms

[3] http://www.deccanchronicle.com/bengaluru/madani-aide-arrested-city-lodge-529

[4] http://www.thehindu.com/news/states/kerala/article612117.ece

[5] http://news-views.in/police-oppose-bail-to-maudany-final-hearing-on-sep-6/

[6] http://twocircles.net/node/219009

[7] இதனால் தான், ஒருவேளை, கர்நாடக போலீஸாருக்கே நோட்டீஸ் கொடுக்கப் பட்டுள்ளது தெரிகிறது.