இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம் ஏன்?
இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம் ஏன்? பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு, மதத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான் பாரதம் என்ற தொன்மையான நாட்டிலிருந்து, அத்தகைய நாட்டினை கோடிக்கணக்கான இந்துக்களின் ரத்தம், கொலை, கொள்ளை முதலியவற்றுடன் உருவாக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், இஸ்லாமியர்களே, இஸ்லாமியர்களை கொல்லும் முறை, சமீபத்தில் அதிகமாகவே இஸ்லாமிய நாடுகளில் வளர்ந்து வருகிறது. இந்நிலை முன்னமே இருந்திருக்கிறது, ஆனால், இப்பொழுதைய ஊடகங்களின் மூலமாக, அத்தகைய நிகழ்வுகளை உலகம் முழுவதும் உள்ள மற்ற கோடானு கோடி மக்களும் பார்க்கிறார்கள், தெரிந்து கொள்கிறார்கள். அந்த கொல்லும் முறை என்பது, குண்டு வெடிப்பு, தற்கொலை குண்டு வெடிப்பு, முதலியவற்றுடன் தான் இயங்கி வருகின்றது. குறிப்பாக வெள்ளிக் கிழமையன்று ஜிஹாதி கொலைக்காரர்கள் அத்தகைய தீவிரவாத கொண்டுக்கொலை காரியங்களை செய்து அப்பாவி மக்களை, முஸ்லீம்கள் என்றாலும் கூட கொன்று வருகின்றனர். ஆக முஸ்லீம்களுக்கே தனித்தனியாக இரண்டு சொர்க்கங்கள், நரகங்கள் ஏற்படுத்தபட்டிருக்கிறது போலும். இதைப் பற்றியெல்லாம் முஸ்லீம்கள் தீர ஆலோசித்து ,முடிவிற்கு வரவேண்டும்.
இஸ்லாமிய நாடு தாங்கமுடியாத இஸ்லாமிய பயங்கரவாதத்தை செக்யூலரிஸ இந்தியா தாங்குமா? இந்நிலையில், தீவிரவாதத்தில், வன்முறையில், ரத்தக்களரியில் பிறந்து, வளர்ந்த நாட்டிலே, தீவிரவாத இயக்கங்கள் என்று அவர்களே தடை செய்வது விசித்திரமாக இருக்கிறது. மேலும், இஸ்லாமிய நாடான பாகிஸ்தானிற்கே அவை அத்தகைய அடங்காத, குரூரக் கொலை ஜிஹாதி கூட்டங்களாக இருக்கின்றன என்றால் செக்யூலரிஸ நாடான இந்தியாவின் கதி என்ன? குறிப்பாக, அடிக்கொரு தடவை காஃபிர்களை ஒழித்துக் கட்டுவோம் என்றெல்லாம் முழங்கி வருகிறார்களே, அந்த காஃபிர்களின் கதி என்ன – அதாவது இந்துக்கள் எனப்படுகின்ற இந்தியர்காளின் கதி என்ன? இதைப் பற்றி இந்திய அரசியல்வாதிகள் முஸ்லீம்களை தாஜா செய்வோம் என்ற கொள்கையில் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற உண்மையும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
ஜிஹாத், காஃபிர்களைக் கொல்லுவோம் என்ற ரீதியிலேயே இருந்தால் மக்கள் எப்பொழுதுதான் வாழ்வார்கள்? ஜிஹாத் இஸ்லாத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வேலை செய்யும், செயல்படும் என்றால், முஸ்லீம்களுக்கே விடிவு காலம் இல்லையே? ஒரு இஸ்லாமியக் கூட்டம், அடுத்த இஸ்லாமியக் கூட்டத்தை, ஏதோ ஒரு காரணத்திற்காக “காஃபிர்” என்று பிரகடனப்படுத்தி, ஜிஹாத் ஆரம்பித்து விட்டால், அடித்துக் கொண்டு சாவது என்ற நிலைதானே இஸ்லாத்தில் உள்ளது? பிறகு, இதற்கு முடிவு தான் என்ன? இஸ்லாமிய நாடுகளிலேயே, இஸ்லாம் அமைதியை நிலைநட்டமுடியவில்லை என்ற உண்மையை முஸ்லீம்கள் அறிந்த பின்னர், அது ஏன் என்று பொறுமையாக ஆராய வேண்டும். நோயை தீர்க்கத்தான் மருந்தை உட்கொள்கிறோம். அந்நிலையில் அம்மருந்து நிறைய நாட்கள் உட்கொண்ட பிறகும், எந்த வேலையும் செய்யவில்லை எனும்போது, நோயின் மீது குற்றமா அல்லது மருந்தின் மீது குற்றமா என்று ஆராய்ந்து தெளிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய நாடுகளிலேயே, இஸ்லாம் அமைதியை ஏன் நிலைநட்டமுடியவில்லை? இதை பொறுப்புள்ள எல்லா முஸ்லீம்களும் சிந்திக்க வேண்டும். உலகத்தில் முஸ்லீம்களும் இருக்கிறார்கள், அவர்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு உள்ளது, குறிப்பாக ஜிஹாதி தீவிரவாதத்தால் உலகமே பாதிக்கப் படுகிறது எனும் போது, மற்றவர்களும் இதைப் பற்றி கவலையோடு ஆராயத்தான் செய்வார்கள். 1300 வருட சரித்திர காலமும், இஸ்லாத்தின் உண்மையைக் காட்டுகிறது. இஸ்லாமியர்கள் அரேபியாவில் தனித்து மற்றவர்களின் உதவியில்லாமல், மற்ற இடங்களில் கிடைக்கும் பொருட்கள் இல்லாமல் வாழ முடியாது. இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. ஆக முஸ்லீம்கள் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். அவர்களுடைய மனங்களினின்று முஸ்லீம்கள், முஸ்லீம்-அல்லாதவர்-காஃபிர் என்ற வெறுப்பை, பகைமையை, தீவிரவாதத்தை, குரூரத்தை, பயங்கரவாதத்தை வளர்க்கும் எண்ணங்களை விட்டொழிக்க வேண்டும். ஏனெனில் அது இஸ்லாமிய நாடுகளிலும் மற்ற இஸ்லாம் இல்லாத நாடுகளிலும் ஒரே மாதிரிதான் வேலை செய்கிறது.
மசூதிகளில் ஏன் குண்டுகள் வெடிக்க வேண்டும்? மசூதி முஸ்லீம்களுக்குரிய வழிபாட்டு ஸ்தலம். அங்கு நம்பிக்கையுள்ள முஸ்லீம்கள் வந்து தொழுகிறார்கள். குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று அதிகமாக மக்கள் வந்து வழிபடுகிறார்கள். குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என்றெல்லாம் வந்து தொழுகிறார்கள். அவர்களுக்கும், தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும், ஜிஹாதிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால், அத்தகைய அப்பாவி மக்கள் ஏன் இஸ்லாம் பெயரில், முஸ்லீம்களாக இருந்தாலும் கொல்லப்படவேண்டும்? இதில் என்ன நியாயம் இருக்கிறது? பொறுப்புள்ள, நல்ல, அமைதியான முஸ்லீம்கள் இதைப் பற்றி யோசிக்கலாமே? இதற்கு ஒரு வழிமுறையை காணலாமே?
பாகிஸ்தானில் தீவிரவாதத்திற்காக, கிழ்கண்ட இயக்கங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன:
The 17 outfits, which were banned by the Home Department, Punjab, include:
10. Islami Tehrik Pakistan, 11. Hizb-ut-Tehrir, J 12. amiat-ul-Ansar, 13. Jamiat-ul-Furqan, 14. Khair-un-Naas International Trust, 15. Islamic Students Movement (ISM), 16. Balochistan Liberation Army (BLA) and 17. Jamaat-ud-Daawa. |
1. லஸ்கர்-எ-ஜாங்வி
2. சிபா சஹபா பாகிஸ்தான் 3. சிபா – இ -மொஹம்மது பாகிஸ்தான் 4. கஸ்கர்-இ-ய்ஹொய்பா 5. ஜெய்ஸ்-இ-முஹம்மது 6. டெரிக்-இ-ஜஃப்ரியா பாகிஸ்தான் 7. தெரிக் நிபாஃப் சரியட்-இ-முஹம்மதி 8. மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான் 9. குதாமுல் இஸ்லாம் 10. இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி 11. ஹிஜ்ப்-உத்-தெர்ஹிர், ஜே 12. அமைத்-உல்-அன்ஸார் 13.ஜமைத்-உக்-ஃபர்கன் 14. கை-உன்–நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட் 15. இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட் 16. பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி 17. ஜமாத்-உத்-தாவா |
அண்மைய பின்னூட்டங்கள்