Posted tagged ‘வெடி மருந்து’

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!

பிப்ரவரி 8, 2023

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது: கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி 23-09-2022 அன்று கார் குண்டு வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் அங்கேயே உயிரிழந்தார். இதுதொடா்பாக என்ஐஏ குழுவினா் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதாவது, சென்னையில் தான் இந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், ஊடகங்கள் இவற்றைப் பற்ரியெல்லாம் கண்டு கொள்ளாமல், வேறு விவகாரங்களை ஐத்துக் கொண்டு வாத-விவாதங்கள், பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

சட்டப் படி நடந்து வரும் நீதிமன்ற விசாரணைகளில் காலதாமதம் ஏற்படுவது: இவ்வாறு சட்டப் படி வழக்குகளை விசாரிப்பது, கைது செய்யப் பட்டவர்களை விசாரிப்பது, வாக்குமூலம் வாங்குவது, அதை வைத்து, மறுபடியும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது, விசாரிப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் இடையே காலதாமதம் ஏற்படுகிறது. செப்டம்பர் 2022ல் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு, நிச்சயமாக சம்பந்தப் பட்டவர்கள் உஷாராகியிருப்பர். இருக்கும் ஆதாரங்களை அழித்திருப்பர். ஆகவே, இவற்றையெல்லாம் மீறி, விசாரணை நடத்தி உண்மையை நிலை நாட்ட என்ஐஏ போன்றோர் மிக கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் என்ஐஏவையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். சோதனைக்கு வந்தால், கலாட்டா செய்கின்றனர். இதனால், தமிழக போலீஸாரும் கூட வர வேண்டியுள்ளது. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாகி விட்டது. இதையெல்லாம் யாரும் கண்ட்ப்பதும் இல்லை. மிக சாதாரணமாக எடுத்துக் கொ/ல்கின்றனர் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இப்பொழுது கூட, இந்த விவகாரங்களை சில ஊடகங்கள் தான் வெளியிட்டுள்ளன.

பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை நடத்தினா். மனுவை விசாரித்த நீதிபதி அந்த 7 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி அவா்கள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை 02-02-2023 அன்று அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது கார் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.

23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை: அவா்கள் 7 பேரில் அசாருதீன் என்பவா் கோவையிலுள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசுகளை வாங்கி அவற்றிலிருந்து திரிகளை மட்டும் எடுத்துவிட்டு அந்த பட்டாசு மருந்துடன் வேறு ரசாயனங்களைச் சோ்த்து புதிதாக வெடிபொருள் தயாரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது[1]. இதையடுத்து அசாருதீன் பட்டாசு வாங்கிய கடைக்கு அவரை செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று நேரில் அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்[2]. 23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். இதையெல்லாம், என்ஐஏவுக்கு கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு சாதமாக இருக்கும். இத்தகைய அடைமுறை விவகாரங்களை சட்ட ஓட்டைகளாக்கி தப்பித்துக் கொள்ள முயல்வர்.

வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப் பட்டுள்ள ரசாயனங்கள் முதலியன பறிமுதல், சோதனைக்கு உட்படுத்தப்பட்டன: கார் வெடிப்பு நடந்த பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில் 120 கிலோ எடையிலான வெடி பொருட்கள் இருந்தன. 109 வகையான அந்த பொருட்களை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்தனர்.  இதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்களும் அடங்கும்[3]. இந்த ரசாயன மூலப் பொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் ஆகியவை இருந்தன. தவிர, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.வெடி பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது[4]. அவையெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப் படும் பொருட்கள், ரசாயனங்கள் என்று நிரூபிக்கப் பட்டன. இருப்பினும், அவையெல்லாம் எப்படி தீவிரவாதிகள் வசம் செல்கின்றன என்பது புதிராக இருக்கிறது. உதாரனத்திற்கு நைரோ செல்லுலோஸ் வெடிகுண்டுகள் மலை, மலைபாறை, குவாரிக்களில் உபயோகிக்க, சாலைப் பணி முதலியவற்றிற்கும் விற்கப் படுகின்றன. ஆனால், அத்தகைய பொருள் முன்னர் சந்திர பாபு நாயுடு செல்லும் போது உபயோகப் படுத்தப் பட்டன.

ரசாயனங்கள் செயலிழக்கப் பட்டன: பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ தற்காலிக முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது[5]. நேற்று என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித், வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் வெடி பொருட்கள் எடுத்து செல்லும் சிறப்பு வாகனத்தில் பறிமுதலான வெடிபொருட்களை கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெடி மருந்து குடோனிற்கு கொண்டு சென்றனர்[6]. அங்கு வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன[7]. வெடி பொருட்கள் அழித்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பிட்ட சில வகையான வெடி பொருட்கள் தீ வைத்தும், சில பொருட்கள் மண்ணில் மூடியும் அழிக்கப்பட்டதாக தெரிகிறது[8]. வெடி பொருட்கள் அழிக்கப்பட்டபோது அந்த வளாகத்தில் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை[9]. வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடி மருந்துகளை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் மேலாளர் கூறுகையில், “கோவையில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் எங்கள் தொழிற்சாலையில் வைத்து செயல் இழக்கச் செய்யப்பட்டன. காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் உட்பட 18 பேர் வந்திருந்தனர்,” என்றார்[10]. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெடிபொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-02-2023.


[1] தினமணி, கோவை பட்டாசுக் கடையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை, By DIN  |   Published On : 08th February 2023 12:00 AM  |   Last Updated : 08th February 2023 12:00 AM

[2] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2023/feb/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3997001.html

[3] தந்தி டிவி, கோவை கார் வெடிப்பு சம்பவம் – 120 கிலோ வெடிபொருட்கள் என்.. முன் அழிப்பு, By 6 பிப்ரவரி 2023 8:30 PM

[4] https://www.thanthitv.com/latest-news/coimbatore-car-blast-incident-120-kg-explosives-destroyed-before-nia-166187

[5]  தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை வெடி விபத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள் அழிப்பு; என்ஐஏ நடவடிக்கை, Velmurugan s, First Published Feb 7, 2023, 11:41 AM IST, Last Updated Feb 7, 2023, 11:41 AM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coimbatore-car-blast-issue-nia-officers-demolish-the-raw-materials-of-bom-rpp575

[7] தமிழ்.இந்து, கோவை | கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ வெடிகுண்டு மூலப் பொருட்கள் அழிப்பு , Published : 07 Feb 2023 07:03 AM

Last Updated : 07 Feb 2023 07:03 AM.

[8]  https://www.hindutamil.in/news/tamilnadu/940102-coimbatore-car-blast.html

[9] தினகரன், கோவை கார் வெடிப்பு வழக்கு: பறிமுதலான வெடிபொருட்கள் வெடிக்க வைத்து செயலிழப்பு, 2023-02-07@ 21:21:37

[10]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=837081

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல், பகுப்பாய்வுக்கு உட்படல்! (3)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல், பகுப்பாய்வுக்கு உட்படல்! (3)

16-11-2022 அன்று ஊடகங்களின் செய்திலேப்டாப், ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது: சோதனைகளில் கிடைத்த பொருட்கள்:

  1. இதில், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது[1].
  2. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
  3. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  4. அந்த ஆவணங்கள் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[2]

 மேலும் இவர்கள், ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகள் சோதனைக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடா்பாக, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில், இரு வழக்குகள் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆதாரங்கள் பகுப்பாய்வுக்கு உட்பட்டவை ஆகின்றன: கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவை தடயவியல் துறையிடம் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.  நிச்சயமாக போலீசாரோ, என்.ஐ.ஏவோ எல்லா விவரங்களையும் சொல்லி விடமுடியாது. அதிலும் இத்தகைய ஜிஹாதி-தீவிரவாதம், ஐஎஸ்-தொடர்பு பயங்கரவாதம் போன்றவை பின்னியிருக்கும் பொழுது, அதிலும் தமிழகம் போன்ற “திராவிட மாடல்” ஆட்சி என்று சொல்லிக் கொண்டு, பிரிவினைவாதம், மாநில சுயயாட்சி, தினமும் மத்திய அரசுடன் எதிர்ப்பு கொள்கை கொண்ட போக்கு-செயல்பாடுகள் எல்லாம் மேற்கொண்டு வரும்பொழுது, திராவிடத்துவத்தில் ஊறிய தமிழர்கள் அல்லது திராவிடர்கள் என்றே சொல்லிக் கொள்ளும் தமிழர்கள், நிச்சயமாக ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொல்வார்கள். மறுஅடியும் பெரியாரிஸம், நீதிகட்சி, அண்ணாயிஸம் என்றெல்லாம் பேச ஆரம்பிக்கும் போது, அத்தகைய எண்ணம் தான் தோன்றும். மேலும், இப்பொழுதைய நிலையிலும் அவ்வாறே பேசி வருவது தான் பிரச்சினை, சந்தேகம் மற்றும் தீவிரத் தனமாகிறது.

ஒருபுறம் NIA சோதனை; மறுபுறம் சென்னை போலீசார் சோதனைபின்னணி என்ன?: நியூஸ்18தமிழ், இவ்வாறு ஒரு கேள்வியை எழுப்பினாலும், தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும், அதில் பதிலை சொல்லவில்லை. [3] இருப்பினும், ஒரு நிருபர் அவ்வாறு யோசித்திருப்பது தெரிகிறது[4]. முன்னரே எதற்கு நான்கு நாட்கள் தாமதம் என்ற கேள்வி கவர்னரால் எழுப்பப் பட்டு, ஆளும் கட்சியினரால் விவாதப் பொருள் ஆக்கப் பட்டுள்ளது. தேவையில்லாமல், ஊடகங்களில் வேறு விவாதிக்கப் பட்டுள்ளது. திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” (அநாகரிக பேச்சைத் தடுக்க நெறியாளர் மைக்கை மூடலாம், அது மூட் எனப்படும்) கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது. மறுபடியும், இந்த ரெயிடுகளில் தாமதம் உள்ளதா, தொய்வு ஏற்படுகிறதா, என்.ஐ.ஏ செல்லும் பொழுது, போலீசார் துணை / பாதுகாப்புத் தேவைப் படுகிறதா போன்ற கேள்விகளும் சாதாரண செய்தி படிப்போர்களுக்கு எழத்தான் செய்யும், இருப்பினும், என்.ஐ.ஏ போன்றோருக்கு எதற்கு துணை / பாதுகாப்புத் தேவை, அவர்களுக்கு அதெல்லாம் தெரியாதா அல்லது கருவிகள் இல்லையா என்றெல்லாம் கூட யோசிக்கக் கூடும்.

என்.. சோதனைகளுக்கு முஸ்லிம் அமைப்பினர் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன், எப்படி?: முன்பு, என்.ஐ.ஏ சோதனைகள் நடத்தியபோது, முஸ்லிம் அமைப்பினர் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தனர், ஆர்பாட்டம் செய்தனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது, போலீசார் எப்படி அனுமதித்தார்கள், பார்த்துக் கொண்டிருந்தார்கள் போன்ற கேள்விகளும் எழத்தான் செய்தன. இருப்பினும், போலீசார் பார்த்துக் கொண்டிருந்தது போலத் தான் ஊடகங்களில் வெளியிடப் பட்ட புகைப் படங்கள் காட்டின. அதனால், “முஸ்லிம்” என்றாலே, மிருதுவாக செயல்படுகிறார்கள், ஓட்டுவங்கி போய்விடும் போன்ற காரணங்களுக்காக அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. அதே நேரத்தில், “தீவிரவாதத்திற்கு மதம் இல்லை,” என்று செக்யூலரிஸத் தனமாகவும் மிக நம்பிக்கையுடன் பேசப் பட்டு வருகிறது. என்.ஐ.ஏ சோதனை தேவையில்லை, தமிழகத்திற்கே என்.ஐ.ஏ தேவையில்லை போன்ற வாதங்களும் வைக்கப் பட்டன. இவையெல்லாம் மத்திய-மாநில அரசு மோதல்களா, ஒன்றிய-திராவிட மாடல் சித்தாந்த ஊடல்களா, ஆரிய-திராவிட போராட்டங்களா என்ரு தெரியவில்லை. இருபினும், இதிலுள்ள முக்கியத் தன்மை, பாதுகாப்பு-தேவை, தீவிரத் தன்மை முதலியவற்றை தேசிய-பாதுகாப்பு, ஜாக்கிரதை, கவனிப்பு கோணங்களில் மிக-அத்தியாவசமாகிறது.

28-09-2022லிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்குச்சீல் வைப்பது முதலியன: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்குச்சீல் வைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் அலுவலர்கள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மேற்கு தாம்பரம் வ.உ.சி தெருவில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகத்துக்குச்சீல் வைக்க தாம்பரம் தாசில்தார் கவிதா தலைமையில் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டிற்கு வந்தனர். அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டின் முதல் தளத்தில் போலீசார் விசாரணை 26-10-2022 அன்று நடத்தியபோது, ஏற்கெனவே அலுவலகம் நடத்தியவர்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு காலி செய்துவிட்டுச்சென்றது தெரியவந்தது[5]. அந்த வீட்டில் வேறுகுடும்பத்தினர் வாடகைக்கு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், அந்த வீட்டில் வாடகைக்கு வரும்பொழுது போடப்பட்ட ஒப்பந்த பத்திரம் மற்றும் வீட்டைக்காலி செய்யும் பொழுது எழுதிக்கொடுத்த ஒப்பந்த பத்திரங்களை ஆய்வு செய்து அதன் பிறகு அங்கிருந்து போலீசார் சென்றனர்[6]. இவையெல்லாம் தற்செயலாக நடந்தவையா அல்லது திட்டமிட்டு நடந்த நிகழ்வுகளா என்று அவர்கள் தான் புலனாய்வு செய்யவேண்டும். ஆனால், இங்கு 27-09-2022 முதல் 26-10-2022 வரை ஏன் தாமதம் என்ற கேள்வி தான் எழுகிறது.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] தினகரன், கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கு எதிரொலி சென்னையில் என்ஐஏ சோதனை: 4 இடங்களில் நடைபெற்றது; முக்கிய ஆவணங்கள் பறிமுதல், 2022-11-16@ 00:31:32.

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=814529

[3] நியூஸ்18தமிழ், ஒருபுறம் NIA சோதனை; மறுபுறம் சென்னை போலீசார் சோதனைபின்னணி என்ன?,  NEWS18 TAMIL, LAST UPDATED : NOVEMBER 10, 2022, 12:29 IST.

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/kovai-car-blast-nia-and-chennai-police-raid-in-several-places-834109.html

[5] இ.டிவி.பாரத், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்குச்சீல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு, Published on: October 27, 2022, 5;36 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/ministry-of-home-affairs-orders-sealing-of-popular-front-of-india-office/tamil-nadu20221027173604186186836

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3)

சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.. ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள்  நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து  மனித நேயம்,  மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது.  தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது

ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர்.  கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/

[3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html

[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657

[7] தினத்தந்தி, .எஸ். வீடியோக்கள் அடங்கியபென் டிரைவ்பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am)

[8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642

[9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா,  Updated : நவ 05, 2022  01:32 |  Added : நவ 05, 2022  01:30

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (7)

நவம்பர் 13, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (7)

Sankaracharya and Tipu

Sankaracharya and Tipu

மிலேச்சன் திப்புவுக்கு சிருங்கேரி ஆச்சாரியார்சண்டீஹவனம்செய்து, ஜாதகம் கணித்துக் கொடுத்தாரா?: எதிரிகளை வெல்ல மற்றும் தனது அரசின் மேன்மைக்கு, சங்கராச்சாரியாரை தினமும் மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்யுமாறு வேண்டிக் கொள்கிறான்[1]. இங்கு எதிரிகள் என்றால் “இந்துக்கள்”, அதிலும் “ஹிந்து சாம்ராஜ்யம்” உருவாக்க பாடுபடும் மராத்தியர். அப்படியென்றால், சங்கராச்சாரியார் இந்துக்களுக்கு எதிராக மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்தாரா? இன்னொரு கடிதத்தில் தனது ஜாதகத்தைக் கணித்துத் தருமாறு சொல்கிறான். உண்மையிலேயே சங்கராச்சாரியார் அவ்வாறு செய்தாரா, இல்லையா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லாம் சாஸ்திரங்களும் தெரிந்தவர், எப்படி “மிலேச்சனுக்கு” அவ்வாறு அருளினார் என்பதுதான் கேள்வி. மேலும் மிலேச்சனுக்காக அவ்வாறு செய்தார் என்று எந்த மடமும் ஒப்புக்கொள்ளாது. மேலும், ஜோதிடம் பார்க்க சில பிராமணர்களை அரசவையிலேயே வைத்திருந்தான் எனும் போது, இது அதிகமாகவேக் காணப்படுகிறது. ஏனெனில், எந்த சங்கரச்சாரியாரும், ஒரு முகமதியனுக்கு ஜாதகம் கணித்து கொடுத்தார் என்பதெல்லாம் பிதற்றலானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

What Sringeri informs about Tipu

What Sringeri informs about Tipu

திப்பு எழுதியதாக சொல்லப்படும் கடிதங்களுக்கு ஆதாரம் இருக்கிறதா?: ஏ. கே. சாஸ்திரி என்பவர் 1753-1799 ஆண்டுகளில் திப்பு சங்கராச்சாரியாருக்கு ஶ்ரீ சச்சிதானந்த பாரதி – III அனுப்பியதாக சொல்லப்படும் 47 கடிதங்களை பதிப்பித்தார்[2].  அதாவது, திப்பு அனுப்பியதாகத்தான் உள்ளது, பதிலுக்கு, இவர் அனுப்பியதாக எந்த கடிதமும் இல்லை. ஆகவே, இருவழி போக்குவரத்துக்கான ஆதாரம் இல்லை. கடிதங்களில் திப்புத் தரப்பில் உள்ளவற்றை, சிருங்கேரி ஆதரித்து சரித்திரம் போல அதன் தளத்தில் போட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது[3]. ஆகவே, இக்கடிதங்களுக்கு சரித்திர ரீதியில் எந்த ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. இடைக்காலத்தில் முகலாயர்கள் இந்துக்களை ஏமாற்ற அல்லாபுநிஷத், பாவிஷ்ய புராணம் முதலியவற்றை புழக்கத்தில் விட்டது போல, 18வது நூற்றாண்டிலும், முஸ்லிம்கள் அத்தகைய யுக்தியை பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. இக்கடிதங்கள், “திப்புவின் கடிதங்கள்” என்று முன்னர் வெளியிடப்பட்ட எந்த புத்தங்களிலும் காணப்படவில்லை. எந்த விதத்திலும் ஒவ்வாத இத்தகைய போலித்தனமாக ஆதாரங்களை தவிர்ப்பதே நல்லது.

What Sringeri informs about Tipu.2

What Sringeri informs about Tipu.2

முகலாயர் மற்றும் திப்பு போன்ற தீயசக்திகள் மக்களைக் கொல்ல அவற்றை உபயோகப்படுத்தினர்: முகலாயர் மற்றும் திப்பு போன்றவர்கள் தீயசக்திகள் போன்று அறியப்பட்டிருந்ததால், மக்களைக் கொல்ல, அவற்றை – வெடியுப்பு, வெடிமருந்து போன்றவற்றை – உபயோகப்படுத்தினர் என்று பறைச்சாற்றிக் கொண்டால், அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆகவே, திப்பு ராக்கெட்டைக் கண்டுபிடித்தான் என்பதெல்லாம், உள்ள சரித்திரத்தை மறைத்து, அளவுக்கு அதிகமான வர்ணனை எனலாம். மேலும் சரித்திராசிரியர்கள், விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பங்களின் தோற்றம், வளர்ச்சி, விருத்தி (Origin, progress and development of Science and Technology) போன்றாவற்றை அறிந்து கொள்ளாமல், சரித்திரத்தை விதவிதமாக எழுதிக் கொண்டிருப்பது, எல்லோரையும் ஏமாற்றுவது போலாகும். இன்றைக்கு, விவரங்கள் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இருப்பதால், உலக நாகரிகங்களைப் பற்றி ஒப்புமைப்படுத்தி அறியமுடியும் நிலை உருவாகி இருப்பதால், எதை, யார் முதலில் கண்டுபிடித்தார் என்பது, அங்கங்கு இருக்கும் பொருட்களான ஆதாரங்கள் (material evidences) மூலம் தெரியவருகிறது.

Hazarat Tipu Urs celebrated.1

Hazarat Tipu Urs celebrated.1

ஹஜரத் திப்பு சுல்தான் உர்ஸ் கொண்டாட்டம்: திப்புவை ஹஜரத் ஆகி, ஹஜரத் திப்புவுக்கு உர்ஸ் கொண்டாடத்தையும், முஸ்லிம்கள் நடத்தி வருகிறார்கள்[4]. ஜூன் 1999ல் திப்பு சமாதியில் அமர்க்களமாக கொண்டாடப்பட்டது[5]. 220 உர்ஸ் விழா மற்றும் படங்களை விவரங்களுடன் இங்கே காணலாம்[6]. இங்கு காந்திக்கு இணையாக திப்புவை வைத்திருப்பதால், இருவரும் ஒரே நிலையில் உள்ளனர் என்று எடுத்துக் கொள்ளாலாமா? முன்பு காந்தி விசயத்தில், அலி சகோதரர்களில் ஒருவரான, மொஹம்மது அலி, ஒரு கேடுகெட்ட முஸ்லிமை நான் மதிப்பேனே தவிர காந்தியை மதிக்க மாட்டேன், ஏனென்றால், அவர் ஒரு காபிர் என்றனர் [“In my eye, Gandhi is worse than a fallen Mussalman.”]. ஆக, இங்கு காந்தியை திப்புவுக்கு இணையாக வைத்து, உயர்த்துகின்றனரா அல்லது தாழ்த்துகின்றனரா என்று தெரியவில்லை. 223 உர்ஸுக்கு அழைப்பிதழ் “உர்ஸ்-ஏ-ஷரீப் முபாரக்” எல்லாம் அமர்க்களமாக அச்சடித்து விநியோகிக்கப்பட்டது. காந்தி மற்றும் திப்பு படங்களை ஒன்றாக வைத்து, மாலைப் போட்டு, தேங்காய் உடைத்து, ஊதுவத்திகள் ஏற்றி, வெற்றிலை-பாக்கு-பழங்கள் வைத்து, ஜோராக பூஜை செய்யப்பட்டது. இவற்றை புகைப்படங்களிலிருந்தே கண்டு கொள்ளாலாம். மைசூர் வக்ப் எஸ்டேட் இதற்கு ஆதரவு அளிக்கிறது. இவையெல்லாம் இஸ்லாத்தில் ஏற்கப்பட்டவையா என்று தெரியவில்லை. சமாதிகளை சின்னங்களாக வைக்கக்கூடாது; வணங்கக் கூடாது; விழா நடத்தக் கூடாது; என்றெல்லாம் ஆர்பாட்டமாக பிரச்சாரம் செய்யும் போது, இவற்றையெல்லாம் எப்படி முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்?

Hazarat Tipu Urs celebrated.2

Hazarat Tipu Urs celebrated.2

காஃபிர்மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்என்ற எண்ணம் இருக்கும் வரையில் முஸ்லீம் முஸ்லீமாகத்தான் இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின் குணாதியம் (நடத்தை, பண்பு) எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தாலும், எனது மதத்தின் (இஸ்லாம்) பார்வையில் ஒரு குணாதியமே இல்லாத ஒரு முசல்மானை விட தாழ்ந்தவராகத்தான் தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ[7] – “ஆமாம், என்னுடைய மதம் மற்றும் நம்பிக்கையின்படி, ஒரு விபச்சாரத்தனமுடைய மற்றும் வீழ்ந்த (மிக மோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான் காந்தியைவிட உயர்ந்தவன்”! அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்[8].

Hazarat Tipu Urs celebrated.3

Hazarat Tipu Urs celebrated.3

ஷிர்க்விவகாரங்களில் முஸ்லிம்களும், நாத்திக அறிவுஜீவிகளும் இரட்டை வேடம் போடுவதேன்?: மொஹம்மது சமாதி-கல்லறையே ஷிர்க் என்று அழித்தவர்கள், திப்புவின் சமாதியை வைத்துக் கொண்டு ஏன் ஆர்பாட்டம் செய்கின்றனர் என்பதும் நோக்கத்தது. சைத்தானின் மீது கல்லெறிகிறேன் என்று, நெறிசல் ஏற்பட்டு ஹஜ் யாத்திரையின் போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அடிக்கடி இறக்கிறார்கள். உண்மையில் அல்லாவின் சக்தி பெரியதென்றால், அவர்களை அல்லா காப்பாற்றியிருக்கலாம். ஆனால், சாத்தான் வெற்றிக் கொள்வது போல, அவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். திராவிட-நாத்திக வீரமணி “அல்லா ஏன் காப்பாற்றவில்லை”, என்று கேட்டு, “விடுதலையில்” கட்டுரை எழுதவில்லை. பகுத்தறிவாளிகள்-நாத்திகர்கள்-அறிவுஜீவிகளான தபோல்கர், பன்ஸரே, கல்புர்கி, முதலியோரும் பேசவில்லை, புத்தகங்களில் குறிப்பிடவில்லை. இதிலிருந்தே, நாத்திகம் என்று சொல்லிக் கொள்பவர்கள் மற்ற மாநிலங்களிலும் “செக்யூலரிஸ” ரீதியிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, இஸ்லாம், கிறிஸ்தவம் என்றால், அவர்களது பகுத்தறிவு, நாத்திகம், அறிவுஜீவித்தனம் முதலியவை வேலைசெய்யாது. ஆனால், முஸ்லிம்களே அவ்வாறு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதாவது, ஷிர்க் விசயத்தில் இரட்டைவேடம் போடுகிறார்கள் என்று தெரிகிறது.

Hazarat Tipu Urs celebrated.4

Hazarat Tipu Urs celebrated.4

ஒப்பீடு எப்படி செய்வது?: கஜினி மொஹம்மது, கோரி மொஹம்மது, மாலிக்காபூர், ஔரங்கசீப், போன்றோர்களின் ஜெயந்தியை கொண்டாடாமல் ஏன் இருக்கிறார்கள் என்ரும், செக்யூலரிஸ இந்தியர்கள் கேட்கலாம். அவர்கள் எல்லோரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து பாராடவில்லை எனலாம், ஆனால், இந்தியர்களுக்கு அவர்கள் வீரர்களா, தேச பக்தர்களா, தேசபிமானிகளா? எந்த வகையில் அவர்கள் வைக்கப்படுவர்? நாதிர்ஷா, 1739 படையெடுத்து வந்து, தில்லியைக் கொள்ளையெடித்தான். ஆக, நாதிர்ஷா ஜெயந்தியையும் கொண்டாடுவார்களா? வெளியிலிருந்து வந்தவர்கள், இங்கேயே தங்கி விட்டவர்கள், என்றுதான் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள். ஆனால், இந்திய தேசத்துவத்தை யார் ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பது மூலம் அடையாளம் காணப்படுகின்றனரே? அரவிந்தர், வ,உ.சி.ஐயர், சவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் போன்றோரை, இந்தியர்கள் இன்றும் சில சித்தாந்த குழுக்கள் ராஜதுரோகிகள் என்று தான் பேசி-எழுதி வருகின்றனர். ஆனால், பெரும்பான்மையினர், அவர்களை மாபெரும் தலைவர்களாக, போராளிகளாக, தேச பக்தர்களாகத்தான் கருதப்பட்டு வருகிறார்கள். பிறகு எப்படி திப்பு எல்லா தியசக்திகளையும் விடுத்து, புண்ணியவானாக, தேவனாக, தூய்மையானவனாக கருதப்பட முடியும்?

© வேதபிரகாஷ்

13-11-2015

[1] For over 10 years Tipu remained in constant touch with the Shankaracharya and even the last recorded letter written in 1798 request the Swami to offer worship , three times a day to Lord Isvara and perform the Chandihavana, a special oblation, for the destruction of enemies and the prosperity of the government.

https://toshkhana.wordpress.com/2012/03/25/tipu-sultan-and-the-ring-of-rama/

[2] Dr. A.K. Shastry has published the contents of 47 letters from Tipu sent to the Sringeri Shankaracharya Sri Sacchidananda Bharati III who presided over the affairs of the mutt from 1753-1799 A.D. These letters range from Tipu Sultan enquiring after the Shankaracharya’s welfare to requesting him to pray for Mysore’s prosperity and even requesting his Holiness to cast a horoscope for Tipu. Tipu’s letters breathe an honest spirit of veneration for the Sringeri Guru.

https://toshkhana.wordpress.com/2012/03/25/tipu-sultan-and-the-ring-of-rama/

[3] http://www.sringeri.net/jagadgurus/sri-sacchidananda-bharati-iii-1770-1814

[4] https://toshkhana.wordpress.com/2012/06/04/the-light-of-islam-tipu-sultan-as-a-practising-muslim/

[5] http://www.islamicvoice.com/june.99/tippu.htm

[6] https://toshkhana.wordpress.com/2012/10/19/remembering-a-martyr-220th-urs-e-shareef-of-hazrath-tipu-sultan-shaheed/

[7] Mahathama Gandhi, Collected works, Volume.XXIII, Appendix, 13, p.569.

[8] Mahathama Gandhi, Collected works, Volume XXVI, p.214.

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (5)

நவம்பர் 12, 2015

The Sword of tipu sultan - praises Allah for killing kafirs

The Sword of tipu sultan – praises Allah for killing kafirs

மைசூர் மஹாராஜாவும், திப்பு சுல்தானும்: திப்பு சுல்தான் உடையாரிடமிருந்து அரசை அபகரித்துக் கொண்டான். தானாக எந்த அரசையும் உருவாக்கிவிடவில்லை. அப்பொழுது, கர்நாடகம் “மைசூர்” கலாச்சாரத்தை மையமாகக் கொண்டிருந்தது. “மைசூர் மஹாராஜா” என்று ஒரு மதிப்பு இருந்தது. “நீ என்ன பெரிய மைசூர் மஹாராஜாவா?” என்று சாதாரண மக்கள் கேட்கும் அளவுக்கு அவர் இருந்தார். கலை, விஞ்ஞானம், இசை போன்றவை ஆதரிக்கப்பட்டன. இதனால், “மைசூர்” என்ற அடைமொழியுடன் பல வார்த்தைகள் மட்டுமல்லாது, அவற்றுடன் தொடர்புடைய இசை, கலை என்று பல உருவாகின. சமையலைப் பொறுத்த வரையில் மைசூர் பாகு, மைசூர் ரசம், மைசூர் போண்டா, மைசூர் பகோடா, என்று அன்றும், மைசூர் சந்தன சோப், மைசூர்பா என்று இன்றும் பல தோன்றின. கர்நாடக சங்கீதம், இசை என்ற வழக்கும் உருவாகின. கலைஞர்கள், வித்வான்கள், பண்டிதர்கள், என்று பலரும் மைசூர் அரசால் ஆதரிக்கப்பட்டனர். ஆனால், திப்புவின் ஆட்சியில் பாரசீகத் திணிப்பு இவற்றை தடுத்தது. ஜிஹாதி மதவெறியில் அனைத்தும் பாதிக்கப்பட்டன. ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பது மட்டில், அவன் இந்திய தேசியவாதியாகி விட முடியாது. தன்னுடைய வாழ்விற்காக அவன் பலவழிகளைக் கையாண்டான். பிரான்ஸ், இரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பு கொண்டதும் அதற்காகத்தான். ஜிஹாத் மூலம் இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று தனது கடிதங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.

Studio fire during shooting of tele-serial 'The Sword of Tipu Sultan kills more than 40- 1989

Studio fire during shooting of tele-serial ‘The Sword of Tipu Sultan kills more than 40- 1989

கத்தி அல்லது குல்லாமற்றும்திப்புவின் கத்தி: “கத்தி அல்லது குல்லா” என்ற கொள்கையைத்தான் கடைபிடித்தான்[1]. ஆனால், முஸ்லிம் ஆசிரியர்கள் அவற்றை வேறுவிதமாக திரித்து விளக்கம் கொடுத்து, அவனை “ஆங்கிலேருக்கு எதிரான போராளி” போன்று சித்தரிக்கின்றனர்[2]. “கத்தி” என்றால் கத்தி முனையில் மதமாற்றம், அதாவது, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள் அல்லது செத்து மடி”, என்ற குரூரமான கொள்கையைக் கடைபிடித்தான். அதனால் “கத்தி” என்றால், “இந்துக்களுக்கு சாவு” என்ற பொருளாகியது. அதனால் தான் “திப்புவின் கத்தி” (The sword of Tipu Sultan) என்றபோது, அவர்கள் அதனை எதிர்த்தனர். ஏனெனில், அது அவர்களின் மதம், கலாச்சாரம் மற்றும் தேசிய கௌரவத்தை இழிவுபடுத்துவதாக இருந்தது. ஆனால், மல்லையா போன்றவர்கள் அதனை ஆதரிக்க முயன்றனர். கர்நாடகாவைப் பொறுத்த வரையில், ஜனதா கட்சிகள் திப்புவை அரசியலாக்கி ஆதாயம் தேடியுள்ளன. சாராய மன்னன் மல்லையா 2004ல் தனது ஜனதா கட்சியின் சார்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ராஜ்ய சபா எம்.பியான அவர், அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள, ரூ.1.5 கோடிகள் கொடுத்து, “திப்பு சுல்தானின் கத்தி” என்று லண்டனிலிருந்து ஏலத்தில் வாங்கி வந்தார். இதுவும், அப்பொழுதைய கர்நாடக தேர்தலை ஒட்டிதான் நடத்தப் பட்ட நாடகம் ஆகும்[3].

Tipu letters - cap or sword policy followed

Tipu letters – cap or sword policy followed

திப்புமற்றும்திப்புவின் கத்தி” – தீயசக்திகளின் சின்னங்கள்: கர்நாடகா மற்றும் கேரள கடற்கரையில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றும், மதமாற்றம் செய்தும், குரூரங்களை செய்ததால், திப்பு ஒரு தீயசக்தி, துர்தேவதை (evil force), விலக்கப்பட வேண்டியது ஒன்று, “சபிக்கப்பட்ட பெயர்” (cursed name) என்ற விதத்தில் கருதப்படுகிறது. அதனால், அப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் கூட அப்பெயரை தங்களது குழந்தைகளுக்கு வைப்பதில்லை. அவர்களது பாஷையில் சொல்வதானால், இரண்டுமே “சைத்தானின் சின்னங்கள்” ஆகும்[4]. திப்பு சுல்தானைப் பற்றிய வழக்குகள், பழமொழிகள் போன்றவையெல்லாம், அவனைக் கடுமையாக விமர்சிப்பதாகத்தான் இருந்துள்ளது. அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது, பார்த்தால் விளங்காது; எல்லாம் அழிந்து விடும் – நாசமாகி விடும்; குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவன் – கொல்கிறவன்; “திப்பு வருகிறான், என்று சொன்னால் அழுகின்ற குழந்தை அழுகையை நிறுத்தி விடும்” என்றெல்லாம் வழங்கி வருகின்றன. ஆனால், இப்பொழுது கர்நாடகாவில் காங்கிரஸ் போன்ற  கட்சிகள் அத்தகைய தீய சக்தி, தீய சின்னங்களை வைத்து ஆதாயம் தேட பார்க்கின்றன. ஆனால், இவற்றைப் பின்பற்றியவர்கள் அழிவைத்தான் தேடினர்.

Tipu satanic force killing many Hindus- Hindukush

Tipu satanic force killing many Hindus- Hindukush

தியசக்தி திப்பு அழிவை ஏற்படுத்தும் என்பது நிரூபனமானது: திப்பு சுல்தான் கத்தி [“Sword of Tipu Sultan”] என்ற தொலைக்காட்சி தொடரை தூர்தர்ஷனில் 1990ல் காண்பித்தனர், பிப்ரவரி 8. 1990 அன்று இந்த டிவி-சீரியல் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவில் பெருத்த தீவிபத்து ஏற்பட்டதில் 62 பேர் கருகி இறந்தனர்[5]. இந்த சீரியலின் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு 13 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, 72 ஆபரேஷன்களை செய்து கொண்டு வெளிவந்தார். உயிரிழந்தவர்கள், விளம்பர நிறுவங்கள் நஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்கள்[6]. அத்தீ விபத்து நடந்த போதும், இது எடுத்துக் காட்டப்பட்டது. கத்தியை வாங்கிய மல்லையாவும் திவாலா நிலையை அடைந்து, பல குடும்பங்களின் வாழ்க்கையினைக் கெடுத்தான். இப்பொழுதும், சித்தராமைய்யாவின் “திப்பு ஜெயந்தி” இரண்டு உயிர்பலிகளைக் கொண்டது. இன்னும் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கவேண்டும்.

Tipu satanic force killing many kafirs- Hindukush

Tipu satanic force killing many kafirs- Hindukush

திப்புவின் ஜோதிட நம்பிக்கை: திப்புவுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை இருந்தது. இதனால், தனது அரசவையில் பிரத்யேகமாக ஜோதிடர்களை வைத்திருந்தான். அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுத்தான். இவ்விதத்தில் தான் அவன் சில கோவில்களுக்கு மானியம் கொடுத்தது, பூஜை செய்தது போன்றவையெல்லாம் நிகழ்ந்துள்ளன. இந்துமதத்தின் மீதான மதிப்பு அல்லது உண்மையிலேயே காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. மேலும் 1790ற்குப் பிறகு அவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கணித்துச் சொன்னதால், அவனது அத்தகைய ஈடுபாடு அதிகமாகியது. சிருங்கேரி சங்கராச்சாரியுடனான தொடர்பும் இவ்வகையில் ஏற்பட்டது தான். அவருடைய காலில் விழுந்தான் என்றும் குறிப்புகள் உள்ளன[7]. இதையெல்லாம், ஆசாரமான முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?

The real Tipu sultan, tyrant- believing horoscope

The real Tipu sultan, tyrant- believing horoscope

ஔரங்கசீப், திப்பு சுல்தான், கருணாநிதி: ஔரங்கசீப் கூட கோவில்களுக்கு மானிய வழங்கினான் என்று சில சரித்திராசிரியர்கள் எழுதுகிறார்கள். இதெல்லாம், இக்கால கருணாநிதி போன்றது. அவரும் தங்களால் தான் திருவாரூர் ஆழித்தேர் ஓடியது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார். ஆனால், உண்மையில் அந்த ஆளின் இந்து-விரோதத்தை எல்லோரும் அறிவர். அவர் காலத்திலும் சில கோவில்களுக்கு கும்பாபிசேகம் நடந்தது. அதாவது முதலமைச்சர் என்ற ரீதியில், இந்து அறநிலைத் துறையின் கீழ் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதால், அழைப்பு இதழ்களில் முதல் பக்கத்திலேயே, கருணாநிதியின் புகைப்படம் தான் போடப்பட்டது. இதெல்லாம் சாதாரண விசயம். இவர்கள் இல்லாமல் இருந்திருந்தாலும், அவை தானாக நடந்திருக்கும். அதாவது பெரும்பான்மையினர் இந்துக்களாக இருப்பதினால், அரசு ஆதரவு இருந்தாலும், இல்லாமலிருந்தாலும், காலக்கிரமப்படி நடக்கவேண்டிய கிரியைகள், சடங்குகள், விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.  கருணாநிதிக்கும் ஜோதிட நம்பிக்கை உள்ளது. ஆகவே, இவர்கள் (ஔரங்கசீப், திப்பு சுல்தான், கருணாநிதி) கோவில்களுக்கு மானியம் கொடுத்தது அந்த ரீதியில் தான்! இனி திப்பு விவகாரத்தை விவரரமாகப் பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

13-11-2015


[1] Tipu Sultan’s notorious jihâd – Islamic war-slogan – was SWORD (death) or CAP (Islamic honour, i.e. forcible conversion), a cruel option for a hapless Hindu population.

[2]  Prof. B. Shaik Ali, International Relations of Tipu Sultan, Islamic Voice, Monthly,   Vol 13-02 No:146    *   FEBRUARY 1999/ RAMADAN 1419H ;email: editor@islamicvoice.com

http://islamicvoice.com/february.99/tippu.htm=

[3] The timing of Mr. Mallya’s announcement of his acquisition made some six months ago has not gone unnoticed, coming as it does a fortnight before the first phase of polling in Karnataka. However, the working president of the Janata Party said: “This is not political. It’s personal.” Mr. Mallya’s party has fielded candidates in more than a hundred Assembly constituencies and half-a-dozen Lok Sabha constituencies in the coming elections in Karnataka. He described the sword as a unique piece of history and said that he bought it as a `proud Kannadiga’ in order to restore the `rightful legacy’ to Karnataka.

http://www.thehindu.com/2004/04/08/stories/2004040805881200.htm

[4] If Tipu Sultan was a much-loved and respected Muslim ruler, as claimed by his present-day admirers, why is it that even Muslim do not name their children as Tipu, either in Mysore or in Malabar? Obviously, the name itself is a cursed name. Anyway, that is the belief in the entire West Coast and Mysore

[5] http://indiatoday.intoday.in/story/studio-fire-during-shooting-of-tele-serial-the-sword-of-tipu-sultan-kills-more-than-40/1/323127.html

[6] http://indiatoday.intoday.in/story/the-sword-of-tipu-sultan-fire-sanjay-khan-faces-legal-action-for-negligence/1/323237.html

[7] When the astrologers predicted an approaching malefic period from 1790 onwards and the combined forces of the British, the Nizam and the Marathas started surrounding Srirangapatanam, Tipu Sultan panicked and therefore did some good deeds – offering land-grants and even pujas and feeding Brahmin – mainly to ward off the evil effects and to get assistance from his Hindu subjects in his war efforts. He was reported to have even fallen prostrate before His Holiness Sringeri Shankaracharya and sought the latter’s pardon and blessings (Sakthan Thampuran by P. Raman Menon, and History of Mysore by Lewis Rice).