Posted tagged ‘வீடியோ’

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

மார்ச் 16, 2017

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

girls-raped-at-muslim-orphanage-07-03-2017

அனைத்துலக பெண்கள் தினத்திற்கு முன்னர் கற்பழிப்பு விவகாரம் வெளிவருவது:  மார்ச்.8 அனைத்துலக பெண்கள் தினம் என்ற நிலையில் 07-03-2017 அன்று வயநாடு, யதீம் கானாவில் உள்ள முஸ்லிம் அனாதை இல்லத்து டீன் – ஏஜ் பெண்கள் கற்பழிக்கப் பட்ட செய்தி வந்துள்ளது. பெரிய இடத்து புள்ளிகள், அதிலும் முஸ்லிம்கள் சமந்தப்பட்டிருப்பதால், உடனடியாக பெண்கள் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்து, முடிவுகள் பெறப்பட்டுள்ளன[1]. வெளியாட்கள் எப்படி அந்த அனாதை இல்லத்து 15-17 வயது பெண்களை சாக்லெட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது[2]. பாலியல் வன்முறையில் இருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மத்திய, மாநில அரசுக்கள் தரப்பில் எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து வன்முறை தாக்குதல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரள மாநிலத்தில் ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

wayanad-muslim-orphanage-muttil-google-map

வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் – யதீம் கானா: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கால்பேட்டாவின் முட்டில் பகுதியில் உள்ள முஸ்லிம் அமைப்பு நடத்தும்ஆதரவற்றோர் விடுதியில் 14-15 வயதுகள் கொண்ட 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் [Wayanad Muslim Orphanage Muttil, WMO[3]] 1967ல் தொடங்கப்பட்டது. முன்னரே பல்வேறு நிதிமோசடிகளில் சம்பந்தப் பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து நிதி பெறும் இது, பலவிதமான வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளது. கடவுளின் சொந்தமான தேசம் என்று பீழ்த்திக் கொள்ளும், இந்த கேரள மாநிலம், இவ்வாறு அடிக்கடி பாலியல், செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்புகள் முதலியன தொடர்ந்து நடந்து வருவது திகிலடையச் செய்வதாக இருக்கிறது[4]. இங்கு 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்ளனர்.

 medical-report-confirms-rape-of-students-of-yateen-khana

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிகளில் ஒருவர் விடுதிக்கு அருகே உள்ள கடையில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் வெளியே வந்து உள்ளார். அப்போது விடுதியை சேர்ந்த பாதுகாவலர் அவரிடம் விசாரித்து உள்ளார். விசாரணையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுமிகள் ஆசைவார்த்தை கூறப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரியவந்து உள்ளது[5]. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 6, 7 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வரும் போலீசார் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை[6]. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக எந்த ஒரு முழு தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி பாதிரியாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

rape-in-kerala

சாக்லேட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியுமா?: விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் சிறுமிகள் பள்ளிக்கு சென்றபோது அவர்களை வழிமறித்து இனிப்புகளை வழங்கி உள்ளனர் மற்றும் அவர்களுக்கு செல்போனில் ஆபாச பாடங்களை பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனை வெளியே கூறினால் கடும் விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என மிரட்டிஉள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அந்த பகுதி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெட்டிக் கடைக்காரரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது, மொத்தம் 7  சிறுமிகளுக்கு மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கும் சாக்லேட் கொடுத்து, மயக்கமடைந்த பின்பு அவர் காம லீலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதோடு, அந்த 7 சிறுமிகளையும் தனது நண்பர்கள் சிலருக்கும் அவர் விருந்தாக்கியது தெரிய வந்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்[7].

yateen-khana-rape-persons-close-to-management-among-the-accused

வழக்கு பதிவு செய்யப் பட்டது: இதெல்லாம் ஜனவரி 2017லிருந்து நடந்து வருகின்றது. இதையடுத்து அவரின் நண்பர்கள் சிலரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.  சில சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியும், சில சிறுமிகளை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டியும் பல மாதங்களாக அவர் அந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது[8]. சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தை கொண்டு  குற்றத்தில் ஈடுப்பட்ட 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்[9]. குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் தடுப்பு சட்டம் [the Protection of Children from Sexual Offences Act (POCSO) act] உட்பட 11 பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிறுமிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை[11]. இந்த சம்பவம் தொடர்பாக வயநாடு எஸ்.பி. ராஜ்பால் மீனா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].

 rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours

மெத்தப்படித்த மாநிலத்தில், இவ்வாறு நடப்பது எப்படி?: யதீம் கானா கற்பழிப்பில், அந்த அனாதை இல்லத்து நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களே சம்பந்தப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது[13]. அனாதை இல்லங்கள், பள்ளிகள்-கல்லூரிகள், வியாபார நிறுவனங்கள் என்பதோடு, அரசியல் தொடர்புகளும் இருப்பதால், முதலில் போலீசார் தயங்கினர். பெயர்களைக் கூட வெளியிடவில்லை. ஹாஸ்டலில் இருப்பவர்கள் இதில் சம்பந்தப் பட்டிருப்பதும் தெரிகிறது. இப்பொழுது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் உள்ளதால், பத்து நாட்கள் இடைவெளியில் இவ்வாறு கிருத்துவ மற்றும் முஸ்லிம் மதத்து மடாலயங்கள், சாமியார்கள் என்று பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது, எல்லோரையும் கலங்க வைத்துள்ளது. முழுக்க அரசியல்வாதிகள் இப்பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளது, வெளிவந்துள்ள விவகாரங்களை விட மறைக்கப் பட்டவை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஒரு பக்கம் கொலைகள், இன்னொரு பக்கம் இப்படி கற்பழிப்புகள் என்று அசிங்கப்படுகிறது. கேரளாவில் ஆறு மணி நேரத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்று புள்ளி விவரங்கள் கொடுக்கப் படுவது, அதைவிட கேவலமாக இருக்கிறது. மேலும் கேரளா எழுத-படிக்கும் கல்வியறிவில் இந்தியாவில் முதன்மையாக இருக்கிறது. பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள், எவ்வாறு இத்தகைய ஆபாசமான, பாலியல், கொக்கோகங்களில் ஈடுபட முடியும்? உலக நாடுகளுக்கு நர்சுகளையும், கன்னியாஸ்திரிக்களையும் ஏற்றுமதி செய்கிறது என்ற பெருமையும் கொண்டுள்ளது கேரளா.

© வேதபிரகாஷ்

16-03-2017.

rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours-gods-own

[1] Mathrubhumi, Girls in Wayanad orphanage sexually abused: report, Published: Mar 7, 2017, 08:43 AM IST

[2] http://english.mathrubhumi.com/news/kerala/girls-in-wayanad-orphanage-sexually-abused-report-kerala-crime-news-1.1780392

[3] http://www.wmomuttil.org/contact/

[4]  Though, the media mentions it as “Yatheem Khana at Muttil in Kalpetta”, it has been pointed out specifically as the one that has been there started in 1967 and involved in financial irregularities earlier. As the WMO has many orphanages, educational institutions, commercial ventures, and other interests with political patronage and gulf-connerction, probably, the identity has been suppressed. Kerala has been ‘the God own country” and any God can do anything and ordinary men, particularly, secular Indians cannot ask anything. Now, ironically, the Communists have been ruling such “God owned country” and none knows what would happen there in coming days.

[5] தினத்தந்தி, ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம், மார்ச் 07, 11:07 AM.

[6] http://www.dailythanthi.com/News/India/2017/03/07110737/7-minor-girls-in-Kerala-orphanage-raped-for-2-months.vpf

[7] வெப்துனியா, ஏழு சிறுமிகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காம கொடூரன்அதிர்ச்சி செய்தி, Last Modified: புதன், 8 மார்ச் 2017 (15:48 IST)

[8] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/seven-girls-molested-in-kerala-man-arrested-117030800028_1.html

[9] தினமலர், கேரளாவில் ஆதரவற்றோர் இல்ல சிறுமிகள் பாலியல் பலாத்காரம் – 7 பேர் கைது, 07 மார்ச் 2017, 06:33 PM.

[10] http://www.dinamalarnellai.com/cinema/news/23902

[11] தினகரன், கேரள காப்பகத்தில் 7 சிறுமிகள் பலாத்காரம்: 6 வாலிபர்கள் சிக்கினர், 2017-03-08@ 00:39:27.

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=285339

[13] Kamudi.com, Yateem Khana rape: Persons close to management among accused, Posted on :15:06:31 Mar 7, 2017,  Last edited on:15:06:31 Mar 7, 2017

8–சிமி குற்றவாளிகள் கொலை – தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை மறைத்து உரிமைகள் பற்றி பேசுவது ஏன்?

நவம்பர் 1, 2016

8–சிமி குற்றவாளிகள் கொலைதீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை மறைத்து உரிமைகள் பற்றி பேசுவது ஏன்?

the-eights-simi-terrorists-but-got-killed-in-a-police-encounter8- சிமி பயங்கரவாதிகள் சிறையிலிருந்து தப்பி ஓட்டம்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் நகரில் 1977ம் ஆண்டு தோன்றிய இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு எனப்படும் ‘சிமி’ இயக்கம் [Students Islamic Movement of India (SIMI)] தீவிரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவ்வியக்கத்தின்மீது மத்திய-மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. முஸ்லிம்கள் இன்றும் இவர்களை ஆதரித்து வருகிறார்கள் என்பது, அவர்களது பெற்றோர், உற்றோர், மற்றோர் மற்றும் அரசியல்வாதிகளின் அறிக்கைகள் முதலிய காட்டி வருகின்றது. அவர்கள் செய்துள்ள கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடுப்புகள், சிறையிலிருந்து தப்பிச் சென்றது, மறுபடியும் குற்றங்கள் செய்தது, பிடிபட்டது, சிறையில் அடைக்கப்பட்டது முதலியவற்றை மறைத்தே அவ்வாறு செய்து வருகின்றனர். இதற்கு டிவிசெனல்கள் இடம் கொடுத்து விவாதம் செய்வது தான் திகைப்பாக இருக்கிறது. தீவிரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களிடம், அவர்களுக்கு சார்பாக, அவர்களது உரிமைகளை ஆதரிப்பவர்களிடம், அவர்களின் வழக்கறிஞர்கள் முதலியோரைக் கூப்பிட்டு அத்தகைய விவாதம் நடத்துவதில்லை.

bhopal-central-jail-from-where-the-simi-terrorists-escapedசிறையில் இருக்கும், அந்த சிமிதீவிரவாதிகளின் யோக்கியதை[1]: சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தொடந்து குற்றங்கள் செய்து வரும் இவர்களின் யோக்கியதை இதுதான்[2]:

1.       பிப்ரவரி 1, 2014 சோப்படான்டி, கரீம்நகர் மாவட்டம், ஸ்டேட் பாங்கில் ரூ 46 லட்சம் கொள்ளையடித்த வழக்கிலும் ஜாகிட் உஸைன் மற்ரும் செயிக் மஹபூப் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

2.       மே.1, 2014 அன்று பெங்களூரு-கௌஹாத்தி எக்ஸ்பிரஸில் குண்டு வைத்து, ஒரு இளம்பெண் கொலைசெய்யப்பட்ட மற்றும் 12க்கும் மேற்பட்டவர் படுகாயம் அடைந்த வழக்கு.

இதே வழக்கில் –

1.       ஜாகிர் உஸைன் / சாதிக் / விக்கி [Zakir Hussain, alias Sadiq, alias Vicky (32)]

2.       செயிக் மஹபூப் / குட்டு [Sheikh Mehboob alias Guddu (30)]

3.       எஜாவுத்தீன் [Ejazuddin (32)]

3.       ஜூன் 2014ல் பூனாவிலுள்ள பரஸ்கானா மற்றும் விஸ்ரம்பாக் என்ற இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன.

4.       செப்டம்பர் 2014ல் பிஜ்னோர், உபியில் ஒரு தற்செயலாக நடந்த குண்டுவெடிப்பு. அப்பொழுது மெஹ்பூப் குட்டுவின் தாய் நஜ்மா அங்கிருந்தாள்.

5.       டிசம்பர் 2014ல் பெங்களூரில், சர்ச் தெருவில், ஒரு உணவகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு [blast outside a restaurant in Bengaluru’s Chruch Street area in December 2014].

6.       பிப்ரவரி 2015ல், ஆர்.சி.புரத்தில் [Muthoot Finance in RC Puram] முத்தூட் நிதிநிறுவனத்தில் கொள்ளையடித்தனர்.

dinathanthi-graphics-about-jail-breal-and-simi-killingபோபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தசிமிகைதிகள் தப்பிச் சென்றது: 2015ல் எஜாவுத்தீன் நல்கொண்டா அருகில் தெலிங்கானா போலீசாரால் கொல்லப்பட்டான். அவ்வகையில், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தினர் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளாக நாட்டில் உள்ள பல சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில், போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘சிமி’ கைதிகள் எட்டுபேர் 31-10-2016 அன்று அதிகாலை 2-3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சிறையில் இருந்த ஸ்டீல் தட்டு, மற்றும் டம்ப்ளரால் காவலரின் கழுத்தை அறுத்துக் கொன்றனர்[3].  இதைத்தொடரந்து அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த போர்வையை பயன்படுத்தி மதில்சுவரை தாண்டி குதித்து, இந்த எட்டுபேரும் தப்பிச் சென்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன[4]. தப்பிச் சென்றவர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்[5]. தடைசெய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 8 பேர் சிறையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றதே, திட்டமிட்டு செய்தது என்று தெரிகிறது. இனி, கைதிகளுக்கு ஸ்டீல் டம்பளர், தட்டு முதலியவை கொடுக்கலாமா-கூடாதா என்ற ஆராய்ச்சி நடத்த வேண்டும் போலிருக்கிறது.

the-eight-simiதப்பிச் சென்றவர்களை எச்சரித்தும், மறுத்ததால் போலீஸார் சுட்டதில் 8-பேர் கொலை: போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்[7] இப்படி தமிழ் ஊடகங்கள் சுருக்கமாக செய்திகளை வெளியிட்டன. போபால் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த 8 தீவிரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்[8] என்று நீட்டிச் சொல்கிறது இன்னொரு தமிழ் நாளிதழ். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் மத்திய சிறையில் காவலரை சுட்டுக்கொன்று ஞாயிற்றுக் கிழமை 30-10-2016 அன்றிரவு 8 தீவிரவாதிகளும் தப்பிச்சென்றனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது என்கிறது இன்னொரு தமிழ் நாளிதழ்.  போபால் புறநகர் பகுதியில் உள்ள இன்கொடி என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் 8 பேரும் பதுங்கியிருந்தது தெரியவந்தது.  கிராமவாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.  இதையடுத்து, போலீசார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். தீவிரவாத தடுப்பு படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்தனர்[9]என்று தினத்தந்தி விளக்குகுறது. பயங்கரவாதிகளை சரண் அடைந்து விடுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதை ஏற்காமல் பயங்கரவாதிகள் போலீசாரை தாக்க முயன்றனர். இதனால், வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கியை பிரயோகித்தனர். அப்போது நடைபெற்ற  என்கவுண்டரில் பயங்கரவாதிகள்  8 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்[10]என்றும் தினத்தந்தி கூறியுள்ளது. இதனையடுத்து சிமி பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட என் கவுண்டரின் உண்மை தன்மை குறித்து கேள்விகள் எழுப்பட்டது.  ஊடகக்காரர்கள் அந்த 8-பேர் எப்படி அங்கு சென்றனர், ஊர்மக்கள் ஏன் போலீஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும் முதலியவற்றைப் பற்றி கூட விவாதம் நடத்தலாமே?

smi-terror-politicizedஅரசியலாக்கப் படும் என்கவுன்டர் வழக்குகள்: தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை அரசியல்வாதிகள் நினைத்துப் பார்ப்பதில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்கள் முஸ்லிம்கள் அதனால், அவர்களை ஆதரிக்க வேண்டும், அப்படி செய்தால் ஆதாயம் கிடைக்கும் என்ற எண்ணாத்தில் தான் காங்கிரஸ், ஆப் போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி சிமி பயங்கரவாதிகள் பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து தப்பியது எப்படி என்பது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றது.  அரவிந்த் கேசரிவாலும் அத்தகைய கோரிக்கை விடுத்துள்ளார். டிவிசெனல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், ஒவைசியைக் வைத்து, உரிமை போராட்டமே நடத்திக் கொண்டிருக்கின்றன. இனி, பாகிஸ்தான் இந்திய வீரர்களைக் கொன்றதை மறந்து, இதை வைத்துக் கொண்டு கதையை ஓட்ட ஆரம்பித்து விடுவர். எல்லையில் நடந்த அக்கிரமங்களுக்கு இந்திய ராணுவம் பதில் நடவடிக்கை எடுத்தற்குக் கூட, எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் தான், இதுவும் நடக்கிறது. அப்படியென்றால், எதிர்கட்சிகள் சிமி-தீவ்ரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன என்று விளக்கம் கொடுக்கலாமா?

© வேதபிரகாஷ்

01-11-2016

the-eight-simi-clear-faces

[1] The Hindu, Cadres of an outlawed group, with long list of terror cases, Updated: November 1, 2016 01:10 IST.

[2] http://www.thehindu.com/news/national/cadres-of-an-outlawed-group-with-long-list-of-terror-cases/article9288680.ece?textsize=large&test=1

[3] தினத்தந்தி, போபால் சிறைச்சாலையில் இருந்து 8 சிமி இயக்கத்தினர் தப்பி ஓட்டம், பதிவு செய்த நாள்: திங்கள், அக்டோபர் 31,2016, 8:53 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 8:53 AM IST.

[4] http://www.dailythanthi.com/News/India/2016/10/31085334/8-SIMI-activists-escape-from-Bhopal-jail-1-guard-killed.vpf

[5] மாலைமலர், சிறையில் இருந்து 8 ‘சிமிதீவிரவாதிகள் தப்பியோட்டம், பதிவு: அக்டோபர் 31, 2016 08:29.

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/31082923/1047882/8-SIMI-activists-escape-from-Bhopal-jail-1-guard-killed.vpf

[7] தினகரன், போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, Date: 2016-10-31 11:47:00

[8] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=255546

[9] தினத்தந்தி, போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை, பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 12:05 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 12:05 PM IST.

[10] http://www.dailythanthi.com/News/India/2016/10/31120513/8-SIMI-terrorists-who-earlier-today-fled-from-Bhopal.vpf

நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்தவனுக்கு மரண தண்டனை!

மார்ச் 30, 2010

நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்தவனுக்கு மரண தண்டனை!

ஒரு சவுதி மந்திரவாதி!

பெண்களை மந்திரத்தாலே வசியப் படுத்துவதில் வல்லவனாம்!

அவ்வாறே அவன் வசியப் படுத்தி நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்து விட்டானம்!

ஒரு பத்திரிக்கை சொல்வதென்னவென்றால், “காதிஃப் மந்திரவாதி” (the “Qatif sorcerer”) முதலில் பத்தாண்டு சிறைவாசம் மற்றும் 1000 கசையடி என்று தண்டனை அளிக்கப் பட்டதாம். பிறகு அது மரண தண்டனையாக மாற்றப் பட்டதாம்!

அல்-ரியாத் நாளிதழ் சொல்வதவது, அந்த அடையாளம் தெரியாத மனிதன் காதிஃப் என்ற கிழக்கு நகரத்தில் இருந்து பெண்களை பல ஆண்டுகளாக மிரட்டி பயமுறுத்தி வந்தானாம்.

முதலில் எந்த பெண்ணவது “காதல் மந்திரத்தால் கட்டுப் பட்டிருந்தால்”, அக்கட்டை பிரித்துவிடுவேன் என்று ஆசைக்காட்டுவானாம். அப்படி அவர்கள் – காதல் கட்டுண்ட பெண்கள், தங்களது “காதல்-மந்திர-கட்டை” அவிழ்க்க வரும்போது, இவன் அவிழ்த்து லீலைகள் புரிவானாம். அதுமட்டும் அல்லாது நமது லெனின் குருப் / குருப் லெனின் மாதிரி திருட்டுத் தனமாக வீடியோவையும் எடுத்து விடுவானாம்!

பிறகு அதை தன்னால் கற்பழிக்கப் பட்ட பெண்னிடம் காட்டி மிரட்டி தனக்கு தன்னுடைய “மந்திரத் தொழிலில்” உதவுமாறு வற்புறுத்துவானாம். அதாவது அப்படியே மற்ற பெண்களை அங்கு அழைத்து வருவது, இவன் கற்பழிப்பது என்று உதவி செய்யத் தூண்டி மிரட்டுவானாம், அவர்களும் பயந்து கொண்டு அவ்வாறே செய்து வந்தார்களாம், அதாவது பெண்களை அழைத்து வந்து, இந்த காமுகனிடம் மாட்டி வைத்து கற்பழிக்க தோதுவாக இருந்தார்களாம்.

அரபு நியூஸ் சொல்வதென்னவென்றால், அவன் பல கேமராக்களை அவ்வாறு மறைத்து வைத்துள்ளதாகவும், 200ற்கும் மேலாக அத்தகைய கலவி-சரச வீடியோ டேப்புகள், 180 கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் தன்னால் கற்பழிக்கப் பட்ட பெண்களின் விவரங்கள் முதலியவற்றை தன்னுடையா வீட்டில் வைத்திருந்தானாம். [நல்ல வேளை நம்மூர் ஆட்களாக இருந்தால் அதை ரூ. 500/- என்று போட்டு விற்றிருப்பார்கள், பாவம், நக்கீரன் ஜொல்லுவிடுவதும், சன் –  டிவி மூச்சு விடுவதும் தெரிகிறது / கேட்கிறது].

அல்-ரியாத் சொல்வதாவது, அவன் அவ்வாறு 350 மேலாக பல பெண்களை மயக்கியிருப்பான்

கடைசியாக அவன் ஒருவனிடத்தில் மாட்டிக் கொண்டானாம். அதாவது ஒரு பெண் அவனிடத்தில் அகப்பட்டு தப்பி வந்தபோது, அவள் சொன்ன விஷயம் வைத்துக் கொண்டு அவன் பிடிக்கப்பட்டானாம். இவ்வழக்கு சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷனிடத்தில் அனுப்பப் பட்டுள்ளதாம்.

சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் என்பது சவுதி மத-போலீஸார் ஆவார்கள்! அதாவது மததைக் காக்கு  போலீஸார்!

இந்தியாவிற்கும் இத்தகைய போலீஸார் இன்று தேவைப் படுகின்றனர்!