Posted tagged ‘வியாபாரம்’

சைராபேகம்-அஃபக் ஹுஸைன் தம்பதியர் நடத்திய விபச்சாரம் – 5,000 சிறுமிகள்-பெண்கள் வியாபாரம், கோடிகளில் வருமானம்!

செப்ரெம்பர் 1, 2016

சைராபேகம்அஃபக் ஹுஸைன் தம்பதியர் நடத்திய விபச்சாரம் – 5,000 சிறுமிகள்பெண்கள் வியாபாரம், கோடிகளில் வருமானம்!

G.B-Road-Delhiதில்லியில் நடக்கும் பலான தொழில்: தலைநகர் தில்லி பல்லாண்டுகளாகவே குழந்தை மற்றும் பெண்கள் கடத்தும் வேலைகளுக்கு மையாமாக இருந்து வருகிறது[1]. உலகத்தில் நடக்கும் இந்த கொடூரத் தொழிலில் சுமார் மூன்று கோடி / 30 மில்லியன் குழந்தை மற்றும் பெண்கள் இங்கிருந்துதான் கிடைக்கின்றன[2]. உலகத்திலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் தினமும் வந்து செல்வதால், விபச்சாரம் பல வடிவங்களில், மாறுபட்ட நிலைகளில், வெவ்வேறுவிதமான இடங்களில் நடைப்பெற்று வருகின்றது. இப்படி பல்லாண்டுகளாக நடைப்பெற்று வருவதால், இதில் அர்சியல்வாதிகள், போலீஸார் என அனைவரின் தொடர்புகளும் தெரிகின்றன. இப்பொழுது, ஏதோ இத்தம்பதியர் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டனர் போலும்.

Deccan Herald photo - Delhi arrestசின்டிகேட் விவகாரம் தெரிய வந்தது: டில்லியை அதிர வைத்த குழந்தை கடத்தல் கும்பலை, போலீசார் கைது செய்தனர். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. பிப்ரவரி 2016ல் கூட, ஸ்வரூப் நகர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை, பைக்கில் வந்த இருவர் தூக்கிச் சென்றபோது, போலீஸார், அவளை மீட்டனர்[3]. இதுதவிர 10 பேர் (இரு பெண்கள் உட்பட) இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். ஒரு வருடமாக இத்தகைய கடத்த்லில் ஈடுபட்டு வந்த இவர்களிடம் திடுக்கிடும் விவரங்கள் வெளிவந்தன. பிடிபட்டவர்களிடம் விசாரித்தபோது, தில்லியில் வேலை செய்து வரும் ஒரு சின்டிகேட்டைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன[4].

GB Road brothelசைரா பேகம்அபக் ஹுஸைன் கைது: இங்கு, சமீப காலமாகவே, அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்; ஆனால், போதிய ஆதாரங்களை தேடி வந்ததால் கைது-நடவடிக்கை தாமதித்துக் கொண்டே இருந்தது. சிறிது-சிறிதாக ஆதாரங்கள் கிடைத்தவுடன், அதிரடி நடவடிக்கையில் போலீஸ் இறங்கியது. இதை விசாரித்து வந்த போலீசார், அந்த கும்பலை நேற்று சுற்றி வளைத்தனர். தம்பதியான சாயிரா பேகம் [Saira Begum 45], அஃபக் ஹுசைன்   [Afaq Hussain, 50], ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்[5]. இவர்களுக்கு உதவியாக செயல்பட்ட, மேலும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.

அஃபக் ஹுஸைன்,- சைரா பேகம் 5000நேபாளம் முதல் தமிழகம் வரை பெண்கள் கடத்தல்அதிர்ச்சி தகவல்: இவர்களில், தம்பதியின் தலைமையில் குழந்தை கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கும்பல், அண்டை நாடான நேபாளத்தில் இருந்து, பெண் குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளது. மேற்கு வங்கம், அசாம், ஒடிசா, ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இருந்தும் குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளனர்.  இவர்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் விற்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலிருந்து, மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, கைகள் மாறுவதால், அடையாளங்களும் மாற்றப்படுகின்றன. போலி ஆவணங்கள் மூலம் இவையெல்லாம் தாராளமாக நடக்கின்றன.

Kotha no 64பெண்கள் ஏமாற்றப்படல், விற்கப்படல், விபச்சாரத்தில் தள்ளப்படல்: வேலை வாங்கித்தருதல், ஊரைச் சுற்றி காண்பித்தல், நல்ல இடத்தில் திருமணம் செய்து தருதல் போன்ற பொய்யான வாக்குருதிகளைக் கொடுத்து அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளி வாழ்க்கையினை சீரழித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அவர்களை அடித்து, உதைத்து, பலவிதங்களில் கொடுமை படுத்தி விபச்சாரத்தொழிலை வலுகட்டாயமாக செய்ய வைத்துள்ளனர். ரூ.1-2 லட்சங்களுக்கு அவர்களை விற்கவும் செய்தனர். பலவிதமான கஸ்டமர்களுக்கு / வாடிக்கையாளர்களுக்கு பலவிதமாக அனுபவிக்க பிடித்து வந்த சிறுமிகள், பெண்களை பலவிடங்களில் ஒளித்து வைத்தனர். அலமாரிகள், பூமிக்கடியில் உள்ள அறைகள், பெரிய பெட்டிகள், பீப்பாய்கள் போன்றவற்றில் அடைத்து வைத்தனர்[6]. அங்கேயே, சில சமயங்களை வாடிக்கையாளர்களை மகிழ்விக்க வற்புருத்தப் பட்டுள்ளனர்[7]. அந்த அளவுக்கு ஈவு-இரக்கம் இல்லாமல் நடத்தப் பட்டுள்ளனர்.

அஃபக் ஹுஸைன்,- சைரா பேகம்சைரா பேகத்தின் கதைஹைதராபாத் முதல் தில்லி வரை[8]: சைரா பேகம் தனது பெற்றோர் இறந்தவுடன் ஹைதராபாதிலிருந்து தில்லிக்கு வந்தவள். வேறெந்த வேலையும் கிடைக்காத நிலையில் கோதா எண்.58, ஜி.பி. சாலை [Kotha No. 58, GB Road] என்ற இடத்தில் விபச்சாரம் செய்ய ஆரம்பித்தாள். இப்பகுதி விபச்சாரத் தொழிலுக்கு பிரத்தி பெற்றது[9]. 1990ல் வெளிப்படையாக கூப்பிட்டு அழைத்ததால் மாட்டிக் கொண்டு, தண்டனையும் பெற்றாள். பிறகு, விபச்சாரத்தையே தொழிலாக்கிக் கொண்டாள். 2001லும் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றாள். ஆனால், வெளியே வந்ததும் மறுபடியும் தொழிலைத் தொடர்ந்தாள். இப்பகுதியில் மூன்று முதல் ஐந்து “பிராத்தல்களை” வைத்து நடத்துவாகத் தெரிகிறது. 35% தொழிலை தன் கீழ் வைத்துள்ளதாகத் தெரிகிறது[10].

அஃபக் ஹுஸைன், வயது 50. மொரதாபாத், உத்திரபிரதேசம்.அபக் ஹுஸைன் எப்படி சைராவுடன் சேர்ந்தான்?[11]: அஃபக் ஹுஸைனும் மொரதாபாத், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழையானதால், தில்லிக்கு வேலைத்தேடி வந்தான். ஒரு கான்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்தாலும், குறைந்த சம்பளாமே பெற்று வந்தான். இந்நிலையில் தான் 1999ல் சைராவுடன் தொடர்பு ஏற்பட்டது. அவளை 1999லேயே திருமணம் செய்து கொண்டு, இருவரும் அந்த விபச்சாரத் தொழிலை செய்ய ஆரம்பித்தனர். ஏஜென்டுகள், ஆட்டோ-கார் டிரைவர்கள், ஹோட்டல் மானேஜர்கள் என்று பலரை வைத்துக் கொண்டு தொழிலை அமோகமாக நடத்த ஆரம்பித்தனர். சைரா சிறையில் இருந்த போதும், ஹுஸைன் தொடர்ந்து அவ்வேலையை செய்து வந்தான்.

மஹாராஷ்ட்ராவின் குற்றச்சட்டத்தின் கீழ் கைது: தாங்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிந்து விட்ட நிலையில் தங்களுடைய சொத்துகளையும் வேறு பெயர்களில் மாற்றி விட்டனர். அதற்காகவே அவர்கள் பினாமி வியாபாரங்கள், ஏஜென்டுகள் என்று பலவற்றை வைத்திருக்கின்றனர். அந்நிலையில் தான், இப்பொழுது மஹாராஷ்ட்ராவின் [the Maharashtra Control of Organised Crime Act (MCOCA] குற்றச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் ஆகஸ்ட்.25, 2016 அன்று நடத்தப் பட்ட சோதனையில் விலையுயந்த நான்கு கார்கள் [Fortuners, Toyota Innovas, Hondas], ரூ.9 லட்சம் மற்றும் வங்கிக் கணக்குகள் முதலியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

சிறுமியர்பெண்கள் வாங்கி விற்பதில் ரூ.100 கோடி வருமானம்: பல பகுதிகளில், குழந்தையை கடத்தி விற்பவர்களிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தைகளை வாங்கி, இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம், 100 கோடி ரூபாய் வரையில் இந்த கும்பல் சம்பாதித்துள்ளது[12]. இதுவரை, 5,000 குழந்தைகளை கடத்திஉள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.ஏற்கனவே கைதானவர்கள் : குழந்தை கடத்தலில் ஈடுபட்ட அந்த தம்பதி, 1990 மற்றும் 2001ம் ஆண்டுகளில் இரண்டு முறை கைதானவர்கள். போதிய ஆதாரம் இல்லாததால், இந்த வழக்குகளில் இருந்து விடுதலை ஆகிவிட்டனர். அதன் பின்னும், தொடர்ந்து குழந்தை கடத்தலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். தில்லியில் இவ்வளவு நடந்து வந்த விவகாரங்கள் அமுக்கியே வாசிக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

01-09-2016

[1] Firstpost, Delhi is ‘hub’ of human trafficking in India , FP Staff  Oct 18, 2013 19:19 IST

[2] http://www.firstpost.com/india/delhi-is-hub-of-human-trafficking-in-india-1180501.html

[3] Police said they have also rescued a one-year-old child who was kidnapped from North-West Delhi’s Swaroop Nagar on Tuesday (02-02-2016). Two motorcycle-borne men had just swooped in on the child playing near his labourer parents and had sped away. Initially two persons were arrested in the operation that began at 8 pm on Thursday (04-02-2016). By Friday morning (05-02-2016), police had arrested 10 persons, including two women, in this connection. More arrests are likely, said Vijay Singh, DCP (North-West). The gang is learnt to be operating at least one year from now. They have already admitted to kidnapping and selling three children, the earliest being a year back from RK Puram in South Delhi. Further investigation into the racket is on.

The Hindu, Major child trafficking racket busted in Delhi, Updated: February 5, 2016 10:28 IST

[4] http://www.thehindu.com/news/cities/Delhi/major-child-trafficking-racket-busted/article8197174.ece

[5] தினமலர், 5,000 குழந்தைகளை கடத்திய கும்பல் கைது, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.30, 2016.22:11.

[6] Indiatoday, Delhi child trafficking racket busted: Girls confined in almirahs, tunnels; forced to entertain clients in cubicles, Chirag Gothi  | Posted by Yashaswani Sehrawat, New Delhi, August 30, 2016 | UPDATED 11:54 IST.

[7] http://indiatoday.intoday.in/story/delhi-trafficking-racket-kothas-gb-road-girls/1/752020.html

[8] Indiatoday, Delhi: How a former sex worker ran a child trafficking racket worth crores, Anuj Mishra |  J.V. Shivendra Srivastava  | Edited by Samrudhi Ghosh

New Delhi, August 30, 2016 | UPDATED 18:18 IST

[9] NDTV news, Sex Racket Couple Trafficked 5000, Charged Under Organised Crime Law, Delhi | Written by Tanima Biswas | Updated: August 30, 2016 21:54 IST

[10] Afaq Hussain, 50, and his wife Saira Begum, 45, kingpins at Delhi’s notorious red light area GB Road,….. They allegedly ran three brothels and owned a third of the business in the area. Five of their assistants have also been arrested.

http://www.ndtv.com/delhi-news/sex-racket-couple-trafficked-5000-charged-under-organised-crime-law-1452341

[11] http://indiatoday.intoday.in/story/delhi-prostitution-child-trafficking-racket/1/752338.html

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1596555

 

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

ஓகஸ்ட் 17, 2016

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

அக்பர் கொலை 16-08-2016.பாத்தமுத்து

மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த மண்ணடி இரும்பு வியாபாரி அக்பர்: சென்னை மண்ணடி என்றாலே, இரும்புப் பொருட்கள், கழிவுகள் போன்றவைதான் ஞாபகம் வரும். வண்ண்டிகளால் அடைந்து கிடக்கும் தெரு, மக்கள் இப்படியும், அப்படியும் சென்று கொண்டிருக்கும் நிலை. இங்கு பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லிம்கள் தாம். சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 54). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி பாத்திமுத்து (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 16-08-2016 அன்று காலை வீட்டின் படுக்கையறையில் தொழில் அதிபர் அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்[1]. உடனே, பாத்திமுத்து சத்தம் போட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் மைத்துனர் சையதிடம் விசயத்தைக் குறினார். சையது போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்பர் பிணமாக இருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். தொழில் அதிபர் அக்பர் வசித்து வந்த வீடு 3 மாடிகளை கொண்டது. இந்நிலையில், 3-வது மாடியில் வசித்து வந்த அக்பர் வீட்டிலேயே படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது[2].

industrialist-murder-Mannady-Chennai-police-investigation_அக்பரை கொலை செய்த மனிதன் வெளியே இருந்து வரவில்லை: இரவு மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என்று முதலில் சொல்லப்பட்டது. அக்பர் கொலையுண்ட படுக்கையில் ரத்த கறை படிந்துள்ளது. அதனையும் போலீசார் சேகரித்துள்ளனர்[3]. படுக்கையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்[4]. கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை. அக்பரின் வீட்டில் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் யாரேனும் புகுந்து அவரை கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது[5]. ஆனால், பிறகு வீட்டில் எதுவும் திருடப்படவில்லை என்று தெரிந்தது. வியாபார போட்டியும் இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது[6]. பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[7]. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். வீட்டில் கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது அக்பருக்கு தெரிந்த நபர்கள் அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[8]. வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்தது என்றும் தெரிந்தது. மேலும், மோப்ப நாய் சோனா வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது[9]. இதனால், கொலையாளி வெளியே இருந்து வரவில்லை அல்லது உள்ளேயிருந்தவர் உதவியுடன் வெளியாள் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் தீர்மானித்தனர்.

அக்பர் கொலை 16-08-2016“சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை” என்று ஆரம்பித்து “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று முடிந்துள்ள செய்திகள்:  நேற்று, “சென்னையில் தொழில் அதிபர் கொலை நகை-பணம் கொள்ளை” என்று தான் செய்திகள் வந்தன. பிறகு, “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று செய்திகள் முடிந்துள்ளன. அதாவது, தாம்பத்திய உறசு முறைக்கு அப்பாற்பட்ட கள்ளக்காதல்-தொடர்பு தான் கொலைக்குக் காரணம் என்பது தெரிந்திருக்கிறது, இருப்பினும், “முஸ்லிம்கள் சமாச்சாரம்” என்று செய்தியாளர்கள் ஜாக்கிரதையாக இருந்து, “நகை-பணம் கொள்ளை” என்று கதையினை ஆரம்பித்து வைத்தார்கள். பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[10] என்று முன்னரே கூறப்பட்டது. பிறகு, அதனை ஏன் இன்னும் விளக்கவில்லை என்று தெரியவில்லை. கள்ளக்காதலால், மனைவி கணவனை கொலை செய்தாள், கணவன் மனைவியைக் கொலை செய்தான், ஏன் ஆட்களை வைத்தே கொலை செய்தாள் / செய்தான் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன, வந்துக் கொண்டிருக்கின்றன. அந்நிலையிலும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனநல வல்லுனர்கள் என்று யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வழக்கம் போல ஊறுகாய் ;போடுவது எப்படி, எந்த கடையில் எந்த புடவை வாங்கலாம், லிங்கின்ஸைப் போடுவது எப்படி என்று தான் வாத-விவாதங்களை செய்து கொண்டிருந்தனர். பெண்ணிய அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை.

அக்பர் கொலை 16-08-2016.தினத்தந்திபோலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு: தூத்துக்குடி காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அக்பர் (50). இவர் சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள வீட்டின் 3வது மாடியில் வாடகைக்கு வசித்தார். தொழிலதிபரான இவர், மண்ணடி பகுதியிலேயே இரும்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாத்திமுத்து (45). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது[11]. கள்ளக்காதலை கைவிடக்கோரி பாத்திமுத்து பலமுறை கெஞ்சியும் அக்பர் மறுத்து விட்டார். சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார். அடித்து உதைத்தனர் என்றும் இன்னொரு ஊடகம் குறிப்பிட்டது. 15-08-2016 இரவு அன்று 12.30 மணியளவில் குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது[12].  ‘‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்னையும் குழந்தைகளையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் செய்வது நியாயமா’’ என்று பாத்திமுத்து அழுது புலம்பினார். ஆனால் அவரோ பாத்திமுத்துவை எட்டி உதைத்தார். பிறகு போதையில் தனது அறையில் படுத்துள்ளார்.  அவரைப் பார்க்கக் பார்க்க ஆத்திரமுற்ற பாத்திமுத்து வீட்டிலிருந்த இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து அவரது கழுத்தில் சராமாரியாக 3 முறை வெட்டியுள்ளார்[13]. மேலும் ரத்தம் கொட்டியதை பார்த்ததும் பாத்திமுத்துக்கு மயக்கம் வந்துவிட்டது. அரிவாளை துணியில் சுற்றி பீரோவுக்கு அடியில் தள்ளிவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] தினத்தந்தி, கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 2:45 AM IST.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் தொழிலதிபர் கொலை.. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கொடூரம்!, By: Ganesh Raj, Published: Tuesday, August 16, 2016, 17:48 [IST]

[3] தினத்தந்தி, சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை, பதிவு செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST

[4] மாலைமலர், சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை: நகைபணம் கொள்ளை?, பதிவு: ஆகஸ்ட் 16, 2016 12:03.

[5] http://www.dailythanthi.com/News/State/2016/08/16151929/Kill-the-industry-leaders-in-Chennai-5-kg-jewel-robbery.vpf

[6] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=96671

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/businessman-murdered-chennai-260381.html

[9] தமிழ்முரசு, மண்ணடியில் பயங்கரம்கழுத்து அறுத்து தொழிலதிபர் படுகொலை; மனைவி, கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை, 8/16/2016 . 3:33:44 PM

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[11] The Times of India, Woman kills sleeping hubby, tells children to wake him up, TNN, Chennai edition, Aug 17, 2016, 04.17 AM IST.

[12] http://timesofindia.indiatimes.com/city/chennai/Woman-kills-sleeping-hubby-tells-children-to-wake-him-up/articleshow/53731735.cms

[13] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

இந்திய தேசிய கொடி எரிப்பும், ஐ.எஸ் கொடி எரிப்பும்: முஸ்லிம்களின் போலித்தனம், தேசவிரோதம், தீவிரவாத ஆதரவு!

ஜூலை 28, 2015

இந்திய தேசிய கொடி எரிப்பும், .எஸ் கொடி எரிப்பும்: முஸ்லிம்களின் போலித்தனம், தேசவிரோதம், தீவிரவாத ஆதரவு!

ஐ.எஸ் கொடி

ஐ.எஸ் கொடி

.எஸ் தீவிரவாதிகளின் கொடியை எரித்ததற்கு காஷ்மீர் முஸ்லிம்கள் கலாட்டா, ஆர்பாட்டம்: இந்தியாவில் எல்லாமே விசித்திரமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன, அதிலும் காஷ்மீர் என்றால் கேட்கவே வேண்டாம். ஜூலை 18 2015 அன்று ஐசிஸ் கொடியை எரித்ததற்காக கலாட்டா, ஊரடங்கு என்று 14-07-2015, செவ்வாய் கிழமையிலிருந்து நடந்து வருகிறது. விஷமிகள் வதந்திகளைப் பரப்பி விடுவார்கள் என்று அரசு உடனே முன்னெச்சரிக்கையாக ஜி.பி.ஆர்.எஸ்.சேவையை முடக்கி விட்டது[1]. போலீஸார், பாதுகாப்புத் துறையினர், தெருக்களில் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்தினர். விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தல் ஆட்கள் ஐசிஸ் கொடியின் மீது, கலிமா-தாயபா எழுதி எரித்ததாக உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்[2]. எங்களுக்கு ஐசிஸ் கொடியை எரிப்பதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை, ஆனால், அவர்கள் ஒரு கருப்புக் காகிதத்தால் ஐசிஸ் கொடி போன்று செய்து, அதில் கையினால், குரான் வசனங்களை எழுதி எரித்தனர் என்று விளக்கம் அளித்தனர்[3]. அதனால், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூச்சலிட்டனர்.  ஐ.எஸ் எப்படி அதே வாசகங்களை தங்களது கொடிகளில்[4] வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

Curfew in rajouri

Curfew in rajouri

ஊடகங்களின் பாரபட்ச செய்தி வெளியீடுகள்: ஊரடங்கு உத்தரவை மீறி 15 முஸ்லிம்கள் கலாட்டா செய்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத் ஆட்களைக் கேட்டதற்கு, நாங்கள் கொடியைத்தான் எரித்தோம் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது எங்களுக்குத் தெரியாது என்றனர்[5]. உண்மையில் நாங்கள் ஆர்பாட்டக்காரர்களை ஐசிஸ் கொடியில் அவ்வாறு எழுதப்பட்டிருப்பதை எதிர்க்கச் சொன்னதாகக் கூறினர்[6]. ஐ.பி.என்-சி.என்.என் இந்த செய்தியை வெளியிட்டு, “Protests in Rajouri after VHP burns IS flag, curfew imposed”, என்று தலைப்பிட்டுள்ளது விசமத்தனமாக உள்ளது[7]. இதே செய்தியை மற்ற ஊடகங்களும் அப்படியே சில மாறுதல்களுடன் வெளியிட்டுள்ளன. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று மாவட்ட மாஜிஸ்திரேட் தீப்தி உப்பால் தெரிவித்து உள்ளார். இருப்பினும் ஐ.எஸ். தீவிரவாதம் கொடி எரிக்கப்பட்ட விவகாரத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கைதுசெய்யப்படுவார்கள் என்பதை மறுத்துவிட்டார். தீப்தி பேசுகையில், தீவிரவாத இயக்கம் மற்றும் தேசத்திற்கு எதிரான இயக்கங்களின் கொடியை எரிப்பது என்பது தேசபற்று பணியாகும், என்று கூறினார். “நாங்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடியை தான் எரித்தோம், ஆனால் அதில் என்ன எழுதப்பட்டு இருந்தது என்று எங்களுக்கு தெரியாது,” என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் ராமாகாந்த் துபேய் தெரிவித்து உள்ளார்[8].

IndiaTv-Rajori-protest-final

IndiaTv-Rajori-protest-final

முஸ்லிம்கள் கலாட்டா, கல்-எரிதல், ஊர்-அடங்கு உத்தரவு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரியில் போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நாடுகளின் அரசுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. தங்களுக்கு எதிரான வெளிநாட்டவர்களை பிணைக் கைதிகளாக  பிடித்து கொன்று குவிப்பதோடு பெண்கள்,  குழந்தைகளை கூட மிக கொடூரமாக அவர்கள் கொலை செய்வது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் ரஜொரி நகரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடியை விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[9]. இதனை கண்டித்து போலீசார் மீது இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். ஐ.எஸ். அமைப்பின் கொடியை எரித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பதற்றம் நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க போலிசார் மற்றும் ராணுவத்தினர் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்[10].

kashmir-Pakistan flag shown

kashmir-Pakistan flag shown

ஐ.எஸ் கொடியை எரித்தால், முஸ்லிம்களுக்கு ஏன் கோபம் வருகிறது?: தீவிரவாதத்தை எதிர்ப்பதும், அவர்களது சின்னங்களை எரிப்பதும் எப்படி குற்றமாகும் என்று வி.எச்.பி உள்ளூர் தலைவர் கேட்டார்[11]. ஹுரியத் கான்பரன்ஸ் என்ற இந்தியவிரோத அமைப்பும் இதற்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இப்படியே ஜம்மு முஸ்லிம்களின் மீது சதிகளைத் திணித்துக் கொண்டே இருந்தால், காஷ்மீர் பள்ளத்தாகிலிருந்து, பெரிய எதிர்ப்பு கிளம்பும், அதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தது[12]. ஜே.கே.எல்.எப்.பின் ஆட்கள் மற்றும் தனி எம்.எல்.ஏவான ஷேக் அப்துல் ரஷ்ஹித் [ independent MLA Shiekh Abdul Rashid ] முதலியோரும் ஆர்பாட்டத்தில் இறங்ககினர் இருப்பினும் தடுக்கப் பட்டு கைது செய்யப்பட்டனர்[13]. இதே முகமதியர்கள், ஐ.எஸ் மற்றும் பாகிஸ்தான் கொடியேந்தி ஆர்பாட்டம் செய்தபோது, இந்திய-விரோத கோஷங்கள் இட்டபோது, ஏன் எதிர்க்கவில்லை என்று தெரியவில்லை. ஜூலை 25 அன்று கடையடைப்பு போராட்டம் வேறு நடத்தியிருக்கிறார்கள்[14]. அதற்கு அழைப்பு விடுத்தது, காஷ்மீர் வணிகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு, காஷ்மீர் தொழிற்சாலைகள் ஒருங்கிணைப்பு, காஷ்மீர பொருளாதார கூட்டமைப்பு மற்றும் வழக்கம் போல தேச-விரோதிகளின் கட்சிகள் இத்யாதிகள். ஓட்டல்கள்-விடுதிகள் சங்கம், சுற்றுலா துறை, ஏஜென்டுகள் சங்கம், வக்கீல்கள் சங்கம், டாக்டர்கள் சங்கம், பள்ளிகள், கல்லூரிகள் எல்லாரும் கலந்து கொண்டனர்[15]. ஆக இங்கும், முஸ்லிம்கள், முஸ்லிம்களாகத் தான் செயல் பட்டிருக்கின்றனரே அன்றி, இந்தியர்களாக செயல்படவில்லை. பிரிவினைவாதிகள், தேசவிரோதிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள், தீவிரவாதிகளை ஆதரிப்போர் என்று எல்லோரும் சேர்ந்து, தங்களை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதை கவனித்த மற்ற இந்திய முஸ்லிம்களும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, தங்களது செக்யூலரிஸத்தை வழக்காம் போலக் காட்டிக் கொண்டு அமைதியைக் காத்தன. செக்யூலரிஸப் பழங்களைப் பற்றி கேட்கவே வ்டேண்டாம், அவை காணாமல் போய்விட்டன.

Protesters hold ISIS flag in Srinagar-TOI photo by Bilal Bahadur- October 2014

Protesters hold ISIS flag in Srinagar-TOI photo by Bilal Bahadur- October 2014

இந்திய தேசியைக் கொடியை எரித்தால் சந்தோஷம், பாகிஸ்தான் கொடியைக் காட்டினால் சந்தோஷம், ஆனால், ஐ.எஸ் கொடியை எரித்தால் கோபம் ஏன்?: பாவம், ஐசிஸ் கொடி கிடைக்காததால், அவ்வாறு கருப்புக் காகிதத்தை வைத்து கொடியைத் தயாரித்தார்கள் போலும். சரி, அதேபோல ஏதோ எழுதினார்கள் என்றால், அவர்களுக்கு அரேபிய, பாரசீக அல்லது உருது மொழி தெரியாதே, பிறகு எப்படி அவர்கள் குரான் வசனங்களை அக்காகிதத்தில் எழுத முட்டியும்? ஒருவேளை அதேபோன்று கிறுக்கியிருப்பார்கள். ஆகவே, ஒரு தார்மீக எதிர்ப்பைக் காட்டுவதற்காக அவர்கள் அவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்திய தேசியக் கொடிகளைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் எரித்து வருகிறர்கள் அதற்கு எந்த முஸ்லிமும், எம்.எல்.ஏவும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. உண்மையில் அது ராஜ-துரோக, தேசவிரோத குற்றமாக இருந்தாலும், நடந்து கொண்டே இருக்கிறது. ஊடகங்கள் அவற்றைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறர்கள். ஐசிஸ் முதல், பாகிஸ்தான் கொடி வரை கைகளில் ஏந்தி கொண்டு, ஆட்டி, ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள்.  இந்திய தேசக்கொடி பலமுறை எரிக்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் அவற்றை தாராளமாகக் காட்டி வருகின்றன. ஆனால், இதுவரை, யாராவது கைது செய்யப்பட்டார்களா, சட்டமீறல்களுக்காக, தண்டனை கொடுக்கப்பட்டதா, ஜெயிலுக்குப் போனார்களா என்றெல்லாம் தெரியவிக்கப் படவில்லை. ஊடகங்கள் அத்துடன் அமைதியாகி விடுவதுதான் வழக்கமாகக் கொண்டுள்ளன.

© வேதபிரகாஷ்

28-07-2015

[1]  Arun Sharma, Curfew continues to remain in force over IS flag burning in Rajouri , Indian Express, Published:July 22, 2015 9:51 am

[2] http://indianexpress.com/article/india/india-others/curfew-continues-to-remain-in-force-over-is-flag-burning-in-rajouri/

[3] It is being alleged that some VHP and Bajrang Dal activists made an IS flag using a black piece of paper, and wrote the holy inscriptions on it by hand, followed by the words “IS” and “Hai Hai’’. Later, local Muslim leaders clarified that while they had no objection to the burning of the IS flag, they were protesting against writing of holy inscriptions by hand. The protesters asked the police to register a case and arrest the culprits by Monday evening.

[4] The flag is black with the words La ‘ilaha ‘illa-llah – “There is no God but God” – emblazoned across the top in white in a somewhat coarse, handwritten Arabic script. It’s a very different kind of typeface from the more elaborate calligraphy on the Saudi flag, for example, that also includes this same shahada, or Islamic statement of faith. Even more rough around the edges is the white circle in the middle of the ISIS flag. Inside it are three words: “God Messenger Mohammed.” It’s an interesting choice of word order given that the second part of the shahada is “and Mohammed is God’s messenger.” http://time.com/3311665/isis-flag-iraq-syria/

[5] However, clarifying that it had no intention to hurt the sentiments of Muslims, the VHP, on the other hand, asked the protesters to demonstrate against the IS for writing holy inscriptions on its flag. “We had only burnt the IS flag. We did not know as to what was written on it in Persian,” the state VHP patron, Ramakant Dubey, said today.

[6]  http://www.greaterkashmir.com/news/jammu/curfew-in-rajouri-town-after-vhp-burns-is-flag/192233.html

[7] http://www.ibnlive.com/news/india/protests-in-rajouri-after-vhp-burns-is-flag-curfew-imposed-1023783.html

[8] http://www.dailythanthi.com/News/India/2015/07/22090023/Curfew-Imposed-in-Jammu-and-Kashmir-s-Rajouri-Over.vpf

[9] http://www.vikatan.com/news/article.php?aid=49886

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=157270

[11] http://indianexpress.com/article/india/india-others/tension-in-rajouri-over-burning-of-isis-flag-by-vhp-bajrang-dal/

[12] It cautioned that if this process is not stopped and “hatching of conspiracies against the Jammu Muslims not stopped, it will have serious consequences and provoke a strong reaction against this in Kashmir Valley.”

http://www.dailykashmirimages.com/news-hurriyat-g-condemns-burning-of-flag-with-%E2%80%98kalima-tayyaba-73058.aspx

[13] http://www.outlookindia.com/news/article/jklf-langate-mla-protest-against-burning-of-is-flag-in-jk/907536

[14] The bandh call was first issued by the Kashmir Chamber of Commerce and Industries, Federation Chamber of Industries, Kashmir, and the Kashmir Economic Alliance. It was later supported by the Traders and Manufacturers Federation and other groups. The JKLF and the moderate faction of the Hurriyat Conference, headed by Mirwaiz Umar Farooq, had also supported the shutdown call http://www.tribuneindia.com/news/jammu-kashmir/kashmir-shuts-against-rajouri-flag-burning/111324.html

The strike was also supported by a faction of Hurriyat Conference-led by Mirwaiz Umar Farooq, Yasin Malik-led Jammu Kashmir Liberation Front (JKLF) and High Court Bar Association (HCBA).

http://risingkashmir.in/news/kashmir-observes-shutdown-over-flag-burning-row/

Kashmir Hotel & Restaurant Association (KHARA), Travel Agents Society of Kashmir (TASK), Kashmir

[15] Handicraft Manufactures & Exporters Association, J&K Private Diagnostic Centers Association, Joint Committee of Private Schools among others also supported the strike call.

http://www.kashmirreader.com/valley-shuts-down-over-rajouri-flag-burning/

கஞ்சி குடிக்க ஐந்து நட்சத்திர ஓட்டல் – செக்யூலரிஸ அரசு, காபிர்கள் அழைப்பு, மோமின்களின் கூட்டம், எப்படி முடியும்?

ஓகஸ்ட் 4, 2013

கஞ்சி குடிக்க ஐந்து நட்சத்திர ஓட்டல் – செக்யூலரிஸ அரசு, காபிர்கள் அழைப்பு, மோமின்களின் கூட்டம், எப்படி முடியும்? AIADMK Iftar காபிர்கள் அதிலும் நாத்திகர்கள் அதிலும் இந்துவிரோதிகள் நடத்தும் இப்தார் பார்ட்டிகள்: அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது[1]:– “இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கி வரும் அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதல்அமைச்சர் ஜெயலலிதா, இஸ்லாமியப் பெருமக்களை கெளரவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்[2]. அதே போல் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர், முதல்அமைச்சர் ஜெயலலிதா, வருகிற 5–ந்தேதி (திங்கட்கிழமை) மாலை சென்னை, லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் இப்தார் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள் [அறிஞர்கள்[3]], தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், .தி.மு.. மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட கழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்”, இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[4]. இது ஜூலை 27ம் தேதி நடப்பதாக இருந்து ஏற்காடு எம்.எல்.ஏ பெருமாள் இறந்ததால் தள்ளிவைக்கப்பட்டது[5]. Dravidian Iftar or Iftar with Atheits முஸ்லிம்களே மாறி-மாறி போட்டிப் போட்டுக் கொண்டு நடத்தும் பார்ட்டிகள்: ஓட்டல் இம்பீரியல் (எழும்பூர்) ஹாலில் திமுகவிற்கு மற்றும் அதிமுகவிற்கு என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தனித்தனியாக பார்டி நடத்தியது. போதாகுறைக்கு பிரிந்த கோஷ்டிகள் ஓன்றுக்கொன்று வசைமாறி பொழிந்து கொண்டன. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [the Indian Union Muslim League] சென்ற வாரம் திமுகவினருக்கு பார்ட்டி நடத்தியது. இப்பொழுது (ஆகஸ்ட் 2), பாத்திமா முஸாபர் அதிமுகவினருக்கு நடத்தியுள்ளார். வளர்மதி, எஸ். அப்துல் ரஹீம் முதலியோர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் தான் இரண்டு பார்ட்டிகளும் நடந்துள்ளன. “அவர்கள் வந்தார்கள், உட்கார்ந்தார்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசினார்கள். ஆனால், அவர்கள் தாம் கட்சி உடைய காரணமாக இருந்தார்கள்”, என்று பாத்திமா முஸாபர் திமுகவை விமர்சித்தார்[6]. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பாரதத்தை இரண்டாகப் பிரித்த மதவாத கட்சி, ஆனால், திராவிட கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்கின்றன. ரம்ஜான் வரும் போது, குல்லாப் போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கின்றன. இருநிலைகளிலும், முஸ்லிம்கள் நாத்திக திராவிட கட்சிகள் இந்துக்களை ஏமாற்றி வருகின்றன. Dravidian Iftar or Iftar with Atheits.2 மூன்றுபேரிச்சம்பழங்களும், முன்னூறுதின்பண்டங்களும்: “இப்தார்” என்றால் ரமதான் / ரம்ஜான் மாதத்தில் உபவாசத்தை, உண்ணாநோன்பை முடித்துக் கொள்வது, அதாவது சூரியன் உதிக்கும் முதல் மாலை வரை உண்ணாமல் இருக்கும் முஸ்லிம்கள் பிறகு உண்பார்கள்.  பொதுவாக “மக்ரிப்” நேரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள் மொத்தமாக அல்லது குழுக்களாக சேர்ந்துண்டு அவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொள்வார்கள். முஹம்மது நபி மூன்று பேரிச்சம் பழங்களை உண்டு தனதுஅவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொண்டார். ஆனால், இன்று பல நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் பலவிதமாக உண்டு விழா நடத்துகிறார்கள். போதாகுறைக்கு இந்தியாவில், கட்சிக்கு ஒரு பார்ட்டி நடத்துகிறார்கள். “நன்றாக / விதவிதமாக சாப்பிடலாம்” என்று இதற்காக ஒரு கூட்டமே வருகிறது. Hosni Mubarak, Benjamin Netanyahu, Barrack Obama and others checking their watches for sunsetதீவிரவாதத்திற்கு எதிராக போரை நடத்தி வரும் ஒபாமாவே இத்தகைய பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார். BJP Shahnawaz Hussain, Ravi Shankar Prasad, Sushil Kumar Modi at an Iftar party in Patnaமுஸ்லிம்களின் விரோதி என்று சொல்லப்படும் பிஜேபியே இப்தார் பார்டி நடத்தி வருகிறது, அதில் முஸ்லிம்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். Iftar menu இப்தார் பார்ட்டிகள் பெரிய வியாபாரமாகி விட்டது: ரோஸா இப்தார், ரமதான் இப்தார், இப்தார் கரீம், இப்தார் பார்டி என்று குறிப்பிடும் இதற்கு அழைப்பிதழ்களும் கொடுக்கப்படுகின்றன. பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன.Iftaar_party_invitation_card_by_Raza786 இந்தியா முழுவதிலும், அரசு சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கு கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன. தவிர கட்சிகள் சார்பில், முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கும் கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன. sponsor-an-iftar-E-Flyerஇதற்காக “ஸ்பான்சர்சிப்” அதாவது ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியும் அழைப்பிதழ்கள் அனுப்பப் படுகின்றன. இவ்வாறு, இது ஒரு பெரிய வியாபாரமாகி விட்டது. ஓட்டல்களில் “இப்தார் மெனு” என்று போட்டு வியாபாரம் செய்கின்றனர். ?????????????????????? 2013-2014 ஆண்டுகளில்இம்மாதிரியானதமாஷாக்கள்அதிகமாகவேஇருக்கும்: தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இப்தார் பார்ட்டிகள் நடத்துகின்றன[7]. அடுத்த வருடம் தேர்தல் என்றால், இப்பார்டிகள் அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது.  காபிர்-மோமின் கூட்டணிகள் ஜோராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கும். இதில் திராவிடப் போராளிகளான கருணாநிதி, அன்பழகன் போன்றோர் குல்லாபோட்டும், கழற்றி வைத்தும் கஞ்சி குடிப்பர். “உள்ளம் கவர் திருடர்கள்” தாமே, குல்லாப் போட்டவர்கள், போடுகிறவர்கள் பொறுத்துத்தான் போவார்கள். வேதபிரகாஷ் © 04-08-2013


[3] தினமணியில் “அறிஞர்கள்” என்றும், மாலைமலரில் “பெருமக்கள்” என்றும் உள்ளது.
[5] Iftar party Chief minister and AIADMK supremo J Jayalalithaa has called off her Iftar party on July 27, following the sudden demise of Yercaud  MLA Perumal. http://timesofindia.indiatimes.com/Iftar-party/speednewsbytopic/keyid-50082.cms
[6] “They came and sat here, and their leader gave a speech appealing for unity among Muslims. That was ironic, for they were the very people who caused the split in our party,” said Fathima, lashing out at the DMK. She had to start a splinter group of the IUML after being sidelined for addressing a press conference ahead of the 2011 Assembly polls, where she had hit out at both her party organisation for making compromises and the DMK for taking the IUML for granted. http://newindianexpress.com/cities/chennai/IUML-group-hosts-Iftar-for-AIADMK-ministers/2013/08/03/article1715558.ece

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

பிப்ரவரி 28, 2013

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

தொழிலதிபருக்கு மிரட்டல் கடிதம் ஏன்?: முன்னர், இந்திய முஜாஹித்தீன் இ-மெயில்கள் மூலம் டிவி-செனல்களுக்கு வெடிகுண்டு வைத்து மக்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்று அனுப்பி வைத்துள்ளது. இம்முறை கடிதம் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது. அப்படியென்றால், ரதன் டாடாவிற்கும் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். இல்லை, மற்ற எல்லா தொழிலதிபர்களுக்கும் மிரட்டல்கள் வந்திருக்க வேண்டும். இப்பொழுதுதான், ஐரோப்பிய குழுமம், மோடி மீதான தடையை நீக்கிக் கொண்டு, வியாபார ரீதியாக பேச்சுகள் தொடங்கியுள்ளன. ஆகவே, இந்திய பொருளாதார முன்னேற்றத்தை அல்லது குஜராத்தின் வளர்ச்சியைத் தடுக்க இம்மாதிரியான மிரட்டல் வந்திருக்க வேண்டும்.

 

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்: பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்[1].  ஒரு அடையாளம் தெரியாத மர்ம நபர் குரியர் மூலம் இந்த கடிதம் மும்பை ரிலையன்ஸ் அலுவலகத்துக்கு வந்தது, அதாவது, செக்யூரிடியிடம் 24-02-2014 அன்று கொடுக்கப்பட்டது[2]. 26-02-2013 அன்று எஸ்.பி. நந்தா, ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், துணைத் தலைவர், போலிஸ் கமிஷனர் சத்யபால் சிங்கை சந்தித்து புகார் அளித்துள்ளார்[3]. அதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டுள்ளது[4]. கடிதம் கொடுத்து சென்றவரையும் தேடி வருகிறார்கள்.

 

கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?: வெள்ளைக் காகிதத்தில் எழுதப்பட்ட அதில் –

  1. குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை ஆதரிப்பது முஸ்லீம்களை அவமதிப்பது போன்றது
  2. குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்தி கொள்ளாவிட்டால் முகேஷ் அம்பானியையும்,
  3. அவரது 27 மாடி ஆன்டில்லா – வீட்டையும் தாக்குவோம் என்றும்,
  4. ஏனெனில் அது வக்ப் சொத்தை அபகரிக்கப் பட்டுக் கட்டப்பது என்பதால் (Accusing him of grabbing the Waqf Board property at Altamount Road to build his house)
  5. தங்களது கூட்டாளியான முஹம்மது டேனிஷ் அன்சாரி (Mohammed Danish Ansari) என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

டேனிஷ் என்பவன் யார்?: டேனிஷ் என்பவன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஏனெனில், அதே பெயரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

  1. டேனிஷ் முஹம்மது அன்சாரி[5] தர்பங்கா, பீகாரைச் சேர்ந்தவன். பகல் பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்னர், அவனிடத்தில் தங்கியிருந்தான்[6]. தீவிரவாதி யாஸின் பட்கலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜனவரியில் கைது செய்யப்பட்டான்.
  2. மற்றும் 2008 அகமதாபாத் வெடிகுண்டு[7] குற்றங்களுக்காக இன்னொரு டேனிஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.
  3. இன்னொருவன் டேனிஷ் ரியாஸ் அல்லது சையது அஃபாக் இக்பால் என்பதாகும்.

 

இக்கடிதம் போலியா, உண்மையா?: இக்கடிதம் போலியாக இருக்கும் என்றாலும்[8], மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இக்கடிதம் உண்மையென்றால், தனிப்பட்ட நபருக்கு, அனுப்பிய முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும், ஏனனில் இந்தியன் முஜாஹித்தீன் அவ்வாறு முன்னர் யாருக்கும் கடிதம் அனுப்பியது கிடையாது. இருப்பினும், தேசிய புலனாவுக் கழகமும் இதைப் பற்றி விசாரித்து வருகிறது[9]. தீவிரவாத எதிர்ப்புப் படையும் இதனை ஆய்ந்து வருகிறது, ஏனெனில் கடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் பொறுப்பேற்று ஐந்து முறை டிவி-செனல்களுக்கு இ-மெயில்கள் அனுப்பியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது[10].

 

© வேதபிரகாஷ்

28-02-2013


[3] On Tuesday, Reliance vice-president SP Nanda filed a police complaint after meeting with police commissioner Satyapal Singh.

[5] The letter also did not mention the full name of the IM operative in custody. Three people of the same name were arrested in various cases, but police believe the demand is for the release of Mohammed Danish Ansari who was arrested in January for giving shelter to the Bhatkal brothers.

[7] The police said the Danish, whose release is demanded in the letter, is Danish Riyaz alias Syed Afaque Iqbal, who was arrested for his role in the 2008 Ahmedabad blasts.

Read more at:http://indiatoday.intoday.in/story/indian-mujahideen-narendra-modi-mukesh-ambani/1/251980.html

[10] Anti-terrorism squad (ATS) sources said the IM has in the past sent at least five emails to news channels claiming responsibility for blasts.

http://timesofindia.indiatimes.com/india/Cops-tighten-Mukesh-Ambanis-security-after-threat/articleshow/18720646.cms