Posted tagged ‘விசா’

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

ஒக்ரோபர் 13, 2016

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள்உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது  – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

kadayanallur-subahani-haja-moideen-bomb-making

கோயம்புத்தூர் தமிழ்நாடுகேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது: இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ தென்மாநில ஐ.ஜி அலோக், சூப்பிரண்டு விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன் கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த ஐந்து பேரை பிடித்தனர். 03-10-2016 அன்று கேரளாவைச் சேர்ந்த ஹாஜா மொஹித்தீன் திருநெல்வேலியில் பிடிபட்டான்[1]. இவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[2]. கோயம்புத்தூரில், குண்டுவெடிப்பு நடந்து, கலவரம் ஏற்பட்ட பிறகு கூட, அங்கு, இவ்வாறு தீவிரவாத செயல்களுக்கு உள்ளூர்வாசிகள் ஒத்துழைப்பது, கவலையாகத்தான் உள்ளது. கோயம்புத்தூர் தமிழ்நாடு-கேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது என்பது போன்று தெரிகிறது.

is-jihadi-from-tirunelveli-dinamani-cutting

சென்னை தொடர்புகள் திகைக்க வைக்கின்றன: கைது செய்யப்பட்ட 6 பேரில் அபு பஷீர்‌ என்பவர் கோவையின் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கேரளா திருச்சூரைச் சேர்ந்த ஸ்வாலி முகமது என்கிற யூசுப் உட்பட மேலும் ஒருவர் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் சில நாட்கள் தங்கிவிட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர்களுடன் கோவை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வரும் நவாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து செல்போன், ‘லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைச் சேகரித்ததாகவும் தெரிகிறது. மேலும், தென்னிந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் முக்கியமான பிரபலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முக்கியமாக, இவர்கள் அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்மீது கொண்ட ஈர்ப்பால், அந்த அமைப்புக்காக வேலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது[3].

gone-for-hajj-returned-as-isis-terrorist

05-10-2016 அன்று கைது செய்யப்பட்ட சுபஹனி ஹாஜா மொஹிதீன்: இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து 3 பெண்கள் உட்பட 21 பேர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அது தொடர்பாகவும், கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட 6 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுபஹானி [K. Subuhan Abdullah (35)] அவரது மாமனார் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்[4]. கடையநல்லூரில் அவரது வீட்டில் தங்கியிருந்த போது அதிகாலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர். பின்னர் சுபஹனியை கொச்சிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. NIA குழு திருநெல்வேலியில் தங்கியிருந்த சுபாஹினியை கைது செய்து விசாரித்தனர். அவன் சிவகாசியில் வெடி தயாரிப்பாளர்களிடமிருந்து ரசாயனப் பொருட்களை வாங்கியுள்ளான்[5]. கைதான சுபஹானி ஐ.எஸ். ஆதரவாளரா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரையும் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் 06-10-2016 அன்று ஆஜர்ப்படுத்தி, விசாரணை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்[6].

mosques-dargahs-and-madrassas-should-teach-against-terrorism-to-create-awareness-among-the-muslim-younth

செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்த ஐசிஸ் போராளி[7]: கடையநல்லூரில் வசித்து வந்த சுபஹனி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் ஈர்க்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் அந்த அமைப்பில் சேர்ந்தார். பின்னர் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மெக்கா செல்வதாக கூறி விட்டு 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா விசாவில் சென்றார். அங்கிருந்து ஈராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டார். போரின் தீவிரத்தை தாங்க முடியாமல் ஐ.எஸ் அமைப்பில் இருந்து விலக முயன்ற சுபஹானியை அந்த அமைப்பினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்தியாவில் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுபஹனியை ஐ.எஸ். அமைப்பு விடுதலை செய்தது. விடுதலையான அவர் இஸ்தான்புல்லில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து தான் இந்தியா செல்ல உதவி கேட்டான். அதன்படி இந்திய தூதரக உதவியுடன் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இந்தியாவிற்கு சுபஹனி திரும்பி வந்தான்[8].

%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%b9%e0%ae%a9%e0%ae%bf

கடையநல்லூரிலிருந்து ஐசிஸுடன் தொடர்பு வைத்திருந்த போராளி: சபஹனி ஹாஜா மொஹ்தீன் பின்னர் அவர் கடையநல்லூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்கு ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தான். ஆனால், சில நாட்களில், மறுபடியும், இணையத்தளம் வழியாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டான். அந்த அமைப்பின் கட்டளைபடி சிவகாசியில் இருந்து வெடிமருந்து வாங்கி இந்தியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு சப்ளை செய்துள்ளான். மேலும் ஹவாலா பணம் மூலமும், தங்க நகைகள் மூலமும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சபஹனி பண பரிமாற்றம் செய்துள்ளார். விசாரணையில் இந்த விவரங்களை தெரிந்து கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து 05-10-2016 அன்று கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு தென்பிராந்திய ஐ.ஜி. அம்ரத் டங் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் சுபஹனியை நள்ளிரவில் நெல்லை மாவட்டம் குற்றாலம் அழைத்து வந்தனர். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சுபஹனியை பலத்த பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.

kadayanallur-org-says-kerala-is-terrorist-arrested-03-10-2016

கடையநல்லூரில் விசாரணை: அப்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. பிறகு, காலை 10 மணியளவில் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கடையநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சுபஹனியை ஆஜர்படுத்தி விசாரணையை தொடங்கினர். கடையநல்லூரில் யார்? யாருடன் அவருக்கு தொடர்பிருந்தது, ஹவாலா பணத்தை யார் மூலம் அவர் பெற்றார்? சிவகாசியில் யாரிடம் வெடி மருந்து வாங்கினார்? என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுபஹனியின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சுபஹனி கடையநல்லூர் அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அழைத்துவரப்படும் செய்தி அறிந்த கடையநல்லூர் நகைக்கடை வியபாரிகள் பலர் கடைகளை அடைத்திருந்தனர்.

is-jihadi-from-tirunelveli-indian-express

வீடு, நகைக்கடை முதலிய இடங்களில் விசாரணை / சோதனை[9]: தொடர்ந்து அவரது வீட்டில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.  அங்கு பள்ளிவாசல் தெருவில் உள்ள சுபஹானி வசித்து வந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. சுபஹனி மனைவியின் தாய் வீடு கடையநல்லூர் புதுமனை தென்வடல் தெருவில் உள்ளது. அங்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள், சுபஹனியின் மனைவியிடம் சுபஹனி வசித்து வந்த வீட்டின் சாவியை பெற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து ஒரு பழைய செல்போன் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்[10]. பின்னர் அவர் பணியாற்றிய நகைக் கடையிலும் விசாரணை மேற்கொண்டனர். கடையநல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுபஹனி ஹாஜாமொய்தீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது. சோதனையின்போது செல்லிடப்பேசி, சிம்கார்டு, கணினி நினைவகம் போன்றவற்றை தேசிய புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது[11]. 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நகைக்கடை பங்குதாரர் பேட்டி: இதற்கிடையே சுபஹனி ஹாஜாமொய்தீன் பணியாற்றிய நகைக் கடையின் பங்குதாரர் நயினாமுகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சரியாக நடந்து கொள்ளாத காரணத்தால் கடந்த 27ஆம் தேதியே [27-09-2016] அவர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர்தான் அவர் குறித்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது. வேலையை விட்டு நீக்கிய பின்னர் மோசமான வார்த்தைகளால் கட்செவி அஞ்சல் மூலம் எங்களை அவர் திட்டினார். இது தொடர்பான தகவல்களையும் நாங்கள் தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்[12].

© வேதபிரகாஷ்

13-10-2016

ஐசிஸ் சர்ட் அணிந்த முச்லிம் வாலிபர்கள் - ராமநாதபுரம் மசூதி

[1] Indian Express, Tamil Nadu: One more person linked to ISIS arrested by NIA in Kerala, By: Express Web Desk | New Delhi | Updated: October 4, 2016 5:56 pm.

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2575458.html?pm=home

[3]  விகடன், தமிழகத்தை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்… கேரளாவில் 6 பேர் கைது, Posted Date : 18:10 (03/10/2016); Last updated : 18:10 (03/10/2016).

[4] The Hindu, NIA picks up IS suspect from Kadayanallur, Tirunelveli October.4, 2016; Updated: October 4, 2016 02:21 IST.

[5] News18, Suspected ISIS Operative Arrested in Tamil Nadu, Was Planning Attacks, Press Trust Of India, First published: October 6, 2016, 2:46 PM IST.

[6] http://www.vikatan.com/news/india/69109-isis-terrorists-targeted-tamil-nadu-6-arrested-in-kerala.art

[7] மாலைமலர், .எஸ். தீவிரவாதி சுபஹனியை கடையநல்லூர் அழைத்து வந்து விசாரணை, பதிவு: அக்டோபர் 07, 2016 14:09

[8] http://www.maalaimalar.com/News/State/2016/10/07140918/1043769/kadayanallur-IS-extremist-investigation.vpf

[9] தினமணி, .எஸ். பயங்கரவாதியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை, By கடையநல்லூர் Last Updated on : 08th October 2016 08:21 AM

[10] http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/oct/08/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2578126.html?pm=478

[11] தினத்தந்தி, கேரளாவில் இருந்து .எஸ். பயங்கரவாதி சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து விசாரணை, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 12:45 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 4:15 AM IST

[12] http://www.dailythanthi.com/News/State/2016/10/08004534/And-brought-to-trial-cupahaniyai-Kadayanallur.vpf

விதிகளை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த இரு சவுதி அரேபியர்கள் கேரளாவில் கைது

திசெம்பர் 17, 2010

விதிகளை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த இரு சவுதி அரேபியர்கள் கேரளாவில் கைது

விதிகளை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த இரு சவுதி அரேபியர்கள் கேரளாவில் கைது[1]: கொல்லத்தில் இம்மாதம் – டிசம்பர் எட்டாம் தேதி டூரிஸ்ட் விசாவில் இந்தியாவிற்கு, இரண்டு சவுதி அரேபியர்கள் இங்கு வந்து நுழைந்துள்ளனர்[2]. சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்குள், இப்படி வருவது சகஜமாகவே இருந்துள்ளது. மேலும் சமீபத்தில் தீவிரவாதிகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் போக்குவரத்து அதிகம் இருப்பதால் போலீஸார்  கண்காணித்து வருகின்றனர். ஆகையால், விசா விதிகளை மீறி நுழைந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்[3].

மசூதி திறப்பு விழா: வளைகுடா நாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் தரும காரியங்களுக்கு என்ற பெயரில் வருகின்றது. அந்நியசெலாவணி சட்டப்பிரிவுகளுக்குட்பட்டு வரும் அப்பணம், மசூதி கட்டுவது மற்றும் தருமம் அல்லாத அதாவது தீவிரவாதிகளுக்கு உதவுவது போன்ற காரியங்களுக்கும் திருப்பிவிடப்படுகிறது. 1980ளில் அரேபிய ஷேக்குகள் வந்து தங்கி பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்[4]. அப்பொழுதெல்லாம் மதமாற்றம் செய்வதற்கு என்றுதான் பிரச்சினை வரும். சில நாட்களில் விவாதங்களுடன் அடங்கி விடும். ஆனால், இப்பொழுததோ தீவிரவாதம் என்ற பயம் வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தீவிரவாத கட்டுப்பாடு நடவடிக்கைகளில்  கண்ணுரில், எடக்காடு என்ற இடத்தில் மனப்புரம் மசூதியின் வளாகத்தில் வெடிகுண்டுகள், வெடிப்பொருள்கள் முதலியவை கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன[5]. இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லம் அருகே, குளத்துப்புழா தைக்காடு குன்னின்புரா பகுதியில், புதியதாக நிர்மாணிக்கப்பட்ட மசூதி திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு முன்பே அந்த டிரஸ்ட் அனுமதி இல்லாமல் அயல்நாட்டவர் யாரும் நிகழ்ச்சியில் பங்குக் கொள்ளக்கூடாது, பேசக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது[6].

அந்நியர் விழாவில் கலந்து கொள்ளுதல், பேசுதல்: அதில் சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் (Abdul Kareem Abdul Muhasin Al-Jameel 49 and Abdul Abdul Khader Sulaiman 52) மற்றும் அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் ஆகிய, இருவர் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாது மேடையில் பேசவும் செய்தனர்.  அதைத்தவிர அழைப்பிதழிலும் அவர்கள் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன. இதனல்ல் உள்ளூர்வாசிகளின் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகித்து விசாரணையை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் சவுதி அரேபிய நாட்டின் தூதரக அனுமதியோ, இந்திய நாட்டின் தூதரக அனுமதியோ பெறாமல், பயணிகள் விசா மூலம், கள்ளத்தனமாக நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்[7]. ஆயூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர்கள் குறித்து, ரகசிய தகவல் கிடைத்ததும், சடையமங்கலம் போலீசார் அவர்களை கைது செய்தனர். பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்களா எனவும், போலீசார் விசாரிக்கின்றனர். சவுதி அரேபியா தீவிவாத்தைதை ஏற்றுமதி செய்யும் நாடாகக் கருதப் பட்டு வருகின்றது[8]. இதைப் பற்றிய பயங்கரமான விஷயங்கள் சமீபத்தில் விக்கி-லீக்கில் கூட வந்துள்ளன. அதுமட்டுமல்லாது, அந்த அரசாங்கத்தை மதிக்காமலேயே தீவிரவாதத்திற்கு ஆதரவு, நிதியுதவி, புகலிடம் கொடுப்பது என்பது தொடர்ந்து நடந்து வருகின்றன. சமீபத்தில் நூற்றிற்கும் மேலாக அல்-கைதா தீவிரவாதிகளை அந்நாடு கைது செய்துள்ளது[9]. யேமன், சோமாலியா, எரிகத்ரிடயன், பங்களாதேஷ் என பல நாடுகளிலிருந்து ஹஜ் யாத்திரை என்ற பெயரில் வந்து தங்கி தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டியதாக, பாதுகாப்புப் படையினர் யேமன் நாட்டு எல்லைகளில் கைது செய்துள்ளனர்.

1. In the early 1990s, Amirul Azim, accompanied by Salauddin, the Sudanese instructor, entered India via Bangladesh and met Basheer and his associates  for discussing their future plans.

2. In August 1994, “Al-Sirat Al-Mustaqeem (The Straight Path)”, an Islamic journal published in Pakistan (Issue No. 33), carried an interview with Abu Abdel Aziz.  The journal, without identifying his nationality, reported  that Abu Abdel Aziz spoke perfect Urdu and that he had spent extended periods in Kashmir.  It was stated that  Abu Abdel Aziz’s followers, believed to be mostly Indian Muslims from the Gulf,  were part of the seventh battalion of the Bosnian Army (SEDMI KORPUS, ARMIJA REPUBLIKE BH).

3. Basheer, who must now be around 50, is from Parambayam in Kerala.

இப்பிரச்சினையின் கடுமை, கொடுமையான விளைவுகள், முடிவுகளை அறிந்து முஸ்லீம்களே இத்தகைய செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வேதபிரகாஷ்

© 17-12-2010


[4] இதைப் பற்றி கேரள சட்டமன்றத்தில் பெரிய அளவில் விவாதங்கள் எல்லாம் நடந்துள்ளன.