Posted tagged ‘வாஹாபி பயங்கரவாதம்’

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

மார்ச் 22, 2013

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

லக்னௌவில் மதங்களுக்குள் உரையாடல் என்ற ரீதியில் “வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து” ஒரு  மாநாடு மார்ச் 20ல் நடந்தது. ஆனால், தமிழ் இணைதளங்களில் இதைப் பற்றி பேச்சு-மூச்சு காணோம்.

வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதம் சவுதி அரேபியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அது முஸ்லீம் சமூகத்தையே பாதித்து வருவதாகவும், முஸ்லீம்களை தவறான பாதையில் எடுத்துச் செல்வதாகவும், இதனால் முஸ்லீம்களின் மதிப்புக் குறைந்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று மற்றவர்கள்  நினைக்கும்படி, பார்க்கும்படியான நிலை வந்திவிட்டது என்றும் விவாதிக்கப்பட்டது.