Posted tagged ‘வாரங்கல்’

தடைசெய்யப்பட்ட சிமி தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்படுவது எப்படி – தெலிங்கானா என்கவுன்டர்கள், முன்னர் நடந்த கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடிப்புகள் (2)

ஏப்ரல் 11, 2015

தடைசெய்யப்பட்ட சிமி தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்படுவது எப்படி – தெலிங்கானா என்கவுன்டர்கள், முன்னர் நடந்த கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடிப்புகள் (2)

சிமி கொல்லப்பட்டவர்கள்

சிமி கொல்லப்பட்டவர்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை (டிசம்பர், 2014) : 2013ல் மத்தியப் பிரதேச சிறையில் இருந்து தப்பியோடிய சிமி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. போலீசாரைக் கொலை செய்தது, கொலை முயற்சிகள், வங்கிக் கொள்ளைகள், மதங்களிடையே பதற்றத்தைத் தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் “சிமி’ இயக்கத்தைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப் பட்டனர். மத்தியப் பிரதேசத்தின் கண்ட்வா நகரச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும் காந்த 2013ம் ஆண்டு தப்பி ஓடினர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள இவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த 5 தீவிரவாதிகளும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் உத்தரவுப்படி இந்தியாவில் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக மத்திய உளவுத் துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

Telengana SIMI activities

Telengana SIMI activities

ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் அதிகாரி ஒருவருக்கும், பயங்கரவாதிகளைக் கையாளும் நபர் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் : பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் அதிகாரி ஒருவருக்கும், பயங்கரவாதிகளைக் கையாளும் நபர் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை இந்திய உளவு அமைப்பினர் ஒட்டுக் கேட்டதில் இந்தச் சதித் திட்டம் குறித்து தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அந்த உரையாடலில், “அவர்களுக்கு (5 பயங்கரவாதிகள்) ஒரு முக்கியமான திட்டம் தரப்பட்டுள்ளது. சில தினங்கள் காத்திருங்கள்’ என்று ஐ.எஸ்.ஐ. அமைப்பின் அதிகாரி கூறுவது இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபடுமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளுக்கு பிரத்யேக எச்சரிக்கைத் தகவலை அனுப்பி உள்ள மத்திய அரசு, அம்மாநிலங்களில் தப்பியோடிய தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கிறது. இந்த 5 பயங்கரவாதிகளில் குறைந்தபட்சம் 2 பேர் கடைசியாக கர்நாடகத்தில் இருந்ததை உளவுத் துறை கண்டறிந்ததாகவும், தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அவர்களது நடமாட்டம் காணப்பட்டதாகவும் உளவுத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தெலங்கானாவின் கரீம்நகரில் இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற வங்கிக் கொள்ளை, சென்னை சென்ட்ரலில் மே 1ஆம் தேதி இளம் பொறியாளர் கொல்லப்படக் காரணமான பெங்களூரு – குவாஹாட்டி ரயில் குண்டு வெடிப்பு, மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள ஃபாராஸ்கானா, விஷ்ராம்பாக் காவல் நிலையங்களில் ஜூலை 10ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஆகிய நாசவேலைகளில் இந்த தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே, மத்தியப் பிரதேச சிறையில் இருந்து தப்பியோடிய 5 பயங்கரவாதிகளில் ஒருவரான மெஹ்பூபின் தாய் நஜ்மா பீ சில மாதங்களுக்கு முன்பு கண்ட்வா நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார். எனவே, அவர் தன் மகனுடன் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரைக் கண்டு பிடிப்பதன் மூலம், தீவிரவாதிகளின் இருப்பிடத்தை எளிதாக கண்டறியலாம் என போலீசார் நம்புகின்றனர்.

Muslim population of Telengana

Muslim population of Telengana

தொடர்ந்து நிகழ்ந்து வரும் கொள்ளைகள், குண்டுவெடிப்புகள்: . இருப்பினும் எஞ்சியுள்ள சிமி தீவிரவாதிகள் துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள் முதலியவற்றைத் திரட்டி லஸ்கர்-இ-தொய்பா போன்ற இயக்கங்களின் உதவியுடன் தீவிரவாதச் செயல்களைத் தொடர்ந்து செய்ய தீர்மானித்தனர்.

1. பிப்ரவரி 2014ல் கரீம்நகரில் [February 1, 2014 bank robbery in Karimnagar-Telengana] சொப்படன்டி SBI கிளையில் ரூ.46 லட்சங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
2. மே 2014ல் [blast on a Bangalore-Guwahati train at the Chennai Central Station in May 2014] சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், ஒரு இளம்பெண் உயிரிழந்தார்.
3. ஜூன் 2014ல் பூனாவிலுள்ள பரஸ்கானா மற்றும் விஸ்ரம்பாக் என்ற இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன.
4. செப்டம்பர் 2014ல் பிஜ்னோர், உபியில் ஒரு தற்செயலாக நடந்த குண்டுவெடிப்பு. அப்பொழுது மெஹ்பூப் குட்டுவின் தாய் நஜ்மா அங்கிருந்தாள்.
5. டிசம்பர் 2014ல் பெங்களூரில், சர்ச் தெருவில், ஒரு உணவகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு [blast outside a restaurant in Bengaluru’s Chruch Street area in December 2014].
6. பிப்ரவரி 2015ல், ஆர்.சி.புரத்தில் [Muthoot Finance in RC Puram] முத்தூட் நிதிநிறுவனத்தில் கொள்ளையடித்தனர்.

இவ்வாறு தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு, அவர்கள் மறைந்து விடுகின்றனர். NIA கேரளா, உபி என்ற்று பலவிடங்களில் விசாரித்து இவிவரங்களை சேகரித்துள்ளது .

SIMI escaped from Indore MP jail October 2013

SIMI escaped from Indore MP jail October 2013

தடை செய்யப்பட்ட சிமி எப்படி வேலை செய்து வருகின்றது?: தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினர் எப்படி தொடர்ந்து வேலைசெய்து வருகின்றன? அவர்கள் இவ்வாறு பக்ல இடங்களுக்குச் சென்று வர, மற்ற காரியங்களை செய்து வர பணம் எங்கிருந்து வருகிறது? அவர்களை ஆதரிப்பது யார் போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இருக்கிறது. “பைசல் கும்பல்” என்கின்ற இந்த சிமி தீவிரவாதக் கூட்டத்தைப் பற்றிய விவரங்கள் தெரிய ஆரம்பித்தன . இக்கூட்டத்தில் இருப்பவர்கள்:
1. அஜாஜுத்தீன் [Aijajudeen]
2. அஸ்லம் [Aslam]
3. அமஜத் கான் [Amjad Khan],
4. ஜாகிர் உஸைன் [Zakir Hussain],
5. மெஹ்பூப் குட்டு [Mehboob Guddu]
02-04-2015 அன்று சூரியாபேட்டை காவல்நிலயத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த, இரு போலீஸாரை [Naga Raju],.. பைக்கில் வந்த இருவர் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். பால கங்கி ரெட்டி,, இன்ஸ்பெக்டர் [Bala Gangi Reddy, police inspector] மற்றும் சித்தைய்யா, உதவி இன்ஸ்பெக்டர் [Siddaiah, sub-inspector] காயமடைந்தனர் .

SIMI escaped from MP jail October 2013

SIMI escaped from MP jail October 2013

அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களின் வரைபடங்கள் வைத்திருந்த முனீர் அகமது கைது: இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு 2 மாநில அரசுக்கும் எச்சரிக்கை செய்தது. இதனால் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். குண்டூரில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற திருமலா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு தீவிரவாதி பயணிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தெனாலி ரெயில் நிலையத்தில் வந்து நின்ற அந்த ரெயிலை சோதனையிட்டு சந்தேகப்படும் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்ததால் போலீசார் அவரை கைது செய்து ரெயிலில் இருந்து இறக்கினர். விசாரணையில் அவனது பெயர் முனீர் அகமது என்பதும், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவனிடம், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களின் வரைபடங்கள் உள்ளது . அந்த கோவிலுக்கு செல்லும் பாதை, வெளியேறும் பாதை போன்ற குறிப்புகள் இருந்தது. எனவே அவன் சிமி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அவனிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். தெனாலி போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

வேதபிரகாஷ்
© 11-04-2015