Posted tagged ‘வளர்த்த கடா’

வாரணாசி / காசியில் குண்டு மறுபடியும் வெடித்ததில் ஒரு பச்சிளம் குழந்தை கொல்லப்பட்டது, 35 பேர் படுகாயம், 5 பேர் கவலைக்கிடம்

திசெம்பர் 8, 2010

வாரணாசி / காசியில் குண்டு மறுபடியும் வெடித்ததில் ஒரு பச்சிளம் குழந்தை கொல்லப்பட்டது, 35 பேர் படுகாயம், 5 பேர் கவலைக்கிடம்.

முஜாஜித்தீனின் ஜிஹாதி குண்டுக்கொலை வெறியாட்டம்: ஊடகங்களுக்கு நேற்று இரவு எட்டு மணி அளவில், “அல் அர்பி” என்ற பெயரில் கையெழுத்திட்டு, மும்பையின் மலாட் என்ற இடத்திலிருந்து மொபைல் மூலமாக ஈ-மெயிலில் இந்திய முஜாஜித்தீன் தாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்[1]. அதாவது, கம்பூட்டரிலிருந்து மொபைலுக்கு மாறியுள்ளனர் ஜிஹாதிகள். அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளது[2], “பாபரி மஸ்ஜித் முஸ்லீம்களுக்கு திரும்ப அளிக்கும் வரை இந்த தேதி இந்துக்களை பீடித்துக் கொண்டே இருக்கும்”.

இந்திய முஜாஜித்தீன்: இதனை உள்ளூர் தீவிரவாத கும்பல், சொந்தமண்ணின் ஜிஹாதி அல்லது சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. எது எப்படியாகிலும், வளர்த்த கடா முட்டுகின்ற கதையாகத்தான் உள்ளது. ஆமாம், இந்திய முஸ்லீம்கள் எல்லாம் நேரிடையாக அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்பதால்தான், இதனையிப்படி அழைக்கிறார்கள் போலும். ஆனால், விளைவு என்னமோ அத்தகைய அரேபிய தீவிரவாதம், பயங்கரவாத குரூரங்களைக் கொண்டு தான் இந்த வகையும் உள்ளது. போதை மருந்து உண்டவன் தாயையே, சகோதரியையே, ஏன் மகளைக்கூட  கற்பழிப்பானாம், அது போல இந்த வகையும், சொந்தங்களையே கொன்று குவித்து வருகிறது. இதை பச்சைத் தீவிரவாதம், முஸ்லீம் பயங்கரவாதம், என்றெல்லாம் சொல்லமல் இருப்பச்து நோக்கத்தக்க்கது.

 

இரண்டு வயது குழந்தை பரிதாபமாகக் கொல்லப்பட்டது: குண்டு வெடித்து சிதறிய துகள்கள் வயற்றில் குத்தியதால், குழந்தை பரிதாபமாகக் கொல்லப்பட்டது. பிஞ்சு உடல் தாங்குமா, அதைவிட, அந்த கோவாப் படுகொலைகள் போல, அந்த குழந்தையை, சுவரில் அடித்தே கொன்றிருக்கலாம். தொழிற்நுட்பம் மாறியதால் குண்டு வெடித்து கொல்கிறார்கள் போலும். இனியும் எத்தனை குழந்தைகளை அலியிடப்போகிறாறர்களோ தெரியவில்லை.

வாரணாசியில் வெறியாட்டம்: இந்தியாவின் புகழ்பெற்ற கோயில் நகரங்களின் ஒன்றான வாரணாசியில் இன்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கங்கை ஆற்றின் கரையோரத்தில் தினமும் மாலையில் தீப ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். இன்று அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக “ஷீட்லா காட்” / தச-அஸ்வமேதகட் பகுதியில் சுமார் 5000 பக்தர்கள் வழக்கம்போல திரண்டிருந்தனர்[3].

ஆரத்தி எடுத்து, பக்தி பரவசத்தில் இருக்கும்போது குண்டு வெடிப்பு: ஆரத்தி நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், மாலை 6.30 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் பக்தர்களிடையே பதற்றம் நிலவியது .வாரணாசியில் இன்று மாலை வழக்கம் போல ஆரத்தி நடக்கும் வேலையில், திடீரென்று கண்டு வெடித்ததில், 20 க்கும் மேற்மட்டவர்கள் காயமடைந்தனர். குண்டுவெடிப்பின் தன்மை, உபயோகப்படுத்தப்பட்டுள்ள வெடிபொருள் விவரங்கள் முதலியன தெரியவில்லை என்றாலும், அங்கு, அவ்வேளையில், பிரார்த்தனை நேரத்தில் கண்டு வெடிப்பு நிகழ்த்தியுள்ளது, மிகவும் கூரூரமான மனித உருவிலுள்ள மிருகத்தின் மனத்தைக் காட்டுகிறது. இது குறித்து போலீசார் கூறுகையில், 7 அல்லது 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சேதங்கள் குறித்த முழுமையான தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு மிகச்சிறிய குண்டுவெடிப்பு என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டும், உள்ளூர் ஜிஹாதியும்: உள்ளூர் தீவிரவாத கும்பல், சொந்தமண்ணின் ஜிஹாதி அல்லது சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் “உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு” என்ற முறை இத்தீவிரவாதிகளால் உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இங்கும் அதேமுறையிலான குண்டுதான் உபயோகப்படுத்தப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2006ல் லஸ்கர் தீவிரவாதிகளால் குண்டுகள் வெடிக்கப்பட்டதில் குறைந்த அட்சம் 29 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டவர் படுகாயம் அடைந்தனர். ஆனால் இந்த குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள், போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர். இரண்டு குண்டு வெடிப்புகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. குண்டு வைத்தவன், அந்த பகுதிகளை நன்றாக அறிந்தவனாக இருக்கிறான். பலதடவை வந்து நோட்டமிட்டும் இருக்கிறான் என்றது நன்றாகவே தெரிகிறது. உள்ளூர் ஜிஹாதி என்றால் அப்படித்தான் இருப்பார்கள் போல இருக்கிறது. சன் டிவியின் ஊடக குண்டு வெடிப்பிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றும் ஆராய வேண்டியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் நடத்திய முஸ்லீம்கள் போராட்டம் / ஆர்பாட்டம்: பாபர் மசூதி இடிப்பு தினத்தைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி சங் பரிவாரங்களால் இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இருந்த இடத்தில் மீண்டும் பாபர் மசூதியைக் கட்டித் தரவேண்டும் என்றும் மசூதி இடிப்பில் தொடர்புடைய பாஜக தலைவர்களான எல்.கே. அத்வானி உள்ளிட்டவர்களைக் கைது செய்யக் கோரி ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. 06-12-2010 அன்று கோயம்புத்தூரில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமுமுக பொதுச் செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாபர் மசூதி நிலம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். உயர் நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு வழக்கில் நியாயமான தீர்ப்பு விரைவில் வழங்கவேண்டும்[4]. இந்தப் பிரச்சனை தீரும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம் என்று கூறினார்.

தீவிரவாதிகளை ஆதரித்து பேசுகின்றவவர்களுக்கு பாதுகாப்பு, மற்றவர்களுக்கு கைது: இதற்கிடையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை வெற்றி தினமாக அறிவித்து ஊர்வலம் செல்ல முயன்ற சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் தமுமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இத்தகைய பாரபட்ச போக்கும் தீவிரவாத்தை ஊக்குவிக்கத்தான் செய்கிறது. அதாவது தங்களை ஒன்றும் செய்யமுடியாது என்ற எண்ணம் மனதில் வளர்கிறது. அமைதியாக வாழவேண்டும் என்றால், முஸ்லீம்கள் இத்தகைய ஆக்ரோசத்தன்மை, எதிர்ப்புத்தன்மை, எதிரித்தன்மை, விரோத மனப்பாங்கு முதலியவற்றை விடவேண்டும், இல்லையெனில், ஊடகங்கள் அயமுறுத்துவது போல, உண்மையிலேயயே ஆரஞ்சு தீவிரவாதம் வந்தாலும் வரலாம்.

வேதபிரகா

08-12-2010


[4] இவர்கள் எப்படி அந்த ஜிஹாதிகள் மாதிரியே, அதே வாந்த்தைகளை, மொழியை உபயோகிக்கின்றனர் என்அதை நோக்கத்தக்கது.