Posted tagged ‘வதந்தி’

மெகந்தீ – இதுவதந்தீ ; பெண்கள்அச்சம் ; ரம்ஜான்நாளில்பொய்தகவல்பரபரப்பு!

ஓகஸ்ட் 20, 2012

மெகந்தீஇதுவதந்தீ ; பெண்கள்அச்சம் ; ரம்ஜான் நாளில் பொய் தகவல் பரப்பு, பரபரப்பு!

 மெஹந்தி வதந்தி பரப்புதல்: தினமலரில் இப்படி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரம்ஜான் நாள் கொண்டாட தயராகி கொண்டிருந்த நேரத்தில் பெண்கள் மெகந்தி வைத்ததால் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக ஏற்பட்ட வதந்தியால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது[1].  எஸ்.எம்.எஸ் மூலம் இத்தகவல் வந்ததாகக் கூறுகின்றனர். இந்த நிலையில் வேலூர் மற்றும் சென்னையில் மருதாணி வைத்துக் கொண்ட ஏராளமான பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சில குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் தகவல் பரவியது[2].
செஞ்சியில் பெண்களிடம் கலவரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தக்காசுரத்தூர் பகுதியிலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்த கடைகளில் விற்கப்படும் மெகந்தியை (கோன்) வாங்கி அலங்காரம் செய்தனர். இதை பயன்படுத்திய சிலருக்கு கைகளில் அலர்ஜி, மயக்கம் ஏற்படுவதாக இரவில் தகவல் பரவியது[3]. இதையடுத்து நள்ளிரவு இரவு 2 மணி அளவில் சொரத்தூர் மற்றும் அப்பம்பட்டை சேர்ந்த யாஸ்மீன் (வயது 9) ஷமீம் (வயது 15) தில்ஷாத் (வயது 25) ரஜீமா (40) அஷ்ரத் (12) ஆகியோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர். இதில் அஷ்ரத்துக்கு மயக்கம், தலைவலி இருந்ததால் செஞ்சியில் இருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். இத்தகவல் செஞ்சி பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மொபைல் போன் மூலம் வேகமாக பரவியது[4]. இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணிவரை 123 பேர் மெகந்தி பாதிப்பு ஏற்பட்டதாக சிகிச்சைக்கு வந்தனர். இதனால் செஞ்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள அப்பம்பட்டு பகுதிக்கும் பரவியது. அந்த பகுதியில் மருதாணியிட்டுக் கொண்டவர்களும் பயந்து செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு டாக்டர்கள் ஊசிபோட்டு அனுப்பி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் பரப்பட்டது: இந்த தகவல் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல மாட்டங்களில் வதந்தி பரவியது[5]. சென்னையில் பல இடங்களில் இத்தகவல் காட்டுத்தீ போல் பரவியதால், மெகந்தி வைத்தவர்கள் பீதி அடைந்தனர். உடனே, கைகளை கழுவி சுத்தப்படுத்தினர். மேலும், டாக்டர்களை பார்த்து சிகிச்சை பெற்றனர். சென்னையில் புளியந்தோப்பு, பெரம்பூர், ஓட்டேரி உள்பட பல இடங்களில் பெரும் பீதி ஏற்பட்டது. ராயப்பேட்டையில் முற்றுகை போராட்டமும் நடந்தது[6]. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில்; மெகந்தி மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக அறிகுறி யாருக்கும் இல்லை. சிலருக்கு உடல்களில் அரிப்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் மெகந்தி வைத்த இடத்தில் எவ்வித கோளாறும் இல்லை. என்றார். இது குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

வேலூரில் ஆரம்பித்த வதந்தி, கலாட்டா: முதன் முதலாக வேலூரில் இந்த அலர்ஜி ஏற்பட்டது . இதன் சுற்றுப்பகுதியான வாணியம்பாடி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பரவியது. வேலூர் ஆஸ்பத்திரிக்கு 45 பேர் சிகிச்சைக்காக வந்தனர். செஞ்சியில் மட்டும் 140 பேர் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வந்னைர். அச்சத்தின் காரணமாக இந்த தகவல் மொபைல் மூலம் பலரும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என பகிர்ந்துள்ளனர். மெகந்தி வைத்தவர்கள் எல்லோரும் தமக்கும் எதுவும் பாதிப்பு இருக்குமோ என்று அஞ்சி பலரும் ஆஸ்பத்திரி நோக்கி வந்துள்ளனர். இது போல் பல பகுதிகளுக்கு பரவியது. காலையில் சிறப்பு தொழுகையின்போது மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் புரளியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

போலீஸ், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை: செஞ்சியில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை குறித்து முழுக்கவனமாக கண்காணிக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்பத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தாசில்தார் வாசுதேவன் கூறுகையில், மெகந்தியினால் பாதிப்பு இல்லை. தவறான தகவல் பரப்புவோர் யார் என கண்டறிந்து அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குறிப்பாக மத்திய அரசு பல்க் மெசேஜ் தடை செய்திருப்பதால் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. இல்லையேல் மேலும் பலருக்கு இந்த பொய்செய்தி போய்ச்சேர்ந்திருக்கும். சமீபத்தில் வட மாநிலத்தவர்கள தாக்கப்படுவதாக மொபைல் மூலம் தகவல் பரப்பி விடப்பட்டது. இதனையடுத்து பல்க் மெசேஜ் அனுப்பிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த மெகந்தீ வதந்தி குறித்தும் போலீஸ் தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் கலாட்டா: வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் இருந்த ஏராளமானோர் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இரவு 1.30 மணிக்கு கூட்டம் அதிகமானது. அப்போது ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே இருந்தார். இதனால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அனைவருக்கும் விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமான தகவலறிந்ததும் டி.எஸ்.பி. மாதவன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது சிலர் போலீசார் மீது கல்வீசினர்[7].  போலீசார் பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஆஸ்பத்திரியில் நிறுத்தியிருந்த 2 தனியார் ஆம்புலன்சு கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. ஆஸ்பத்திரி வளாகத்தில் கடும் பதட்டம் ஏற்பட்டது. இந்த மோதலில் பாத்திமா(வயது 52) என்ற பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். போலீஸ் தயடிடிக்கு பின்னர் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. திருப்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஷில்பா பிரபாகர் அதிகாலை 3.30 மணிக்கு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். உடன் தாசில்தார் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் வதந்தி குறித்து விளக்கம் அளித்தனர்.  இந்த சம்பவத்தையடுத்து வாணியம்பாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மருதாணி, மெகந்தி பூசிய 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற இரவு 12 மணிக்கு மேல் வந்தனர். அப்போது ஒரே ஒரு டாக்டர் வந்தார். சிகிச்சைக்கு தாமதமானதால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 3 கண்ணாடிகளை உடைத்தனர்[8]. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

மசூதிகளில் ஒலிபெருக்கிகளில் தெரிவித்தது: இதேபோல் சேலம் அரசு மருத்துவமனையிலும் பலர் குவிந்தனர். இரவு 12.30 மணியில் இருந்து விடிய விடிய முஸ்லிம்கள் ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தர்காக்களில் மெகந்தி பற்றி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சி அடைந்த பலர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் திரண்டனர். இங்கு 150 பேருக்கு ஊசி போடப்பட்டது. இதேபோல் சூளகிரி, ஒசூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் வதந்தி பரவி ஆஸ்பத்திரிகளில் திரண்டனர்[9].

வேலூரிலிருந்து ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்குப் பரவிய வதந்தி: வேலூர், ஓசூர், பெங்களூரு, சித்தூர் என்று பரவிய போக்கு வேண்டுமென்றே செய்துள்ளது தெரிகிறது. ஆந்திர மாநிலம் பலமனேர், சித்தூர் மற்றும் பெங்களூர் பங்காருபேட்டை, சேலம், கிருஷ்ணகிரி பகுதியில் மருதாணி, மெகந்தி வைத்தவர்களுக்கு அரிப்பு மற்றும் வாந்தி ஏற்பட்டு இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. இதைவிட, ஒன்றும் இல்லை, இதெல்லாம் வதந்தி தான் என்று ஏன் எஸ்.எம்.எஸ் அனுப்பக்கூடாது?


[4] இவ்வாறு அனுப்பவேண்டிய தேவையென்ன என்று தெரியவில்லை. ஒன்றும் இல்லை என்று மருத்துவர் கூறியபிறகு, சம்பந்தப்பட்டவர்கள், அதனைப் புரிந்த கொண்ட பிறகும், அப்படி பரப்ப வேண்டிய அவசியம் இல்லை.

பொய்மையுடன் மாற்றப்பட்டப் புகைப்படங்கள், தூண்டுகின்ற அபத்தமான விளக்கங்கள், கலவரத்தை ஏற்படுத்தும் எஸ்.எம்.எஸ்கள், திட்டமிட்டு நடத்தப் பட்ட கலவரம்!

ஓகஸ்ட் 14, 2012

பொய்மையுடன் மாற்றப்பட்டப் புகைப்படங்கள், தூண்டுகின்ற அபத்தமான விளக்கங்கள், கலவரத்தை ஏற்படுத்தும் எஸ்.எம்.எஸ்கள், திட்டமிட்டு நடத்தப் பட்ட கலவரம்!

பராஸ் அஹமது என்பவர் எப்படி வெவ்வேறு இடங்களில், காலக்கட்டங்களில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களை, மாற்றியமைத்து, திருத்தி பொய்யான விளக்கங்களுடன் “பேஸ்புக்” போன்ற இணைதளங்கள், எஸ்.எம்.எஸ்கள் மூலம் புரளிகளைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டியுள்ளார்.

திபெத்திய துறவிகள், சீன பூகம்பத்தால் இறந்தவர்களுக்கு சேவை செய்யச் சென்றபோது எடுத்த புகைப்படத்திற்கு, “பௌத்தர்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் உடல்கள் (பர்மா)” என்று போட்டு, விஷமத்தனமாகப் பொய்யைப் பரப்பியுள்ளார்கள்.

திபெத்திற்கு சீன ஜனாதிபதி வந்தபோது, ஒரு திபத்திய பௌத்த இளைஞன் எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்தபோது எடுக்கப்பட்டப் படம். அதுவும் அந்நிகசழ்சி நட்ந்தது தில்லியில், இந்தியாவில்.

ஆனால் பர்மாவில் பௌத்தர்கள் முஸ்லீமை இவ்வாறு எடுத்தபோது, அவனைக் காப்பாற்றாமல், ஊடகக்காரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விஷத்தனமாக “பேஸ்புக்கில்” படம் போட்டு, குரூரமான விளக்கத்தையும் கொடுத்துத் தூண்டியுள்ளார்கள்.

 

பர்மா முஸ்லீம்கள் தொடர்ந்து பௌத்தர்களால் பெருமளவில் கொல்லப்படும் காட்சி – விழிப்புணர்ச்சிற்காக இப்படத்தை மற்றவர்களுடன் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்“, என்று தலைப்பிட்டு இன்னொரு பொய்யானப் பிரச்சாரம்!

உண்மையில் அது 2004ல் பாங்காக்கில் போலீஸாருடன் மோதிய சுமார் 400 பேர் பிடிக்கப்பட்டு, தமது கட்டுப்பாட்டில் இருக்க, படுக்க வைக்கப்பட்டுள்ள காட்சி!

இதனை இப்பொழுது, அதுவும் பர்மாவில் நடதுள்ளதாக, அபத்தமாக புரளி கிளப்பியுள்ளாறர்கள்.

 

 

முஸ்லீம்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”  என்று தலைப்பிட்டு “பேஸ்புக்கில்” பரப்பிவிட்டுள்ள ஒன்னொரு கட்டுக்கதைப் படம்.

தாய்லாந்த்தில் 2003ல் எடுக்கப்பட்டப் படம். அப்பொழுது, கலவரத்தில் ஈடுபட்டவர்களைப் பிடித்து கட்டி வைத்து, படுக்க வைத்துள்ளனர்.

இப்படி பொய்யாக, துஷ்பிரச்சாரம், புனையப்பட்ட கதைகள், பொய்மாலங்கள், மாய்மாலக் கட்டுக்கதைகள், முதலியவற்ரை வைத்துக் கொண்டு, ஏன் படித்த முஸ்லீம் இளைஞர்கள் இவ்வாறு இணைதள தீவிரவாதத்தை வளர்க்க வேண்டும்.

இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்று தூண்டி விட்டு, கலவரங்களை உண்டாக்க வேண்டும்?

http://www.pakalertpress.com/2012/07/16/muslims-killing-in-burma-and-social-media-manipulating-images/

http://farazahmed.com/