Posted tagged ‘வஞ்சி’

“லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்!

ஒக்ரோபர் 24, 2009

“லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்!

கேரளத்திலிருந்து இத்தகைய பிரச்சினைப் பற்றி இன்று விவாதம் கிளம்பியுள்ளது. “லவ்-ஜிஹாத் / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்” என்றெல்லாம் பேசப் படுவது என்னவென்றால், ஒரு முகமதியன், முகமதியன் அல்லாத குறிப்பாக இந்து பெண்னை காதல் வசப்படுத்தி திருமணம் செய்து கொள்வது எனத் தெரிகிறது. ஆனால், அவ்வாறு, முகமதியன் அல்லாத பெண் மதம் மாறவேண்டியுள்ளது. அங்கு தான் காதல் என்பது போலியாகி விடுகிறது.

லவ்ஜிஹாத்_1

காதலுக்கு கண் இல்லை என்றெல்லாம் பேசும் போது, மதம் மாறுதல் என்றது ஏன் வருகிறது? மேலும் ஏன் இந்துதான் மதம் மாற வேண்டும் என்ற கட்டாயம் / வற்புறுத்தல்? முகமதியன் ஏன் மதம் மாறக் கூடாது? இதேன்ன ஒருவழிபாதையா? அந்நிலை இருக்கும் போது, நிச்சயமாக பெண்கள் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஏனெனில் காதல் உண்மையாக இருந்தால் அது இருவழி பாதையாகத் தான் இருக்கமுடியும்? அப்படி இல்லையென்றால், எந்த முகமதியனுக்கும்  முகமதியன் அல்லாத பெண்ணைப் பார்க்கக் கூட அருகதை இல்லை. ஏனெனில் அவன் காதலிக்கவில்லை, காதல் என்ற மாயவலை விரித்து இந்து பெண்களை ஏமாற்றுகிறான் என்பதுதான் உண்மை.

லவ்ஜிஹாத்_2

சரித்திரம் படிக்கும் மாணவர்களுக்கேத் தோன்றிருக்கும், எப்படி முகலாய சுல்தான்கள் தயாராக எப்பொழுதும் ராஜபுதின பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள், ஆனால், பதிலுக்கு ஒரு முகமதிய சுல்தான் கூட தனது சகோதரியையோ, மகளையோ எந்த ராஜபுதின ஆணுக்கும் கொடுத்து திருமணம் செய்யவில்லை என்று! எனவே அங்கும், திருமணம் சமரசம் இன்றி, ஒருவழி பாதையாகவே உள்ளது. ஆகவே அத்தகைய திருமணங்களும் உண்மையான திருமணங்கள் அல்ல, வலுக்கட்டாய மணமே!

லவ்ஜிஹாத்_3

ஆகவே காதலைத் தவிர, கணவன் – மனைவி உறவு முறைகள் தவிர வேறொன்று இருப்பது நன்றாகவேத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது, ஒரு முகமதியன் அல்லாத பெண், முகமதியனை நம்பி திருமணம் செய்து கொள்ளும் போது உண்மையினை அறிய வேண்டாமா? அத்தகைய உண்மையான மனித உறவுகளையும் மீறி இருப்பது மதம் என்றால், அத்தகைய மென்மையான உறவுமுறைகளில் குறுக்கீடாக உள்ள அந்த மத-நிலைப் பற்றி அப்பெண் உண்மை அறியவேண்டும் அல்லது அறிவிக்கப் பட வேண்டும்.

இன்றெல்லாம், பெண்கள் உரிமைகள் என்று அதிகமாகவே பேசப் படுகின்றது! பிறகு எப்படி, மாற்று மதப் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு முகமதியர்களால் திருமணம் செய்துகொள்ளப் படலாம்? அப்பெண் தான் மனமுவந்து ஒப்புக்கொண்டு அத்தகைய முகமதியனைத் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறலாம் அல்லது மற்புறுத்திக் கூறவைக்கலாம், கூறவைக்கப் படலாம். பிறகு பிரச்சினை வரும்போது தான் அப்பெண் அறிவாள், தான் ஏமாற்றப் பட்டு விட்டாள் அல்லது மோசம் செய்யப்பட்டு விட்டோம் என்று. ஆனால், ஒரு பெண்ணிற்கு அது விளையாட்டல்ல அல்லது சொல்லப்படுகின்ற மாதிரி “லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போரோ அல்ல. அத்தகைய காதல் மோசடியில் அவள் உண்மையிலேயே “ஜிஹாதிற்கு”த் தள்ளப் படுகிறாள், ஏனெனில் தனது வாழ்வே போராட்டமாகி விடுகிறது.

ஏற்கெனவே கேரள மற்றும் கர்நாடக உயர்நீதி மன்றங்கள் போலீசை இவ்விஷயத்தை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையிட்டுள்ளது.

“செக்யூலார் இந்தியாவில்” நிச்சயமாக விவாதிக்க வேண்டிய பிரச்சினை தான் இது.