Posted tagged ‘வங்காளம்’
ஒக்ரோபர் 17, 2014
பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (2)

Abdul Hakim alias Hassan at Burdwan hospital.
குண்டு தயாரிப்பு தொழிற்சாலை நடத்தும் ஜிஹாதிகள்: “பர்த்வானில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தயாரித்தபோது, திடீரென குண்டுகள் வெடித்து சிதறியதில் 2 தீவிரவாதிகள் பலியாகினர்”, என்று போலீஸாரே ஒப்புக் கொண்ட பிறகு, இதைப் பற்றி மற்றவர்கள் ஆராயத் தொடங்கினர். அதன் மூலம் பல விசயங்கள் வெளிவந்தன. ஜமாத்-உல்-முஜாஹித்தீன் வங்காளதேசம் [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB)] இந்திய முஜாஹித்தீன் [ Indian Mujahideen (IM)] மற்றும் அல்-ஜிஹாத் [ Al Jihad, a new outfit with bases in Pakistan] பாகிஸ்தானின் புதிய ஜிஹாதி இயக்கம் முதலியன இந்த குண்டு தயாரிப்பு தொழிற்சாலையில் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது[1]. அதாவது அண்டைநாடுகளிலுள்ளா ஜிஹாதி அமைப்புகள் கைகோர்த்துக் கொண்டு வேலை செய்கின்றன என்றும் தெரிகிறது. இருப்பினும், முஸ்லிம்கள் இவ்வாறு தீவிரவாத செய்களில் ஈடுபட்டு வருவதை, மற்ற முஸ்லிம்கள் கண்டிப்பதாகத் தெரியவில்லை. மாறாக அவர்களுக்கு உதவி வருவது தான், விசாரணையில் மறுபடி-மறுபடி தெரிய வருகிறது.

Hasan Molla – burdwan-blast
தீவிரவாத குற்றங்களில் அரசியல் நுழைப்பது: இது பற்றிய விவரங்கள் வெளி வந்தாலும், திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கும், அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று உறுதியாக வாதித்து வருகின்றனர். கம்யூனிஸ்ட் மற்றும் பிஜேபி கட்சியினர், என்.ஐ.ஏ இதில் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுத்தது மட்டுமல்லாது, இவ்விசயத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால், மத்திய அரசு, என்.ஐ.ஏ மூலம் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதோடு, அதற்கு ஆதரவாக, ஒரு ஆர்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர். பதிலுக்கு பிஜேபி ஒரு ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது. ஜிஹாதிகளின் கைவேலை மற்றும் அதன் தீவிரத்தைக் கண்டுகொள்ளாமல் இப்படு அரசியல் செய்து வருவது நடுநிலையாளர்களைத் திடுக்கிட வைத்துள்ளது. ஏற்கெனவே, திரிணமூல் காங்கிரஸ்காரர்கள், முஸ்லிம்களுக்கு பலமுறைகளில் தாஜா செய்து வருகிறார்கள் – பங்களாதேச அகதிகளை உள்ளே நுழைய வசதி செய்து தருகிறார்கள்; தேர்தல் ரேஷன் அட்டை, அடையாள அட்டை, முதலியவற்றைக் கொடுத்து அவர்களது குடியுரிமையினையும் உறுதி செய்து வருகிறார்கள்;

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan. Courtesy – twocircles
டு சர்க்கிள்ஸ் நெட்வொர்க் கொடுக்கும் விவரங்கள்[2]: இது முஸ்லிம் சார்புடைய இணைதளம் என்பதால், அவர்களது கருத்தையும் அறியும் வண்ணம் அவர்களது தகவல்கள் கொடுக்கப் படுகின்றன. மதரஸாவை தவறான முறையில் அடையாளங் காணப்பட்டுள்ளது என்பது இவர்களின் வாதம். இருப்பினும் அவர்கள் கொடுக்கும் விவரங்கள் மற்றும் மேலும் வெளிவரும் விவரங்கள் அவர்களது வாதத்திற்கு ஒவ்வாததாக இல்லை. 11-10-2014 அன்று TCN குழு அங்கு வந்தபோது பதட்டமான நிலையிருந்தது. போலீஸ்கார்ர்கள் அங்கு அதிகமாக குவிந்ததும், ஊடகக் காரர்கள் வந்ததும், அங்கிருக்கும் மக்களுக்கு சங்கடமாக இருந்தது. ஷாநவாஜ் கான் என்கின்ற சோடு [Shahnawaz Khan alias Chhotu] என்பவன் தான் இறந்த உடல்கள் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல போலீஸாருக்கு உதவினான். அவன் அங்கு பிளம்பராக வேலை செய்து வருகிறான். பர்த்வான் போலீஸ் கமிஷனர் – சையது மொஹம்மது ஹொஸைன் மீரஜஜ்[ Burdwan district police chief Syed Muhammad Hossain Meerza], கூடுதல் எஸ்பி – தருண் ஹால்தர் [Additional SP Tarun Halder], SDPO அம்லன் குசும் கோஷ் [SDPO Amlan Kusum Ghosh], அப்துல் கபூர் [IC of Burdwan Abdul Gaffar] முதலியோர் அங்கு வந்தனர். சோதனையிட்ட போது, கீழ்கண்டவை கெண்டெடுக்கப் பட்டன[3]:
- 59 உடனடி தயாரிப்பு வெடிகுண்டுகள் – உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை [59 improvised explosive devices (IEDs) or home-made bombs],
- 55 உடனடி தயாரிப்பு கை-வெடிகுண்டுகள் [55 improvised hand grenades],
- எக்கச்சக்கமான ஜிலேடின் குச்சிகள் [an undeclared number of gelatine sticks],
- ரசாயனப் பொருட்கள் [chemicals],
- குண்டுவெடிப்பு-குண்டுகள் தயாரிப்பது பற்ரிய புத்தகங்கள் [explosives-making literature],
- சிறு-குறும் புத்தகங்கள் [pamphlets, etc.]
- எரிந்த நிலையில் காணப்பட்ட காகிதங்களில் ஜிஹாத், செசன்யாவில் உள்ள நமது சகோதர்களுக்கு சலாம், முஜாஹித்தீன், ஜவாஹிரி…….போன்ற வார்த்தைகள் இருந்தன [.partially burnt papers that had Bangla script, some of which mention words and phrases such as “mujahid” and “salaam to our brothers in Chechnya”. Police said the pamphlets also mention “Zawahiri”, the al Qaida leader Ayman Al Zawahiri].
இப்படி பெரிய அதிகாரிகள் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்கும் போது தான், போலீஸார் ஒருவேளை அப்படி நடந்து கொண்டார்களா, என்ற கேள்வியும் எழுகின்றது.

Shahnawaz Khan alias Chhotu, a local plumber, one of the persons to enter the rented house after the blast. Courtesy – twocircles
மதரஸாவில் குண்டுகள், ஆயுதங்கள் முதலியவை எப்படி இருக்கும்?: குறிப்பிட்ட வீடு மாநில சி.ஐ.டி எட்டு நாட்களுக்கு 08-10-2014 முன்னர் சீல் வைத்துவிட்டு சென்றனர், ஆனால், இப்பொழுது 16-10-2014 அன்று என்.ஐ.ஏ திறந்து சோதனை நடத்திய போது 30 வெடிகுண்டுகள், வெடி மருந்து மற்ற சம்பந்தப் பட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன[4]. சிமுலியா [ madrasa at Simulia ] என்ற இடத்தில் இருந்த மத்ரஸாவில் தேடும் பணியில் ஈடுபட்டபோது தான் இவை கிடைத்துள்ளன. சிமுலியா கிராமம் பர்த்வான் மாவட்டத்தில், மங்கள் கோட் என்ற இடத்தில் உள்ளது. 12-10-2014 அன்று அங்கு நடத்திய சோதனையில் –
- காற்று துப்பாக்கி மூலம் வெடிக்கப் பட்ட குண்டுகளின் பாகங்கள் [Air gun pellets],
- கூர்மையான ஆயுதங்கள் [sharp-edged weapons],
- பணம் பெற்றுக் கொண்டற்கான ரசீதுகள் [money receipts],
- ஜிஹாதி இலக்கியங்கள் [jihadi literature],
- குறிப்பாக நல்ல இறப்பை அடைவது எப்படி என்ற வங்காள மொழியில் உள்ள புத்தகம் [including a Bengali book titled, “How To Die A Good Death”],
முதலியவை கண்டெடுக்கப் பட்டுள்ளன[5]. இதனால், அந்த மதரஸா ஜிஹாதிகளின் மையமாக, தலைமையகமாக செயல்பட்டு வந்தது உண்மையாகிறது[6]. மேலும் முக்கிய குற்றாவாளியான யூசுப் செயிக்கின் இரண்டு உறவினர்களும் கைது செய்யப் பட்டனர். ஹபிபுர் செயிக் என்பவன் அமீனா பீபி கொடுத்த எச்சரிக்கையின் படி கௌஸருடன் மூர்ஷிதாபாதில் உள்ள பாபர் பாக் என்ற மறைவிடத்திலுருந்து தப்பியோடி விட்டான். பிறகு புதன் கிழமை அன்று போல்பூர் நகரத்தில் புறப்பகுதியில் முலுக் என்ற இடத்தில் பிடிபட்டான். இவன் கௌஸாரின் மைத்துனன், இந்த பயங்கரவாத கும்பலின் தீவிரமான வேலையாள், சிமுலியா மதரஸாவில் பயிற்சி அளிக்கும் நிபுணர்களூள் ஒருவன் என்று பல அவதாரங்களைக் கொண்டுள்ளான்.[7]. மதரஸாக்கள் தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று சொன்னால், சில முஸ்லிம்கள் சண்டௌக்கு வருகிறார்கள், இல்லை காரசாரமாக விவாதிக்க வருகிறார்கள், ஒரு நிலையில் மிரட்டவும் செய்கிறார்கள். ஆனால், இவ்வாறு நடக்கும் செய்திகள் வௌம் போது, மௌனியாகி விடுகிறார்கள்.

பர்கா பேக்டரி – கடை
இன்னொரு வீட்டில் சோதனை: 08-10-2014 அன்று பாத்சாஹி தெருவில் உள்ள ரிஸ்வான் செயிக்கின் [Rizwan Sheikh] வீட்டை ரெயிட் செய்து, இரண்டு பெண்களை கைது செய்தனர். அப்பொழுது அந்த வீடு காலியாக இருந்தது. அங்கிருந்தவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவன் தான் ரெசூல் என்கின்ற ஜிஹாதி. ஆனால், 16-10-2014 அன்று தேசிய புலனாய்வு நிறுவனம் [the National Investigation Agency (NIA) ] மற்றும் தேசிய பாதுகாப்பு வீரர்கள் குழு [the National Security Guards (NSG) ] இவற்றின் மோப்ப நாய்கள் உதவியுடன் இந்த குண்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் மாநில எதிர்கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ்காரர் சம்பந்தப் பட்டிருப்பதால், போலீஸும் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்[8]. முதலமைச்சர் இவ்விசயத்தில் மெத்தனமாக இருப்பதும் வியப்பாக இருக்கிறது. தீவிரவாதத்தை எப்படி ஒடுக்க வேண்டும் என்றில்லாமல், சம்பந்தப் பட்ட அரசியல்வாதிகளை பாதுகாக்க நடந்து கொள்வது போல தான், நிகழ்சிகள் அங்கு நடந்து வருகின்றன.
© வேதபிரகாஷ்
17-10-2014
[1] http://bdnews24.com/bangladesh/2014/10/09/burdwan-blast-exposes-jmb-hit-squad
[2] http://twocircles.net/2014oct15/1413358352.html#.VEB9lfmSynU
[3] http://twocircles.net/2014oct15/1413358352.html#.VEB9lfmSynU
[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-case-30-grenades-found-from-house-sealed-by-bengal-police-607941
[5] http://www.dnaindia.com/india/report-ammunition-recovered-from-house-in-west-bengal-2026809
http://zeenews.india.com/news/india/burdwan-blast-nia-team-expresses-security-concern-centre-to-send-bsf-company_1485663.html[6]
[7] Habibur Shiekh — an alleged operative of the terror module and ‘trainer’ at the Simulia madrassa — was nabbed from Muluk on the outskirts of Bolpur town on Wednesday. He had fled his hideout in Murshidabad’s Baburbagh, along with Kausar, soon after being tipped off by Amina Bibi within minutes of the Khagragarh blast on October 2. Habibur is a relative of Kausar’s brother-in law Kader Shiekh of Dakshin Nimra village — a stone’s throw from the home of President Pranab Mukherjee’s elder sister. A resident of Muluk, Habibur used to frequent the President’s native village, Kirnahar. In fact, Mukherjee was in the village for Durga Puja when the IEDs exploded in Khagragarh http://timesofindia.indiatimes.com/india/NIA-makes-first-arrest-in-Bardhaman-blast-probe/articleshow/44831211.cms
[8] http://indianexpress.com/article/india/india-others/bjp-on-offensive-bengal-says-no-terror-link-found-in-burdwan-blast/
பிரிவுகள்: அரசியல்வாதிகள், அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-முஜாஹித்தீன், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, ஜிஹாதி, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்துவம், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, பர்த்வான்
Tags: அழகிய இளம் பெண்கள், இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், குண்டு, குண்டு வெடிப்பு, செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், பர்த்வான், முஜாஹித்தீன், முஸ்லிம்கள், வங்காளம்
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 17, 2014
பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (1)

Bengal police detonate home-made bombs on the banks of Damodar before central agencies could examine them. Photo-The Telegraph
பர்த்வான் குண்டுவெடிப்பும், மேற்கு வங்காள போலீஸாரின் நடவடிக்கையும்: காந்தி ஜெயந்தியான 02-10-2014 அன்று மேற்கு வங்காளத்தில் பர்த்வான் என்ற இடத்தில் கரக்கர் என்ற வீட்டில் குண்டு தயாரிப்பின் போது, யதேச்சையாக வெடித்ததில் 2 பேர் – ஷகீல் அஹமது காஜி [ Shakil Ahmed Gazi in Beldanga, Murshidabad] மற்றும் சோவன் மண்டல் [Sovan Mandal] கொல்லப்பட்டனர். இவ்விடத்தில் 90% முஸ்லிம்கள் வாழ்கின்றனர்[1]. அதாவது, அவர்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்துதான் வேலை செய்கின்றார்கள் என்றாகிறது. குண்டுவெடிப்பில் மேலும் செயிக் ஹகீம் காயமடைந்தான். கௌஸர் மற்றும் அப்துல் கலாம் என்பவர்கள் தப்பியோடிவிட்டனர். மேலும் அந்த இடம், திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தின் மாடியில் இருந்தது. அதிலுருந்து நடந்து செல்லும் தூரத்தில் இன்னும் இரண்டு வீடுகளில் சோதனை நடத்தப் பட்டு, அங்கும் தீவிரவாதிகள் இருந்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. விரைவு தயாரிப்பு வெடிகுண்டுகள், வெடிப்பொருட்கள், சிம் கார்டுகள் [improvised explosive devices (IEDs), other explosives and SIM cards] முதலிய கைப்பற்றப் பட்டன. இவ்வீடுகள் பாபுகர் மற்றும் பாத்சாஹி தெருக்களில் உள்ளன[2]. இவை எல்லாவற்றையும் பார்த்த பிறகு தான் தெரிந்தது, யாரும் குண்டு வைத்து, இப்படி இறக்கவில்லை, ஆனால், வெடி குண்டு தொழிற்சாலையில், யதேச்சையாக குண்டு வெடித்ததில், இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது, என்பது தெரிந்தது.

Burdwan_blast_building_
மேற்கு வங்க பொலீஸார் ஆதாரங்களை அழித்தனரா?: வெடி குண்டு தொழிற்சாலை என்றவுடன் போலீஸார், மேலிடத்தில் அறிவித்திருக்கலாம், அரசியல்வாதிகள் ஆதரவு-தொடர்பு என்றிருப்பதால், அது மறைக்கப் படவேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கலாம். இதன் தீவிரத்தை ஆயும் முன்னரே, மேற்கு வங்காள போலீஸார் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை எழுப்பின. குறிப்பாக, குண்டுவெடித்த இடத்தில் உள்ள ஆதாரங்கள் திரட்டப் படவேண்டும், வெடிக்காமல் உள்ள குண்டுகள் ரசாயன ஆய்வு கூடத்திற்கு அனுப்பி ஆராயப் பட வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம், அந்த வெடிகுண்டுகளை யார் தயாரித்திருக்கக் கூடும், உபயோகப் படுத்தப் பட்ட பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டிருக்கக் கூடும் போன்ற விவரங்கள் அறிந்து கொள்ல ஏதுவாகும். ஆனால், உடனே, ஆதாரங்கள் எதுவுமே கிடைக்காத அளவிற்கு குண்டுவெடித்த இடத்தை உள்ளூர் போலீஸார் சுத்தப் படுத்தி விட்டனர். கிடைத்த குண்டையும் வெடிக்கவைத்ததால், அதைப் பற்றிய ஆதாரங்கள் அறியமுடியவில்லை. மேற்கு வங்காள போலீஸார் வேண்டுமென்றே செய்ததாக தெளிவாகிறது.

Razia Bibi and Alima Bibi
கைது செய்யப் பட்டவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்கள்: சம்பந்தப் பட்ட விசயத்தில் இரண்டு பெண்கள் – ரஜிரா பீபி என்கின்ற ரூமி (Rajira Bibi alias Rumi) மற்றும் அமீனா பீபி (Amina Bibi) தொடர்பு கொண்டிருந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நான்கு முறை குண்டுகளை [Improvised explosive device (IED)] எடுத்துச் சென்று தீவிரவாதிகளிடம் கொடுத்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக மொத்தம் கீழ் கண்ட நால்வர் கைது செய்யப் பட்டுள்ளனர்:
- செயிக் ஹகீம் என்கின்ற ஹஸான் சாஹப் [Sheikh Hakim alias Hasan Saheb from Lalgola in Murshidabad district, who was injured in the blast]
- ஹாவிஸ் மொல்லா [Hafez Mollah alias Hasan], காயமடைந்தவர்களுள் ஒருவன்.
- ரஜிரா பீபி என்கின்ற ரூமி [Rajira Bibi alias Rumi, widow of the suspected terriost Shakil Ahmed who died in the blast] – ஷகீல் அஹமதின் மனைவி.
- அமீனா பீபி [Amina Bibi, Hasan Saheb’s wife] – ஹசான் சாஹபின் மனைவி.

பர்த்வான் – கைது செய்யப் பட்டவர்கள்
சம்பந்தப் பட்டுள்ளவர்களின் மற்ற விவரங்கள்:
ஷகீல் அஹமது: இவன் பங்களாதேசத்தைச் சேர்ந்தவன். ஜமாத்-உல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ் என்ற ஜிஹாதி அமைப்பின் தீவிரவாத வேலையாள். 2006ல் இந்தியாவுக்கு வந்து கரீம்பூர், நாடியா மாகாணம் என்ற இடத்தில் தங்கியவன். மௌல்வி ரபிக்கூல் இஸ்லாம் என்பவரை சந்தித்தான். அவருடைய மாமா பெண் – ரஜிரா பீபியை திருமணம் செய்து கொண்டான். அவளின் தந்தையை, தனது தந்தையாக – அடையாளமாக வைத்துக் கொண்டு ரேஷன் கார்டையும் பெற்றான். பேடங்கா (மூர்ஷிதாபாத்)வில், ஒரு பர்கா (முஸ்லிம் பெண்களுக்கு பர்தா போன்றவற்றை விற்கும்) கடையினையும் வைத்துக் கொண்டான்.
எஸ்.கே. கௌஸர் – தேடப்பட்டு வரும் முக்கியமான குற்றவாளி. சிவப்பு நிற பதிவு செய்யப் படாத பைக்கை உபயோகப்படுத்தியவன். ஷகீலுக்கு உதவி செய்து, கரக்கர் வீட்டில் வேலையை ஆரம்பித்து வைத்தவவன். இவன் தான் ஷகீல் மற்றும் ஜமாத்-உல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ் இடையே தொடர்பாளனாக வேலை செய்து வந்தவன்.
அப்துல் கலாம் – ஷகீலின் பர்கா கடைக்கு அடிக்கடி வந்து செல்பவன், கூட்டாளி.
அமீனா பீபி – ஹகீமின் மனைவி. சென்னை-மூவருடன் தொடர்பு கொண்டவள்.
ஹஸன் மொல்லா – புர்பஸ்தலி என்ற இடத்தில் உள்ள ஷூ – காலணி வியாபாரி. ஷகீலுடன் தொடர்பு கொண்டுள்ளவன். குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அவனை ஏழு முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளான். செப்டம்பர் 2 மற்றும் 10 2014 தேதிகளில் ஷகீலுடன் அதிக நேரம் பேசியுள்ளான். பர்த்வானில் உள்ள ஷகீலின் வீட்டிற்கு வந்துள்ளான்.
மௌல்வி ரபிக்கூல் இஸ்லாம் – நாடியாவில், கரிம்பூரில் வசிக்கும் முஸ்லிம் மதகுரு. உள்ளூர் மதரஸாவின் காரியதரிசி. ஷகீலுக்கு பாதுகாப்பாக ஒரு வீட்டைக் கொடுத்தவர், தனது மைத்துனியான ரூமியையும் திருமணம் செய்து கொடுத்தார். பிறகு அவனுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை முதலியவற்றையும் வாங்கிக் கொடுத்தார். முர்ஷிதாபாதில் இஸ்லாமிய ஆன்மீகத்தைத் தூண்டிவரும் மௌல்வியாக இருக்கிறார்.

கௌஸர் முதலியோர்
வெடிகுண்டு வெடித்த வீடு, மற்ற வீடுகளில் சோதனை: குண்டுவெடித்த வீட்டில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு கிடைத்த ஒரு வீடியோவில், தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரித்து, வெடிக்க வைத்து சோதனை செய்துள்ளனர் என்ற காட்சியும் உள்ளது. தவிர அவர்களது ஜிஹாதி பிரச்சார இலக்கியங்களும் இருந்துள்ளன. மேலும் கொல்கத்தா விமான நிலையத்தைத் தாக்கும் திட்டத்தில் அவர்கள் இருந்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[3]. இரண்டு மாடி கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஒரு பர்கா கடை மற்றும் தொழிற்சாலை உள்ளது. அங்கு முஸ்லிம் பெண்களுக்கு வேண்டிய பர்தா போன்ற ஆடைகள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால்,ஆங்கிருந்த பெண்களே குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபயோகப் படுத்தப் பட்டது, ஈடுபட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது[4]. அப்பெண்கள் கொடுத்த விவரங்களை வைத்து மேலும் விசாரணை தொடர்ந்தது. இதைத்தவிர அசாமில் ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

The two storied house where the ‘accidental’ explosion occurred on October 2. 2014 – Courtesy – twocircles
மேற்கு வங்காள போலீஸாரின் அறிக்கை: ஏற்கெனவே, இப்பிரச்சினை அரசியல் ஆக்கப் பட்ட நிலையில், இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மிர்சா தெரிவித்ததாவது: “பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிரவாதி கௌஸரை குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், குண்டுவெடிப்பில் பலியான 2 தீவிரவாதிகள், காயமடைந்த ஒரு தீவிரவாதி ஆகியோர் பயன்படுத்திய 2 வீடுகள், பாபூர்பர்க், பாத்சாஹி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு நிகழ்ந்த கக்ராகர் வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே அந்த 2 வீடுகளும் உள்ளன. அந்த வீட்டை கண்டுபிடித்து போலீஸார் சென்றபோது, அங்கு யாருமில்லை. வீட்டின் கதவுகள் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தன. ஆனால், வீட்டினுள்ளே மின்விசிறிகள், விளக்குகள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆகையால், அங்கு வசித்தவர்கள் அவசர கதியில் வெளியேறியது தெரிய வந்தது என்றார் மிர்சா. பர்த்வானில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தயாரித்தபோது, திடீரென குண்டுகள் வெடித்து சிதறியதில் 2 தீவிரவாதிகள் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி கௌஸர் என்பவரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை மத்திய அரசுக்கு மேற்கு வங்க மாநில அரசு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ளது. மேற்கு வங்க டிஜிபி ராஜசேகர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலை தெரிவித்தார்[5].
© வேதபிரகாஷ்
17-10-2014
[1] http://twocircles.net/2014oct15/1413358352.html#.VEB9lfmSynU
[2] http://timesofindia.indiatimes.com/india/Two-more-houses-used-by-blast-suspect-found-in-Burdwan/articleshow/44703795.cms
[3] http://www.ibtimes.co.in/burdwan-blast-militants-planned-blowup-kolkata-airport-24-other-places-bengal-eid-610680
[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-burqa-factory-front-for-bomb-making-plant-603330
[5]http://www.dinamani.com/india/2014/10/09/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A/article2468779.ece
பிரிவுகள்: சாரதா, திரிணமூல் காங்கிரஸ், தொழிற்சாலை, பர்த்வான், பானர்ஜி, மம்தா, மம்தா பானர்ஜி, வங்காளம்
Tags: குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, தொழிற்சாலை, பர்த்வான், பானர்ஜி, மம்தா, வங்காளம்
Comments: Be the first to comment
மார்ச் 3, 2013
“இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்

அப்பாவி இந்துக்கள் மீது தாக்குதல்கள்: 1971ல் நடந்த போர்க்குற்றங்களுக்காக, .டெலேவார் ஹொஸைன் சையிதீ என்ற தீவிரவாத ஜமாத்-இ-இஸ்லாமித் தலைவருக்குத் தூக்குத்தண்டனையளித்தப் பிறகு கலவரம் ஏற்பட்டதில் ஏற்படுத்தப்பட்டதில் நாட்டின் சிறுபான்மையினரான இந்துக்கள் 28-03-2013 (வியாழக்கிழமை) அன்றுலிருந்து தாக்கப்பட்டிருக்கிறார்கள். நான்கு நாட்களாக இந்த கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

2013லும் தொடரும் 1971 மாதிரியான குரூரக்கொலைக்குற்றங்கள்: 1971 குரூர-போர்க்குற்றங்களைப் போலவே, இப்பொழுதும் நடந்தேறியுள்ள திட்டமிட்டத் தாக்குதலிகளில், ஆயிரக்கணக்கான சிறுபான்மையினரின் வீடுகள், 150 வழிபாட்டு ஸ்தலங்கள் கடந்த இரு தினங்களில் தாக்கப்பட்டிருக்கின்றன, என்று பங்களாதேசத்தின் இந்து-பௌத்த-கிருத்துவ ஐக்கிய பரிஷத்தின் பொது செயலாளர் மற்றும் வழக்கறிஞருமான ராணா தாஸ் குப்தா என்பவர் கூறியுள்ளார். இப்பொழுது, எந்த குற்றங்களுக்காக, டெலேவார் ஹொஸைன் சையிதீ குற்றஞ்சாட்டப் பட்டு, தண்டனைப் பெற்றுள்ளாரோ, அதே மாதிரியான குற்றங்கள், இன்றும் நடக்கின்றன, அதாவது 2013லும் தொடரும் 1971 மாதிரியான குரூரக்கொலைக்குற்றங்கள் என்று அவர் எடுத்துக் காட்டுகிறார்.

இந்துக்கள் தாக்கப்பட்டுள்ள ஊர்கள் / இடங்கள்: சிட்டகாங், குல்னா, படிசால், நோவகாலி, கலிபந்தா, ரங்கப்பூர், சைல்ஹெட், தாகுர்காவ், பகேரெத் மற்றும் சபைனவாப்கஞ்ச் முதலிய இடங்களிலுள்ள சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் கடைகள் தாக்கப்பட்டிருப்பதாக, சிட்டகாங் பிரஸ் கிளப்பில் நடந்த கூட்டத்தில் நிருபர்களுக்கு கூறினார். ஆனால், இந்திய ஊடகங்கள் மௌனியாக இருக்கின்றன.

ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிர் – தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள்: ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிர் முதலிய இயக்கங்களின் குரூரக்கொடுமைகளுக்காகக் குற்றஞ்சாட்டினார். சத்கானியவில் நடந்த தாக்குதல்களுக்கு சோரோடி யூனியன் பரிஷத்தின் சேர்மேன் ரெஜைவுல் கரீம் மற்றும் பன்ஸ்காளியில் நடந்த தாக்குதல்களுக்கு முனிசிபல் கவுன்சிலர்களான அபு மற்றும் சலீம் முதலியோர் மீது குற்றஞ்சாட்டினார்.

உள்ளூர் முஸ்லீம் தலைவர்களே காரணம்: 2003ல் பன்ஸ்காளியில் சில்பாரா என்ற இடத்தில் 11 பேர் அடங்கிய ஒரு இந்து குடும்பத்தை உயிரோடு எரித்ததற்கும், மற்றும் பன்ஸ்காளியில் திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தியதற்கும், அமினுர் ரஹ்மான் சௌத்ரி என்பவர் மீது குற்றஞ்சாட்டினார். அதாவது பத்தாண்டு காலமாகியும் அக்கொலையாளிகள் அப்படியே வாழ்ந்து வருகிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசுக்கு வேண்டுகோள்: இத்தகைய கொடுமைகள் நடக்காமல் இருக்கவும், குற்றம் புரிந்தவர்களை உடனடியாக கைது செய்யவும், அவர்கள் மீது உரிய முறையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பலிகடா ஆனவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், இடித்தழிக்கப்பட்ட வீடுகள்-கோவில்களைத் திரும்பக் கட்டிக் கொடுக்கவும் அரசாங்கத்தை இந்து-பௌத்த-கிருத்துவ ஐக்கிய பரிஷத்தின் சார்பில் கேட்டுக் கொண்டார்.

சாம்பலாகிப் போன வீடுகள்: குறிப்பிட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் மூன்று இரவுகளாக தூக்கம் இல்லாமல், என்ன நடக்குமோ என்று திறந்த வெளியில் ஆகாயத்தின் கீழ் உயிருக்குப் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது”, என்று மினோதி ராணீ தாஸ் என்ற பெண்மணி கூக்குரலிட்டுக் கதறினார், “சந்தோஷமான குடும்பம் எங்களுக்கு இருந்தது, ஆனால் இப்பொழுது எங்களுக்கு எதுவுமே இல்லை, கூரையில்லை, உணவில்லை, சமைக்க இடமில்லை, பாத்திரம் இல்லை, எதுவும் இல்லை. இங்கிருப்பதெல்லாம் கொஞ்சம் சாம்பல் தான்”.

பல இந்து குடும்பங்களின் கதி: மினோதி ராணீ தாஸ் மட்டுமல்ல, அவரைப்போல, சுற்றி வாழும் 76 இந்து குடும்பங்களின் கதிட்யும், இதே கதிதான். தீர்ப்பை ஆதரித்து கோடிக்கணகான மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களோ செத்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 40 வீடுகள் சூரையாடப் பட்டு, எரியூட்டப்பட்டன. பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர். எல்லாம் முடிந்த பிறகு தான் போலீஸார் வந்து பார்வையிட்டனர்.

இந்துக்கள் சாட்சி சொன்னதற்காக தாக்குதல் நடத்தப் பட்டனவாம்: சையதீ குற்றாஞ்சாட்டப்பட்டதற்கே, பாதிக்கப் பட்ட இந்து குடும்பத்தவர் சாட்சி சொன்னதால் தான், அதனால் தான், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிரரியக்கங்களைச் சேர்ந்த 250-300 பேர் அப்பகுதிகளில் வந்து அத்தகைய கொடிய செயல்களைச் செய்துள்ளனர். முகமூடிகளை அணிந்து கொண்டு, “சையதீக்கு ஏதாவது நேர்ந்தால், ஒவ்வொரு வீட்டையும் கொளுத்துவோம்”, என்று கத்திக் கொண்டே அடித்து நொறுக்கினர்.

இந்துக்களுக்கு ஏன் பாதுகாப்புத் தரப்படவில்லை?: . தீர்ப்பை ஆதரித்து கோடிக்கணகான மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் செய்திகளை விளம்பரப்படுத்தியுள்ளார்கள். பிறகு கலவரத்தில் 42-45 மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றார்கள். ஆனால், பாதிக்கப் பட்ட இந்து குடும்பத்தவர் சாட்சி சொன்னதால் தான், சையதீக்கு தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், அவர்களுக்கு, அவர்கள் குடும்பங்களுக்கு மற்றும் இந்துக்களுக்கு ஏன் பாதுகாப்புக் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி எக்ஷழுகின்றது. மேலும் போலீஸார், எல்லாம் நடந்த பிறகு வந்தனர் என்பது, போலீஸாரும் முஸ்லீம்கள், அதனால், முஸ்லீம்கள் செய்ததை ஆதரித்தது போலாகிறது.

“இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது”: இதன் அர்த்தம் என்ன? 1947ல் இந்தியா மதரீதியில் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, பலகோடி இந்துக்கள் பாகிஸ்தானிலேயே தங்கி விட்டனர். ஏனெனில் அவர்களில் பலருக்கு அந்த விஷயமே தெரியாது. அதுபோல பங்களாதேசத்தில் தங்கி விட்ட இந்த பெண்மணி கூறுகிறார். மேலும், 1971ல் பங்களாதேசம் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றபிறகு, நிலைமை சரியாகி விடும் என்று தொடர்ந்துத் தங்கியிருக்கலாம். ஆனால், பங்களாதேசமும் இஸ்லாமிய நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டு, இஸ்லாம் மயமாக்கல் தொடர்ந்தபோது, இத்தகைய குரூரங்கள் தொடர்ந்தன. இந்து பெண்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். கற்பழித்து மதமாற்றம் செய்தனர். தடுத்த, எதிர்த்த பெற்றோர்களையும் மதமாறும்படி வற்புறுத்தினர் அல்லது மறுத்தவர்களைக் கொன்றனர்.
© வேதபிரகாஷ்
03-03-2013
பிரிவுகள்: 1909, 1971, ஃபத்வா, அடி உதை, அடித்து சித்ரவதை, அடிப்படைவாதம், அடையாளம், அப்சல் குரு, ஆப்கானிஸ்தான், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், ஓட்டு, ஓட்டுவங்கி, கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கற்பு, கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரஸ், கிழக்கு பாகிஸ்தான், கொலை, கொலை வழக்கு, ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டெலேவார் சையிதீ, டெலேவார் ஹொஸைன், டெலேவார் ஹொஸைன் சையிதீ, தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், பங்க பந்து, பாகிஸ்தான் தீவிரவாதம், மறைப்பு, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முக்தி வாஹினி, முஜாஹித்தீன், முஜிபுர், முஜிபுர் ரஹ்மான், முஸ்லீம் தன்மை, முஸ்லீம் நரபலிகள், வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை, ஹொஸைன் சையிதீ
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், குரூரம், குற்றம், கொலை, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சையது, சையிதீ, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதிகள், ஜிஹாத், டெலேவார் சையிதீ, டெலேவார் ஹொஸைன் சையிதீ, தாலிபான், பங்க பந்து, பங்களாதேசம், பரவும் தீவிரவாதம், புனிதப்போர், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், மேற்கு வங்காளம், வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை, வங்காளம், ஹொஸைன் சையிதீ
Comments: 8 பின்னூட்டங்கள்
மார்ச் 2, 2013
முஸ்லீம்களின் வெறியாட்டம் – பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன!

ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டன, இந்துக்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டுள்ளவர்களில் இந்துக்களும் அடங்குவர், ஆனால் செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை!

முஸ்லீம் கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது: முஸ்லீம்களுக்குள்ளான விவகாரத்தில் கலவரம் வெடித்து அது இந்துக்களைத் தாக்குவதுதான், ஜிஹாதித்துவமாக இருக்கின்றதுகிஸ்லாம் என்றால் அமைதி என்று மார்தட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு கொடுக்கும் அமைதி இதுதான்! ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டன, இந்துக்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டுள்ளவர்களில் இந்துக்களும் அடங்குவர் பங்களா போலீஸார் இப்பொழுதுதான் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர். நவகாளி மற்றும் சிட்டகாங் பகுதிகளில் அவ்வாறு இந்துக்களின் வீடுகள்-கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்[1]. ஆனால், செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை! காலம் மாறினாலும், யுத்தமுறைகள் மாறினாலும், மாற்றங்களை இந்துக்கள் புரிந்து கொள்வதாக இல்லை[2]. வெளிநாட்டு கத்தோலிக்க சோனியாவிற்கு, 2014ல் ஆட்சியை எப்படி மறுபடியும் பிடிக்க வேண்டும் என்றுள்ளதால், இதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை[3]. இந்து தொழிலதிபர்களை அடையாளங்கண்டு மிரட்டினாலும், அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை[4]. மமதா அம்மையாரும் இதனை கண்டுகொள்வதாக இல்லை, மாறாக முஸ்லீம்களைத்தான் அவர் ஆதரித்து வருகின்றார்.

தீவிரவாதிக்குத் தூண்டு தண்டனை அளித்ததால் கலவரம்: டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[5] விதிக்கப்பட்டுள்ளது! இதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கலவரங்களில் இந்துக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவருவது: முதலில் ஏதோ முஸ்லீம்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், கலவரம் செய்து கொள்கிறார்கள் என்று தான் செய்திகள் வந்தன. இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் இந்துக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுமார் 10 இந்து கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன[6]. 50 இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன[7]. இதனை படமெடுத்த ஊடகக் கரர்களை, அவற்றை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். என்றேல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
அருந்ததி ராய், ஜிலானி, லோனி, செதல்வாத் முதலியோர் இப்பொழுது வாயைத் திறக்கமாட்டார்கள்.
© வேதபிரகாஷ்
01-03-2013
பிரிவுகள்: ஃபத்வா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமிய நாடு, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊடக வித்தைகள், ஊரடங்கு உத்தரவு, கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தடை, முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்கள், முஸ்லீம்தனம், வங்காள தேசம், வங்காள மொழி
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்து, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கோவில், ஜமாத், ஜமாத்-இ-இஸ்லாம், பங்களாதேசம், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், வங்காள தேசம், வங்காளம், வீடு
Comments: 13 பின்னூட்டங்கள்
மார்ச் 1, 2013
இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

பங்களாதேசத்தில்இஸ்லாமியத்தலைவருக்குத்தூக்குத்தண்டனை: பங்களாதேசத்தில் 1971ல் யுத்தம் நடந்தபோது, இந்தியப் படை, முக்தி வாஹினி என்ற பாகிஸ்தானிற்கு எதிராகப் போராடிய படைக்கு ஆதரவாக இருந்து, சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது. இருப்பினும், பாகிஸ்தானை ஆதரித்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்பொழுது, போர்நிலையை பயன்படுத்திக் கொண்டு, பற்பல அட்டூழியங்களைச் செய்துள்ளனர். பங்களாதேசம், இஸ்லாமிய நாடாக இருந்தாலும், இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றானர். குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவாளர்களை தேசவிரோதிகளாகவே கருதுகின்றனர். இதனால், அத்தகைய போர்க் குற்றங்களை விசாரிக்க, ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப் பட்டது. அதன்படி, டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[1] விதிக்கப்பட்டுள்ளது!

ஜமாத்–இ–இஸ்லாமிதலைவர்செய்தகுற்றங்கள்: இவர் கீழ்கண்ட குற்றங்களுக்காக விசாரணைச் செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[2].
- மனிதகுலத்திற்கு எதிராக பல குற்றங்களைப் புரிந்தது
- பல கிராமங்களை கொள்ளையடித்தது
- பலகிராமங்களை தீயிட்டுக் கொளுத்தியது
- அப்பவி மக்களைக் கொன்றது
- பெண்களைக் கற்பழித்தது
- இந்துக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தது
- அவர்களின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டது.
போர் மற்றும் போர்க்குற்றங்களில் 30,00,000 மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்[3]. அதாவது,ளாப்பொழுது கிழக்கு வங்காளம் அல்லது கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சுதந்திரம் நாடி போராடியபோது, பாகிஸ்தான் படையினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் விடுதலைப் படைக்கு எதிராக போராடினர், மக்களைக் கொன்றனர்.

கடந்த அநீதிக்குத் தீர்வு வேண்டும் என்றால், நீதி காக்கப்படவேண்டும்: நீதிபதி ஏ.டி.எம். பஸலே கபீர் தமது எழுத்து மூலம் அளித்தத் திப்பில் அறிவித்ததாவது[4], “நீதிபதிகளாகிய நாங்கள் இந்த தண்டனை அளிக்காவிட்டால், கடந்தகால அநீதி நேர்ததற்கான பிராயச்சித்ததை நீதியாக அடையமுடியாது என்ற தத்துவத்தில் மிகவும் ஆழமான நம்பிக்கைக் கொள்கிறோம் மற்றும் கொண்டிருக்கிறோம்”. நீதி எனும்போது, நீதிபதிகள் நீதியில் நம்பிக்கைக் கொண்டுள்ளது தெரிகிறது. இருப்பினும், குற்றாவாளியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

தீவிவாத அமைப்புகளுடன் தொடர்பு: இந்த இஸ்லாமிய இயக்கம், பாகிஸ்தானிய மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு வேலை செடய்து வந்துள்ளது. இந்த இச்ளம்ய ஜமாத் கட்சி, முந்தைய பிரதம மந்திரியின் கட்சியான தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசாட்சியிலும் பங்குக் கொண்டுள்ளது. இருப்பினும், தீவிரவாத இயக்கத் தொடர்புகளினால், பொது மக்கள் அதனை வெறுத்தொதிக்கினர்[5]. அதுமட்டுமல்லாது, அக்கட்சியின் எல்லா தலைவர்களுமே, பற்பல குற்றங்களுக்காக சிறையில் உள்ளார்கள்[6].

தொடர்ந்து நடந்த கலவரங்களில் 35 பேர் சாவு: இத்தீர்ப்பை ஆதரித்து, எதிர்த்தும் பங்களாதேசத்தில் வெளிப்படையாக பேசப்பட்டது. பலர் ஆதரித்து பொதுநிகழ்ச்சியில் பேசவும் செய்தனர். தலைநகர் டாக்காவில், சபாக் சதுக்கத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள் என்று பலர் கூடி தீர்ப்பை ஆதரித்து முழக்கமிட்டனர். “தேசவிரோத பாகிஸ்தானிய ஆதரவாளர்கள், பாகிஸ்தானிற்கு போங்கள்ளென்று ஆர்பரித்தனர்[7]. இதனால், எதிர்க்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டத்தனர் ஆர்பாட்டத்தில், ரகளையில் ஈடுபட்டனர்[8]. இதனால் அரசு பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 35 பேர் இறந்துள்ளனர்[9]. இறந்தவர்களில் 4 போலீஸாரும் அடங்குவர், அதில் இருவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர்[10]. 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்திய முஸ்லீம்கள் இதன் மூலம் பாடம் கற்றுக் கொள்வார்களா?: இங்கு, இந்தியாவில் அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு, சென்னையிலேயே எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். காஷ்மீர முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம், அவனது உடலைப் பெறுவது, அடக்கம் செய்வது என்ற விஷயங்களில் இரு கட்சிகளும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், ஆளும் கட்சியினர், ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமாக செயல் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? நாடு எனும்போது, தமது நாட்டை ஆதரிக்க முஸ்லீம்கள் ஏன் மாறுபட்டு நடக்க வேண்டும்?
© வேதபிரகாஷ்
28-02-2013
[5] One of the largest Islamist parties in South Asia, Jamaat was the leading coalition partner of former Premier Khaleda Zia’s Bangaldesh Nationalist Party. It bred many terror groups but is now becoming an outcast in Bangladesh, with almost its entire top leadership behind bars on war crimes charges.
[9] Violent clashes between protesters and security forces erupted across Bangladesh on Thursday, leaving at least 35 people dead.
பிரிவுகள்: 786, அடித்து சித்ரவதை, அடிப்படைவாதம், அப்சல் குரு, அவமதிக்கும் இஸ்லாம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமியர்களை கொல்லும் முறை, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயிர் பலி, உருது மொழி, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கலவரங்கள், கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, கள்ள நோட்டுகள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குரூரம், கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், கூட்டணி தர்மம், கைது, கையெறி குண்டுகள், கொடி, கொலை, கொலை வழக்கு, சித்திரவதை, சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம், ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தேச கொடி, தேச விரோதம், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், மதரஸா, மதரஸாக்கள், மதவாதம், மதவெறி, முஸ்லீம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, மூளை சலவை, மூளை சலவை செய்வது, மூளைசலவை, வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை
Tags: 1971, 1971 யுத்தம், ஃபத்வா, அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலவரம், கிழக்கு பாகிஸ்தான், கிழக்கு வங்காளம், குண்டு வெடிப்பு, கொலை, சிறுபான்மையினர், சூடு, ஜமாத், ஜமாத்-இ-இஸ்லாம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், டாக்கா, தீவிரவாதம், பங்களாதேசம், பங்காபந்து, பயங்கரவாதம், முஜாஹித்தீன், முஜிபுர் ரஹ்மான், முஸ்லீம்கள், மேற்கு பாகிஸ்தான், மேற்கு வங்காளம், வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை, வங்காளம், வங்காளம் இரண்டாகப் பிரிக்கப் பட்டது, ஷேக் முஜிபுர் ரஹ்மான்
Comments: 4 பின்னூட்டங்கள்
ஜனவரி 29, 2010
வங்க பந்துவின் கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!
வங்க பந்து என்று அன்பாக அழைக்கப் பட்டவர், ஷேக் முஜிபுர் ரஹ்மான்.
ஒரு பெரிய பிரதேசமாக இருந்த வங்காளத்தை ஆங்கிலேயர்கள் 1909ல் கிழக்கு மற்றும் மேற்கு என்று இரண்டாகப்பிரித்தனர்.
 |
பங்க பந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான்
|
|
 |
மார்ச் மாதம் 9, 1969 ராவல்பிண்டியில் முதல் வட்டமேஜை மாநாடு கலந்துகொள்ளும் முன்பு
|
|
 |
ஜனவரி 1960ல் அகர்தலா வழக்கு பற்றி விசாரிக்க செல்லும் போது
|
|
 |
மார்ச் 7, 1971 வங்கதேசம் பிரகடனம் பற்றி பேசியபோது
|
|
 |
1970ல் தேர்தல் பிரச்சாரத்தின்போது
|
|
 |
1971ல் பொது தேர்தல் தள்ளிவைத்த்தினால் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்
|
|
 |
பதவியேற்றா வங்க பந்து
|
|
 |
Bangabandhu
|
|
 |
சந்தோஷ புன்சிரிப்புடன் |
|
 |
புன்முறுவலுடன்!
|
|
 |
பக்கிங்காம் அரண்மனையில், ராணி எலிஸபெத்துடன்
|
|
 |
இந்திரா காந்தியை வழியனுப்பி
வைத்தல் (முதல் விஜயம்)
|
|
 |
ஜனவரி 12, 1972 அன்று பிரதம மந்திரியாக பிரமாணம் எடுத்தபோது
|
|
 |
ஜனவரி 10, 1972 அன்று டாகா விமானநிலையித்தல் அவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டபோது.
|
|
 |
பங்க பந்து அரசியல் நிர்ணய சட்டத்தில் கையெழுத்திட்டபோது
|
|
 |
பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலைக்குப் பிறகு, ஜனவரி 1972ல், ஹீத்ரோ விமானநிலைத்தில் எட்வர்ட் ஹீத் – இங்கிலாந்து பிரதமரால் வரவெற்றபோது
|
|
 |
குவைத் அமீருடன்
|
|
 |
முதன்முதலாக ஐக்கிய நாட்டு சபையில் பேசுவது
|
|
 |
அவாமி லீக் மாநாட்டில் பேசுவது
|
|
 |
ஏழைகளுக்கு ஆதரவு!
|
|
 |
தந்தை ஷேக் லுஃப்தர் ரஹ்மான் மற்றும் தாயார் சஹாரா கதுன் உடன்
|
|
 |
தனது குடும்பத்துடன்
|
|
 |
குடும்பத்துடன் உணவு அருந்துவது
|
|
 |
ஆகஸ்ட் 15, 1975 அன்று தனது குடும்ப அங்கத்தினருடன் தேசவிரோத ராணுவத்தினர் சிலரால் கொலையுண்டபோது.
|
|
மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என ஒன்றாக இருந்த அவர்களை மக்களை – மதம் என்றரீதியில் வைத்துதான் அவர்கள் அவ்வாறு இரண்டாகப் பிரித்து பிரிவினைக்கு வித்திட்டனர்.
ஆனால், அந்த மதமே அவர்களை ஒன்றாக வைத்திரிக்கமுடியவில்லை!
பற்பல போராட்டங்களுக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தானிடமிருந்து விடுதலைப் பெற்று ‘வங்காள தேசம்” ஆகியது!
ஆனால், ராணுவத்தினர் சிலர், தாமே ஆளவேண்டும் என்ற எண்ணமோங்க, பங்க பந்து ஆகஸ்ட் 15, 1975 அன்று திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டார்.
அந்த கொலையாளிகள் தாம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது தூக்கிலப் பட்டனர்.
இருப்பினும், கொலையாளிகளின் மனைவி ஒருத்தி சொல்கிறாள், “எனது கணவன் ஷஹீத்“, என்று!
பிரிவுகள்: 1909, கிழக்கு பாகிஸ்தான், பங்க பந்து, மேற்கு பாகிஸ்தான், வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை, வந்தே மாதரம், ஷேக் முஜிபுர் ரஹ்மான்
Tags: 1909, கிழக்கு பாகிஸ்தான், பங்க பந்து, பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், வங்ஆளம் இரண்டாகப் பிரிக்கப் பட்டது, வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை, வங்காளம், ஷேக் முஜிபுர் ரஹ்மான்
Comments: 2 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்