Posted tagged ‘வங்காளதேசம்’

ஜாகிர் நாயக்கின் அடிப்படைவாத இஸ்லாம் பயங்கரவாத-தீவிரவாதம், ஜிஹாதி-பயங்கரவாதங்களை பெருக்கி, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் விதம்!

ஜூலை 9, 2016

ஜாகிர் நாயக்கின் அடிப்படைவாத இஸ்லாம் பயங்கரவாத-தீவிரவாதம், ஜிஹாதி-பயங்கரவாதங்களை பெருக்கி, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் விதம்!

bangladesh-attack-map-data01-07-2016 கடைசி வெள்ளிக்கிழமை அன்று வந்த ஜிஹாதிதீவிரவாதிகள்: வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வாரம் ஜூலை.1, 2016 அன்று, “புனித” ரம்ஜான் மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஹோலே ஆரிசன் பேக்கரி சிக்கியது. தூதரங்கள் இருக்கும் அப்பகுதியை ஜிஹாதிகள் தேர்ந்தெடுத்தனர் என்று தெரிகிறது. இரவு, சுமார் 8.45 மணி அளவில் துப்பாக்கிகளோடு உள்ளே “அல்லாஹு அக்பர்” என்று கத்திக் கொண்டே நுழைந்தவர்கள், எல்லோரையும் பிணைகைதிகளாகக் கொண்டனர்[1]. இந்தியர் ஒருவர் உட்பட  22 பேர் பலியானார்கள் – இவர்களில் பெரும்பாலானவர் வெளிநாட்டவர்கள். அவர்களில் –

இத்தாலியர்  .      – 9

ஜப்பானியர்   ..     – 7

வங்காளதேசத்தவர் .– 2

அமெரிக்கர்    ..    – 1

இந்தியர்     .      – 1

போலீஸ்காரர் ….    – 2

தீவிரவாதிகள் முதலில் குரான் வசனங்களை கூறச்சொன்னார்கள். அதாவது, முஸ்லிம்களா இல்லையா என்று அவ்வாறு தீர்மானித்தார்கள் போலும்! சொன்னவர்களை வெளியே விட்டார்கள். மறுத்தவர்களை ஒருவர்-ஒருவராகக் குத்திக் கொலை செய்ய ஆரம்பித்தனர்[2].

The faces of dhaka-assilantsகொல்லப்பட்ட தீவிரவாதிகள்: துப்பாக்கிகளுடன் வந்த ஏழு தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்:

  1. மீர் சமேஷ் மோபேஷ்வர்.
  2. ரோஹன் இம்தியாஸ்.
  3. நிப்ரஸ் இஸ்லாம்.
  4. கைரூல் இஸ்லாம்.
  5. ரிபான்.
  6. சைஃபுல் இஸ்லாம்.

இரண்டு பேர்  பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். ஐசில் / ஐசிஸ் இத்தாக்குதலுக்கு ஒப்புக்கொண்டது. இரவு முழுவதும், அரசு விரைவு நடவடிக்கை வீஎஅர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடந்தது. அடுக்த்த நாள் காலை, சுமார் 7 மணியளவில், உள்ளே நுழைந்து, தீவிரவாத்கள் ஆறுபேரை சுட்டுக் கொன்றது. 13 பேர் விடுவிக்கப்பட்டனர், 20 பிணங்கள் கண்டெடுக்கப்ப்ட்டன. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு பேர், மும்பையில் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக கூறினர். தீவிரவாதிகளில் ஒருவனான ரோகன் இம்தியாஸை, மும்பையை சேர்ந்த, பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் தாக்குதலுக்கு தூண்டியதாக செய்தி வெளியாகியது. பேஸ்புக்கில் ரோகன் இம்தியாஸ், ஜாகீர் நாயக் போதனைகளை பரப்பி வவந்தது அம்பலமானது.

One of the victims killed at Holey Artisan Bakery, Dacca06-07-2016 ரம்ஜான் முடியும் நாளன்று மறுபடியும் தாக்குதல்: 06-07-2016 அன்று வங்கதேசத்தில் மீண்டும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கும் நபர்கள் தொழுகை நடைபெற்ற இடத்தில் தாக்குதல் நடத்திய நிலையில், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை ஆய்வுசெய்யுமாறு இந்தியாவிற்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்து உள்ளது[3]. வங்காளதேச தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஹசானுல் ஹக், கூறுகையில் “ஜாகிர் நாயக், போதனைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இல்லை. நாயக்கின் போதனைகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தொடர்பாக விசாரிக்கப்படும். நாங்கள் முழு விவகாரத்தையும் விசாரணை செய்து வருகிறோம்,” என்று கூறியுள்ளார். ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசு மற்றும் தகவல்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்றும் ஹக் கூறியுள்ளார்[4]. இது தொடர்பாக அவரது போதனைகளை ஆய்வு செய்ய இந்தியாவிடம் வங்காளதேசம் கேட்டுக் கொண்டு உள்ளது. மத்திய மற்றும் மராட்டிய அரசு இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய போலீசை கேட்டுக் கொண்டு உள்ளது. அவருடைய பேச்சு வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 2012-ம் ஆண்டு ஜாகிர் நாயக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கலந்துக் கொண்டதும், மேடையில் இருவரும் ஒன்றாக தோன்றும் விவகாரமும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

Zakir inspired terrorist in action in Bangladeshஜாகிர் நாயக்கின் தூண்டுதல், ஊக்குவிப்பு, பிரச்சாரம்: இதனையடுத்து, ஜாகிர் நாயக் குறித்த விவாதம் எழுந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், “ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது என்றார். மேலும், வங்கதேச தாக்குதல் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. எந்த பகுதியும் கிடையாது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர வேண்டும்”, என்றார்[5]. இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்[6]. இதற்குள், தில்லி டிவி-செனல்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றிய செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டது.

Zakir Digvijaya embracing, ...etc September 2012 videoதிக்விஜய சிங்கும், ஜாகிர் நாயக்கும் கட்டிப் பிடித்து மகிழும் நிகழ்ச்சி[7]: ஜாகிர் நாயக்குடன் செப்டம்பர் 2012 வருடத்தைய நிகழ்ச்சியில் ஒன்றாக தோன்றி அமைதிக்கான தூதர் என்று பாராட்டை வழங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங். ஜாகீரை மிக்க மரியாதையும் “ஹுஜூர்” என்று விளிப்பதும், அவர் தான் அமைதியை கொண்டுவருகிறார் என்று பாராட்டுவதும், முஸ்லிம் போல சலாம் அடிப்பதும், கட்டிப்பிடிப்பதும் காட்சிகள் கொண்ட வீடியோ 07-07-2015 வியாழக்கிழமை இணைதளங்களில் உலாவ ஆரம்பித்தது[8]. முதலில் இதற்கு பதில் சொல்ல தப்பிய திக், பிறகு தன்னைக் காத்துக் கொள்ள வழக்கம் போல உளற ஆரம்பித்தார்.  சாத்வி பிரக்யா தாக்குரை ராஜ்நாத் சிங் சந்தித்தது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

digvijaya-with-zakir-naik.transfer.transferசமாதான தூதுவர்என்று ஜாகிரை பாராட்டியது: நிகழ்ச்சியில் திக்விஜய் சிங் பேசுகையில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை “சமாதான தூதர் என்றும் அவரால் இந்தியா ஒன்றாக சமூகங்கள் கொண்டு உதவ முடியும்,” என்றும் கூறியுள்ளார். பயங்கரவாதிகளை ஊக்குவித்ததாக ஜாகிர் நாயக் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளநிலையில் திக்விஜய் சிங் பேச்சு விபரங்கள் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனையடுத்து பயங்கரவாதத்துடன் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிய திக்விஜய் சிங், விசாரணையை சந்திக்கவும் தயார் என்று கூறினார்[9].  இதனையடுத்து தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விவகாரத்தை இழுத்து உள்ளார்[10]. இதுதொடர்பாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ள திக்விஜய் சிங், “ஜாகிர் நாயக்குடன் மேடையை பகிர்ந்துக் கொண்ட காரணத்திற்காக நான் விமர்சனத்திற்கு உள்ளாகிஉள்ளேன், ஆனால் ராஜ்நாத் சிங் ஜி குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா தாகுரை சந்தித்து பேசியது பற்றிய கருத்து என்ன? பிரக்யா தாகுர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆனால் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக எந்த ஒரு வழக்கும் உள்ளதா? ஜாகிர் நாயக்குடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி மேடையை பகிர்ந்துக் கொண்டது தொடர்பான கருத்து என்ன?,” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

© வேதபிரகாஷ்

09-07-2016

[1] ISIS terrorists shouted ‘Allahu Akbar’ as they hacked to death 20 foreign tourists in restaurant in Bangladesh – but spared those who could recite the Koran – before armoured troops moved in.By MIA DE GRAAF FOR DAILYMAIL.COM  and IMOGEN CALDERWOOD FOR MAILONLINE and AGENCIES

PUBLISHED: 17:01 GMT, 1 July 2016 | UPDATED: 15:40 GMT, 2 July 2016

[2] http://www.dailymail.co.uk/news/article-3670353/Gunmen-attack-restaurant-Dhakas-diplomatic-quarter-police-witness.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தீவிரவாதிகளை உருவாக்குகிறதா ஜாகிர் நாயக் போதனை..? இந்தியாவை ஆய்வு செய்ய சொல்கிறது வங்கதேசம், By: Veera Kumar, Published: Thursday, July 7, 2016, 15:30 [IST].

[4] http://tamil.oneindia.com/news/international/bangladesh-asks-india-examine-zakir-naik-s-sermons-257595.html

[5] தினமலர், ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை: வெங்கையா சூசகம், பதிவுசெய்த நாள். ஜூலை.7, 2016.18.01

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559285

[7] Published on Jul 7, 2016, A video has emerged of the Congress veteran, Digvijay Singh sharing the stage with Zakir Naik who inspired terrorists with his vitriolic speeches. In the video from Semptember 2012, Digvijay Singh ; https://www.youtube.com/watch?v=lMLgC0fkZbI

[8] As Naik came under the scanner, Congress leader Digivjaya Singh was in the BJP’s line of fire after a 2012 video, showing him share a dais with the televangelist at an event to promote communal harmony, surfaced on Thursday 07-07-2016.

http://www.thehindu.com/news/national/mumbai-police-to-probe-preacher-zakir-naiks-speeches-devendra-fadnavis/article8819992.ece

[9] தினத்தந்தி, ஜாகிர் நாயக் விவகாரம்: பிரக்யா தாக்குரை ராஜ்நாத் சிங் சந்தித்தது தொடர்பாக திக்விஜய் சிங் கேள்வி,பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:36 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:36 PM IST

[10] http://www.dailythanthi.com/News/India/2016/07/08143637/Zakir-Naik-row-What-about-Rajnath-Singh-meeting-Pragya.vpf